அமர்க்களப்படுத்தும் அறிமுகத் திங்கள்...
➦➠ by:
வேடந்தாங்கல்-கருண்
நான் ஒரு ஆசிரியர். இப்ப ஒரு வாரத்துக்கு வலைச்சரம் ஆசிரியர் ஆயிட்டேன். என்னை வலைச்சரத்துக்கு இந்த வார ஆசிரியராய் அழைத்த சீனா சார் அவர்களுக்கு மிக்க நன்றி.
இன்னிக்கு என்னை பத்தி ஒரு சின்ன விளம்பரம். என்னைப் பற்றி நானே சொல்லுவதை விட பிரபல பதிவர்கள் என்ன சொல்றாங்க பார்ப்போம்.
இவரு என்னோட வலையுலக குரு. நம்ம ரஹீம் கசாலி என்னப்பத்தி என்ன சொல்றாரு.
கருண்....
குறுகிய காலத்தில்....கிடுகிடுவென வளர்ந்த கலகல பதிவர்...
அவரே சொல்வது போல் பல்சுவை பதிவுகளை அழகு தமிழில் தருபவர்...
அனைத்து பதிவுகளையும் படித்து வாக்கும், பின்னூட்டமும் போடும் அவரே சொல்வது போல் பல்சுவை பதிவுகளை அழகு தமிழில் தருபவர்...
அவரின் பொறுமை என்னை சிலிர்க்க வைக்கிறது....
ஆசிரியர் பணியில் இருந்து கொண்டு இவருக்கு மட்டும் எப்படித்தான் முடிகிறதோ இதெல்லாம்?
இவர் பதிவில் எனக்கு பிடித்த பதிவு....
யார் உனது சிறந்த நண்பன் ?
அடுத்து நம்ம நல்ல நேரம் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
2009 ஆம் வருடம் முதல் எழுதி வரும் கருன்,ஆசிரியராக இருப்பதால் ஏப்ரல்,மே மாதம் மட்டும்தான் நான் பதிவுகள் எழுதுகிறேன்.மற்ற மாதங்கள் பதிவு போடுவது இல்லை...அல்லது குறைவு என்றார்....அவர் பதிவுலக வரலாற்றை புரட்டி பார்த்தால் அட..ஆமாம்.அப்ப வரும் ஜூன் மாசம் பள்ளிக்கூடம் திறந்ததும் கடையை மூடிடுவீங்களா பாஸ். கணினி ஆசிரியரே...கவிதை வரிகளின் ஊடே எதார்த்த வாழ்வை பிரதிபலிப்பது இவரது ஸ்டைல்....பெரும்பாலும் கவிதை பதிவுகளே. 300 ஃபலோயர்ஸ் தாண்டி வெற்றிகரமாக பிரபல பதிவராக முன்னேறும் கருன் சாருக்கு இன்னொரு ஆசிரியர் பதவியும் கோடை கால விடுமுறையில் கிடைத்துள்ளது அது தான் வலைச்சர ஆசிரியர் பதவி...வெளுத்துக்கட்டுங்க..!
இவர் பதிவில் எனக்கு பிடித்த பதிவு....
மனம் எனும் சாக்கடை...!
அடுத்து நம்ம நாஞ்சில் மனோ என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
"வேடந்தாங்கல்" இவரின் வலைப்பூ பெயரை போலவே இவரின் தளம் ஒரு பல்சுவை விருந்து. நான் விரும்பி படிக்கும் வலைப்பூ. கவிதை, சிரிப்பு, அரசியல், சாடல், மௌவுன எதிர்ர்ப்பு, கிண்டல், நக்கல், நையாண்டி, சமூக அலங்கோலம் பற்றி எழுதுகிறார். ஏற்கெனவே இவர் வாத்தியாராக இருப்பதால், சமூக அக்கறை குறிப்பாக, படிக்கும் மாணவர்கள் மீது மிகவும் அக்கறை கொண்டவர், மாணவர்களுக்கு புது புது யோசனைகளை சொல்லி தருவதும் உண்டு.... எனக்கு இவர் நண்பனும் கூட....எனக்கு பிடித்த பதிவு ...
திரும்ப வருமோ அந்த நாட்கள்...!
அடுத்து நம்ம விக்கி உலகம் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
உங்கள் பொன்னான நேரத்தை பல நல்ல பதிவுகளுக்கு
கொடுத்துள்ளீர்கள்......பதிவர் என்பதை கடந்து நல்ல நண்பர் என்பதில் பெருமை கொள்கிறேன்...பொறாமை இல்லாத நண்பன்.......என்னை பொறுத்தவரை மாப்ள என்று உரிமையோடு அழைக்கும் நண்பன்..... தனக்கு தெரிந்ததை ஊருக்கு எடுத்துரைக்க நினைக்கும் அப்பாவி.......தனிப்பட்ட விருப்பு வெறுப்பை யார் உமிழ்ந்தாலும்....அதனை பெரிது படுத்தாத நல்ல மனசுக்கு சொந்தக்காரன்.........
எனக்கு பிடித்த பதிவு...............
வளைகுடாவில் தமிழன்...!
அடுத்து என் நண்பர் கவிதை வீதி சௌந்தர் என்ன சொல்றாருன்னு பார்ப்போம்.
என்னை பதிவுலகில் அறிமுகப்படுத்தியவர் கரண்தாங்க.. ஆரம்பத்தில் நான் பதிவுகள் மட்டுமே போட்டுகொண்டிருந்தேன். அப்போது இவருடைய ஒத்துழைப்புடன் தான் மற்றதளங்களுக்கு எவ்வாறு செல்வது, எவ்வாறு பின்னூட்டம் இடுவது என்று கற்றுக்கொடுத்தார், அதன் பிறகே கவிதைவீதியும் பிரபலமானது, நாங்கள் இருவரும் அதிகபட்ச நேரம் ஒன்றாக இருப்பவர்கள் ஆனால் தற்போது பதிவுலகம் வந்தபிறகு ஒன்றாக அதிக நேரம் செலவிடமுடியவில்லை என்றாலும் உலகலவில் அதிக நண்பர்களை பெற்றிருப்பது மிகவும் மகிழ்ச்சியடையக்கூடியதாக இருக்கிறது...
கரண் அவர்களின் கல்விப்பணியின் வேகமும் விவேகமும் எனக்கு தெரியும் அதை வலைச்சரம் மூலமாக நீங்களும் தெரிந்துக்கொள்ளுங்கள்...
குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து தற்போது வலைச்சரத்தில் பெருப்பேற்றுள்ள கருண் அவர்களை வாழ்த்துகிறேன்..
அன்புடன்
கவிதை வீதி சௌந்தர்...
அவர் தளத்தில் எனக்கு பிடித்த பதிவுகள் :
ப்ளஸ் டூ-வுக்குப் பிறகு என்ன படிக்கலாம்?
கண்களை திறந்துக் கொண்டே ஒரு கனவு..
உங்கள் தோல்வி துவண்டு போக அல்ல..
என்ன நண்பர்களே என்னைப்பற்றி என் நண்பர்கள் அதிகமாகவே சொல்லிவிட்டார்கள். இனி சொல்வதற்கு ஒன்றும் இல்லை...நன்றி...
நாளை பதிவர்கள் அறிமுகம்.... நாளை சந்திப்போம்...
|
|
அடிச்சி ஆடு மாப்ள வாழ்த்துக்கள்!
ReplyDeleteவாழ்த்துக்கள் கருண்
ReplyDeleteAll the best!!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் கருண், அவர்களுக்கு வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாழ்த்துகள் கருண்.
ReplyDeleteAll the best!!
ReplyDeleteவலைச்சரத்தில் கலக்க என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteகலக்குங்க கருண்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteஎலேய் வாத்தி நின்னு ஆடுலெய் மக்கா...
ReplyDeleteவாழ்த்திய உள்ளங்களுக்கு நன்றி....
ReplyDeleteசீனா அய்யாவுக்கும் எனது நன்றிகள்....
ReplyDeleteWishes karun! :-)
ReplyDeleteவாழ்த்துக்கள் கருன்.. மிக்க மகிழ்ச்சி.. தொடர்ந்து எழுதுங்கள்.. !
ReplyDeleteஅன்பின் கருண்
ReplyDeleteபுது விதமான அறிமுகம். நண்பர்கள் கருணைப் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதனை அப்படியே இடுகையாக இட்டமை நன்று. நல்வாழ்த்துகள் கருண் - நட்புடன் சீனா
வித்தியாசமான அறிமுகத்தோடு வரவு கருண்.வாழ்த்துகள் !
ReplyDeleteஉங்களை பற்றிய பிறரின் அறிமுகம், உண்மையிலேயே அற்புதம். வாழ்த்துகள் கருன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள் நண்பரே தொடர்ந்து கலக்குங்க..
ReplyDeleteaarambame athiradi. intha athiradi thodara vaazhthukkal nanbaa.
ReplyDeleteநல்ல தொடக்கம் கருண்! நம்மளைப் பத்தி நாமளே சொல்லாம அடுத்தவங்கள சொல்ல வைக்கிறது நல்ல விஷயம் தானே! வாழ்த்துக்கள்!!
ReplyDeleteஆரம்பமே அசத்தல்!கலக்குங்க,கருண்!
ReplyDeleteகரூன் வாழ்த்துக்கள். உங்களை பற்றிய அறிமுகத்தை நீங்கள் சொல்லாமல் உங்கள் நண்பர்களை சொல்ல வைத்த தங்களின் வித்தியாசமான முயற்சி நல்லா இருக்கு. எனக்கு தெரிந்தவரை யாரும் இதற்க்கு முன் இது போல் அறிமுக படுத்த வில்லை.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியராக பணியினை இனிதே தொடங்கியிருக்கும் வேடந்தாங்கல் கருன் அவர்களுக்கு எங்களின் பூங்கொத்து வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர்களின் கைகளை கோர்த்து ஆரம்பித்த விதம் அருமை கருன்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.கருன்.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteவலைச்சரத்தில் சிறப்பாக செயல்பட என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteதூள் கிளப்புங்கள் நண்பரே.....வாழ்த்துக்கள்...
ReplyDeleteபுது விதமான அறிமுகம்.வாழ்த்துகள் கருண்.
ReplyDeleteBest wishes! :-)
ReplyDeleteவாழ்த்துகள் சகோ. அடித்து தூள் கிளப்புங்க.
ReplyDeleteவித்தியாசமான அறிமுகம். புதுமையாகவும் இருக்கு.
Congrats Karun...
ReplyDeleteஇன்னைக்குத் தான் வர முடிஞ்சது...கலக்குங்க.
ReplyDeleteஆரம்பம் அதகளம்..நண்பரே
ReplyDelete