"சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை"
"சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை"
இனிமேல் சொல்வதற்கு பாக்கி இல்லை என்னும் அளவுக்கு டீச்சரும், திரு. சீனாவும் வந்து எழுதிட்டுப் போயிட்டாங்க! பத்தும் பத்தாததுக்கு, நம்ம 'பாசமலர்' வரைக்கும் மீதி அத்தனை பேரும் வேற பின்னிப் பீராய்ஞ்சிட்டாங்க! உறவெனும் தெய்வத்தின் உதவியால், ஒரு நிறைவான பதிவை நேற்று கொடுக்க முடிந்தது! இன்னிக்கு என்னத்தை தொடுப்பது என மலைப்பாய் இருந்த போது, நினைவுக்கு வந்தது..... ஏதாவது வித்தியாசமா சொல்லலாமேன்னு!
அதாவது, தனக்குப் பிடிச்சிருக்கு என்னும் ஒரே காரணத்துக்காக மட்டும் பதிவுகள் எழுதி, பின்னூட்டம் வருவதைப் பற்றிக் கவலையே படாமல், தொடர்ந்து பதிவு எழுதும் சில பதிவர்களைத் தொடுத்து ஒரு சரம் கட்டலாமென!
உடனே நினைவுக்கு வந்தவர்களை எல்லாம் தொடுத்து இதோ ஒரு சரம்!
இவர்கள் எல்லாருமே என் மனதை நிறைத்தவர்கள்! தங்களுக்குத் தெரிந்த நல்ல கருத்துகளை வலைப்பூவில் வைக்க வேண்டும் என்னும் ஒரே ஒரு உந்தல் மட்டுமே இவர்களுக்கு! எத்தனை பின்னூட்டங்கள் வருகின்றன நம் பதிவுக்கு என்பதை விட, எத்தனை நல்ல விஷயங்களை நாம் சொன்னோம் என்பதை மட்டுமே கவனத்தில் கொண்டு, பின்னூட்ட ஆசைக்காக உண்மைக்குப் புறம்பான செய்திகளை முற்றிலும் தவிர்த்தவர்கள் என்ற வகையில் இவர்கள் எல்லாரையும் பாராட்டி, இந்தச் சரத்தை இவர்களுக்கு மாலையாக அணிவிக்கிறேன்!
திரு. ஞானவெட்டியான்:
சமயக் கருத்துகளோ, மனதுக்கினிய திரைப்படப் பாடல்களோ, இல்லை தத்துவங்களோ.... சுருக்கமாக, சுவையாகச் சொல்லி வருபவர்...இன்றும்!
இவரது சில பதிவுகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்! தனது எல்லையை இப்போது ஆங்கிலத்துக்கும் விரிவாக்கி இவர் செய்யும் சேவை அளப்பரியது!
திரு. மா. சிவகுமார்:
இவரது பதிவுக்கு நான் சென்றதே ஒரு தற்செயல் எனவே சொல்ல வேண்டும். சென்றதுடன் நில்லாமல், ஒரு திருக்குறளையும் போட்டு வெறுப்பேத்தினேன்! கொஞ்சம் கூடக் கோபப்படாமல், 'இன்னமும் நான் திருக்குறளைப் படிக்கவில்லை ஐயா! அதை நினைவு படுத்தியதற்கு நன்றி' என் இவர் பதில் சொல்லிய பண்பு என்னைக் கவர்ந்தது. சொன்னபடியே, இப்போது திருக்குறளும் பதிகிறார்!! பொருளாதாரம், அரசியல், சமூகம், பிரயாணம் என இவர் எழுதியிருக்கும் விஷயங்கள் பிரமிப்பூட்டுபவை! கணினி சம்பந்தமாக இவர் பதிவுலகத்துக்கு செய்திருக்கும் சேவை... பாராட்டத்தக்கது. இவரது பதிவுகளைப் படிக்க இங்கே செல்லுங்கள்!.... ஒரு 10 நாள் விடுப்பு எடுத்துக் கொண்டு!!
டாக்டர். ப்ரூனோ:
ஆரவாரமில்லாமல் சமுதாயக் கருத்துகளை தனது பதிவுகளிலும், இதை வெளிப்படுத்தும் மற்றவர் பதிவுகளிலும், தாராளமாக அள்ளித் தெளிப்பவர். இவரிடமிருந்து இதுவரை ஒரு பின்னூட்டம் கூட நான் பெற்றதில்லை என்றாலும், இவரது கருத்துகளைத் தொடர்ந்து படிப்பவன் என்ற முறையில், இவரை இங்கு தொடுப்பதில், மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்!
திரு. நக்கீரன் பரமசிவன்:
பல்வேறு தலைப்புகளில் சுவாரசியமான பதிவுகளைப் படிக்க வேண்டுமென்றால் இங்கே செல்லவும்! அரசியல், சமூகம், மருத்துவம், தத்துவம், புகைப்படக்கலை என இவர் தொடாத விஷயங்களே இல்லை எனச் சொல்லுமளவுக்கு பதிவுகளை எழுதிக் குவிப்பவர்! சேர வேண்டியவர்களை சென்றடையும் என்பதில் இவருக்கு இருக்கும் தன்னம்பிக்கை, இவர் தொடர்ந்து இட்டுவரும் பதிவுகளில் இருந்து நீங்களே புரிந்து கொள்வீர்கள்! தவற விடாதீர்கள் இவரை!
திரு. ஜமாலன்:
இவரை எத்தனை பேருக்குத் தெரியும் என்பதை விட, இவரைத் தெரிந்தவர்கள் இவரை எப்படி மதிக்கிறார்கள் என்பதை வைத்து இவரது பெருமையை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன்.பல விஷயங்களில் மேம்போக்காக அறிவு இருப்பதே இங்கு நாம் பரவலாகக் காணப்படுவது! ஆனால், எடுத்துக் கொண்ட எந்த ஒரு விஷயத்திலும், ஒரு முழுமையான ஆளுமையை இவர் ஒருவரிடம் மட்டுமே நான் அதிகமாகக் கண்டேன் என்பதைச் சொல்லிக் கொள்வதில் எனக்கு மிகவும் பெருமையே! எவராலும் எளிதில் எடுத்துக்கொள்ள அஞ்சப்படும்[!!] தலைப்புகளை எடுத்துக் கொண்டு அநாயசமாக இவர் கையாளும் திறமை என்னை பலமுறை வியக்கவைத்திருக்கிறது. படித்துப் பாருங்கள்... புரிந்து கொள்வீர்கள்!
இன்னும் சொல்ல நிறையப் பேர் இருக்கிறார்கள். இடமில்லை என்பதால் இத்துடன் முடிக்கிறேன். விட்டுப் போனவர்கள் எந்தவிதத்திலும் இவர்களுக்குக் குறைந்தவர்கள் இல்லை. வாய்ப்பிருந்தால், விரும்பினால், சொல்லுகிறேன்.
|
|
நல்ல தொகுப்பு, குறிப்பாக எனது நண்பர் ஜமாலனைக் குறிப்பிட்டுள்ளது வரவேற்க்கத்தக்கது. அவரது எழுத்தாளுமையில் ... அவரது பதிவுகளில் நான் பின்னூட்டம் போட்டால் பதிவின் தரம் குறைந்துவிடுமோ என்று அஞ்சியதுண்டு.
ReplyDelete//"சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை"
ReplyDelete//
அதே போல், நமக்கும், பலருக்கும் நன்று என்று தெரிந்த ஒன்றை பாராட்டுவதற்கும் விலை இல்லை.
காசா பணமா, இருந்தாலும் பலர் பாராட்டுவதைக் கூட எதோ அங்கீகாரம் கொடுக்கிறோமோ என்று நினைக்கிறார்க்கள். இங்கு எல்லோரையும் வெளிபடையாக பாராட்டி இருக்கும் உங்களுக்கும் எனது பாராட்டுக்கள் !
அனுபவம் வாய்ந்தவர்களுடைய தொகுப்பு தெளிவாக பரிணமிக்கிறது. :)
ReplyDeleteநன்றி சரியாகச் சொன்னீர்கள். கிட்டத்தட்ட நானும் இதே கோணத்தில் பல பதிவுகளை என் ரீடரில் வரிசை படுத்தியுள்ளே. ஒரு ஒத்த அலைவரிசையை கண்டதும் மகிழ்ச்சியாய் உள்ளது. இதில் மா.சிவக்குமார், நக்கீரன் பரமசிவன், பதிவுகளைப்படித்ததில்லை அறிமுகத்திற்கு நன்றி மீண்டும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteடாக்டர் புருனோ தவிர மற்றவர்கள் என் கூகுள் ரீடரில் இருக்கிறார்கள். அவர்கள் பதிவுகளைத் தொடர்ந்து படிக்காவிட்டாலும் காலம் தாழ்த்தியாவது படித்துவிடுவேன். ஜமாலனுக்குப் பின்னூட்டம் போடவேண்டும் என்று நினைத்தாலே ஒரு நடுக்கம் வந்துவிடும். :-) அந்த நடுக்கத்தைத் தாண்டியும் சில நேரங்களில் பின்னூட்டம் இட்டிருக்கிறேன்.
ReplyDeleteஇப்போது போய் டாக்டர் புரூனோ பதிவைப் பார்க்கிறேன். :-)
பின்னூட்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல் தங்களின் ஆத்ம திருப்திக்காகவும், தங்களுக்குத் தெரிந்த தகவல்கள் அனைத்தும் சேர வேண்டியவர்களை நிச்சயம் சென்றடையும் என்ற நம்பிக்கையுடனும், பல நல்ல சிந்தனைகளை எழுதி வரும் நல்ல பதிவர்களைத் தேடிப் பிடித்து சுட்டியதற்கு நன்றி நண்பரே
ReplyDelete