07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Sunday, May 15, 2011

கருணிடமிருந்து பொறுப்பேற்கிறார் கவிதை வீதி சௌந்தர்

அன்பின் சக பதிவர்களே


இன்றுடன் முடியும் வாரத்திற்குப் பொறுப்பேற்ற அருமை நண்பர் கருண், தான் ஏற்ற பொறுப்பினைச் சரிவர நிறைவேற்றி, மன மகிழ்வுடன் நம்மிடமிருந்து விடை பெறுகிறார். இவர் கடந்த ஏழு நாட்களில ஏழு இடுகைகள் இட்டு, எழுபது பதிவர்களையும் அவர்களது அறுபத்தைந்து இடுகைகளையும் பல் வேறு தலைப்புகளில் அறிமுகம் செய்து, ஏறத்தாழ நூற்று நாற்பதுக்கும் மேலாக மறுமொழிகள் பெற்றிருக்கிறார்.

நண்பர் கருணை வாழ்த்தி வழி அனுப்புவதில் பெருமை அடைகிறேன்.

நாளை துவங்கும் வாரத்திற்குப் பொறுப்பேற்க வருகிறார் நண்பர் கவிதை வீதி சௌந்தர். இவரது முழுப்பெயர் மு.சௌந்தர பாண்டியன். திருவள்ளூர் அருகே உள்ள வெள்ளியூர் கிராமத்தினைச் சேர்ந்தவர். M.A., M.Phil., B.Ed படித்தவர். தனியார் பள்ளியில் வரலாற்று ஆசிரியராகவும், மற்றொரு கல்வி மையத்தில் கணக்கு பதிவியல் ஆசிரியராகவும் பணி புரிகிறார்.

தூங்காத விழிகளோடு ...என் பேர் பிரம்மன் என்ற தலைப்புகளில் இரு கவிதை நூல்கள் வெளியிட்டுள்ளார். சுயமரியாதை இயக்கமும், ஆதிதிராவிடர்களும் என்ற ஒரு ஆய்வுக் கட்டுரையும் வெளியிட்டிருக்கிறார்.

திருவள்ளூர் மாவட்டம் ஊர் காவல் படையின் உட்கோட்ட அதிகாரியாகவும் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். திருவள்ளூர் மாவட்ட ஊர்காவல் படையின் வருட மலராக வெளிவரும் ”ஊர்வேலி” இதழின் ஆசிரியராகவும் செயல்படுகிறார்.

நண்பர் கவிதை வீதி சௌந்தரை - வருக ! வருக ! பொறுப்பேற்க வருக ! அறிமுகங்களை அள்ளித் தருக ! என வரவேற்று வாழ்த்துவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

நல்வாழ்த்துகள் கருண்
நல்வாழ்த்துகள் கவிதை வீதி சௌந்தர்

நட்புடன் சீனா

7 comments:

  1. சோதனை மறுமொழி

    ReplyDelete
  2. வருக சௌந்தர். வலைச்சரத்தில் தங்கள் பூக்களை தொடுக்க.

    ReplyDelete
  3. அதிகாரியின் அதகளத்தை பார்க்க ஆசையுடன் வரவேற்கின்றேன்.

    ReplyDelete
  4. வாங்க சௌந்தர். நன்றி கருன்.

    ReplyDelete
  5. வருக! வருக! கவிதை வீதி நண்பா! எங்களுக்கு இன்பமான பதிவுகள் தருக தோழா!

    ReplyDelete
  6. வருக சௌந்தர்!அறிமுகம் கவிதை நடையிலேயே தருக!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது