பசி தூண்டும் ருசி...
➦➠ by:
வானம்பாடிகள்
வணக்கம்ணா. இந்த திருவாதிரை களி புளிக்கூட்டு, அடை அவியல், ஐஸ்க்ரீம் பழ சாலட்னு சில கூட்டணியிருக்கே, அடிச்சிக்க முடியாது இந்தக் கூட்டணியை. இனிப்புக் களிக்கு புளிப்பும் காரமுமா கூட்டு, கார அடைக்கு காரமே இல்லாம அவியல், ஐஸ் குளுத்திக்கு சமனமா பழங்கள்னு ஒரு பக்கம் ஆரோக்கியம், இன்னொரு பக்கம் ருசியும் பசியும் தூண்டும், மற்றொரு பக்கம் மிஞ்சினத விரயம் பண்ணாம சிக்கனம்னு பல நன்மைகள் இருக்கு.
அறிவுப் பசிக்கும் இப்படி தீனி போடுற பதிவர்கள் இருக்காங்க. நாட்டு நடப்பு, சினிமா கதை, பதிவர் உலகம், கலியாணம் காதுகுத்துக்கு வாழ்த்துன்னு ஒரு இடுகையப் படிக்கிறப்ப மனசு நிறைஞ்சி போகும்.தோ! நீங்கள்ளாம் எதுன்னு சொல்றதில்ல. நாந்தான் சொல்லுவேன். சரியா?
முதல்ல தமிழா தமிழா ராதாகிருஷ்ணன் கவனம் வந்திருக்குமே. காலையில ஆஃபீஸ் போற அவசரத்திலகூட தமிழா தமிழால அருணாசலக் கவிராயர், கம்பராமாயணம்ல ஒரு காட்சின்னு கண்ணுல பட்டிச்சோ அன்னைக்கு பொழுது தமிழாப் போகும். தமிழ்னா அழகுதானே. ஒரு காட்சி இங்க பாருங்க. அய்யாவோட தேங்கா, மாங்கா, பட்டாணிசுண்டல் படிச்சிருப்பீங்களே. படிக்கலைன்னா லீவ் போட்டுட்டு ஒன்னு விடாம படிங்க. வாய்விட்டு சிரிங்க, கவிதைன்னு எது எழுதினாலும் அலப்பறையில்லாத அழகு தமிழ் எழுத்து.
ஒரு விஷயம் சொல்றது பத்திரிகையோ, மனுசனோ யார்னாலும் பளிச்சுன்னு யாரு பக்கமும் சாயாம, நடுனிலையா இருந்திச்சின்னா அது பெரிய விஷயம். கண்ணுமூடிக்கிட்டு இதான் நிஜம்னு சொல்ல முடியும். இருப்பா இருப்பா அதுக்குள்ள நிஜாம்னு திருத்த வேண்டாம். நிஜம்னா இப்படிக்கு நிஜாம் சொல்றதுன்னு சொல்லுவேன். யாராவது இல்லன்னு சொல்லுங்க பார்க்கலாம். இவரோட ஸ்வீட் காரம் காபி ரொம்ப ஸ்பெஷல். இக்கு புடிச்ச விஷயம் எழுதினாலும் நிஜாம் வார்த்தைக்கு எதிர் வார்த்த ஒன்னு வரமுடியாது.
அண்ணாந்து பார்த்தங்க ஈரோட்டுல ஒருத்தர. அழகான குழந்தை முகம். வெள்ளந்தியா நட்போட ஒரு சிரிப்பு. ப்ரொஃபசராம். என்னைய மாதிரியே பசங்களுக்கும் பளிச்சுன்னு நட்பூ பூத்திருக்கும். அழகான கவிதை, சமுதாய நிகழ்வுகள்ள பொறுப்பான விமரிசனம், சினிமா பத்தி விவரமான தகவல்கள் (விசிலெல்லாம் அடிக்கப்படாது மதுரக்கார தம்பிகளா! ஹெ சொல்லுவோம்ல) அதவிட பத்திக்கிட்டு எரியிற பின்னூட்டங்கள்ள நட்பா கண்டிப்புன்னு ஒரு முதிர்ச்சி. அட உக்காந்து யோசிக்கிற கார்த்திகைப் பாண்டியந்தான்.படிங்க.
ஐந்தரைப்பெட்டி சுபாங்கன். ஈழத்து அழகு தமிழில் இளவட்டங்களை ஈர்க்கும் பதிவர்(இப்பயாச்சும் நானும் யூத்துன்னு ஒத்துக்குங்கப்பா). இவரின் சரக்கு வித் சைடிஸ் படிச்சாஓ இதத்தான் கிக்கும்பாய்ங்களோன்னு தோணும்.
புதியவர் அறிமுகம்னு சொல்ல இன்னைக்கு தயக்கமாதான் இருக்கு. எழுத்து மிரட்டுது.
பலா பட்டறை: வித்தியாசமான பேர். வித்தியாசமான சிந்தனை. அழகான எழுத்து. சின்னச் சின்னக் கவிதைகள் படிச்சிப்பாருங்க சின்னதா அழகா. கட்டுரையெல்லாம் ரொம்ப அழகான நடையில இருக்கும். பெரிய வாசகக் கூட்டம் சேர்க்கும் எழுத்து.கூடவே பட்டறைக் கவின்னு இவரோட வலைப் பூவையும் படிங்க.
ஆரூரன்:என்றென்றும் அன்புடன் இவருடைய வலைப்பூ. கொங்கு நாட்டு குசும்பு பேச்சிலும் எழுத்திலும் மிளிரும். சிறுமை கண்டு பொங்குவது கூட சிரிப்பாய் பொங்குவார். ஈரோட்டில் பாரதி என்ற பெயரில் வைத்த ஒரு பொம்மைக்கு ஆசாமி பண்ண அழிம்பைப் பாருங்க. சரளமாக கம்பராமாயணம், திருவாசகம் என்று மேற்கோள் காட்டிப் பேசும் தமிழறிவுக்கு சொந்தக்காரர். இதையெல்லாம் மீறி நேயமிக்க மனிதன். தன் பள்ளியில் படிக்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு பால் பரிந்தூட்டும் தாய்.
ஜிகர்தண்டா கார்த்திக்: அமெரிக்கால படிச்சிட்டிருக்கிற சில்வண்டு. கலியாணத்துக்கு இருக்கிற பய புள்ளைங்கள கிரிக்கெட் வீரரா ஒப்பிட்டு இது பண்ணுற அலப்பறைய பாருங்க. சரியான காமெடி பீசு. நல்ல எழுத்து வளம். விளையாட்டுப் பிள்ளை. ச்ச்ச்செரியாயிடும்.
பின்னோக்கி: ”பின்னோக்கி பார்ப்பது தவறல்ல. அது முன்னோக்கி நடக்கும் போது தவறு களைய உதவும்.” இப்படி ஓர் அறிமுகத்தோடு தொடங்கும் இவர் வலைப்பூ. மனுசன் எதைத்தான் எழுதலை? எல்லாம் எழுதுறாரு. நல்லா எழுதுறாரு. பதிவர்களின் பரிணாம வளர்ச்சின்னு சீரியல் கவிதை ஒண்ணு சாம்பிளுக்கு.
சரிங்ணா. இவங்கள பார்த்து வைங்க. நாளை சந்திப்போம்.
|
|
கார்த்திக், பலா பட்டறை புது அறிமுகம் அய்யா. படித்து பார்க்கிறேன். வழக்கமாய் படிகிறவர்கள் என்றாலும் உங்களின் அசத்தல் அறிமுகத்தால் இன்னும் இனிமையாய் தெரிகிறார்கள்.
ReplyDeleteஇன்னும் உங்களால் அறிமுகப்படுத்தப்படப்போகிறவர்களை ஆவலோடு எதிர் நோக்குகிறேன்.
பிரபாகர்.
நன்றி பாலா
ReplyDeleteநன்றி பாலாண்ணே
ReplyDeleteமொதல்ல கேபிள் ஜி, பிறகு தண்டோரா சார், இப்ப நீங்க ... போன மாசம் 8-ம் தேதி பதிவு ஆரம்பிச்ச எனக்கு இது மிக பெரிய அங்கீகாரம்.. ஏதோ கனவு மாதிரி இருக்கு எதையோ தேடி வந்தாலும் இப்போ நிறைய (நட்புகள்) கிடைச்சாச்சு.. உங்கள் வாழ்த்துக்கு தலை வணங்குகிறேன். நன்றி.
ReplyDelete** இன்னும் தற்குறி தான் நான் ..எப்போதாவது எழுத்து வழி தவறி போகின் கூடவே நின்று இடித்துரையுங்கள்.
அன்பின் பாலா
ReplyDeleteபிரபல பதிவர்களையும் புதிய பதிவர்களையும் அறிமுகப் படுத்திய விதம் அருமை - நன்று
நல்வாழ்த்துகள் பாலா
அருமை
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
நல்ல அறிமுகம் சார்........
ReplyDeleteஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள்.......
சில பதிவுகளை படித்திருந்தாலும் நீங்கள் அறிமுகம் செய்யும் விதம் அசத்தல்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
வெற்றிகரமான நான்காம் நாள். வாழ்த்துக்கள் சார். அருமையான அறிமுகங்கள். நிச்சயம் எல்லோரும் வாசிக்கனும் இவர்களை.
ReplyDeleteநண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.
நமக்கு இப்படி ஒரு அறிமுகமா...
ReplyDeleteஒரு சிறிய வட்டத்திற்குள் சுற்றிக்கொண்டிருந்த என்னை, இதுபோல டார்ச் அடித்து வெளியுலகத்திற்கு வழிகட்டியுள்ளீர்கள்.விளையாட்டாய் ஆரமித்தேன், இன்று விடமுடியாமல் தொடர்கிறேன்.
இன்னும் தொடர்வேன், அனைவரின் ஆதரவுடன்.
அறிமுகத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி வானம்பாடிகள் அண்ணே..
சார்.. எழுதிட்டு.. அடுத்தது என்ன எழுதுறதுன்னு புரியாம திரு.திருன்னு முழிச்சுட்டு இருக்கும் போது, உங்களால் எனக்கு ஒரு அறிமுகம். பெருமையா இருக்கு. இன்னும் நிறைய எழுதணும்னு ஊக்கம் கொடுத்ததற்கு நன்றி.
ReplyDeleteஎல்லோருமே எனக்குத் தெரிஞ்ச பதிவர்கள்.
ReplyDeleteஅறிமுகப் படுத்தியவிதம் அழகு.
ரெண்டு புதியவர்கள்!
ReplyDeleteமிக்க நன்றி அறிமுகத்திற்கு!
நான்காம் நாள் வாழ்த்துக்கள் ஆசிரியரே...
ReplyDeleteஜிகர்தண்டா கார்த்திக் புதிய அறிமுகம்
ReplyDeleteவாழ்த்துக்கள் அறிமுகமான சகாக்கள் அனைவருக்கும்....!
மிக்க நன்றி அண்ணா
ReplyDelete@@நன்றி பிரபாகர்
ReplyDelete@@நன்றி சார்
@@நன்றி ஆரூரன்
@@நன்றி பலா பட்டறை
@@நன்றிங்க சீனா.
@@நன்றி கதிர்
@@நன்றி புதுகைத் தென்றல்
@@நன்றி சங்கவி
@@நன்றி நவாஸ்
@@நன்றி கார்த்திக்
@@நன்றி வசந்த்
@@நன்றி பின்னோக்கி
@@நன்றி அருண்
@@நன்றி அண்ணே
@@நன்றி வசந்த்
@@நன்றி சுபாங்கன்
வழக்கம் போல... அருமை சார்..
ReplyDeleteகலகலப்ரியா said...
ReplyDelete/வழக்கம் போல... அருமை சார்../
நன்றிம்மா.
ஐ, இது எப்ப?? வலைச்சரம்கிற மேட்டரே இப்பதான் தெரியுது. நன்றியண்ணே! எங்க போனாலும் ராகவன் அண்ணே பார்வையிலிருந்து யாராலும் தப்ப முடியாது. சொல்லிப்புட்டேன் ஆமா!
ReplyDeleteநல்ல முயற்சி நண்பரே ,
ReplyDeleteஊக்குவிக்க ஆள் இருந்தால் இன்று ஊக்கு விற்பவன் கூட நாளை தேக்கு விற்பான்.
உங்களின் இந்த பதிவு அனைவருக்கும் பயனுள்ளதாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றி . வாழ்த்துக்கள்
வாசகனாய் ஒரு கவிஞன் ,
பனித்துளி சங்கர்
http://wwwrasigancom.blogspot.com