07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, May 31, 2011

கைய வச்சிகிட்டு சும்மா இருங்கப்பா.!


ரொம்ப நாளா எனக்குள்ள ஒரு ஆசை இருந்தது. என்ன அது.? பெரிய தங்க மலை ரகசியம் இல்ல என்பதால் உங்களிடம் இத நான் சொல்லிடுறன். அதாவது ஒரு பென்சில எடுத்து எப்படியாவது ஒரு ஸ்பூன(spoon) வரைந்திடணும். எனக்கு வரையறது பிடிக்கும். ஆனா வரைய தெரியாதே.! சரி வரைய தெரியாட்டி பரவால போய் மத்தவங்க வரைந்ததாவது பாக்கலாம்னு நான் எட்டி பாத்தத பத்தி பாப்போமா.? இதில் அறிமுகம் என்று பார்த்தால் அது பதிவாக தான் இருக்கும் பதிவராக இருக்காது என நினைக்கிறேன். பலர் மிக பிரபலமானவர்கள்.

வரைதல பத்தி எழுதணும்னு எனக்கு தோன்றியதும் முதலில் நான் எட்டி பாத்தது இவர் ப்ளாக்கை தான். ஒவ்வொரு வரைதலும் அவ்வளவு நேர்த்தியாக சிறப்பாக இருக்கும். இவரின் வரைதலை பாத்து நீங்களும் கமண்டடிக்களாமே.!! பாக்கணுமா.? இங்கிட்டு போங்க. இத பாக்காம விட்டுட்டா நீங்க எதையோ மிஸ் பண்றீங்கன்னு தான் சொல்ல முடியும்.

அடுத்து என் கை நேராக தேடி போனது தோழி ப்ரியாவை தான். நான் முதலில் பதிவுலகம் வந்தபோது பார்த்த முதல் ஓவியர் இவர். நேசித்து வரைகிறேன் என்னும் பதிவில் அவர் போட்டிருக்கும் அந்த ஓவியங்கள் உண்மையில் சிறப்பாகவே இருக்கு. போய் பாக்குறதால நாம ஒண்ணும் குறைந்திட மாட்டோமே.! போய் தான் பாக்குறது.

கூல்.. அட நான் உங்கள சொல்லலங்க. பதிவர் பெயர சொன்னேன். இவருடைய இந்த ப்ளாக்கில் என்னாத்த எழுதுராருனு ஒண்ணுமே புரியல. ஏனா அவர் ஒண்ணுமே எழுதுறது இல்ல. இதில் முழுக்க முழுக்க ஓவியங்கள் மட்டுமே திரியுது. இந்த ஓவியங்களை பார்த்து அவரை கொஞ்சம் ஊக்குவியுங்களேன். உங்களுக்கு தெரியாததா ஊக்குவிக்க. கமான் ஸ்டார்ட்.!!

காஞ்சி காமாட்சியம்மனை பாக்கணுமா.? வாங்க நான் கூட்டிட்டு போறேன். ஏ.! ஏ.! யாருயா அது மூட்டையெல்லாம் கட்டுறது.? எல்லாம் என்னய போலவே இருக்கீங்களே.! நான் சொன்னது அந்த சுட்டி மூலமா கூட்டிட்டு போறேன்னு. இங்க போய் பாருங்க.

சரி இப்ப ஒரு ஒப்பீடு போப்போம். அதாவது வரைந்ததுக்கும், போட்டோவுக்குமான ஒப்புமை. அந்த ஒப்புமையில் எது நல்லாயிருக்குனு பாக்கலாம். ஆனா எனக்கென்னவோ இங்க எல்லாமே நல்லா இருக்குற மாதிரி தான் தெரியது. உங்களுக்கு.?

இப்படி இதுமாதிரி பாத்து பாத்துகிட்டு இருந்த நான். ஒரு நாள் நானும் கத்துகிடலாம்னு ஒரு வேகத்தோட புரட்டுன பக்கம் தான் இந்த பக்கம். இங்க ஏதோ சொல்லியிருக்காங்கனு மட்டும் புரியுது ஆனா என்ன என்று தான் புரியல.

சரி நமக்கு சாதாரண வாழ்க்கையில இதெல்லாம் தேறாது. நம்ம கம்ப்யூட்டர்லயாவது முடியாதுனு தேடி போன இடம் இதுதான். இதுலயும் கம்ப்யூட்டர்ல எப்படி படத்தை ட்ராயிங்கா மாத்தனு சொல்றாங்க.

ஆனா எனக்கு இதெல்லாம் தெரியாது. நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட டா கூர் னு.!! என்னை நானே தேத்திகிட்டேன். இப்ப என்னால என்ன செய்ய முடியும். எல்லாரையும் கைய வச்சுகிட்டு வரையாம சும்மா இருங்கனு சொல்லிகிட்டு திரிய வேண்டியது தான். பின்ன என்ன அடுத்த பதிவுல சந்திப்போம். வர்ட்டா.!?

''கொடூரமான தலைவர்கள் மாற்றப்படுவது நல்ல தலைவர்களை கொடூரமானவராக மாற்றுவதற்கே.!''-சே குவேரா

12 comments:

  1. அறிமுகங்கள் அட்டகாசம்! இதுவரை இவர்களைத் தெரியாது..நன்றி பாஸ்!

    ReplyDelete
  2. இதுவரை பார்க்காத அறிமுகங்கள் வாழ்த்துக்கள்

    கலக்கறீங்க

    ReplyDelete
  3. புதிய அறிமுகங்கள்...நன்றிகளும் வாழ்த்துக்களும்

    ReplyDelete
  4. புதிய அறிமுகங்கள்...நன்றிகளும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    ReplyDelete
  5. இதுவரை தெரியாத அழகான அருமையான ஓவியர்களை அறிமுகம் செய்துள்ளது பாராட்டுக்குரியது. மிக்க நன்றி.

    ReplyDelete
  6. என் தளத்தை அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி கூர்மதியன் அவர்களே.உங்கள் அறிமுகத்தால் பிற ஓவிய நண்பர்களையும் கண்டுகொண்டேன்... மிக்க நன்றி...

    ReplyDelete
  7. புது அறிமுகங்கள் அருமை :)
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. மாப்பிளை, வெரைட்டியான சிந்தனை. ஒரு புது முயற்சி என்றே சொல்லலாம், இதுவரை இல்லாதது மாதிரி புது மாதிரிப் பண்ணியிருக்கிறீங்க. கலக்குங்க சகோ.

    ReplyDelete
  9. வித்தியாசமான அறிமுகங்கள் நன்றி தம்பி.

    ReplyDelete
  10. அறிமுகம் செய்ததற்கு மிக்க நன்றி! அனைவருக்கும் எனது அன்பான வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  11. அட..இது செம கூர்...எனக்கு ரொம்ப பிடிச்சது...வித்யாசமா யோசிக்கிறீங்க....என்னவோ இதுவும் ஓவியம் பிளஸ் இயற்க்கை fusion மாதிரி...சூப்பர்

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது