சாமி கும்மிட போறேன்..சத்தம் போடாம வாங்க...
எந்த வலையை பிடிச்சு எதையெல்லாம் எழுதலாமிங்குறதுல ரொம்பவே அங்கலாய்ச்சுடுது என் மனசு..சரி எதையாச்சும் எழுதிடலாம்னு வந்தா கோர்வையா ஒரு தலைப்பு கிடைக்கமாட்டேங்குது சாமின்னு சொன்னப்ப தான் தோணுச்சு சரி முதல்ல சாமியை பத்தியே போட்டு முதல் பதிவை தொடங்கிடுவோம்..ஆடி மாசம் வேற வலையில உலாத்தினா நிறைய பதிவுகள் கிடைக்கும் போலன்னு அப்படியே சுத்தலாம்னு நுழைய
முதல்ல ஞாபகம் வந்தது நம்ம கவிநயா தான்..உள்ள நுழைஞ்சதுமே அட்டகாசமா ஆடிவெள்ளி கிழமையிலே ன்னு ஒரு செம சூப்பரான பாட்டு.இவங்க பதிவுகளில் எப்பவுமே அழகான தரிசன புகைப்படங்களும் அதற்கேற்ற வரிகளும் அற்புதமாய் எழுதியிருப்பாங்க..நீங்களும் இங்க போய் தொட்டு கும்மிட்டு வாங்க..அடுத்ததுக்கு போகலாமா?
ஆத்தாவை பத்தி பாட்டு படிச்சோம்..அப்புறமா என் பேரில் குடியிருக்கும் முருகனை பற்றி என்னவொரு அழகா இவங்களோட ஆசைக்கு ஏத்தமாதிரி ரெண்டாந்தரம்கட்டபோறோம் வந்து வாழ்த்துங்கன்னு கூப்பிட்டிருக்காங்க..
அட என்னாங்க வெறும் வாழ்த்தோட அனுப்ப மாட்டாங்க நல்ல தடபுடலா தேவலோகத்துவிருந்து வெச்சு தான் அனுப்புவாங்க..எல்லாரும் ஒரு எட்டு போய்ட்டு வரூவோமா?
கவிநயாவின் வலையுலாவலில் இன்னொரு வலை திரு சதாசிவம் எழுதியவைகள் கண்ணில் பட்டது.இவருக்கு இறைநம்பிக்கையே இல்லாமல் இருந்து எப்படிஇறைக்குள் வந்தார் என்பதையும் இறைவனின் அவதாரங்கள் பற்றியும் வாழ்க்கையும் நீயே! வழித்துணையும் நீயே என பாடியுள்ளார். இவரில் ராமனை பற்றிய அதிகமான கவிதைகளை பார்க்கமுடிகிறது..இறைவனே இவருள் இருந்து எழுத தூண்டுவதாய் சொல்லும் இவரின் எழுத்துக்கள் நம்பிக்கை..
அடுத்ததா இணையகுழுமத்தில் அறிமுகமான அம்மா விசாலம் அவர்களுடைய மீராம்பிகா வலை..இதில் சமூகம் குறித்த தேடல்களும் கடவுள் பற்றிய போதனைகளும் அதிகம் காணலாம்.குறிப்பாக இந்து மத பண்டிகைநாட்களின் வீசேசம் குறித்தும் வழிபடும் முறைகுறித்தும் இவர் எழுத்துகள் அமைந்திருக்கும்..அதில் நான் உங்களுக்கு சொல்லவிரும்பும் பதிவு வரலட்சுமி விரதம். எல்லாரும் கவிநயா அக்காவோட பதிவுல விருந்து சாப்பிட்டீங்கல்ல ..இப்ப விரதமும் இருந்து பாருங்க...
விரதம் முடிஞ்சவுடனே படையல் எல்லாம் நீங்களே சாப்பிடலாம்..என்ன சரி தானே ஒப்பந்தம்..
அப்படியேக்கா விரதம் முடிஞ்சு எல்லாரும் வந்து கடைசியா ஒரு அந்தாதி பாடலாமா? இங்க பாருங்க குமரன் அமிராமி அந்தாதியை அழகாக பாடலும் படத்தோடும் பாடலுக்கான ஒவ்வொரு வரிக்கான விளக்கமும் அந்தாதி தொடை பற்றிய செய்திகளையும் எதுகை மோனை நயமென எல்லாவற்றையும் தொகுத்தளிக்கிறார்..கடைசியாக நெஞ்சில் எப்போதும் உதிக்கின்றவே (அபிராமி அந்தாதி 100வது பாடல்) கொடுத்திருக்கிறார்...
அந்தாதி கத்துக்க ஆசை படுறவங்க எல்லாரும் இவரோட பதிவை படிச்சாலே
எழுதலாம்னு நினைக்கிறேன்..
சாமி கும்மிட்டாச்சு..அடுத்த பதிவுக்காக நான் போறேன்..இதையெல்லாம் படித்து பார்த்து சாமி கும்பிட்டு நீங்களும் காத்திருங்க...என் மொக்கைதொடருக்காக/
ஒரு வாரம் உங்க தலையெழுத்து அனுபவிச்சு தான் ஆகணும்..
|
|
ஆகா ஆகா - அருமையான பதிவு
ReplyDeleteசாமி கும்பிட்டு ஆரம்பிச்சா எல்லாச் செயலும் நல்லா முடியும்பாங்க
வாழ்க வாழ்க
ஆமாமாம். சாமி கும்பிட்டு ஆரம்பிச்சது(ம்) நல்லாத்தேன் இருக்கு.
ReplyDeleteஆகா ஆகா - அருமையான பதிவு
ReplyDeleteசாமி கும்பிட்டு ஆரம்பிச்சா எல்லாச் செயலும் நல்லா முடியும்பாங்க
வாழ்க வாழ்க//
நன்றி சீனா சார்...என்ன கூட்டத்தையே காணோம்...
எல்லாரும் எங்க தான்பா போயிட்டீங்க..
பிரிச்சு மேயற நிஜமா நல்லவனை கூட காணுமேப்பா...
// துளசி கோபால் said...
ReplyDeleteஆமாமாம். சாமி கும்பிட்டு ஆரம்பிச்சது(ம்) நல்லாத்தேன் இருக்கு
//
நன்றிம்மா
எல்லாரும் எங்க தான்பா போயிட்டீங்க..
ReplyDeletePRESENT SIR.
// புதுகைத் தென்றல் said...
ReplyDeleteஎல்லாரும் எங்க தான்பா போயிட்டீங்க..
PRESENT SIR.
//
ஓகே...
நெக்ஸ்ட்...யாரு தாயி...
கவிநயா ஆண்ட்டிக்கெல்லாம் ப்ளாக் இருக்கா !?!?
ReplyDeleteசுட்டி கொடுத்ததுக்கு நன்றி தணிகை!
:)))
//என்ன கூட்டத்தையே காணோம்...//
ReplyDeleteதணிகை ஒருவேளை நீங்க சத்தம் போடாம வரச்சொன்னத தப்பாப் புரிஞ்சிகிட்டாங்களோ? :)