இம்சை புதிய சாதனை! புகைப்படக் கவிஞர் வருகை!!
வலைச்சரத்துக்கு அறிமுகப் பதிவு எழுதும் போது முந்திய வார சரத்துக்கு சிறு விமர்சனக் குறிப்பும் அடுத்து வருபவர் குறித்த அறிமுகமும் இடம் பெறுவது வழக்கம். இந்த வாரத்திற்கான விமர்சனத்தை நண்பர் சீனா அவர்கள் சிறப்பான பின்னூட்டமாக தந்து விட்டார்.
---------
ஒரு வார காலம் வலைச்சர ஆசிரியராக இருந்த இம்சை பொறுப்புடனும், மிகுந்த ஈடுபாட்டுடனும், அதிக உழைப்புடனும் பணியாற்றி - தனக்குக் கொடுக்கப்பட்ட கடமையைச் செவ்வனே செய்து முடித்திருக்கிறார். செய்யும் தொழிலே தெய்வம் என்பதை உறுதி படுத்தி இருக்கிறார். 23 பதிவுகள் - ஐந்து நாட்களில் - பெற்ற மறு மொழிகளோ சற்றேரக்குறைய 800 - அறிமுகப்படுத்திய பதிவுகளோ 132 - அத்தனையும் முத்தான் சத்தான பதிவுகள். வெறும் கும்மியோ மொக்கையோ இல்லை. 2005, 2006, 2007 ஆண்டுகளில் பதியப்பட்ட பதிவுகள். சரம் தொடுத்த விதம் மிக அருமை. பாராட்டுக்குரியது.
மழலைச்செல்வங்களில் ஆரம்பித்து, அப்பா, பாலபாரதி, ஆங்கிலப் பதிவுகள், காப்பி ( அசல் Copy), புத்தகங்கள், திருநங்கைகள், மருத்துவர்கள்,மழலைப் பதிவுகள்,கிரிக்கெட், சமையல், சினிமா, சாதனைப் பெண்கள், மொக்கை, கவிதைகள், சங்கங்கள், அலுவலக சிரிப்புகள், இயற்கை வைத்தியம், திகில் நிகழ்வுகள், இயற்கைக்கு எதிரான நிகழ்வுகள், குசும்பனின் கும்மி, அபி அப்பாவின் கும்மி, விடை பெறும் பதிவு என கலக்கி விட்டார்.
இதுவரை வலைச்சர ஆவணங்களைன் படி அதிக மறு மொழி பெற்ற பதிவையும் ( யாரோ சீனாவாம் - 136), அதிகப் பதிவுகள் 18 ( மங்களூர் சிவாவாம்) ரெகார்டையும் தகர்த்தெறிந்து விட்டார் இம்சை. ஒரு பதிவிற்கு 411 மறு மொழிகள்.
-------------
வாழ்க்கையில் சாதிக்கப் பிறந்தவர்கள் சிலபேர். அவர்களில் ஒருவரான பதிவர் நண்பர் இம்சை வாழ்க்கையில் மட்டுமல்லாமல் வலைசரத்திலும் சாதித்து விட்டதற்கு பாராட்டும் நன்றியும்...நண்பர் சீனாவுக்கும் நன்றி.
*
எண்ணங்கள் இனியவை என்ற பதிவுக்குச் சொந்தக்காரரான ஜீவ்ஸ் இந்த வார சரப்பதிவாளர். மரத்தடியில் அய்யப்பன் என்ற பெயரில் அறியப் பட்டவர். புரொபைலில் புகைப்படக் கருவியை வைத்திருக்கும் இவர் தமிழில் புகைப்படக்கலை பதிவிலும் பங்களிப்பதில் ஆச்சரியமில்லை. தேன்கிண்ணம் பாடல்பதிவிலும் இவரும் ஒரு பங்களிப்பாளர். மிகவும் குறைவாகவே பதிவுகள் எழுதி இருக்கிறார் என்ற போதிலும் உரைநடையைக் கூட கவிதையாக எழுத நினைக்கிறார். இந்தப் புகைப்படக் கவிஞரின் வலைச்சரம் இந்த வாரம் .......
வாங்க ஜீவ்ஸ்!
|
|
நல்வரவு ஜீவ்ஸ்.
ReplyDeleteஇம்சையோடு ஒரே இம்சையாப்போச்சு:-))))
பின்னூட்டங்களைப் படிச்சே கண் வலி வந்துருச்சு;-)))
நல்வரவு ஜீவ்ஸ்.
ReplyDeleteஅட நம்ம ஜீவ்ஸ் மாமா. வாங்க வாங்க
ReplyDeleteஅட நம்ம ஜீவ்ஸ் அண்ணாவா?
ReplyDeleteவாங்க வாங்க!
வாங்க ஜீவ்ஸ்!
ReplyDeleteஉங்கள் வரவு நல்வரவாகுக!
psabapat1
ReplyDeleteஅண்ணா ஜீவ்ஸு அண்ணா, கலக்குங்கண்ணா
நல்வரவு ஐயப்ஸ்!
ReplyDeleteமரத்தடி நினைவுகளில் மறக்க இயலாத உனது 'கர்ணன் பேசுகிறேன் பற்றி இங்கும் பேசினால் நன்றாக இருக்குமே?
நல்வரவு ஜீவ்ஸ்.
ReplyDeleteவாழ்த்துகள்.
வருக வருக ஜீவ்ஸ் - தருக தருக சரத்தின் இழைகளை - படத்துடன்
ReplyDeleteஅட .. நம்ம குரு... நல்ல சரம் தொடுக்க வாழ்த்துக்கள் குருவே.. :)
ReplyDelete