என் சீட்டுகட்டுல 3 ஜோக்கர்ஸ்.!
➦➠ by:
வரலாற்று சுவடுகள்
அனைவருக்கும்
வணக்கம்.... நேற்றைய எனது அறிமுக இடுகையில்... இனி நான் எழுதும்... ஒவ்வொரு
இடுகையிலும்... ஏதாவது ஒரு தகவல் இருக்கும் என்று குறிப்பிட்டிருந்தேன்... அந்த
வகையில்.. இன்றைய பதிவில்.. முத்துகளை (Pearl) பற்றிய சில அடிப்படை தகவல்களை உங்களிடம்
பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்..! மனிதர்கள்... தங்களை அலங்கரித்துக்
கொள்வதற்காக... உடலின் பல்வேறு உறுப்புக்களில்... அணிந்துகொள்ளும் அணிகலன்கள்...
ஆபரணங்கள் என்று அழைக்கப்படுகின்றன... இந்த ஆபரண பட்டியலில்... பண்டைய காலம்
தொட்டே... மிகவும் விலையுயர்ந்த... பொருட்களில் ஒன்றாக கருதப்படுவதுதான் முத்து (Pearl)….. இது... முசெல் (Mussel)... என்ற ஒரு வகை
மெல்லுடலி….. இனத்தை சேர்ந்த... முத்துசிப்பியின் (Pearl Oyster)...
உடலிலிருந்து... பெறப்படுகிறது.!
கடலில்....
அமைதியாக மிதந்து கொண்டிருக்கும்... ஒரு முத்துசிப்பியின் உடலுக்குள்... மணல்
துகள்கள்.. நுழையும் போது... உடலில் ஏற்படும்... உறுத்தலை தாங்கிக் கொள்ள இயலாத
சிப்பி.... தனது உடல் திசுக்களை (tissue)... அந்த மணல் துகளின்... மேல் பதியவைத்து... உறுத்தலை குறைக்க
முயற்சிக்கிறது. அந்த திசுக்களே... நாளடைவில் வளர்ந்து.. பெரிதாகி..
முத்துக்களாக.. உருப்பெருகிறது..! இந்தவகையில்... ஒரு முத்துசிப்பிக்குள்...
முத்து உருவாவதற்கு... தோராயமாக... மூன்று முதல்... ஆறு ஆண்டுகள் வரை ஆகிறது...
இதனால்.... முத்து.... அரிதாக கிடைக்கும் பொருட்களில் ஒன்றாகி... ஒரு விலையுயர்ந்த
ஆபரணமாக.. காலம் காலமாக.. இருந்து வருகிறது.!
சற்றேறக்குறைய...
முத்து முதன் முதலில் கண்டறியப்பட்டது... இந்தியப் பெருங்கடலை (Indian Ocean)... ஒட்டியுள்ள.. பிரதேசங்களில் தான் என்கிறது வரலாறு..! தென் தமிழகத்தில்...
பாண்டியர் வம்சத்தினர் (Pandyan Dynasty, 500 BCE – 1345 AD)...
ஆட்சிக்காலத்தின் துவக்கத்தில் இருந்தே.. அதாவது கி.மு.500-லிருந்தே..
தமிழகத்தில்.. முத்துக்கள் புழக்கத்தில் இருந்ததாக... வரலாற்று ஆவணங்கள்
தெரிவிக்கின்றன... தொடர்ந்து.... மன்னார் வளைகுடா (Gulf of Mannar).... அரேபிய வளைகுடா (Persian Gulf).... தென் சீன
கடல் (South China Sea) ஆகியவற்றை சார்ந்துள்ள பிரதேசங்களில்...
இருந்தும் முத்து கண்டெடுக்கப்பட்டு... உலகின்.. பல்வேறு தேசங்களுக்கு... பண்டைய
காலத்திலிருந்தே.. ஏற்றுமதி செய்யப்பட்டு வந்திருக்கிறது.!
முத்து...
என்றாலே.... உங்களுக்கு... வெண்மை நிறம் தான்.. ஞாபகத்திற்கு வரும்.. இல்லையா?...... உண்மையில்...
கருப்பு (Black Pearl).. சிவப்பு (Red Pearl).. பச்சை (Green Pearl)... நீலம் (Blue Pearl)... மஞ்சள் (Yellow Pearl)… இளஞ்சிவப்பு
(Pink Pearl) உள்ளிட்ட பல்வேறு நிறங்களில்.. முத்து
கிடைக்கிறது... மனிதர்களால் முத்துக்கள் விரும்பி ஆபரணமாக அணியப்படுவதர்க்கு காரணம்.... முத்துக்களிருந்து
வெளிப்படும்... ஒருவகையான ஈர்ப்பு மிக்க... பிரகாசமான ஒளி... என்றால்
மிகையில்லை... அதற்க்கு காரணம்... கால்சியம் கார்பனைட் (Calcium Carbonate).... எனப்படும் வேதிப்பொருள் முத்துக்களில்....
அடங்கியிருப்பதுதான்.... இந்த வேதிப்பொருள் தான்... முத்து பிரகாசமாய்
ஜொலிப்பதர்க்கு முக்கிய காரணமாய் விளங்குகிறது.!
கிட்டத்தட்ட...
பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை... இயற்கையாக... கடலில் இருந்து... கிடைக்க பெற்ற...
இயற்கை முத்துக்கள் (Natural Pearls) தான் பயன்பாட்டில்
இருந்தன... அதன் பிறகு.. முத்துக்களை.. மக்கள்.. அதிக அளவில்.. வாங்கி
பயன்படுத்தியதன் காரணமாக... முத்துக்களுக்கு.. பற்றாக்குறை ஏற்பட்டது.. உங்களுக்கு
ஒன்று தெரியுமா.... இன்று நகைக்கடைகளில்.. புழக்கத்தில் இருக்கும் பெரும்பாலான
முத்துக்கள்... செயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டவைதான்...! செயற்கையான முறை
என்றதுமே... ஏதோ.... ப்ளாஸ்டிக் போன்ற பொருட்களை வைத்து... முத்துக்களை..
தயாரிப்பார்களோ... என்று நினைத்துவிட வேண்டாம்... செயற்கையான முறையில் என்றால்...
கிட்டத்தட்ட வளர்ப்பு தேனியில் இருந்து.. தேன் பெறுவதை போல... ஒரு மீன் போல முத்துசிப்பியை வளர்த்து... இயற்கையாக... சிப்பிக்குள்..
முத்து உருவாகும் போது ஏற்படும் நிகழ்வை... செயற்கையாக ஏற்படுத்துவார்கள்.!
அதன் படி... அதீத
கவனத்துடன்... வளர்க்கப்பட்ட... முத்துசிப்பிகளுக்குள்... செயற்கையாக... மணல்
துகள்களை.. அதன் உடலில் நுழைத்து... முத்து உருவாவதை தூண்டுவார்கள்... இம்முறையில்
உருவாக்கப்படும்... செயற்கை முத்துக்கள் (Cultured Pearls).... கிட்டத்தட்ட... இரண்டு வருடங்களிலிலேயே... அதன் முழு வளர்ச்சியை எட்டிவிடுகிறது...
அதோடு மட்டுமின்றி... இம்முறையில்.. ஒரே நேரத்தில்.. அதிக அளவில்.. முத்துக்களை...
உருவாக்கவும் முடிந்தது.. இவ்வாறு செயற்கை முறையில்... முத்துக்களை உருவாக்கும்
நுட்பத்தை.. உலகில்.. முதன் முதலாக... மிக்கிமொட்டோ கோகிசி (Mikimoto Kokichi, 1858 –
1954) என்ற ஜப்பானிய வல்லுனர்... 1896 ஆம் ஆண்டு நிகழ்த்திக்காட்டினர்... அன்று முதல்...
இன்று வரை... செயற்கை முத்துகளை உருவாக்குவதில் ஜப்பான் தான்.. உலகிலேயே
முதலிடத்தில்.. தொடர்ந்து நீடித்து வருகிறது.!
இன்று நகைக்கடைகளில்
கிடைக்கும்... 95% முத்துக்கள்... இவ்வாறு
செயற்கை முறையில்... உருவாக்கப்பட்டவையே.! ஆனாலும் இன்றளவும்... பஹ்ரைன் மற்றும்
ஆஸ்திரேலியா.. போன்ற நாடுகளில்... இயற்கையாக கடலில் இருந்து பெறப்படும்
முத்துகள்... அதிக அளவில் விற்க்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.. இதுவரை.. இயற்கையாக
கிடைத்த முத்துக்களில்… லாவோ சூ (Pearl of Lao Tzu, founded in Philippines)...
என்ற முத்துதான்... உலகிலேயே மிகப்பெரிய முத்தாக கருதப்படுகிறது. இது
கிட்டத்தட்ட... 9.5 அங்குல நீளமும்... 5.5 அங்குல விட்டமும்... 6.4 கிலோ எடையும்.... கொண்டதாகும். பதிவின் நீளம் கருதி..
முத்துக்கள் பற்றிய முத்தான விசயங்களை.. இத்துடன் முடித்துக்கொள்வோம்.!
அட .. இருங்க..
எங்க கிளம்பீட்டீங்க.. என்னாது... பதிவு முடிஞ்சிருச்சா.. அடகொடுமையே...
இனிமேதாங்க.. மெயின் மேட்டரே இருக்கு.. நீங்க பாட்டுக்கு.. இப்பிடி.. பொசுக்குன்னு
கிளம்பி போயிட்டா... வலைச்சர நிர்வாகிகள்.. என்னை.. டின்னு கட்டிடமாட்டாங்க....
ஏண்டா.. உன்னை.. பதிவர்களை அறிமுகபடுத்துன்னு சொன்னா.... நீ.. பாட்டுக்க..
பக்கம்.. பக்கமா பதிவு எழுதிகிட்டு இருக்கேன்னு... உங்களுக்கு புண்ணியமா போகும்..
கீழே உள்ளதையும் கொஞ்சம் படிச்சுட்டு போங்க..! பதிவை.. விமர்சிக்கிறீர்களோ....
இல்லையோ... பதிவர்களை பற்றி ஒன்னு ரெண்டு வார்த்தை சொல்லிபுட்டு போங்க..
அப்பத்தான்... மீ எஸ்கேப் ஆக முடியும். ஹி ஹி ஹி!
உங்களுக்கு வெப்
மற்றும் ப்ளாக்-கை பற்றி.... என்ன தெரிஞ்சிருந்தாலும்.. அதையெல்லாம் ஓரங்கட்டி
வச்சிருங்க.. ஏன்னா.. கைதேர்ந்த... இணையநுட்ப பதிவரான... நம்ம விச்சு இது பற்றி விரிவாக
அலசி ஆராய்ந்து ப்ளாக் மற்றும் வெப்-னு ஒரு பதிவு
போட்டிருக்காரு.. போய் படிங்க.. படிச்ச பின்னாடி தான் உங்களுக்கு தெரியும்... நம்ம
எவ்வளவு விவரமில்லாம இருக்கோம்ங்கிறது. அதே மாதிரி கம்ப்யூட்டர்ல வைரஸ்வராமல்
பாதுகாப்பது எப்படிங்கிறது குறித்தும் விரிவா அலசி ஆராய்ஞ்சு ஒரு
பதிவு போட்டிருக்கார். உங்க கம்ப்யூட்டர பைசா செலவில்லாம வைரஸ்ல இருந்து...
பாதுகாக்கனும்னா உடனே ஓடிப்போய் படிங்க... உலகின் புகழ் பெற்ற கட்டுமானங்கள்..
பற்றி இவர் ஆராய்ந்து எழுதியிருக்கும் மனிதனின் கட்டுமானம் என்ற பதிவை
நீங்கள் வாசிக்க தவறியிருந்தால் ஐ’ம்
சாரி நீங்க ரொம்பவே இவரை மிஸ் பண்ணுறீங்கன்னு தான் சொல்ல முடியும். கல்யாணத்துக்கு
முன்னாடி.. மற்றும்... கல்யாணத்துக்கு பின்னாடி உள்ள ஆண்-பெண்களோட... மனநிலை
எப்படி இருக்கும்... என்பது குறித்து... இவர் ஆராய்ந்து..
எழுதிய க.மு-க.பி இடுகையை
வாசிச்சதும்... நிச்சயமா இவரு ஒரு மருத்துவ
மேதாவின்னு முடிவு செஞ்சேன்.
இன்றைய நவநாகரீக
இளைஞர்களின்.. தலையாய.. பிரச்சனையான... பிகர்களை கரெக்ட் பண்ணுவது எப்பிடி–ங்கிறது.. குறித்து
ஆராய்ந்து பதிவிட்டிருக்கும் நம்ம ராஜபாட்டை ராஜா., நமக்கு
வயதாகிவிட்டதா என்பதை கண்டறிய உங்களுக்கு வயதாகிவிட்டதா என்று தலைப்பிடப்பட்ட... ஒரு புதிய
மென்பொருள்... அதாங்க சாப்ட்வேர் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இவரின் இக்கண்டுபிடிப்பு
பற்றி அறிந்த பில்கேட்ஸ்.. இவரிடம்... ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள தமிழகம்
வந்தபோது பில்கேட்ஸ் சென்னையில் பிறந்திருந்தால் எப்படி
இருந்திருக்கும்.. என்பது பற்றி... இவர் ஆராய்ந்து எழுதிய இடுகை.. இணைய உலகத்தையே
திரும்பி பார்க்க வைத்தது.. என்றால் மிகையில்லை.! இவரது சாதனை இத்தோடு
முடிந்துவிடவில்லை.. அரசியல்வாதி ஆவது எப்படி என்பது குறித்து
இவர் எழுதிய புத்தகம்... ஜே.கே.ரெளலிங்கின் ஹாரிபாட்டர் புத்தக விற்பனையை...
பின்னுக்கு தள்ளி... உலகளவில் புத்தக விற்பனையில்.. புதிய சகாப்தத்தை படைத்தது...
என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
நகைச்சுவை மன்னர்
என்.எஸ்.கலைவாணர் பற்றி நாம் எல்லோரும் அறிவோம்.. சிந்திக்கவும்... சிரிக்கவும்..
வைத்த மகாகலைஞன்... இணைய உலகில்... எனது வாசிப்பு எல்லையில்... ப்ளேட்
பீடியாகார்த்தியும் அப்படித்தான்..
இவரது பதிவை வாசிக்கையில்... நம்மை சிரிக்கவைப்பதோடு... மட்டுமல்லாமல்... நல்ல
விசயங்களை வாரி வழங்கி... சிந்திக்கவும் வைப்பார். இவரது பதிவெழுத பத்து கட்டளைகள் என்ற இடுகையைத்தான் நான் முதன்
முதலில் வாசித்தேன்.. அதன் பிறகு.. நான் விரும்பி வாசிக்கும் பதிவர்களில்..
ஒருவராக இடம்பிடித்து விட்டார்.! IRCTC-டிக்கெட்முன்பதிவு செய்ய தேவையான டிப்ஸ் பற்றி குறிப்பிடும் இவரது இடுகையில்
நகைச்சுவையை கலந்திருக்கும் இவரது.. திறமை.... வியப்புக்குரியது.! எனது ஆஸ்த்தான
ஹீரோவான.. ஜாக்கியை.. பற்றி.. இவர் எழுதிய ஜாக்கிசான்-அதிரடி ஆசான் என்ற இடுகை..
ஜாக்கியை பற்றிய... எனது தற்போதைய எண்ணங்களை பிரதிபலித்தது.. ஒருவேளை நீங்கள்..
ஆன்லைனில் நீங்கள் ஷாப்பிங் செய்பவராக இருந்தால்... இவரது ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது எப்படி என்ற இடுகையையும்
கட்டாயம் வாசியுங்கள்...!
எனது இன்றைய
அறிமுகம்... இவர்கள் மூவர்களோடு இத்துடன் இனிதே நிறைவுறுகிறது.. எல்லாம் வல்ல அந்த
விநாயகப் பெருமானின் ஆசியிருந்தால்.. நாளையும்.. என்னை கவர்ந்த சில
பதிவர்களோடும்.... ஏதாவது ஒரு புதிய தகவலோடும்.... மீண்டும் வருவேன்.! நன்றி.. மீண்டும் சந்திப்போம்.. வணக்கம்.!
|
|
இந்த ஜோக்கர்னு என்னமோ தலைப்பு இருக்கே!!! அப்புடின்னா இன்னா சார்?
ReplyDeleteவெளங்கலியே!!!
அருமையான விவரணைகள் ரசிக்க வைக்கிறது ...........முத்துகள் பற்றிய முத்தைபான செய்திகள் ..............அருமை
ReplyDeleteமுத்துக்கள் பற்றி சில புதிய தகவல்களை தெரிந்துக் கொண்டேன். நான் கூட முத்துக்கள் வெள்ளை நிறத்தில் மட்டும் தான் இருக்கும் என்று நினைத்துக் கொண்டேன். சிறு வயதில் கடலுக்கு செல்லும் போது ஒவ்வொரு சிப்பியாய் தேடி உடைத்து முத்து இருக்கிறதா? என்று தேடுவோம்.
ReplyDeleteமூன்று பதிவர்கள் அறிமுகமும் சூப்பர். ப்ளாக் மற்றும் வெப் ஏற்கனவே படித்துள்ளேன். ஒயிட், எல்லோ, கிரீன் மற்றும் ரெட் பற்றி பதிவிடுகிறேன் என்று சொல்லி இன்னும் பதிவிடவில்லை. அதனையும் என்னவென்று கேளுங்கள்!
:D :D :D
ப்ளேட்பீடியா கார்த்திக் - பல முறை என்னை தர்மசங்கடத்திற்கு ஆழ்த்தியவர். ஆபிசில் அவர் பதிவுகளையும் கம்மென்ட்களையும் பார்த்து வாய் பொத்தி சிரிக்கும் போது பக்கத்தில் இருப்பவர்கள் ஒரு மாதிரி பார்ப்பார்கள்.
:D :D :D
அறியாத பல புதிய அரிய தகவல்களை
ReplyDeleteதங்கள் பதிவின் முலம்தான் நிறையத் தெரிந்து கொள்கிறேன்
இந்தப் பதிவும் அதற்கு விதிவிலக்கல்ல
முத்து குறித்த விரிவான அருமையான விளக்கத்திற்கும்
முத்தான பதிவர்கள் அறிமுகத்திற்கும்
மனமார்ந்த நன்றி
தொடர வாழ்த்துக்கள்
முத்துக்களைப் பற்றி அரிய தகவல்கள். அறிமுக பதிவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் ! நன்றி நண்பா ! தொடருங்கள் ! (த.ம.ஓ. 3)
ReplyDeleteவண்ணத்தில் முத்துகள் உள்ளன என்பது புதிய அரிய தகவல். முத்தைப் பற்றி அறியாத பல முத்தான தகவல்களைத் தந்தமைக்கு நன்றி.
ReplyDeleteமுத்தான மூன்று பதிவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தியதற்கும் நன்றி. IRCTC-டிக்கெட் முன்பதிவு மற்றும் ஆன் லைன் ஷாப்பிங் ஆகிய பதிவுகள் என்னைக்கவர்ந்தவை.
தொடரட்டும் உங்களது பணி!
@ வெளங்காதவன்
ReplyDeleteஆஹா.. என்னை மாட்டி விடுறதிலேயே..குறியா இருக்கீங்களே.. நானே...இப்பிடி தலைப்பு வச்சதுக்கு.. அவங்க வருத்தப்படாம இருக்கனுமேன்னு கவலைல இருக்கேன்.. நீங்க வேரே எரியுற தீயில எண்ணெய்யை ஊத்துரீங்களே... ஹி ஹி ஹி!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
@ கோவை மு.சரளா
ReplyDeleteமிக்க நன்றி சகோ.. வருகைக்கும் கருத்துக்கும்!
@ Abdul Basith
ReplyDeleteசின்ன வயசுல (இப்போவும் கூட எனக்கு சின்ன வயசு தான் ஹி ஹி).. கடலுக்கோ.. கடற்க்கரைக்கோ அதிகம் போனதில்லை... ஆனால் வீடு கட்ட மண்ணு எடுத்துட்டு வருவாங்க பாருங்க.. அந்த மண்ணுல சிப்பி இருக்குமே.. அதை யாருக்கும் தெரியாம எடுத்துட்டு வந்து.. வீட்டு கொள்ளைபக்கமா போய்... யாருக்கும் தெரியாம உடைத்து பார்ப்பதுண்டு.. யாராவது பார்த்துட்டா பங்கு கேப்பாங்களேன்னு.. பதிவை எழுதும் போது ஞாபகத்திற்கு வந்து சிரிச்சேன்..! நீங்க அது பற்றி கருத்து போட்டதும் சேம் ப்ளட் நிறைய இருக்குன்னு தெரிஞ்சுக்கிட்டேன்..!
மிக்க நன்றி நண்பா வருகைக்கும் கருத்துக்கும்!
@ Ramani
ReplyDeleteதாங்கள்.. இங்கும் என்னை ஆதரிக்க வந்தது.. மனநிறைவை தந்தது சார்.!
மிக்க நன்றி சார்.. வருகைக்கும்., கருத்துக்கும்., வாக்குக்கும்.!
@ திண்டுக்கல் தனபாலன்
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே.. வருகைக்கும் கருத்துக்கும்.. வாக்குக்கும்!
@ வே.நடனசபாபதி
வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா..
வாழ்த்துக்கள்யா!
ReplyDeletenice list
ReplyDelete@ விக்கியுலகம்
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சார்!
@ arul
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
முத்துக்கள் பற்றிய தகவல்களும் முத்தான மூன்று பதிவர்களும்..கலக்கும் பதிவு!
ReplyDelete@ வீடு சுரேஸ்குமார்
ReplyDeleteவாங்க தல.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
முத்து பற்றி முழுமையாக விளக்கிய முத்தான பகிர்வு. அறிமுகம் பெற்ற மூவருக்கும என் நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுத்து பற்றிய தகவல்கள் அருமை. முத்தான பதிவர்களிற்கும் உமக்கும் நல்வாழ்த்து சகோதரா.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
என்னை மிக விரிவாக அறிமுகம் செய்ததிற்கு மிக்க நன்றி நண்பரே! :) இருந்தாலும் கலைவாணர் NSK அவர்களுடன் ஒப்பீடு செய்வது ரொம்பவே ஓவர்! ஒரே ஒரு உதவி! IRCTC டிப்ஸ் பற்றிய பதிவை நேற்றுதான் புதிய தகவல்களுடன் மறுபதிப்பு செய்தேன்! எனவே, அதன் இணைப்பை இவ்வாறு மாற்றி விடுங்களேன், ப்ளீஸ்!
ReplyDeletehttp://www.bladepedia.com/2012/07/irctc-ticket-booking-tips-and-tricks-v2.html
பதிவை படித்துவிட்டு மீண்டும் வருகிறேன்!
முத்துக்களின் சிறப்பை உங்கள் முத்தான வரிகளில் கண்டது மகிழ்ச்சி. முத்தான அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமுத்துக்கள் பற்றி இதுவரை தெரிந்திராததகவல்களுக்கு நன்றி அறிமுகங்களுக்கு வாழ்த்துகள்.
ReplyDeleteமுத்தான பதிவு. அறிமுகங்களில் விச்சு எனக்கு புதியவர். நன்றி சகோ.
ReplyDelete//வெளங்காதவன்™ said...
ReplyDeleteஇந்த ஜோக்கர்னு என்னமோ தலைப்பு இருக்கே!!! அப்புடின்னா இன்னா சார்?
வெளங்கலியே!!! //
யோவ் அந்த 3 ஜோக்கரை - உமக்கு வெளங்கலையா....ஹே ஹே ஹே நம்பிட்டோம்.
நீங்க கலக்குங்க வரலாறு
சூப்பர் நண்பா.. பாரபட்சம் இல்லாமல் அனைத்து பதிவர்களையும் பதிவுகளையும் ஊக்குவிக்கும் உங்களுக்கு இந்த வாரம் நல்ல தளம்..
ReplyDeleteவரலாறு படையுங்கள்..
என்னையும் என் பதிவையும் அறிமுக படுத்தியமைக்கு நன்றி .... பிகர கரெக்ட் பண்ற போஸ்ட் படித்து யாரு அடிக்க வர போகின்றார்களோ ?
ReplyDeleteKONG விட ஜோகேர்க்கு தான் மதிப்பு அதிகம் ,,, ஒரு GK
ReplyDelete@ பால கணேஷ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சார்.!
@ kovaikkavi
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
@ Karthik Somalinga
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா! (புதிய இணைப்பு அப்டேட் செய்யப்பட்டுவிட்டது)
@ Sasi Kala
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சகோ!
@ Lakshmi
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி லக்ஷ்மி அம்மா!
@ Prabu Krishna
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
@ மனசாட்சி™
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல..!
@ ஹாரி பாட்டர்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி நண்பா!
@ "என் ராஜபாட்டை"- ராஜா
வாங்க தல.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி! ஆமாம்..எப்போதுமே ஜோக்கர்ஸ்க்கு தனி மதிப்பு தான் :)
முத்துக்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.குறிப்பிட்டவர்களின் பதிவை வாசித்திருக்கிறேன்..நற்பதிவு..
ReplyDeleteInteresting. Pl try to introduce more no of people. I think you have time constraint and that is the problem
ReplyDelete@ மதுமதி
ReplyDeleteமிக்க நன்றி சார்..வருகைக்கும் கருத்துக்கும்!
@ மோகன் குமார்
எஸ் பிரதர்.. டைம் இல்லாததுதான் பிரச்சனை... இருந்தாலும் தங்களின் அறிவுரையை கவனத்தில் கொள்கிறேன்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
முத்து பற்றிய பதிவு அருமை! நகைக் கடைக்கார்கள் ஒரிஜினல் முத்து பதித்த நகை என்று சொல்லி அதிக விலைக்கு விற்று ஏமாற்றும் கதையும் இங்கு நடந்து கொண்டிருக்கிறது! இரண்டு பதிவர்களின் அறிமுகம் அட்டகாசம்! ;)
ReplyDelete@ Abdul Basith
ReplyDelete//ப்ளேட்பீடியா கார்த்திக் - பல முறை என்னை தர்மசங்கடத்திற்கு ஆழ்த்தியவர்//
நன்றி நண்பரே! :)
//ஆபிசில் அவர் பதிவுகளையும் கம்மென்ட்களையும்//
ஆபிஸ் போனா வேலை மட்டும் பாக்கணும்! பதிவை பாக்கக்கூடாது! ;)
முத்தான முத்தல்லவோ!
ReplyDeleteஆரம்பித்தில் ஜோக்கரை இறக்கிட்டீங்க!
கலக்குங்க
அழகு < பதிவு + அறிமுகம் - தலைப்பு < அற்புதம்
ReplyDelete@ Karthik Somalinga
ReplyDelete////ஆபிஸ் போனா வேலை மட்டும் பாக்கணும்! பதிவை பாக்கக்கூடாது!///
ஆபீசில எங்க மேனேஜர் கூட... எங்களை வேலை பார்க்க சொன்னதில்லை.. எங்களை போய் இப்பிடி வேலையைப் பாருன்னு சொல்லிபுட்டீங்களே... எனக்கு அழுகை அழுகையா வருது! பாஸித் பாய் உங்களுக்கு? :D :D :D
@ சென்னை பித்தன்
ReplyDeleteவாங்க பித்தர் ஐயா! வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
@ ரெவெரி
வாங்க ரெவெரி.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
blade கார்த்திக் தளத்தை படித்தால் சிரிக்காமல் வர முடியாது அருமையான தளம் சிரிப்பதற்கு தொடருங்கள் அன்பரே
ReplyDeleteமுத்துக்களை பற்றி சிறப்பான தகவல்களுடன் மூன்று முத்துக்களை அறிமுகம் செய்த விதம் சூப்பர் தொடரட்டும் உங்கள் முத்தான பணி!
ReplyDelete:) good share...
ReplyDeleteமுத்துகள் பற்றி சிறப்பான தகவல்கள்... தொடரட்டும் வலைச்சரப் பணி....
ReplyDelete@ PREM.S
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி பிரேம்!
@ s suresh
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி சுரேஸ் சார்.!
@ தமிழ்வாசி பிரகாஷ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி தல..!
@ வெங்கட் நாகராஜ்
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி வெங்கட் சார்.!
முத்துச்சரம் தொகுக்கும் எனக்கு முத்துக்களைப் பற்றிய தகவல்கள் சுவாரஸ்யமாக இருந்தன:).
ReplyDeleteஅறிமுகமாயிருக்கும் மூன்று பதிவர்களுக்கும் என் வாழ்த்துகள்!
@ ராமலக்ஷ்மி
ReplyDeleteவாங்க சகோ.. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி!
வணக்கம் நண்பரே,
ReplyDeleteதங்களின் வலைச்சரப் பணிக்கு வாழ்த்துக்கள்....
முத்துக்கள் பற்றி முத்து முத்தாய்
செய்திகள் அள்ளிக் கொடுத்திருக்கிறீர்கள்...
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்....
@ மகேந்திரன்
ReplyDeleteமிக்க நன்றி மகேந்திரன் சார்.. வருகைக்கும்.. கருத்துக்கும்.. வாழ்த்திற்கும்!
Congrats for the effort!
ReplyDelete@ ! சிவகுமார் !
ReplyDeleteவருகைக்கும் வருதுக்கும் மிக்க நன்றி நண்பரே.!
என் சீட்டுக்கட்டுல 3 ஜோக்கர்ஸ் தலைப்புல என்னை சேர்த்ததற்கு மிக்க சந்தோசம். எப்பவுமே ஹீரோவுக்கு அப்புறம் காமெடியனுக்குத்தான் மவுசு (ஹீரோயின் அப்படின்னு சொல்லக்கூடாது). முத்தாக பதிவை ஆரம்பித்து அசத்தியுள்ளீர்கள். நான் கொஞ்சம் தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும்.
ReplyDelete@ விச்சு
ReplyDeleteவருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி விச்சு சார்.!
முத்துக்கள் பற்றிய வரலாறு என்னைப் போன்றவர்கள் அறிய, அரிய வாய்ப்பு நன்றி!
ReplyDeleteபுலவர் சா இராமாநுசம்
@ புலவர் சா இராமாநுசம்
ReplyDeleteவருகை தந்து சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி ஐயா.!