கதை சொல்லபோறேன்..கத்தாம கேக்கோணும்..
என்ன தலைப்புல எழுதறதுன்னு யோசிச்சே பாதி முடியை பிச்சுகிட்டு கடேசியா வெறும் கதையா உட்டா என்னன்னு தோணுச்சுப்பா..அதான் கதை எழுதறவங்களை எல்லாரையும் பிடிச்சுட்டு வந்துடலாம்னு முடிவு பண்ணி இப்ப ஒவ்வொருத்தரா உங்க முன்னாடி கூட்டியாந்து நிக்க வெக்குறேன்..
கதை ன்னு சொன்னாலே அது சாந்தி அக்கா தான்..புன்னகை தேசம் எனும் வலைப்பூவில் அழகான காதல் கதை,தன் வாழ்வில் சந்தித்தவர்கள் ,அவங்க குழந்தைகளோட கும்மின்னு எழுதி கலக்குவாங்க..குழந்தைகளோட விளையாட்டுன்னாலே அழகு தான்..அதையே இவங்க எழுத்துகள் இன்னும் அழகு சேர்க்கும்..
இவங்களொட சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை என்ற காதல் கதை ரொம்பவே அருமையா இருக்கும்..எப்பவுமே இவங்க கதையில் சம்ப்வங்கள் உரையாடல்களா சொல்லபடுவது தான் சிறப்பு..அதன் மூலம் நம்மையும் அந்த கதையோடு பயணிக்க வைக்கும் திறமான எழுத்து..இந்த கதை சிஃபி .காமில் கூட வெளிவந்தது..தற்போது ஒலிம்பிக் பற்றியும் அழகாக தகவல்களோடு தொகுத்தளித்திருக்கிறார்..இதன் மூலம் நல்ல தொகுப்பாளினியாகவும் தெரிகிறார்..
அடுத்ததா நம்ம கீதாம்மா..கதை கதையாம் காரணமாம்..இவங்க வலையுலக தலைவின்னு எனக்கு வலைச்சரம் வந்தபிறகு தான் தெரியும்..வணக்கம் தல(வி)..ராமாயணத்தையே படத்தோடு தொடராக அழகாக எழுதி வருகிறார்..இதுக்கு மேல நான் சொல்லணுமா என்ன தல(வி) பத்தி...
அடுத்ததா நான் முன்னமே சொன்ன மாதிரி பாஸ்கர் (எ) ஒளியவன் சிறுகதையிலும் கலக்கு கலக்குன்னு கலக்கிட்டிருக்கார்..இவர் கதைகள் இணையதளங்கலில் கூட வெளிவந்திருக்கிறது..தற்போது மிகவும் சுவாரஸ்யமாக கடலும் 4453 ஆம் ஆண்டும் என்ற குறுந்தொடர் எழுதி வருகின்றார்..எல்லாரும் போய் வாங்க 4453 ஆம் ஆண்டுக்கு..
அடுத்ததா என் மனதை கவர்ந்த ஒரு முக்கியமான நண்பர் கென்..இவர் பத்தி சொல்லணுமா என்ன சாரு வோட வாரிசுல்ல..இவரோட எழுத்துக்கள் எப்போதுமே ஒரு நிராசையை கொண்டிருக்கும்னு எல்லாரும் சொல்லுவாங்க..அதோட காரணம் என்னன்ன்னு என்கிட்ட கென் போன்ல கூட சொன்னாரு..இவரோ கதையெழுதும் எழுத்துநடை மிகவும் வித்தியாசம் ..
இவரோட எழுத்து நடையின் மூலம் நம்மை கிராமிய மணம் கமழ கதைக்குள் ஆழ்த்தி விடும் திறம் ..அபாரம்..நான் இவரோட கதையில் அதிகமா ரசிச்சு (மூழ்கி )படிச்சது பிணத்தின் தீயில் பீடிக்கு நெருப்பெடுத்தவன்..கதையில் முடிவில் நம்மையறியாமல் கண் கலங்கி நிற்பது தான் உண்மை..
அடுத்தது நம்ம நிலா அண்ணா..கவிதையின் ஒரு புறம் தொடமுடியாத தூரத்துக்கு போயிட்டிருக்காருன்னா கதையும்..பொதுவ்வா தமிழ் குழுமங்களில் இவர்கதைகளை படித்து இன்னொரு சுஜாதான்னு கூட சொல்லி கேட்டிருக்கேன்..இவரோட சேமியா ஐஸ் , இன்னொன்னு தாய்மை ..எனும் சிறுகதை என்னை ரொம்பவே பாதித்து விட்டது...இதிலும் எழுத்து நடை தான் மிகவும் சொல்லதகுந்த விசயம்..அப்படியே கதைக்குள் நம்மை கண்கட்டி இழுத்து செல்லும் அபாரமான எழுத்துகள்....
ஹலோ என்னா எல்லாரும் கதைகேட்டு தூங்கிட்டிருக்கீங்க..நல்லா இருக்குப்பா ...எழுந்துருங்க எழுந்துருங்க...எல்லாரும் பிரசண்ட் சொல்லுங்க ..நான் அடுத்த பதிவோட திரும்ப வரேன்
|
|
me the firstu.
ReplyDeleteஉள்ளேன் ஐயா.
ReplyDeletesuttiyellam puthusa iruku.
ReplyDeletepadichittu vanthidaren sir.
ம்ம்
ReplyDeleteஓகே அட்டெண்டென்ஸ் போட்டுட்டேன்
ReplyDeleteபுதுகைத் தென்றல் said...
ReplyDeletesuttiyellam puthusa iruku.
padichittu vanthidaren sir.
August 13, 2008 3:03:00 PM IST
//
படிச்சுட்டு வாங்க
நன்றி தம்பி. இங்கே பதித்தமைக்கு. பிறரைப் அன்போடு பாராட்ட பெரிய மனது வேண்டும். அது உனக்கிருக்கிறது, வாழ்க!
ReplyDeleteஅடடே நம்ம தம்பி தணிகை..
ReplyDeleteஅதெல்லாம் முடியாது கத்தணும்போல இருக்கே உங்க எழுத்த பாத்ததும்.. எந்த ஒரு நாடகத்தனமையும் இல்லாம, இயல்பா எழுதுவீக...
இப்பவும் அப்படியே...
மொத மொதல்ல தணிகையின் எழுத்தைப்பார்த்து ஒரு 60 வயது இருக்குமோ என்று பயந்தேன்.. எனக்கு எழுத ஆர்வம் தூண்டியவர்களில் நீங்களும் ஒருவர் தம்பி..நன்றி.
மேலும் மேலும் வளர வாழ்த்துகள்..
இன்னைக்கு என்ன கிளாஸ் லீவா?
ReplyDeleteநாளைக்குத் தானே சுதந்திர தினம்!!!
குழும அன்பர்களின் வலைப்பூ சுட்டிகள் அருமை.
ReplyDelete