தருமியல்ல இவர்கள் ...சிவன்.!
➦➠ by:
வரலாற்று சுவடுகள்
அனைவருக்கும்
வணக்கம்.. நரம்பு மண்டலத்தின் (Nervous System) தலைமை செயலகமாக விளங்கும் மூளை (Brain) சற்றேறக்குறைய
நம் உடலில் நடைபெறும் அனைத்து செயல்களையும் கட்டுப்படுத்தும் முக்கிய மற்றும் சிக்கலான
உறுப்பு ஆகும். மெல்லிய நரம்பின் வாயிலாக உடலின் அனைத்து பகுதிகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள்
வைத்திருக்கும் மூளை சராசரியாக 1.5 கிலோகிராம் எடை கொண்டது.
பொதுவாக ஆண்களின் மூளை… அளவில்.. பெண்களின் மூளையைக் காட்டிலும் சற்று பெரியது. (அளவில் மட்டும் தான்
மேட்டர்ல இல்லை ஹி ஹி ஹி).
வெளிபுற
சேதங்களிளிருந்தும்.. உட்புற சேதங்களிளிருந்தும் மூளை தன்னை காத்துக்கொள்ள தன்னை
சுற்றிலும் பல்வேறு அடுக்குகளை எற்படுத்திக்கொண்டுள்ளது. அவற்றில்
குறிப்பிடத்தக்கவை மண்டையோடு (Skull)… முதுகு தண்டுவட நீர்மம் (Cerebrospinal Fluid).. மூளை
தடுப்பு வேலி (Blood Brain Barrier) ஆகியவையாகும். இவை
ஒவ்வொன்றும்... ஒவ்வொரு விதத்தில் மூளைக்கு பாதுகாப்பு அளிக்கும் பங்களிப்பை
செய்துகொண்டிருக்கிறது.! இவற்றில் மூளை தடுப்பு வேலியின் பங்கு அதி முக்கியமானது. உடலுக்குள்
ரத்தத்தின் வழியாக பரவும் எல்லாவித தொற்றுநோய் கிருமிகளின் தாக்கத்திலிருந்து மூளையை
காக்கும் பணியை மூளை தடுப்பு வேலி மேற்கொள்கிறது.! உடல் எவ்வளவு பெரிய அதிர்வுகளை
சந்தித்தாலும்… அந்த அதிர்வு… மூளையை தாக்காமல்
தடுப்பது முதுகு தண்டுவட நீர்மம்..! வெளிப்புற விசையின் நேரடிப்பாதிப்பிலிருந்து
மூளையை காப்பது மண்டையோட்டின் பிரதான பணியாகும்..!
மருத்துவர்களால் மனித
மூளை... மூன்று பெரிய பகுதிகளாக பகுக்கப்பட்டுள்ளது..! அவையாவன முன்பக்க மூளை (Cerebrum), சிறுமூளை (Cerebellum),
மூளைத்தண்டு (Brain Steam).. இதில் உணர்வுகளை
கட்டுப்படுத்தும் பணியை முன்பக்க மூளையும்.. தகவல்களை சேமித்தல்.. மற்றும்
தேவைப்படும் நேரத்தில் அவற்றை பயன்படுத்துதல்... குறிப்பிட்ட ஒன்றை அடையாளம் காணுதல்
போன்ற அதிமுக்கிய பணிகளை சிறுமூளையும்.. மூளையை தண்டுவடத்தோடு இணைக்கும் பணியை மூளை தண்டும் மேற்கொள்கிறது.! தண்டுவடம் அவசரகாலத்தில் நிகழும் அனிச்சை செயலை
மேற்கொள்ளும் அதி முக்கிய உறுப்பு என்பது குறிப்பிடதக்கது.!
மூளை மெல்லிய
நரம்பின் வாயிலாக உடலின் அனைத்து பகுதிலோடும் நேரடித் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளது..!
உடம்பின் எந்த பாகத்திலும் சின்ன கலாட்டா நடந்தாலும் கூட.. அந்த வினாடியே அது
பற்றிய செய்தி நரம்பின் வழியாக மூளைக்கு போய் சேர்ந்துவிடும். மூளைக்கு தெரியாமல்
நம் உடலில் எந்த இடத்திலும் எந்த ரகசியமும் நடைபெற இயலாது. உடலின் உட்பகுதியில்
என்ன நடந்தாலும் சரி... உடம்பின் வெளிப்பகுதியில் என்ன நடந்தாலும் சரி.. அதன்
பிறகு மூளை நம் உடலை சரிப்படுத்திக்கொள்ள மேற்கொள்ளும் ஒவ்வொரு நடவடிக்கையும்
வியப்பின் உச்சமாகத்தான் இருக்கும். உதாரணத்திற்கு ஒரு சின்ன சாம்பிள்.. அதாங்க
எடுத்துக்காட்டு.!
உடலில் எந்த இடத்தில்
அடி பட்டாலும் உடனே நமக்கு வலிக்கும்... நேரம் ஆக ஆக... வலி கொஞ்சம் கொஞ்சமாக குறைய
ஆரம்பிக்கும்.. இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட நேரத்தில் மூளையின் செயல்பாடுகள் வியப்பின்
உச்சமாக இருக்கும்..! அதை பத்தி தெரிந்துகொள்வதற்கு முன்பு.. முதலில் உடலில் அடிபட்டவுடன் ஏன்
வலிக்கிறது என்று தெரிந்துகொள்வோம் வாருங்கள்.! உடம்பின் எந்த இடத்தில் அடி
பட்டாலும் அந்த இடத்தில் உள்ள ரத்த தந்துகிகள் சிதைவடைய ஆரம்பிக்கும்.! ரத்த
தந்துகிகள் சிதைவடையும் போது அந்த இடத்திற்கு பாயும் ரத்த ஓட்டம் தடைபடும்... ரத்த
ஓட்டம் தடைபடும் போது அந்த பகுதியில் உள்ள சதைச் செல்களுக்கு போய் சேரவேண்டிய ஆக்ஸிஜன்
தடைபடும். வந்து சேர வேண்டிய ஆக்ஸிஜன் கிடைக்கப்பெறாத
காரணத்தினால் அந்த இடத்தில் நிகழும் குழப்பம் தான்…. அடிபட்டதும் நாம் உணரும் வலி (Pain)..!
இந்த வலி ஏற்பட்டதும்
மூளையின் ஒட்டு மொத்த கவனமும் அங்கே போய் பதியும். உடம்பின் பல பாகங்களுக்கும்
கட்டளைகள் பறக்கும். உடனடியாக கைகள் வலிக்கும் இடத்தை தேய்க்க உத்தரவிடப்படும். பொறுத்துக்
கொள்ள முடியாத வலியென்றால் அதை தணிக்கும் விதமாக கண்களில் நீர் சுரக்க உத்தரவிடப்படும்...!
இவை எவற்றிக்குமே வலி அடங்கவில்லை என்றால் மூளை அவசரகால அடிப்படையில் செயல்பட்டு வலியை
மறக்க செய்யும் புரோட்டீன்களை உற்பத்தி செய்து குறிப்பிட்ட வலியுள்ள அந்த இடத்திற்கு
அனுப்பிவைக்கும். இந்த புரோட்டீன்களில் மரிசுனா (Marijuana) போன்ற போதைப் பொருளில் இருக்கும் ரசாயன கலவைகள் இருப்பதாக
தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த புரோட்டீன்
செல்கள் காரணமாகத்தான் அடிபட்ட ஒருவர் சிறிது நேரத்துக்குள் வலியை மறந்து...
எழுந்து நடக்க முடிகிறது. சிதைந்து போன ரத்த செல்கள் மறுபடியும் உயிர்ப்புக்கு
வரும் போது ரத்த ஓட்டம் சீராகி வலி மெல்ல மெல்ல குறைந்து அடிபட்ட இடத்தில் ஏதேனும்
காயம் இருந்தால் அதுவும் ஆற ஆரம்பித்துவிடுகிறது. மனித மூளை அதி அற்புதமானது. அதன்
பணிகள்... செயல்படும் வேகம், நினைவு திறன்கள், புத்திசாலித்தனம் நாளுக்கு நாள் மருத்துவர்களையும்.,
உயிரியல் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்திக் கொண்டிருக்கிறது.! இன்று இந்த அளவு தகவலே போதும் என்று நினைக்கிறேன்.! இனி... பதிவின் தலைப்பிற்கு செல்வோம் வாருங்கள்...!
அறிமுகம்-7; வலைத்தளம்: http://blog.arutperungo.com/
பதிவர்: அருட்பெருங்கோ!
கவிதைகளை விமர்சனம்
செய்யும் அளவிற்கு எனக்கு திறமை பத்தாது., ஆயினும்.. அருட்பெருங்கோவின் எந்த கவிதையை
வாசித்தாலும் ஒருவித வித்தியாசமான உணர்வை உணர முடியும்.. கவிதைகளில் இவர் பயன்படுத்தும்
எளிமையான வார்த்தைகள் என்னைப்போல ரசனையற்றவனையும் ரசிக்க செய்யும்..! சிறுகதைகளில்
கூட, காதலை கவித்துவமாய் வெளிப்படுத்தும் இவரது எழுத்துநடை காதலின் மேல் நம்பிக்கையில்லாமல்
இருப்பவர்களையும் கூட அசைத்து பார்க்கும் தன்மை கொண்டது. அதுக்கு ஒரு சின்ன
சாம்பிள்தான் இந்த தொடர் க(வி)தை அழுகையோடு ஆரம்பமானது முதலிரவு;பாகம்-1 பாகம்-2; பாகம்-3; பாகம்-4; க(வி)தையே இப்பிடி இருந்தால் கவிதையெல்லாம் எப்பிடி இருக்கும்? லேபில்களில்
வழியே சென்று தேடிப்பிடிச்சு படிங்க! நிச்சயம் வித்தியாசத்தை உணர்வீ
ங்க..!
அறிமுகம்-8; வலைத்தளம்: http://npandian.blogspot.com/
பதிவர்: நம்பிக்கை பாண்டியன்!
வெகு சமீபத்தில் தான் நண்பர் நம்பிக்கை-பாண்டியன் அவர்களின் வலைத்தள அறிமுகம் கிடைத்தது.! இவரது கவிதைகளில் இருக்கும் நேர்த்தி என்னை வியந்து
ரசிக்க வைத்தது! ஆறு வருடங்களுக்கும் மேலாக.. இவர் தனது இணைய பக்கத்தை கவிதைகளால்
நிரப்பிவருகிறார்.! நான் இவரது உள்ளத்தை அள்ளும் பள்ளிக்கூடம் என்ற
இடுகையைத்தான் முதன் முதலாக வாசித்தேன். அதன் பிறகு எனது விருப்ப வாசிப்பு எல்லைக்குள்
இவரை உள் நுழைத்து விட்டேன்.! சமீபத்தில் நான் ரசித்து வாசித்த உன் ரசிகன்,
மற்றும் என் ரயிலில் நீ ஆகிய கவிதைகளை நீங்களும் ஏன் வாசித்து மகிழக்
கூடாது? இவரது வலைத்தளம் ஆனந்த விகடன் வலையோசையில் சமீபத்தில் கெளரவிக்கப்பட்டுள்ளது.
ஒரு எட்டு போய் வாழ்த்திட்டு வாங்க!
அறிமுகம்-9; வலைத்தளம்: http://www.pulavarkural.info/
பதிவர்: புலவர். சா. இராமானுசம்
என் வாசிப்பு எல்லையில் ஐயா புலவர் சா.இராமானுசம் அவர்கள் மட்டும் தான் தமிழ் வலையுலகில்
இலக்கண தமிழில் வெண்பா கவிதை வடித்துக்கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
இவரது கவிதையை விமர்சிக்கும் அளவிற்கு எனக்கு வயதோ.. அனுபவமோ இல்லை.! ஆதலின் இவரது
சமீபத்திய நான்கு படைப்புகளை இங்கு அறிமுகப்படுத்துகிறேன்.! தவறவிடாமல் வாசித்து
மகிழுங்கள். இன்னும் எதற்கோ நடிக்கின்றால்.!, மழையே மழையேவாராயோ.!, மனித நேயமில்லையோ மத்திய அரசே.!, வலையேற ஒரு கவிதை வாராது போகுமந்தோ.!
கிட்டத்தட்ட பாதி
கிணறு தாண்டி விட்டேன் என்று நினைக்கிறேன்., மீதி கிணறையும் தாண்ட உங்களது தொடர் ஆதரவை
வேண்டி தவமிருக்கிறேன்.! எல்லாம் வல்ல அந்த விநாயகப் பெருமானின் ஆசி இருந்தால்
நாளையும் என்னை கவர்ந்த சில பதிவர்களோடும்.. ஏதாவது ஒரு தகவளோடும் மீண்டும் வருவேன் நன்றி.. மீண்டும் சந்திப்போம்... வணக்கம்!
|
|
மூளை பற்றி நீங்கள் சொன்னதை மனதில் ஏற்றி கொண்டோம். கவிஞர்களுக்கு வாழ்த்துகள்
ReplyDeleteபேரன்புடையீர்!
ReplyDeleteவணக்கம்!
என்னையும் அறிமுகப்படுத்தி என்
வலைவழி வந்து தவறாமல் படித்து
கருத்துரையும் தரும் தங்களுக்கு, உளங்கனிந்த நன்றி!
சா இராமாநுசம்
மூளை குறித்த தங்கள் எளிமையான விளக்கங்கள்
ReplyDeleteமிக எளிதாக மூளையில் ஏறிக்கொண்டது
பயனுள்ள பதிவு
சிறந்த பதிவர்களை அறிமுகப் படுத்திய விதமும் அருமை
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 4
ReplyDeleteஅறிமுக பக்கங்களும்
ReplyDeleteசெய்திகளும் ............அருமை .........வரலாற்று சுவடுகள் என்னும் பெயருக்கு பொருத்தமாய் .....இன்னும் பல சுவடுகளை எதிர்பார்க்கிறோம்
மூளை பற்றிய விளக்கம் அருமை. பதிவர் பகிர்தலும் சிறப்பு. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமருத்துவர் வரலாற்று சுவடுகள் அவர்களே! மூளையை கசக்கி நிறைய எழுதியிருக்கிறீர்கள்! :) நல்ல தகவல்கள்!
ReplyDeleteதலைமைச் செயலகத்தைப் பற்றி உங்கள் மூலமாகவும் நிறைய அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. நல்ல அறிமுகங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள். தொடருங்கள், தொடர்கிறோம்.
ReplyDeleteநண்பரே: தமிழ் மணத்தில் கூட இணைக்காமல் அவசரமா போயிட்டீங்க? முதல் கமன்ட் போடும்போதே தமிழ் மணத்தில் இணைத்து ஓட்டு போட்டுருக்கேன் பாத்துக்குங்க. இந்தியா வரும்போது இது க்கேல்லாம் சேர்த்து டிரீட் தரனும் :))
ReplyDeleteமருத்துவர்களையும்,உயிரியல் விஞ்ஞானிகளையும் வியப்பில் ஆழ்த்திக்கொண்டு இருக்கும் மூளையைப் பற்றி விரிவான தகவல்களுக்கும்,கவிஞர்களையும் அவர்களது வலைப்பதிவுகளையும் அறிமுகப்படுத்தியமைக்கும் நன்றி.
ReplyDelete@ மோகன் குமார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே..!
@ புலவர் சா இராமாநுசம்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா.!
@ Ramani
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும்..வாக்குக்கும் மிக்க நன்றி ரமணி ஐயா.!
@ கோவை மு.சரளா
வாங்க சகோ..தொடர்ந்து எனக்கு ஆதரவளித்து வரும் தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி!
மூளைப் பற்றி தங்களின் விளக்கம் நன்றாக இருந்தது. பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி. (த.ம. 6)
ReplyDelete@ Sasi Kala
ReplyDeleteவாங்க சகோ.. தங்களின் தொடர் ஆதரவிற்கு என் இதயம் நிறைந்த நன்றிகள்.!
@ Karthik Somalinga
எனக்கு மருத்துவர் பட்டத்தை அளித்த உங்களை எதிர்காலம் மன்னிக்குமா நினைத்து பார்க்கிறேன் :D
@ பால கணேஷ்
ReplyDeleteமிக்க நன்றி கணேஷ் சார்.. வருகைக்கும் கருதுக்கும்..தொடர்ந்து அளித்து வரும் அன்பிற்கும்.!
எனக்கு இல்லாததைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறீர்கள்...தெரியாத விசயத்தை தெரிந்து கொண்டேன்....
ReplyDelete@ மோகன் குமார்
ReplyDeleteநைட்டெல்லாம் உட்கார்ந்து எழுதுனதுல டையர்டு ஆகி... ஆட்டோ பப்ளிஷ்ல போட்டுட்டு தூங்க போயிட்டேன் நண்பரே.! வந்ததும் பார்த்தேன்.! என்மீது கொண்டிருக்கும் அன்பிற்கும்.. தொடர்ந்து எனக்கு அளித்து வரும் ஆதரவிற்கும் மிக்க நன்றி நண்பரே.!
ட்ரீட் எங்க வச்சிக்கலாம்... பாரிஸ்., லண்டன்.. சுவிஸ் :) :) :)
@ வே.நடனசபாபதி
ReplyDeleteவருகைக்கும்..தங்களது தொடர் ஆதரவிற்கும் மிக்க நன்றி ஐயா.!
@ திண்டுக்கல் தனபாலன்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பரே.!
@ வீடு சுரேஸ்குமார்
தமிழ்நாட்டுல..உண்மையை உண்மைன்னு.. எந்த இடத்திலேயும் ஒத்துக்கொள்ளும் உங்கள் தகிரியம் உண்மையில் பாராட்டபட வேண்டியது நண்பரே :D :D :D
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா.!
அருமையான கவிஞர்கள் அறிமுகத்துக்கு நன்றி சகோ.
ReplyDelete@ Prabu Krishna
ReplyDeleteமிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்.!
நீங்கள் நல்ல மூளைக்காரர்தான். நல்ல தகவல்கள்.ராமானுசம் ஐயாவின் தளம் படித்துள்ளேன். மற்ற இருவரின் தளம் சென்று பார்க்கிறேன்.
ReplyDelete@ விச்சு
ReplyDeleteமிக்க நன்றி விச்சு சார்..வருகைக்கும் கருத்துக்கும்.!
மூளை பற்றிய விரிவான தகவல்களுடன் சிறப்பான அறிமுகங்கள்
ReplyDeleteமூளை பற்றிய விரிவான விளக்கமான தகவல்களுக்கு மிகவும் நன்றி. இன்றைய அறிமுகப் பதிவர்களில் புலவர் ஐயா தவிர இருவரும் எனக்குப் புதியவர்கள். விரைவில் அவர்களுடைய படைப்புகளைப் படித்துக் கருத்திடுவேன். அறிமுகப்படுத்தப் பட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமூளை பற்றிய விரிவான விளக்கமான தகவல்கள் பயனுள்ளவை.. பாராட்டுக்கள்..
ReplyDeleteஅறிமுகப் பதிவர்களுக்கு வாழ்த்துகள்..
விச்சு said...
ReplyDeleteநீங்கள் நல்ல மூளைக்காரர்தான். நல்ல தகவல்கள்.ராமானுசம் ஐயாவின் தளம் படித்துள்ளேன். மற்ற இருவரின் தளம் சென்று பார்க்கிறேன்.
//
Same blood...A+ (ALWAYS POSITIVE)
கவிஞர்கள் அறிமுகத்துக்கு நன்றி சகோ
ReplyDeleteமூளையை பற்றிய விளக்கத்துடன் முத்தான மூன்று கவிஞர்களின் அறிமுகம் அசத்தல்! தொடரட்டும் தங்கள் சீரிய பணி!
ReplyDeleteநல்ல அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteமூளை பற்றிய தகவல்களுக்கு நன்றி. அறிமுகமாகியிருக்கும் மூவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDelete@ சென்னை பித்தன்
ReplyDeleteவாங்க பித்தர் ஐயா.. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ கீதமஞ்சரி
வாங்க சகோ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ இராஜராஜேஸ்வரி
வாங்க சகோ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.!
@ ரெவெரி
ReplyDelete///Same blood...A+(ALWAYS POSITIVE)///
சக பதிவர்களை உற்சாகபடுத்தி.. உயரத்திற்கு அழைத்து செல்லும் (ரெ)வெரி ரேர் ப்ளட் :)
@ Avargal Unmaigal
ReplyDeleteதங்களை என் பதிவிற்க்கான கருத்துரை பகுதியில் பார்ப்பது.. புதிய உத்வேகத்தை தருகிறது
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
@ s suresh
ReplyDeleteமிக்க நன்றி நண்பா..தங்களின் தொடர் ஆதரவிற்கு.!
@ Lakshmi
மிக்க நன்றி லக்ஷ்மி அம்மா.. வருகைக்கும் கருத்துக்கும்!
@ ராமலக்ஷ்மி
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
moolai patriya arputha vilakkam!
ReplyDeletearimukam puthumai!
vaazhthukkal!
@ Seeni
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ.!
மூளை பற்றிய தகவல்கள், அறிமுகப் பதிவர்கள் அனைத்திற்கும் நல்வாழ்த்து.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
@ kovaikkavi
ReplyDeleteமிக்க நன்றி சகோ., வருகைக்கும் கருத்துக்கும் :)