07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, October 3, 2008

மனதைக் கவர்ந்த பதிவர்கள்

முன்கூட்டியே சொல்லிடுறேன் இந்தப் பதிவில் சொல்லியிருப்பவர்கள் மட்டுமே என் மனம் கவர்ந்தப் பதிவர்கள் அல்ல. இன்னும் பலர் இருக்கின்றார்கள், எல்லோரையும் பற்றி எழுத வேண்டுமாணால் நானே வலைச்சரத்தின் நிரந்தர ஆசிரியராக அமரவேண்டியிருக்கும். எனவே சிலரை மட்டுமே குறிப்பிட்டாக வேண்டிய நிலை. குறிப்பாக புதிய பதிவர்களை முன்னிலைப் படுத்தலாம் என நினைக்கிறேன்.

இனியவள் புனிதாவின் ஈரமான நினைவுகள்.

இனியவள் புனிதா, பெயரில் இருக்கும் இனிமை பதிவுகளில் அதுவும் குறிப்பாக அவரது கவிதைகளில் நிறைந்து கிடைக்கிறது. ஈரமான நினைவுகள் எனும் பெயரில் வலைப்பூ வைத்திருக்கும் இவரது எழுத்துக்களை படித்தால் அதன் நினைவுகள் ஈர நெற்றியில் இடும் குங்குமம் போல் மனதுக்குள் ஒட்டிக்கொள்ளும். தொடர் கதையும் எழுதியுள்ள இவர் யாதுமாகி நின்றாய் எனும் கதையை ஏன் பத்து பாகங்களோடு அப்படியே விட்டுவிட்டார் எனத் தெரியவில்லை.

சின்னதும் பெரிதுமாய் இவர் எழுதியிருக்கும் கவிதைகள் மிக அருமை. என்னைக் கவர்ந்த இருக் கவிதைகளை இங்கு குறிப்பிட்டுள்ளேன். மலர்களின் மவுன விரதம் மிக அழகிய கவிதை, இப்படியும் யோசிக்க முடியுமா என வியக்க வைக்கிறது. எனக்குள் இதயம் தனித்திருக்கே... இப்படி ஒரு கவித்துவமான வாழ்த்தை பெறுபவரும், வாழ்த்துபவரும் மிக பாக்கிய சாலிகள் தான்.

துக்ளக் ம‌கேஷ்

இவரு எங்க சிங்கை சிங்கம்ல. இவரு ஒரு மிகப்பெரிய வங்கியில் மிகப்பெரிய பணியில் இருந்தாலும், மிக எளிமையாக பழகுபவர். மிக நீண்ட காலம் தமிழ் மணம் மூலமாக எல்லாத் தமிழ் பதிவுகளையும் வாசித்துக் கொண்டிருந்து விட்டு, சமீபத்தில் துக்ளக் எனும் வலைப்பூவை ஆரம்பித்து எழுதவும் ஆரம்பித்துள்ளார்.

மிக எளிய நடையில், சரியாக சொல்வதுன்னா, ஒரு கிராமத்து மரத்தடி டீக்கடையில் இருக்க பெஞ்ச்ல பக்கத்துல உக்காந்துகிட்டு பேசிகிட்டு இருக்க மாதிரி மிக எளிமையா சுவாரசியமா எழுதறது தான் இவரோட பதிவுகள். எல்லாத்துக்கும் மேலா நமக்கு நெம்ப புடிச்ச கொங்கு வட்டாரத் தமிழ்லயே எழுதுறது இவரோட சிறப்பு. அவனோடெ இராவுக‌ள் எனும் த‌லைப்பில் இவ‌ர் எழுதிவ‌ரும் புத்த‌க‌ விம‌ர்ச‌ன‌ங்க‌ள் இவ‌ர‌து ஆழ்ந்த‌ வாசிப்ப‌னுவ‌த்தைக் காட்டும் ப‌திவுக‌ள். தலைப்ப பார்த்து தப்பா நினைச்சுராதீங்க, இரவுகளில் இவர் படிக்கும் புத்தகங்களைப் குறித்து எழுதும் பதிவுகள் என்பதால் இப்படி ஒரு தலைப்பை வைத்திருக்கிறார்.

மொள‌ச்சு வ‌ரும்போது எனும் த‌லைப்பில் இவ‌ர் எழுதியுள்ள‌ இவ‌ர‌து இளமைக்கால‌ குறும்புக‌ள் ப‌டிக்க‌ மிக‌ சுவையாய் இருக்கும் ப‌திவுக‌ள். இதுவரை இவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை பலமுறை தெலைபேசியில் உரையாடியுள்ளோம். ச‌மீப‌த்தில் ப‌ரிச‌ல்கார‌ரின் ப‌திவில் இவ‌ர‌து புகைப்ப‌ட‌த்தை பார்த்துவிட்டு இந்த‌ குழ‌ந்தை முக‌த்துக்கார‌ரா இத்த‌னை குறும்புக‌ளுக்குச் சொந்த‌க்கார‌ர் என‌ ஆச்ச‌ரிய‌மாய் இருக்கிற‌து.

கையேடு

1999 ஆண்டு தஞ்சை மாவட்டம் பூண்டிக் கல்லூரி இளங்கலை இயற்பியல் (B.Sc, Physics) இறுதியாண்டு மாணவர்கள் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்திற்கு (Indian Institute of Science, IISc) கல்விச் சுற்றுலா சென்றனர். அங்குள்ள எல்லா துறைகளையும் சுற்றிப்பார்க்க ஒரு முழுநாளை செலவழித்த மாணவர்கள் அன்று மாலை அங்கிருந்து புறப்படும் போது, அவர்களுள் மிக அருமையாக படிப்பவரும் மிக அமைதியானவருமான ஒரு மாணவர் மிக மெல்லியக் குரலில் சொன்னார் " கட்டாயம் நான் இங்கு படிப்பேன்" என்று. பூண்டி கல்லூரியில் இளங்கலை முடித்துவிட்டு சென்னை அண்ணா பல்கலையில் மேறபடிப்பும் முடித்துவிட்டு சொன்னது போல் இந்திய அறிவியல் கழகத்தில் முனைவர் படிப்புக்கு சேர்ந்தார் அந்த மாணவர். அந்த அமைதியான, சொன்ன சொல்லை நிறைவேற்றிக் காட்டிய மாணவர் தான் இந்த கையேடு ரஞ்சித். ( அதே சுற்றுலால ஒரு உருப்புடாதவனும் கலந்துகிட்டான், அவன் வேறு யாரும் இல்ல, நான் தான்.)

இவரது பதிவுகள் ஒரு கலவையான உணர்வுகள். மன்னிப்புக் கடிதம் ஒரு குழந்தையை அது பிறந்தது முதல் படிப்பு, வெற்றி என்று அதை பெற்றோர் படுத்தும்பாடுகளை சொல்லும் கடிதம் படிப்பவர் மனதில் சுரீர் என தைப்பது உறுதி. இந்தியா - அமெரிக்க அணு உடன்படிக்கை மற்றும் இந்திய அணு ஆற்றல்..!!?? என்ற இவரது பதிவு அணு ஒப்பந்தத்தைப் குறித்த சொல்லப்படாத தகவல்கள் இதில் இருக்கின்றது. இந்தியாவில் எவ்வளவுதான் விலைவாசி உயர்ந்தாலும் மனித உயிரின் விலைமட்டும் மிகவும் மலிவுதான். பாதுகாப்பு என்பதை ஒரு பொருட்டாகவே யாரும் மதிப்பதில்லை. அதிலும் அணு உலைகள் மிகவும் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று. அங்கு நடந்த பாதுகாப்புக் குறைபாடுகள் பலவற்றை இவர் தெளிவாக எழுதியுள்ளார்.

இவரது பதிவுகளில் சிறந்தப் பதிவுகளைக் குறித்து சிறுகுறிப்பு வரைய வேண்டுமாணால் எல்லாப் பதிவுகளையும் குறித்தும் சொல்ல வேண்டி வரும். நான் சொல்வதை விட நீங்களேப் படிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.

இன்னும் பல நல்லப் பதிவர்களைக் குறித்து எழுத வேண்டும் என்ற ஆவல் என்னுள் இருப்பினும், நேற்று காலை முதல் இடையிடையே என் அலுவலகத்திலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளால் சில சிக்கல்களைத் தீர்க்க வேலை செய்ய வேண்டியிருந்ததால் அதிலும் நேற்று இரவிலிருந்து அதிகாலை 4 மணி வரை வேலை செய்தமையாலும் நேரமில்லாமல் போய்விட்டது.

4 comments:

  1. அண்ணாத்த! இது தேவையில்லாத பிரச்சனையோன்னு தோணுது...யாரையும் விட்டுடாம பார்த்துகங்க..

    ReplyDelete
  2. அன்பின் ஜோசப்

    பல புதிய பதிவர்களை அறிமுகப்படுத்தும் விதம் அருமை அருமை

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  3. //நான் ஆதவன் said...

    அண்ணாத்த! இது தேவையில்லாத பிரச்சனையோன்னு தோணுது...யாரையும் விட்டுடாம பார்த்துகங்க.//

    அதெல்லாம் ஒண்ணுமில்ல ஜோசப்!

    நல்லாத்தான் சொல்லியிருக்கீங்க. யாரும் நாம விட்டுப் போய்ட்டோம்னு நெனைக்க மாட்டாங்க. அதான் சொல்லீட்டீங்களே.. புதியவர்களைச் சொல்றேன்னு. யாராவது விட்டுட்டீங்கன்னு கேட்டா ‘சீங்க சீனியர்'ன்னு சமாளிச்சுடுங்க!
    :-)

    ReplyDelete
  4. நெம்ப சந்தோசம் ஜோசஃப். நெம்ப சந்தோசம். நெம்ப நல்லா அறிமுகஞ் செஞ்சுருக்கீங்க. எனா ஒண்ணு, 'நீண்ட காலமெல்லாம்' படிக்கல. ஆனா கொஞ்ச நாள்ல நெறய படிச்சேன். 'நீண்ட காலம்' படிச்சுருந்தா இன்னங்கோட நல்லா எழுதீருக்கலாமோ என்னவோ... நானு ஒப்பயுஞ் சொல்ற மாதிரி, எனக்கு தமிழ் பதிவ அறிமுகம் பண்ணி வெச்ச பரிசல்காரன் அண்ணாச்சிக்குதான் நன்றி (இல்லாட்டி திட்டு) சொல்லோணும்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது