நட்சத்திரங்கள்...
➦➠ by:
ப்ரியமுடன்...வசந்த்
அனைவருக்கும் வணக்கம் (அட சல்யூட் எங்கப்பா?)
அமிர்தவர்ஷினி அம்மா
இவங்க மழைன்ற வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க...
இவங்களைப்பத்தி சொல்றதுன்னா சூரியனுக்கே டார்ச் அடிப்பது மாதிரி...
இவரைப்பற்றி இதற்க்கு முன்னால் பலரும் கூறியிருப்பார்கள் இருந்தாலும் நானும் இவரின் எழுத்துக்களை தொடர்ந்து வாசித்து வருபவன் என்ற முறையில் இவரின் எழுத்துக்களை தங்களிடம் அறிமுகம் செய்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.ஆமாங்க எப்பிடியெல்லாம் எழுதுறாங்க இவங்க வட்டாரபேச்சுவழக்கு நடையில் அன்றாட நிகழ்வுகளையும் தன் செல்ல மகளின் சேட்டைகளையும் அழகுகளையும் வாசிக்க வாசிக்க மிகவும் பிடித்து போகிறது.என்னை பொறுத்த மட்டில் இவரின் எழுத்துநடை வலையுலகில் யாரிடமும் இல்லாத ஒன்று.சரிதானுங்களே அ.அ.
(ஆண்டாவா எனக்கு இவங்களை மாதிரி எழுத்துநடையில எழுதுற சக்தி கொடுப்பா...)
(ஆண்டாவா எனக்கு இவங்களை மாதிரி எழுத்துநடையில எழுதுற சக்தி கொடுப்பா...)
இதோ இவர் கைவண்ணங்களில் சில...
***********************************************************************************
விசா
இவர் விசா பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்..
இவர் ஒரு கதாசமுத்திரம் ஆமாங்க ட்விஸ்ட் கதை சொல்வதில் இவருக்கு நிகர் இவரே , விறு விறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதை சொல்லுவதில் கெட்டிக்காரர்.அநாவசியமாக கூட வார்த்தைகள் இருக்காது அத்தனை வார்த்தைகளும் கதையோடு சேர்ந்து நம்மையும் அதனுடன் ஒன்றிப்போய் படிக்கச்செய்துவிடும் .இவரின் கேப்ஸ்யூல் கதைகள் பிரசித்தம்.கதை மட்டுமில்லை சில நேரம் இவர் எழுதும் காமெடி பதிவுகளும் நம்மை வயிறு வலிக்க செய்துவிடும் ஏனோ இவர் அதிகம் வெளியில் தன்னை தானொரு பதிவன் என்று காட்டிக்கொள்வதில்லை.சுய விளம்பரமும் தேடிக்கொள்வதில்லை.(கத்துக்கோடா வசந்து)நீங்கள் அனைவரும் கண்டிப்பா இவரோட கதைகளை வாசிக்க வேண்டும்...
(கண்டிப்பா உங்களை மாதிரி ஒரு நாள் ஒரு கதையாச்சும் எழுதுவேன் விசா)
************************************************************************************
தமிழரசி
இவங்க எழுத்தோசை எனும் வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க..
வலையுலக கவியரசின்னு கூட சொல்லலாம்,அவ்வளவு கவிதைகள்,அத்தனையும் வாசிக்க வாசிக்க ரசிக்கலாம்,சமுதாய கோபங்களை சத்தமில்லாமல் தன் கவிதைகளில் வெளிப்படுத்துவார்,காதல் ரசம் சொட்ட சொட்ட கவிதைகள் எழுதுவதும் கைவந்த கலை இவருக்கு,ஒரு கவிதை மெசின் வைத்திருப்பார் போலும் ஏதாவது கவிதைன்னு இவருக்கிட்ட கேட்டா அடுத்த நிமிசமே கவிதை எழுதி கொடுத்திடுவாங்க.அவ்வளவு கவி ஞானம்.
அன்பானவர் ,பாசமானவர்கூட இவர் எனது இரண்டாவது தாய் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையா இருக்கு.
இவரின் கைவண்ணங்கள் இதோ...
ஒரு நண்பரின் திருமண அழைப்பிதழ்க்கு எழுதிய இருமன திருமண ஓலை
************************************************************************************
வானம்பாடிகள் பாலா
இவர் பாமரன் பக்கங்கள் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்
சமுதாய கோபம் மிக்கவர்,இவரின் கோபத்திற்க்கு அரசியல் வாதிகளின் கோரமுகம் தினமும் கிழிக்கப்படுகிறது இவரது இடுகைகளில்,இந்த வயசுலயும் காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் கவிதைகள் எழுதுகிறார் (எப்பிடி நைனா இதெல்லாம்?) இவரது அனுபவப்பகிர்வுகள் படிச்சுட்டு சிரிக்காம வர்றவங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்ற அளவில் சிறப்பான நகைச்சுவை இடுகைகளை எழுதி நம் வயிற்றை பதம் பார்க்கிறார்,அன்பானவர் அனைத்து புதியவர்களுக்கும் ஊக்கம் கொடுத்து வருகிறார்..இவரின் நறுக்குன்னு நாலு வார்த்தை இடுகைகளை புத்தகமே போடலாம் அவ்வளவு நறுக்கு தெரிக்கின்றது இவரது இடுகைகளில் மூத்த பதிவர் என்ற பொழுதிலும் இளையவர்களுக்கு இணையாக களத்தில் பட்டாசு வெடிக்கிறார் தினமும்...
இதோ இவரது நறுக்குகள்
************************************************************************************
ராமலக்ஷ்மி மேடம்
இவங்க முத்துச்சரம் என்ற வலைப்பூவில் எழுதிட்டு வர்றாங்க...
இந்த பதிவுலகத்திலயே மிகவும் ரெஸ்பெக்ட்டான ஆளுங்க...மிகுந்து பேசி பார்த்திருக்க வாய்ப்பில்லை.நான் மிகவும் மதிக்கும் பதிவர்
திருநெல்வேலி மண்ணைச்சேர்ந்த இவங்களின் எழுத்துக்களை நான் பதிவுலகம் வந்ததிலிருந்து வாசிச்சுட்டு வர்றேன் கவிதைகள்,சிறுகதைகள் இவரின் தனிச்சிறப்பு,புகைப்படங்களை சுட்டுத்தள்ளுவதிலும் தேர்ந்த நிபுணர் இவரின் இடுகைகளில் நாம் இடும் பின்னூட்டங்களுக்கு அழகாக பொறுமையாக புரியும்படியான விளக்கம் கொடுக்கிறார்.இவரின் பல இடுகைகள் யூத்ஃபுல் விகடனில் வெளிவந்திருக்கிறது தற்பொழுது தேவதை இதழிலும் தொடர் எழுதுகிறார் அதுமட்டுமன்று நிறைய வார மாத இதழ்களில் இவரின் படைப்புகள் வெளி வந்திருக்கின்றன.வாழ்த்துக்கள் மேடம்...
இவங்களோட இடுகைகள்
*************************************************************************************
கதிர்-ஈரோடு
இவர் கசியும் மவுனம் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார்
இவரை ஆரம்பத்திலிருந்தே பதிவுலகில் நன்கு தெரியும் நல்ல கவிஞர் தொடர்ச்சியான சமூக நல கவிதைகள் நச்சுன்னு எழுதுவார்.இவரின் சமுதாய நல கட்டுரைகளும்,தற்சமய தேவையான சமுதாய விழிப்புணர்ச்சி கட்டுரைகளள் பசுமரத்தாணிபோல் மனதில் சலனத்தை ஏற்படுத்தி பதிந்து போகின்றன..தொடர்ச்சியா சிக்சர் அடிச்சுட்டு இருக்கார்,(கதிர் சார் இப்படி கட்டுரை எழுதுவது எப்படியென்று எனக்குமட்டும் ரகசியம் சொல்லுங்களேன்)இவரின் இடுகைகளும் தொடர்ச்சியா யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...
இவரின் சில கவன ஈர்ப்பு இடுகைகள்
*************************************************************************************
பா.ராஜாராம்
இவர் கருவேலநிழல் எனும் வலைப்பூவில் எழுதி வருகிறார் இல்லையா மக்கா?
இவரைப்பத்தி நான் சொல்லிதெரியணும்ன்ற அவசியம் இல்லை.வலையுலக கவிஞர்களில் முதன்மையா இருக்கிறார் இவரின் எளிமையான கவிதைகள் மனதை பதம் பார்க்கும்.எப்படியெல்லாம் பாசத்தையும், அன்பையும், இயலாமையையும் வெளிப்படுத்துகிறார் அத்தனைகவிதைகளும் மிகச்சிறப்பானவை,பா.ரா.இதுவரைக்கும் சவுதி மன்னரிடமிருந்து எவ்வளவு பொன் முடிப்பு பரிசாக வென்றிருக்கிறீர்கள்?
இவரின் பின்னூட்டங்களும் பாசமாவே இருக்கு...இப்போ வர்ற டிசம்பர் 11 இவரோட கவிதை தொகுப்பும் புத்தகமா வெளிவருகிறது வாழ்த்துக்கள் பா.ரா.
இதோ இவரின் சில வைரங்கள்
**************************************************************************************
நாளையும் சிறந்த நட்சத்திரங்களுடன் வருகிறேன் நன்றி
ப்ரியமுடன்...வசந்த்
|
|
இரண்டாம் நாள் வாழ்த்துகள் ஆசிரியரே! மகன் தந்தைக்காற்றிய உதவிக்கு நன்றி சொல்வது தவறு. :)). அசத்து வசந்து!
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...! lay out நல்லாருக்கு..!
ReplyDeleteஆஹா... உங்க ஸ்டைல்ல அறிமுகங்கள் அசத்தல் உ பி..
ReplyDeleteநேத்து வராததுக்கும் சேர்த்து இன்னைக்கு ரெண்டு சல்யூட் வச்சிக்கிறேன் வசந்து :)))
ReplyDeleteஅசத்தலான அறிமுகங்கள். பலர் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் :)
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDeleteஅசத்தலான அறிமுகங்கள்.. புதியவர்களுக்கு இந்த அறிமுகங்கள் மிகவும் பயன் தரும்.
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த் !
நன்றி வசந்த்
ReplyDeleteம்ம் ... நினைச்சுகிட்டே இருந்தேன் இந்த வசந்து எதாச்சும் வித்தியாசமா செய்வாரே அப்படின்னு ..!;;) அசத்தல் அறிமுகங்கள்..! அறிமுகபடுத்திய விதம் டாப்..!
ReplyDeleteநட்சத்திர வரிசையில் என்னையும் வைத்த உங்கள் அன்புக்கு நன்றிகள்!
ReplyDeleteமற்றவருக்கு என் நல்வாழ்த்துக்கள்!
தேவதையில் என் வலைப்பூவினை அறிமுகம் மட்டுமே செய்துள்ளார்கள். ஹி, தொடர் எல்லாம் எழுதும் அளவுக்கு வளரவில்லை இன்னும்:)!
-------------------
கலகலப்ரியா said...
//lay out நல்லாருக்கு..!//
எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கிற உங்கள் வழக்கமான ஆர்வமும் உழைப்பும் இங்கும் மின்னுகின்றன. வாழ்த்துக்கள் வசந்த்!
அத்தனையும் முத்தான பதிவர்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
விஜய்
உங்களால் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்..!
ReplyDeleteசிறப்பான பணி வசந்த் !!! தொடருங்கள்....
இதுல விசா கூட ஒரு கம்மர்ஷியர் ரைட்டர் தாங்க..!
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.
ReplyDeleteஉங்க ஸ்டைல்ல நண்பர்களின் அறிமுகம் ரொம்ப நல்லா இருக்கு. கலக்குங்க.
ராஸா இரண்டாம் நாள் வாழ்த்துகள்
ReplyDelete------------------------
தெரியாம போச்சேப்பா
தெரியாம போச்சே
tamil arasi ivangala most of them feel as amma ....i too wanna hav touch vid her
ReplyDeletearumaiya arimugam senju irukkeenga
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்!! வலை நண்பர்களை அறிமுப்படுத்திய வசந்த் ஸ்டைல் நல்லா இருக்கு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteயேயப்பா!
ReplyDeleteஎல்லாமே பெரிய பெரிய ஜாம்பவான்கள்!
வாழ்த்துக்கள் வசந்த் !!
ReplyDeleteகலக்குங்க ஏழு நாளும் !!!
அன்பின் வசந்த்
ReplyDeleteமிக மிக அருமையாக பொறுப்பினை நிறைவேற்றுகிறீர்கள். அழகான வடிவமைப்பு - பொருத்தமான சிறு அறிமுகம் - சுட்டுவதோ அழகிய இடுகைகள்
நல்வாழ்த்துகள் வசந்த்
அறிந்த அறிமுகங்களாயினும் சிறந்த தேர்வுகள்.இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.
ReplyDeleteவசந்த்.....
ReplyDeleteவாழ்த்துகள்.....!
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே....பளிச்சென்று இருக்கிறது பதிவு பக்கம்..ஆமா வசந்த் வந்ததால் மேலும் மெருகேறியிருக்கும் போல....
ReplyDeleteவிசா இவர்களை தெரியாது மற்ற பதிவர்களின் பதிவுகள் வாசித்தது உண்டு..அறிமுகப்படுத்தி தலைப்பு தந்த விதம் வசந்துக்கே உரிய கலைவண்ணம்....கைவண்ணம்..
ReplyDelete//எனது இரண்டாவது தாய் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையா இருக்கு.//
ReplyDeleteஉன்னை மகனென கொண்டதில் யானும் அவ்வண்ணமே மகிழ்ச்சியடைகிறேன்..
இணையம் தந்த என் மூத்த மகனே வாழ்த்துக்கள்....
போடா அழவச்சிட்ட ..சந்தோஷத்தில் தான் அம்மா என்று சொன்ன சந்தோஷம்....
தேவதை பத்திரிக்கையும் நம் இருவரின் கடிதம் பிரசுரமாகி நமக்குள் இருக்கும் பந்தத்தை ஊர்ஜிதப்படுத்தியது.....
ReplyDeleteஅறிமுகம் அழகு நண்பரே....
ReplyDeleteஇது வரையில் பங்கெடுத்த ஆசிரியர்களில் வசந்த் உங்களுடைய பங்களிப்பு மிகச் சிறப்பானது.
ReplyDeleteஇந்த ஓவிய அறிமுகம் இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்.
தமிழ் அரசி தான்.
பாமரன் கதிர் வியந்த கருத்துக்கள்.
இரெண்டாவது நாள் வலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரும் அறிந்தவர்களானாலும் மறுபடியும்
ReplyDeleteஅவர்களை படிக்கத் தூண்டிய வசந்திற்கு நன்றி!
அருமையான தொகுப்பு..
கலக்குங்க வசந்த்:))
வாழ்த்துகள்
ReplyDeleteமுத்தான அறிமுகங்கள். உனது நடையில் அவர்கள் இன்னும் ஜொலித்து விட்டார்கள்.
ReplyDeleteவலைச் சர வாழ்த்துக்கள்.
வித்தியாசமான தலைப்புகளில் .....வசந்த்னாலே மாற்றி யோசின்னு அர்த்தமோ?.நல்லா தொகுக்கின்றீர்கள்!பூங்கொத்து!
ReplyDeleteஇரண்டாம் நாள் ஆசிரியர் வாழ்த்துகள்.
ReplyDeleteஅனைவரும் மிக அருமையான வலைப்பதிவர்கள்.
ஓவ்வொருவரும் ஒரு விதத்தில் சூப்பர்..
// வலையுலக கவியரசின்னு கூட சொல்லலாம்,அவ்வளவு கவிதைகள்,//
ReplyDeleteசரியாச் சொன்னீங்க.
// இவரது இடுகைகளில்,இந்த வயசுலயும் காதல் ரசம் சொட்ட சொட்ட காதல் கவிதைகள் எழுதுகிறார் //
ReplyDeleteஎல்லாம் நம்ம வயசைத் தாண்டித்தானே வந்திருக்கார்.. அது கூடத் தெரியாம இருக்குமா என்ன?
// இவரது அனுபவப்பகிர்வுகள் படிச்சுட்டு சிரிக்காம வர்றவங்களுக்கு பரிசு கொடுக்கலாம் என்ற அளவில் சிறப்பான நகைச்சுவை இடுகைகளை எழுதி நம் வயிற்றை பதம் பார்க்கிறார்,//
ReplyDeleteஆமாம் அடுத்த தடவை பார்க்கும் போது டாக்டர் பில் நிறைய வச்சு இருக்கேன்... பணம் வசூல் செய்ய வேண்டும்..
// இவரின் சமுதாய நல கட்டுரைகளும்,தற்சமய தேவையான சமுதாய விழிப்புணர்ச்சி கட்டுரைகளள் பசுமரத்தாணிபோல் மனதில் சலனத்தை ஏற்படுத்தி பதிந்து போகின்றன.. //
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள்... அவரின் எழுத்து வீரியம் மிக்கது..
பாஸ்!!!!!!!!!!!!!
ReplyDeleteஎன்னதிது, இப்பத்தான் பார்க்கிறேன், டார்ச்செல்லாம் அடிச்சு ஒளிவட்டம் உண்டாக்கியிருக்கீங்க.
ரொம்பவும் பெருமிதமா உணர்கிறேன் வசந்த், நன்றி.
//
ReplyDeleteவானம்பாடிகள் said...
இரண்டாம் நாள் வாழ்த்துகள் ஆசிரியரே! மகன் தந்தைக்காற்றிய உதவிக்கு நன்றி சொல்வது தவறு. :)). அசத்து வசந்து!
//
நன்றி நைனா :)
//கலகலப்ரியா said...
ReplyDeleteஅருமையான அறிமுகங்கள்...! lay out நல்லாருக்கு..!//
நன்றி ப்ரியா
. சுசி said...
ReplyDeleteஆஹா... உங்க ஸ்டைல்ல அறிமுகங்கள் அசத்தல் உ பி..//
சுசி said...
நேத்து வராததுக்கும் சேர்த்து இன்னைக்கு ரெண்டு சல்யூட் வச்சிக்கிறேன் வசந்து :)))
நேத்துவராததுக்கு ஒரு பிரம்படி,,,
:)))
நன்றி சுசிக்கா...
//சின்ன அம்மிணி said...
ReplyDeleteஅசத்தலான அறிமுகங்கள். பலர் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் :)//
நன்றி சின்ன அம்மிணி
// T.V.Radhakrishnan said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துகள்//
நன்றி டி.வி.ஆர்
// பூங்குன்றன்.வே said...
ReplyDeleteஅசத்தலான அறிமுகங்கள்.. புதியவர்களுக்கு இந்த அறிமுகங்கள் மிகவும் பயன் தரும்.
இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த் !
//
நன்றி பூங்குன்றன்
// ஈரோடு கதிர் said...
ReplyDeleteநன்றி வசந்த்//
நன்றிங்க..
// ஜீவன் said...
ReplyDeleteம்ம் ... நினைச்சுகிட்டே இருந்தேன் இந்த வசந்து எதாச்சும் வித்தியாசமா செய்வாரே அப்படின்னு ..!;;) அசத்தல் அறிமுகங்கள்..! அறிமுகபடுத்திய விதம் டாப்..!//
மிக்க நன்றி ஜீவன் எப்டியோ ஏமாத்தலைல நான்...
//ராமலக்ஷ்மி said...
ReplyDeleteநட்சத்திர வரிசையில் என்னையும் வைத்த உங்கள் அன்புக்கு நன்றிகள்!
மற்றவருக்கு என் நல்வாழ்த்துக்கள்!
தேவதையில் என் வலைப்பூவினை அறிமுகம் மட்டுமே செய்துள்ளார்கள். ஹி, தொடர் எல்லாம் எழுதும் அளவுக்கு வளரவில்லை இன்னும்:)!
-------------------
கலகலப்ரியா said...
//lay out நல்லாருக்கு..!//
எதைச் செய்தாலும் சிறப்பாகச் செய்கிற உங்கள் வழக்கமான ஆர்வமும் உழைப்பும் இங்கும் மின்னுகின்றன. வாழ்த்துக்கள் வசந்த்!
//
மிக்க நன்றி ராமலக்ஷ்மி மேடம்
//கவிதை(கள்) said...
ReplyDeleteஅத்தனையும் முத்தான பதிவர்கள்
வாழ்த்துக்கள்
விஜய்//
நன்றி விஜய்
// அ.மு.செய்யது said...
ReplyDeleteஉங்களால் அறிமுகம் செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள்..!
சிறப்பான பணி வசந்த் !!! தொடருங்கள்....
இதுல விசா கூட ஒரு கம்மர்ஷியர் ரைட்டர் தாங்க..!
//
நன்றி செய்யது
// S.A. நவாஸுதீன் said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.
உங்க ஸ்டைல்ல நண்பர்களின் அறிமுகம் ரொம்ப நல்லா இருக்கு. கலக்குங்க.
//
நன்றி நவாஸ்
//நட்புடன் ஜமால் said...
ReplyDeleteராஸா இரண்டாம் நாள் வாழ்த்துகள்
------------------------
தெரியாம போச்சேப்பா
தெரியாம போச்சே
//
வந்த்ட்டீங்களா அண்ணா
நன்றி அண்ணா
// Annam said...
ReplyDeletetamil arasi ivangala most of them feel as amma ....i too wanna hav touch vid her//
ஹ ஹ ஹா ம்ம்..
// Annam said...
ReplyDeletearumaiya arimugam senju irukkeenga
//
நன்றி அன்னம்
நன்றி சஃபி...
ReplyDelete// வால்பையன் said...
ReplyDeleteயேயப்பா!
எல்லாமே பெரிய பெரிய ஜாம்பவான்கள்!
//
நன்றி தல
// Starjan ( ஸ்டார்ஜன் ) said...
ReplyDeleteவாழ்த்துக்கள் வசந்த் !!
கலக்குங்க ஏழு நாளும் !!!
//
நன்றி ஸ்டார்ஜன்
//cheena (சீனா) said...
ReplyDeleteஅன்பின் வசந்த்
மிக மிக அருமையாக பொறுப்பினை நிறைவேற்றுகிறீர்கள். அழகான வடிவமைப்பு - பொருத்தமான சிறு அறிமுகம் - சுட்டுவதோ அழகிய இடுகைகள்
நல்வாழ்த்துகள் வசந்த்
//
மிக்க நன்றி சீனா ஐயா
//ஹேமா said...
ReplyDeleteஅறிந்த அறிமுகங்களாயினும் சிறந்த தேர்வுகள்.இரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வசந்த்.
//
நன்றி ஹேம்ஸ்...
// சத்ரியன் said...
ReplyDeleteவசந்த்.....
வாழ்த்துகள்.....!
//
நன்றி சத்ரியன்
//தமிழரசி said...
ReplyDeleteஇரண்டாம் நாள் வாழ்த்துக்கள் வலைச்சர ஆசிரியரே....பளிச்சென்று இருக்கிறது பதிவு பக்கம்..ஆமா வசந்த் வந்ததால் மேலும் மெருகேறியிருக்கும் போல....
//
நாங்கல்லாம் யாரு...?
//தமிழரசி said...
ReplyDelete//எனது இரண்டாவது தாய் என்று சொல்லிக்கொள்வதில் எனக்கு பெருமையா இருக்கு.//
உன்னை மகனென கொண்டதில் யானும் அவ்வண்ணமே மகிழ்ச்சியடைகிறேன்..
இணையம் தந்த என் மூத்த மகனே வாழ்த்துக்கள்....
போடா அழவச்சிட்ட ..சந்தோஷத்தில் தான் அம்மா என்று சொன்ன சந்தோஷம்....
//
ஹ ஹ ஹா இதுக்குப்போயி அழுவாங்களா?....
//தமிழரசி said...
ReplyDeleteதேவதை பத்திரிக்கையும் நம் இருவரின் கடிதம் பிரசுரமாகி நமக்குள் இருக்கும் பந்தத்தை ஊர்ஜிதப்படுத்தியது.....
//
மிகச்சரி டமில்...
// க.பாலாசி said...
ReplyDeleteஅறிமுகம் அழகு நண்பரே....
//
நன்றி பாலாசி
// ஜோதிஜி said...
ReplyDeleteஇது வரையில் பங்கெடுத்த ஆசிரியர்களில் வசந்த் உங்களுடைய பங்களிப்பு மிகச் சிறப்பானது.
இந்த ஓவிய அறிமுகம் இன்னும் பல நாட்களுக்கு மனதில் நிற்கும்.
தமிழ் அரசி தான்.
பாமரன் கதிர் வியந்த கருத்துக்கள்.
//
மிக்க நன்றி ஜோதிஜி
//RAMYA said...
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவரும் அறிந்தவர்களானாலும் மறுபடியும்
அவர்களை படிக்கத் தூண்டிய வசந்திற்கு நன்றி!
அருமையான தொகுப்பு..
கலக்குங்க வசந்த்:))
//
மிக்க நன்றிக்கா
//திகழ் said...
ReplyDeleteவாழ்த்துகள்
//
நன்றி திகழ்
// ஜெஸ்வந்தி said...
ReplyDeleteமுத்தான அறிமுகங்கள். உனது நடையில் அவர்கள் இன்னும் ஜொலித்து விட்டார்கள்.
வலைச் சர வாழ்த்துக்கள்.
//
நன்றி ஜெஸ்ஸம்மா...
//அன்புடன் அருணா said...
ReplyDeleteவித்தியாசமான தலைப்புகளில் .....வசந்த்னாலே மாற்றி யோசின்னு அர்த்தமோ?.நல்லா தொகுக்கின்றீர்கள்!பூங்கொத்து!
//
மிக்க நன்றி பிரின்ஸ்
//இராகவன் நைஜிரியா said...
ReplyDeleteஇரண்டாம் நாள் ஆசிரியர் வாழ்த்துகள்.
அனைவரும் மிக அருமையான வலைப்பதிவர்கள்.
ஓவ்வொருவரும் ஒரு விதத்தில் சூப்பர்..
//
மிக்க நன்றிண்ணா
//அமிர்தவர்ஷினி அம்மா said...
ReplyDeleteபாஸ்!!!!!!!!!!!!!
என்னதிது, இப்பத்தான் பார்க்கிறேன், டார்ச்செல்லாம் அடிச்சு ஒளிவட்டம் உண்டாக்கியிருக்கீங்க.
ரொம்பவும் பெருமிதமா உணர்கிறேன் வசந்த், நன்றி.
//
தன்னடக்கம் ஹ ஹ ஹா
நன்றிங்க மேடம்
நடக்கட்டும் அப்பு... நடக்கட்டும்... நல்ல தேர்வுகள் தான். வாழ்த்துகள்.
ReplyDeleteஏன் மக்களே, தமிழிஷ்-ல யாரும் ஒட்டு போடல...சரி நான் போட்டுட்டு போறேன். :-)
ReplyDeleteஅழகா தொகுத்திருக்கிறீர்கள் வசந்த. வாழ்த்துகள்
ReplyDeleteஒரே ஒரு குறை: Poetist என்றொரு வார்த்தை இருக்கிறதா? கூகுளாண்டவர் கிட்ட கேட்டேன். அவருக்கும் முழி பிதிங்குடுச்சு!