Monday, May 31, 2010

வலைச்சரத்தில் திசைகாட்டி - அறிமுகம் - ரோஸ்விக்

வலைச்சரம் வாசக உள்ளங்களுக்கு வணக்கம்.

இந்த வாரம் முழுவதும் இங்கு வலைச்சர ஆசிரியராய் எழுத என்னை அழைத்த அன்பின் சீனா ஐயா அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்து என் பதிவுகளைப் பற்றிய அறிமுகத்தை தொடர்கிறேன்.

இணையங்களில் சுற்றித் திரியும் போது நமது வலைப்பதிவர்களின் எழுத்துக்கள் எனக்கு வாசிக்கக் கிடைத்தது. நாமும் எழுத வேண்டும் என்ற, எண்ணில் புதைந்திருந்த ஆவல் மீண்டும் மேலெழும்பியது. வலைப்பதிவர் கிரி என்னுடன் தற்சமயம் பணிபுரிந்து வருகிறார். அவருடன் ச்மூக செயல்பாடுகள், சினிமா குறித்து உரையாடும்போது வலையுலகில் அவை குறித்து நடைபெறும் காரசாரமான விவாதங்களை எனக்கு அறியத்தருவார்.

அவரிடம், ”நானும் இது போல் எழுத வேண்டும். ஆனால், இந்த BLOG தொடங்குவது குறித்து தெரியாது” என்றேன். அவர் www.blogger.com குறித்து எடுத்துரைத்தார். அவருக்கு எனது நன்றிகள்.

நாம் வாழும் இந்த சமுதாயத்திற்கு நல்லதொரு திசையை நம் எழுத்து காட்ட வேண்டும் என்ற நோக்கிலே இதற்கு “திசைகாட்டி” எனப் பெயரிட்டேன். நல்ல கருத்துக்களையும் பதிய ஆரம்பித்தேன். இது போல் கருத்து சொல்லி எழுதும் பலரை என் காதுபடவே சிலர் “பெருசா கருத்து சொல்ல வந்துட்டானுக. அப்படி என்னத்தை கிழிக்கப் போறானுக” என்று சொன்னதில், நானும் தயங்கி அவ்வப்போது மொக்கைப் பதிவுகளும் இட ஆரம்பித்து விட்டேன்.

இருப்பினும், அதிகமான வாக்குகள், பின்னூட்டங்கள், பின் தொடர்பவர்கள் எனும் கணக்கில் என்றும் ஆர்வம் இருந்ததில்லை.

நான் எழுதிய முதல் பதிவு “புது உலகம் இந்த பதிவுலகம்" - ஆனந்த விகடனில் குட் பிளாக் பகுதியில் பரிந்துரைக்கப்பட்டது.

தண்டனைகள் கடுமையாக்கப்பட்டால் தவறுகள் குறையும் என்ற என் கருத்தை ”தண்டனைகள் தப்பினால் தப்புக்கள் குறையுமா?”- ல் பதிவு செய்துள்ளேன். பெரும்பாலானோர்க்கு இதில் உடன்பாடு இருக்கும் என்று நம்புகிறேன்.

உறவுகள் குறித்து “மரணம் இணைக்கும் உறவுகள்” - ல் பதிந்துள்ளேன். வாசித்துப் பாருங்களேன்.

இன்றைய காலக்கட்டத்தில் தேவையில்லாத சில காரணங்களால் திருமணங்களை தள்ளிப்போடுகின்றனர். இது குறித்து இரண்டு பாகங்களாக, ”தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?”, “தள்ளிப்போகும் திருமணங்கள் யாராலே?-2 எனும் தலைப்பில் எழுதியுள்ளேன். இந்தக் கட்டுரை, சிங்கப்பூரில் பதிவர்கள் இனணந்து இயங்கிவரும் “மணற்கேணி” என்ற குழுமத்தினரால் தொகுத்து வெளியிடப்பட்ட நூலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.


உலக வெப்பமயமாதல் குறித்து கிடைத்த தகவல்களை தொகுத்து மூன்று பாகமாக “பனி உருக்கி உலகழிக்கும் நம் பணி (புரட்டும் அபாயம்)...
” எனும் தலைப்பில் பதிந்துள்ளேன்.


செல்வம் சேர்த்தலும், அதை முறையாகக் காத்தலும் குறித்து “செல்வாக்கில்லா செல்வம்...- ல் பதிந்துள்ளேன். வாசித்துப் பயன்பெறுங்களேன்.

ரயில் பயணம் பலருக்கும் பிடித்த ஒன்று. எனது அனுபவங்களையும் தொகுத்து ரயிலின் மீதான காதலை “ரயில் - தாலாட்டும் மற்றொரு தாய்... பதிவில் சொல்லியிருக்கிறேன். 

மேலே நான் குறிப்பிட்ட பதிவுகள் மற்றுமன்றி, என்னுடைய பிற பதிவுகளையும், கவிதைகளையும், மொக்கைகளையும் ரசிப்பீர்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து எழுதி வருகிறேன்.


என் பதிவுகளைப் பற்றிய அறிமுகம் இத்தோடு நிறைவு பெறுகிறது. வரும் நாட்களில் இன்னும் பலரின் உபயோகமான, ரசிக்கக் கூடிய வலைத்தளங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.

Sunday, May 30, 2010

சேட்டைக்காரனுக்கும் தேனம்மைக்கும் பை பை பை - ரோஸ்விக்கிற்கு வெல்கம்

அன்பின் சக பதிவர்களே

கடந்த 10ம் நாள் முதல் 16ம் நாள் வரை ஆசிரியப் பொறுப்பேற்று அட்டகாசமாக ஆட்சி செய்த அருமை நண்பர் சேட்டைக்காரனின் ஒரு வார காலப் பொறுப்பிற்கு நன்றி கூற இன்று தான் வாய்ப்புக் கிடைத்தது. இவர் மிகப் புதுமையான வகையில் இடுகைகளைத் தொகுத்து - நகைச்சுவையின் உச்சத்தினை வெளிப்படுத்தி, ஏற்ற பொறுப்பினை சிரித்துக் கொண்டே நிறைவேற்றினார். ஏழு இடுகைகள் இட்டு ஏறத்தாழ 330 மறு மொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெற்றார். ஒரு வார காலத்தில் அறிமுகப் படுத்திய பதிவர்களை எண்ண இயலவில்லை. அத்தனை பதிவர்கள். அத்தனையும் முத்தான புதிய பதிவர்கள். அமர்க்களமாக அறிமுகம் செய்து பலரின் பாராட்டினைப் பெற்ற அருமை நண்பர் சேட்டைக்காரனை நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழிஅனுப்புவதில் வலைச்சரம் குழுவின் சார்பில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். தாமதமான ( பணிச்சுமை - இட மாற்றம் காரணம் ) விடை அளிப்பு நிகழ்ச்சியினை சேட்டைக் கர்ரன் பொருட்படுத்த மாட்டார் என நம்புகிறேன்.

அடுத்து ஆசிரியப் பொறுப்பேற்ற தேனம்மை லக்ஷ்மணன் - இரு வாரமாக - 17 முதல் 30 வரை - இன்று வரை - சேட்டைக்காரனுக்கு ஈடாக - பல புதிய பதிவர்களை அறிமுகப் படுத்தி -ஒரு கலக்கு கலக்கி - நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் 12 இடுகைகள் இட்டு ஏறத்தாழ 425 மறுமொழிகள் பெற்று மன நிறைவுடன் விடை பெறுகிறார். இவரை வலைச்சரம் குழுவின் சார்பில் நன்றி கலந்த நல்வாழ்த்துகளுடன் வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

அடுத்து நாளை 31.05.2010 துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க இசைந்துள்ளார் அருமை நண்பர் ரோஸ்விக. இவர் காரைக்குடி அருகில் உள்ள சூரம்பட்டி என்னும் கிராமய்த்தில் பிறந்து வளர்ந்தவர். வலையுலகில் ரோஸ்விக் என்னும் புனைப்பெயரில் எழுதி வருகிறார். இவரது வலைப்பூவின் பெயர் திசைகாட்டி.

கல்லல், தேவகோட்டை, மதுரை மற்றும் திருச்சியில் கல்வி பயின்று, ஹைதராபாத், திருவனந்தபுரம் ஆகிய பிற மாநில தலைநகரங்களில் பணிபுரிந்தவர்.

திருச்சியில் தூய வளனார் கல்லூரியில் (St. Joseph's College) மாணவ தலைவர் தேர்தலில் அவரது நண்பர்களின் பெரும் அன்பிலும், உழைப்பிலும் வென்று ஒரு வருட காலம் மாணவத் தலைவனாக இருந்து பெருமை படைத்தவர்.

தற்போது இந்தியாவைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் பல ஆண்டுகள் பணியாற்றியதன் மூலம் சிங்கப்பூரில் பணியாற்றி வருகிறார். நண்பர் ரோஸ்விக்கினை வலைச்சரம் குழுவின் சார்பினில் வருக வருக என வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் .

ஏற்ற பொறுப்பினை மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நல்வாழ்த்துகள் சேட்டைக்காரன் - தேனம்மை லக்ஷ்மணன்

நல்வாழ்த்துகள் ரோஸ்விக்

நட்புடன் சீனா


Saturday, May 29, 2010

நன்றி நன்றி., நன்றி.. வலைச்சரத்துக்கு...ப்லாகருக்கு ., கூகுளாண்டவருக்கு

நன்றி சொல்ல நினைத்தவுடன் ஏகப்பட்ட பேர் ஞாபகம் வருது ..
முதலில் எழுத வாய்ப்புக் கொடுத்த வலைச்சரத்துக்கும் சீனா சாருக்கும்..
என்னை ஒரு எழுத்தாளராக அறியச் செய்த என் ப்லாக்குக்கும் ..(என்னத்தைக் கொட்டினாலும் ஏத்துக்குது பா...!!) ப்லாகருக்கும் ., கூகுளாண்டவருக்கும்..!!!

மேலும் 15 நாளாக பொறுத்துக் கொண்டு படித்த தங்கை தம்பி., நண்பர்கள் ., வாசகர்கள் அனைவருக்கும்.. என்றும் என்னை வந்து ஊக்குவிக்கும் என் அன்புத் தங்கை மேனகாவுக்கும்.. முதல் முதல் வந்து கமெண்ட் போட்ட வால்பையனுக்கும்.........எல்லோரிடமும் என்னைக் கொண்டு சேர்த்தது வலைச்சரம்.......ஆசிரியராய் இருப்பதும் சுலபமில்லை..என அனுபவம் கொடுத்துள்ளது ,..இந்த அனுபவத்தைக் கொடுத்து ஏகப்பட்ட ஆசிரியர்களை உருவாக்கி இருக்கும் சீனா சார் அவர்களுக்கு நன்றிகள் பல..


இந்திராவின் கிறுக்கல்களில் கூட்டாஞ்சோறு கூட பொங்கலாய் இனிக்கிது..


துளசி கோபாலின் சின்னதா ஒரு ஜெயில் வாசம் .. தர்மஸ்தலா பற்றி...


அன்னையர் தினத்தில் அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாள் அப்பிடீங்கிறாங்க கோமதி அரசு..


உண்மைத்தமிழனின் கேசரி., இட்லி வடை .. பொங்கல் சாம்பார் சட்னி..ன்னு விருந்து சுவைங்க..


ஓசை செல்லா தான் மருத்துவர் ஆகாமல் போன கதையல்ல நிஜம் என பகிர்கிறார் இதில்


பாக்தாத்திலிருந்து பூங்குன்றன் அருமையா எழுதுவார்.. ஜனவரிக்கு அப்புறம் எழுதல.. எத்தனை நாள் லீவ்.. ஏதாவது எழுதுங்கள் பூங்குன்றன்..


சுமஜ்லாவின் அமைதியான நதியினிலே என்ற குழந்தைப் பாடல் எனக்குப் பிடித்த ஒன்று


முகிலன்னா நான் இந்த இடுகையை மறக்க மாட்டேன்.. அதுவும் பலா பட்டறை சங்கர் விமர்சனத்தை அவர் விமர்சித்த விதம்...:))


திசைகாட்டியோட அன்பின் அப்பத்தா நெகிழ்வு..


இத லகலகவை யாரும் மறக்க முடியாது.. கலகலப்பிரியாவின் உறவுகள் நகவிதம்... வதம்...ம்ம்ம்


ஜெசீலாவின் முகப் புத்தக பண்ணை விவசாயம்.. புன்னகை..

மின்மினியின் பஸ்பயணம் பற்றிய இடுகை.. யூத்ஃபுல்லில் வந்ததற்கு அவங்க தெரிவிக்கும் வாழ்த்து நல்லா இருக்கு..

ராஜா சந்திரசேகர் 4 வரிகளில் கவிதைசொல்வதில் ரொம்ப அருமை.. அனுபவ சித்தனின் குறிப்புகள் ம்ம்ம்

ஹாய் அரும்பாவூரில் முரட்டு சிங்கம் பற்றிய விமர்சனம் புது முயற்சி

இன்னும் பத்ரி., ஆசிஃப் மீரான்.,லீனா மணிமேகலை., தமிழச்சி., நினைவுகளுடன் நிகே., மலர் காந்தி., செந்தழல் ரவி., கிருபா நந்தினி., மலர்விழி., வசந்தமுல்லை ரவி., பின்னோக்கி.,பரிசல்காரன். வன்னி இன்ஃபோ.,சந்ரு., வினாய முருகன்., நர்சிம்., லாவண்யா., தருமி., ஸ்ரீதர்., பாலகுமார்., சக்தி கொடு எல்லாம் படிக்கிறேன்.. பகிர நேரமில்லை..
இன்னும் நிறைய படிக்கிறேன் என்னைச் செதுக்கிக்கொள்ள..
நன்றி .நன்றி. நன்றி..அன்பிற்குரிய அனைவருக்கும்...

Friday, May 28, 2010

கவிதை முகமும்., முக நூலும்., புதிய “ழ” வும்

முக நூலில் முதலில் அறிமுகம் ஆகி இருந்தால் வலைத்தளமே ஆரம்பித்து இருக்க மாட்டேன்.. அவ்வளவு உறவுகள் நண்பர்கள்..அங்கும் தமிழில்தான் எழுதுவது என கொடி பிடிப்பவர்கள் அதிகம்..வியூ நோட்ஸ்., ஃபோட்டோ டாகிங், விஷுவல் கிஃப்ட்ஸ்., வாழ்த்து அட்டைகள்., காலை., மாலை., இரவு வணக்கங்கள்..பிறந்த நாள் வாழ்த்துக்கள்., மட்டுமல்ல., பொது நல விழைவுகளும் உண்டு..,’ஈழத்து நிகழ்வுக்காய்., எதிர்ப்பைக்காட்ட தன்னுடைய புகைப்படங்கள் இருக்குமிடத்தை முழுமையாக கறுப்பாக்குதல்., விமான விபத்தில் உயிரிழந்தோரின் துக்கத்தில் பங்கெடுக்க புகைப்படங்களுக்குப் பதில் தீபம் வைத்தல் என தங்கையர்கள்., தோழியர்கள் .,நண்பர்கள்.,.........அது ஒரு வெர்ச்சுவல் சாட்டிஸ்ஃபாக்‌ஷன் அல்ல என நிரூபித்து விட்டார்கள்..

இரண்டு மணி நேரம் முதல் இருபது நாள் வரை லீவ் அப்ளை செய்துவிட்டுப் போகிறவர்களின் சுவற்றில் நூற்றெட்டு மிஸ் யூ மிஸ் யூவைப் பார்க்கலாம்

சென்றவர்கள் வந்த பின் வரும் பாசமலர் காட்சிகளும் அருமை..நாம் சொல்லாமல் சென்று விட்டால். வீட்டில் மணியடிப்பதும்., போஸ்டர் ஒட்டுவதும் அடாடா கண்கொள்ளாக் காட்சி..

ஆனால் அதிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்,, அனைத்துக்கும் பூட்டு உண்டு .. என சொல்பவர் நம் தோழர் செந்தில்..


முகநூலில் இருக்கும் கவிஞர்களை வெளிக்கொணர அமுதா தமிழ் ., பா கிருஷ்ணன்., மஞ்சுபாஷிணி., அறிவழகன் கைவல்யம்., செல்வ குமார்.,நந்தா கந்தசாமி., கவிதா முரளிதரன்..ஆகியோர் உருவாக்கியது கவிதை முகம் ..
இதுவரை நான்கு போட்டிகள் நடத்தப்பட்டுள்ளது இந்த வாரம் நதியலையில் ஆடும் நிலவு என்ற தலைப்பில் போட்டி் ...முடிவுகள் வர காத்து இருக்கிறோம்....

உமா சக்தியின் கவிதைகள் அப்பப்பா.. ரகம்.. மழை கவிதை அவர் எழுதினால் படிக்கும் நாம் நனைந்து போகிறோம்..

பூசணிக்காய் சாம்பார் சாப்பிட்டு இருப்பீங்க .. ஆனா புளிக்கூட்டு ..??
ராஜி சொல்றாங்க செஞ்சு சாப்பிட்டுப் பாருங்க..

உங்க வீட்டில் குட்டிப்பாப்பா இருக்காங்களா,.. அப்ப அமுதாவோட இந்தப் பாட்டெல்லாம் நீங்க அவங்க கூட சேர்ந்து பாடி ஆடலாம்..:))

மௌனத்தின் சொல் என்றும் முத்தங்கள் ஆசீர்வதிக்கப் பட்டவை என்றும் சந்திரா சொல்றதைக் கேளுங்க..

ரொம்ப முக்கியமான பொண்ணு இவங்க .. கவிதைகளைப் படித்து ஆனானப்பட்டவங்களே பிரமிச்சு இருக்காங்க... கருவிலேருந்தே கவிதை எழுத ஆரம்பிச்ச என் அன்பு மாயோ இவள்.. இந்த நதியானவளைப் பார்த்து எனக்கு எப்ப ஞானம் சித்திக்கும் என நான் மருண்டது உண்டு..

என் பிரியத்துக்குரிய பிரியாவின் இந்த வைஷாலி கவிதையைப் படிச்சால் உங்களை ஏக்கமும் துயரமும் பீடிக்கக் கூடும்...மருத்துவர் இவங்க..கவிதைகள் சொல்லும் பொருளின் அடர்த்தியும் அதிகம்..

தமயந்தியின் இந்த நிழல் வலையில் ஆமென் படித்தால் அவர் ரொம்ப தைரியமானவர் என சொல்லுவீர்கள் ..

என் நண்பர் கோகுல் சல்வாதி எம் சி ஏ வில் ப்ராஜக்ட் பண்ணதை சுவையா சொல்றார் கேளுங்க.. சல்வாதி கதை சொன்னார்னா. ரொம்ப சுவாரசியமா படிச்சிக்கிட்டே இருக்கலாம்.. அவரோட சங்கீதத்தை விட கதைகளை நான் விரும்புகிறேன்.. சல் சல் சல் வாதி சாரி..:)) ஆனா பாருங்க உங்க கதைகள் எல்லாமே சர்காஸ்டிக்,..அருமை...

மண்குதிரையின் மலைசாமியின் கைகள் அர்த்த ராத்திரியில் நான் யார் எது என தேடவைத்த ஒன்று..

மழையின் காதலர் என் தம்பி பா சரவணன் காடுகளை அழிக்காதீங்கன்னு சொல்றார்

மறக்கப்பட்ட எரிக்கப்பட்ட விஞ்ஞானி புருனோ பத்தி பேராசிரியை மோஹனா சொல்றாங்க..

நட்புக்குள்ளும் இருக்கும் சுயங்கள் கொண்ட முரண்கள் பத்திப் பேசுறாரு என் தம்பி பாலா என்ற பாலகணேசன்

ஒரு பெருங்கவிஞனாதலின் சாத்தியங்கள் பற்றிப் பேசுறார் ஸ்னேகிதன்.. பேசுற இடமும் சரிதான்..

இவங்க ஒரு குறிஞ்சி மலர் போல .. அவ்வளவு அற்புதமானவங்க .. என் அன்பின் சுந்தரா.. தனிக்குடித்த தாம்பத்தியத்தில் கர்ப்பிணி மனைவி கணவனின் பாசத்தையும் பரிவையும் பகிர்றாங்க ... அருமை சுந்தரா,,

சகோதரர் வேடியப்பனோட டிஸ்கவரி புக் பேலஸின் வலைத்தளம் இது.. புத்தகவிரும்பிகளுக்காக..

மிக அருமையா எழுதக்கூடிய சகோதரர் அறிவழகன் கைவல்யத்தோட தளம் இது.. எல்லாம் அருமை..

சகோதரர் பேராசிரியர் மணிவண்ணன் நடத்தும் “ழ” இதழுக்கான மற்றும் செம்மொழி மாநாடு ஒட்டிய கவிதைப் போட்டி இது ,, இந்தப் போட்டிக்கு puthiyazha@gmail.com என்ற மெயிலுக்கு உங்க கவிதைகளை அனுப்புங்க..

டிஸ்கி,,,1 :- சரி அரட்டைக்கு நேரமாச்சு ..... எத்தனை நோட்டிஃபிகேஷனோ.. எத்தனை வீடியோவோ., ஓவியமோ .., சங்கீதமோ ., தகவல்களோ வந்து சேர்ந்து இருக்குமோ.. ஞாயிற்றில் பார்க்கலாம் வரட்டா..:))

டிஸ்கி... 2 :- இதில் முக்கால்வாசி என் அன்புத்தங்கை அமுதாதமிழ் படிப்பது.. ஒரு நாள் முழுவதும் (நானும் பலது படிக்கிறேன்) எனக்காக லிங்க் எடுத்து அனுப்பிய தங்க(கை)க் கரங்களுக்கு நன்றி.. ,,,நன்றி சொல்லாதீங்கன்னு எத்தினிவாட்டி சொல்றதுன்னு வர்றா.. விடு ஜூட்

Thursday, May 27, 2010

நமக்கு தெரிஞ்ச அரசியல் அறிவியல்

டிகிரி முடிச்ச கையோட சும்மா இருக்க மாட்டேன்னு சொல்லி ஷார்ட் ஹாண்ட் ., டைப்ரைட்டிங்., ஹிந்தி பத்தாதுன்னு எம் ஏ பொலிடிக்கல் சைன்ஸ் படிச்சேன் கரஸ்ல.. ரெண்டு வருஷ கோர்ஸ்ல முதல் வருஷமே மணமாயிருச்சு.. மே மாசம் எக்ஸாமுக்கு முதல் நாள் சிறுவயல் பொன்னழகியம்மன் கோவில் திருவிழாவுக்காக கவிஞர் அரு நாகப்பன் நடத்தின கவியரங்கத்துல கலந்துகிட்டேன்,, அநேகமா அதுதான் கடைசி..
அப்ப வந்து எங்க மாமியார் வீட்டு சொந்தக்காரங்க எல்லாம் பார்த்தாங்க..
அதுக்கப்புறம்.. வீட்டுக்காரரோடயே இத்தனை வருஷம் பேசி (படுத்தி) இருக்கேனுங்க..ஹிஹிஹி

அப்புறம் மறுநாள் எக்ஸாம்ல வெஸ்டர்ன் பொலிடிகல் தாட் ., கம்பேரிடிவ் கவர்ன்மெண்ட்னு ஒரே ட்ரை சப்ஜெக்ட் ..சாக்ரடீஸ் ., ப்ளேட்டோ., அரிஸ்டாட்டில்னு.. மார்க்ஸிசமும் லெனினிஸமும் மதுரை காமராஜ் பல்கலைக் கழக நோட்ஸைவிட மற்ற புத்தகங்கள்ல தான் நல்லா தெரிஞ்சுக்க முடியும்.. இம்புட்டுத்தான் நமக்கு தெரிஞ்ச அரசியல்..

இந்த RDX அன்னியன் இன்று ஒரு தகவல்னு சாக்ரடீஸ் பற்றி சொல்றதைக் கேளுங்க..

அரசின் பயங்கர வாதத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் அற்புதங்களுக்காகக் காத்து இருக்கும் ஜெரியின் கவிதை இது..

தேவாவின் இந்த மேதினக் கவிதை அருமை..

என்னடா இது நாய்ப் பொழப்புன்னு அலுத்துக்காம இந்த சாமக் கோடங்கி சொல்றாப்புல நம்ம சுத்தி இருக்குற விஷயங்களில் எப்பிடி வித்யாசம்கொண்டு வர்றதுன்னு சொல்றதை ட்ரை பண்ணுங்க..

ஜெய்லானி எழுதி இருக்காரேன்னு நீலத்திரைப் பிரச்சனைன்னு ஓடிப் போய் பார்த்தா அட அது ஒண்ணுமில்லங்க ஒண்ணு மேல ஒண்ணு எழுதிட்டதுனால காணாமப் போன ஃபைலைக் கண்டு பிடிக்கிறதுதானாம்....ப்ச்.

ரயில் பயணம் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது.. மேலும் கூரியர் சர்வீஸ் பற்றியும் சுவாரசியமா சொல்றார் நம்ம நிஜாமுத்தீன்..

எழுத்தாளர் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புப் பெற்ற வீடு திரும்பல் மோஹன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார்..

டயட் ப்ரோக்ராம் பற்றியும்.,ஹேர் லாஸ் ட்ரீட்மெண்ட் பற்றியும்., மல்டி லெவல் மார்கெட்ங்க் பற்றியும் சுவையா சொல்றார் என் அன்பு நண்பர் கோபிநாத் முத்துசாமி

சாந்தாவும் இன்ன பிற காதல் கதைகளும் எழுதினவரு அஞ்சரைக்குள்ள வண்டி ஜட்ஜ்மெண்ட் டேன்னு சொல்றாரு...

படிக்கிற புத்தகத்தை அடையாளத்துக்கு மடக்கி வைப்பாங்க சிலர் அது என் அன்புத்தம்பியான மனவிழியானுக்கு தன் காதலியோடதெத்துப் பல் போல மினுக்குதாம்பா .. இருங்க தம்பி கவனிக்கலாம் அப்பா அம்மா கிட்ட சொல்லி..

திருமண நாளையே மறந்திடக் கூடிய கணவர்கள் (அக்கா... மாமாவான்னு கேக்கப் படாது புரிஞ்சுக்கணும் தம்பிஸ்)..இருக்கக் கூடிய (ஹ்ம்ம்ம்) காலத்துல தன் மனைவியைப் பற்றி ரொம்ப உயர்வா தன் திருமண நாளில் பகிர்ந்துக்குறார் சுரேகா...

சௌந்தரோட இந்தக் குறும்பு விலங்குகளைப் பார்த்து ரசிங்கப்பா..

ஓடுங்க ஓடுங்கன்னு ஜெட்லி சொல்றாரேன்னு ஓடினா ருத்ரமாப்பா..
மனுஷன் கிண்டலுக்கே பொறந்தவரு.. தமிழ்ல ருத்ரனுக்கு அப்புறம் என்ன என்ன படம் வரும்னு சும்மா விட்டுக் கழட்டுறாரு..

அகல் விளக்கு கொடுத்த பல்பும் வாங்கிய பல்பும் அழகு ..இதை அவரு மொக்கைன்னு சொல்றாருப்பா..

எங்கள் அன்பு நண்பர் நட்புடன் ஜமாலின் குழந்தை ஹாஜரின் படங்கள் பாருங்கள் ..

எடையைக் குறைங்கப்பான்னு சொன்ன மருத்துவர் இவரு.. இப்போ எழுதுறாரா வேற எதிலயும்னு கேட்டுச் சொல்லுங்கப்பா.. ஒரே மாயமா இருக்கு ...

உணர்வ பூர்வமான எங்க பிரியமுடன் வசந்த் சொல்றாரு காக்காய பிடிக்க முடியாதுன்னு

ஆர் வி சரவணன் பாக்கியராஜ் படங்களை வச்சு ஒரு சிறுகதை ட்ரைண்ணி இருக்காரு ..ஏன் சார் ஞானப் பழத்தை விட்டுட்டீங்க,, அது சரி கல்யாணமானா ஆகவேண்டியதுதான்குறீங்களா

அன்புடன் அருணா எனக்கு மட்டும் ஏனிப்படின்னு கேக்குறாங்க அவங்களுக்கு ஒரு நியாயப் பூங்கொத்து...

மாதேவி சமையல் எக்ஸ்பர்ட்டா இருக்காங்க.. சொதின்னு சொல்றங்க் விதம்விதமா ... நான் ஸ்டூன்னு செய்வேன்.. இதையே

பாஸிவ் ஸ்மோக்கிங் என் சொல்லப் படும் தன் செயலின்றி புகைத்தல் அபாயம் பற்றி சொல்றாரு..டாக்டர் எம் கே முருகானந்தம்..

அருகம் புல்லோட மகிமை பத்தி சொல்றாங்க தோழி தன்னோட ஆன்மீகத்துல..

நர்ஸரி ரைம்ஸோட ஔவையாரை வச்சு பிரசன்னா போட்ட மொக்கையோட இன்னிக்கு ஜூட் ஆகிக்கிறேன் பா.. அய்ய அது நான் இல்லை எல்லாரும் பிரசன்னாவைப் பிடிங்கப்பூ..

Wednesday, May 26, 2010

லேடீஸ் ஸ்பெஷல் - பார்ட் 2

பெண்ணால் பெண்களுக்காக நடத்தப்படும் ஒரு சில இதழ்களில் லேடீஸ் ஸ்பெஷலும் ஒன்று.. அதில் ரொம்ப முக்கியம் அதன் ஆசிரியர் கிரிஜா ராகவன் விருப்பப்படி மாதம் ஒரு பெண்வலைப் பதிவரை அவரோட புதுப் படைப்போட அறிமுகப்படுத்தப் போறோம்.. எனவே கண்மணிகளே ...புதுப் பதிவுகளோட அச்சுல உங்க எழுத்துக்களைப் பார்க்கப் போற கனவுகளோட ரெடியா இருங்க..முதல் அறிமுகம் யாருன்னு ஜூன் ஒண்ணாந்தேதி லேடீஸ் ஸ்பெஷல் புக் வாங்கித் தெரிஞ்சுக்குங்க... அதுவரைக்கும்..சஸ்பென்ஸ்..
என்னுடைய ஈ மெயில் முகவரியை கொடுக்கிறேன்..தொடர்பு கொள்ளுங்கள் அடுத்து யார் என்றும் பார்க்கலாம்.. என் அன்பிற்குரியவர்களே.. அனைவருக்கும்
பங்களிப்பு உண்டு..வாழ்த்துக்கள்..நல்ல படைப்புகளை அனுப்பி வெளிச்சத்துக்கு வந்து அனைவரும் வெற்றியடைய என் அன்பு....

லேடீஸ் ஸ்பெஷல்னு சொல்லிட்டு அதன் ஆசிரியரோட வலைத்தளத்தைப் பற்றி சொல்லாட்டா எப்பிடி..? விலகி இருங்கள் என்ற இவங்களோட கவிதையைப் படிச்சிட்டு நான் அசந்து போயிட்டேன்.. புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ள யாரும் இவங்க பேரை அறியாமல் இருக்க முடியாது...
மங்கையர் மலர்...,குமுதம்., கல்கி., குங்குமம்., விகடன்ல இவங்க கதைகள் கட்டுரைகள் வந்து இருக்கு...படிச்சிட்டு நீங்களே சொல்வீங்க அருமைன்னு

ஒரு பதிவர் சந்திப்பை இவ்வளவு நேர்த்தியா பதிவு பண்ணவுங்க யாரு தெரியுமா நம்ம வலைச்சரம் ஆசிரியரின் வெற்றிக்குக் காரணமான (The woman behind the successive man) அவரோட மனைவிதான்..இன்னும் ரெண்டு பதிவும் வைச்சு இருக்காங்க..

தன்னுடைய வாழ்க்கையின் புரிதல்களில் இருந்து ரொம்ப நேர்மையான பகிர்வான இதை பார்த்து நான் உமாவோட வாசகி நேசகியானேன்.. என்ன அருமை... உணர வைப்பதில் உமா கெட்டிக்காரி.. இந்த பதிவுதான் இவங்களோடது,..

என் அன்புத்தங்கச்சி மஞ்சு இருக்காளே உறவுகள் கண்ணாடியைப் போலன்னு க-விதை சொல்றா..அடுத்த தாக்குதலுக்குத் தயாரா வச்சுக்குங்க அக்கா என்கிறாள்.. சரிதான்.. எப்போதும் முகபடாம் இருக்கட்டும்...முகமாவது நொருங்கி விடாமலிருக்க..என நினைத்துக் கொள்கிறேன் நான்..

தமிழ்நதி ராஜேந்திரனோட வாடகை வீடு பத்தி படிச்சேன்.. அடிச்சுப் போட்டது போல் இருந்தது அதில் வரைந்து காட்டப்பட்ட காழ்ப்பும் வருத்தமும்..
ம்ம்ம் என்ன செய்ய..

பொஸஸிவா இருக்காதீங்கன்னு இயற்கை ராஜி சொல்றாங்க .. கேட்டுப்போம்.. இதுதானே எல்லா மனக் குடைச்சலுக்கும் காரணம்..

ஆணென்ன,, பெண்ணென்ன நீயென்ன., நானென்ன எல்லாம் ஓரினம்தான்னு சொல்றாங்க தீபா.. ஆமாண்டா கரெக்ட்.. அதானே..

குகைப்பாதைன்னா நீங்க மலைப்பக்கம்தானே பார்த்து இருப்பீங்க.. இங்கே பாருங்க ஜெஸ்வந்தி ரீவுட் மரங்களின் கீழ் அமைக்கப்பட்ட குகைப்பாதையைக் காட்டுறாங்க .. அரிய முயற்சி ஜெஸி..

இந்த மைதா அல்வாவை பிஃப்ரவரி மாசம் போட்டுட்டுப் போன சுஸ்ரி எங்கேன்னு தேடுங்கப்பா..

குட்டீஸோட குட் ஹாபிட்ஸுக்கு அமித்து அம்மா போட்டு இருக்கும் இந்தப் பதிவு பாருங்க

இது பெண்கள் ஸ்பெஷல் ஆனால் ஆண்களும் கண்டிப்பாகப் படிக்கணும்னு என்னா கிண்டல் கொம்மாளம் இந்த அன்புடன் கிருத்திகாவுக்கு

அவனை அறியும் தருணமாமே.. ப்ரேமா மகளே ரொம்ப அக்குறும்புடா உனக்கு

ஸாதிகாவோட கல்யாண சீர் அழகுன்னு சொல்றதா அல்லது இந்த சீர்ப் பலகாரங்கள் அழகுன்னு சொல்றதாப்பா..

இவ்வளவு சொல்லிட்டு சோலைச்சி ஆச்சியோட் செட்டிநாட்டு உணவு வகைகளை ஒரு பிடி பிடிக்காட்டா எப்ப்ப்ப்பூடீஈஈ

டிஸ்கி:- சரி தங்கமணிகளே.. உங்களை எல்லாம் படிச்சதில மனசும் கண்ணும் ரொம்பிப் போச்சு.. வயிற்றுக்கும் சிறிது ஈய வேண்டும்.. சுவர் இருந்தால்தானே
ப்லாக்கில் கிறுக்க முடியும்.. சோ தங்கைஸ்.. இஃப் அக்காஸ் தேர் எல்லாருக்கும் ஸீ யூ சூன்..

என் ஈ மெயில் ஐ.டி. thenulakshman@gmail.com/ உங்க கருத்துக்கள் ..பகிர்வுகள் ., படைப்புக்கள் எல்லாம் வரவேற்கப்படுகின்றன..
அன்பின் அக்கா/தங்கை தேன்..:)

Tuesday, May 25, 2010

நமக்கு நாமே உந்துசக்தியும் உற்சாகமும்

கல்லூரிப் படிப்புங்குறதே கல்யாணத்துக்கு ஒரு டிகிரி தேவைங்கிற மனப்பான்மையோட படிக்க வைக்கப் பட்டது ..அப்பா அம்மாவை சொல்ல முடியாது சார்ந்த சமூகம் அப்படி .. ஆனா இப்போ எல்லாரும் வேலைக்குப் போறாங்க ..சுயமா நிக்கிறாங்க தன்னம்பிக்கையோட.. என் பெரிய பையன் போன வருஷம் வரை நெட்ல ஜி மெயில் பார்க்க உக்கார்ந்தா கூட ,”வெட்டி ஆஃபீசர் அப்புறம் பாருங்க.. வீட்டுல வெட்டியா மோட்டுவளையைப் பார்த்துகிட்டு இருக்குற நேரத்துலன்னு.”. சொல்வான். ஆனா இந்த வருஷம் நிலைமை கொஞ்சம் பெட்டரா இருக்கு..கல்லூரிக் காலத்துல ஹாஸ்டலில் இருந்ததால்.. எல்லா கல்லூரிகளுக்கும் கவிதைப் போட்டிகளுக்குப் போய் இருக்கேன்,,ஆன் த ஸ்பாட் கவிதைகள்.. யாதவா., மதுரை மெடிக்கல் காலேஜ்., தியாகராஜா எஞ்சினியரிங்.,மேலூர் அக்ரி காலேஜ் ., தியாசபிகல் காலேஜ்.. பாளையங்கோட்டை செயிண்ட் ஸேவியர்ஸ்னு எல்லாவற்றிலும் முதல் இரண்டு பரிசுகள்தான் .. கோப்பையோ சர்டிபிகேட்களோ..உண்டு நிச்சயம்,..கவியரங்கம். பட்டிமன்றம்., எல்லாம்... திருமணம் நிச்சயித்த ஒரு தருணத்தில் எழுத்து நின்று போனது..எப்படி உயிர்த்தது என்று தெரியாமல் சென்ற வருடம் என் பிறந்த நாளின் போது அதுவும் உயிர்த்தது.. என் தமிழம்மாதான் மறைமுக உந்து சக்தி,,60 வயதிலும் அவர்கள் வலையில் ஈடுபாட்டோடு தானறிந்தவற்றைப் பகிரும்போது நாமும் செய்யலாம் என்ற எண்ணம்.. இளமை விகடன்., என் முயற்சிகளுக்கு தூண்டுகோலாய் இருக்கிறது ,,, என் நன்றியும் வாழ்த்துக்களும்..இன்றும் இளமை விகடனில் ஜன்னல்களும் கதவுகளும் என்ற கவிதை ஒன்று வந்துள்ளது,,

மனைவி பற்றி தினேஷ்பாபு சொல்றது ரொம்ப டச்சிங்பா..

கல்யாணம் ஆகலைனாலோ., பொண்டாட்டி ஊருக்குப் போனாலோ நம்ம அள்ளிவிட்டான் மாதிரி சவ்சவ் பாத்தான் தினம் சாப்பிடணும்..

புத்தகப் பரிசு கொடுக்கும் என் டைரி ரவிப்ரகாஷ் மனைவி உடல் நலமில்லாததால சாரி சாரின்னு வருந்தி இருக்காரே..

சேட்டைக்காரனோட அவனும் அவளும் வித்யாசமான படைப்பு..

மனைவி ஊருக்குப் போயிட்டாங்க போல இந்த கட்டபொம்மனோட காக்டெயிலைப் பாருங்க

மன அழுத்தத்தால திவ்யா புகைக்க ஆரம்பிக்கி்றாங்கன்னு சொல்றாரு இந்த கார்பரேட் கதையில் ஜெகனாதன்..

ஆனாலும் மிஸ்டர் கும்மாச்சி நானே கட்சி., நானே எல்லாம்னு நீங்க எங்க தலைவியை இப்படி கலாய்க்கக் கூடாது..

கோவை சதீஷுக்கு பாட்டிகிட்ட கிடைச்ச பட்டப் பேரைப் பாருங்க.

சொன்னா உங்களுக்கு ஆச்சர்யமா இருக்கும் உன் சிரிப்பினில்னு ஒரு காதல் கதை எழுதி இருக்காரு இந்த புலவரு..!!

சமையல்னா பெண்கள் மட்டுமல்ல இந்த பித்தனும் சூப்பர்தான்.. இந்த ஆரஞ்சுப் பழத்தோல் குழம்பும் பச்சடியும் சாப்பிட்டுப் பாருங்க. அருமையா இருக்கு.. சாப்பிடுவீங்க..சாப்பிடுவீங்க. சாப்பிட்டுக்கிட்டே இருப்பீங்க..!!!

இந்த NRI யின் ஊர் குடும்பம் சார்ந்த இதயம் என்னை நடுங்கச் செய்த
ஒன்று.. சீக்கிரம் ஊர்லேருந்து ஒரு இடுகை போடுங்க நவாஸ்..

என் அன்பு நண்பர் ஜெயராஜின் மதுரை பற்றிய இடுகை இது..
அதுக்குள்ள இவரும் இளமை விகடன் கவிஞராகிட்டாரு... வாழ்த்துக்கள்..ராஜ்

சாத்தூர் மாக்கானின் இந்த சொத்து பற்றிய கவிதை அம்மா என்றால் அன்புன்னு சொல்லுதுங்க.. உணர்வு பூர்வம்...

மதுரை சரவணனின் இந்த பிரிவின் வலி எனக்கும் வலிக்கச் செய்த ஒன்று

ஆனால் வேல்கண்ணனின் கருவறை அற்றவளின் விசும்பலோசை என்னைத் துடிக்கச் செய்த ஒன்று..

ஒருத்தியின் கதைன்னு இவர் பிரியமாய் சொல்றது நம்ம காவிரியின் கதைங்க

கல்யாண ஃபோட்டோக்களில் ஆல்பம் டிசைன் செய்ய வேலன் சொல்லித் தருகிறார்..

டிஸ்கி:- டிஸ்கில வேற கதையடிக்கப் போறீங்களான்னு யாரும் கதற வேண்டாம்.. பாவம் பொழைச்சுப் போகட்டும்...நாளைய இடுகைகளைப் பார்க்க போவோம்.. OMG ...!!! நாளைக்குமானா ஆமாம்பா ஆமாம்..இன்னும் நாலு போடணுமே....:-)

Sunday, May 23, 2010

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்..!!! என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்..!!!

என்னுடைய பின்னூட்டங்கள்ல நான் அடிக்கடி வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்னு போடுவேன்..ஸ்ரீராம் கேட்டார் என்ன இது தொழிற்சங்க கோஷம்னு.. நிஜமாவே இதை சொல்ல விரும்புறேன் மக்காஸ்.. கேபிள்ஜி .,பரிசல் புத்தக வெளியீட்டுல தமிழ்பட டைரக்டர் அமுதனும்., அஜயனும் வலைப்பதிவர்களுக்கு இருக்கக்கூடிய எதையும் நிறுவக்கூடிய.. பலமாகவோ ..பலவீனமாகவோ ஆக்கக்கூடிய சக்திகளை எடுத்துச் சொன்னாங்க.. அதில் ஒன்று வலைப் பதிவர்கள் மனசு வைத்தால் ஒரு படத்தை ஓடவோ ஓடாமலோ செய்ய முடியும்..என்பது. அது போல் அஜயன் நீங்களெல்லாம் ஒன்று கூடி செயல் பட்டால் அந்த சக்தி பத்ரிக்கைகளுக்குக் கூடக் கிடையாதுனு.. அதை என் மனசில் வைத்துத்தான் என் வலைப்பதிவில் இடுகைகளின் முடிவில் இந்த வார்த்தைகளை எழுதுறேன்.. சசி எழுதுவார் அக்கா உங்கள் புகழ் மென்மேலும் பெருகட்டும் என்று.. வார்த்தைகளுக்கு சக்தி உண்டுன்னு நம்புறேன் நான்.. உள்ளன்போடும் நம்பிக்கையோடும் சொல்லப்பட்டால்.. எல்லா தேவதைகளும் ததாஸ்து என்றும் சொல்வதாக உணர்கிறேன்.. சொல்லும் போது எனக்கு எழுத ஒரு ஊக்கம் பிறக்குது .. உந்து சக்தியா இருக்குது.. நல்லதே நடக்கட்டும்.

நீங்களும் ஹீரோதான்னு சொல்றாரு அண்ணாமலையான்..

கணனி சம்பந்தப்பட்ட அனைத்து சந்தேகங்களுக்கும் சூர்யக்கண்ணன் விடை தருகிறார்..

கடல் புறாவின் எதிர்வினை (அ) சுய புலம்பல் வலிக்கிறது..

ஜில்தண்ணி எழுதிய ரெண்டு காதல் கவிதைகளி்ல் ஒன்று இது

தியாவின் பேனாவில் இந்த சிங்காரச்சென்னை எப்படி இருக்குன்னு சொல்றார்

அமெரிக்காவில் அநாதைப் பையைப் பார்த்தால் என்ன பண்ணனும்னு சொல்றாரு நசரேயன்,, நசர்,, இந்தியாவிலும் இப்படித்தான்..

கூகுளாண்டவர் ப்ளாகர்ஸ்க்குக் கொடுத்த அதிர்ச்சின்னு சுரேஷ் சொல்றாரேன்னு ஓடிப் போயிப் பார்த்தா இன்பமான அதிர்ச்சிதான்..

எண்ணி நாலே வரில கவிதை சொல்லி அசத்துறவரு இவரு.. பிரமாதம் கவிதன் ...

பாலாவோட காதல் தோப்பின் இந்த மடி கவிதையைப் படிங்க அருமை..
இவர் பாண்டிச்சேரில இருக்கார்.. நிறைய புத்தகங்கள் வெளியிட்டு பரிசுகளும் விருதுகளும் வாங்கி இருக்கார்..பொறியியலாளர்..அரசுப் பயணமாக கலைக் குழுவோடு சிங்கை எல்லாம் சென்று வந்தவர்..

வல்லினம் மெல்லினம் புல்லினம்னு பேசுறாங்க ஜோக்கிரியா கோபி லாரன்ஸ்.

பிரிவுகள்னு சொல்லிக் காணாமப் போயிட்டார் ஒருத்தர் ..ஒருமாசமாச்சு ஜுலைக்காத்தடிக்குது .. கண்டு பிடிங்கப்பா அவரை..

வெள்ளிநிலாவில் ஆன்லைனில் பதிவர்களின் இடுகை இது ஷர்புதீனின் அருமையான முயற்சி..

காரணம் தெரியாமல் நகம் பிடுங்கபட்டு சிறையில் சித்ரவதைப்பட்டு மடிய நேரிட்டாலும்.. அடுத்த பிறவியிலும் அதே அம்மாவின் மகனாய்ப் பிறக்கும் ஆசை விடிவெள்ளிக்கு

வேலை வாய்ப்பில் ஒதுக்கீடு முறையினால் என்ன பயன்னு கேக்குறாரு
நெற்குப்பைத்தும்பி

சிங்கை அ. ஞானசேகரன் முனைவர் இளங்கோவின் சிங்கை வருகை பற்றியும் சிலம்பு பற்றிய கலந்துரையாடல் குறித்தும் சொல்றார்..

அறிவு ஜீவி தோழியா., காதலியான்னு குழம்புறது பாருங்க..

டிஸ்கி:-நன்றி நன்றி மக்காஸ்..இந்த வாரமும் நாமதேன்,, ஹிஹிஹி என்னா ஒரு வில்ல்லதனம்குறீங்களா.. என்ஸாய் மக்காஸ்...!!!

Friday, May 21, 2010

எலக்கனம் படிக்கவில்லை தலக்கனமும் எனக்கு இல்லை

டான்ஸ் பண்ணத்தெரியாத லேடி ஸ்ட்ரீட் க்ராஸா இருக்குன்னாளாம்.. அது யார்னு தெரிஞ்சுக்கணுமா..இந்த வாரம் வலைச்சர ஆசிரியர்தான்... சீனா சார் வர முன்னாடி லிங்க் கிடைச்சவுடனே அவசரக்குடுக்கையா முதல் இடுகை போட்டது.. அப்புறம்..டாஷ் போர்டுல அது இல்லை இது இல்லைனு சொன்னது எல்லாம்.. ம்ம்ம்ம் பெரிய காமெடி மக்காஸ்.. கற்றுக் கொள்வோம்..
நன்றி சீனா சாருக்கு..


உள்ளத்தில் பெரிய உள்ளம் இவரோடது மட்டுமில்ல.. இவரோட நண்பர்களோடதும்தான்.. நல்ல மனுஷன் இவர்... என் சரவணன்..


ப்ளஸ்டூ ரிசல்ட் வந்து இருக்கும் நேரம் எனவே செல்வாவோட வார்த்தையைக் கேளுங்க


வண்ணத்துப் பூச்சியாரின் சில்ரன் ஆஃப் ஹெவனின் இயக்குனர் மஜித்மஜிதி பற்றியது இது..


ரிஷபனின் இந்த இடுகை நேசிக்கக் கற்றுக் கொள்வதும் இறுதிவரை நேசிப்பதுமே அழகு என்கிறது


அறுப்பது நானாக இருந்தாலும் அறுக்கப்படுவது நானாக இருக்க வேண்டும் என்ற கிளியனூர் இஸ்மத்தின் இடுகை எனக்குப் பிடிக்கும் ..


பண்பாட்டின் வேர் வழியே கிளைக்கும் மொழி சொல்றார் இந்த புத்தக வெளியீட்டாளர்..


பாலாசியின் பட்டணத்தி எனக்குப் பிடித்த ஒன்று...வெறும் பேச்சு கூட மனதுக்கு ஆறுதல் தருகிறது..


கலைஞருக்கு மனம் திறந்த மடல் கொடுத்த இந்த அதிரடிக்காரரின் இடுகை அருமை..


LK யின் அன்னையைப் பற்றிய இந்த இடுகை எனக்கு மிகவும் பிடிக்கும்..

எங்கள் ப்லாக்கின் ஜே .கே. பற்றிய இந்த இடுகை அருமை..

ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தியின் ஒரு பெண்ணுக்கு சிறகு முளைத்த கதை இது


ராஜின் இந்த இடுகை நீதி நேர்மை நிலை நாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தி..


சிறுகதை உலகத்துல ரிஷபன் ராஜான்னா.. குமார் மந்திரின்னு சொல்லலாம்..


ரிஷான் ஷெரிஃபின் இந்த இடுகை பாஸ்வேர்ட் செக்யூரிட்டிக்கானது

ப்ளஸ்டூ ரிசல்ட் வந்த நேரம் செல்வாவோட வார்த்தையைக் கேளுங்க..

இந்த அன்புடன் நான் கூப்பிடும் செல்லமே எனக்கு மிகப் பிடித்தது..

பிரபல பதிவர்களைப் பற்றி சொல்றாரு அன்புடன் மணிகண்டன்..

அம்மாவும் விடைபெறுதலும்னு வருத்தப் படுறார் செந்தில்நாதன் .

ஒண்ணுமில்லை சும்மான்னு போலி வைத்தியருங்களைக் கலாய்க்க இவரால்தான் முடியும்..

நீண்ட ஆயுள் கொடுக்கும் சங்கவியின் நெல்லிக்கனி அருமை

கனவுப்பட்டறையின் இது கடிதமல்ல.. தொடர் கவிதையும் தொடர் கதை..

வனவாசம் இருக்கும் இந்த 59வது சிறகு சிவாஜியின் க்ரீடம்

சுயம் தேடும் பறவையின் இலக்கணக் கனவு மிகவும் அருமை..

டிஸ்கி:-சரி மக்காஸ்.. இலக்கணம்னவுடனே ஓட வேணாம்.. நல்ல இண்டரஸ்டிங் சப்ஜெக்ட் பா.. அட சொன்னா கேளுங்க..:))

Thursday, May 20, 2010

ஓ நண்பனே.. நண்பனே..

நண்பர்கள்னா நல்லா கலாய்க்கலாம்.. ஸோ கலாய் ..கலாய்.. கலக்கலாய்..!!



தோழியா..காதலியான்னு தெரியல.. யாருப்பா ஊருக்குப் போகும்போது இவரோட இதயத்தைத் தூக்கிக் கிட்டுப் போனது..காணமப் போயிருச்சாம்
தேடிக்கிட்டு இருக்கார் பாருங்க..



இவரு புள்ளங்களைப் பள்ளிக்கோடம் கொண்டு விடப் போறாருன்னு இவங்க மனைவி நினைச்சுக்கிட்டு இருக்காங்க அப்பாவித் தங்க மணி..



பதின்ம வயதும் பப்பாளியும்னா எனக்கு இவர் நினைப்பு வரும்..



பொண்டாட்டி மீன் குழம்பு வச்சா தேன் குழம்புங்கிறாரு சரி.. ஆனா இட்டிலியைப் பத்தி என்ன சொல்றாரு மனுஷன்னு படிச்சிட்டு வெக்கப்படுறாங்க அவரு மனைவி..



நிஜமா அடுத்த இந்தியா ட்ரிப்புல இவரைப் பார்த்தா நானும் வினாயக மு்ருகனும் இவரை கவிதைகளின் முதலாளின்னு கூப்பிடலாம்னு இருக்கோம்..

இவர் ஒரு ஓவியர்.. ஆனா பாருங்க கோவையில இருக்குற இண்டு இடுக்கு விடாம தேடித்தேடி வாங்கி சாப்பிட்டு இருக்கார்பா..

நல்ல குசும்புய்யா இது ..பதிவுலகிலேருந்து விடை பெறுகிறேன்னு இனி யாராச்சும் வாயைத் திறப்பீங்க...:))

எத்தனையோ ஊர் சுத்தி இருக்கார் இந்த அமீரகத்துக்காரர் ஆனா எனக்கு இந்த மசாய் மாறாதான் மறக்க முடியாது..

வேலைக்குப் போறவங்க எல்லாம் இந்தப் பையன்கிட்ட ஆலோசனை கேட்டுப் போங்கப்பா வேலை நிச்சயம்.. அரபி தெரியுமான்னா எதிரே வந்தா தெரியும்னு சொன்ன ஆளு...

தமிழின் தொன்மையே தமிழோட பலவீனம்னு
சொன்னாராம் பெரியார்தாசன் அப்பிடீங்கிறார் செந்தில்..

வாமு கோமு எல்லாம் எழுதி இருப்பார் .. ஆனால் எனக்கு தோழர் வரதராசன் பற்றிய இவர் இடுகைபிடிக்கும் ..

வேண்டாத சட்டை கை பட்டால் குற்றம் .. கால் பட்டால் குற்றம்னு சொல்றாரு நம்ம பட்டியன்..

உயிரைப் பற்றியெறியும் முத்தம் கொடுக்கும் காதலி இவருக்கு,,, மனைவிக்கு தெரியுமா தெரியல.. இந்த மிருதுளா பற்றியும்...

ஆண்சிங்கம் எல்லாம் பாவம்பான்னு என்னை நினைக்க வச்சவரு இவரு..:))

சினிமா., ஹாலிவுட் ஸ்டுடியோ., வியாபாரம் வினியோகம் எல்லாம் அத்துப் படி இந்த அம்மையப்பனுக்கு.. ஆனா கடோசீல போடுற மேட்டரெல்லாம் நமக்கில்ல தங்கச்சி.. கிளம்பிருவோம்..எஸ்கேப்பு..

டிஸ்கி..1 .:- ரெண்டு நாளா பவர்கட்.. இப்போதான் வந்தது.. மழை வேற..
ஸோ மக்காஸ் இந்த இடுகை லேட் ஆகிருச்சு .. வழக்கம் போல
குத்தம் குறை பார்க்காம.. ஜாலியா எடுத்துக்குங்க தோழாஸ்..

டிஸ்கி.2. :- மே தினத்தில் நடந்த நம் மக்களோட துயரத்தில பங்கு எடுத்துக்கறதோட என் அன்பு ஆதர்ச அம்மா (என் மகனின் வகுப்புத் தோழன் சுஜயின் (சுபாவின் மகன்) பெரியம்மா ) அனுராதா ரமணன்
மறைவுக்கும் வருத்தமும் அஞ்சலியும் செலுத்திக்கிறேன் பா..

Wednesday, May 19, 2010

பெண்களுக்கு நூறு சதம் இங்கே .--.லேடீஸ் ஸ்பெஷல்

வெறும் முப்பத்தி மூணு இல்லீங்கம்மா.. நூறு நெசம்மாவே
வலைச்சரத்துலதான்.. எந்த பில்லும் பாஸ் பண்ண வேண்டாம்
எல்லா இடமும் நம்மதான்.. தூள் கிளப்பிறலாம், சகோதரிகளே..!


உங்களுக்கு எல்லாம் பிறந்தநாள் கேக்குன்னா என்ன ஞாபகம்
வரும்.. எனக்கு இந்த வெட்டிப்பேச்சு பிறந்த நாள் கேக்காகி
துன்பத்திலும் எல்லாரையும் சிரிக்க வைத்த கதைதான்
ஞாபகம் வரும்..


முதன் முதலா வெளியூருக்கு படிக்கப் போற பெண்களுக்கு
என் அன்பு தங்கை மைதிலியின் அறிவுரை இது...


நண்பர்கள் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா நீங்க என் அன்புத்
தங்கை ஆனந்தியோட இந்தப் பதிவைப் படிக்கணும்..

முதுகிலே சிறகு முளைத்த இந்த காகித ஓடக்காரியின்
கவிதை எனக்குப் பிடித்த ஒன்று..

தண்ணீர் இடுகை எல்லாம் போட்டு ஃபேமஸானாலும்
எனக்குப் பிடிச்சது ஹுசைனோட அம்மா ஹுசைனம்மா
ப்லாக்கர் ஆனதுதான்..

வரதட்சணை வாங்காதவங்க பற்றி இந்தப் பதிவுல
சொல்லி இருக்காங்க முத்துலெட்சுமி..

ரோஹிணி சிவாவின் புற்றுநோய் பற்றிய இந்த இடுகையை
அனைவரும் படிங்கப்பா..

வாழ்த்துவதற்கென்றே சந்தன முல்லை வைத்திருக்கும்
இந்த ப்லாக்கும் இந்த இடு்கையும் எனக்குப் பிடித்தது..

அமைதிச்சாரலின் பாறையில் இரண்டு மண்டபமும்
அருமை..

அம்பிகாவின் இந்த இடுகை அரசியல்வாதிகளின்
லட்சணத்தைக் கூறுகிறது..

ராமலெட்சுமியின் எவ்வளவோ இடுகைகளில் எனக்குப்
பிடித்தது இது..

இந்த அந்தமான் கதம்பம் எனக்குப் பிடிக்கும்.இப்போ
லீவுல இருக்காங்க.

வெளிநாடு போறவங்க எல்லாம் அமீகோன்னு
ஏமாந்துடாதீங்கன்னு அன்போடு உங்களை
சொல்றாங்க ஃபாத்திமா ஜொஹ்ரா

பெண்ணாய்ப் பிறக்க மாதவம் செய்தவங்க
நம்ம கண்மணிதான்..

சைனா கிராஸ் ., கடல் பாசி ., அகர் அகர்ங்கிற
இதை கோடைக்காக சமைச்சுத் தராங்க ஜலீலா..

சரக்கு நாங்களும் அடிப்போமில்லன்னு கண்ணகி
சொன்னா உங்களுக்கு அதிர்ச்சியா இருக்காதா..

ப்ளாஸ்டிக் உபயோகத்தைத் தடுக்கணும்னு திவ்யாஹரி
சொல்றதைக் கேளுங்க..

யமனுக்கே தர்மம் கொடுத்தவங்க இந்த பகோடாப்
பேப்பர்ல பொட்டலம் கட்டுறவங்க..

அம்மாவிற்காக முகநூல் கவிதை எழுதி இருக்காங்க
நம்ம அன்புடன் மலிக்கா

பெண்களைப் பொத்திவைச்ச மல்லிகை மொட்டா வளர்க்கக்
கூடாதுன்னு சொல்றாங்க புதுகைத்தென்றல்..

டிஸ்கி :- மொத்தத்தில இது ஒரு லேடீஸ் ஸ்பெஷலுங்கோ..!!!

Tuesday, May 18, 2010

செல்லக் கிளிகளாம் பள்ளியிலே...

மரத்தடி வகுப்புன்னா எனககு நெம்ப இஷ்டம்... ஏன்னு கேக்குறீங்களா.. அப்பதானே லாப்பையும் க்ளாஸ் ரூமையும் விட்டு வெளி உலகத்தைப் பார்க்கலாம்...தமிழ் வகுப்பு ., மாரல் சைன்ஸ் (இப்ப எல்லாம் பள்ளிகள்ள இந்த வகுப்பு இருக்கா என்ன..) எல்லாம் UT தான் அட UNDER TREE பா..அப்பத்தானே காக்கா., குருவி., இலை தழை மரம்., தூரத்துல போற ஹனிபா மிஸ். வயல்வெளி(கிறிஸ்டியன் காலேஜ் பா.. எனவே எங்களை மாதிரியே பயிர்களையும் பருவத்தே பயிர் செய்வாங்க. பெல்லடிக்கப் போற அய்யனார் (எங்க வகுப்புத்தோழியோட அப்பா.......அப்ப ..உஸ்..) அண்ணே எல்லாரையும் பார்க்கலாம்..

இந்த சுதந்திரத்தை இந்த ப்லாக்கும் கொடுக்குது.... நண்பர்கள் ., சகோதர சகோதரிகள்னு. ஒரே உறவுக் கூட்டம்.. மரத்தில் பறவைகள் அடைவது போல ஒரு சந்தோசம்.

அதுல என் முதல் தம்பியைப் பத்தி பெருமையாக் குறிப்பிடுறேன் இவருடைய கவிதைகள் பிரசித்தம் மேலும் இரண்டு உருப்படியான வலைத்தளங்களும் வைத்து உள்ளார் ..அகசூல் தமிழ் டாக்டர் .,என்று ஆனால் இங்கு நான் அவருடையகவிதையை போடல ..வலைத்தளத்தில் என்முதல் அன்புத் தம்பி பெற்றெடுத்த கவிதை மத ஒற்றுமைக்கு ஏற்ற ஒரு நிகழ்வை போடுறேன்..

அடுத்து நண்பர் நேசனோடது நேசன் எவ்வளவோ கவிதைகள் எழுதி இருந்தாலும் எனக்குப் பிடித்த கவிதையல்லா கவிதை...அவர் பதிவு இது..
காலேஜு படிக்கிறதே ஒரு டிகிரி வாங்கி கண்ணாலம் கட்டிக்கிடத்தான் ,, ஆனா இந்தத் தம்பி பொண்ணு பார்க்கறப்போ பண்ணிய ரகசியக் கூத்துத்தான் கவிதையே தெரியுமா..

இன்னொரு தம்பி விருது கொடுக்கப் பிறந்த வள்ளல் ஒருத்தர் ஒரு விருது கொடுக்கலாம் ரெண்டு விருது கொடுக்கலாம் ஆனால் மூன்று விருது கொடுத்த வள்ளல் காமன்மேன் இவர். ரமேஷின் எத்தனையோ கதைகள் கட்டுரைகள் இருந்தாலும் என்னைக் கவர்ந்தது இது

கண்ணைக் கட்டிக் காதல் காட்டில் விட்டும் தப்பிப் பிழைத்த பெண்ணின் கதைஇது..

என் தோழி ஹேமாவின் அதிர வைத்த கவிதை இது,.. மாற்றங்கள்..
தம்பி பிரபுவின் இந்த இடுகை படிங்க சிரிச்சிக்கிட்டே இருப்பீங்க ..

என் அன்பிற்குரிய முதல் தங்கை மேனகாவின் அனைத்து இடுகைகளும் எனக்குப்பிடிக்கும்

சசிகுமார் என்றாலே சந்தோஷந்தான் வந்தேமாதரம் பார்த்துதான் நாங்க
கையெழுத்தது போடவே கத்துக்கிட்டமாக்கும்.. இந்தியாவோட பழங்காலக் காசு எல்லாம் பாருங்கப்பு இவரோட டுடே லொள்ளுக்கு நான் பரம விசிறி

ஒ நண்பனே வெற்றியில் மட்டுமல்ல.. விபத்தில் கூட இவர் நண்பந்தான்.. இந்த நண்பனின் நண்பர்களும் பற்றிய இடுகை இது
.
டிஸ்கி:- என்னது இது பள்ளிகூடம் காலேஜுன்னுட்டு இப்படி கலந்து கட்டி இருக்கேன்னு பார்க்குறீங்களா.. ஏங்க அக்கா தம்பிங்க., தங்கச்சிங்க நண்பர்கள் எல்லாம் ஒரே காலேஜு்ல படிக்கிறது இல்ல .. அது போலத்தான் இது... இது எப்பிடி இருக்கு..? போய் கமெண்டுப் போடுங்கண்ணா எஸ்ஸாகிறாம...

Monday, May 17, 2010

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

என் அம்மா அப்பவுக்கும் வலைச்சரத்தில் எழுத அழைத்து
வாய்ப்புக் கொடுத்த சீனா சார் அவர்களுக்கும் வணக்கங்க்ள்

மக்களே வலைச்சரத்தில் ஒரு வாரம் எழுதுறேன் பா..
அட இவங்க இம்சை இங்கேயுமான்னு மொனகுறது
கேக்குது.. இருந்தாலும் விதி வலியது..என்சாய் மக்காஸ்..!!

முதலில் என் ஆசிரியை சுசீலாம்மவுக்கு நன்றி..பின்
தங்கள் பின்னூட்டங்களால் என்னை வளர்த்த ராகவன்
நைஜீரியா., முனியப்பன் சார்., ஹேமா., விஜய்.,
நேசன்., அக்பர்., ஸ்டார்ஜன்., மேனகா., சித்ரா.,
LK.,குமார்., சசி.,ரமேஷ்., ராஜ்., ரிஷபன்., பட்டியன்
பிரபு..சீனா சார் அனைவருக்கும் நன்றி..இன்னும் நிறைய
பேர் இருக்கிங்க ..விட்டுப் போனவங்களை எல்லாம் நான்
உண்மையிலேயே விடல்லை..அக்கா நினைப்புல இருக்கீங்க..:))

இந்த ஒரு வாரம் வந்து எனக்கு கமெண்டுங்க மக்களே..

இப்பவே சொல்லிட்டேன்.. என்னோட டாஷ் போர்டுல
ஏதோ சரியில்லை.. எனவே சேப்பு கலர் நீலக் கலருன்னு
அக்கா வ்ர்ணமடிக்க முடியல..அந்த பாக்சே காணாமப்
போயிருச்சுப்பா,,:((அப்புறம் லிங்க் அனுப்புனா
வெறும் லிங்கா வ்ருது .. க்ளிக் பண்ண முடியல..
எனவே மகா ஜனங்களே வெறும் லிங்காத்தான் வரும்
எல்லார் பேரோடவும்...அக்கா பொறுப்பில்ல
டாஷ் போர்டுதான்..ஒகேயா.. கமான் ஸ்டார்ட் ம்யுஜிக்..
#$^%(&^%$#@

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்பது என் அருமை ஆசிரியை திரு எம் ஏ
சுசீலா அவர்களுக்குத்தான் பொருந்தும் பேராசிரியைப் பணியிலிருந்து ஒய்வு
பெற்ற பின்னும் இந்த வலைத்தளம் ஆரம்பித்து தமிழ்த்தொண்டாற்றி
வருகிறார்கள் வாழ்க அவர்கள் பணி தற்போது இடியட் என்னும் நாவலை
மொழியாக்கம் செய்து வருகிறார்கள் அவர்கள் படைப்பில் குற்றமும் தண்டனையும்
போல் இதுவும் வெற்றிபெற வாழ்த்துகிறேன்எங்கள் அம்மாவின் இடுகையில் எனக்கு இந்த
இடுகை பிடிக்கும். சுகந்தி டீச்சருக்கு வீர வணக்கம்

எழுத அழைத்த வலைச்சரத்தின் ஆசிரியர் சீனா சாருக்கு நன்றி இதில் அசை
போடுவதும் படித்ததில் பிடித்ததும் அருமை அங்கே சுடோக்குவும் இருப்பது
மிக சுவாரசியம்..அவரின் இடுகைகளைக் கூறுவதை விட அவர் மகளின் இந்த பரிசு
பெற்ற கதையைப் படிச்சுப் பாருங்க ஊமை நெஞ்சங்கள் பேசுவதை

என்னை அதிக அளவு எழுதத் தூண்டியதே இவரின் தொடர்ந்த
பின்னூட்டம்தான்..இவரால்தான் நான் இன்று இருக்கும் நிலையை
எய்தி இருக்கிறேன்..இவரின் இந்த jus ignore it என்ற இடுகை
எனக்கு மிகவும் பிடிக்கும்.

எனக்கு பிடித்த மருத்துவர் இவர் இவரின் இடுகைகளில் சிறந்தது இது..
ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் பற்றிய ஒரு முழுமையான ஆ்வணம்..

..
மேலும் கபீரன்பன் ., அபுல்கலாம் ஆசாத்., முனைவர் குணசீலன் பதிவுகளும் அருமை...

கபீரன்பனின் இரண்டு முகங்கள்..

அபுல் கலாம் ஆசாதின் கத்தி பற்றிய இந்த இடுகை

முனைவரின் குழந்தைகளூக்கான தமிழ்ப் பெயர்கள்

வெற்றி வேல் சாரின் இந்த இடுகை

டாக்டர் ருத்ரனின் இந்த இடுகை

காரெக்டர் எழுதுபவரின் பன்முகத்திறமையைப் பாருங்க

மேலும் ஜோதிஜியின் முழு வலைத்தளமே.. ஈழத்தமிழர்களுக்காக
அர்ப்பணிக்கப் பட்டிருக்கு.. இவரோட பெருமுயற்சி பாராட்டுக்குரியது..

இதை எல்லாம் படித்து நான் இவர்களின் தீவிர விசிறியானேன்..

டிஸ்கி:-

என்ன அக்கா ரொம்ப பணிவா எழுதி இருக்காங்களேனு
பார்க்குறீங்களா.. இவங்க எல்லாம் ஆசான்..ஸோ
பணிவு.. நாளைக்கு வச்சுக்கலாம் கச்சேரியை..:)

Sunday, May 16, 2010

அந்நி(யா)யன்

இடம்: மனநல மருத்துவர் டாக்டர்.ஊளம்பாறை உலகப்பன் கிளீனிக்!

நாற்காலியா கட்டிலா என்று பார்த்தால் புரிபடாத ஒரு வஸ்துவின் மீது சேட்டைக்காரன் உட்கார்ந்து/படுத்துக் கொண்டிருக்க, பக்கத்தில் ஊதினால் பறப்பாரா பறக்க மாட்டாரா என்று உறுதியாகச் சொல்ல முடியாத அளவுக்கு ஒரு ஒல்லியான டாக்டர் நின்றபடி பரிசோதனை செய்து கொண்டிருக்கிறார். எதிரே இருக்கிற சுவற்றில் கொசுவத்தியைப் போல ஜொய்ங் ஜொய்ங் என்று சுத்துகிற பல வட்டங்கள் கொண்ட படம் மாட்டப்பட்டிருக்கிறது.

டாக்டர்: சேட்டை! அதோ எதுத்தாப்புலே சுவரைப் பாரு! அதுலே என்ன தெரியுது?

சேட்டை: ஒரு பல்லி தெரியுது டாக்டர்!

டாக்டர்: அதை யாரு கேட்டாங்க? பல்லிக்குக் கீழே என்ன தெரியுது? வால் தெரியுதுன்னு வழக்கம்போல நீ மொக்கை போட்டா நான் கிளீனிக்கையே மூடிட்டு ஓடிருவேன்.

சேட்டை: இதெல்லாம் கொஞ்சம் ஓவராத் தெரியலே டாக்டர்? நீங்க ஆளில்லாத கடையிலே டீ ஆத்திட்டிருக்கிறது தெரியாம என்னோட அடுத்த 'சுக்குக்கஷாயம் with சேட்டை’ நிகழ்ச்சியிலே கலந்துக்க வர்றீங்களான்னு கேட்க வந்தா, பம்பரத்துலே கயித்தைச் சுத்துறா மாதிரி என் மண்டையிலே வயர் சுத்தி படுக்க வச்சிட்டீங்களே...!

டாக்டர்: சத்தம் போடக் கூடாது! உன்னோட "ஜீரகசிந்தாமணி" படிச்சதுமே என் வீட்டுக்காரி சொல்லிட்டா, ஒரு நாள் இல்லாட்டா ஒரு நாள் என்னைத் தேடி நீ வருவேன்னு. மரியாதையா நான் கேட்குற கேள்விக்கு பதில் சொல்லு! சுவத்துலே என்ன தெரியுது?

சேட்டை: ஒரு படம் மாட்டியிருக்கு டாக்டர்! அதுலே கொசுவத்தி மாதிரி படம் தெரியுது!

டாக்டர்: அந்தக் கொசுவத்தியையே கண்ணிமைக்காம உத்துப் பார்த்திட்டேயிரு! லைட்ட்...ட்ட்டாத் தூக்கம் வர்றா மாதிரி இருக்கும்!

சேட்டை: கனவுலே ஸ்ரேயா வருவாளா டாக்டர்?

டாக்டர்: நீ திருந்தவே மாட்டியா சேட்டை? இதோ பாரு, காலையிலே போட்ட கோட்டையும் மாட்டுன ஸ்டெதாஸ்கோப்பையும் இன்னும் கழட்டலே! எக்ஸ்-ரே, சி.டி.ஸ்கேன் எல்லாம் எடுத்துப் பார்த்து ட்ரீட்மெண்ட் கொடுத்திட்டிருக்கேன். நீயும் கொஞ்சம் ஒத்துழைச்சாத் தானே உன் மூளையிலே என்ன கோளாறுன்னு கண்டுபிடிக்க முடியும்?

சேட்டை: அப்படீன்னா மூளைன்னு ஒண்ணு இருக்குன்னு கண்டுபிடிச்சிட்டீங்களா டாக்டர்? அந்த எக்ஸ்-ரே, ஸ்கேன் படத்தையெல்லாம் மறக்காம கொடுத்திருங்க! என் கிட்டே வெறே எவிடன்ஸே இல்லை! ரூமுலே ஃபிரேம் போட்டு மாட்டணும்.

டாக்டர்: மரியாதையா அந்தப் படத்தை உத்துப்பாக்கறியா? இல்லேன்னா என் கிட்டே காண்டாமிருகத்துக்குக் போடுற காலரா தடுப்பூசி இருக்கு; அதை உனக்குப் போட்டிருவேன்.

சேட்டை: சரி டாக்டர்! கொசுவத்தியைப் பார்க்கிறேன். தூக்கம் வர்றா மாதிரி இருக்கு டாக்டர்...!

டாக்டர்: அதுக்காக குறட்டையெல்லாம் விடப்படாது! கவனமாக் கேளு! இப்போ உன் வாழ்க்கையிலே ஒரு மணி நேரம் பின்னாடி போ! போயிட்டியா? இப்போ சொல்லு! என்ன பண்ணிட்டிருக்கே?

சேட்டை: வெளியே உங்க ரிஸப்ஷனிஸ்ட் கிட்டே கடலை போட்டுக்கிட்டிருக்கேன்.

டாக்டர்: அடப்பாவி! சரி வுடு! இப்போ உன் வயசுலே ஒரு நாளைக் குறைச்சுக்க! சொல்லு, ஒரு நாளைக்கு முன்னாலே நீ என்ன பண்ணிட்டிருந்தெ?

சேட்டை: ஆபீசிலே எம்.ஐ.எஸ்.ரிப்போர்ட் ரெடி பண்ணறேன்னு ரீல் விட்டுட்டு "நவரசநாயகி"ன்னு என் வலைப்பதிவுலே மொக்கை போட்டிட்டிருந்தேன் டாக்டர்.

டாக்டர்: ஓ! நீ உட்கார்ந்து யோசிக்கிற இடம் ஆபீஸ் தானா? அதை விடு! இப்போ..உன் வயசுலே ஒரு வாரத்தைக் குறைச்சுக்கோ! இப்போ என்ன பண்ணிட்டிருக்கே...?

சேட்டை: அப்போ.."சுறா’வுக்குப் போன சூடாமணி"-ன்னு ஒரு இடுகை எழுதிட்டிருந்தேன்.

டாக்டர்: ஹை! அது நீ எழுதினது தானா? கைகொடு! நீ அந்த இடுகையைப்போட்டதுக்கப்புறம் எங்க ஆஸ்பத்திரியிலே ஒரே கூட்டம்! படம் பார்த்து வந்தவங்க பாதி; உன் இடுகையைப் படிச்சிட்டு வந்தவங்க மீதி!

சேட்டை: ஏதோ என்னாலான சமூக சேவை டாக்டர்!

டாக்டர்: சரி, இப்போ...இன்னும் கொஞ்சம் பின்னாலே போகலாமா?

சேட்டை: இதுக்கு மேலே பின்னாலே போனா மண்டை சுவத்துலேதான் முட்டும் டாக்டர்!

டாக்டர்: ஐயோ சேட்டை! அதைச் சொல்லலே! இப்போ இன்னும் ஒரு மாசம் பின்னாடி போகச் சொன்னேன்! சொல்லு...ஒரு மாசம் பின்னாடி..! என்ன பண்ணிக்கிட்டிருக்கே...?

சேட்டை: ஹூம்! ஒரு மாசத்துக்கு முன்னாலே...ப்ரீத்தி ஜிந்தா சொன்னாங்களேங்குறதுக்காக "லாலு பிரசாத் யாதவ் வீட்டுக்குப் போய் சந்திச்சிட்டு வந்தேன்."

டாக்டர்: ஓஹோ! உனக்கு இன்ஸ்பிரேஷன் யாருன்னு இப்போத் தான் புரியுது எனக்கு! சரி, இன்னும் ரெண்டு மாசம் பின்னாடி போகலாமா?

சேட்டை: டாக்டர்! ஏன் எல்லா மனோதத்துவ டாக்டருங்களும் நோயாளிங்களை சும்மா பின்னாடி போங்கன்னு ரிவர்ஸுலேயே போகச் சொல்லுறீங்க! கொஞ்சம் லெஃப்டுலே ரைட்டுலே போகக் கூடாதா?

டாக்டர்: அப்படியெல்லாம் போக விட்டா நீ 'நோ என்ட்ரி’யிலேயே போயிருவேன்னு எனக்குத் தெரியாது?

சேட்டை: மெய்யாலுமெ நான் ஒன்-வேயிலே போனவன் தான் டாக்டர்! என்னோட "ஒருவழிச்சாலைகளில்..." இடுகையைப் படியுங்க தெரியும்.

டாக்டர்: ஏன் சேட்டை? அதெல்லாம் வேறே யாரோ எழுதிக்கொடுத்து நீ போட்டிருந்தா மாதிரி இருந்ததே! அதுலேயும் "ஜலமஹாத்மியம்" னு ஒரு இடுகை போட்டியே? உண்மையிலேயே அது நீ எழுதினது தானா?

சேட்டை: ஏன் டாக்டர் எல்லாரும் இதையே கேட்கறீங்க? உங்க ரிஸப்ஷனிஸ்ட் மேலே சத்தியமா நான் தான் எழுதினேன். சந்தேகம் இருந்தா அந்த இடுகையை இன்னொருவாட்டி படிச்சுப்பாருங்க! எத்தனை பேரு சாவி கொடுத்து என்னை எழுத வைச்சாங்க தெரியுமா?

டாக்டர்: சேட்டை! என் கையைப் பாரு! இது எத்தனைன்னு எண்ணிச் சொல்லு!

சேட்டை: ஒரே ஒரு கைதான் டாக்டர்

டாக்டர்: சேட்டை, இம்சை பண்ணாதே! எத்தனை விரல்னு நம்பர் சொல்லு!

சேட்டை: ஏன் டாக்டர், என் பார்வையைப் பத்தித் தான் நான் ஏற்கனவே "ராஜபார்வை"ன்னு இடுகை போட்டுட்டேனே?

டாக்டர்: என்னாலே நம்ப முடியலே சேட்டை! "ஷேர் ஆட்டோவே ஷேர் ஆட்டோவே"ன்னு 'கானா’ பாட்டு எழுதின நீ எப்படி அப்பப்போ படுசீரியசாகவும் இடுகை போடுறே? டாக்டர் கிட்டேயும் வக்கீல் கிட்டேயும் பொய் சொல்லக் கூடாது தெரியுமா?

சேட்டை: தெரியுமே, அவங்க எவ்ளோ வேண்ணா சொல்லலாம்கிறதும் தெரியும்.

டாக்டர்: சேட்டை! உனக்கு என்ன வந்திருக்குன்னு தெரியுமா? ’சந்திரமுகி’யிலே ஜோதிகாவுக்கு எது வந்ததோ, 'அந்நியன்’லே விக்ரமுக்கு எது வந்ததோ, அது இப்போ உனக்கும் வந்திருக்கு!

சேட்டை: எனக்குத் தெரிஞ்சு ரெண்டு படத்துலேயும் அவங்களுக்கு நிறைய சில்லறை வந்தது. எனக்கு சல்லிக்காசு கூட வரலியே டாக்டர்?

டாக்டர்: ஏன் எப்பப் பார்த்தாலும் பிச்சைக்காரன் மாதிரி சில்லறை பத்தியே பேசுறே?

சேட்டை: பேசுறது இன்னா வாத்யாரே? பிச்சைக்காரங்களைப் பத்தி ஒரு இடுகையே போட்டிருக்கேனே? இன்னாண்ணறே நீ?

டாக்டர்: நான் சந்தேகப்பட்டது சரியாப்போச்சு! உனக்கு வந்திருக்கிற வியாதியோட பேரு "மல்டிப்பிள் முன்சிபாலிட்டி டிஸார்டர்"..சாரி, "மல்டிப்பிள் பெர்சனாலிட்டி டிஸார்டர்!"

சேட்டை: ஐயையோ! வியாதி பேரையே தப்புத்தப்பா சொல்றாரே? உண்மையிலேயே நீங்க MBBS படிச்ச டாக்டர் தானா?

டாக்டர்: நான் MBBS இல்லை; M.A.B.F.I.A.S தெரியுமா?

சேட்டை: அப்பாடியோ, ரொம்பப் பெரிய படிப்புத் தான் டாக்டர்! இப்போ கன்டின்யூ பண்ணுங்க ட்ரீட்மெண்டை!

டாக்டர்: நல்ல வேளை, M.A.B.F.I.A.S-ன்னா என்னான்னு நீ கேட்கலே! இல்லாட்டி அது 'Matriculation Appeared But Failed In All Subjects'னு நான் உண்மையைச் சொல்ல வேண்டி வந்திருக்கும். தேங்ஸ் சேட்டை!

சேட்டை: நோ மென்ஷன் டாக்டர்! நான் வலைப்பதிவு ஆரம்பிச்சதுக்குக் காரணமே 'கானா’ பாடல்கள் மேலே இருக்கிற ஈடுபாடு தான்!ஷேர் ஆட்டோவே கானா தவிர "தீ.நகர்"னு நான் தி.நகர்,பாண்டிபஜார் பத்தி எழுதின கானாவும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்!

டாக்டர்: அது போகட்டும், நீ அடிக்கடி அனுபவம்கிற பேருலே ஏன் நாய்,பூனை,காக்காயைப் பத்தியே எழுதுறே?

சேட்டை: என்னோட "வல்லான் வகுத்ததே வழி" பத்தி கேட்கறீங்களா? அது அனுபவம் டாக்டரே! நல்ல அனுபவம் கிடைச்சா நாய்,பூனையென்ன, உங்களைப் பத்திக் கூட எழுதுவேன் டாக்டர்!

டாக்டர்: அப்புறமா, "நாய் வளர்ப்போமாக!" ன்னு இன்னொண்ணு எழுதினே இல்லே?

சேட்டை: ஆமா, பணக்காரன் வூட்டுலே ஒரு நாயாவாச்சும் இருந்திருக்கக் கூடாதான்னு சில சமயங்களிலே ஏக்கம் வர்றதில்லையா?

டாக்டர்: இப்பவே உன் ஏக்கத்துலே பாதி நிறைவேறிடுச்சுன்னுதான் தோணுது! ஒரு பணக்கார வீடு மட்டும் கிடைச்சிட்டா முழுசா நிறைவேறினா மாதிரி தான்! அப்புறம், சமீபத்துலே கூட "மனிதநாயம்"னு ஒரு இடுகை போட்டிருந்தே இல்லியா? எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். அதுலே வர்ற பைத்தியக்காரன் நீ தானே?

சேட்டை: நீங்க ஏன் இப்படிக் கேட்கறீங்கன்னு எனக்குத் தெரியும்? என்னோட "பராசக்தி-ரிப்பீட்டேய்" இடுகையைப் படிச்சிட்டீங்க தானே?

டாக்டர்: சேட்டை! நல்லா ஞாபகப்படுத்திச் சொல்லு, சின்ன வயசிலே........

சேட்டை: என்னோட சின்ன வயசு பத்தித் தான் "சின்னஞ்சிறு வயதில்....!"ன்னு டீட்டெய்லா எழுதிட்டேனே டாக்டர்?

டாக்டர்: ஓ.கே! கடைசியா ஒரு கேள்வி! உன்னோட "பயணத்தில் ஓர் நாள்!" இடுகை தான் பல புதிய பதிவர்களோட உனக்கு நட்பு கிடைக்க உதவியா இருந்தது இல்லையா? அதை நீ தான் எழுதினேன்னு நம்பவே முடியலேன்னு வாசிச்சவங்களே சொன்னாங்களா இல்லியா?

சேட்டை: எத்தனை தடவை டாக்டர் சொல்றது? அது சத்தியமா நான் எழுதினது தான். கொஞ்சம் தலையைக் குனியுங்க! (டாக்டர் உலகப்பனின் தலையில் ஓங்கியடித்து சத்தியம் செய்து) சத்தியமா..சத்தியமா..நான் தான் எழுதினேன்.

சேட்டை தலையில் அடித்ததும் டாக்டர் மயக்கம் போட்டு விழுந்து விடுகிறார்.

சேட்டை: ஐயோ டாக்டர் மயக்கம் போட்டு விழுந்திட்டாரு!

(நர்ஸ் ஓடி வந்து தண்ணீர் தெளித்ததும், டாக்டர் ஊளம்பாறை உலகப்பன் கண்விழிக்கிறார்)

டாக்டர்: நான் யாரு? எங்கே இருக்கேன்? இது எந்த இடம்?

நர்ஸ்: ஐயோ, எங்க டாக்டருக்கு என்னவோ ஆயிருச்சு! டாக்டரைக் கூப்பிடுங்க! டாக்டரைக் கூப்பிடுங்க!

சேட்டை: சிஸ்டர், பயப்படாதீங்க, நானே டாக்டர் தான்! டாக்டர், அதோ அந்தப் படத்தைப் பாருங்க! அப்படியே 'ஃபாஸ்ட் ஃபார்வார்ட்' பண்ணி ஒரு பத்து வருசம் முன்னாடி வாங்க!

நர்ஸ்: நீங்க டாக்டரா?

சேட்டை: என்னம்மா இப்படிக் கேட்கறீங்க? பதினாலாம் தேதி வலைச்சரத்துலே போட்ட இடுகைக்காக எனக்கு பெண் பதிவர்களெல்லாம் சேர்ந்து "டாக்டர்" பட்டம் கொடுத்திருக்காங்கம்மா! என்ன, உங்க டாக்டர் சைக்காளஜிஸ்ட்! நான் பொய்க்காளஜிஸ்ட்!

நர்ஸ்: ஐயையோ!

சேட்டை: நம்பிக்கை வரலியா? உங்க தலையிலே அடிச்சு சத்தியம் பண்ணட்டுமா?

நர்ஸ்: ஐயா சாமி, ஆளை விடுங்க! ( தலைதெறிக்க ஓடுகிறார்)

(திரை)

அன்புடையீர்,

மதிப்புக்கும் அன்புக்குமுரிய சீனா ஐயா அவர்களின் ஆசியுடன், சகபதிவர்களின் உறுதுணையுடன், உங்கள் அனைவரது பேராதரவுடன், இந்த எழு நாட்களும் 'வலைச்சரம்’ மூலம் உங்களில் ஒருவனாய் இருந்தது குறித்து மிதமிஞ்சிய மகிழ்ச்சியும் பெருமிதமும் அடைகிறேன்.


இந்தப் பொன்னான வாய்ப்பை எனக்களித்த வலைச்சரம் ஆசிரியர் குழுவுக்கும், வாசித்ததோடு பெருமளவில் பின்னூட்டங்களிட்டு ஊக்குவித்த உங்கள் அனைவருக்கும் எனது பணிவான நன்றி கலந்த வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

என்னால் இயன்ற அளவு இந்த ஒரு வாரத்தில் பல வலைப்பூக்கள் பற்றி இங்கு குறிப்பிட்டிருக்கிறேன். நான் குறிப்பிடாமல் விட்ட பதிவுகள் ஏராளம் என்றாலும், அவர்களும் எனது விருப்பத்துக்கும் அபிமானத்துக்கும் உரியவர்களே!

வலைச்சரம்-புதிய பதிவர்களை அறிமுகம் செய்வதோடு நின்று விடாமல், என் போன்ற மிகக்குறைவான அனுபவமே உள்ள பதிவர்களிடமும் ஆசிரியர் பொறுப்பை வழங்கியதன் மூலம், ஒரு மிகச் சிறந்த முன்னுதாரணத்தை உருவாக்கியுள்ளது. மேலும் பல புதுமுகங்களுக்கு இப்பொறுப்பை இனிவரும் காலங்களில் அளித்து அவர்களையின் திறமையை வெளிக்கொணர முடியும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறீர்கள்.

மீண்டும் ஒரு முறை இருகரம் கூப்பி, சிரம்தாழ்த்தி உங்களுக்கு உளமாற நன்றி தெரிவித்துக்கொண்டு விடைபெறுகிறேன்.

வலைச்சரத்தில் சேட்டை முடிந்தது! :-)


நன்றி!! வணக்கம்!!!!


சேட்டைக்காரன்

Saturday, May 15, 2010

தோம் தாத்தா!

(சேட்டையின் மேன்சன் அறைக்கதவு தட்டப்படுகிறது.
திறந்ததும் எதிரே.....!)

எமதர்மராஜன்: தோம் தாத்தா!

சே.கா: அடடே! வாங்க கவுண்டமணி அண்ணே! வாங்க செந்தில் அண்ணே! சவுக்கியமா?

எமதர்மராஜன்: டேய் சேனா கானா! யாரைப் பார்த்து கவுண்டமணி, செந்திலுங்கிறே? நான் எமன்! இவன் சித்திரகுப்தன்! வழியை விடு!

சே.கா: உண்மையாவா? நீங்க ஒரிஜினல் எமனா?

எமன்: பின்னே என்ன பர்மா பஜார் எமனா? ஒரிஜினல் எமன் தாண்டா, இத பாரு! என்னோட ஐடி.கார்டு! கீழே கையெழுத்துப் போட்டிருக்கிறது யார் தெரியுதா? பிரம்மா!

சே.கா: அது சரி, இங்கே எதுக்கு வந்தீங்க?

எமன்: உன் கிட்டே ஒரு பத்து ரூபா கைமாத்து வாங்கிட்டுப்போக வந்தோம்! டேய் பனங்கொட்டைத்தலையா! எமனும் சித்திரகுப்தனும் எதுக்குடா வருவாங்க? உன் உயிரை எடுக்கத்தான்!

சே.கா: அஸ்கு புஸ்கு! என் உயிரை இப்போ எப்படி நீங்க எடுத்திட்டுப் போக முடியும்? நான் தான் இன்னும் ஐம்பது வருஷம் உயிரோட இருப்பேனே? தப்பாக் கணக்குப் போட்டிருக்கீங்க!

சித்திரகுப்தன்: சேட்டை!! இந்த சித்ரகுப்தன் சரித்திரத்தில் தப்புக்கணக்கு என்பதே கிடையாது.

சே.கா: எனக்கு சரித்திரமே கிடையாது!

எமன்: சேட்டை! இன்னும் ஐம்பது ஆண்டுகள் நீ உயிரோடு இருப்பாய் என்று கூறியது யார்?

சே.கா: ஜோசியர் மந்தவளி மாடசாமி!

(எமனும் சித்திரகுப்தனும் சிரிக்கிறார்கள்! பிறகு.....)

சித்திரகுப்தன்: ஹையோ நரனே, இங்கு வருவதற்கு முன்னால் அவர் உயிரைத் தான் பறித்து விட்டு வந்திருக்கிறோம். அந்த மடசாமியை மடக்கி எமலோகத்துக்குப் பார்சல் பண்ணி அனுப்பிவிட்டோம்!

எமன்: சித்திரகுப்தா! இந்த தயிர்வடைத் தலையன் கிட்டே என்ன பேச்சு? கழுத்துலே பாசக்கயிற்றை வீசி இவன் உயிரை மாய்த்து விடு!

சே.கா: ஒரு நிமிஷம்! ஸ்தூ...ஸ்தூ!! எமதர்மராஜா, சித்ரகுப்தா! பறிக்கறது தான் பறிக்கறீங்க! ஒரு அரை மணிநேரம் கழிச்சுப் பறிக்கக் கூடாதா?

எமன்: ஏன்? மெகாசீரியல் பார்க்கப் போறியா? அதைப் பார்த்தால் எங்கள் உயிருக்கே கேரண்டி கிடையாதுரா சாமீ! உடனே கிளம்பு!

சே.கா: இல்லை எமதர்மராஜா! வலைச்சரத்துலே அஞ்சு நாள் முடிஞ்சு போச்சு! இன்னிக்கு ஆறாவது நாள்! அதையும் எழுதிட்டேன்னா, என் கடமை முடிஞ்சிடும். அப்புறம் சந்தோஷமா வர்றேன்.

சித்திரகுப்தன்: சேட்டை! நீ ஏற்கனவே சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வரலாற்றை முடிக்காமல் வைத்திருக்கிறாய் என்று புகார் வந்திருக்கிறது. உன்னைக் கொண்டு போய் முதலில் அதை முடிக்க வேண்டும்.

எமன்: அது மட்டுமில்லை! நீ வலைப்பூ ஆரம்பித்து எழுதத் தொடங்கியது முதல் மானிடர்கள் எங்களின் எந்த தண்டனைக்கும் மசிய மாட்டேன் என்கிறார்கள். சேட்டைக்காரனையே வாசித்து விட்டோம்; எங்களுக்குக் கும்பீபாகமெல்லாம் கோவளம் பீச்சில் குளிப்பது போல என்று கொக்கரிக்கிறார்கள். இனிமேல் புதிதாக தண்டனைகளை எமலோகத்தில் கண்டுபிடித்தால் தானுண்டு.

சித்திரகுப்தன்: அதற்குப் பேசாமல் அங்கேயும் இவனை ஒரு வலைப்பதிவு ஆரம்பிக்கச் சொல்லி விடலாம்.

சே.கா: ஹும், விதி விட்ட வழி! இன்று தான் பழமைபேசி தொடங்கி, ஈரோடு கதிர் வரை பல பதிவர்களைப் பற்றி எழுதலாம் என்று எண்ணியிருந்தேன். நடப்பது நடக்கட்டும்.

எமன்: என்னது? பழமைபேசியா? "இருப்பை உணர்த்தி, உணர்ந்து கொள்ள எதையாவது செய்!" என்ற தங்கவரிகள் நிரம்பிய கவிதை எழுதிய பழமைபேசியா?

சே.கா: உங்களுக்கும் வலைப்பதிவு வாசிக்கிற வழக்கமுண்டா?

எமன்: இல்லாமலா உன் உயிரை முன்கூட்டியே பறிக்க வந்திருக்கிறோம்? ஒன்று செய்! நீ எழுதி முடிக்கும் வரையில் காத்திருக்கிறோம். நீயும் உருப்படியாக ஒரு காரியம் செய்ததாக இருக்கட்டும்.

சித்திரகுப்தன்: சேட்டை, யார் யாரைப் பற்றியெல்லாம் எழுதப்போகிறாய்?

சே.கா: "முனைவர்.இரா.குணசீலன்-வேர்களைத் தேடி" என்ற தனது வலைப்பதிவில் பல அற்புதமான இலக்கியம் குறித்த இடுகைகளை எழுதி வருகிறார். வாசிக்க வாசிக்க மலைப்பாய் இருக்கிறது.

எமன்: தோம் தாத்தா! நீ வாசிக்கிற வலைப்பதிவுகளெல்லாம் பிரமாதம் தான் போ! ஆனால், உனக்கு எந்த பயனும் ஏற்பட்டதாகத் தெரியவில்லையே!

சே.கா: ஏன்? நானும் தான் ஸ்ரேயாவைப் பற்றி அந்தாதி எழுதினேன்.

எமன்: டேய் சேனா கானா! என் கிட்டே இருக்கிற ஒரேயொரு கதை உடைஞ்சாலும் பரவாயில்லை! உன் மண்டையிலே ஓங்கி ஒண்ணு போட்டிருவேன். நீ எழுதினது அந்தாதியாடா? அது அசிபத்ரம் - வாசிக்கிறவங்க கண்ணுலே ஊசியாலே குத்துறா மாதிரி இருந்துச்சு!

சித்திரகுப்தன்: ஹிஹிஹி! பிரபோ! அதனால் தான் அதைப் படித்து விட்டு துரை.ந.உ, "இது கடும்பாக்கள் அல்ல; கொடும்பாக்கள்,’ என்று கூறியிருந்தார். நினைவிருக்கிறதா?

எமன்: அவர் கூறியும் இவன் திருந்தவில்லையே? மரபுக்கவிதை, புதுக்கவிதை, ஹைக்கூ என்று பல பரிமாணங்களில் எழுதுகிறவராயிற்றே துரை.ந.உ? "மணி என்ன ஆச்சு?" என்று எழுதியிருந்தாரே, அது போல ஒரு கவிதை எழுத முடியுமா இந்த சேனா கானாவால்?

சித்திரகுப்தன்: உண்மைதான் பிரபோ! குறைவாகவே இடுகையிட்டாலும் நிறைவாக எழுதுகிறவர் அவர்!

எமன்: கேட்டாயா சேனா கானா! எனக்குத் தெரிந்து பிப்ருவரியில் 41 இடுகை போட்ட ஒரே பதிவர் நீ தான்! முழிக்கிறதைப் பாரு, பிளாக்கில் டிக்கெட் விற்கிறவன் மாதிரி! டேய் சேட்டை! சும்மாச் சும்மா இடுகை போட்டா போதாது; கும்மாச்சி எழுதிய "உழைப்பவன் ’கூமுட்டை’-இன்றைய தமிழகம்" மாதிரி அவ்வப்போது எழுதினாலும் அழுத்தமாக இடுகை எழுத வேண்டும்? தெரியுதா?

சே.கா: ஆஹா! கும்மாச்சியை நான் பின்தொடர்ந்துக்கிட்டிருக்கேனே?

சித்திரகுப்தன்: பின்தொடர்ந்து என்ன புண்ணியம்? அவர்களெல்லாம் முன்தொடர்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்? "உண்மைத் தமிழன்(15270788164745573644) எழுதிய "இந்தக் கடன்களை யார் அடைப்பது?" போல ஒரு பதிவேனும் எழுதியிருக்கிறாயா?

சே.கா: என்னண்ணே இப்படிக் கேட்டுட்டீங்க, நானும் தப்பித்தான் தமிழன்-னு அதே மாதிரி ஒண்ணு எழுத "ட்ரை" பண்ணினேனே?

எமன்: நீ "ட்ரை" பண்ணலேடா, வாசிச்சவங்களையெல்லாம் "ஃபிரை" பண்ணிட்டே! அதைப் படிக்காத தமிழனுங்க மட்டும் தான் தப்பிச்சாங்கன்னு எமலோகத்துலேயே பேசிக்கிறாங்க தெரியுமா?

சே.கா: எமண்ணே! அது காமெடிங்கண்ணே!

எமன்: டேய் சேப்பங்கிழங்குத்தலையா! ஒரு படமும் நாலு மொக்கையும் போட்டா காமெடியா? கோவி.கண்ணன் "சேவல்காரன் கதை வெளியாகியது!" என்று எழுதினாரே! அது காமெடி!

சே.கா: ஆஹா, நான் யார் யாரைப் பத்தியெல்லாம் எழுதணுமுன்னு நினைக்கறேனோ நீங்களே ஞாபகப்படுத்தறீங்களே!

சித்திரகுப்தன்: பிரபோ! இந்த நரனுக்கு நல்ல பதிவர்களைத் தெரிந்திருக்கிறது! ஆனாலும், தொடர்ந்து மொக்கையே போடுகிறானே? இவனை ஒரு ஆறுமாதத்துக்கு அந்தகூபத்தில் தள்ளி விட வேண்டும் பிரபோ!

சே.கா: தாராளமாப் போடுங்க! ஆனா, லேப்-டாப்பும் பிராட்-பேண்டும் மட்டும் கண்டிப்பா வேணும்! ஏன்னா,தமிழின் சிறந்த 100 சிறுகதைகளை சென்ஷி எழுதிட்டிருக்காரு! இந்த மாதிரி சான்ஸையெல்லாம் நழுவ விட முடியாது.

எமன்: டேய் சேனா கானா! உன்னை அடிக்கணுமுன்னு வரும்போதெல்லாம் இந்த மாதிரி நல்ல பதிவருங்க பெயரைச் சொல்லித் தப்பிச்சுக்கறே நீ?

சே.கா: அடிச்சாலும் வலிக்காதுங்க! முகிலன் எழுதின "பூ வலி" படிச்சதிலிருந்து மனசெல்லாம் வலியா இருக்குதுண்ணே!

சித்திரகுப்தன்: சேட்டை! இதே கருத்தில் வானம்பாடிகள் எழுதிய "காய் வலி" இடுகையையும் படித்தாயா இல்லையா?

சே.கா: படிக்காமலா இருப்பேன்? ஐயாவின் வலைப்பூவையும் நான் விடாமல் படிக்கிறேனே?

எமன்: சித்திரகுப்தா! சிறந்த பதிவர்களைப் பற்றியெல்லாம் இவனும் ஒரு கணக்கெடுப்பே நடத்தியிருப்பான் போலிருக்கிறதே!

சே.கா: நான் கணக்கெடுப்பது இருக்கட்டும்! நமது ச.செந்தில்வேலன் எழுதிய "சாதியும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பும்." என்ற இடுகையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் எமண்ணே? நெத்தியடி!

எமன்: சேட்டை! இவ்வளவு நல்ல பதிவர்களைத் தெரிஞ்சு வைச்சிருக்கிறே? அருமையான இடுகைகளையெல்லாம் படிக்கிறே? கையிலே வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்காக அலையுறியே?

சே.கா: ஆஹா! வெண்ணைன்னதும் நினைவுக்கு வருகிறது எமண்ணே! பலாபட்டறை சங்கர் எழுதிய "ஒரு ஆதங்கம்" என்ற பதிவைப் பற்றியும் வலைச்சரத்தில் குறிப்பிட்டே ஆகணும்.

சித்திரகுப்தன்: இவர்களெல்லாம் சமூக அக்கறையோடு எழுதுகிற பதிவர்கள். கோடியில் ஒரு சிலரே இப்படி சிந்திக்கிறார்கள்.

சே.கா: கோடி! தேங்க்ஸ் சித்ரகுப்தா! ஈரோடு கதிர் எழுதிய இடுகைகளில் எதை எழுதுவது, எதை விடுவது என்று குழம்பிக்கொண்டிருந்தேன்; அவர் எழுதிய "கோடியில் இருவர்" இடுகையைப் பற்றிக் குறிப்பிட்டு விடுகிறேன்.

எமன்: பலே சேனா கானா! தமிழ்மணத்திலும் தமிழீஷிலும் புதிய வரலாறே படைத்த இடுகையாயிற்றே! அதே ஈரோடை நகரைச் சேர்ந்த அகல்விளக்கு எழுதிய "உதிரும் இலைகள்" பதிவையும் நினைவில் நிறுத்திக்கொள்!

சித்திரகுப்தன்: சேட்டை! இது போன்ற இடுகைகள் உன் போன்ற புதியவர்கள் செல்ல வேண்டிய திசையை தெளிவாகக் காட்டும்

எமன்: சித்திரகுப்தா! எனக்கென்னவோ சேனா கானா நம் இருவரிடமும் போட்டு வாங்கிக்கொண்டிருக்கிறான் என்று படுகிறது. பார், இப்போது நீயே 'திசைகாட்டி’ ரோஸ்விக் எழுதிய "ரயில், தாலாட்டும் மற்றொரு தாய்" என்ற அருமையான இடுகையை நினைவூட்டி விட்டாயே?

சித்திரகுப்தன்: சீக்கிரம் இவன் எழுதி முடித்தால் தானே இவனை எமலோகத்துக்குக் கொண்டு செல்ல முடியும்? நமக்காக நீண்ட பயணம் காத்திருக்கிறதே!

சே.கா: ஆஹா வந்திருச்சு! நீண்ட பயணம் என்றா சொன்னீர்கள்? இருங்கள், துபாய் ராஜாவின் பயணக்கட்டுரைகளில் எனக்குப் பிடித்த "எகிப்திய விருந்து" பற்றியும் குறிப்பிட்டு விடுகிறேன்.

எமன்: குறிப்பிடு! குறிப்பிடு! சுறாவைப் பற்றி எழுதி மொக்கை போட்டது போதும்! ஆயில்யன் எழுதிய "புறா" வைப் பற்றியும் மறக்காமல் எழுது!

சே.கா: அம்மாடியோ! எமதர்மராஜனே! உங்களைப் பெற்ற தாயின் கால்தொட்டுத் தொழ வேண்டும் போலிருக்கிறது.

எமன்: சரியாகச் சொன்னாய்! அன்னையர் தினம் பற்றி SUREஷ் (பழனியிலிருந்து) எழுதிய MOTHER'S DAY Vs மாட்டுப் பொங்கல் பதிவையும் ஒரு முறை வாசித்து விடு சேட்டை!

சே.கா: எமண்ணே! நேற்று ஔவையைப் பேட்டி கண்டபோதும் அவரை அம்மா என்று தான் அழைத்தேன்! ஒரே ஒரு குறை! அவரிடம் அதியமான் அளித்த நெல்லிக்கனி பற்றி கேட்காமல் விட்டு விட்டேன்.

சித்திரகுப்தன்: சேட்டை! கவலைப்படாதே! அந்த நெல்லிக்கனி கிடைக்காவிட்டால் என்ன? நம் சங்கவி எழுதிய "மரணத்தை தள்ளிப்போடும் நெல்லிக்கனி"யை வாசித்துப்பாரேன்!

சே.கா: கை கொடுங்கள் சித்ரகுப்தன் அண்ணே! இப்போ எனக்கு ரொம்ப தைரியம் வந்திருச்சு! நான் எதிர்பார்த்ததை விடவும் இந்தப் பதிவு நல்லா வருமுன்னு தண்டோரா போட்டுச் சொல்லலாம் போலிருக்கு!

எமன்: சேனா கானா? மறக்காமல் உண்மையைச் சொல்! தண்டோரா எழுதிய "கருநாகம்" புனைவைப் படித்தாயா இல்லையா?

சே.கா: படிக்காமலா இருப்பேன்? எங்கள் வலையுலகிலும் கூட எத்தனை புதுமைப்பித்தன்கள், தி.ஜானகிராமன்கள், சுஜாதாக்கள்....?

சித்திரகுப்தன்: சேட்டை! நல்ல வேளை நினைவூட்டினாய்! செ.சரவணக்குமார் எழுதிய "என் இனிய சுஜாதா" கட்டுரையைப் பற்றியும் தவறாமல் குறிப்பிட்டு விடு!

சே.கா: நான் சொல்வதற்கெல்லாம் உள்ளர்த்தம் கண்டுபிடித்து உதவுகிறீர்களே இருவரும்! மிக்க நன்றி!

எமன்: நீ சொல்வதற்கு உள்ளர்த்தம் கண்டுபிடிப்பது இருக்கட்டும்! கேபிள் சங்கர் "மனைவி அகராதி" என்று மனைவியின் பேச்சுக்கு எப்படி அர்த்தம் கண்டுபிடிப்பது என்று எழுதியிருக்கிறார் தெரியுமா?

சே.கா: ஓ! படித்தேன் அண்ணே! இதோ இடுகை ஏறக்குறைய முடிந்தே விட்டது. நர்சிம் எழுதிய "ஆழி-ஊழ்" என்ற புனைவைப் பற்றி மட்டும் ஓரிரு வார்த்தைகளாவது எழுதி விட்டால் போதும்.

எமன்: சேனா கானா! ஸ்டாப்!! நான் சொல்வதைக் கேள்!

சே.கா: இவ்வளவு நேரம் பொறுத்தீர்கள்! இதை முடிக்கும் வரை பொறுக்கக் கூடாதா?

எமன்: சேனா கானா! சுயபுத்தி இல்லாட்டியும் நாங்க ரெண்டு பேரும் சொல்லச் சொல்ல எவ்வளவு நல்ல நல்ல பதிவர்கள் பத்தியெல்லாம் எழுதியிருக்கே? உன் உசிரைப் பறிக்க எனக்கு மனசே வர மாட்டேங்குதுப்பா!

சித்திரகுப்தன்: பிரபோ என்ன இது?

எமன்: சித்திரகுப்தா, குறுக்கே பேசினா குறுக்காட்டி மிதிச்சுப்போடுவேனாக்கும்! சேட்டை! நீ வலைச்சரம் எழுது! அப்புறமா உன் வலைப்பதிவுலேயும் எழுது! இன்னும் அம்பது வருசம் உசிரோட இருந்து எல்லார் உசிரையும் வாங்கு! ஆனா, இந்த எமனுக்காக ஒரே ஒரு உதவி மட்டும் பண்ணு! எப்படியாவது இந்த சோற்றுப்புதூர் சொறிகால் வளவன் வரலாற்றை மட்டும் அப்பப்போ எழுதித்தொலை! அந்தாளு எமலோகத்துலே பண்ணுற லொள்ளு தாங்க முடியலே சேட்டை!

சித்திரகுப்தன்: ஆமாம் சேட்டை! கூடிய சீக்கிரம் நீ எழுதலேன்னா (கண்களைத் துடைத்துக் கொண்டே) அவரோட ராஜநர்த்தகி வரலட்சுமியை எமதர்மராஜன் முன்னாலே ஆட வைச்சிடுவேன்னு மிரட்டியிருக்காரு!

எமன்: ஆமாம் சேட்டை! ஏற்கனவே ஒரு வாட்டி அந்த அம்மா ஆடினதைப் பார்த்து என் கிட்டே இருந்த கிங்கரனெல்லாம் வி.ஆர்.எஸ்.வாங்கிட்டு பூலோகத்துக்குப் போயி பித்துப்பிடிச்சு அலையுறாங்க! இன்னொரு தடவை ஆடுனா என் நிலைமை என்னாகிறது? இது நியாயமா? இது அடுக்குமா?

சே.கா: அச்சச்சோ! கவலைப்படாதீங்க அண்ணே! சீக்கிரமே சொறிகால் வளவனைப் பத்தி திரும்பவும் எழுதறேன். உங்களைப் பொறுத்தவரைக்கும் வரலட்சுமி இனிமேல் வரா லட்சுமி தான்,போதுமா? பயப்படாம பத்திரமா எமலோகம் போய்ச் சேருங்க!

எமன்: வரேன் சேட்டை!

சித்திரகுப்தன்: நானும் வரேன் சேட்டை!

சே.கா: தோம் தாத்தா!

(எமதர்மராஜனும் சித்திரகுப்தனும் மறைகிறார்கள்)

அன்புடையீர்,

இந்த ஆறு நாட்களில், என்னால் இயன்றவரையிலும் பல வலைப்பதிவுகள் குறித்து எனக்குத் தெரிந்தவரையில் குறிப்பிட்டு எழுதியிருக்கிறேன். அனுபவமின்மை மற்றும் நேரமின்மை காரணமாக, பல வலைப்பூக்களைப் பற்றி எழுத முடியாமல் போயிருப்பதை என்னாலேயே உணர முடிகிறது. அங்ஙனம் நான் குறிப்பிடத் தவறிய வலைப்பூக்களும் எனது விருப்பத்துக்கும் ரசனைக்கும் உரியவையே!

நாளைய தினம், எனது இடுகைகளில் எனது சகவலைப்பதிவர்களுக்கும், நண்பர்களுக்கும் மிகவும் பிடித்தமான சிலவற்றைப் பற்றி எழுத விழைகிறேன். இந்த ஆறு நாட்கள் பொறுத்தது போல, நாளை ஒரு நாளும் பொறுத்துக்கொள்ளுவீர்கள் என்பது எனக்குத் தெரியாதா என்ன? :-)

நாளை ""அந்நி(யா)யன்" இடுகையில் சந்திப்போமா?

நன்றி! வணக்கம்!!

சேட்டைக்காரன்