இன்றே கடைசி..!
➦➠ by:
வரலாற்று சுவடுகள்
எச்சரிக்கை: இது
ஒரு சிரிப்பு பதிவு..., சிரிக்காதவர்களுக்கு திகார் ஜெயில் காத்திருக்கிறது..!
ஊக்குவிப்பவன் ஊக்குவித்தால்
“ஊக்கு” விற்ப்பவனும் ஊக்கமடைவான்-ன்னு பெரியவர்கள் சொல்லியிருக்காங்க (யார்
அந்த பெரியவர்ன்னு கேளுங்களேன்., அட கேளுங்களேன்..., அது வேற யாருமில்லை ஹி ஹி ஹி
நான் தான்).! அதில் எத்தனை உண்மை அடங்கியிருக்கிறது என்பது வலைச்சரத்தின்
ஆசிரியராக பணியாற்றிய இந்த வாரம் எனக்கு உணர்த்தியது.! என்னை
பொருத்தவரை வலைச்சரத்தில் நம் பதிவுகள்.. அறிமுக படுத்தப்படுவதே ஒரு நல்ல
அங்கீகாரம் தான் என்பேன்.! இதில் வலைச்சரத்தின் ஆசிரியராக பணியாற்றும் வாய்ப்பும்
கிடைக்கப்பெற்றால் அது கிட்டத்தட்ட ஒரு நாட்டின் அரசனாக முடிசூட்டிக்கொள்வதை போன்றது!
அந்த வகையில் நாலு
பேர் அறிந்த என்னை... நானூறு பேர் அறியச்செய்த வலைச்சர நிர்வாகிகளுக்கு.., என்
இதயம் நிறைந்த நன்றிகளை இப்பதிவின் மூலமாக உரித்தாக்குகிறேன்! என்னை ஆசிரியராக
பொறுப்பேற்றுக் கொள்ளும்படி அழைப்பு விடுத்த நண்பர் தமிழ்வாசி பிரகாஷ்ற்கும்,
என்னை நம்பி இந்த பொறுப்பினை ஒப்படைக்கத் துணிந்த ஐயா சீனா அவர்களுக்கும்
என் இதயம் கனிந்த நன்றிகள்.!
வலைச்சரத்தின்
ஆசிரியராக பணியாற்றியவர்களது ஒவ்வொருவரின் வலைத்தளமும் அவர்களது ஆசிரியர்
பொறுப்பிற்கு பிறகு பதிவுலகத்தால் வெகுவாக திரும்பி பார்க்கப்படுகிறது என்பது
எவராலும் மறுக்க முடியாத உண்மை..! அந்த வகையில் நானும் இனி திரும்பி பார்க்கப்படுவேன்
என்பது என்னுள்..., ஒரு புதிய தன்னம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என்றால் மிகையில்லை!
நான் எந்த அளவு
திரும்பிப் பார்க்கப்பட்டிருக்கிறேன் என்பதற்கு உதாரணமாக ஒரு சின்ன நிகழ்வை இங்கு கூற
விரும்புகிறேன்.! நேற்று.., என் தொலைபேசிக்கு ஒரு அழைப்பு வந்தது.! அழைத்த
தொலைபேசி எண் புதிதாக இருந்ததால் குறிப்பாக STD CODE பரிச்சயமில்லாததாக
இருந்ததால் அழைப்பிற்கு பதிலளிக்கவில்லை.! பின்பு அந்த STD CODE-ஐ வைத்து இணையத்தில் தேடிப் பார்த்த போது அது உகாண்டாவிலிருந்து வந்த
அழைப்பு என்று தெரியவந்தது.! எனக்கோ ஒரே ஆச்சிரியம்.., நமக்கு ஆப்பிரிக்காவில் சொந்தக்காரர்கள் இருக்கிறார்கள் என்பது தெரியும்.. உகாண்டாவிலுமா இருக்கிறார்கள்..? என்று சிந்தித்துக் கொண்டிருந்தபோது
மீண்டும் அதே எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.!
அழைப்புக்கு உயிர்
கொடுத்ததும்... கார்த்திக் என்று தன்னை அறிமுகப் படுத்திக்கொண்ட எதிர்முனையில்
பேசிய அந்த நண்பர்., தான்... உகாண்டாவில் அரசு பணியொன்றில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும்..,
வலைச்சரத்தின் மூலம் எனது வலைத்தள அறிமுகம் கிடைக்கப் பெற்றதாகவும் இந்த ஒரு
வாரத்தில் இரவு பகல் பார்க்காமல் நான் எழுதிய அத்தனை இடுகைகளையும் வாசித்ததில் என் எழுத்தின் தீவிர ரசிகர் ஆகிவிட்டதாகவும் கூறினார். அதோடு
மட்டுமின்றி தனது அதிகாரத்தை பயன்படுத்தி எனக்கு உகாண்டாவில் ஒரு சிலை வைக்க விரும்புவதாகவும்
தெரிவித்தார்.! அதற்க்கு பதிலளித்த நான் எனக்கு தெரிந்த வரையில் உலகில் காகங்களே இல்லாத
நாடு நியூஸிலாந்து மட்டும் தான் என்பதால்., உகாண்டாவில் எனக்கு சிலை வைக்க துளியும் விருப்பம்
இல்லை என்றேன்.! இதை தொடர்ந்து ஒரு வித ஏமாற்றத்தோடு அவர் விடைபெற்றார். இப்படிபட்ட
நல்ல உள்ளங்களை எனக்கு பெற்றுத்தந்த வலைச்சரத்திற்க்கு நான் என்றென்றும் கடமைப்பட்டுள்ளேன்.!
(இது முழுக்க முழுக்க கற்பனை அல்ல...!)
நான் வலைச்சரத்தின்
ஆசிரியர் பொறுப்பிற்கு அழைக்கப்பட்டதுமே.., யார் யாரையெல்லாம் எனது பதிவுகளின்
வழியே அறிமுகப்படுத்துவது என்று ஒன்பது தலைப்புகளின் கீழ்., தலைப்பிற்கு ஐந்து
பதிவர்கள் வீதம்., நாற்பதிற்கும் மேற்பட்ட பதிவர்களின் வலைத்தளங்களை கொண்ட பட்டியலை
தயாரித்து விட்டேன். பணிச்சுமை மற்றும் நேரமின்மை காரணமாக அவற்றுள் ஐந்து
தலைப்புகளின் கீழ்.., தலைப்பிற்கு மூன்று பதிவர்கள் வீதம் வெறும் பதினைந்து
பதிவர்களின் வலைத்தளங்களை தான் என்னால் பரிந்துரை செய்யமுடிந்தது.
இவற்றில் நான்
விரும்பி வாசிக்கும் பல நண்பர்களின் வலைத்தளங்கள் விடுபட்டு போய் விட்டது என்பது
தான் உண்மை., அவர்களுள் குறிப்பிட தக்கவர்கள்.., நான் எழுத துவங்கிய
நாட்களிலிருந்தே தவறாமல் விரும்பி வாசித்து வரும் மெல்ல தமிழ் இனி வாழும்-ரெவெரி;
பயண கட்டுரைகளை புகைப்படங்களுடன் வெகு அழகாய் பதிவிட்டுக்கொண்டிருக்கும் வீடு திரும்பல்-மோகன்குமார்; புகழ் பெற்ற எழுத்தாளர்களுடன் தனக்கிருந்த நட்பினை
சுவைபட எழுதிக் கொண்டிருக்கும் மூத்த பதிவர்களுள் ஒருவரான மின்னல் வரிகள்-கணேஷ்;
மற்றும் 600 பதிவுகள் என்ற அசாதாரண சாதனையை கடந்த சகோதரி மணிராஜ்-ராஜராஜேஸ்வரி போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..! இவர்களை
உரிய வகையில் பரிந்துரைக்க முடியாமைக்காக வருந்துகிறேன்.!
பொதுவாக
தினமும் பதிவுகள் எழுதுவதென்பது என்னால் முடியாத ஒன்று ஆனால் இந்த ஒரு வார காலமாக தினமும்
நான் பதிவுகள் எழுதிக்கொண்டிருப்பது எனக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை தந்தது.! ஒரு
வாரகாலமும் தவறாமல் வருகை புரிந்து., கருத்துரைத்து.., வாக்களித்து என்னை
உற்சாகப்படுத்திய அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் என் இதயம் நிறைந்த நன்றிகள்.., உங்களது..... இதே அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்து தான்.... என் வலைத்தளத்திலும் நான் காத்திருக்கிறேன்
என்பதை மறந்துவிடவேண்டாம்..,பிரிய மனமின்றி.., வேறு வழியின்றி விடைபெறும்..., வரலாற்று சுவடுகள்.!
|
|
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுத்தகவல்களோடு சிறப்பாக பதிவர்களை அறிமுகம் செய்தீர்கள். இனிதாய் பொறுப்பை நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள் நண்பா!
ReplyDeleteசரித்திரம் படைத்த வரலாற்றுக்கு நன்றிகள் பல
ReplyDeleteமனசாட்சியின் பாராட்டுக்கள்
எடுத்த பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDeleteபேசாம சிலைய விண்வெளில வைக்க சொல்லி சுனிதா வில்லியம்ஸ் கிட்ட சொல்லி இருக்கலாம் தல.
ReplyDeleteஇன்றும் அருமையான அறிமுகங்கள். வாழ்த்துகள் சகோ.
தாங்கள் வலைச்சர ஆசிரியர்பணி மேற்கொண்ட நாளிலிருந்து தங்களது பதிவுகளை படித்துவந்தேன். சூழ்நிலை காரணமாக கருத்திட முடியவில்லை. நல்ல பதிவர்களை அடையாளப்படுத்தியதும் கூடவே அறிவியல் செய்திகளை அள்ளித்தந்ததும் அருமை! அழகான எழுத்துநடையில் அசத்திவிட்டீர்கள். அருமை! மீண்டும் சந்திப்போம். நன்றி!
ReplyDeleteதங்கள் வலைச்சரப் பதிவுகளும்
ReplyDeleteபதிவர் அறிமுகமும் சிறப்பாக இருந்தது
தொடர்ந்து சந்திப்போம்
வாழ்த்துக்கள்
tha.ma5
ReplyDeleteசிலபேர்களை மட்டும் அறிமுகப்படுத்தியிருந்தாலும் நல்ல தகவல்களோடு அனைத்து பதிவுகளும் அருமைதான். குறிப்பாக என்னையையும் அறிமுகப்படுத்தியது எனக்கு மகிழ்ச்சிதான்.
ReplyDeleteகணக்காளரே...அறிமுகத்திற்கு நன்றி...எண்ணற்ற தகுதியான பதிவர்கள் இருக்கிறார்கள்...நீங்கள் சொல்ல நினைத்த அத்தனை பேரையும் பட்டியல் மட்டுமாவது இட்டிருக்கலாம்...சரி உங்கள் வலையில் தொடருங்கள்...இந்த வாரம் களை கட்டியது...அதே போல் ஆரம்பித்த கண்...போன்றவற்றை உங்கள் வலையில் தொடருங்கள்..
ReplyDeleteகொடுத்த வேலையை சிறப்பாக முடித்தமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே... இன்றைய அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
சில இடுகைகள் வாசித்தேன்... சில இடுகைகள் வாசிக்கல...
ReplyDeleteஆனாலும் உங்கள் பிஸியான கணக்கு பண்ற வேலைக்கு மத்தியில் வலைச்சர பணி வாழ்த்துக்குரியது.
பதிவர்களை அருமையாகத் தொகுத்துவழங்கியிருக்கிறீர்கள் நண்பா.
ReplyDeleteவாழ்த்துகள்...
ReplyDeleteஎன்னையும் நினைவு வைத்து குறிப்பிட்டமைக்கு நன்றியும் மகிழ்ச்சியும் நண்பரே
ReplyDeleteநிச்சயம் மிக சிறப்பான வாரம்! மற்றவர் பதிவுகளோடு ஒவ்வொரு வாரமும் உங்கள் பதிவையும் வாசிக்க செய்த மதிநுட்பம் அளப்பரியது! ;) கோச்சுக்காதீங்க, நெஜமாவே நல்ல இருந்துச்சு! :)
ReplyDelete//அரசு பணியொன்றில் முக்கிய பொறுப்பில்//
முன்னுக்குப் பின் கிரணா எழுதறதே உங்க வேலையா போச்சு! :D
உங்களுக்கு சீக்கிரமே உகாண்டாவுக்கு பணி மாற்றம் ஆக வேண்டும், அன்பர் கார்த்திக் அவர்கள் உங்களுக்கு அலுமினிய சிலை வைக்க வேண்டும், நீங்க இருவரும் அந்த சிலையின் அடியில் நின்று ஜிகர்தண்டா குடிக்க வேண்டும் என்று மங்காத்தாவை வேண்டிக் கொள்கிறேன்! ;)
//உலகில் காகங்களே இல்லாத நாடு நியூஸிலாந்து மட்டும் தான்//
ReplyDeleteஅட! இந்த பதிவிலும் புதுத் தகவல் இருக்கே!
@ Abdul Basith
ReplyDeleteதினமும் வருகை தந்து கருத்தளித்த தங்களை போன்றவர்களால் தான் என் பணியை சிறப்பாய் செய்ய முடிந்தது நண்பா! மிக்க நன்றி தொடர் ஆதரவிற்கு :)
@ மனசாட்சி™
ReplyDeleteதங்கள் அன்பிற்கு மிக்க நன்றி நண்பரே
@ வே.நடனசபாபதி
ReplyDeleteதினமும் வந்து கருத்தளித்து ஊக்கப்படுத்தியது மறக்க முடியாதது..! தங்களது அன்பிற்கும் தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி ஐயா :)
<<<
ReplyDeletePrabu Krishna said
பேசாம சிலைய விண்வெளில வைக்க சொல்லி சுனிதா வில்லியம்ஸ் கிட்ட சொல்லி இருக்கலாம் தல.
>>>
இதுக்குத்தான் ஒரு அறிவியல ஆலோசகர் வேணும்ங்றது :)
மிக்க நன்றி நண்பா தொடர் ஆதரவிற்கு :)
@ வே.சுப்ரமணியன்
ReplyDeleteமிக்க நன்றி நண்பா.. தினமும் வருகை புரிந்து வாசித்தமைக்கு :) இன்றைய கருத்து பதிவிற்கும் தான் :)
@ Ramani
ReplyDeleteமிக்க நன்றி ரமணி ஐயா.., தங்கள் தொடர் வருகையும்.. வாக்குப்பதிவும் என்மீது கொண்ட உயர்ந்த அபிமானமும் .. மறக்க முடியாதது.! நெகிச்சி கலந்த நன்றி :)
@ விச்சு
ReplyDeleteமிக்க நன்றி விச்சு சார், வருகைக்கும் கருத்துக்கும்.. உண்மையில் தங்களை அறிமுகப்படுத்தியதில் எனக்கும் மகிச்சிதான் :)
@ ரெவெரி
ReplyDeleteநேரமின்மை காரணமாகத்தான் இயலவில்ல நண்பரே.., கண் இயங்கும் முறை பற்றி நிச்சயம் என் வலையில் எழுதுவேன்..!
தங்களின் தொடர் ஆதரவு நெகிழ்ச்சிக்குறியது :)
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteதங்களது தொடர் ஆதரவிற்கு மிக்க நன்றி நண்பரே :)
<<<
ReplyDeleteதமிழ்வாசி பிரகாஷ் said...
ஆனாலும் உங்கள் பிஸியான கணக்கு பண்ற வேலைக்கு மத்தியில் வலைச்சர பணி வாழ்த்துக்குரியது
>>>
இங்கே ஒன்னே ஒண்ணுதான் இருக்கு அத கணக்கு பண்ணுனா ரொம்ப செலவாகும்..நான் எதை சொல்லுரேன்ன்னு உங்களுக்கு புரிச்சிருக்கும்னு நினைக்கிறேன் ஹி ஹி ஹி
@ முனைவர்.இரா.குணசீலன்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பரே :)
@ வெங்கட் நாகராஜ்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே வருகைக்கும் வாழ்த்துக்கும் :)
@ மோகன் குமார்
தங்களை குறிப்பிட்டு நானும் மகிழ்கிறேன் நண்பரே :)
<<<
ReplyDeleteKarthik Somalinga said...
உங்களுக்கு சீக்கிரமே உகாண்டாவுக்கு பணி மாற்றம் ஆக வேண்டும், அன்பர் கார்த்திக் அவர்கள் உங்களுக்கு அலுமினிய சிலை வைக்க வேண்டும், நீங்க இருவரும் அந்த சிலையின் அடியில் நின்று ஜிகர்தண்டா குடிக்க வேண்டும் என்று மங்காத்தாவை வேண்டிக் கொள்கிறேன்! ;)
>>>
அந்த ஜிகர்தண்டாவை விற்கும் வண்டிக்காரராக இந்த கார்த்தியும் (எங்கள்)உடனிருக்க எல்லாம் வல்ல அந்த அல்போன்சாவை வேண்டிக்கொள்கிறேன் :D :D :D
@ Karthik Somalinga
ReplyDeleteதொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)
<<<
ReplyDeleteAbdul Basith said...
//உலகில் காகங்களே இல்லாத நாடு நியூஸிலாந்து மட்டும் தான்//
அட! இந்த பதிவிலும் புதுத் தகவல் இருக்கே!
>>>
அப்பாடா இதுவும் informative post-ன்னு சொல்ல ஒரு ஆளு சிக்கிருச்சு :D :D
தொடர் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா :)
எடுத்த பணியை சிறப்பாக நிறைவேற்றியுள்ளீர்கள். வாழ்த்துக்கள்!
ReplyDelete@ Lakshmi
ReplyDeleteவாழ்த்துக்கு மிக்க நன்றி லக்ஷ்மி அம்மா :)
மற்றும் 600 பதிவுகள் என்ற அசாதாரண சாதனையை கடந்த சகோதரி மணிராஜ்-ராஜராஜேஸ்வரி போன்றோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்..! இவர்களை உரிய வகையில் பரிந்துரைக்க முடியாமைக்காக வருந்துகிறேன்.!
ReplyDeleteஅருமையாக நிறைவாக பரிந்துரைத்துள்ளீர்களே !!
மனம் நிறைந்த இனிய நன்றிகள் !!!!
@ இராஜராஜேஸ்வரி
ReplyDeleteவருகைதந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி சகோ!
தங்களின் தொடர் வருகையும் கருத்துரையும் மறக்க இயலாதது மிக்க நன்றி :)
சிறப்பான வாரம். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
ReplyDelete@ ராமலக்ஷ்மி
ReplyDeleteதங்களின் தொடர் வருகையும் கருத்துரையும் மறக்க இயலாதது மிக்க நன்றி சகோ :)
இந்த இளைஞனை மூத்த பதிவர்களில் ஒருவனாக மதித்து குறிப்பிட்டிருக்கும் உங்கள் அன்பிற்கு தலைவணங்கிய என் நன்றி நண்பரே. அருமையாகச் சென்றது உஙகளுடன் பயணித்த இந்த வாரம். வாழ்த்துக்கள்.
ReplyDeletepoi vaa nathi aliye.....
ReplyDelete@ பால கணேஷ்
ReplyDeleteதங்களின் தொடர் வருகையும் உற்சாகமான கருத்துரையும் மறக்க முடியாதது நண்பரே., மிக்க நன்றி!
@ Seeni
தினமும் கருத்திட்டு என்னை உற்சாகபடுத்திய நண்பருக்கு என் நெகிழ்ச்சியான நன்றிகள் :)