பூங்கொத்து - புதியவர்களுக்கும் / உங்களுக்கும்
➦➠ by:
பாச மலர்
பூங்கொத்து - புதியவர்களுக்கு
வரவேற்று..
பூங்கொத்து - உங்களுக்கு
நன்றி கூறி விடை பெற்று..
செந்தில்நாதன் செல்லம்மாள் ஐந்து வலைப்பூக்களில் பேசி வருகிறார். ஊஞ்சவேலம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர், தற்போது வாசம் அமெரிக்காவில். அன்னையின் மீதுள்ள பற்றுதல் அவர் பெயரைப் பார்த்தாலே புரிகிறது..இந்தப் பதிவில் அவர் கூறும் அனுபவம் நம்மை நெகிழ வைக்கிறது.
கோகிலவாணி கார்த்திகேயன் தன் வலைப்பூவில் எண்ணங்கள் அதிகம் பதிந்து வருகிறார். தற்போது மஸ்கட்டில் இருக்கிறார். இந்தப் பதிவில் ஜல்லிக்கட்டூ பற்றிப் பேசும் அவர்..மெல்ல மெல்லப் புகுந்து வரும் வேற்று மாநில திருவிழாக் கலாசாரத்தைச் சாடுகிறார்..
நுகர்வோர் நலன் என்ற குழுவினர் தம் வலைப்பூவில் நுகர்வோர் நலன் பற்றிய தகவல்கள் அதிகம் தருகின்றனர். மிகவும் பயனுள்ள குறிப்புகள் இதில் இடம்பெறுகின்றன.
இந்தப் பதிவில் தடை செய்யப்பட்ட மருந்துகளை அனுமதிக்கும் அரசாங்கம் பற்றிப் பேசுகின்றனர்.
அரச்ச மாவு என்ற குழுவினர் பல சுவாரசியமான பதிவுகள் தருகிறார்கள்..சிரிக்கப் பேசிச் சிந்திக்க வைக்கும் பதிவுகள்..தனியொரு பதிவுக்குச் சுட்டி தர இயலவில்லை...வலைப்பூ இங்கே.
கீர்த்தி, சென்னைவாசி..கோகுலைக் காதலிக்கவே பிறந்தவர்..பதிவுகள் முழுவதும் கோகுல் கோகுல் கோகுல் புராணம்தான்..மாதிரிக்கு ஒன்று.
கீரு தன் கூட்டாஞ்சோறு வலைப்பூவில் பெயருக்கேற்றாற் போல் பலவித தலைப்புகளில்
பதிவிட்டு வருகிறார்..சாஃப்ட்வேர் டெவலபர் நிலைமை பற்றிய பதிவு இது.
இன்பா(எ)சிவானந்தன், தீபம் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர், புதுச்சேரியில் இருக்கிறார். .. குட்டிக் கவிதையெழுதும் காதல் கவிஞர்..துடிதுடிக்க என்னும் குட்டிக்கவிதை படித்துப் பாருங்கள்.
-----------------------------------------------------------------------
வலைச்சர ஆசிரியர் பணி நிறைவாகவே இருந்தது. வலையின் இன்னும் பல பக்கங்களையும் புரட்டிப் பார்க்க உதவியது. வலைச்சரக் குழுவினர்க்கும், ஊக்குவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி கூறி விடைபெறுகிறேன். வணக்கம்.
|
|
நன்றி பாசமலர்! மிக அருமையான வாரமாக இருந்தது. என்னால் சரியாக செய்ய முடியாமல் போன வருத்தம் இப்போது உங்கள் சரங்களால் சரிசெய்யப்பட்டு விட்டது. உங்கள் பெயருக்கு ஏற்ப அனைத்து பூக்களின் தன்மைகளுக்கு ஏற்ப அருமையான சரம் தொடுத்தமைக்கு நன்றி!
ReplyDeleteஅன்புடன்
அபிஅப்பா
நன்றி அபி அப்பா..
ReplyDeleteஇவ்வாரம் நீங்கள் அளித்தது பூங்கொத்தல்ல, பூந்தோட்டம்.
ReplyDeleteபல புதிய பதிவுகளை அடையாளம் காண முடிந்தது. வாழ்த்துக்களும் நன்றிகளும்.
//அபி அப்பா said...
ReplyDeleteநன்றி பாசமலர்! மிக அருமையான வாரமாக இருந்தது. உங்கள் பெயருக்கு ஏற்ப அனைத்து பூக்களின் தன்மைகளுக்கு ஏற்ப அருமையான சரம் தொடுத்தமைக்கு நன்றி!
அன்புடன்
அபிஅப்பா//
ஒரு ரிப்பீட்டே சொல்லிக்கிறேன்...
//கையேடு said...
ReplyDeleteஇவ்வாரம் நீங்கள் அளித்தது பூங்கொத்தல்ல, பூந்தோட்டம்.
பல புதிய பதிவுகளை அடையாளம் காண முடிந்தது. வாழ்த்துக்களும் நன்றிகளும்.//
இதுக்கு நான் ரிப்பீட்டே போட்டுக்கறேன் :))
மிகச்சிறப்பான வாரமாக மட்டுமில்லாமல் கொடுத்த சுவாரஸ்யமான பதிவுகளுக்கும் நன்றிகள் :)0
ஷார்ஜாவிலிருந்து
சென்ஷி
பாச மலர்
ReplyDeleteபெயருக்கு ஏற்ப மலர்ச் சரங்களை அள்ளித் தொகுத்து, பலவித மலர்களையும் மணம் பரப்பச் செய்து, ஒரு அழகான நறுமணமிக்க மலர்த் தோட்டத்தையே உருவாக்கி, மனிதனின் அனைத்து உணர்வுகளையும் மதித்து, பல பதிவுகள் கொடுத்து மணமுடன், மலர்க் கொத்துடன் விடை பெறும் பாச மலருக்கு நன்றிகளுடன் கூடிய நல் வாழ்த்துகள்
மலர்,
ReplyDeleteநாளுக்கு இரண்டாக, 14 பதிவுகள் - அத்தனையும் அருமை. சீனா 15ம் சிவா 18ம் பதிந்திருக்கின்றனர்.
ஒரு வார ஆசிரியராக இருந்து முத்திரை பதித்துச் சென்றுள்ள மலருக்கு வாழ்த்துகள்.
இலக்கியம், தகவல்கள், வளைகுடா, புகைப்படம், வித்தியாசம், கதைகள், அனுபவங்கள், கவிதைகள், சோகம், நகைச்சுவை, உறவுகள் எனத் தலைப்பினைத் திட்டமிட்டு, அதற்குரிய பதிவுகளைத் தினந்தேடி, படித்துப் பொறுக்கி, அழகான பூக்களோடு ஒப்பிட்டு, மதிப்பான முன்னுரையுடன் அழகாகப் பதிந்தது பாராட்டத்தக்கது.
கொடுத்த பொறிப்பினை இவ்வளவு கவனத்துடன், ஈடுபாட்டுடன், சிரமத்துடன், மன மகிழ்வுடன் செய்தது உண்மையிலேயே ஒரு அரிய செயல்.
வலைச்சர பொறுப்பாளர்களுக்கு, ஒரு அருமையான ஆசிரியரைத் தேர்ந்தெடுத்தற்குப் பாராட்டுகள்.
அனைவருக்கும் நல் வாழ்த்துகள்.
மிஸ் பண்ணிட்டேன் மலர். இப்போ தான் நீங்க தான் போன வார ஆசிரியர்ன்னு கேள்விப்பட்டு ஓடோடி வந்தேன். இந்த வாரம் முழுசும் வாசிச்சிருவேன். :-)
ReplyDelete///cheena (சீனா) said...
ReplyDeleteபாச மலர்
பெயருக்கு ஏற்ப மலர்ச் சரங்களை அள்ளித் தொகுத்து, பலவித மலர்களையும் மணம் பரப்பச் செய்து, ஒரு அழகான நறுமணமிக்க மலர்த் தோட்டத்தையே உருவாக்கி, மனிதனின் அனைத்து உணர்வுகளையும் மதித்து, பல பதிவுகள் கொடுத்து மணமுடன், மலர்க் கொத்துடன் விடை பெறும் பாச மலருக்கு நன்றிகளுடன் கூடிய நல் வாழ்த்துகள்///
சீனா சார் மாதிரி எழுதி உங்கள பாராட்டணும்னு ஆசை தான். அது மாதிரி எனக்கு எழுத தெரியதனால அவரு சொன்னதையே ஒரு 'ரிப்பீட்டு' போட்டுக்கிறேன்.
அனைவருக்கும் மிக்க நன்றி..சீனா சார் புள்ளி விபரத்தோட அசத்துறீங்க..
ReplyDeleteகலக்கல் வாரம்.
ReplyDeleteஒவ்வொன்றையும் ரசித்தேன்.
மிக்க நன்றி துளசி மேடம்..
ReplyDeleteசூப்பர் வாரம் ;))
ReplyDeleteகலக்கிட்டிங்க....வாழ்த்துக்கள் ;)