வாலில்லா வால்பையன்
அடுத்த பதிவர் புதியவர் இல்லை!
ஆனாலும் இனியவர்..!
நான் பதிவெழுத ஆரம்பிப்பதற்கு மிகச்சரியாக 12 நாட்கள் முன்னர்
எழுதத்தொடங்கிய இவர் , கலக்கிக்கொண்டிருக்கிறார்.
அறிமுகப்பதிவிற்கே பெரிய தலைகளெல்லாம் வந்து சென்றிருக்கிறார்கள்
வலைச்சர உரிமையாளர் சீனா அய்யா உட்பட....
பெரியார் என்ன கடவுளா? அல்லது பகுத்தறிவு என்ன வெங்காயமா?
என்று கேட்டு பொட்டிலடித்தாற்போல் ஒரு விஷயத்தை அவர் சொல்லியிருந்தது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
உலகசினிமாவும் ,தமிழ்சினிமாவும்-கிட்டப்பார்வைக்கும், தூரப்பார்வைக்கும் இடையில்என்று அவர் இரண்டு படங்களை அலசி விளக்கம் சொல்லியிருக்கிறார். இந்தப்பதிவில் எனக்கு மிகச்சாதாரணமாக இவர் சொல்லியிருக்கும் இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
"உலகசினிமா என்று சொல்வதை விட வேற்று மொழிப்படம் என்றே சொல்ல ஆசைப்படுகிறேன். ஏனென்றால் வேற்று மொழிக்காரர்களுக்கு நமது படம் உலகசினிமா தானே" !
இது ஒரு மோசமான பதிவுதான்... நாம் யாவரும் படிக்காதவரை! மிகச்சிறப்பாக மோசமானவைகளை வகைப்படுத்தியிருக்கிறார்.
அணு மின்சாரத்துக்கு ஒரு புத்திசாலியின் ஆதரவு!!என்று ஆரம்பித்து இவர் பட்டதை ஜாலியாக எழுதியிருக்கும் இந்தக்கொடுமையை என்னன்னு சொல்லுவது?
பல்லாங்குழி ,தாயம் மற்றும் பெண்ணிய நுண்ணரசியல் பற்றி பின்னி எடுத்து, இந்த விளையாட்டுகளுக்குள் இருக்கும் நுட்ப அறிவைப்பற்றி பிரித்து மேய்ந்திருக்கும் இவரைப்போய் வால்பையன் என்று சொன்னால் நாம் எப்படி நம்புவது.?
இருந்தாலும் வால்பையனைவாழ்த்துக்களுடன் இரசிக்கிறோம்!
|
|
aakaa - vaalpaiyanaa ? sari sari = avanoda vaal paththy ellorrum pinnuuttam poodungka
ReplyDeleteஅவரோட நல்லப் பதிவுகளை அழகா வரிசைப்படுத்தி இருக்கீங்க:):):)
ReplyDeleteரொம்ப நன்றி சுரேகா
ReplyDeleteஎன்னை பற்றி எழுதியதால் ஒருவேளை காத்து வாங்குதோ
ReplyDeleteநண்பர்கள் கும்மி குத்த வரவில்லைஎன்றால்
ReplyDeleteஅவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பதிவெழுத வேண்டியிருக்கும்
:-))))...
ReplyDeleteவால் பையனா? நன்றி சுரேகா
ReplyDelete///rapp said...
ReplyDeleteஅவரோட நல்லப் பதிவுகளை அழகா வரிசைப்படுத்தி இருக்கீங்க:):):)////
ரிப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே
///வால்பையன் said...
ReplyDeleteநண்பர்கள் கும்மி குத்த வரவில்லைஎன்றால்
அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பதிவெழுத வேண்டியிருக்கும்///
ஹிஹிஹிஹிஹிஹி
//
ReplyDeleteநண்பர்கள் கும்மி குத்த வரவில்லைஎன்றால்
அவர்களை வன்மையாக கண்டிக்கிறேன் என்று பதிவெழுத வேண்டியிருக்கும்
//
அட ஏம்ப்பா கண்டிக்கிறிங்க??? அதான் வந்துடோம்ல...
பதிவர் வாலு வாழுக!
ReplyDeleteஇதய பூர்வமான வாழ்த்துக்கள்!!
அழகான பதிவு .மிகைப்படுத்தல் இன்றி எதார்த்தமாக இருந்தது .இன்று செந்தழல் ரவியின் ..ஸ்ரீரங்கத்தில் பெரியார் தேவையா என்ற பதிவு படித்தேன் .அதில் பெரியார் என்ன வெங்காயமா என்று சிலர் எழுது கின்றனர் என குறிப்பிட்டார் .அப்போ அது வால்பையன் இடுகையை தான் சொல்லி இருந்தாரா ..முதல் பதிவே கலக்கி இருக்கார் போல ...
ReplyDelete//அதில் பெரியார் என்ன வெங்காயமா என்று சிலர் எழுது கின்றனர் என குறிப்பிட்டார் //
ReplyDeleteசதீஷ் குமார், நான் பெரியார் என்ன கடவுளா என்று தான் எழுதினேன்.
அந்த கேள்வியை கேட்க எனக்கு உரிமை இருக்கிறது.
பெரியார் என்ன வெங்காயமா என்று கேட்க தகுதியே இல்லை
எனக்கு மட்டுமல்ல யாருக்கும்.
அன்றைய சூழ்நிலையில் பெரியார் கண்டிப்பாக தேவைப்பட்டார்.
இன்றைய சமூகத்தின் மாற்றத்துக்கு பெரியார் தான் ஆணிவேர்.
ஆனாலும் மாற்றம் ஒன்று தான் மாற்றமில்லாதது.
இன்று பெரியாரின் கொள்கைகளை வேதமாக்கி, பெரியாரை கடவுளாக்கி கொண்டிருக்கிறார்கள். அதை தான் சாடினேன்
வலைச்சர உரிமையாளர் சீனா அய்யா உட்பட....
ReplyDelete//
உங்க நுண்ணரசியலை ரசித்தேன் :)
நானும் ஒரு உள்ளேன் ஐயா போட்டுக்கறேன்.....
ReplyDelete//அவரோட நல்லப் பதிவுகளை அழகா வரிசைப்படுத்தி இருக்கீங்க:):):)
ReplyDelete//
ரிப்பீட்டே....