வென்றுவிட்டேன்...என்று நினைக்கிறேன் திருப்தியாக சென்றுவருகிறேன்
வலைச்சர....'பட்டணத்தில் ஒரு வார டேராப் போட்டு கொட்டி மொழக்கிட்டேன்.' அப்படித்தானே? 'கமெண்ட்' வசூலு இல்லையானா பொட்டிய தூக்குவோம்' ன்னு இருந்தேன். ஆனா பொட்டி நிரம்பி வழிஞ்சுது. என் சக்திக்கு மீறி பதிவுகள் பாய்ந்து வந்தன. பயந்து பயந்து வந்ததுக்கு கொஞ்சம் கொஞ்சமாக பழகிவிட்டது. பதிவுகள் எழுதி பிரசுரிக்க மட்டுமே தெரிந்து வைத்திருந்த எனக்கு இதன் மூலம் நிறைய தெரிந்து கொண்டேன்.
போடப்போட ஆர்வம் கூடியது. சகாதேவன் சொன்னா மாதிரி,'ஒருவாரம் போதுமா?' என்றும்
தோன்றியது. ஆனால் நேரமின்மை...சில அறியாமை சிறு தவறுகள் நிகழ்ந்திருக்கும்.
ஆனால் அதிலிருந்தே நிறைய கற்றுக்கொண்டேன். சக பதிவர்களும் பொறுத்துக் கொண்டதுக்கு
நன்றி!
கண்மணி,கயல்விழி முத்துலெட்சுமி இறுதியாக சகோதரர் சீனா இவர்களின் அழைப்பை
எப்படி பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன் என்று அவர்கள்தான் சொல்லவேண்டும்.
அவர்களுக்கு என் மனமாந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
வலைச்சர பொறுப்பாசிரியர் சகோதரர் சீனா அவர்களுக்கு என் தனிப்பட்ட நன்றியையும்
சொல்லிக்கொள்கிறேன். சரம் தொடுக்கும் விதம், வரிசை பற்றி மின்னஞ்சலில் மூலம்
தெரியப்படுத்தியதுக்கு. என் தயக்கத்தையும் போக்கியதுக்கு.
நானுண்டு முடிந்தபோது போடும் என் பதிவுண்டு என்றிருந்த என்னை ஒரு வாரம் அங்கிங்கே
திரும்பமுடியாமல் உட்கார்த்தி வைத்துவிட்டர்கள். சந்தோஷமாக ஏற்றுக்கொண்டாலும்
சற்று சிரமமாகத்தானிருந்தது. ஆனால் வந்து விழுந்த பின்னூட்டங்கள் சிரமத்தை,' சற்றே
விலகியிரும் பிள்ளாய்!' என்று தள்ளி வைக்க வைத்து விட்டது. நிறைய பழமும் தின்றேன். சீனா? கொட்டைகள் போதுமா?
நானும் ஜாம்பவான்களில் ஒருத்தியாகி விட்டேனா? ஹி..ஹி...!`
விடாமல் பின்னூட்டங்கள் போட்டு உற்சாகப்படுத்திய தமிழ்பிரியனுக்கும் நன்றிகள்!!
எனக்குத் தெரிந்த பதிவர்கள் அனைவரையும் பற்றிச் சொல்ல ரொம்ப ஆசைதான்.
என்னால் முடிந்தவரை செய்திருக்கிறேன்.
இறுதியாக வலைச்சரம் தொடுப்பதில் எனக்கு பேருதவியாக இருந்த ராமலஷ்மிக்கும்
என் நன்றிகள்!!!சில தொழில் நுட்பங்களை போனிலேயே சொல்லி உதவினார்.
சீக்கிரமே அவரும் வலைச்சரம் தொடுப்பார்...வாசமிகும் பூக்கள் கொண்டு...ஆம் இருப்பது
பெங்களூரூவில் அல்லவா?
முதல் பதிவில் என்னை உற்சாகப் படுத்திய நண்பர்கள், நண்பிகள்....சுப்பையா வாத்தியார்,
அம்பி, சர்வேசன், சிவமுருகன், மங்களூர்சிவா, பரிசல்காரன்,புதுகை அப்துல்லா, சதங்கா, கோவிகண்ணன், மேளதாளத்தோடு வரவேற்ற துளசி, வல்லி, புதுகைதென்றல், என்னைச்
சுத்திசுத்தி வந்து ரீங்காரமிட்ட புதுத்தேனீ...நீங்கள் கொடுத்த ஊக்கம் எனக்கு தெம்பு தரும்
டானிக்காக அமைந்தது. அனைவருக்கும் என் கோடானுகோடி நன்றிகள்!!!
எம்பெருமான் ஈசன் கருணையால் நல்லபடியாக(?!)முடிந்தது.
அடுத்து வலைச்சரம் தொடுக்க வரும் பதிவரை வருக..வருக..வென வரவேற்கிறேன்..
வாழ்த்துகிறேன்!!!!!
இன்று நண்பர்கள்தினம்!!இந்நாளில் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நண்பர்கள்தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!!
|
|
அருமையான, தாங்கள் ரசித்த பல நல்ல பதிவுகளைத் தேடி சுட்டிகள் தந்து அசத்தி விட்டீர்கள்! எம் பெருமான் சிவனே ஆரம்பித்து வைத்த வாரம் வெற்றி வாகை சூடாது போகுமா? திருப்தியாக சென்று வாருங்கள். உங்கள் வலையுலக பாசமிகு குடும்பத்தினர் சார்பாக நன்றி! நன்றி! நன்றி!
ReplyDeleteசீனா சார்! மீ...ஈஈஈ த ஃபஸ்ட்:))))!
ReplyDeleteரொம்ப சந்தோசம் ராமலஷ்மி!!!
ReplyDeleteஉங்களுக்கு என் freindship day வாழ்த்துக்கள்!!
கமெண்ட் போட்டுட்டு, மீ த ஃப்ஸ்ட்
ReplyDeleteசொல்வதிலும் நீங்க தான் ஃப்ஸ்ட்! ராமலஷ்மி!!
//உங்களுக்கு என் freindship day வாழ்த்துக்கள்!!//
ReplyDeleteநன்றி. I wish you the same. உங்கள் வலைச் சர வெற்றி வார பின்னூட்டத்தின் மூலமே அத்தனை வலையுலக நண்பர்களுக்கும் சொல்லிக்கலாமே நாம நண்பர் தின வாழ்த்துக்களை:)! வாழ்த்துக்கள் நண்பர்களே!
//கமெண்ட் போட்டுட்டு, மீ த ஃப்ஸ்ட்
ReplyDeleteசொல்வதிலும் நீங்க தான் ஃப்ஸ்ட்! ராமலஷ்மி!!//
ஆமாங்க, அதான் அவ்ளோ சந்தோஷம் ஈஈஈஈஈ...னு:))!
அன்புச் சகோதரி நானானி - ஒரு வார காலம் நமக்காக உழைத்து அருமையான சரம் ஒன்றினைத் தொகுத்து வழங்கி நம்மை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தி விட்டு, பல பின்னூட்டங்களைப் பெற்ற பெருமிதத்துடன் விடை பெறுகிறார். நல்வாழ்த்துகள் நானானி
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின வாழ்த்துகள் நானானி
ராமலக்ஷ்மி
ReplyDeleteஇனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துகள்
மீ த செகண்டு
தூங்கிட்டேன் - ஞாயிறல்லவா
நாங்கள் இன்னும் தூங்கவில்லை.சனி இரவல்லவா:)
ReplyDeleteஅன்பு நானானி அழகாக முடித்திருக்கிறீர்கள். வலையில் வரும் அனைவருக்கும் நண்பர் தின வாழ்த்துகள்.
அன்பு ராமலக்ஷ்மி,சீனா சார் உங்களுக்கும் என் வாழ்த்துகள்.
நானானிம்மா! அழகாத் தான் முடித்துள்ளீர்கள்... நன்றாகத் தான் வந்திருக்கிறது.. வாழ்த்துக்கள்... :)
ReplyDeleteஅனைவருக்கும் இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்து(க்)கள்!
ReplyDelete////ராமலக்ஷ்மி said...
ReplyDeleteசீனா சார்! மீ...ஈஈஈ த ஃபஸ்ட்:))))!///
அக்கா! நிறைய மீ த பர்ஸ்ட் அடித்ததுக்கு வாழ்த்துக்கள்... ;)))
அன்பு நானானி அம்மா!
ReplyDeleteஉங்க ஒவ்வொரு பதிவுக்கும் பின்னூட்டம் போட நினைத்து உங்க முதல் பதிவில் பின்னூட்டம் இட்டேன்.இரண்டாம் பதிவை படித்த போது" இவ்வளவு நன்றாக சரளமான நடையோடு எழுதுகின்றார்களே? நம்ம வழக்கம் போல பின்னூட்டத்தில் கும்மி அடித்தால் அவர்களது ஆர்வம் குறைந்து போய் விடுமே" என நினைத்து பதிவுகளை தொடர்ந்து படிப்பதோடு மட்டும் நிறுத்திக் கொண்டேன். ஒரு ரன்ல இருந்து சிக்ஸர் வரைக்கும் கலந்துகட்டி அடிச்சு இருக்கீங்க. உங்க மருமகனாரையும் தொடந்து எழுத சொல்லுங்க. வலைச்சரத்தில் நீங்க தொடுத்த மலர்களின் வாசம் மிக அருமை.வாழ்த்துகள்
வென்று விட்டேன் என்று நினைக்கிறேன் என சொன்னது உங்கள் தன்னடக்கம்.ஒரு வாரம் வலைஞர்களை கம்ப்யூட்டர் முன் அமர்ந்ததும் வலைச்சரத்தை க்ளிக்க வைத்தீர்கள்.
ReplyDeleteநல்ல பதிவுகள். பாராட்டுக்கள்.
சகாதேவன்
நான் பதிவிலேயே சொல்லீட்டேனே!
ReplyDeleteராமலஷ்மி!
இப்படித்தான் நாம எதிலும் வித்தியாசமாக இருக்கோணும். ராமலஷ்மி! என்னை மாதிரி!!
ReplyDeleteசீனா! எல்லாம் நீங்க கொடுத்த ஊக்கம்தான். உங்களுக்கும் இன்றையதின வாழ்த்துக்கள்!!!!
ReplyDeleteமீ த செகண்டு...எல்லாம் கிடையாது..சீனா! ஒன்லி மீத த ஃப்ஸ்ட்!!! அப்புரம் அப்படியே போய்ட்டேயிருக்கும்.
ReplyDeleteவாங்க வல்லி!
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி!!!
அதென்ன "தான்" தமிழ்பிரியன்?
ReplyDeleteஎன் அகராதியில் 'தான்' என்றால் போனாப்போகுதுன்னு அர்த்தம்!
ஜில்ஜில்ரமாமணி சொல்வாரே, 'அந்த மோகனாங்கி என்னமாத் தான் ஆடுறாங்கன்னு பாத்துட்டு வாரேன்!'ன்னு. அது மாதிரி.
இருந்தாலும் உங்கள் பின்னோடங்கள்
மூலம் தந்த ஆதரவு...'நல்லாத் தான்' இருந்தது. நன்றி தமிழ்பிரியன்!!
உங்களுக்கும் அஃதே உறித்தாகுக!!
ReplyDeleteஅட! நீங்க உப்பு, காரம் போட்டு வறுத்தெடுத்து தருவீர்கள் என்றல்லவா காத்திருந்தேன். கும்மிக்கெல்லாம் பயந்தால் முடியுமா?
ReplyDeleteஅதுவும் எனக்குப் பிடிக்குமே!!
ரொம்ப சந்தோஷம்!!சகாதேவன்!
ReplyDeleteசீக்கிரம் நீங்களும் வலைச்சரம் தொடுக்க வேண்டும். அதன் வாசத்தில் எல்லோரும் கிறங்கிப் போகவேண்டும். சேரியா/
அருமையாக சரம் தொடுத்து வாரம் முழுக்க அசத்திட்டீங்க.
ReplyDeleteஉங்களுக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅடுத்த வார வலைச்சர ஆசிரியர் தமிழ்பிரியனை வருக வருக என வரவேற்கிறோம்!!
ReplyDelete:))))))
இந்த வார வலைச் சரம் ஒரு கலைச் சரம்.ஏழு நாட்களும் ஏழு வண்ணங்களாய் ஜொலித்தன.
ReplyDeleteமங்களூர் சிவா!
ReplyDeleteஉங்கள் பாராட்டுக்கு நன்றி!
எல்லாம் உங்களைப் போன்றவர்களின்
அன்பும் ஆதரவும்தான் காரணம்
உங்களுக்கும் அஃதே சிவா!
ReplyDeleteதமிழ்பிரியன் எனக்கு முன் வலைச்சர
ReplyDeleteஆசிரியராக இருந்தவராயிற்றே?
மறுபடியுமா? செய்வார்..செய்வார்..
அவரால் முடியும்.
வாழ்த்துக்கள்! தமிழ்பிரியன்!!
சந்தோஷம்!!கோமா!உங்கள் பாராட்டுக்கு.
ReplyDelete///மங்களூர் சிவா said...
ReplyDeleteஅடுத்த வார வலைச்சர ஆசிரியர் தமிழ்பிரியனை வருக வருக என வரவேற்கிறோம்!!
:))))))///
///நானானி said...
தமிழ்பிரியன் எனக்கு முன் வலைச்சர
ஆசிரியராக இருந்தவராயிற்றே?
மறுபடியுமா? செய்வார்..செய்வார்..
அவரால் முடியும்.
வாழ்த்துக்கள்! தமிழ்பிரியன்!!///
அம்மாவும், அண்ணனும் என்னை வச்சு காமெடி கீமெடி பண்ணலையே/.......... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
///நானானி said...
ReplyDeleteஅதென்ன "தான்" தமிழ்பிரியன்?
என் அகராதியில் 'தான்' என்றால் போனாப்போகுதுன்னு அர்த்தம்!
ஜில்ஜில்ரமாமணி சொல்வாரே, 'அந்த மோகனாங்கி என்னமாத் தான் ஆடுறாங்கன்னு பாத்துட்டு வாரேன்!'ன்னு. அது மாதிரி.
இருந்தாலும் உங்கள் பின்னோடங்கள்
மூலம் தந்த ஆதரவு...'நல்லாத் தான்' இருந்தது. நன்றி தமிழ்பிரியன்!!///
அம்புட்டு தமிழில் தெளிவு இல்லைங்கம்மா.... தப்பா இருந்தா சாரி...... :(
நானானிம்மா,
ReplyDeleteநன்றாய், கலக்கலாய், அருமையாய், அற்புதமாய், தொடுத்தீர்கள் சரம்.
//இன்று நண்பர்கள்தினம்!!இந்நாளில் வலையுலக நண்பர்கள் அனைவருக்கும் என் நண்பர்கள்தின வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்!!!//
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்
நானானி அம்மா,
ReplyDelete:). அருமை. கலக்கல்ஸ். :).
வாழ்த்துகள்.
உய்...உய்...உய்..:P
தமிழ்பிரியன்!
ReplyDeleteநான்...என் அகராதியில் என்றுதான் சொன்னேன்...அதன் அர்த்தம் உங்களுக்குத்தெரிய வாய்ப்பில்லையே!
நீங்கெல்லாம் அடிக்கிற கும்மி மாதிரி
ஒரு தமாசுக்குச் சொன்னதுதான். சாரி எல்லாம் வேண்டாம்..த.பிரியன். பிரியத்தை இழக்கக்கூடாது என்பதால்
சொன்னேன்.
நன்றி! சதங்கா!
ReplyDeleteஉங்களுக்கும் என் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்!!
புதுத்தேனீ!!!
ReplyDeleteஅம்மா கூட பேசியாச்சா?
நானும் இப்போது ஒரு வண்டாய் பறக்கிறேன்!உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்...உய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்!!!
வாழ்த்துக்கள்
ReplyDeleteகோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
கடந்த சில நாட்களாக மனதும் உடலும் சரியில்லாத நிலமையில் வலைச்சசரம் பக்கம் வரவே முடியாமல் போய்விட்டது வந்து போன ஒரே இடம் வருத்தப்படாத வாலிபர் சங்கம்தான் என்று நினைக்கிறேன்...!
ReplyDeleteஅதனால கோச்சுக்காம இத ஏத்துக்குங்க...:)
நல்ல தொகுப்புகளை தந்த நானானியம்மாவுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் சொல்லிக்கறேன்...
நானானிம்மா,
ReplyDelete//சீக்கிரமே அவரும் வலைச்சரம் தொடுப்பார்...//
கௌண்ட் டௌன் ஸ்டார்டர்ட். எப்போ, எப்போ, எப்போ ....
வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்.
நானானிம்மா,
ReplyDelete//சீக்கிரமே அவரும் வலைச்சரம் தொடுப்பார்...//
சதங்கா .
//கௌண்ட் டௌன் ஸ்டார்டர்ட். எப்போ, எப்போ, எப்போ ....
வாழ்த்துக்கள் ராமலஷ்மி மேடம்.//
ரிப்பீட்டேய்
மறுக்காச் சொல்லிக்கறேன்
வாங்கம்மா ராமலக்ஷ்மி - இரண்டு மின்ன்னஞ்சலும் உங்களை எட்ட வில்லை. ஸ்பாமில் தேடுங்களேன்.
ஆமா எப்ப எழுதுறீங்க
சீக்கிரம் சீக்கிரம் சீக்கிரம்
ரசிகர் பட்டாளம் எதிர் பாக்கறாங்க
//வாங்கம்மா ராமலக்ஷ்மி - இரண்டு மின்ன்னஞ்சலும் உங்களை எட்ட வில்லை. ஸ்பாமில் தேடுங்களேன்.//
ReplyDeleteஸ்பாமிலும் இல்லையே சீனா சார். வெள்ளைக் காக்காய் செய்த வேலையைத் திருந்தச் செய்திருக்கிறது:)! காக்காயே அப்படி இருக்கையில் நான் ஓரளவேனும் செய்வதைத் திருந்தச் செய்ய வேண்டுமில்லையா. தமிழ் மணத்தில் கடந்த 3 மாத காலத்தில் எனது வாசிப்பு வட்டம் எவ்வளவு குறுகியது என்பதை ஒவ்வொரு வலைச் சரமும் உணர்த்துகிறது. அதனால்தான் சில மாதங்கள் செல்லட்டுமே என்கிறேன். மற்றபடி மெயிலில்தான் உங்கள் அழைப்பைப் பார்க்க வேண்டும் என்ற ஃபார்மாலிட்டி ஏதுமில்லை. என்னால் முடியும் என்று நம்பிக்கை வைத்து கமென்ட் பாக்ஸில் விட்டிருந்த மெசேஜ் போதாதா எனக்கு!
வெள்ளைக் காக்காயா அப்படி என்றால் எனக் கேட்பவர்களுக்கு: டெக்னிகல் ப்ராப்ளத்தினால் காணாமல் போகும் மெயில் மற்றும் கமென்ட்களைத் தூக்குவது இந்த வெள்ளக்காக்காய்கள்தான்! வெள்ளைக் காகத்தை எப்படிப் பிடிக்கவே முடியாதோ அதே போல நம்ம கமென்ட், மெயில் எப்படி மாயமா மறையுதுன்னும் கண்டே பிடிக்க முடியறதில்லை. இது நானும் newbee-ம் ஏதேச்சையாக கண்டெடுத்து வலையுலக அகராதிக்கு அளித்திருக்கும் புது வார்த்தை. எங்களுக்கு copy right ஏதும் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் உபயோகித்துக் கொள்ளுங்கள்:)! சரிதானே newbee:)?
ReplyDelete