வழி அனுப்புதல் - வரவேற்றல்
சக பதிவர்களே !
ஒரு வார காலம் ஆசிரியர் பொறுப்பு வகித்த அருமை நண்பர் ஜோசப் பால்ராஜ் பொறுப்பினை பொறுப்பாக நிறைவேற்றி விடை பெற்றிருக்கிறார். ஏழு பதிவுகள் இட்டு தொண்ணூறு மறுமொழிகள் பெற்றிருக்கிறார். பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தியதுடன், The Goal - A Process of Ongoing Improvement. By Eliyahu M. Goldratt, Jeff Cox என்ற பயனுள்ள புத்தகத்தினையும் அறிமுகப்படுத்தி உள்ளார். இது ஒரு புதுமையான பயன் தரக்கூடிய அறிமுகம்.
நண்பர் ஜோசப்பிற்கு வலைச்சரம் சார்பாகவும் என் தனிப்பட்ட முறையிலும் நன்றிகளையும் நல்ல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
------------------------------------------------------------------------------------------------
அடுத்து அக்டோபர் ஆறாம் நாள் முதல் பொறுப்பேற்க வருகிறார் அருமை நண்பர் சுரேகா. இவர் அடிப்படையில் ஒரு பொறியியல் வல்லுனர். பல ஆண்டுகள் அயலகத்தில் பணி புரிந்துவிட்டி தாயகம் திரும்பி, சொந்தத்தில் ஒரு நிறுவனம் தொடங்கி நடத்தி வருபவர். மனித வள மேம்பாட்டினில் சிறப்புற பயிற்சியும் கொடுத்து வருகிறார். புதுக்கோட்டை, திருச்சி, திருப்பூர் என பல இடங்களில் கிளைகள் நடத்துகிறார்.
திரைப்படம், வானொலி, தொலைக்காட்சி என பல ஊடகங்களிலும் பணியாற்றுகிறார். அரிமா சங்கம், ஜேசீஸ், நுகர்வோர் விழிப்புணர்வு இயக்கம் என பல்வேறு தொண்டு நிறுவனங்களிலும் பங்கேற்பவர். பல வலைப்பூக்களிலும், பல குழுப்பதிவுகளிலும் எழுதி வருகிறார்.
நண்பர் சுரேகாவினை வருக வருக என வரவேற்று அருமையான பதிவுகளைத் தருக தருக என வேண்டுகிறேன்.
நல்வாழ்த்துகள் சுரேகா !
சீனா
-------
|
|
சோதனை மறுமொழி
ReplyDeleteவாய்பளித்த உங்களுக்கு எனது நன்றிகள். சுரேகா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபாராட்டுக்கள் ஜோசப் பால்ராஜ்....
ReplyDeleteவரவேற்கிறோம் சுரேகா...
நன்றிகள் ஜோசப் பால்ராஜூக்கு... :)
ReplyDeleteவாழ்த்துக்கள் சுரேகாவுக்கு.. :)
well done joseph jii!!!
ReplyDeletewelcome Mr. Sureka!!!
வாழ்த்துக்கள் ஜோசப் பால்ராஜ். வெல்கம் சுரேகா !!
ReplyDeleteவாங்க வந்து கலக்குங்க.