விஞ்ஞானத்தை வளர்க்கப் போறேண்டி !
இயல்,இசை,நாடகமென இருந்த முத்தமிழுக்கு அழகு சேர்க்க அறிவியல் தமிழ் அரும்பிவர வலைப்பதிவுகள் தளம் அமைத்துக் கொடுக்கின்றன. தமிழ்ப்பதிவுகளிலே எனக்கு முதலில் அறிமுகமானதே வெங்கட்டின் உள்ளும் புறமும் பதிவுகளில் வந்த இயற்பியல் கட்டுரைகளே. அவரின் அறிவியல் சார்ந்த தமிழ்சொற்கள் மற்றும் கட்டமைப்புகள் எனக்கு புதிய வடிவமாக விளங்கின.நேருக்கு நேர் சொற்களை மொழிமாற்றுவதன் அபத்தத்தை சுட்டிய அவரது பதிவு எனக்கு கிடைக்கவில்லை.அவருடைய பழைய தளத்தை அணுக இயலவில்லை.இடையில் காணாமல் போயிருந்த அவர் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அண்மையில் மருத்துவத்துறையில் நடைமுறையில் உள்ள மூலக்கூறுகளை அவற்றின்மீதான காப்புரிமம் தீரும்நிலையில் சற்றே மாற்றி காபபுரிமத்தை நீட்டிக்கொள்ளும் வணிக ஏமாற்றை விவரிக்கும் அவரது முனைவாக்கம், மூலக்கூறு, மூலதனம் - பகுதி 1 மற்றும் பகுதி 2 அவரது அறிவியல் மற்றும் மொழி மேலாண்மையை விளக்கும்.
இவரைப்போலவே இந்திய அணுசக்தி துறையிலிருந்து கனடா சென்றிருக்கும் ஜெயபாரதனும் அழகான அறிவியல் கட்டுரைகளை தந்து வருபவர். இவரது பிரபஞ்சத்தின் மகத்தான ஐம்பது புதிர்கள் ! அகிலத்தை மர்மான ஈர்ப்பியல்
எப்படி ஆள்கிறது ? பதிவையும் படியுங்கள். இவர் சீதையின் துன்பத்தை பதிவுசெய்யும் சீதாயணம் என்னும் முழுநீளநாடகத்தையும் எழுதியுள்ளார்.தாகுரின் கீதாஞ்சலியையும் தமிழில் தந்துள்ளார்.
தமிழார்வமுள்ள நுட்பவியலாளன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் இராம.கி ஐயா அவர்கள் வேதியியல் பொறியாளர்.தமது வாகை மாற்றங்கள் என்ற பூதியலும் வேதியலும் அடிப்படையாகக் கொண்டெழுதிய பதிவில்
”தமிழில் அறிவியற் கட்டுரைகள் எழுத விழைவு மட்டுமே, நமக்கு வேண்டும்; மற்றவை தானாகவே வரும். எழுதும் போது, நான் கூறிய சொற்களைத் தான் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்பது கிடையாது. ஒரே கருத்திற்கு 4 சொற்கள் வெவ்வெறு ஆட்களால் பரிந்துரைத்து வந்தால், எது ஆழமான பொருளுடன், பரந்து பட்டு, பல்வேறு பயன்பாட்டுக்கும் ஏற்ற முறையில் பொருந்தி வருகிறதோ அந்தச் சொல்லை நடைமுறையில் நிலைக்கச் செய்யும் பாங்கு பொதுத் தமிழருக்கு என்றுமே உண்டு. எனவே கவலுறாமல் தமிழில் எழுத முயலுங்கள்.”
எனக் கூறுகிறார். வானிலிருந்து பெய்யும் பனியில் படிகங்கள் உருவாவதெப்படி என எங்கும் பனிமழை பொழிகிறது! பதிவில் விளக்குகிறார் வைசா.விஞ்ஞானம் வளரும்போது அழிவுசக்தியும் அதிகரிப்பதை, கணினி பற்றி பல கேள்விகளுக்கு
தமது பதிவில் தீர்வு கூறிவரும் பிகேபி போட்டு தாக்கு என்ற இந்தப் பதிவில் விவரித்திருக்கிறார்.
நமது விக்கிபசங்க பதிவர்களின் கேள்விகளையொட்டி அறிவியல் ஆக்கங்களை தங்கள் குழுப்பதிவில் இட்டுவந்தார்கள்..சற்று ஆர்வம் தொய்ந்துள்ளதாகத் தெரிகிறது.வானவெளியில் குறுங்கோள்களைப் பற்றிய இந்த பதிவு பயனுள்ளது.
ஐன்ஸ்டைனுக்கும் அடி சறுக்கும்,சுஜாதாவுக்கும் என அண்மையில் பத்ரி எழுதியுள்ள கட்டுரை அறிவியலை குமுகாய அரசியல் எவ்வாறு பாதிக்கறது என வெளிக்கொணர்கிறது.
முந்தைய வலைச்சர ஆசிரியர் விஎஸ்கே அவர்களின் லப்டப் தொடர் இதயத்தைப் பற்ரியும் இதய நோய்களைப்பற்றியும் பல பயனுள்ள விதயங்களை விவரித்தது. சற்றுமுன்னில் அறிவியல் செய்திகளுக்கான போட்டியில் வென்ற
சிவீஆரின் நில் கவனி கேன்சர் தொடர் புற்றுநோயின் விவரங்களை பதிவு செய்தது.மனதின் சைகான்களை ஆராய்கிறார் சீனு என்கிற சீனிவாசன் கிருட்டிணசாமி.
பதிவின் நீளம்கருதி இத்துடன் முடித்துக் கொள்வோம்.நிச்சயமாக சுட்டியுள்ள பதிவுகளைப் படியுங்கள். பள்ளிப்பாடங்கள் போல கட்டடித்து விடாதீர்கள் :)
|
|
தலைப்பு என் எஸ் கிருட்டிணன் பாட்டொன்றை குறிப்பது.மரியாதைக் குறைவாக எண்ணிவிடாதீர்கள் !!
ReplyDeleteபதிவுகள் அனைத்தும் கண்டிப்பாக பார்த்து அறிந்த கொள்ள வேண்டியவை. நன்றி மணியன் சார்...
ReplyDeleteஜெயபாரதன் எழுதும் அறிவியல் கட்டுரைகளைத் தொடர்ந்து படித்து வருகிறேன். அவர் எழுதிய சீதாயணத்தை அறிமுகப்படுத்தியதற்கு நன்றிகள் மணியன் ஐயா. உடனே படித்துப் பார்க்கிறேன்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ்பிரியன்.
ReplyDeleteவாங்க குமரன், நீங்கள் நிச்சயம் படிக்கவேண்டிய ஒன்றுதான்.
ReplyDeleteமிகச் சிறந்த அறிவியல் பட்டியலுக்கிடையே எனது பதிவையும் சேர்த்து பெருமைப் படுத்தியமைக்கு மிக்க நன்றி, திரு.மணியன்.
ReplyDeleteமற்ற பதிவர்களையும் படித்து வருகிறேன்.
வலைச்சரம் மிக அழகாக கட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது.
வாழ்த்துகள்.
மிக்க நன்றி விஎஸ்கே...
ReplyDelete//மற்ற பதிவர்களையும் படித்து வருகிறேன்// படிங்க..உங்களுடைய பதிவும் சிறப்பானதுதான்.
பூமிக்கடியில் தோண்டிக்கொண்டே இருந்தபோது கிடைக்கின்ற கோடிக்கணக்கான்
ReplyDeleteகரித்துண்டுகளுக்கிடையே ஒரு வைரம் கிடைத்தது போல் இருக்கிறது இப்பதிவு.சுட்டிக்காட்டப்பட்டதில் ஒன்று கோஹினூர்.
முயற்சி திருவினையாக்கும்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
நன்றி சுப்புரத்தினம்.
ReplyDelete