எனக்கொரு உண்ம தெரிஞ்சாகணும்... :)))
➦➠ by:
அப்பாவி தங்கமணி
"வணக்கம்'ங்க... எல்லாரும் சௌக்கியமா?"
"சௌக்கியம் அப்பாவி தங்கமணி.... நீ நலமா? உன் குடும்பத்தார் நலமா?" என ஒருத்தர் என்ட்ரி ஆகிறார்
"யாருங்க நீங்க...?"
"நான் யாரா? நாராயண நாராயண .... ஹா ஹா... என்னை தெரியவில்லையா பெண்ணே... நன்றாக உற்று பார்"
"உத்து பாத்தாலும் ஊதி பாத்தாலும் தெரியலைனு சொல்றனல்ல... சின்னப்புள்ள தனமா பேசிக்கிட்டு ... ஹ்ம்ம்"
"நான் தான் நாரதர்..."
"என்னாது? நா...ர.. தரா..... ஹையோ ஹையோ...ஹா ஹா ஹா"
"ஏன் சிரிக்கிறாய் பெண்ணே? நான் சொல்வதில் நம்பிக்கை இல்லையா?"
"அட போங்க நீங்க வேற... நேத்து இப்படி தான் ஒரு ஆளு நான் தான் அலாவுதீனின் அற்புத விளக்குல வந்த பூதம்னு வந்து நின்னாரு...ஹா ஹா ஹா"
"ஹ்ம்ம்... ஆக நீ என்னை நம்பவில்லை... ஏன்?"
"ஏன்னா... எனக்கு தெரிஞ்சு நாரதர் கைல ஒரு சப்லாங்கட்டை இருக்கணும்... அப்புறம் நடு மண்டைல ஒரு கோடாலி கொண்டை.... ம்... இன்னும் ஏதோ மிஸ் ஆகுதே...ம்... கைல கிடார் மாதிரி ஒண்ணு... எல்லாம் இருந்தாத்தான் நாரதர்... நீங்க என்னமோ ஒரு டீ ஷர்ட் பான்ட் போட்டுட்டு நிக்கறீங்க... ஹா ஹா... "
"உங்கள் சினிமாவில் காட்டியது போல் இருந்தால் தான் என்னை நம்புவாய் இல்லையா?"
"பின்ன... இதென்ன கோலம்... அதை விடுங்க... உங்க டிரைவிங் லைசன்ஸ் இருந்தா காட்டுங்க... நம்பறதா இல்லையான்னு அப்பறம் சொல்றேன்"
"என்ன சோதனை நாராயணா இது? மூன்று லோகங்களும் வண்டி இன்றியே டிரைவ் செய்யும் என்னிடமே டிரைவிங் லைசென்ஸ் கேட்கிறார்களே"
"இங்க பாருங்க... எனக்கு வலைச்சரத்துல போஸ்ட் போடணும்... அதுக்கு ப்ளாக் எல்லாம் தேடி பிடிக்கணும்... நெறைய வேலை இருக்கு... போங்க சார்...போங்க..."
"ஹ்ம்ம்... கலி முற்றித்தான் விட்டது... முக்காலமும் அறிந்த எனக்கே இந்த கதியா? நாராயண நாராயண"
"முக்காலமும் தெரியுமா... ஹ்ம்ம்" என சற்று நேரம் யோசித்த அப்பாவி
"இங்க பாருங்க நாரதரே.. நான் கேக்கற கேள்விக்கு நீங்க பதில் சொன்னா நீங்க நாரதர்னு நான் ஒத்துக்கறேன்"
"ம்ம்ம்... கேளு... கேளு..."
"காதலிக்காக காத்திருக்கிறேன்னு ஒரு பதிவு எழுதினவர் யார்னு உங்களால சொல்ல முடியுமா?"
"நாராயணா... என்ன சோதனை இது... சரி சொல்கிறேன்...ஆயுத எழுத்து என்ற வலைப்பூவின் சொந்தகாரர் அவர்"
"ஹ்ம்ம்... சரி... ஆஸ்திரேலியா பற்றி அங்குள்ள இடங்களை பற்றி இன்னும் பல அறிய தகவல்களை பகிர்ந்து கொள்ளும் ஒரு பதிவர் இருக்கிறார் யார் அவர்"
"ஹ்ம்ம்... இவரை தெரியாதா? பதிவர் இராஜராஜேஸ்வரி தான் அவர்"
"சரியா சொல்லிட்டாரே...ம்... இன்னொன்னு கேட்டு பாப்போம்... காணாமல் போன தன் சகோதரனை தேடும் ஒரு பதிவு... எழுதியது யார்"
"நெஞ்சை உருக்கும் பதிவல்லவா அது... ராஜி அவர்கள் தானே அது"
"இதையும் கரெக்டா சொல்லிட்டாரே...ம்... ஒருவேள நிஜமாவே நாரதர் தானோ... எதுக்கும் இன்னும் ரெண்டு கேள்வி கேப்போம்..." என மனதிற்குள் நினைத்த அப்பாவி
"அழகா வாழ்வியல் கதைகள் சொல்லும் ஒருத்தர் இருக்கார்... யார் அவர்?"
"திருமதி ஸ்ரீதர்..." என்ற நாரதர் "சரி தானே அப்பாவி பெண்ணே" என சிரித்தார்
"ம்... சிரிப்பது இருக்கட்டும்... பாரதி பாடல்களோடு நினைவுகள்னு பாரதியின் நினைவு நாளன்று ஒரு அருமையான பதிவு எழுதினார் அவர்... யார் தெரியுமா?"
"ரசிகமணி என சிலரால் அன்போடு அழைக்கப்படும் அனந்த பத்மநாபன் அவர்கள் தானே..."
"சரி சரி... இதுக்கு பதில் சொல்லுங்க பார்ப்போம்... அடிக்கடி போட்டி வெச்சு கலக்கற ஒரு ப்ளாக் எதுவோ"
"மிக எளிமையான கேள்வி... ஹா ஹா... எங்கள் ப்ளாக் தான் அது"
"ம்... அது சரி... தேவதை விளையாட்டை பத்தி அழகா எழுதி இருந்தாரே ஒருத்தர்... யாருன்னு சொல்லுங்க பாப்போம்" என அப்பாவி சவாலாய் பார்க்க
ஒரு கணம் யோசித்த நாரதர் "மனச்சிதறல்களை பதிவு செய்யும் பாலாஜி சரவணா தானே" என்றார்
"தன் பிள்ளையோட ஸ்கூல்க்கு போன ஒரு நாள் ஸ்கூல் அனுபவம் பத்தி எழுதின ஒருத்தரை சொல்லுங்க பார்ப்போம்"
"அவரை தெரியாதா... அறிவியல் கதைகள் எல்லாம் கூட எழுதும் ஸ்ரீதர் நாராயணன்"
"ஒபாமாவே appointment வாங்கிட்டு தான் பாக்கணும்னு சொல்ற அளவுக்கு ஒரு வெட்டி ச்சே... பிஸியான ஒருத்தர் யாருன்னு சொல்லுங்க"
"ஹா ஹா ஹா... இவரை தெரியாதா... நம்ம கொஞ்சம் வெட்டி பேச்சு சித்ரா தானே"
"எதை கேட்டாலும் சொல்றாரே... எதாச்சும் டெக்னிகலா கேட்டு மடக்குவோம்..." என நினைத்த அப்பாவி "மென் பொருட்கள் பற்றியும் இன்னும் பல உபயோகமான பதிவுகள் தரும் ஒருவர்... யார்னு சொல்லுங்க...நீங்க நாரதர்னு நான் ஒத்துக்கறேன்"
"ஆறுபடை வீடு கொண்டவனின் பெயர் கொண்டவர் தானே அவர்... வடிவேலன் அல்லவா"
"என்னை மன்னித்து விடுங்கள் நாரதரே... நாட்டில் போலிகள் பெருகி விட்ட காரணத்தால் சற்று கவனமாக இருக்க வேண்டி உங்களை சோதித்து விட்டேன்" என அப்பாவி மனமுருகி கூற
"போகட்டும் அப்பாவி..அதனால் என்ன... என்னை இத்தனை கேள்வி கேட்டாயே ... உன்னை ஒரே ஒரு கேள்வி கேட்கலாமா?"
"கேளுங்கள் நாரதரே"
"உன்னுடைய 'ஜில்லுனு ஒரு காதல் கதை' எப்போ தான் முடியும்"
"அது...அது... எனக்கு முக்கியமா ஒரு வேலை இருக்கு சார்... நீங்க இங்கயே வெயிட் பண்ணுங்க... நான் வந்து சொல்றேன்" என போன அப்பாவி போனது தான்... வரவே இல்லை என நாரதர் வேஷத்தில் இருந்த மைண்ட்வாய்ஸ் நொந்து போய் உட்கார்ந்து கொண்டு இருக்கிறது...:)))
|
|
Hai vadai. Let me read the post later. he he
ReplyDeleteவாழ்க நாரதர்....வாழ்க அப்பாவி...'எங்கள் ப்ளாக்' குறிப்பில் வந்ததற்கு நன்றி...!
ReplyDeleteஹ்ம்ம் நல்ல அறிமுகங்கள் . அனைவருமே எனக்குத் தெரிந்தவர்கள்தான் ,
ReplyDeleteஅறிமுகப் படுத்தியதற்கு நன்றிங்க.
ReplyDeleteநாரதருடான உரையாடல் நல்லாயிருக்கு.
புதுவிதமாய் அறிமுகங்கள்!! நல்லாருக்கு!
ReplyDeleteஆஹா... >> அறிவியல் கதைகள் எல்லாம் கூட எழுதும் ஸ்ரீதர் நாராயணன்" << இப்படியெலலம் சொல்லியாவது புதுசா ஏதாவது எழுதறானான்னு செக் பண்றீங்களா? :))
ReplyDeleteநம்மளையும் நினைவு வச்சுகிட்டு கூப்பிட்டதுக்கு மிக்க நன்றி தங்கமணிக்கா :)
முன்னாடி ஆனந்த விகடன்ல அடிக்கடி நாரதர் ஸ்டைல்ல நையாண்டி கதையெல்லாம் வரும். அந்த மாதிரி ஒரு உணர்வு கொடுத்திட்டீங்க. நல்லாருக்கு :)
"அன்னவரம் ஸ்ரீசத்ய நாராயண சுவாமி திருக்கோயில்": //
ReplyDeleteபதிவு போட்ட நேரம் மைண்ட் வாய்ஸ் நாரதராக வந்து வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
மிக்க நன்றி தோழி.
அட்டகாசம் அப்பாவி...கடைசில நாரதர் வேஷம் கலைத்த மைண்ட் வாய்ஸ்..
ReplyDeleteவித்தியாசமான அறிமுக ஸ்டைல்...
ஆனந்த வாசிப்பையும் பிரபலமானவர்களோடு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...
நாரதருக்கே அல்வா கொடுத்த அப்பாவி வாழ்க! :)
ReplyDeleteபிரபலங்களுடன் என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி அப்பாவி!
நல்ல அறிமுகங்கள். நாரதரையும் விட்டுவைக்கலையா இந்த அ.த.வும் மைண்ட் வாய்சும்... :)
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்..
ReplyDeletemikka arumayaana pathiwu
ReplyDeleteபுதுவித அறிமுகங்கள் நன்றி
ReplyDeleteவழக்கம் போல இங்கயும், மேட்டர் கொஞ்சமா.... மொக்கை அதிகமா... அதெப்படிங்கம்மணி கட்டுப்படியாகுது.... ஹெ ஹெ ஹே.... நாரதர் கடசில தன் வேலையை காட்டியே விட்டார்..... மைண்டு வாய்ஸ் எங்கே....”ஸ்வீட் எடு, கொண்டாடு”...!!!!!
ReplyDeleteஎல்லோருக்கும் என் அன்பான வாழ்த்துகள்....
ReplyDeleteஅப்பாவி தங்கமணியால் அப்பாவி எனக்கு சூட்டிய தங்கமணி மகுடம்
ReplyDeleteசாமான்யன் நான் உங்கள் முன்னால் சுடாத மண்குடம் ...
சரள நடை எழுத்தில் .........
பிரபல்யமானவரின் பின்புலத்தில்
இந்த அற்புத அறிமுகம் என்னை பண்படுத்தும்
என் எழுத்தை பலப்படுத்தும் ..............
நன்றி இது எனக்கு வார்த்தையல்ல ...............வாழ்க்கை .
நன்றி ...........
பாவம் நாரதர் அப்பாவி கிட்ட மாட்டிகிட்டு என்ன பாடு பட்டாரோ....அறிமுகம் சொன்னவிதம் சூப்பர்....
ReplyDeleteசிறப்பான அறிமுகங்கள்... வாழ்த்துக்கள்!
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎங்க போனாலும் இந்த மைண்ட் வாய்ஸ்-க்கு உயிர் கொடுக்கின்ற எழுத்து நடை ரசிக்கும்படியாய் உள்ளது. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
ReplyDeleteஹி..ஹி..ஹி.. நகைச்சுவையுடன் அறிமுகப்படுத்திய விதம் அருமை. அனைத்து அறிமுக பதிவுகளையும் இனி படிக்க வேண்டியதுதான்..!!!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteநவீன
ReplyDeleteநவ
நாகரீக
நாரதரைப்புகுத்தி
நல்ல
நகைச்சுவையாகவே
அறிமுகங்களை அமர்க்களமாகச் செய்திருக்கிறீர்கள். பாராட்டுக்கள்.
வாழ்த்துக்கள் புவனா....! :)
ReplyDeleteஅறிமுகங்கள் அருமை..
கலக்குங்க...!
நல்ல கருத்தாழம்மிக்க அனைவரும் படிக்க வேண்டிய உபயோகமான பதிவு அப்பாவி. நன்றி.
ReplyDelete@ அனாமிகா - ஹா ஹா... did you really read later...:)))
ReplyDelete@ ஸ்ரீராம்.- நன்றிங்க
@ எல் கே - ஹி ஹி... உனக்கு தெரியாம இருக்குமா... சுட்டது பாதி அங்க இருந்து தானே...:))
@ thirumathi bs sridhar - நன்றிங்க
@ தமிழ் மகன் - நன்றிங்க
@ ஸ்ரீதர் நாராயணன் - ஹா ஹா... புதுசா எழுதுங்க... சந்தோஷம் தான்... நன்றிங்க...:))
@ இராஜராஜேஸ்வரி - நன்றிங்க ராஜி'ம்மா...:)
@ பத்மநாபன் - நன்றிங்க அண்ணா...:)
@ Balaji saravana - நன்றிங்க
@ வெங்கட் நாகராஜ் - ஹா ஹா... யாரையும் விட்டு வைப்பத்தில்லை நாங்கள்... நன்றிங்க...:)
@ அமைதிச்சாரல் - நன்றிங்'க்கா..:)
@ hajasreen - ரெம்ப நன்றிங்க
@ r.v.saravanan - நன்றிங்க
@ அன்னு - ஹி ஹி... மொக்கை கொஞ்சமா இருந்தா தூர்தர்ஷன் நியூஸ் மாதிரி ஆய்டுமே அன்னு...:)))
@ MANO நாஞ்சில் மனோ - நன்றிங்க
@ A.R.RAJAGOPALAN - நன்றிங்க
@ சௌந்தர் - ஹா ஹா... நன்றி சௌந்தர்
@ வைகை - நன்றிங்க
@ பிரவின்குமார் - நன்றிங்க... படிச்சுட்டு சொல்லுங்க...:)
@ மாதேவி - நன்றிங்க மாதேவி
@ வை.கோபாலகிருஷ்ணன் - நன்றிங்க சார்
@ Ananthi (அன்புடன் ஆனந்தி) - தேங்க்ஸ் ஆனந்தி...:)
@ Porkodi (பொற்கொடி) - அந்த கருத்தாழம்னு ஏதோ சொன்னீங்களே,அது எந்த கடைல கிடைக்குமுங்க ...:)))
(கொடி சிஸ்டர் கொடி சிஸ்டர்... நமக்குள்ள என்ன பிரச்சனைனாலும் பேசி தீத்துப்போம்... இப்படி எல்லாம் கமெண்ட் போட்டு பயம் காட்ட கூடாது ஒகே... :)))
அப்பாவி நல்ல அறிமுகங்கள்.
ReplyDeleteதோழி அப்பாவி தங்கமணிக்கு தங்களுக்கு நன்றி முதலில் என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு. என் தம்பிக்கு திருமணம் நடந்ததால் பதிவு தொடர்ச்சியாக எழுத இயலவில்லை அத்துடன் நிறைய அலுவலக விஷயங்களுக்காக வெளியூர் பயணமும் சேர்ந்து கொண்டது அதனாலும் பதிவில் தொடர்ச்சி இல்லாமல் போய் விட்டது. இனி விரைவில் புதிய பதிவுடன் www.gouthaminfotech.com தொடரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை அறிமுகப்படுத்திய அப்பாவி தங்கமணிக்கு என் நன்றியினை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும். நன்றி வணக்கம்
ReplyDeletehehe cute a arimugam panrenga akka
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ரசிக்கும்படியாய் உள்ளது. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்
ReplyDelete@ asiya omar - நன்றிங்க ஆசியா
ReplyDelete@ Vadivelan R - நன்றிங்க வடிவேலன்
@ Gayathri - தேங்க்ஸ் காயத்ரி..:)
@ VELU.G - நன்றிங்க
@ தி. ரா. ச.(T.R.C.) - நன்றிங்க
அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete@ Jaleela Kamal - thanks'nga..:)
ReplyDelete