ஒளி வீசும் நிலாப் பூக்கள்.....
நிலவை ரசிக்காத மனமும் உண்டோ???
நிலாச் சோறு உண்ணாதவரும் உண்டா?
மாம்மை (அம்மா வழிப் பாட்டி) வீட்டில் மொட்டை மாடியில் மாம்மை கையால் நிலாச் சோறு சாப்பிட்ட அனுபவம்....
ம்ம்ம்ம் அதெல்லாம் ஒரு நிலாக் காலம்...
திண்ணை நினைவுகள் எப்படி எல்லோருக்கும் உண்டோ, அது போல நிலா நினைவுகளும் எல்லோருக்கும் இருக்கும்....
அந்த நிலா பற்றிய பதிவுகள் இன்னிக்கு.....
இது யாழ் அகத்தியனின் பகல் நிலாவின் நிலா பாட்டு.....
"வா ...வா நிலாவா நிலா....
வாழ்வோம் ஒன்றாய்
வானம் உள்ளவரை சேர்ந்தே..."
இது ஆதிபன் சிவாவின் குட்டி நிலா
"மேகமாய் வந்துபோகும் நினைவுகளிடையே
வெள்ளிநிலவாய் உன்னினைவு என்னுள் "
விழிமொழியின் "நீயிருக்கும் தூரத்தில்"
"மன்றாடிக் கேட்ட
நிலாவிற்காய்
உனை வர்ணித்த
கவிதையில் - நிலா
இப்படியாக
பெருமைத்தேடிக் கொண்டது.
நீயிருக்கும் தூரத்தில்
நிலா."
பெயரே வித்தியாசமாக அ+மீன்....கவிதையும் அது போல....
அவருடைய நிலாப் பெண்ணே கவிதை....
"என் கனவு விடிகிறது
துயிலைக் கடந்து
நீயும்
விலகிப்போகிறாய்
உன் சூரியனை
விட்டு…"
இது கொஞ்சம் பெரிய இடம்.கவிதைக்குத் தலை....
அருட்பெருங்கோஅவர் எழுதின நிலா.....
"கோபம்…
சூரியனுக்கு வந்தால்
அக்னி நட்சத்திரம்.
உனக்கு வந்தால்
அக்னி நிலா!"
இது கமல் ராஜன் நிலாப் பதிவு....வித்தியாசமாக இது நிலவைப் பற்றியில்லாமல் நிலா ரசிகைக்காகவும்,நிலா ரசிகனுக்காகவுமான கவிதை....படித்துப் பார்த்தால் தெரியும் அழகு.
அதைவிட வித்தியாசம் அனிதா பவன்குமாரின் நிலாக் கவிதை..
"அட இன்று அமாவாசை என்றார்கள்
பின் இந்த நட்ச்சத்திரங்கள் யாரைப் பார்த்து கண் சிமிட்டுகின்றன
ஓ என்னவள் மொட்டை மாடியில் படித்துக்கொண்டு இருக்கிறாளோ???!!!!"
இது கொஞ்சம் வருத்தக் கவிதை...சையது மீரான் வருந்துகிறார்.
"நான் எத்தனையோ முறை விதவையானேன்.
ஒருநாள் உனக்காக வெறுமையாகுவேன்
உனக்காக தேயும் நாளும் வரும் என்றாள்
மாதா மாதம் அவள் தேய்ந்து கொண்டு தான் இருக்கிறாள்.
யார் யாருக்காகவோ......"
அப்புறம் ஞானதேவனின்......நிலா சொந்தம்.
கவிதைன்னு நினைச்சுப் போயிராதீங்க....நிலவில் நிலம் வாங்குவது எப்படின்னு விலாவாரியாச் சொல்றாருப்பா!!!
"நிலா பூமிக்கு சொந்தம்
பூமி நமக்கு சொந்தம் - எனில்
நமக்கு நிலாவும் சொந்தம் "
அம்மாடி ....நிலா நிலான்னு பேசி இரவு நினைவுக்கு வந்து தூக்கம் தூக்கமாய் வருதுப்பா!!!.நாளைக்குப் பார்ப்போமா????
|
|
Super Nila.
ReplyDeleteVery Good.
நிலவைப் பதிவு இட வேண்டும் எண்ணி
ReplyDeleteஇருந்தேன். அதறகுள் நீங்கள் பதிவு இட்டு விட்டீர்கள்
என்னை கவர்ந்த கவிதைகள்
/
மழையில் நிரம்பும் குளம்
மீண்டும் உறவாய்
ஒடிப்போன நிலா
/
//
பொறுப்பில்லாத தோட்டக்காரன்
தூங்கிப்போனான்
காட்டையே மேய்கிறது நிலா
//
அந்தோணி முத்து said...
ReplyDelete//Super Nila.
Very Good.//
tank u..tank u!!!
anbudan aruna
திகழ்மிளிர் said...
ReplyDelete//நிலவைப் பதிவு இட வேண்டும் எண்ணி
இருந்தேன். அதறகுள் நீங்கள் பதிவு இட்டு விட்டீர்கள்//
அதற்கென்ன திகழ்??
நீங்க ஒண்ணு போடலாமே???
தொடர்ந்து பின்னூட்டம் இடுகிறீர்கள்..நன்றி.
அன்புடன் அருணா
இந்த ஒருவாரமாக நிலவை பற்றிதான் படித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவும் Science.
ReplyDeleteஇங்கே ஒரு சேஞ்ச்சுக்கு கவிதையா? ரொம்ப நன்றி.
:)
Karthik said...
ReplyDelete//இந்த ஒருவாரமாக நிலவை பற்றிதான் படித்துக் கொண்டிருக்கிறேன். அவ்வளவும் Science.
இங்கே ஒரு சேஞ்ச்சுக்கு கவிதையா? ரொம்ப நன்றி.
:)//
அப்பாடா கொஞ்சம் relax பண்றதுக்கு உதவி பண்ணியதா????
அன்புடன் அருணா