இவுங்க மேல எல்லாம் எனக்கொரு பாசம்.!!
➦➠ by:
தம்பி
பதிவுலகில நான் காலடி எடுத்து வைத்த நொடியிலிருந்து இப்போது வரைக்கும் நிறைய பதிவர்களின் பதிவுகளை படித்திருக்கேன். அதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ரசனை என்ற பெயரில் எனக்கான சில ரசனைகளில் சில பதிவர்கள் என்னை மிகவும் கவர்ந்தனர்.
அப்படி கவர்ந்தவர்களை இங்கே பகிர விரும்புகிறேன்.
முதலில் பிலாசபி பிரபாகரன். இவரிடத்தில் என்ன பிடிக்கும்னு கேக்குறீங்களா.? ஹெல்ப்பிங். அதாங்க உதவுறது.!! அதுக்குனு அவரு முக்குல மூணு அனாதை ஆசிரமம் நடத்துறாரு, அந்தாண்ட நாப்பது பசங்கல படிக்க வைக்கிறாருனு நினச்சுடாதீங்க. எனக்கு ப்ளாக் எப்படி இருக்கணும்னு சொல்லிகொடுத்த குரு அவரு. ரொம்ப புல்லரிக்குதா பிரபா.?
அடுத்து ஹைக்கூ அதிர்வுகள் ஆனந்தி. இவுங்க கிட்ட இருந்து நிறைய கத்துகிட்டேனு தான் சொல்லணும். எவ்வளவோ நல்ல விடயங்களை கத்துகிட்டு இருக்கேன். அது பதிவுலகில் மிக அவசியம் இல்லாட்டியும் என் வாழ்க்கைக்கு ரொம்ப முக்கியமானது. தேங்க்ஸ் ஆனந்தி. இவுங்க பதிவை விட தலைப்பும், படமும் சூப்பரா இருக்கும்.
அப்பரம் யாரு.? கிடு கிடுனு உச்சத்துக்கு போன நிரூபன் தான் அது. உடனே கத்தி கம்ப தூக்கிட்டு வந்திடாதீங்க நிரூ. ஏனா அவருக்கு புகழ்ந்தா பிடிக்காது. அவரு இன்னும நாற்றாவே இருக்கிறாராம். சரி, இவருகிட்ட என்னை போல கமண்ட்டு போடுறது ரொம்ப பிடிக்கும். ஆனா அவரு சொல்லும்போது அவர போலவே நான் கமண்ட் போடுறன்னு சொல்லுவாரு. ஹி ஹி. இவரோட குழந்தை பருவ நிகழ்வுகள் அனைத்தும் அவரு சொல்லும்போது ரொம்ப பிடிக்கும்.
கல்பனா.!! எனக்கு இவருகிட்ட பிடித்ததுனு பாத்தா கொஞ்சம் வித்யாசம் தான். அதாவது இவங்களோட கவிதைக்கு இவங்களோட TAG ஒண்ணு போடுவாங்க. அது ரொம்ப பிடிக்கும். பதிவுலகில் சுத்தி வரும் பாச மலர்னே(மலரா.!?) சொல்லலாம்.
பன்னிகுட்டி ராம்சாமி- இவர தெரியாதவரோ.! இல்ல இவரு ப்ளாக் பக்கம் எட்டி பாக்காதவறே இருக்கமாட்டாங்க. ஆளு கொஞ்சம் காமெடியா எழுதினாலும் என்கிட்ட கொஞ்சம் சீரியஸாவே பேசுவாரு. எனக்கு இது தாங்க புரியவே மாட்டேங்கது. இவர எனக்கு எதுக்காக பிடிக்கும்னே தெரியலங்க.!!
நாஞ்சில் மனோ + சிபி- இவுங்க ரெண்டு பேருகிட்டயும் புடிச்சது ஒண்ணே ஒண்ணுதான். சாலியா பேசுறது. என்ன டெரரா பேசினாலும் சாலியா எடுத்துப்பாங்க. இவுகள எந்த லிஸ்ட்ல சேக்குறதுனே தெரியலங்க. ஆனா இப்ப சிபி கொஞ்சம் சீரியஸா மாறிகிட்டே கிடக்காரு. வேணாம் சிபி.. வேணவே வேணாம்..
ராஜ நடராஜன்- ரொம்பவே சீரியஸாவே பதிவு போடுறவரு. இவர பத்தி எனக்கு அதிகமா தெரியாது. இருந்தாலும் ஒருவரின் பதிவுகளை மட்டுமே வைத்து எனக்கு மிகவும் பிடித்தவரானவராக இவரை நச்சென சொல்லலாம். சூப்பர் ராஜ நட.
கயல்விழி- ரொம்ப பேமஸ் இல்லாத ஒரு பதிவர். ஆனா அவருடைய கவிதைகள் எல்லாம் பக்காவா இருக்கும். சரியான வார்த்தை அமைப்பு, சரியான வரி அமைப்புனு எல்லாமே பக்காவா எழுதுவாங்க. படிப்பு, எக்ஸாம்னு ரொம்ப படிக்கிறவங்க அதனால பதிவுலகில் அதிகமா சுத்தாதவங்க. எக்ஸாம் முடிஞ்சதும் ஒரு பெரிய ரவுண்டு வருவேன்னு சொல்லி இருக்காங்க. 10வது 12வது ஸ்டேட் ரேங்க் எல்லாம் வாங்கினவங்க. ஹி ஹி..
பலே பிரபு- ஹி ஹி.. ஆமாம் இவர எதுக்காக எனக்கு பிடிக்கும்.? அது ஒண்ணுமில்ல நாங்க ரெண்டு பேரும் ஒரு நல்ல நண்பர்கள். எல்லாத்தையும் ஷேர் பண்ணிப்பாரு. நடந்து முடிந்த இறுதிகட்ட தேர்வில் 88.5% மார்க் எடுத்தாராம். என்ன செய்ய ஒரு வாழ்த்தை சொல்லிகிடுவோம். அடுத்ததா என் பக்கம் வேற வர்றாரு. அதாவது எதிர்கால புதிய தலைமுறை இதழே இவர நம்பி தான் இருக்கு. ஹி ஹி. அப்பரம் அவருகிட்டயே கேட்டுகிடுங்க.
எல்.கே.,- என்ன பதிவு எழுதினாலும் முதல் ஆளா வந்து ஊக்குவிக்கிறவரு. இவருடைய கடவுள் நம்பிக்கைகள், எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாக பேசுவது, மெச்சூரிட்டியான கவிதை எல்லாமே சூப்பரு.
ரஜீவன்- இவரு நம்ம ஓட்ட வடை. ரொம்ப திறமையான ஆட்டக்காரர். ஆட்டக்காரரா? ஹி ஹி. விடுங்க விடுங்க. மாத்தி யோசிக்கிறன் மாத்தி யோசிக்கிறன்னு எல்லாத்தையும் மாத்திடுவாரு போல. அப்படி பட்டவர் எனக்கு ஒரு நல்ல நண்பர்னு சொல்றதோட நிறுத்திகிடுறன்.
ரேவா- இவரோட எனக்கு ஆரம்ப காலத்துல ஒரு ஒட்டலு உரசலாவே ஓடிகிட்டு இருந்தது. காரணம்.? இவரது பதிவுகள் எல்லாமே காதல் கவிதைகள். எனக்கு காதல் கவிதைகள்னு சொன்னாலே உவ்வேனு இருந்தது. அதுக்குபிறகு அதன் கருத்தை விடுத்து, ஒருவரின் எழுதுதலுக்கு முக்கியத்துவம் தரணுமே என்னும் என் அறிவுக்கண்ணை திறந்தவர்.
இவர்களை தவிர்த்து ரசிகன் சௌந்தர், தோழி பிரஷா, கலியுகம் தினேஷ், வானம் வெளித்த பின்னும் ஹேமா, நாய்க்குட்டி மனசு, பச்சைத்தமிழன் பாரி போன்றோரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி. சௌந்தரின் நக்கலு, பிரஷா-வின் கவிதைகள், தினேஷ்-ன் சித்தர் புத்தி(ஹி ஹி), ஹேமாவின் அக்கரை, நாய்க்குட்டி மனசு அவர்களின் பாசம், பாரி ஏதோ பதிவு போடுறோம்னு நினச்சுகிட்டு காமெடி பண்றது என அனைத்தும் பிடிக்கும்.
இன்னொருவரையும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் பதிவுலகின் புதிய எழுச்சி. எழுத்தில் கார்மேகம் மழை போல பொழிவார். அறிவானவர், வடிவானவர், அர்த்தமுள்ளவர். யாருனு கேக்குறீங்களா.? இங்க போய் பாருங்க.
''இன்று என்னை பற்றிய அறிமுகம் நாளாதலால்-இது ஒரு எக்ஸ்ட்ரா இடுக்கை. இதில் அறிமுகம் என்று பெரியளவில் சொல்லமுடியாது. இருப்பினும், என் மன வெளிபாடை வெளிபடுத்துகிறேன். அவ்வளவே.!!''
''இது ஒரு சாதாரண விளையாட்டில்ல, ஆயுதங்களுக்கு இடையே நடக்கும் புரட்சி''-சே குவேரா
|
|
அம்புட்டு பாசமா இவர்கள் மீது...
ReplyDeleteபாசக்கர நண்பர்களுக்கும் பாசத்தை வெளிப்படுத்திய தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்..
ReplyDeleteஎன்ன பத்தி ரொம்ப பெருமையா சொன்னதுக்கு நன்றிங்கோ....!!!!!!
ReplyDeleteநக்கலு சொன்னலே....இப்படி தான் கமெண்ட் வரும்
paasama ponguthu
ReplyDeleteவலைச்சரத்துக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்! இந்தவாரம் முழுக்க கலக்குங்க!
ReplyDeleteஎன்னது நான் ஆட்டக்...... ஹா ஹா ஹா ஹா !!!
வாழ்த்துகள் நன்றிகள்....
ReplyDeleteகலக்குங்க
ReplyDelete=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
நாமே ராஜா, நமக்கே விருது-8
http://speedsays.blogspot.com/2011/05/8.html
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
USB செல்லும் பாதை
http://speedsays.blogspot.com/2011/05/usb.html
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
ஒரு காதல் கதை
http://speedsays.blogspot.com/2011/05/love-story.html
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
ஒரு காந்தியவாதியின் வேண்டுகோள்
http://speedsays.blogspot.com/2011/05/gandhi-request.html
ஆனந்தி. இவுங்க பதிவை விட தலைப்பும், படமும் சூப்பரா இருக்கும்.
ReplyDeleteஅக்கா கேட்டுக்கோங்க பதிவ விட தலைப்பு நல்லா இருக்குமாம்.....
சகோ எங்கள் மேல் கொண்ட பாசத்திற்கு நன்றிகள் பல.....
ReplyDeleteமிக்க நன்றி நண்பா......!
ReplyDelete//////ஆளு கொஞ்சம் காமெடியா எழுதினாலும் என்கிட்ட கொஞ்சம் சீரியஸாவே பேசுவாரு. எனக்கு இது தாங்க புரியவே மாட்டேங்கது. ///////
ReplyDeleteஅதாங்க எனக்கே புரியல இனிமே மாத்திக்குவோம்...!
அனைவருக்கும் நல் வாழ்த்துக்கள் ........
ReplyDelete// அதுக்குனு அவரு முக்குல மூணு அனாதை ஆசிரமம் நடத்துறாரு, அந்தாண்ட நாப்பது பசங்கல படிக்க வைக்கிறாருனு நினச்சுடாதீங்க. //
ReplyDeleteயோவ்... என்னய்யா இப்படி கேவலப்படுத்தி வச்சுட்டு புல்லரிக்குதான்னு கேள்வி வேற கேட்குற...
ஒவ்வொரு கடையா மேஞ்சுகிட்டு வந்ததுல உங்க கடைக்கும் வந்துட்டேன் கூர்மதியன்.அப்புறம் பார்த்தா நம்மளைக் கூட அடையாளம் கண்டுபிடிக்கிறீங்களேன்னு மகிழ்ச்சி.நன்றியும் கூட.
ReplyDeleteபின்னாடி பதிவுகளைப் பார்த்தா ஒரே மொக்கை மாதிரிதான் பதிவுலக அனுபவம் துவங்கியது:)
அப்புறம் சீரியஸ் பதிவா போடுறேன்னு நீங்க சொன்ன பின்பு யோசிச்சால் அது உண்மைதான் போல இருக்குது.அதற்கான காரணங்களாக ஈழம்,கடந்த தி.மு.கவின் ஆட்சி முறை விமர்சனங்களால் என நினைக்கிறேன்.
மீண்டும் நட்புடன் நன்றி.
என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி மதியன். பாசமாகவும் பிடிப்புடனும் அறிமுகங்களை தெரிவு செய்துள்ளீர்கள்.
ReplyDeleteஅறிமுகங்களுக்கும் அறிமகம் செய்த தம்வி கூர்மதியனுக்கும் எனது வாழ்த்துக்கள்.
This comment has been removed by the author.
ReplyDeleteஆளாளுக்கு இப்படியே போய்கிட்டு இருந்தா எப்புடி ....
ReplyDeleteகற்றும் சுற்றும் காலச்சுவடின்
சற்றும் மாற்றம் ஏற்றம் பற்றும்
அறியா மடங்க அடங்கும் கலைக்கே
காண மலருந் தமிழே
May 30, 2011 7:43:00 PM GMT+05:30
நன்றி தம்பி, வாரத்தின் முதல் நாளிலேயே குறிப்பிட்டதற்கு சிறப்பு நன்றி. காசு பணம் இல்லாமல் கிடைப்பது பாசம் தான், அதில் சிக்கனம் வேண்டியதில்லைதானே?
ReplyDeleteஹாய் கூர் இதை நான் எதிர் பார்க்கல .. பாசத்துல கட்டிபோட்டவங்கள பற்றி பாசமா எழுதி இருக்கீங்க அதுல என்னையும் சேர்த்ததற்கு நன்றி ......வரும் நாட்களில் வரவிருக்கும் உங்கள் பதிவுகள் பலரை சென்றடைய வாழ்த்துகள் !!!
ReplyDeleteகவிதைக்கு இவங்களோட TAG ஒண்ணு போடுவாங்க//
ReplyDeleteஅட கொடுமையே இதுவுமா!!!! வித்தியாசமா சிந்தித்தாலே பொறமை படுறாங்க யுவர் ஆனர்...............
பதிவுலகில் சுத்தி வரும் பாச மலர்னே(மலரா.!?) சொல்லலாம்.//
ReplyDeleteகூர் இதை கொஞ்சம் மெல்ல சொல்லுங்க .. நெறைய பேரு அருவலோடு சுத்துறாங்க ..... இங்கும் வந்துற போறாங்க . அவ்வ்வ்வவ்வ்வ்வவ் ...
அன்பின் தம்பி கூர்மதியன் - பிடித்த பதிவுலக நண்பர்க்ளைப் பற்ரிய அரிமுகம் அருமை . இருப்பினும் நண்பர்களைப் பற்றி நாலு வரி எழுதிய கையோடு அவர்களீன் இடுகைகளீல் சிறந்த ஒன்றை அறிமுகம் செய்திருக்கலாமே ! படிப்பவர்கள் இவர்கள் தளத்திற்குச் சென்று படிக்க வேண்டாமா ? இனி வரும் பதிவுகளில் பதிவர்களை அறிமுகம் செய்யும் போது அவர்களீன் சிறந்த இடுகையோடு அறிமுகம் செய்க. நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅன்பின் ஸ்பீடு மாஸ்டர் - தங்களின் இடுகைகளுக்கான விளம்பரங்களை இப்பகுதியில் இட வேண்டாம் - சரியா - மறுமொழி மட்டுறுத்தல் இல்லாததால் இடுகிறீர்களா ? நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஹேமாவின் அக்கரை(றை)
ReplyDelete...மனசைத் தொட்டிட்டீங்க
தம்பி மதி.எல்லோருமே நம்ம சொந்தங்கள்தான்.வாழ்த்துகள் !
மாப்பிளை, அறிமுகத்திற்கு மனமார்ந்த நன்றிகள். எல்லாமே நாம அறிந்த நண்பர்கள் தானே சகோ, கொஞ்சம் வெரைட்டியா, எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாகப் பதிவர்களை அறிமுகப்படுத்துங்க சகோ.
ReplyDeleteஎன்னையும் இங்க சொன்னதுக்கு நன்றி கூர்மதி அண்ணே
ReplyDeleteநீங்கள் ... புகை பிடிக்கும் பழக்கம் உள்ளவரா ? - Must Read ... !
ReplyDeletehttp://erodethangadurai.blogspot.com/2011/05/must-read_31.html
ஏய்யா .. கும்முற வரை கும்மிட்டு எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் ரொம்ப நல்லவன்னு சொல்றதா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteம் ம் ஓக்கே நன்றி ஹி ஹி
அன்பின் ஈரோடு தங்கதுரை - சுய விளம்பரங்கள் இங்கு வேண்டாமே - நட்புடன் சீனா
ReplyDelete@சௌந்தர்: பாசம் தான் கொஞ்சம் இல்ல.. அதிகம்.. ரொம்ப நன்றி பாஸ்..
ReplyDelete@சௌ://நக்கலு சொன்னலே....இப்படி தான் கமெண்ட் வரும்//
ReplyDeleteஅய்யோ.!! இப்படிலாம் என்ன நக்கலு பண்ணாதீங்க பயமா இருக்கு.. நன்றி பாஸ்..
@ஹஜா: எங்க எங்க பொங்குது.? அய்யய்யோ.!! சீக்கிரம் போய் நிறுத்துங்க.. பொங்கி வேஸ்டாகிட போகுது.. நன்றி நண்பரே
ReplyDelete@ரஜீ: ஆமாம் நீங்க எவ்வளவு பெரிய அப்பாடக்கர்.. சீ சீ.. ஆட்டகாரர்.!! நன்றி ரஜீ..
ReplyDelete@மனோ:ஒற்றை வரியில் முடித்துகொண்ட மனோ வாழ்க.. ஹி ஹி.. நன்றி..
ReplyDelete@ஸ்பீடு: என்னயா இது கமண்டோட விளம்பரம் எக்கசக்கமா இருக்கு.? இதெல்லாம் சரியில்ல.. எதுவா இருந்தாலும் என்னோட சொந்த கடைக்கு வாயா.. விருந்தாளியா இருக்கும்போது வம்பு பண்ணிகிட்டு..
ReplyDelete@ரேவா:
ReplyDelete//அக்கா கேட்டுக்கோங்க பதிவ விட தலைப்பு நல்லா இருக்குமாம்.....//
ஏன்.? ஏன் இந்த வேலை.? ஆனந்திக்கு என்னை பற்றி தெரியும்..ஹி ஹி..
//சகோ எங்கள் மேல் கொண்ட பாசத்திற்கு நன்றிகள் பல.....//
நல்லவேளை இதோட முடிச்சுகிட்ட.. ஹி ஹி.. நன்றி ரேவா..
@பன்னி://அதாங்க எனக்கே புரியல இனிமே மாத்திக்குவோம்...!//
ReplyDeleteஇப்ப நீங்க அடிச்ச கமண்ட் கூட சீரியஸா தான் கிடக்கு.. ம்ம்.. எப்புடி மாத்துறீங்கனு பாப்போம்..
@கந்தசாமி: நன்றி நண்பரே வருகைக்கும் கருத்துக்கும்..
ReplyDelete@பிரபா:
ReplyDelete//யோவ்... என்னய்யா இப்படி கேவலப்படுத்தி வச்சுட்டு புல்லரிக்குதான்னு கேள்வி வேற கேட்குற...//
மாப்பு நீ பொது சொத்து.. யார் அடிச்சாலும் தாங்குவ.. ஹி ஹி.. நன்றி நன்றி..
@ராஜ நட:
ReplyDelete//அப்புறம் சீரியஸ் பதிவா போடுறேன்னு நீங்க சொன்ன பின்பு யோசிச்சால் அது உண்மைதான் போல இருக்குது.அதற்கான காரணங்களாக ஈழம்,கடந்த தி.மு.கவின் ஆட்சி முறை விமர்சனங்களால் என நினைக்கிறேன்.//
ஆமாம்.. ஆமாம்.. நீங்க சீரியஸாவே இருக்குறதால நிறைய ரசிகர்கள் கிடைக்காமல் போகலாம் ஆனால் சிறப்பான என்னை போன்ற ரசிகர்கள் கிடைப்பார்கள்#தற்பெருமை.. ஹி ஹி.. நன்றி..
@தோழி பிரஷா: ஆஹா.. பெரிய கமண்ட் போட்டுட்டீங்களே.!! பேஷ் பேஷ்.. ரொம்ப நன்றி பிரஷா..
ReplyDelete@தினேஷ்:
ReplyDelete//கற்றும் சுற்றும் காலச்சுவடின்
சற்றும் மாற்றம் ஏற்றம் பற்றும்
அறியா மடங்க அடங்கும் கலைக்கே
காண மலருந் தமிழே//
நிரூபிச்சிட்டியே மக்கா.. ஹி ஹி.. ஓகே.. நன்றி..
@நாய்க்குட்டி மனசு:
ReplyDelete//காசு பணம் இல்லாமல் கிடைப்பது பாசம் தான், அதில் சிக்கனம் வேண்டியதில்லைதானே?//
தேவையே இல்ல.. அப்படியே பாசத்த அள்ளி பொழிங்க.. சரி அப்ப பாசத்துக்கு காசு பணம் தேவைனா பாசத்தை காட்டமாட்டீங்களா.? என்னடா உலகமிது.? நன்றி..
@கல்பு:
ReplyDelete//அதுல என்னையும் சேர்த்ததற்கு நன்றி//
நீங்க இல்லாம பாசமானவர்கள் பதிவா.? நோ வே..(ஒரு பத்தாயிரம் ரூபா அனுப்பிவையுங்க)
//அட கொடுமையே இதுவுமா!!!! வித்தியாசமா சிந்தித்தாலே பொறமை படுறாங்க யுவர் ஆனர்...//
பாவும் இந்த பொண்ணுக்கு புடிச்சதுக்கும், பொறாமைக்கும் வித்யாசமே தெரில.. ஹி ஹி..
//கூர் இதை கொஞ்சம் மெல்ல சொல்லுங்க .. //
அட இது கூடவா.. எழுதும் போது எப்படி மெதுவா சொல்லுறது.? என்னயா இது இந்த சின்ன விசயம் கூட இவுங்களுக்கு தெரில.. ஒருவேளை சின்ன font sizeல போட சொல்றாங்களோ.!! என்ன ஒரு புத்திசாலித்தனம்.!!?
@சீனா:
ReplyDelete//அவர்களீன் இடுகைகளீல் சிறந்த ஒன்றை அறிமுகம் செய்திருக்கலாமே!//
முதல் நாள் என்னைபற்றிய அறிமுகமாதலால் இது என்னை பற்றிய பதிவாக தான் பதிவிட்டேன்.. அதுமட்டுமில்லாமல் அனைவரும் நன்கு பேமஸானவர்கள்.. இவர்களின் பதிவுக்கு சுட்டி கொடுப்பது தேவையற்றது என நினைத்திட்டேன்.. ஆனாலும் நீங்கள் சொல்வதும் சரிதான்.. திருத்திக்கொள்கிறேன்.. நன்றி..
@ஹேமா: ரொம்ப நன்றி ஹேமா..
ReplyDelete@நிரூபன்:
ReplyDelete//எல்லாமே நாம அறிந்த நண்பர்கள் தானே சகோ, கொஞ்சம் வெரைட்டியா, எது மாதிரியும் இல்லாமல் புது மாதிரியாகப் பதிவர்களை அறிமுகப்படுத்துங்க சகோ.//
யோவ்.. எனக்கு பிடித்த பதிவர்களை சுட்டி காண்பித்திருக்கேன்.. இதுல நான் எங்கேயும் அறிமுகபடுத்தவே இல்லையே.!! ஏன் தம் கட்டுற.? எனிவே.. நன்றி..
@எல் கே: இதெல்லாம் ஓவரு.. உங்களோடு விழுது அண்ணே நானு..
ReplyDelete@தங்கதுரை:ஏதாவது வழி மாறி வந்துட்டீங்களா.? மேல பதிவுன்னு ஒண்ணு போட்டிருக்கேன் பாத்தீங்களா.?
ReplyDelete@சிபி: அண்ணே நான் என்னைக்குண்ணே அப்படிலாம் செஞ்சிருக்கேன்.? ஐ ஆம் பாவம்.. அப்படிலாம் சொல்லாதீங்க.. நன்றி..
ReplyDeleteநல்லா மட்டிவிட்டாச்சா. புதிய தலைமுறை அளவுக்கு எல்லாம் நான் வொர்த் இல்லீங்க. நீ அசத்து... நான் அப்புறமா வந்து படிக்கிறேன்.
ReplyDelete//இவுங்க பதிவை விட தலைப்பும், படமும் சூப்பரா இருக்கும்.//
ReplyDelete:)))நன்றி கூர்...என்னை குறிப்பிட்டதற்கு...:)