07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, December 9, 2009

ஏணிகள்...


அனைவருக்கும் வணக்கம்


சும்மா நாம எழுதி பதிவில போட்டுட்டாலும் யாராவது அதை வாசிக்கமாட்டாங்களா யாராவது இதைப்படிச்சு கருத்து சொல்லமாட்டாங்களான்னு இருக்கும்,புதுசா எழுத வர்றவங்களுக்கு.அந்த வகையில் அனைவருக்கும் பின்னூட்டங்கள் அளிக்கும் நானறிந்த வரைக்கும் பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவரும் அறிந்தவர்களே இவர்கள்.இருப்பினும் இவர்களின் இந்த ஊக்கப்படுத்தலுக்காக பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவர் சார்பாகவும் என் மனமார்ந்த நன்றிகள் எப்பொழுதும் உங்களுடைய இந்த ஊக்கம் கொடுத்தலை நிற்பாட்டிவிடாதீர்கள் அதனால் நல்ல பதிவர்களை இந்த பதிவுலகம் இழக்க கூடும் இன்றைக்கு ஊக்கம் கொடுப்பவர்களைப்பற்றி பார்ப்போம்...அவர்களின் விமர்சனங்களைப்பற்றியும் பார்ப்போமே..



திரு.இராகவன் நைஜீரியா

இவரின் பின்னூட்டம் இல்லாத வலைப்பூக்களே இல்லையென்ற அளவில் புதியவர்கள்,பழையவர்கள் என்றில்லாமல் அனைவரது இடுகைகளையும் ,அவர்கள் நன்றாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர்களை சின்ன வார்த்தையொன்றையாவது சொல்லி கருத்து இட்டு வருவது இவரது வழக்கம்,அதேசமயம் நகைச்சுவையான பின்னூட்டங்களும் போடுகிறார். கும்மி உலக ராசா என்று கூட சொல்லும் அளவிற்க்கு அசராமல் பின்னூட்டங்கள் போடுவதில் இவரை அடித்து கொள்ள ஆளில்லை,நானும் இவரால் ஊக்கப்படுத்தப்பட்டேன்..அதேபோல் இவரது இடுகைகளும் நகைச்சுவையாகவும் இருக்கும்..

இங்கு எல்லாம் இவரின் பின்னூட்டங்களை படித்து ரசித்து சிரித்துவரலாம்



இவரது இடுகையில்



இராகவன் அண்ணா நீங்க என்னைய மறந்தாலும் பரவாயில்லை அடுத்தவர்களை ஊக்கப்படுத்தலை மறந்துடாதீங்க ஆமா சொல்லிப்புட்டேன்...

*************************************************************************************

திரு.நட்புடன்...ஜமால்

வலையுலக பிரபலம் இவரது இனிய சிரிப்பான முகத்தைப்போலவே பழகவும் பேசவும் மிகவும் இனிமையானவர் இவர் வலையுலகம் வந்து இட்ட இடுகைகள் குறைவாக இருந்தாலும்? இவர் பெற்ற நண்பர்களின் எண்ணிக்கை கணக்கிடலங்கா இதற்க்கு காரணம் அனைவரிடமும் சகோதர பாசத்துடன் பழகும் பாங்கு ,பதிவுலக வரலாற்றிலே 10000 பின்னூட்டங்கள் வாங்கிய அதிசய மனிதர்..புதியதாக எழுதும் அனைவரையும் மனம் திறந்து பாராட்டுகிறார் நண்பர்களிடமும் அவர்களை அறிமுகப்படுத்தி வைக்கிறார் உங்களுக்கு தெரிந்த யாராவது நன்றாக எழுதுபவர்கள் இருக்கிறார்களா என்றும் கேட்பதிலிருந்து அவரின் படிக்கும் ஆர்வத்தை தெரிந்து கொள்ளலாம்.கற்போம் வாருங்கள் என்ற வலைப்பூவில் எழுதிவந்தார் பலரின் பொறாமையோ ஏனோ இவரின் வலைப்பூ காணமல் போய்விட்டது போலும் இப்பொழுது அதே பெயரில் புதிய வலைப்பூவில் எழுதி வருகிறார்..இவரின் தக்காளி கவிதைக்கு நான் அடிமை ஏனோ அதற்க்கான தொடுப்பு கொடுக்க இயலவில்லை ஆதலால் இதோ



நன்றி ஜமால் அண்ணா

*************************************************************************************

திரு.S.A.நவாஷுதீன்

மனவிலாசத்துக்கு சொந்தக்காரார்..மனதில் பட்டதை கூறுபவர்
பதிவுலகில் அனைவராலும் அறியப்பட்டவர் அனைத்து பிரபல பதிவர்களின் பதிவுகளிலும்,என்னைப்போன்ற வளரும் பதிவர்களின் பதிவுகளிலும் இவரின் கருத்துரைகளை காணலாம் கவிதைகளை தேடி தேடி வாசிப்பவர் சுவாசிப்பவர் ,இவரொரு கவிஞர் ஆனால் ஏனோ அதிகம் எழுதுவதில்லை நேரமிருந்தாலும். தான் பின் தொடரும் அனைவரையும் வாசித்து கருத்துகளை நியாயமாக கூறுகிறார்.கவிதைகளை நீயா நானா என்று கேட்டு பிரித்து மேய்கிறார் அதன் அர்த்தங்களை..வளர்க நின் வாசிப்புதிறன் நண்பா..நன்றி நவாஸ்

இவரது இடுகைகள்





************************************************************************************

வடலூரான் கலையரசன்

இவரோட அபவுட் மீ படிச்சாலே சிரிப்பு தானா வருமுங்க...
யப்பா சாமீய்ய் இவரு இருக்காரே கொஞ்ச நஞ்ச லொள்ளா பண்றாரு.அப்பா இவரோட இடுகைகளை வாசிச்சுட்டு சிரிக்காம வந்தா உங்களுக்கு ஏதோ ஒரு நோய் இருக்குன்னே சொல்லலாம் அவ்வளவு நகைச்சுவைக்கு சொந்தக்காரர்,இடுகை மட்டுமா ஒவ்வொரு பதிவரின் இடுகைகளிலும் இவர் இடும் பின்னூட்டங்கள் உம்மனா மூஞ்சியை கூட சிரிக்க வைத்துவிடும் அது மட்டுமல்ல தன் இடுகைகளில் பதில் பின்னூட்டம் போடும்போது கூட சிரிக்கவைக்கிறாருங்க அவருடைய அந்த பின்னூட்ட ஸ்டைலே தனி..ஏனோ குறைவாத்தான் எழுதுறார் ஏன்னுதான் தெரியல? அனைத்து பதிவர்களின் இடுகைகளிலும் இவரது பின்னூட்டத்தை ரசிக்க வைக்கிறார்..
வளர்க உன் நகைச்சுவைத்திறன் மாப்பி...

நகைச்சுவைகள்




************************************************************************************

திருமதி.சின்ன அம்மிணி

நான் இப்போதான் இவங்களோட பதிவுகளை வாசிக்கிறேன் நல்ல கதையாசிரியர் இவருக்கு பின்னாடி ஒளிஞ்சுட்டு இருக்காங்க ரொம்ப நாளாவே இவங்களோட பின்னூட்டங்களை பிரபலங்களின் பதிவுகளில் வாசிச்சுருக்கேன் இவங்களும் குறைவா எழுதி நிறைய பின்னூட்டம் இடும் பதிவரே சின்னதா சிரிப்பு ஸ்மைலியோட அனைத்து பதிவுகளையும் வாசிச்சு கருத்து சொல்றாங்க.அதிகாலையில் அனைவருக்கும் இவரது பின்னூட்டமே முதலாவதாய் இருக்கும் ஆஸ்திரேலியாவிலதான் முதல்ல விடிஞ்சுடுமே அதான் நினைக்கிறேன்..நன்றி சின்ன அம்மிணி

இவரின் இடுகைகள்




*************************************************************************************

திரு.அ.மு செய்யது

மழைக்கு ஒதுங்கியவையில் எழுதிவருகிறார் சகோதரர்
பிரபல பதிவர்கள் இருப்பதுபோல் இவர் பிரபல பின்னூட்டகாரர்,கதை எழுதுவதிலும் கெட்டிக்காரர் பார்க்க என்னைப்போன்று சிறு வயதுபோல் தோன்றுகிறது இருப்பினும் இலக்கியம் நிறைய படித்திருப்பார்போலும் அட்டகாசமாய் அனைத்து நல்ல இடுகைகளையும் வாசித்து பிரிச்சு மேய்றாரு அதே இலக்கிய ரசனையோடு..யப்பா எப்பிடி சாமி இப்டில்லாம்,ம்ம் உங்களின் இந்த சிறந்தஇலக்கியத்திறனும், ஊக்குவிப்புத்திறன் பன் மடங்கு வளர்க.. நன்றி செய்யது




**********************************************************************************

திரு.அருண்(வால்பையன்)

வால் பெயரில் இருப்பதுபோலவே செயலிலும் பிரபலப்பதிவர்கள் புதியவர்களை ஏறெடுத்து பார்க்காத இந்த பதிவுலகத்தில் நேற்று வந்த மழையில் இன்று முளைத்த காளான்களாய் நினைக்காமல் அனைவருக்கும் பின்னூட்டங்கள் போட்டு அவர்களை ஊக்குவித்து ரியல் பிரபலம் என்று நிரூபிக்கிறார் இந்த தலைக்கணமில்லா நாயகன் இவரின் எழுத்து பற்றி கூற எனக்கு தகுதியில்ல..அவ்வளவு நன்றாக எழுதக்கூடியவர்..எதிர் கவுஜ நாயகன்,பதிவர் சந்திப்புக்களின் தலைவன்...

நன்றி தல

இவரின் இடுகைகளில் இதோ




இவங்கள் அனைவருக்கும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஏணியாகவே இருந்துவிடாதீர்கள் ஏற்றிவிட்டவரை எட்டி மிதிக்கும் உலகமிது கைகொடுத்து அரவணைப்பாய் வாருங்கள்...மீண்டும் உங்கள் அனைவருக்கும் பதிவுலகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்...

மீண்டும் நாளை சந்திக்கும் வரை விடை பெறுவது

ப்ரியமுடன்...வசந்த்

71 comments:

  1. அறிமுகத்திற்கு மிக்க நன்றி வசந்த்..!! மகிழ்ச்சிகளுடனும் !!!

    எல்லா நம்ம ஆளுங்க..ராகவன்..ஜமால்..நவாஸ்..இப்படி உசுப்பேத்தி உட்றதுக்கின்னே நம்ம கிட்ட ஒரு கேங் இருக்குல்ல.

    ReplyDelete
  2. என்னையும் அறிமுகம் செஞ்சதுக்கு நன்றி வசந்த்.

    ReplyDelete
  3. என்னை போன்ற வலை பதிவகத்துக்கு புதியவர்களுக்கு, உற்சாகப் படுத்தும் பதிவர்களையும் அவர்களது இடுகைகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, வசந்த்.

    ReplyDelete
  4. மீண்டும் நல்ல அறிமுகங்களை கொடுத்திருக்கீர்கள் வசந்த்.
    உண்மையிலேயே இவர்கள் ஏணிகள் தான். மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. மூன்றாம் நாள் நல் வாழ்த்துகள்.

    ReplyDelete
  6. ஏணிகள் - பெரிய பெயர் - என் சுட்டியுமா - மிக்க நன்றி தம்பி.

    ReplyDelete
  7. அவர்கள் நன்றாக எழுதுகிறார்களோ இல்லையோ அவர்களை சின்ன வார்த்தையொன்றையாவது சொல்லி கருத்து இட்டு வருவது இவரது வழக்கம்,]]

    இது தாங்க இவர்ட்டையும் - இவரை போன்று இருக்கும் வெகு சிலரிடமும் பிடித்த விடயம்.

    யார் எழுதியிருக்காங்கன்னு பார்க்காம - எழுதியதில் எதுனா நல்லதா இருக்கான்னு பார்த்து ஊக்கம் அளிக்கும் மனமுதிர்ச்சியுடைவர்.

    ----------------------

    நிறைய சொல்ல தோனுது - இருப்பினும் இது பொது வலை என்பதால் - இத்துடன் ...

    ReplyDelete
  8. மூன்றாம் நாள் வாழ்த்துகள் வசந்த். ஒவ்வொரு வளரும் பதிவர் மனத்திலுமுள்ள வார்த்தைகளை அவர்கள் சார்பில் வெளிக் கொணர்ந்தமைக்கு உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் வலைமனை திறக்க முடியாமல் போகும் பட்சத்தில் பிரச்சனைக்கான காரணத்தைச் சொல்லும் திரு இராகவன் அவர்களின் உதவியும், பின்னூட்டமிட பிரச்சினை இருப்பின் தமிழிஷில் சொல்லும் திரு ஜமாலின் ஊக்கமும் நிகரற்றது.

    ReplyDelete
  9. வலையுலக பிரபலம் இவரது இனிய சிரிப்பான முகத்தைப்போலவே பழகவும் பேசவும் மிகவும் இனிமையானவர்
    //////////////////
    101% ithai naan vazhimolikiren

    ReplyDelete
  10. நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  11. "ஏணிகள்" சரியான தலைப்பே, என்னைப் போன்ற கத்துக்குட்டிகளை இன்று வரை தூக்கி நிறுத்துவது இந்த நண்பர்களே!! இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்!!

    ReplyDelete
  12. நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. வித்தியாசமான பார்வைதான் வசந்த்!! ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை எப்பவும் மறக்கக்கூடாது. நானும் உங்களோடு இவர்களுக்கும், இன்னும் பலருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  14. நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. ’ஏணிகள்’ அருமையான தலைப்பு வசந்த. அழகாக தொகுத்தும் வழங்கியிருக்கிறீர்கள். என் பாராட்டுக்கள்.

    அறிமுகமாகியிருக்கும் அத்தனை பேருக்கும் நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. ரொம்ப நன்றி தல!

    நான் யாரையும் நேற்று முளைத்த காளானாய் நினைப்பதில்லை!
    எனக்கு நண்பர்கள் ஏற்படுத்தி(சொல்லி) கொடுத்த ஊக்கத்தையே நான் புதிய நண்பர்களுக்கு செய்கிறேன்!

    உங்கள் பாராட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது!

    ReplyDelete
  17. அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி நண்பா. என் பெயரும் இங்கிருப்பது சந்தோசம். இருந்தாலும் ஜமால் சொன்னது மாதிரி ஏணிகள் (எனக்கு கொஞ்சம் பெருசுதான்).

    //எல்லா நம்ம ஆளுங்க..ராகவன்..ஜமால்..நவாஸ்..அ.மு. செய்யது.... இப்படி உசுப்பேத்தி உட்றதுக்கின்னே நம்ம கிட்ட ஒரு கேங் இருக்குல்ல.

    ரொம்ப சந்தோசம் வசந்த். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. ///எனக்கு நண்பர்கள் ஏற்படுத்தி(சொல்லி) கொடுத்த ஊக்கத்தையே நான் புதிய நண்பர்களுக்கு செய்கிறேன்!///

    அதேதான் நானும் சொல்லிக்கனும்னு ஆசைப்படுறேன்

    ReplyDelete
  19. மத்தபடி எங்க தானைத்தலைவன், பின்னூட்ட சூப்பர் சுனாமி, அளவிலா அன்பிற்கும் மரியாதைக்குமுறிய மான்புமிகு அண்ணன் இராகவன் அண்ணனின் மனம் யாருக்கும் வராது.

    ReplyDelete
  20. வசந்த நம்ம கட பக்கம் சாருவ பத்தி ஒரு விவாதம்
    போயிட்டு இருந்ததுனால இரெண்டு நாள் இங்க வர முடியல.
    இப்ப தான் என்ன பத்திய அறிமுகம் மற்ற ஜாம்பவான்களின் அறிமுகம்
    எல்லாம் படிச்சேன். மிக அழகாக நாஎர்த்தியாக் எழுதி
    வடிவமைத்து வலைச்சரத்தை அழகுபடுத்திவிட்டீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி. மேலும் பிரபல கமென்டர்கள் என்று ஒரு பட்டியல்
    மிக அருமை. வலை தளத்தில் பின்னூட்டங்கள் தான்
    உண்மையான அங்கீகாரம். தரமான பின்னூட்டங்கள் தான்
    நம்மை அடுத்தடுத்த எழுத தூண்டும்.
    வெறும் வலை எழுதுபவர்களை மட்டும் அறிமுகப்படுத்தாமல்
    பின்னூட்டம் போட்டு நம்மை ஊக்குவிப்பவர்களையும் அறிமுகம் செய்திருப்பது
    மிக அருமை.

    ReplyDelete
  21. //இவங்கள் அனைவருக்கும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஏணியாகவே இருந்துவிடாதீர்கள் ஏற்றிவிட்டவரை எட்டி மிதிக்கும் உலகமிது ..//

    உண்மையச் சொன்னீங்க வாத்தியாரே...வாழ்த்துகள்.

    ReplyDelete
  22. ஊக்கம் தரும் நண்பர்களை மறக்காமல் பலர் அறிய வைத்த வசந்துக்கு வாழ்த்துக்கள். கலக்குங்கள்.

    ReplyDelete
  23. வசந்து...மீண்டும் கலகலப்பான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.

    ReplyDelete
  24. மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியர் பணியினை செம்மையாக செய்ததற்கு வாழ்த்துகள் தம்பி வசந்த்.

    என்னை ரொம்பவும் புகழுகின்றீர்கள். பல தடவை நான் சொன்னதுதான் இங்கும் சொல்லுகின்றேன். உங்களுக்கு எழுதத் தெரிகின்றது நன்றாக எழுதுகின்றீர்கள். எனக்கு தெரியவில்லை. இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. முடிஞ்சது ஓட்டு போடுவதும், கும்மி அடிப்பதும்தான்.

    தம்பி உங்களை மறக்கவில்லை என்பதை மட்டும் இங்கு ஞாபகப் படுத்த ஆசைப் படுகின்றேன்.

    நீங்க கூறிய மற்ற அனைவரும் இடுகை போடுவதிலும் பெரிய ஆட்கள்.

    நன்றி தம்பி வசந்த்.

    ReplyDelete
  25. நற்பகிர்வு நண்பரே....

    ReplyDelete
  26. மூன்றாம் நாள் வலைச்சர ஆசிர்யருக்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  27. அறிமுகங்கள் ஏற்கனவே தெரிந்த முகங்களாக இருந்த போதிலும்
    வலைச்சரம் வழியாக மறுபடியும் அறிந்தது சந்தோஷமே!

    வாழ்த்துக்கள் வசந்த்!!

    ReplyDelete
  28. இந்த ஊட்டச்சத்துக்கள் இல்லாவிடில் நம் எழுத்துக்கள் இன்று ஓங்கி ஒலித்திருக்காது தான். நிறை குறைகளை எடுத்து சொல்லி திருத்தி நம்மை நிறைகுடமாக்க இவர்கள் ஏணியாக இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது...

    ReplyDelete
  29. அருமையான அறிமுகங்கள் வசந்த்.

    //இவர்களின் இந்த ஊக்கப்படுத்தலுக்காக பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவர் சார்பாகவும் என் மனமார்ந்த நன்றிகள் //

    எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு.

    ReplyDelete
  30. இங்கு பாராட்டபட்டவர்களில் என் அண்ணா தம்பி தோழி நண்பர்கள் என இவர்களை இங்கு அறிமுகப்படுத்தியதில் பெருமிதம் எனக்கு...

    ReplyDelete
  31. வாழ்த்துக்கள் வசந்த வலைச்சர பணியை நல்லா செய்துக்கிட்டு வர... நான் நாளை ஊருக்கு போறேன் சனியன்று தான் வருவேன் அன்று வந்து மற்றவைகளை படிக்கிறேன்..வாழ்த்தி விடைபெறுகிறேன்...

    ReplyDelete
  32. வசந்த். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  33. சகோ வெழுத்து வாங்குறீங்கப்பா வாழ்த்துக்கள்.. தாங்களும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும்..

    ReplyDelete
  34. வாழ்த்துக்கள் வசந்த்

    ReplyDelete
  35. அன்பின் வசந்த்

    அருமையான அறிமுகங்கள்

    ஏணிகள் என்னும் தலைப்பினில் எழுதப்பட்ட இடுகை - மறுமொழிகள் போட்டு பதிவர்களை ஊக்குவிக்கும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம்ன் நன்று

    நல்வாழ்த்துகள் வசந்த்

    ReplyDelete
  36. பார்டா... குடுத்த காசுக்கு மேல கூவுறான்!! அவ்வ்்வ்்வ

    சும்மா.. சும்மா.. பெரிய தலைகளுக்கு மத்தியில் என்னை பற்றி கூறிய உனக்கு நன்றி சொல்ல வார்த்தை வரலை மச்சி!!

    வாழ்க நீ.. வளர்க உன் துண்டு.. சீ! தொண்டு!!!

    ReplyDelete
  37. நல்ல அறிமுகங்கள்

    ReplyDelete
  38. //
    அ.மு.செய்யது said...
    அறிமுகத்திற்கு மிக்க நன்றி வசந்த்..!! மகிழ்ச்சிகளுடனும் !!!

    எல்லா நம்ம ஆளுங்க..ராகவன்..ஜமால்..நவாஸ்..இப்படி உசுப்பேத்தி உட்றதுக்கின்னே நம்ம கிட்ட ஒரு கேங் இருக்குல்ல.
    //

    நன்றி செய்யது...

    ReplyDelete
  39. // சின்ன அம்மிணி said...
    என்னையும் அறிமுகம் செஞ்சதுக்கு நன்றி வசந்த்.
    //

    நன்றி சின்ன அம்மிணி

    ReplyDelete
  40. // நட்புடன் ஜமால் said...
    ஏணிகள் - பெரிய பெயர் - என் சுட்டியுமா - மிக்க நன்றி தம்பி.
    //

    போங்கண்ணா நீங்க..இதுக்கு போயிட்டு..

    ReplyDelete
  41. //Chitra said...
    என்னை போன்ற வலை பதிவகத்துக்கு புதியவர்களுக்கு, உற்சாகப் படுத்தும் பதிவர்களையும் அவர்களது இடுகைகளையும் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி, வசந்த்.
    //

    நன்றி சித்ரா

    ReplyDelete
  42. // பூங்குன்றன்.வே said...
    மீண்டும் நல்ல அறிமுகங்களை கொடுத்திருக்கீர்கள் வசந்த்.
    உண்மையிலேயே இவர்கள் ஏணிகள் தான். மூன்றாம் நாள் வாழ்த்துக்கள்.
    //

    நன்றி பூங்குன்றன்

    ReplyDelete
  43. //வானம்பாடிகள் said...
    மூன்றாம் நாள் வாழ்த்துகள் வசந்த். ஒவ்வொரு வளரும் பதிவர் மனத்திலுமுள்ள வார்த்தைகளை அவர்கள் சார்பில் வெளிக் கொணர்ந்தமைக்கு உன்னை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அதிலும் வலைமனை திறக்க முடியாமல் போகும் பட்சத்தில் பிரச்சனைக்கான காரணத்தைச் சொல்லும் திரு இராகவன் அவர்களின் உதவியும், பின்னூட்டமிட பிரச்சினை இருப்பின் தமிழிஷில் சொல்லும் திரு ஜமாலின் ஊக்கமும் நிகரற்றது.
    //

    ம்ம் நன்றி நைனா

    ReplyDelete
  44. //Annam said...
    வலையுலக பிரபலம் இவரது இனிய சிரிப்பான முகத்தைப்போலவே பழகவும் பேசவும் மிகவும் இனிமையானவர்
    //////////////////
    101% ithai naan vazhimolikiren
    //

    நன்றி அன்னம்..

    ReplyDelete
  45. //SUFFIX said...
    "ஏணிகள்" சரியான தலைப்பே, என்னைப் போன்ற கத்துக்குட்டிகளை இன்று வரை தூக்கி நிறுத்துவது இந்த நண்பர்களே!! இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்!!
    //

    நன்றி சஃபி

    ReplyDelete
  46. // MAHA said...
    நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்
    //

    நன்றி மகா

    ReplyDelete
  47. //ஹுஸைனம்மா said...
    வித்தியாசமான பார்வைதான் வசந்த்!! ஏற்றிவிட்ட ஏணிப்படிகளை எப்பவும் மறக்கக்கூடாது. நானும் உங்களோடு இவர்களுக்கும், இன்னும் பலருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன்.
    //

    நன்றி ஹுசைனம்மா

    ReplyDelete
  48. //gayathri said...
    நல்ல அறிமுகம். வாழ்த்துக்கள்
    //

    நன்றி காயத்ரி

    ReplyDelete
  49. // ராமலக்ஷ்மி said...
    ’ஏணிகள்’ அருமையான தலைப்பு வசந்த. அழகாக தொகுத்தும் வழங்கியிருக்கிறீர்கள். என் பாராட்டுக்கள்.

    அறிமுகமாகியிருக்கும் அத்தனை பேருக்கும் நல்வாழ்த்துக்கள்!
    //

    நன்றி ராமலக்ஷ்மி மேடம்

    ReplyDelete
  50. //வால்பையன் said...
    ரொம்ப நன்றி தல!

    நான் யாரையும் நேற்று முளைத்த காளானாய் நினைப்பதில்லை!
    எனக்கு நண்பர்கள் ஏற்படுத்தி(சொல்லி) கொடுத்த ஊக்கத்தையே நான் புதிய நண்பர்களுக்கு செய்கிறேன்!

    உங்கள் பாராட்டு என்னை மேலும் உற்சாகப்படுத்துகிறது!
    //

    நன்றி தல

    ReplyDelete
  51. // S.A. நவாஸுதீன் said...
    அறிமுகத்திற்கு ரொம்ப நன்றி நண்பா. என் பெயரும் இங்கிருப்பது சந்தோசம். இருந்தாலும் ஜமால் சொன்னது மாதிரி ஏணிகள் (எனக்கு கொஞ்சம் பெருசுதான்).

    //எல்லா நம்ம ஆளுங்க..ராகவன்..ஜமால்..நவாஸ்..அ.மு. செய்யது.... இப்படி உசுப்பேத்தி உட்றதுக்கின்னே நம்ம கிட்ட ஒரு கேங் இருக்குல்ல.

    ரொம்ப சந்தோசம் வசந்த். வாழ்த்துக்கள்
    //

    நன்றி நவாஸ்

    ReplyDelete
  52. // VISA said...
    வசந்த நம்ம கட பக்கம் சாருவ பத்தி ஒரு விவாதம்
    போயிட்டு இருந்ததுனால இரெண்டு நாள் இங்க வர முடியல.
    இப்ப தான் என்ன பத்திய அறிமுகம் மற்ற ஜாம்பவான்களின் அறிமுகம்
    எல்லாம் படிச்சேன். மிக அழகாக நாஎர்த்தியாக் எழுதி
    வடிவமைத்து வலைச்சரத்தை அழகுபடுத்திவிட்டீர்கள்.

    மிக்க மகிழ்ச்சி. மேலும் பிரபல கமென்டர்கள் என்று ஒரு பட்டியல்
    மிக அருமை. வலை தளத்தில் பின்னூட்டங்கள் தான்
    உண்மையான அங்கீகாரம். தரமான பின்னூட்டங்கள் தான்
    நம்மை அடுத்தடுத்த எழுத தூண்டும்.
    வெறும் வலை எழுதுபவர்களை மட்டும் அறிமுகப்படுத்தாமல்
    பின்னூட்டம் போட்டு நம்மை ஊக்குவிப்பவர்களையும் அறிமுகம் செய்திருப்பது
    மிக அருமை.
    //

    நன்றி விசா

    ReplyDelete
  53. //சத்ரியன் said...
    //இவங்கள் அனைவருக்கும் ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன் ஏணியாகவே இருந்துவிடாதீர்கள் ஏற்றிவிட்டவரை எட்டி மிதிக்கும் உலகமிது ..//

    உண்மையச் சொன்னீங்க வாத்தியாரே...வாழ்த்துகள்.
    //

    நன்றி சத்ரியன்

    ReplyDelete
  54. // ஜெஸ்வந்தி said...
    ஊக்கம் தரும் நண்பர்களை மறக்காமல் பலர் அறிய வைத்த வசந்துக்கு வாழ்த்துக்கள். கலக்குங்கள்.
    //

    நன்றி ஜெஸ்ஸம்மா..

    ReplyDelete
  55. //ஹேமா said...
    வசந்து...மீண்டும் கலகலப்பான அறிமுகங்கள்.வாழ்த்துக்கள்.
    தொடருங்கள்.//

    நன்றி ஹேம்ஸ்...

    ReplyDelete
  56. //இராகவன் நைஜிரியா said...
    மூன்றாம் நாள் வலைச்சர ஆசிரியர் பணியினை செம்மையாக செய்ததற்கு வாழ்த்துகள் தம்பி வசந்த்.

    என்னை ரொம்பவும் புகழுகின்றீர்கள். பல தடவை நான் சொன்னதுதான் இங்கும் சொல்லுகின்றேன். உங்களுக்கு எழுதத் தெரிகின்றது நன்றாக எழுதுகின்றீர்கள். எனக்கு தெரியவில்லை. இருப்பை காட்டிக் கொள்ள வேண்டுமல்லவா.. முடிஞ்சது ஓட்டு போடுவதும், கும்மி அடிப்பதும்தான்.

    தம்பி உங்களை மறக்கவில்லை என்பதை மட்டும் இங்கு ஞாபகப் படுத்த ஆசைப் படுகின்றேன்.

    நீங்க கூறிய மற்ற அனைவரும் இடுகை போடுவதிலும் பெரிய ஆட்கள்.

    நன்றி தம்பி வசந்த்.
    //

    ஹ ஹ ஹா...

    என்னே ஒரு தன்னடக்கம் நன்றி ராகவன் அண்ணா

    ReplyDelete
  57. //க.பாலாசி said...
    நற்பகிர்வு நண்பரே....
    //

    நன்றி பாலாசி

    ReplyDelete
  58. // RAMYA said...
    அறிமுகங்கள் ஏற்கனவே தெரிந்த முகங்களாக இருந்த போதிலும்
    வலைச்சரம் வழியாக மறுபடியும் அறிந்தது சந்தோஷமே!

    வாழ்த்துக்கள் வசந்த்!!
    //

    நன்றி ரம்யாக்கா..

    ReplyDelete
  59. // தமிழரசி said...
    இந்த ஊட்டச்சத்துக்கள் இல்லாவிடில் நம் எழுத்துக்கள் இன்று ஓங்கி ஒலித்திருக்காது தான். நிறை குறைகளை எடுத்து சொல்லி திருத்தி நம்மை நிறைகுடமாக்க இவர்கள் ஏணியாக இருக்கிறார்கள் என்றால் மிகையாகாது...
    //

    மிகச்சரி தமிழ்..

    ReplyDelete
  60. // தமிழரசி said...
    வாழ்த்துக்கள் வசந்த வலைச்சர பணியை நல்லா செய்துக்கிட்டு வர... நான் நாளை ஊருக்கு போறேன் சனியன்று தான் வருவேன் அன்று வந்து மற்றவைகளை படிக்கிறேன்..வாழ்த்தி விடைபெறுகிறேன்...//

    அடுத்த டூரா? ஆத்தாடி...கொடுத்து வச்சவங்கதான் நீங்க...

    ReplyDelete
  61. //மாதேவி said...
    வசந்த். நீங்கள் அறிமுகப்படுத்தியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
    //

    நன்றி மாதேவி

    ReplyDelete
  62. //சுசி said...
    அருமையான அறிமுகங்கள் வசந்த்.

    //இவர்களின் இந்த ஊக்கப்படுத்தலுக்காக பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்கள் அனைவர் சார்பாகவும் என் மனமார்ந்த நன்றிகள் //

    எனது நன்றிகளும் வாழ்த்துக்களும் அவர்களுக்கு.
    //

    நன்றி சுசிக்கா..

    ReplyDelete
  63. // அமிர்தவர்ஷினி அம்மா said...
    வாழ்த்துக்கள் வசந்த்//

    நன்றி அமித்துஅம்மா

    ReplyDelete
  64. // அன்புடன் மலிக்கா said...
    சகோ வெழுத்து வாங்குறீங்கப்பா வாழ்த்துக்கள்.. தாங்களும் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும்..//

    நன்றி சகோ

    ReplyDelete
  65. // அத்திரி said...
    வாழ்த்துக்கள் வசந்த்
    //

    நன்றி அத்திரி

    ReplyDelete
  66. //cheena (சீனா) said...
    அன்பின் வசந்த்

    அருமையான அறிமுகங்கள்

    ஏணிகள் என்னும் தலைப்பினில் எழுதப்பட்ட இடுகை - மறுமொழிகள் போட்டு பதிவர்களை ஊக்குவிக்கும் பதிவர்களை அறிமுகப் படுத்திய விதம்ன் நன்று

    நல்வாழ்த்துகள் வசந்த்
    //

    நன்றி சீனா ஐயா

    ReplyDelete
  67. //கலையரசன் said...
    பார்டா... குடுத்த காசுக்கு மேல கூவுறான்!! அவ்வ்்வ்்வ

    சும்மா.. சும்மா.. பெரிய தலைகளுக்கு மத்தியில் என்னை பற்றி கூறிய உனக்கு நன்றி சொல்ல வார்த்தை வரலை மச்சி!!

    வாழ்க நீ.. வளர்க உன் துண்டு.. சீ! தொண்டு!!!
    //

    வாடா இங்கயுமா இப்பத்தான் சொல்லிட்டு வர்றேன் நன்றிடா

    ReplyDelete
  68. // நசரேயன் said...
    நல்ல அறிமுகங்கள்
    //

    நன்றி நசரேயன்

    ReplyDelete
  69. This comment has been removed by the author.

    ReplyDelete
  70. நானும் அனைவருக்கும் நன்றி சொல்ல இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி கொள்கிறேன்....என்னை போன்ற வரையும் ஊக்கபடுத்தும் அனைவருக்கும் நன்றிகள்...

    மிக்க நன்றி வசந்த்.
    நன்றி திரு வால்பையன்...

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது