07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, December 27, 2009

தத்தித் தவழ்ந்து முத்தாய்...

அன்னை மொழியே
அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை
முகிழ்த்த நறுங்கனியே!... பெருஞ்சித்திரனார்
.


தமிழ்த்தாயே உன் பாதம் தொழுது இப் பணியேற்கிறேன்.

தத்தித் தவழ்ந்து
தள்ளாடி நடந்து
முத்தாய் முதல் வார்த்தை
சொல்லுங்கால் துள்ளுமனம்

என்பதாக பதிவுலகில் நுழைந்து முதல் இடுகையை பதிப்பித்து முதல் வாசகனாய் படிக்கையில் ஏற்படும் பரவசம் சொல்லத் திறமன்று. மெதுவே மெதுமெதுவே வாசகர்கள் பாராட்டி, திருத்தி, ஆரோக்கியமான ஆலோசனை கூறி நம்மைச் செம்மைப் படுத்துகையில் தேன்கூடாய் ஒரு நண்பர் குழாம் உண்டாகிறது. தேடித் தேடி தேன் சேகரிக்கும் கூடு இப்பதிவுலகம்.

தானும் ஒரு தேனீயாய் அன்பர் சீனா அய்யா அவர்கள் ஒவ்வொரு வலைப்பூவாய் அமர்ந்து தேனுண்டு பாராட்டித் தேர்ந்தெடுத்து வலைச்சரத்தில் பூக்கோர்க்க அழைக்கையில் ஒவ்வொரு பதிவரும் தன் எழுத்துக்கான அங்கீகாரம் கிடைத்துவிட்டதாக கருதுவதில் வியப்பில்லையல்லவா?

பதிவுலகில் தடம் பதித்து பத்து மாதங்களில் பாமரனாய், பாலாவாய் தற்போது வானம்பாடிகளாய்ச் சிறகடிக்கும் எனக்கு இப்பெரிய அங்கீகாரமளித்த சீனாவின் அன்பு பாலாவும், என் எழுத்தைச் சிலாகித்து, என்பால் அன்போடு பாலாண்ணனாய், தந்தையாய், நண்பனாய், சிலர் ஆசானுமாய் என்னை அழைக்கையில் கண் பனிக்கிறது.

தயங்கித் தயங்கி நான்கு வரி கிறுக்கித் தாயிடம் நீட்டும் குழந்தையிடம் மனம் நோகாமல் உச்சி முகர்பவள் தாய். தலை கோதி, தவறு சுட்டி, ஊக்கமளித்து சில நேரம் குட்டி ஒரு சிறுபுன்னகையுடன், ம்ம் என்னும் நேரம் ஆசானுமாய் ஆகிறாள். அந்த என் தாயுமானவளுக்கு என் அங்கீகாரம் சமர்ப்பணம்.

பதிவுலகம் நுழைந்த போது, என் மன அழுத்தத்தின் வடிகாலாய் பாமரன் பக்கங்கள்... என்ற வலைப்பூ தொடங்கி எழுதத் தொடங்கிய போது ஈழத்துச் சொந்தங்களின் துயரமே தினசரி வலியாகிப் போனது. செய்திகள் தேடித் தேடி அழுது, சிரித்து, துடித்த போது என்னையறியாமல் சிறுவயதில், பத்திரிகை படிப்பவர்கள் தலைப்பு படித்தவுடன் பளிச்சென்று கூறும் கருத்துக்கள் ஏற்படுத்திய தாக்கம் நறுக்குன்னு நாலு வார்த்தையாய் தொடரானது.

வெகு விரைவிலேயே எனக்கொரு வாசகர் வட்டத்தை ஏற்படுத்திக் கொடுத்து இந்த ஒரு தலைப்பிலேயே நூறு இடுகைகளைப் படைத்திட ஊக்கமானது மட்டுமின்றி, இப்போதும் ஏன் இதைத் தொடர்வதில்லை எனச் சிலர் சிலாகிக்கும் அளவுக்கு தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டது.

இடையிடையே கவிதை என முயல்கையில் காசி ஆனந்தனின் கவிதையோடு ஒப்பிட்டு தம்பி பழமைபேசி நறுக்கவி பாலாண்ணே என்றழைத்தபோதும், வலைச்சரத்தில் பலமுறை சுட்டப்பட்ட போதும் இதையும் தாண்டி எழுத முயற்சிக்க ஊக்கமானது.

என் படைப்புக்கள் எல்லாமே என் குழந்தைகள்தாம் எனினும், சான்றோனெனக் கேட்ட தாயாய்ச் சிலிர்க்க வைத்த சிலவற்றைச் சுட்ட விழைகிறேன்.

1.ஈழப் போரின் உச்சத்தில் கேட்பாரற்று தனியே கையில் கட்டுடன் கண்ணால் துளைத்த இந்த குழந்தையிடம் பாவ மன்னிப்பு கேட்ட என் கவிதை.
2.பதிவர் கூடலில் வடிவேலு என்ற என் தொடர் இடுகை
3.யூத்ஃபுல் விகடனிலும் வெளியான என் கதை பசி
4.விதிகள் என்ற பெயரில் நீதி மறுக்கப்படும் அலுவலக நடைமுறை அவலம் குறித்த என் வருத்தத்தின் வெளிப்பாடு.
5.ஒரு காதல் முயக்கம்

சுய அறிமுகம் போதுமே! நாளை சந்திப்போம் நண்பர்களே.

36 comments:

  1. வருக, வருக.... வணக்கம். உங்களின் பணி மிகச்சிறப்பாய் அமைய வாழ்த்துக்கள் அய்யா!

    பிரபாகர்.

    ReplyDelete
  2. அன்பின் பாலா

    அருமையான சுய அறிமுகம்

    நல்வாழ்த்துகள்

    நட்புடன் சீனா

    ReplyDelete
  3. தாயுமானவள் அருமை!!!!

    ReplyDelete
  4. பாலாண்ணே....வணக்கம், வலைச்சரத்தில் உங்களை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.


    வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ஆரூரன்

    ReplyDelete
  5. வாங்க சார் ::)) நல் வரவு.:)

    ReplyDelete
  6. நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  7. ஆகா..வாங்க தலைவரே... அறிமுகமே அழகு....

    ReplyDelete
  8. உள்ளேன் ஐயா....

    ReplyDelete
  9. அண்ணே... வாழ்த்துகள்.

    அறிமுகம் அருமை.

    ReplyDelete
  10. வாழ்த்துக்கள் பாலா சார். அப்போ இந்த வாரம் ஜாலிதான்

    ReplyDelete
  11. அருமையான அழகான ஆரம்பம்..! :)

    ReplyDelete
  12. மகிழ்வாய் உணர்கிறேன்.... வாழ்த்துகிறோம்!

    ReplyDelete
  13. வாத்யாரே.... வணக்கம்


    பட்டாசு கிளப்புங்க

    ReplyDelete
  14. வலைச்சரம் தொடுக்க வந்த வானம்பாடி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  15. வாழ்த்துகள்

    ReplyDelete
  16. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. முதலாம் நாள் அட்டெண்டன்ஸ்ஸ்ஸ்...

    ப்ரசண்ட் சார்...

    ReplyDelete
  18. //தேடித் தேடி தேன் சேகரிக்கும் கூடு இப்பதிவுலகம்.//

    எம்புட்டு தேன் சேத்துருக்கீக இதுவரைக்கும்?

    ReplyDelete
  19. //பாமரனாய், பாலாவாய் தற்போது வானம்பாடிகளாய்//

    ஒரு பேர் வச்சுருக்குறதே பெரிய விஷயமா இருக்கு இதுல மூணு பேரா
    ஆவ்வ்வ்வ் ஆனா இந்த மூணுபேருக்குள்ளேயும் எதோ ஆவி புகுந்து எழுதுதுன்னுதான் நான் நினைக்கிறேன்...

    ReplyDelete
  20. //அந்த என் தாயுமானவளுக்கு என் அங்கீகாரம் சமர்ப்பணம்//

    ம்ம் அப்பிடியா?

    ReplyDelete
  21. //
    தமிழ்மணம் பரிந்துரை : 7/9
    //

    :)

    ஹா ஹா ஹா எங்க போனாலும் துரத்தி துரத்தி அடிக்கிறானுகளே இப்பிடி பாவம்தான் நீங்க..

    :)

    ReplyDelete
  22. அருமையான துவக்கம்! சூப்பர் தலைவா! வாழ்த்துக்கள்!..,

    ReplyDelete
  23. வாழ்த்துக்கு நன்றி

    @@பிரபாகர்
    @@சீனா சார்
    @@நன்றிங்க சின்ன அம்மிணி
    @@TVR
    @@ஆரூரன்
    @@ பலா பட்டறை
    @@ சங்கவி
    @@ பலா பட்டறை
    @@பாலாசி
    @@தண்டோரா அண்ணே:))
    @@ ஜமால்

    ReplyDelete
  24. இராகவன் நைஜிரியா said...

    /அண்ணே... வாழ்த்துகள்.

    அறிமுகம் அருமை./

    நன்றிங்கண்ணே.

    ReplyDelete
  25. S.A. நவாஸுதீன் said...

    //வாழ்த்துக்கள் பாலா சார். அப்போ இந்த வாரம் ஜாலிதான்//

    நீங்கள்ளாம் இருக்குறப்போ ஜாலிக்கா பஞ்சம். அசத்துவோம் வாங்க.

    ReplyDelete
  26. கலகலப்ரியா said...

    /அருமையான அழகான ஆரம்பம்..! :)/

    நன்றி அம்மா.

    ReplyDelete
  27. பழமைபேசி said...

    /மகிழ்வாய் உணர்கிறேன்.... வாழ்த்துகிறோம்!/

    நானும் நன்றியுடன்.

    ReplyDelete
  28. ஈரோடு கதிர் said...

    / வாத்யாரே.... வணக்கம்


    பட்டாசு கிளப்புங்க/

    ம்கும். கவிதை க்ளாசுக்கு உங்க கிட்டதான் கை காட்டப் போறேன்.

    ReplyDelete
  29. துபாய் ராஜா said...

    /வலைச்சரம் தொடுக்க வந்த வானம்பாடி அய்யாவிற்கு வாழ்த்துக்கள்./

    நன்றி ராஜா.

    ReplyDelete
  30. திகழ் said...

    /வாழ்த்துகள்/
    நன்றி

    ReplyDelete
  31. மாதேவி said...
    /நல்வாழ்த்துகள்./

    நன்றிங்க.

    ReplyDelete
  32. பிரியமுடன்...வசந்த் said...

    / முதலாம் நாள் அட்டெண்டன்ஸ்ஸ்ஸ்...

    ப்ரசண்ட் சார்.../

    ஏன் லேட்டு:))

    /எம்புட்டு தேன் சேத்துருக்கீக இதுவரைக்கும்?/

    கணக்கு பார்க்குறதில்ல.

    /ஒரு பேர் வச்சுருக்குறதே பெரிய விஷயமா இருக்கு இதுல மூணு பேரா
    ஆவ்வ்வ்வ் ஆனா இந்த மூணுபேருக்குள்ளேயும் எதோ ஆவி புகுந்து எழுதுதுன்னுதான் நான் நினைக்கிறேன்.../

    ஆமாம். ஆவியில்லாம ஆளுல்லயே.

    /ம்ம் அப்பிடியா?/

    அப்படியேதான்.:)

    /ஹா ஹா ஹா எங்க போனாலும் துரத்தி துரத்தி அடிக்கிறானுகளே இப்பிடி பாவம்தான் நீங்க../

    ஒரு வேளை நான் காய்ச்ச மரம்தானோ?

    நன்றி வசந்த்.

    ReplyDelete
  33. சூர்யா ௧ண்ணன் said...

    /அருமையான துவக்கம்! சூப்பர் தலைவா! வாழ்த்துக்கள்!/

    நன்றி தலைவா! தலைவா! என்னைத் தெரியுதா என்ற உங்கள் முதல் பின்னூட்டம் என்னோடே வருகிறது. நன்றி நன்றி நன்றி!

    ReplyDelete
  34. attendance போட்டாச்சு..

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது