கவிதைகள் பிறக்கின்றன...
➦➠ by:
சௌந்தர்
கவிதையென்று எப்படி பெயர் வைத்தார்களோ.. அழகாய் மென்மையாய் இருப்பதாலோ என்னவோ.. சில வரிகளிலே கோபம், துன்பம், இன்பம், என எல்லாவறையும் சொல்லி விடுகிறது கவிதை.
சிலருக்கு கவிதை எழுத தெரியாது. ஆனால் கவிதையை தேடி தேடி படிப்பார்கள்.. அப்படியொரு காதல் இருக்கும் கவிதையின் மீது..
நானும் கவிதை எழுதுகிறேன் என்று ஏதோ கிறுக்கி வைப்பேன்.. அதெல்லாம் ஒன்றும் கவிதை கிடையாதென்று எனக்கு தெரியும். இருந்தாலும் அவ்வப்போது ஏதாவது கிறுக்கி வைப்பது வாடிக்கை. கவிதையை படிப்பதும் வாடிக்கை தான். படித்து அடடா என வியந்த கவிதைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
கிராமத்துக் கருவாச்சியாக இருந்து கொண்டு இவரின் வரிகள் எல்லாம் பாருங்களேன்... யாராக இருந்தாலும் அக்கா தம்பி என்று உறவு முறை வைத்தே அழைப்பார் இவர்.. அதுவும் அம்மாவை பற்றி இவர் எழுதிய கவிதை...
கார்த்திக்கின் கிறுக்கல்கள்.. வெகு நாட்களாய் இவர் பதிவுகள் எழுதி வருகிறார்.. இவரின் தனிமை பற்றிய கவிதையை படிக்கும் பொழுது ஏதோ ஒரு உணர்வு ஏற்படுகிறது.. நான் மீண்டும் மீண்டும் படித்து கொண்டிருக்கிறேன். நீங்களும் ஒரு முறை வாசித்து பாருங்களேன்....
கவிதை.. கவிதைக்கு கவிதையை விட ஒரு சிறந்த தலைப்பு வைக்க முடியுமா என யோசித்து கவிதையென தலைப்பு வைத்து விட்டார் போல.. அம்மா,மனைவி,மகள் நாம் வாழ்கையில் இவர்கள் ஒவ்வொருவர் வரும் பொழுதும் நமக்கான அன்பும்,பாசமும் அதிகரிக்கும். அப்படியொரு தந்தை மகளின் பாச வரிகள் இங்கே காட்சிகளாய் ஓடுகிறது...
தூரிகைச் சிதறல் இவரின் எழுத்துகளை பார்த்தால் அதில் தமிழை தவிர வேறு மொழியை பார்க்க முடியாது.. அப்படியொரு எழுத்து அவரிடம் இருக்கிறது... கவி குழந்தை ஆமாம்... கவிதையே குழந்தையாக பிறந்திருக்கிறது இவரின் வரிகளில்..
தமிழ் தொட்டில்.. இவரின் தொட்டிலில் அனைத்து வகையான வரிகளும் கிடைக்கின்றன..கவிதை மட்டுமில்லாமல் சினிமாயென அனைத்தையும் ஒரு கை பார்க்கிறார்.. உன்னுடைய இருத்தலின்றி காதல் வரி கவிதைகள் வந்துகொண்டே இருக்கிறது.
காதல்: யார் மீது என்கிறீர்களா..? அட... அது இவரை தான் கேட்க வேண்டும். எழுதுவது இரண்டு வரியோ, மூன்று வரியோ... அதில் அனைத்திலும் காதல் வழிந்தோடுகிறது. எப்படி இப்படியெல்லாம் யோசிக்கிறார் என்று நம்மை கேள்வி கேட்க வைக்கிறது இவரின் கவிதை. என்னவென்று சொல்ல இவரின் கவிதைகளை... ம்ம்ம்..
மறவாதே கண்மணியே.. ம்ம்ம்... யாரை சொல்கிறாரோ.. அவருக்கென்று ஒரு கண்மணி இருக்கிறார்கள். அவரைதான் கேட்க வேண்டும். முகப்புத்தகத்தில் இவரின் கவிதைகள் பார்க்கலாம்.. கவிதைகளுக்கு ஏற்றாற்போல் புகைப்படங்கள் தேர்வு செய்வார்... இவர் தேர்வு செய்யும் புகைப்படமும் கவிதை சொல்லும்.
அனாதை காதலன் : இன்னும் யாரும் ஜோடி கிடைக்கவில்லையா என கேட்டுப்பாருங்கள். அது ரகசியம் என்பார்..இவரின் வலைத்தளம் சென்றால்அத்தனையும் காதலாய் நிரம்பி வழிகிறது..
கவிதைகள் அனைத்தும் கவித்துவமாய் இருந்ததா..? நாளை வேறு ஒரு வகையுடன் வருகிறேன்.. கவிதையை படித்து கவிதை படைத்து கொண்டிருங்கள்.
|
|
நான் கவிதைக் காதலன் தான் ஆனாலும் இப்போதெல்லாம் தேடித் தேடிப் படிப்பது இல்லை.... இங்கு நீங்கள் கொடுத்திருக்கும் தளங்களுக்கு சென்று பார்வையைப் பதிக்கிறேன்... தினம் ஒரு வகை பதிவர்களை அறிமுகம் செய்யும் உங்களுக்கு வாழ்த்துக்கள் சார்
ReplyDeleteஅனைத்து அறிமுகங்களும் அருமை.. கவிதையைப் பிடிக்காதவர்கள் யாரும் இல்லை..
ReplyDeleteகவிதை..
ReplyDeleteஎழுதுவது, கிறுக்குவது, படிப்பது, பகிர்வது - எல்லாமே ஒரு வித சுகம் தான்.
பட்டியலில் இடம்பெற்ற பதிவர்களுக்குப் பாராட்டுக்கள்.
பகிர்ந்த உங்களுக்கு வாழ்த்துக்கள் சௌந்தர்.
சீனி-கவிதைகள் - தளம் தவிர கீழ் உள்ள மற்ற தளங்கள் எல்லாம் எனக்கு புதியவை...
ReplyDeleteஅனைவரின் சிந்தனைகளும், அதற்கேற்ற கவிதை வரிகளும் அருமை...
(1) கிராமத்துக் கருவாச்சி, (2) கார்த்திக்கின் கிறுக்கல்கள்,
(3)”தூரிகைச் சிதறல்....”, (4) தமிழ் தொட்டில்..,
(5)!♥♥ காதல்♥♥!,
(6)மறவாதே கண்மணியே, (7)!அனாதைக்காதலன்❤
புதிய அறிமுகங்களை பகிர்ந்து கொண்ட நண்பர் சௌந்தர் அவர்களுக்கு பாராட்டுக்கள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி. (த.ம. 2)
அறிமுகங்களிற்கு நல்வாழ்த்து.
ReplyDeleteகோவைக் கவி.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்
ReplyDeleteஅறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteஆசிரியர் தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்!
அனைத்து அறிமுகங்களை அவர்கள் தளத்திற்கே சென்று வாழ்த்தியாயிற்று...
ReplyDeleteநல்லது..
அறிமுகங்களுக்கு நன்றி அதில் கிராமத்துக்கருவாச்சி நானும் பின் தொடரும் வலை நன்றி கலையின் அறிமுகத்திற்கும்!மற்றவர்களையும் படிப்போம் இனி!
ReplyDelete@சௌந்தர்....
ReplyDeleteதூரிகைச்சிதறலை அறிமுகப்படுத்தியமைக்கு..மனமார்ந்த நன்றி..அன்புள்ளங்களின் வாழ்த்துக்கள் எம் எழுத்தை மெருகேற்றட்டும்..
@திண்டுக்கல் தனபாலன், தூரிகைச்சிதறல் அறிமுகமாகியிருப்பது குறித்து தெரியபடுத்தியமைக்கு நன்றி சகோ..
அறிமுகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.
அறிமுகமான அனைத்து உள்ளங்களுக்கும் வாழ்த்துக்கள் .
ReplyDeleteஇதை அறிமுகம் செய்துவைத்த தங்களுக்கும் எனது பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும் உரித்தாகட்டும் ஐயா .
நல்ல அறிமுகம்..
ReplyDeleteஅறிமுகங்கள் அனைத்தும் கவிதை வரிகளாய், மின்னலோவியமாக மின்னட்டும்...
ReplyDeleteதிறமையான அறிமுகங்கள்தான்....
ReplyDeleteகிராமத்து கருவாச்சி கலை! தமிழ் தோட்டம் மூலம் அறிமுகமானவர்! மற்றவர்களை வாசித்ததில்லை! வாசித்து மகிழ்கிறேன்! நன்றி!
ReplyDeleteஎன்னை அறிமுகம் செய்தமைக்கு நன்றி..
ReplyDeleteகவிதைப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமீண்டும் என்னை வலைச் சரத்தில் அறிமுகப் படுத்தி தெரியாத நண்பர்களுக்குக் என்னை கொண்டு சேர்க்கிற நண்பர்கள் அத்துனை பேருக்கும் நன்றி... நன்றி நன்றி... அறிமுகங்கள் எல்லாம் எனக்குப் புதியவர்கள்.. இனி தொடர்வேன்.... நண்பர்களுக்கு மீண்டும் நன்றியும் அன்பும் ... நன்றி சௌந்தர் சகோ...
ReplyDeletesako..!
ReplyDeleteenathu kavithaikalumaa...!
aachariyamaaka irukkirathu!
mikka nantri ungalathu arimukangalum-
enakku puthiyavarkal!
naanum avarkaludan inainthen!
ungalukku mikka nantri!
எனது எழுத்துக்களுக்கு மரியாதை கொடுத்த உங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஉள்ளம் மகிழும் பொழுது வார்த்தைகள் தழுதழுக்கும் என்று கூறுவார்கள். ஆனால் எனக்கு மௌனிக்கிறது.
மிக்க நன்றி தோழரே....
ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ஆரு அண்ணா நீங்க ...என்னையும் அறிமுகம் படுத்தி வைசி இருக்கீங்களே ...உங்களை நான் எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க வீட்டில கூட பார்க்கலையே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ....
ReplyDeleteநான் எழுதுரதையும் கவிதைன்னு மதிச்சி என்னையும் அறிமுகப் படுத்தி இருக்கீங்க ...உங்க நல்ல மனசுக்கு நீங்க ரொம்ப நல்லா இருப்பீங்க அண்ணா ...
மிக்க நன்றி அண்ணா ....