07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, October 21, 2008

என்மேல் பட்டுத் தெறித்த மழைப் பூக்கள்!!!!

மழை என்னுள் ஏற்படுத்தும் சிலிர்ப்பு ...இன்று நேற்றல்ல....ரொம்ப வருஷத்துச் சிலிர்ப்பு...

"நேற்றுப் பெய்த மழையில்
இன்று முளைத்த காளான்
குடையின் கீழ் ஒதுங்கி
இருக்கும் குட்டிப் புழுவே!!!
மழை நின்று விட்டது
வெளியே வா."

இது எனக்குப் பிடித்த என் மழைக் கவிதை....

மழை பற்றி யார் என்ன எழுதினாலும் எனக்குப் பிடிக்கும்....

தேடித் தேடிப் பார்த்துப் படிப்பேன்.

அப்படிப் படித்த பதிவுகளில் எனக்குப் பிடித்தவை... இவை.

இன்னும் சில மழைப் பதிவுகள் விட்டுப் போயிருக்கலாம்..நீங்களும் பின்னூட்டம் போட்டுச் சொல்லலாம்....

சரவணகுமார் சுமார் பத்துக்கும் அதிகமான மழைக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.....அத்தனையும் மழை முத்துக்கள்.
இது அவரின் மழை தேவதை...

"மழையாய் வந்தாய்..
மழை போல் வந்தாய்..
மழை போலவே இருந்தாய்"

இது ப்ரியனின் ப்ரிய மழை....

"முன்னமே சிநேகம்தான்
என்றாலும் நேற்று
நீ நனைந்தபின்
இன்னும் சிநேகமாகிப்போனது
மழை!"

உணராமல் வழிந்தோடும் மழைநீரைப்போல,
என்னையறியாமல் கால் இயங்கும்
மனம் நிரம்பித் தளும்பி ஞாபங்களால் கலங்கலடைந்து
கடந்து போவோரில் அறிந்த முகம் தேடும்!


இது 'மழை' ஷ்ரேயா

அதிகாலை நடை சுகம்.
அதுவும் முன்னாள் பெய்த மழைவிட்டுச்சென்ற
மண்வாசனையினை முகர்ந்து கொண்டே நடப்பது ஆனந்தம்.

இது விழியனின் மழைக் காலம்....
படிக்கும் போது நிஜம்மாகவே மண் வாசனை நுகர்ந்த ஆனந்தம்....

மழைமழைமழைமழைமழை
ழைழைழைமமமமமழைழைழை
மழைழைமழைமமழைழைம

மழைமழைமழை
மழைமழைமழை

மழைமழை
மழைமழை

மழை

மழை



ழை

இது கவிஞர் மதுமிதாவின் மழை....
மழைத் துளியின் சாரல் மேல் பட்டது போல ஓர் உணர்வு படித்தவுடன்....

அப்புறம் அனுராதாவின் மழையின் நட்பில்.....

"மறுபடியும் மேகம் குவியும்
மற்றொரு மழைக் காலத்துக்காக
அந்நாளுக்காக
கையில் குடை பிடித்துக்
காத்திருப்போம் மீண்டும் நனைய"

இது அய்யனாரின் அழகிய மழை வருத்தம்...

"நீ மழை பெய்ததாய் என்னிடம் சொல்லியிருக்க வேண்டாம்"

அடுத்து சிவஞானம்ஜியின் ‘பெண்ணல்ல…..மழை!’

விரும்பி வேண்டுகையில்
விலகிப் போவதுவும்…
வெறுத்து ஒதுக்குகையில்
வீம்பாய்க் கொட்டுவதும்..
பெண்ணல்ல………..
மழை!

இது தீபாவின் மழைப் பதிவு.....
"அம்மா...மழைய்யை ரசிக்க வாயேன்"
என்று எல்லோரையும் அழைக்கும் ஒரு பதிவு.மழை பற்றித்தான் எத்தனை எத்தனை நினைவுப் பொக்கிஷங்கள்?????

தங்ஸ் இந்தப் பேரு கொஞ்சம் புதுமையானது....இவரின்
"மழையும்,மழை சார்ந்த பொழுதும்" இவரின் பெயரைப் போலவே புதுமையானது....

மழை அழகோ அழகுதான்.....ஆனாலும் அதற்கும் ஒரு மறுபக்கமிருக்கே.

எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் கஷ்டம்தானே???????

இது மழையின் மறுபக்கத்தைப் பதியும் ஒரு பதிவு.....மழையை ரசிக்கும் போது....இதையும் அனுபவிக்கத்தான் வேண்டும்.
யெஸ்.பால பாரதியின் இந்தப் பதிவு மழையின் மறுபக்கத்தைக் காட்டுகிறது.....

இன்னிக்கு இவ்வ்ளோதாம்ப்பா....????

கொஞ்சமா மழையிலே நனைஞ்சுட்டோமில்லே,....????

ஜல்ஸ் புடிச்சிக்கிச்சுப்பா.....நாளைக்குப் பார்க்கலாமா......???

வர்ட்டா.....???

19 comments:

  1. மழை என்றால் வளமை
    குடைக்குள் மழை என்றால் வறுமை

    ReplyDelete
  2. இதோ உங்களின் இந்தத் தொகுப்பை படிக்கும் நேரம் வெளியில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இரவில் இருந்தே பெய்வதால் சுற்றிலும் குளுமை.

    :))))))))

    ReplyDelete
  3. //மழைமழைமழைமழைமழை
    ழைழைழைமமமமமழைழைழை
    மழைழைமழைமமழைழைம

    மழைமழைமழை
    மழைமழைமழை

    மழைமழை
    மழைமழை

    மழை

    மழை



    ழை//

    இது கவிதையா
    உங்களுக்கு உண்மையிலேயே புடிச்சிருந்ததா
    எனக்கு தலை சுத்துது

    ReplyDelete
  4. //
    வால்பையன் said...
    //மழைமழைமழைமழைமழை
    ழைழைழைமமமமமழைழைழை
    மழைழைமழைமமழைழைம

    மழைமழைமழை
    மழைமழைமழை

    மழைமழை
    மழைமழை

    மழை

    மழை



    ழை//

    இது கவிதையா
    உங்களுக்கு உண்மையிலேயே புடிச்சிருந்ததா
    எனக்கு தலை சுத்துது

    //

    ரிப்பீட்டு.

    இந்தக் கவிதையைப் புரிந்து கொள்ள பின் நவீனத்துவ ஆராய்ச்சி வேண்டுமோ.

    பு.த.செ.வி.

    ReplyDelete
  5. பக்கி லுக் ... said...
    //மழை என்றால் வளமை
    குடைக்குள் மழை என்றால் வறுமை//

    அப்பிடியா??? குடைக்குள் மழை என்றால் வறுமையா??
    அன்புடன் அருணா

    ReplyDelete
  6. புதுகை.அப்துல்லா said...
    //இதோ உங்களின் இந்தத் தொகுப்பை படிக்கும் நேரம் வெளியில் மழை பெய்து கொண்டு இருக்கிறது. இரவில் இருந்தே பெய்வதால் சுற்றிலும் குளுமை.
    :))))))))//

    சென்னையில் மழையா?? சூப்பர்....சூப்பர்..
    நல்லா நனையலாமே??
    அன்புடன் அருணா.

    ReplyDelete
  7. //ம

    ழை//

    இது கவிதையா
    உங்களுக்கு உண்மையிலேயே புடிச்சிருந்ததா
    எனக்கு தலை சுத்துது//

    மழையில் நனைந்து உணர்ந்து பாருங்கள்...அடை மழையையும், மழைத் தூறலையும் கவிதையில் மெல்ல மெல்ல உணரலாம்.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  8. //இந்தக் கவிதையைப் புரிந்து கொள்ள பின் நவீனத்துவ ஆராய்ச்சி வேண்டுமோ.//
    பு.த.செ.வி.

    பின் நவீனத்துவம்,முன் நவீனத்துவம் இதெல்லாம் எனக்குச் சுத்தமாப் புரியாதுங்கோ....
    அதென்னா???பு.த.செ.வி.
    இந்தப் பெயரைப் புரிந்து கொள்ளத்தான் பின் நவீனத்துவ ஆராய்ச்சி வேண்டும்...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  9. எனக்கு பிடித்த மழை கவிதைகள்
    (http://neyamukil.blogspot.com)


    //
    மனம் விட்டுப் பேசியவாறு
    மழையில் நனைந்து வந்தோம்.
    சாலையோரக் கடைக்காரர்
    சற்று நின்று போகச் சொன்னார்.
    மடக்கி வைத்திருந்த குடைகளை
    மறைத்து வைத்தவாறு
    மறுபடி தொடர்ந்தது அரட்டை.
    ரயில் கிளம்ப சில நிமிடம் இருக்க
    இடைவெளி விட்டது மழை.
    ஓடிச் சென்று ஏறிக்கொண்டு
    விருப்பமில்லாதது போல்
    விரும்பி அமர்ந்து கொண்டோம்
    மழை நனைத்த இருக்கைகளில்.
    ஒடுங்கிக் கொண்டும் நடுங்கிக் கொண்டும்
    ஓய்ந்து போன மழையை எண்ணி
    ஒன்றும் பேசாமலே இருந்தோம்.
    ரயில் நகரத் தொடங்கியபோது
    மீண்டும் அரட்டையைத் துவங்கி வைத்தது
    அப்போது பெய்யத் துவங்கிய மழை./


    /இருவழிச் சாலையின்
    ஒருவழியில் தென்படும்
    மழையின் தடயங்கள்.
    கிழக்கே மழை பெய்த சேதியைக்
    கசிந்து சென்றிருந்தன
    மேற்கே செல்லும் பேருந்துகள்./

    /மழைக்குப் பயந்து
    கண்ணாடி ஜன்னலை
    அடைத்த பிறகுதான்
    அன்னை மடியிலிருந்து திரும்பி
    அருகிருந்த என்னைப் பார்த்தான்.
    இடமின்றி நின்றவாறு வந்த
    எல்லோரையும் பார்த்தான்.
    சாமான்களுக்கான மேலிருக்கைகளில்
    அமர்ந்து வந்த சிலரை,
    எதிர் இருக்கைப் பெண்ணின்
    இளஞ் சிவப்பு நிற கைப்பையை,
    என் துப்பட்டாவின் பூ வேலைப்பாட்டை,
    முன்னும் பின்னும் அசைந்தவாறு படிக்கும்
    மூன்றாம் இருக்கை மாணவியை,
    அதை, இதை, எதையும் பார்த்தான்.
    பார்வையாலும், வார்த்தையாலும்,
    ஸ்பரிசத்தாலும், சிரிப்பாலும்
    கண நேரத்தில் எல்லோரையும்
    கவர்ந்து விட்டான் தனித்தனியே.
    இறங்கும் நேரம் நெருங்க
    எழுந்து நின்ற தாய் - எனக்கு
    பறக்கும் முத்தம் ஒன்று
    கொடுக்கச் சொன்னாள்.
    கைகளில் நெடு நேரம் சேமித்த முத்தத்தைக்
    கையோடே கொண்டு செல்வானோ என நினைத்தபோது
    கைகளை விரித்தான்.
    காற்றில் கலந்த முத்தம் என்
    கன்னத்தைச் சேர்ந்தது.
    கம்பார்ட்மெண்டில் எல்லோர்
    கன்னங்களையும் தான்.
    காற்றில் ஈரப்பதம் கூடி விட - அவன்
    இறங்கிச் சென்றபின் பெய்யத் துவங்கியது
    இரயிலினுள் மழை.
    /


    /ஜன்னல் கம்பிகள்
    செலவழிக்கின்றன
    சற்றுமுன் சேமித்த மழையை/

    /தங்க அரளி இதழ்களில்
    தங்கி நிற்கும் ஒரு துளி
    நினைவூட்டி விடுகிறது
    தவற விட்ட எல்லா மழையையும்./


    /குளிர் காற்றோடு கை குலுக்கி வந்த போது
    குறுக்கிட்டுத் தடுத்தது மழை.
    கோபித்துக் கையை உள்ளிழுத்துக் கொண்ட பின்
    கொஞ்சிக் கொஞ்சி முத்தமிட்டவாறு
    கூடவே வந்தது சாரல்./

    /கண்ணாடி ஜன்னலில்
    விளக்கின் எதிரொளி
    நிலவானது
    மழை இரவில். /

    ReplyDelete
  10. அச்சச்சோ இது கார்த்திகா ரஞ்சனின் மழை!!...எல்லாம் படிச்சிருக்கேனே....எப்படி விட்டுதுன்னு தெரிலியே?
    நன்றி திகழ்மிளிர்...
    அன்புடன் அருணா

    ReplyDelete
  11. மழை என்றாலே ஒரு குதூகலம்..

    என்னை பற்றி எழுதி இருப்பதற்கு நன்றி அக்கா..

    மதுமிதா, அனுராதா அறிமுகத்திற்கு நன்றி..

    ReplyDelete
  12. //மழைமழைமழைமழைமழை
    ழைழைழைமமமமமழைழைழை
    மழைழைமழைமமழைழைம

    மழைமழைமழை
    மழைமழைமழை

    மழைமழை
    மழைமழை

    மழை

    மழை



    ழை//

    இந்த கவிதை ரொம்ப அழகா இருக்கு..

    ReplyDelete
  13. "வெளியே மழை
    வேடிக்கை பார்க்க ஜன்னல்
    ஒற்றை நாற்காலி
    அதில்
    நீயும் நானும்
    இது போதும் எனக்கு.."

    இது வைரமுத்துவின் கவிதை மழை துளி..

    ReplyDelete
  14. //இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட
    ஒரு மழை நாளில்

    குமாஸ்தாக்கள் கோப்புகளிலிருந்து
    சற்றே நிமிர்ந்து உட்காருகிறார்கள்

    நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு
    சற்றே மிதமான தண்டணைகளை
    வழங்குகிறார்கள்

    கணவர்கள் மனைவிகளுக்கு அளிக்கும்
    சுதந்திரத்தைக் கண்காணிக்க கொஞ்சம் மறந்துபோகிறார்கள்.

    ஒரு கண்டன ஊர்வலம்
    சட்டென மகிழ்ச்சியான ஒரு மன நிலைக்கு மாறுகிறது

    செய்யப்படாத வேலைகள் பற்றி
    தொழிலாளிகள் பயம் குறைந்து காணப்படுகிறார்கள்

    வேலை கொடுத்துக்கொண்டிருப்பதை
    மறந்து முதலாளிகளும் கொஞ்சம் மழையை வேடிக்கை பார்க்கிறார்கள்

    பெட்ரோல் பங்கில் எனக்கு பின்னால் காத்திருப்பவன்
    இன்று எந்த விரோதமும் இல்லாமல் இருக்கிறான்

    வகுப்பறைகளில் குழந்தைகள்
    ஆசிரியர்களைப் பற்றிய பயங்கரம் நீங்கி
    வெளியே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்

    நண்பர்கள்
    நண்பர்களைப் போலவே காட்சியளிக்கிறார்கள்.

    எல்லா இடத்திலும் ஈரம் பரவிக்கொண்டிருந்த
    ஒரு மழை நாளில்
    நான் என் காதலைச் சொன்னபோது
    நீ அதை
    மறுக்கவும் இல்லை
    ஏற்கவும் இல்லை//

    -மனுஷ்ய புத்திரன்
    http://uyirmmai.blogspot.com/2005/06/11.html

    ReplyDelete
  15. கவிதை மழை...!
    ம்ம். எத்தனை முறை வேண்டுமானாலும் நனையலாம்.
    :)

    ReplyDelete
  16. Saravana Kumar MSK said...
    /மழை என்றாலே ஒரு குதூகலம்..
    என்னை பற்றி எழுதி இருப்பதற்கு நன்றி அக்கா..//

    ஐயே.....இதுக்கெல்லாமா நன்றி சொல்வது?
    அன்புடன் அருணா

    ReplyDelete
  17. Saravana Kumar MSK said...
    //"வெளியே மழை
    வேடிக்கை பார்க்க ஜன்னல்
    ஒற்றை நாற்காலி
    அதில்
    நீயும் நானும்
    இது போதும் எனக்கு.."

    இது வைரமுத்துவின் கவிதை மழை துளி..//

    அட! வைரமுத்துவின் மழைத் துளிகளில் எனக்கும் பிடித்த துளி இது சரவணா.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  18. Saravana Kumar MSK said...
    மனுஷ்ய புத்திரன்
    http://uyirmmai.blogspot.com/2005/06/11.html
    இதை படித்திருக்கிறேன்...பதிவில் தவற விட்டமைக்கு வருந்தவும் செய்கிறேன்...நன்றி.
    அன்புடன் அருணா

    ReplyDelete
  19. Karthik said...
    //கவிதை மழை...!
    ம்ம். எத்தனை முறை வேண்டுமானாலும் நனையலாம்.
    :)//

    மழையே நனைவதற்குத்தானே..? தண்ணீர் மழையாயிருந்தால் என்ன? கவிதை மழையாயிருந்தால் என்ன?
    அன்புடன் அருணா

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது