குடு மார்னிங் ஆபிஸர்ஸ்.!!
➦➠ by:
தம்பி
வலைச்சரம்--!! ஒரு வார ஆசிரியர்.!! நான் தான் நானே தான். எங்க ஆபிஸ்ல கூட யாரும் என்ன மதிக்காதபோது எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த சீனா ஐயா முதல்கொண்டு அனைவருக்கும் எனது நன்றிகள் மட்டும் சொல்லிகிடுறன். இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் என் கையில சிக்கி படாத பாடு பட போகுது.
வலைசரத்தில் எனக்கு பிலாசபி பிராபகரின் பங்கு ரொம்ப பிடிச்சது. அவரை போலவே பர்சனல் இன்ட்ரோ இல்லாம நாமும் ஒரு நாள் ஆசிரியராக ஆகும் போது செய்யணும்னு இருந்தேன். ஆனா என்ன செய்ய.? இப்ப எனக்கு வாய்ப்பு வந்த போது நான் ஒண்ணும் பெரிய ஆளா இல்லையே.! அதனால என்ன பத்தியும் ஒரு 'பிட்'அ போடுறது தான் பெஸ்ட்னு தோணுது.!(ஏன் யா நான் சரியா பேசுறேனா.?)
முதலில் நான் இங்கு வந்த போது என் பெயரில் கூர்மதியன் என வரக்கூடாது கூர்மதியான் என வரவேண்டும் என பலரும் சொன்னர். அது எனக்கு தெரியாமல் இல்லை. ஆனால் என் பெயர் எதற்காக இப்படி வந்ததோ அதை மரபுக்காக மாற்ற விரும்பவில்லை. எதற்காக வந்தது.? அதை அண்ணன் எல்.கே., அழைப்புக்கு இணங்க என் பெயருக்கான புராணம் என்று எழுதி முடித்தேன். இலக்கணமோ இலக்கியமோ.!! கூர்மதியன் என்றே இருக்கட்டும்.
அப்பரம் நான் ரொம்ப ஃபீல் பண்ணி எழுதின பதிவுனா அது எங்க ஸ்கூல பத்தினு சொல்லலாம். ஸ்கூல்..!! என் பள்ளி அழுவதை கண்டேன் என்னும் அந்த பதிவு-மனதில் ஒருவித சோகத்தோடே எழுதினது.
வேலை விசயமா அடிக்கடி வெளியில சுத்துவேன் அப்படி ஒரு நாள் வேலை விசயமா போயிருந்தப்போ அங்க பார்த்தது ரொம்பவே நல்லா இருந்தது. இதெல்லாம் எங்கயா போச்சு என்னும் பதிவில் அதை பற்றி குறிப்பிட்டிருப்பேன்.
அடுத்ததா அரசியல்..!! அரசியல்னா எனக்கு உயிர்னு கூட சொல்லலாம். CRICKET EXPERTனு சொல்றாங்களே அது போல எல்லா மனிதர்களுக்கும் நான் ஒரு POLITICS EXPERT-ஆக தெரியணும்னு எனக்கொரு ஆசை. ஏதோ எனக்கு தெரிந்த விடயங்களை கொண்டு கலைஞரும், திருவாரூரும், தேர்தலும்னு ஒரு பதிவு போட்டேன்.
அதே சமயம் எனக்கு அப்பப்போ கவிதைகள் எழுதுறது ரொம்ப பிடிக்கும். இப்ப கொஞ்ச நாளா அதிக ஆணி என்பதால் எழுதாம இருந்தேன். நான் எழுதியதில் எனக்கு பகிரகூடிவை என்று பார்த்தால், நான் கண்ட மீசையின் பெயர் என்ன.?, எனக்காக என்னை பிரிந்தால்.!, அதை நானும் அனுபவித்திருக்கிறேன் இருப்பினும்.!? போன்றவை. அரசியல் கவிதைகள்னு கூட எழுதிகிட்டு திரிவேன். அப்படி எழுதியதில் கலைஞரே-நீ ஒரு உத்தமன் என்னும் பதிவு ஒரு வித வருத்தத்தோடே எழுதியது.
இப்படி என்னுடைய பதிவுகள் மூலம் என்னை பத்தி சொல்லணும்னா சொல்லிகிட்டே போவேன். ஆனா கேக்குறதுக்கு யாராச்சும் இருக்கணும்ல. அதனால இதோட ஸ்டாப்பிக்குறேன்.!! இனி ஒன் வீக் வலைச்சரம் என் கட்டுப்பாட்டுல. யாராச்சும் உள்ளாக்க பூந்து இம்சிச்சீங்கோ போட்டுதள்ளிடுவன்.
''நம் செயலுக்கு ஒத்துவராத மற்றவர்கள் வார்த்தைகள் நமக்கு முக்கியமற்றது''-சே குவேரா
|
|
முடிந்தவரை முற்றிலும் புதியவர்களை அறிமுகப் படுத்துங்கள் கூர்மதி
ReplyDeleteவலைச்சரத்தில் வெற்றிக்கொடி கட்ட வாழ்த்துகள், கூர்மதியன்!!
ReplyDeleteவலைச்சர ஆசிரியர் கூர்மதியனுக்கு வாழ்த்துகள். புதிய பல பதிவர்களை அறிமுகப் படுத்துங்கள். தொடர்ந்து வந்துடுவோம்....
ReplyDeleteநல்வரவு நண்பா !!!
ReplyDeleteவலைச்சர ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்...புதிய பதிவர்களை அறிமுகம் செய்யுங்கள்....சுய அறிமுகம் அசத்தல் சகோ .....
ReplyDeleteCongrats Thambi
ReplyDeleteAll d best..:))
ReplyDeletewelcome. All the best
ReplyDeleteவாய்யா தம்பி... வலைச்சரம் ஒரு வாரத்துக்கு உன் கட்டுப்பாடா? ம்ம.. கலக்குய்யா.
ReplyDeleteவலைச்சரம்--!! ஒரு வார ஆசிரியர்.!! நான் தான் நானே தான். எங்க ஆபிஸ்ல கூட யாரும் என்ன மதிக்காதபோது எனக்கு இந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த சீனா ஐயா முதல்கொண்டு அனைவருக்கும் எனது நன்றிகள் மட்டும் சொல்லிகிடுறன். இன்னும் ஒரு வாரத்துக்கு வலைச்சரம் என் கையில சிக்கி படாத பாடு பட போகுது.//
ReplyDeleteஐயோ தாயி! காளியம்மா காப்பாத்து!
இப்ப எனக்கு வாய்ப்பு வந்த போது நான் ஒண்ணும் பெரிய ஆளா இல்லையே.! அதனால என்ன பத்தியும் ஒரு 'பிட்'அ போடுறது தான் பெஸ்ட்னு தோணுது.!(ஏன் யா நான் சரியா பேசுறேனா.?)//
ReplyDeleteமாப்பிளை, முதல்ல அந்தப் போத்தலைத் தூர வீசிட்டு, அப்புறமாப் பேசுங்க;-))
தத்துவத்தோடு கூடிய, நகைச்சுவை நடையில் சுவாரஸ்யமான சுய அறிமுகம் அருமை சகா.
ReplyDeleteதொடர்ந்தும் ஜமாய்ங்க பாஸ்.
வாழ்த்துக்களோடு
நிரூபன்.
வாழ்த்துகள் வாழ்க
ReplyDeleteபணிசிறக்க வாழ்த்துகள்
ReplyDeleteவாழ்த்துகள் தம்பி....
ReplyDeleteவாழ்த்துக்கள்....
ReplyDeleteதம்பிக்கு மனம் நிறைந்த வாழ்த்துகள் !
ReplyDelete@எல் கே: என்னையும் நம்பி இப்படி ஒரு கமண்டிட்ட உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய போகிறேன்.. அவ்வ்வ்
ReplyDelete@சிவகுமார்: வெற்றி கொடியா.. அது எந்த வீட்டு மாடியிலங்க கட்டணும்.? சரி எங்காவது இழுத்து புடிச்சு கட்டிடுவோம்..
ReplyDelete@வெங்கட்: மிக்க நன்றி நண்பரே.! முடிந்த வரை முயற்சிக்கிறேன். நன்றி
ReplyDelete@பிரபு: வாங்க நண்பரே.!! ஹி ஹி.. நல்வரவானு போகும் போது தான் தெரியும்..
ReplyDelete@ரேவா: மிக்க நன்றி ரேவா.. நான் உங்களிடம் நான் என்ன செய்ய போகிறேன் என ஏற்கனவே சொல்லிட்டேனே.!! ஹி ஹி.. அதை கேட்டபின்னும் இப்படி ஒரு கமண்ட்டா.. ஹி ஹி.. நன்றி
ReplyDelete@சசி: நன்றி சசி..
ReplyDelete@ஆனந்தி:நன்றி ஆனந்தி
ReplyDelete@சாகம்பரி: நன்றி தோழமையே.!!
ReplyDelete@ப்ரகாஷ்: ஹி ஹி.. என் கட்டுபாடு தான்.. நான் விஜயகாந்த் மாதிரி சிந்தாது சிதறாது..
ReplyDelete@நிரூ: வாங்க நிரூ.. உங்க வாழ்த்தை போலவே சிறப்பா செயல்படுவேன்.. ஹி ஹி.. இன்னமுமா இந்த உலகம் நம்ம நம்புது.?
ReplyDelete@ராஜா: நன்றி நண்பரே.!!
ReplyDelete@மனோ: நன்றி நண்பரே!!
ReplyDelete@பன்னி: பன்னி சார்.. நீங்க இங்க தான் சுத்திகிட்டு இருக்கீங்களா.? நன்றி நன்றி..
ReplyDelete@ஹேமா: ஆஹா.. ஹேமா வாழ்த்துசொல்லிட்டாங்க.. இனிமேல் உச்சம் தான்.. சும்மா பில்டப் தான்.. ஹி ஹி.. நன்றிங்க..
ReplyDeleteஅன்பின் தம்பி கூர்மதியன் - சுய அறிமுகம் நன்று - சுட்டிய அனைத்துப் பதிவுகளையும் சென்று பார்த்தேன் - அருமை - அருமை. பல புதிய பதிவர்களை அறிமுகம் செய்க - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா
ReplyDelete