முதல் மலர்
➦➠ by:
மதுரை சொக்கன்
”ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே.” (திருமந்திரம்)
***************
விநாயகரின்
கரங்கள் ஐந்து.அவர் தந்தை சிவனின் முகங்கள் ஐந்து. இயற்கை பூதங்கள்
ஐந்து.நமது புலன்கள் ஐந்து. நிலத்தின் வகைகள்
ஐந்து.பாண்டவர்கள் எண்ணிக்கை ஐந்துஒரு கை விரல்கள் ஐந்து.
நாம் தினம் பார்க்கப்போகும் பதிவுகளின் எண்ணிக்கையும் ஐந்தே!
----------------------------------------------------------------
------------------------------------------ சரத்தில் முதல் மலர் சுய அறிமுக மலராக இருக்க வேண்டும் என்பது நடைமுறை.
அந்நடை முறையைப் பின்பற்றி முதலில் என்
வலைப்பூ அறிமுகம்.
அறிமுகம் செய்தால்தான் பலருக்குத்
தெரிய வரும் என்ற நிலைதான் இந்த வலைப்பூவுக்கு.
2007 ஆம் ஆண்டில் இரண்டு கடைகள்
திறந்தேன்.
ஒன்று பல்பொருள்அங்காடி.
மற்றது மயிலை டப்பாச்செட்டி கடை
போன்ற நாட்டுமருந்துக்கடை.
இரண்டாவதுதான் இந்த ”நமக்குத்
தொழில் பேச்சு ”என்ற வலைப்பூ.
நான் அறிந்த,நான் படித்த
திருமந்திரக் கருத்துக்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவாவில்
,அதன்மூலம் நாமும் கற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில், தொடங்கப்பட்ட வலைப்பூ,மதுரை
சொக்கனின், ”நமக்குத் தொழில் பேச்சு”
மக்கள் தினமும் நாட்டு மருந்துக்கடைக்குக்
கூட்டம் கூட்டமாய்ப் போவதில்லை.
தேவை ஏற்பட்டால் ,அக்கடைக்குச்
செல்வர்.இல்லையேல் கடையில் காற்றாடும்.
ஆனால் அக்கடையின் தேவையை மறுக்க
முடியாது.
அது போன்றதுதான் ஆன்மீகப் பதிவு
என்பதும்.
திருமந்திரப்பாடல்களை குட்டிக்கதை
மூலம் விளக்க எண்ணி,முதலில் சில பதிவுகள் எழுதினேன்.
வேத முதல்வனைப் பற்றிப் பேசும் பதிவு முதல் பதிவாக அமைந்தது பெருமைதானே.
ஆகிய பதிவுகள்
அந்த பாணியிலேயே சில பாடல்
விளக்கங்கள்.ஆனால் அதிகம் எழுதவில்லை. 2007இல்தான் அதிகமாக 12 பதிவுகள்
எழுதினேன்.இது வரை மொத்தம் 28 பதிவுகள்தான்.எனவே இவற்றில் எனக்குப் பிடித்த
பதிவுகள் பற்றிச் சொல்வது மிக எளிதே!திருமந்திரமே எனக்குப் பிடித்த நூல்தான். அதைப்
பற்றி என்ன எழுதினாலும் எனக்குப் பிடித்தே இருக்கும் .இருப்பினும் குறிப்பிட்டுச்
சொல்ல வேண்டுமெனில்,சூனிய சம்பாஷணை பற்றிய
பதிவுகள்.
குறிப்பாக,”கூறையுஞ்சோறும்’ ’பார்ப்பான் அகத்திலே’ ஆகிய பதிவுகள், அதுவரை எப்பதிவும் பெறாத வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக,”கூறையுஞ்சோறும்’ ’பார்ப்பான் அகத்திலே’ ஆகிய பதிவுகள், அதுவரை எப்பதிவும் பெறாத வரவேற்பைப் பெற்றன.
28 பதிவுகளே தந்த ஒரு பதிவர்
வலைச்சரப் பொறுப்பில் இன்று என்றால் அதற்குத்துணை நிற்பது அந்த பல்பொருள்
அங்காடிதான்.
நாட்டு மருந்துக்கடை மதுரையில்;பல்பொருள் அங்காடி சென்னையில்.
இங்கு சொக்கன்பொறுப்பு;அங்கு பித்தன்.பொறுப்பு!
இன்று நான் இங்கிருப்பதற்கோஅந்தத் தில்லைக் கூத்தனே பொறுப்பு!
நாளை சில பழம்பெரும் பதிவர்களைப் பீஷ்ம பிதாமகர்களைப் போற்றுவோமா?
|
|
வருக வருக மதுரை சொக்கன் அவர்களே! வலைச்சரத்தில் கடை விரித்திருக்கிறீர்கள். நிச்சயம் கொள்வோர் இருப்பர். வாழ்த்துக்கள்!
ReplyDeleteவலைச்சரத்திற்கு மதுரை சொக்கருக்கு நல்வரவு. நல்லறிமுகங்களை அள்ளித் தாருங்கள். தொடர்கிறேன்.
ReplyDeleteதிரு. சொக்கன் அவர்களுக்கு,
ReplyDeleteதங்களின் கருத்துகள் அருமை...
தங்களின் அறிமுகங்களை அறிய ஆவலாய் உள்ளேன்....
தொடருங்கள். வாழ்த்துக்கள்.
நன்றி.
(த.ம. 1)
புதிய பதவிக்கு வாழ்த்துகள்
ReplyDeleteஐயா வருக அமுதமெனும் பதிவைத் தருக.
ReplyDeleteமதுரை சொக்கரே..வாழ்த்துகள்..ஆசியப்பணி அமர்களப்படட்டும்..
ReplyDeleteஅன்பின் மதுரைச் சொக்கன் - தங்கள் வீட்டிற்குச் சென்று அறிமுகப்படுத்தப்பட்ட பதிவுகளை இரசித்துப் படித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteசிறப்பான அறிமுகம்! உங்கள் பதிவுகளை வாசிக்க ஆவலாக உள்ளேன்! விரைவில் வாசித்து கருத்திடுகிறேன்! நன்றி!
ReplyDeleteஇன்று என் தளத்தில் எக்ஸ்கியுஸ்மீ கொஞ்சம் பாராட்டுங்களேன் ப்ளீஸ்! http://thalirssb.blogspot.in
சுவாரஸ்யமான அறிமுகம்!
ReplyDeleteஇந்த வார ஆசிரியருக்கு வாழ்த்துகள்....
ReplyDeletesokkan sir!
ReplyDeletethodarkiren!