வணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் :)
➦➠ by:
Angelin
வணக்கம் ,அன்பு நண்பர்களே ...நான் ஏஞ்சலின் ..அஞ்சு /அஞ்சு அக்கா /
காகிதப்பூக்கள் ஏஞ்சல் :)
அனைவருக்கும் முதலில் ஒரு பாரம்பரிய பிரித்தானிய கேக் :)
மற்றும் நமக்கே நமக்கு நம்ம நாட்டுக்கு சொந்தமான தேன் மிட்டாய் :)
எடுத்துக்கோங்க
காகிதப்பூக்கள் ஏஞ்சல் :)
அனைவருக்கும் முதலில் ஒரு பாரம்பரிய பிரித்தானிய கேக் :)
மற்றும் நமக்கே நமக்கு நம்ம நாட்டுக்கு சொந்தமான தேன் மிட்டாய் :)
எடுத்துக்கோங்க
என் மீது அபார நம்பிக்கை வைத்து வலைசரத்தில் ஒரு வாரம் ஆசிரியாக
நியமித்த சீனா ஐயா ,தம்பி பிரகாஷ் ஆகிய இருவருக்கும் எனது பணிவான
நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் .
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே திரு .வை.கோபாலகிருஷ்ணன்
( கோபு அண்ணா) அவர்கள் என்னை அழைத்திருந்த போதிலும் அப்போது
எழுத இயலாத சூழ்நிலையால் தடை பட்டது .
ஆனால் இடைப்பட்ட காலத்தில் என்னை நானே சுய பரிசோதனை செய்து
இயன்ற வரையில் எனது எழுத்துக்களை சிறிதேனும் மேம்படுதியிருக்கின்றேன்
என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டதால் மிகுந்த சந்தோஷத்தோடு இப் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன் .
சரி :) இப்பொழுது என்னைப்பற்றி ...:) தருமபுரியில் பிறந்த தேவதை .
அப்பாவின் பணிமாற்றம் காரணமாக அடிக்கடி பல ஊர்களுக்கு பிரயாணம்
செய்ததில் படிப்புக்கு இடையூறு வர வேண்டாமென சென்னையில்
குடியேற்றபட்டோம் !
படித்து முடித்ததும் வானளாவிய கனவுகளுடன் திரிந்தேன் :) ஆனால் :)
இந்தியாவுக்கு ஒரு Jane Goodall,ஒரு தலை சிறந்த .I.A.S அதிகாரி !!
ஒரு வைஜெயந்தி I.P.S ...மன்னிக்கவும் ஒரு :)கிரண் பேடி ..கிடைக்கக்கூடாது
என்று தலை விதி :) ...படிச்சதெல்லாம் போதும் என்று மணமுடித்து
வெளிநாட்டுக்கு அனுப்பி வைச்சிட்டாங்க :)...
படிச்ச படிப்பு உயர்நிலை பள்ளி படிக்கும் மகளுக்கு உதவியாக இருக்கு .
நம்ம ப்ளாக் உலக பிரவேசம் ..இதற்கு முழு காரணம் எனது அன்பு கணவர் தான் ..
ஒரு ஆங்கில வலைப்பூவை எனக்கு ஆரம்பித்து கொடுத்தார் .
அதற்கு முன்பு சுமார் ஒரு வருட காலம் எல்லார் வலைபூக்களிலும்
பின்னூட்டம் மட்டும் அளித்து வந்தேன் .அவ்வாறு வலையில்
நண்பரான //அந்நியன்// புகழ் அயுப் அவர்கள் தமிழில் வலைப்பூ துவங்கி
எழுதசொன்னார் ..அப்படி ஆரம்பித்தது தான் காகிதபூக்கள் ..
கடந்த ஒரு வருடமாக ஆலயத்தில் VOLUNTEER வேலை செய்வதால் பதிவெழுதுவது
கொஞ்சம் குறைந்த போதிலும் பசுமை விடியல் மற்றும் நலம் ஆகியவற்றில்
அவ்வப்போது என்னால் இயன்ற நேரம் பதிவுகளை எழுதி வருகின்றேன் ..
நான் எழுதிய பதிவுகளில் எனக்கே எனக்கு மிகவும் பிடித்தவை
எங்க வீட்டுக்கு எங்கிருந்தோ ஓடிவந்தது இந்த பப்லு அதற்கு நான்தான் உயிர் !!
நம்ம தமிழ் மொழி பாரெங்கும் பரவியிருப்பதை நினைத்து புல்லரித்து போச்சு !
இந்த பதிவு ஒரு தொடர் பதிவு ஒவ்வொருவரும் எவ்வளவு பொக்கிஷங்களை
சேர்த்து வச்சிருக்காங்க பாருங்க :)
நான் மிகவும் நேசித்த எனது பதிவு
நானும் அவ்வப்பொழுது சமையல் பதிவும் எழுதியிருக்கேன்
@ஜெய் அங்கே என்ன சிரிப்பு ? :)
நான் க்வில்லிங் மற்றும் கைவேலை செய்வேன் என்பதுதான் அனைவரும்
என்னைப்பற்றி அறிந்தது ..இப்படி பற்பல விஷயங்களை நான் பகிர காரணமும்
என் கணவர்தான் :) நான் கைவேலை செய்ய சேமித்து /ஒளித்து வைத்திருந்த
பொருட்களை நான் ஊரில் இல்லாத சமயம் குப்பைன்னு நினைத்து வீசிட்டார் !
வேறு வழி இன்றி சமையல் மற்றும் விழிப்புணர்வு பதிவுகளுக்கு மாறிவிட்டேன் .
மீள்சுழற்சி முறையில் தேவையற்ற பொருட்களை பயன்படுத்தி நான் செய்த
வாழ்த்து அட்டைகள் இங்கே பாருங்க
அங்காடிகளில் உள்ள அட்டைபெட்டிகளில் காற்று புக வட்ட வடிவம்
இந்த அணிலார் பழைய பிரவுன் என்வலப்பை வெட்டி செய்தது
க்வில்லிங் முறையில் செய்தது
சரி :) நட்புபூக்களே இத்துடன் எனது அறிமுகத்தை முடித்துகொள்கிறேன் ..
நாளை முதல் புதிய பல விஷயங்களுடன் உங்களை மறுபடியும்
சந்திக்கின்றேன் .
இதுவரைக்கும் என்னைப்பற்றி ஓரளவுக்கு அறிந்திருப்பீர்கள்
யாராங்கே ஒரு கை மட்டும் தெரியுது ....உன் பெயர் என்ன பாப்பா?
..
ரீச்சர் ..ரீச்சர் என் பேர் கலை கலைச்செல்வி கருவாச்சின்னு சுருக்கமா
கூப்பிடுவாங்க ..எநக்கு ஒரே ஒரு சந்தேகம்........................................
ANGEL .....கேளும்மா
நீங்க சுய பரிசோதனைன்னு சொன்னீங்களே .!
எந்த ஹோச்ச்பிடல அட்மிட் ஆகி பரிசோதிசிட்டீங்க ரீச்சார் ??
..
ஏஞ்சலின்
ஆஆஆ
மீண்டும் சந்திப்போம் நட்புபூக்களே :)
|
|
வாழ்த்துக்கள் தோழி தங்களின் ஆசிரியைப் பணி சிறப்பாகத் தொடரட்டும்...
ReplyDeleteவணக்கம் சகோதரி ..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Deleteவாழ்த்துக்கள் ஏஞ்சல். ஏற்கனவே அறிமுகமான அன்பு ஏஞ்சல் வலைப்பூக்களில் சிறந்தவற்றை மீண்டும் ஒரு பார்வை பார்க்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. நன்றி.
ReplyDeleteஅழகான ஆரம்பம். தொடருங்கள். ஒவ்வொருவர் ரசனையும்வேறு வேறு. காத்திருக்கிறேன் ஆவலோடு, உங்கள் அறிமுகங்களை அறிந்துகொள்ள.
வாழ்த்துக்கள்.
வருகைக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி இமா :)
Delete//TOOL ஏதுமின்றியும் செய்யலாம் இந்த மலரை // லிங்க் வேலை செய்யவில்லை அஞ்சூஸ்! ;(
Deleteமிக்க நன்றி இமா ..இப்போ சரி செய்துவிட்டேன்
Deleteடீச்சர் எண்டர் ஆகிட்டாங்க . உஷாரா லிங்க் , ஸ்பெல்லிங் எல்லாம் கரெக்டா இருக்கோனும் , இல்லேன்னா நருக்குன்னு தலையிலேயே கொட்டிடுவாங்க ஹி....ஹி.. :-).
Deleteமுதலில் உங்க தலையை இப்படிக் காண்பிங்க ஜெய்லானி.:-)
Deleteநருக்குன்னு = நறுக்குன்னு
ஆரைக் கொட்டனும் நு சொல்லுங்க ...நானேக் கொட்டுறேன் ....
Deleteஆஆஆஆஆஆஅ றீச்சர் வந்திருக்கிறாக... பபபபபச்சைப்பூ வந்திருக்கிறாக... சிஷ்யை வந்திருக்கிறாக... மீண்டும் ~அ~ னாவில் இருந்து ஆரம்பமா??:).
Delete:) ஹா ஹா @துளசி அக்கா :) யெஸ் யெஸ் கொட்டுங்க அந்த அஞ்சு விரலிலும் கல் மோதிரங்கள் போட்டுக்கிட்டு கொட்டுங்க :)
Deleteவாத்து அண்ணாவும் வந்துட்டாங்க!ஹீ
Deleteகலைக்கு வந்த அதே சந்தேகம் ஏன் இந்த அம்பாளடியாள் என்ற சிலைக்கு
ReplyDeleteவரக் கூடாது சொல்லுங்க ரீச்சர் பதிலைச் சொல்லும் வரைக்கும் விட மாட்டோம் :)))))
அவ்வ் :) இந்த கலை எல்லாருக்கும் சொல்லி தான் இங்கே அனுப்பியிருக்கு :)
Deleteநான் வெளிநட்ப்பு செய்கின்றேன் பதில் வ்ரும் வ்ரைக்கும்!ஹீ படிக்காத வாத்துவின் அண்ணாவுக்கு சொல்லும் வரை!
Deleteஅன்பின் ஏஞ்சலின் - சுய அறிமுகம் அருமை - நன்று நன்று - பிரித்தானியா கேக்கும் தேன் மிட்டாயும் - வாவ் - துவக்கப் பள்ளி சென்ற காலத்தில் சாப்பீட்ட தேன் மிட்டாய் - மறுபடி பார்த்து இரசித்து மகிழ்ந்து எடுத்துச் சாப்பிட ....... வாவ் - பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஉங்கள் அன்புக்கும் பாராட்டுக்களுக்கும் மிக்க நன்றி சீனா ஐயா :)
Deleteஆ...இங்கேயும் வந்தாச்சா வெரிகுட்...வாழ்த்துக்கள்...
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி சகோ :)
DeleteDear Angelin....I am glad you got to do this and am sure you would unearth gems among bloggers...Look forward to visiting introduced blogs...Keep rocking....Cheers Reverie
ReplyDeleteமிக்க நன்றி ரெவரி ..உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி..:)
Deleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ரெரீ அண்ணா .....
Deleteஎப்படி இருக்கீங்க ....
எவ்ளோ நாள் ஆச்சு ......................சாப்ப்டீங்களா ;-)
நான் கூட வலைச்சரம் ஆசிரியை ஆஅ இருந்தேன் தெரியுமா ......நீங்க தான் வரவே இல்லை கர்ர்ரர்ர்ர்கர்ர்ர் கர்ர்ரர்ர்ர் ....
அஞ்சு அக்கா புண்ணியத்துல ரெரீ அண்ணா பார்த்தாச்சு
கர்ர்ர் :) நீ அண்ணாவுக்கு சொன்னியா ..?சொன்னாதானே அண்ணாவுக்கு தெரியும் ...
Delete//எவ்ளோ நாள் ஆச்சு ......................சாப்ப்டீங்களா ;-)// AAAAAW
ஞே !!
ரெவெரி நலம் நீண்ட காலத்தின் பின் இங்கு அறிவதில் மகிழ்ச்சி!
Deleteசூப்பர் அறிமுகம் அஞ்சூஸ். தொடர்ந்து கலக்குங்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி வான்ஸ் :)
Delete
ReplyDeleteவணக்கம்!
தேன்மிட்டாய் தின்று திாிந்த பருவத்தில்
நான்சிட்டாய் மெல்ல நடைபோட்டேன்! - வான்கொட்டும்
நன்மழையாய் நல்ல அறிமுகம்! நல்லேஞ்சல்
இன்னமுதாய் நாளும் எழுது!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
வாங்க கவிஞர் ஐயா ..அருமையான கவிதை தேன்மிட்டாயை விட இனிக்கின்றது :)
Deleteவருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி .
வணக்கம்
ReplyDeleteஅறிமுகம் நன்றாக உள்ளது..1வாரமும்சிறப்பாக தங்களின் பணியை தொடர எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்
..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ ரூபன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete/// படிச்ச படிப்பு உயர்நிலை பள்ளி படிக்கும் மகளுக்கு உதவியாக இருக்கு... //
Deleteமுக்கியமாக இது தான் தேவை... சுய அறிமுகம் நன்று...
அசத்துங்க... வாழ்த்துக்கள் சகோதரி...
.வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ டி. டி :)
Deleteஅட! நீங்களா!!!!!
ReplyDeleteநல்வரவு. அ'ரி'முகம் சூப்பரு!
இனிய வாழ்த்து(க்)கள்.
ஹையா !!:) வாங்க துளசியக்கா ..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Deleteஅறிமுகப் பதிவு தேன் மிட்டாய் போன்றே இனிமையா இருக்குங்க.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சித்ரா :)
Deleteவாசிக்கும்போதே ஒரு தனி குஷி வந்துடுது...!!! :-) எல்லோரையும் பக்கத்துல கூப்ட்டு சொல்ற மாதிரியான எழுத்து நடை அசத்தல் ரகம்.
ReplyDeleteஉங்கள் போஸ்ட் எல்லாம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் இன்று மீண்டும் ஒருமுறை பார்த்து பிரமிக்கிறேன்...இவ்ளோ கைவேலைகள் செய்ய எவ்ளோ பொறுமை இருக்கணும் !!!? சூப்பர் !!
வாழ்த்துகள் ஏஞ்சல் ...உங்களின் மூலம் யார் தளங்கள் எல்லாம் பெருமைப்பட போகின்றன என ஆவலுடன் காத்திருக்கிறேன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி எங்கள் தலைவீ :) கௌசி ..என்னை ஊக்கபடுத்தி இந்த அளவுக்கு தைரியம் கொடுத்த உங்களுக்கு நான் தான் நன்றி சொல்லணும் :)
Deleteஇந்த வாரம் வலைச்சர ஆசிரியராக பணியேற்கும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நடனசபாபதி ஐயா :)
Deleteதேன் மிட்டாயுடன் வலைச்சரம் வந்த
ReplyDeleteதேவதைக்கு வாழ்த்துகள்..!
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்பு ராஜேஸ்வரியக்கா :)
Deleteதேன் மிட்டாய் போன்றே மிகவும் சிறப்பாக ஆரம்பித்திருக்கிறது உங்கள் வாரம்.... வாழ்த்துகள் ஏஞ்சலின்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ரோஷினி அப்பா வெங்கட் நாகராஜ் :).
Deleteநல்வாழ்த்துக்கள் ஏஞ்சலின்,தொடர்ந்து அசத்துங்க.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஆசியா :)
Deleteஅன்பின் சகோதரி.. வருக.. வருக..
ReplyDeleteவந்த உடனேயே தேன் மிட்டாய்!..
இனிமேல் - என்னென்னவோ!..
நல் வாழ்த்துகள் ..
.மிக்க நன்றி சகோதரர் .துரைசெல்வராஜு .
Deleteதேன் மிட்டாய் அனைவருக்கும் பிடிச்சிபோச்சின்னு நினைக்கிறேன் :) கடந்த முறை இந்தியா சென்றபோது கடையில் இதை வாங்கினேன் அங்கே எல்லாரும் சிரிச்சாங்க ..என்னதான் காட்பரிசும் ,லின்ட்ட் ,சுவிஸ் வகை என்று வெளிநாட்டு சாக்லேட் சாப்பீட்டாலும் தேன்மிட்டாய் தேன்மிட்டாய் தான் :)
எனக்கொரு சின்ன சந்தேகம் ..நீங்க தான் இனியவை கூறல் அய்யா அவர்களுமா ?
அன்பின் சகோதரி..
Deleteஎனது தளம் - தஞ்சையம்பதி என்பதாகும். http://thanjavur14.blogspot.com/
தாங்கள் இங்கே வழங்கியுள்ள தேன் மிட்டாய் - தயாரிப்பில் தஞ்சாவூர், கும்பகோணம், திருச்சி, சாத்தூர், கோவில்பட்டி - என பல பகுதியும் பிரசித்தமானவையே!.. ஆனால் - இன்றைக்கு இதன் ருசி சற்றே மாறுபட்டிருப்பதாகத் தெரிகின்றது.
பழைமையை மறவாமல் நினைவு கூர்ந்த தன்மை பாராட்டிற்குரியது.
வாழ்க நலம்!..
அப்போ fb ல நாம கும்மி அடிக்கிறதும் அய்யா தானா
Deleteமிக்க நன்றி ஐயா
Deleteஇந்த வாரம் வலைச்சரம் ஆசிரியை பணியை பொறுப்பேற்க வந்து இருக்கும் சகோதரி அவர்களுக்கு வாழ்த்துக்கள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி இளங்கோ அண்ணா
Deleteசுய அறிமுகம் அருமை. வாழ்த்துக்கள் அஞ்சு. தேன்மிட்டாயுடன் ஆரம்பித்திருக்கும் உங்கள் பணிக்கு என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅம்முலு வந்திருக்கிறாக:).
Deleteஆஆஆ இருங்கோ நான் காண்பது கனவாஆ..எங்கட பூஸார் வந்திட்டா.....வாங்க ,வாங்க.மிகவும் மகிழ்ச்சியா இருக்குகூஊஊ.
Deleteஹா ஹா :) be careful :)பார்த்து அம்முலு பூஸ் சுடுதண்ணிய ஊத்தி விடும் :)
Deleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ப்ரியசகி
Deleteமுதல்ல வந்து தேன் மிட்டாயை அமுக்கலாமுன்னு பார்த்தால் பிளேட்டை கூட கானோம் அவ்வ்வ்வ்வ்வ் :)
ReplyDelete:) ஜெய் பூஸ் அது பூஸாரின் வேலைதான் :)தட்டோட காணாம போகுதின்னா அவர் மட்டுமே சாத்தியம்
Deleteபிரித்தானியா கேக்கும் தேன் மிட்டாயும் - கொடுத்த தேவதைக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆசிரியர் பொறுப்புக்கு வாழ்த்துக்கள்.
வாழ்க வளமுடன்.
வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி கோமதி அக்கா
Deleteஅருமையான அறிமுகம் தொடர்ந்து அசத்துங்க வாழ்த்துக்கள் :-)
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஜெய்லானி :)
Deleteஎங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கு எண்டு சும்மா எட்டிப் பார்த்தேன்... அட.. நம்ம அஞ்சு.. அறிமுகம் வழக்கமான சுவாரஸ்யமான நடையில் அழகா இருக்கு.. தொடருங்கள்.. வாழ்த்துக்கள்!!!
ReplyDeleteவாங்க பூங்கோதை :) வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ..
Deleteஐய்..............வணக்கம் தேவதைத் தங்கையே!நலமா?///சுய புராணம் நன்று.மேலதிக தகவல்களுடன் அறிமுகம் நன்று.///நானும் அவ்வப்பொழுது சமையல் பதிவும் எழுதியிருக்கேன்.///ஆமா,ஆமா!க்யூவுல நின்னு துன்னவங்க கூட இருக்காங்க!///நான் க்வில்லிங் மற்றும்,கைவேலை செய்வேன்.///ஆமா..........///ப்ராப்பள .........ச்சீ....பிரபல பதிவர்களின் அறிமுகங்களை,வித்தியாசமாக தருவீர்கள் என எதிர் பார்த்து...........
ReplyDeleteவாங்க யோகா அண்ணா :) வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி
Deleteஅண்ணாவுக்கு ஸ்பெஷல் நல்லி எலும்பு சூப் பார்சல் அனுப்பிடறேன் :)
Deleteஏன் உங்க அன்னான் நல்ல இருக்குறது உங்களுக்கு புடிக்கலையா
Deleteவாழ்த்துக்கள் ஏஞ்சலின்!!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி மேனகா :)
Deleteவாழ்த்துக்கள் சகோதரி... தொடருங்கள்.
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ
Deleteஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஅ வந்துட்டேன்ன்ன்னன்ன்ன் .....
ReplyDeleteAngels mind voice !! (இந்த புள்ள ஊருக்கு போகுதின்னு தைரியத்தில்தானே நான் இருந்தேன் )
Deleteஅனைவருக்கும் முதலில் ஒரு பாரம்பரிய பிரித்தானிய கேக் :)////
ReplyDeleteமக்கழே உஷாரயிருங்கள் ,.,,,,கேக் என்றதும் ஆஆஆஆஆஆஅ என்று அப்படியே சாப்பிடவிட வேண்டாம் ....யார் செய்தது என்று முதலிள் கேளுங்கள் ,,,,,ஒருமுறைக்கு பல முறை சோத்தித்து யோசித்து சாப்பிடுவது உத்தமம் ...
மக்கள் நலன் கருதி வெளியிடுவோர் ....
ஹா ஹா :) மக்கள் நலன் கருதித்தான் நான் செய்யலை போதுமா இப்போ ஓகேவா
Deleteஉனக்கு மட்டும்னா நான் செஞ்ச ஸ்வீட்ஸ் தருவேன் ..மற்ற அனைவருக்கும் என்பதால் ஸ்பெஷல் கேக் ஆர்டர் கொடுத்து செஞ்சது
ReplyDeleteமற்றும் நமக்கே நமக்கு நம்ம நாட்டுக்கு சொந்தமான தேன் மிட்டாய் :)
எடுத்துக்கோங்க
//////////////////////////////////// எனக்கு தான் எல்லாமே
நான் கமெண்ட்ஸ் ரிவர்சல படிச்சிட்டு வரேன் :) அதனால் உனக்கு தேன்முட்டாய் இல்லை :)
Deleteநம்ம ப்ளாக் உலக பிரவேசம் ..இதற்கு முழு காரணம் எனது அன்பு கணவர் தான் ..
ReplyDeleteஒரு ஆங்கில வலைப்பூவை எனக்கு ஆரம்பித்து கொடுத்தார் .///
மாமா கொஞ்ச நேரமாவது நிம்மதியா இருக்கனும் தான் ப்ளாக் ஆரம்பிச்சி கொடுத்து இருக்காங்க ....
AWWWW :)நானே இரகசியத்தை கொட்டிடேனோ :)
Deleteசுய பரிசோதனை செய்து
ReplyDeleteஇயன்ற வரையில் எனது எழுத்துக்களை சிறிதேனும் மேம்படுதியிருக்கின்றேன்,,,,////
எங்கன்னு அட்ரஸ் கொடுத்தா உங்களுக்கு பின்னாடி வர்ற சந்ததிக்கு மிகவும் பயன் படும் அக்கா .....
கவலைபடாதே அத்தனையும் கல்வெட்டில் பொறிச்சி வச்சிட்டுத்தான் அடுத்த வேலை :)
Delete
ReplyDeleteநானும் அவ்வப்பொழுது சமையல் பதிவும் எழுதியிருக்கேன்
@ஜெய் அங்கே என்ன சிரிப்பு ? :)...///////////////////
அயயிஓஓ இப்போ எதுக்கு அதை எல்லாம் நியாபிகப் படுத்துரிங்க ........ எனக்கு நினைச்லே அழுகையா வருது ...ஜெய் அண்ணா இந்த சோகத்துல கூட உங்களால எப்படி சிரிக்க முடியுது
அந்த சிரிப்புக்கு காரணம் ஸ்பெஷல் வெங்காய பஜ்ஜி ..நம்ம இமேஜ் டேமேஜ் ஆககூடாதின்னு அந்த பர்டிகுலர் பதிவை இங்கே சுட்டிகாட்டவில்லை ..:)
Deleteயாராங்கே ஒரு கை மட்டும் தெரியுது ....உன் பெயர் என்ன பாப்பா?
ReplyDelete///////////////////////////////
அக்கா இங்க ரெல்லிங் mistake .......நான் பாப்பா இல்லை பீப்ப்பா .....அவ்வவ்வ்வ்வவ்வ்வ்வ்
நோஓஓஓஓஓஓ.. பாப்பா.. நோ பீப்பா... சிஷ்யை:)
Delete@கலை..!!! ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் :) நம்மை மற்றவங்க தான் புகழணும்
Delete@ATHIRA
குரு எப்படியோ சிஷ்யையும் அப்படியே :)
ஐயோ யாருபூசாரை தேம்ஸ் சிறையில் இருந்து விடுவித்தது!ஹீ
Deleteவாழ்த்துக்கள்..!!! :)
ReplyDeleteநன்றி :) வெங்கட்
Deleteயாருங்க நீங்க ...இங்க வந்து மொய் வச்சிட்டு போயிருகீன்க
Deleteஆவ்வ்வ்வ்வ்வ் எங்கேயோ எப்பவோ பார்த்த பெயரா.. கேட்ட குரலா இருக்கே... இது அஞ்சுவா?? இல்ல எனக்குத்தான் பிரமையா?:) அதைவிட.. காணாமல் போன பலரின் முகங்களும் இங்கின தெரியுதே.... எனக்கு மயக்கம் மயக்கமா வருதூஊஊ:).. சரி சரி இப்ப அதுவா முக்கியம்...விஷயத்துக்கு வருவம்...
ReplyDelete//நான் ஏஞ்சலின் ..அஞ்சு /அஞ்சு அக்கா /
காகிதப்பூக்கள் ஏஞ்சல் :)////
வாங்க வாங்க... வெல்கம்... றீச்சர்.. (இமா றீச்சரை சொல்லல:)) அஞ்சு றீச்சர்.. வாங்கோ கலக்குங்கோ... வாழ்த்துக்கள். நானும் களம் இறங்குறேன் இன்றோடு:) (வலையுலகில் எனச் சொன்னேன்:)).
வாங்க வாங்க. களமிறங்குங்கோ.
Deleteஇறங்காட்டி தள்ளி விட்ருவோம் ப்ரியா :)
Delete@ATHIRA வந்ததும் வராததுமா அஞ்சுவா இல்லை ப்ரேமாவான்னு :)
Deleteஓங்கி தலையில் அடிச்சு காட்டட்டா :) இல்லை நறுக்குன்னு கிள்ளி காட்டட்டுமா
//நானும் அவ்வப்பொழுது சமையல் பதிவும் எழுதியிருக்கேன்
ReplyDelete///
விடுங்க.. விடுங்க.. என்னை விடுங்க.. மீ தேம்ஸ்க்குப் போறேன்ன்ன்.. ஹையோ தேம்ஸ்ட பாதையைக் காணம்.. இதிலதானே இருந்திச்சு:).. அதையுமா கொள்ளை அடிப்பினம் கர்ர்ர்ர்ர்ர்ர்:)).
ஹா ஹா :) நாங்க தேம்சையே இடம் பெயர்த்து வச்சிட்டோம்
Deleteசிம்பிள் சைன் போர்டை வேற இடத்தில வச்சா போச்சு :)
அன்புள்ள நிர்மலா,
ReplyDeleteவணக்கம்.
வலைச்சர ஆசிரியராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தங்களுக்கு என் அன்பான இனிய நல் வாழ்த்துகள் ..... நிர்மலா.
பேரக்குழந்தைகள் அநிருத் + ஆதர்ஷ் ஆகிய இருவரின் வருகையால் 2-3 நாட்களாக நான் கொஞ்சம் பிஸி. பதிவுப்பக்கமே வர இயலவில்லை. என் லேடஸ்டு பதிவினில் அவர்களின் போட்டோக்கள் உள்ளன.
இப்போத்தான் மெயில் பார்த்தேன். ஓடி வந்தேன். தேன் மிட்டாயுடன் கூடிய சுய அறிமுகம் அருமை + இனிமை. ;)
அதிராவை இங்கு கண்டதில் அதைவிட ஆனந்தம் ! பரமானந்தம் !!
மீண்டும் என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
பிரியமுள்ள கோபு அண்ணா
குட்டி கண்ணன்கள் :)வருகை நடுவிலும் இங்கே வந்து என்னை வாழ்த்தியதற்கு நன்றி அண்ணா :)
Deleteநம்ம பூசாறை இங்கே கண்டவுடன் எனக்கும் மிகுந்த மகிழ்ச்சி :)
சூப்பர் அறிமுகம் அஞ்சு ( ஏஞ்சலின்) தொடருங்கஓ
Deleteஆனால் எங்கோ காணம போன பூஸாரும் இங்க வந்தது ரொம்ப சந்தோஷம்
http://samaiyalattakaasam.blogspot.com/
இப்படிக்கு
ஜலீலாகமால்
வாங்க ஜலீ ..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .
Deleteஆஹ்ஹாஆஆஆஆ எங்க குரு வந்துருக்காக
ReplyDeleteகுருவே சரணம் குருவடி சரணம் ...
ReplyDeleteஅக்காளை அப்படிச்சொன்னால் பிழை கொச்சி/ஹீ ஆன்மீகம் இங்கு ஏன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்!
Deleteஆஆஆஆஆஆஅ 1௦௦ நானே நானே
ReplyDeleteகலைக்கு எக்ஸ்ட்ரா ரெண்டு தேன்மிட்டாய் தரவும்.....
Deleteயாரோ தானா பாட்டுத்தான் வேணும்!ஹீ நெஞ்சம் எல்லாம் நீதான் படம் மோகன் ஹீரோ அஞ்சு அறியும் யான்!ஹீ
Delete:) உங்க ரெண்டு பேர் பங்கையும் கலை அப்பவே தூக்கிட்டு ஓடிடுச்சி
Deleteவாழ்த்துக்கள் அக்கா! :) 5 நாட்களும் அருமையான அறிமுகங்களைத் தர வாழ்த்துகள்!
ReplyDeleteவருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .மஹி .:)
Deleteதேன் மிட்டாய், கேக் வகைகளுடன் அசத்தலாக ஆரம்பித்து இருக்கீங்க..
ReplyDeleteஇனி 5 நாட்களுக்கும் பூஸாரை இங்கு பார்க்கலாம்
வாங்க ஜலீ ..வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ...பூசார் ஸ்வீட் தட்டை சுத்தி சுத்தி வரார் :)
Deleteஎனக்கு கேக்கும் கிடைக்கல, தேன் மிட்டாயும் கிடைக்கல.....////
ReplyDeleteநாளைக்காச்சும் சீக்கிரமா வரேன்... ஸ்வீட் எடுக்கறேன்... கொண்டாடுறேன்....
ஹா ஹா :) நாளைக்கு ஆரஞ்சு மிட்டாய் :)
Deleteஎனக்கு கேக்கும் கிடைக்கல, தேன் மிட்டாயும் கிடைக்கல முயற்ச்சிக்கின்றேன் அடுப்படியில் இருந்து! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
ReplyDeleteஉங்க தங்கச்சி உங்க பங்கையும் எடுத்திக்கிட்டு போய்ட்டா நேசன் :)
Deleteஅடடா, இங்க ஒரு பெரிய களேபரமே நடந்திருக்கே, நான் தான் லேட்டா? வருக வருக ஏஞ்சலின் சகோதரி.... கலக்குங்க..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)
Deleteஅஞ்சூ வாழ்த்துகள் ஆசிரியப் பணிக்கு. நிறைய எழுது. தேன் மிட்டாய் போல ருசியாக எழுது.
ReplyDeleteஅன்புடன்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி அன்பின் காமாட்சியம்மா :)
Deleteஆரம்பமே ரொம்ப அமர்க்களமா இருக்கு சகோதரி.
ReplyDeleteஇனி வார முழுதும் ஆரவாரம்தானா?
வாழ்த்துகள். நன்றே செய்வீர்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க :)
Deleteவலைச்சர ஆசிரியையானமைக்கு இனிய வாழ்த்துக்கள் ஏஞ்சலின்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி :)
Deleteதங்கள் அறிமுகத்தை வரவேற்கிறேன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றிங்க :)
ReplyDelete