மேரா பாரத் மகான்....!!
➦➠ by:
கடல்பயணங்கள்
பயணம், பயணம் என்று கடந்த சில நாட்களாக பதிவு எழுதி போர் அடித்து விட்டேனோ ?! நான் எழுதும் பதிவுகளை படித்துவிட்டு என்னிடம் நிறைய பேர் கேட்க்கும் கேள்வி..... வெளிநாட்டில்தான் எல்லா சந்தோசமும் இருக்கிறது இல்லையா, நீங்கள் கொடுத்து வைத்தவர் என்று, அதை சற்று இங்கே விளக்கி சொல்லலாமே என்று கருதுகிறேன். இதுவரை நான் சென்ற நாடுகளை பட்டியலிட்டால்(எல்லாமே பல முறை சென்றது) ..... சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, மாலத்தீவு, ஜப்பான், இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து, ஜெர்மனி, ஹாலாந்து, பெல்ஜியம், சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, தென்னாப்பிரிக்கா, கத்தார், அபு தாபி, ஆஸ்திரேலியா என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். ஆனால், உண்மையை சொல்வதென்றால் என்ன இருந்தாலும் நமது இந்தியாவை போல வராது, அதை ஏன் என்று சொல்கிறேன் கேளுங்கள் !!
நமது ஊரில் ஒரு பழக்கம் உண்டு, நீங்கள் எங்கே வேண்டுமானாலும் சென்று இருக்கலாம், ஆனால் அமெரிக்கா சென்று இருந்தால் மட்டுமே நீங்கள் வெளிநாடு சென்று வந்ததாக கருதுவார்கள். நான் பல பல நாடுகள் சென்று வந்தாலும் என் அப்பா நான் ஒவ்வொரு முறை வீட்டுக்கு செல்லும்போதும் "ஏன்டா...என் பிரண்டு பையன் எல்லாம் அமெரிக்கா போறான், நீ எப்போடா போக போற ?" என்று கேட்டுகொண்டே இருப்பார், நான் இதற்காகவாவது போக வேண்டும் என்று கீழதெரு ஆஞ்சநேயருக்கு வடை மாலை சாத்துவதாக வேண்டி கொண்டேன். அவரும் அதை ஒரு பொன்னாளில் நிறைவேற்றியும் வைத்து விட்டார், பின்னர்தான் தெரிந்தது அவர் என் தொல்லை தாங்காமல் பயங்கர கடுப்புடன் அதை நிறைவேற்றி இருக்கிறார் என்று !!!?? நானும் அமெரிக்கா வந்துடும் வந்துடும் வந்துடும்னு சும்மா 20 மணி நேரமா ப்ளைட்டு உள்ளே உட்கார்ந்து என்னென்னமோ பண்றேன், ஆனா பைலட்டு "நீ ரொம்ப நல்லவன்" அப்படின்னு சொல்லி ப்ளைட்டை சுத்து வழியில ஓட்டறார் !!! கடைசியில சிகாகோவில இறக்கி விட்டப்ப இடுப்பு எலும்பும், பட்டக்சும் ஒரு ரெண்டு இன்ச் தேய்ந்சிடுச்சு !!? அமெரிக்கா போறதுக்கே இவ்வளவு......சாப்பிட போகலாம்னு வெளியில வந்தா எதுவுமே நடந்து போற தூரத்தில் இல்லை, இதுக்கு கார் வேற வாடகைக்கு எடுக்கணுமாம். நம்ம ஊரில் எல்லாம் வீட்டை விட்டு இறங்கினா சாயா கடையில் இருந்து சரக்கு கடை வரைக்கும் இருக்கும், அதை அனுபவித்தால்தான் தெரியும் !! அமெரிக்காகாரரே...... நீங்க சொல்லுங்களேன், அட சொல்லுங்க சார் !!
எந்த நாட்டுக்கு போனாலும் ஒரு அந்நியமாகவே எனக்கு தோன்றும்....... சரக்கு அடிச்சிட்டு தெனாவட்டா வண்டி ஓட்ட முடியாது, கைலி கட்டிக்கிட்டு முக்கு கடையில் சாயா குடிக்க முடியாது, பஸ்சில் புட் போர்டு அடிக்க முடியாது, வீட்டில் சத்தமாக "என் உச்சி மண்டையிலே சுர்ருங்குது..." அப்படின்னு பாட்டு சத்தமா வைத்து கேட்க முடியாது, எச்சில் துப்ப முடியாது, காரில் போகும்போது எதையும் வெளியில் தூக்கி போட முடியாது, டக்குன்னு ஹை வேயில் காரை நிறுத்திவிட்டு ஒன்னுக்கு போக முடியாது, பிளாட்பாரம் எல்லாம் வண்டி ஓட்ட முடியாது, ஒன் வே என்று போட்டு இருந்தாலும் ஓட்டி போக முடியாது, பாட்டி சுடற வடையை சட்னியில் ஊற வைத்து திங்க முடியாது, மாஸ்டர் ரெண்டு ஆம்பலேட் அதில் கொஞ்சம் வெங்காயமும் பெப்பரும் தூக்கலா போட்டு ஓரம் கருகிடாம கொஞ்சம் பதமா.... என்றெல்லாம் நமக்கு பிடிச்சதை சொல்லி வாங்கி சாப்பிட முடியாது, பிள்ளைகளோட பார்க்கில் கத்திகிட்டே ஓட முடியாது, எங்கே என்றாலும் கியூவில் நின்றுதான் எதையும் செய்யணும், பொண்டாட்டிக்கு ஆசையா மல்லியப்பூ வாங்க முடியாது..... இப்படி நிறைய சொல்லிகிட்டே போகலாம். இதை படித்துவிட்டு இதில் ஏதோ உள்குத்து இருக்கிற மாதிரி தெரியுதே அப்படின்னு யோசிக்காதீங்க மக்கா, உண்மையிலேயே இவ்வளவு சுதந்திரமா நாம வெளிநாட்டில் இருக்க முடியாது அப்படின்றதுதான் உண்மை. மேரா பாரத் மகான்....!!
நமது ஊரில் இருக்கும் மிக பெரிய பலமே, நீங்கள் எங்கே சென்றாலும் கிடைக்கும் அன்னியோநியம்தான் !! சமீபத்தில் ஒரு இடத்தில் மழைக்கு நின்று கொண்டு இருந்தேன், அது ஒரு கிராமத்து டீ கடை. ஈரம் படிந்த உடையோடு எப்படி உள்ளே போறதுன்னு தெரியாம தயங்கி நின்றப்ப அந்த கடைக்காரர் என்னை உள்ளே வாங்க என்று அழைத்தார். மழை நிற்கும்போது சூடான டீ, கொஞ்சம் அங்கே இருந்த கார கடலை மற்றும் சிரிப்போடு அவர் என்னை வழியனுப்பி வைத்தார், போகும்போது தம்பி அடுத்த தடவை வந்தா மறக்காம நம்ம கடை பக்கம் வாங்க என்று வேறு சொன்னார். நான் ஊர் ஸ்பெஷல் பகுதிக்கு செல்லும்போதெல்லாம் இதை உணர்ந்துள்ளேன்....... சென்னிமலை போர்வை பார்க்க சென்றபோது ஒரு உதவி கேட்டேன் என்பதற்காக என்னோடு இரண்டு மணி நேரம் சுற்றிய அந்த நண்பரும், ஏலக்காய் தோட்டம் பார்க்க வேண்டும் எனும்போது எங்களை தனது தோட்டத்திற்கு கூட்டி சென்று காண்பித்த அந்த பெரியவரும் எந்த ஆதாயத்தை எதிர்பார்த்தார்கள். எங்கு சென்றாலும் இது நமது ஊர் என்று திமிரும், ஆனந்தமும் வரும், இது எந்த வெளிநாடு சென்றாலும் கிடைப்பதில்லையே..... என்ன சொல்லுங்க, சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா !!
*********************************************************************************

எனது பதிவுகளில் சிலவற்றை இங்கே ரசியுங்களேன்.....
அறுசுவை
சுவையான டீ : அறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு
சுவையான உணவகம் : அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்
வியந்த உணவகம் : அறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை
உயரம் தொட்ட பயணம் : மவுண்ட் பியூஜி, ஜப்பான்
18+ பயணம் : உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)
ஊர் ஸ்பெஷல்
வியந்தது : போளியம்மனுர் மோர் மிளகாய்
கஷ்டப்பட்டு திரட்டியது : சிவகாசி வெடி (பகுதி - 1)
அழிந்து கொண்டு இருப்பது : சாத்தூர் காராசேவு
எண்ணங்கள் : நகரத்து பறவையின் எச்சம்...!!
சாகச பயணம் :
மறக்க முடியா பயணம்
உள்ளூர் : நிருத்யாகிரம், பெங்களுரு
வெளிநாடு : யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)
வித்யாசமானது : சொகுசோ சொகுசு பஸ்
*********************************************************************************
சுவையான டீ : அறுசுவை - ஷரோன் டீ ஸ்டால், பெங்களுரு
சுவையான உணவகம் : அறுசுவை - பிராமின்ஸ் காபி பார்
வியந்த உணவகம் : அறுசுவை - ஜேக்கப்'ஸ் கிச்சன், சென்னை
உயரம் தொட்ட பயணம் : மவுண்ட் பியூஜி, ஜப்பான்
18+ பயணம் : உலக பயணம் - கிளு கிளு நகரம் (18+)
ஊர் ஸ்பெஷல்
வியந்தது : போளியம்மனுர் மோர் மிளகாய்
கஷ்டப்பட்டு திரட்டியது : சிவகாசி வெடி (பகுதி - 1)
அழிந்து கொண்டு இருப்பது : சாத்தூர் காராசேவு
எண்ணங்கள் : நகரத்து பறவையின் எச்சம்...!!
சாகச பயணம் :
ஆல் டெரயின் வெஹிக்கிள் (ATV)
மறக்க முடியா பயணம்
உள்ளூர் : நிருத்யாகிரம், பெங்களுரு
வெளிநாடு : யுனிவெர்சல் ஸ்டுடியோ (பகுதி - 1)
வித்யாசமானது : சொகுசோ சொகுசு பஸ்
*********************************************************************************
|
|
ReplyDeleteவணக்கம்!
எந்தவூா் என்றாலும் சொந்தவூா் ஆகிடுமோ?
தந்தசீா் யாவும் தமிழினிப்பு! - சந்தப்
புலவன்யான் போற்றிப் புகழ்கின்றேன்! பாடும்
நிலவன்யான் நெஞ்சம் நிறைந்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
அருமை!!
ReplyDeleteஇங்கே சின்ன சின்ன "முடியும்" சந்தோசமே...! வாழ்த்துக்கள்...
ReplyDeleteநீங்க செய்ய முடியாதுன்னு சொன்னெதெல்லாம் (நடு ரோட்டுல எச்சில் துப்பறது, காரிலிருந்து வெளியே வீசுறது) இதெல்லாம் நம்மை நாமே அசுத்தப் படுத்தும் செயல் தானே.. அதை நம்ம ஊர்லயும் செய்யக் கூடாது. அது சுதந்திரம் அல்ல.. சுய ஒழுக்கம்.. தவிர ஸ்டார்பக்ஸ் கடைக்கு நீங்க லுங்கி கட்டிட்டு போனா அவன் காபி கொடுக்க மாட்டேன்னு சொல்லப் போறதில்லையே.. நீங்களா வெட்கப்பட்டுக்கிட்டு கட்டிட்டு போறதில்ல... நான் வேஷ்டி கட்டிக்கிட்டு ஸ்டார் பக்ஸில் கேப்பசினோ குடிச்சிருக்கேனே..
ReplyDeleteபாட்டு இங்கயும் அபார்ட்மெண்டுகளில் உரக்க வைக்க முடியாதே.. அங்கேயும் தனி வீடுகளில் அலற விடலாம்.. ஒண்ணும் பிரச்சனையில்லை. ஒரே விஷயம் வெடி வெடிக்க முடியாத நம்ப ஊர் [போல.. அப்புறம் நீங்க சொன்ன மாதிரி நடந்து போய், காய்கறிகளோ காபியோ வாங்க முடியாது.. அந்த ஊர் சீதோஷ்ண நிலைக்கு காரில் செல்வதே சிறந்தது..
நம்ப ஊர் கிரேட் தான்.. அதுக்காக மத்த ஊர குறைவா சொல்ல வேணாமே.. நம்ம ஊர்ல இருக்கிற எளிதில் கிடைக்கிற வசதிகள் அங்கே முறைப்படி தான் கிடைக்கும். உதாரணம் உடம்பு சரியில்லேன்னு டாக்டர் பார்க்க போகணும்னா அப்பாயின்மென்ட் வாங்கித்தான் பாக்கணும். இரவு பத்துக்கு மேல உடம்பு சரியில்லேன்னா எமர்ஜென்சி ல அட்மிட் பண்ணனும்.. (சின்ன பிரச்சனையா இருந்தாலும்) இதெல்லாம் தான் கஷ்டம்.. நம்ப ஊரும் இதெல்லாம் மாறிகிட்டு வருது.. இன்னும் பத்து பதினைந்து வருடங்களில் இந்த வித்தியாசங்களும் மாறிவிடும்..
ரசிக்க வைத்த பதிவு. உங்க சொந்தப் பதிவுகளை இனி தான் பார்க்கணும். வரேன் மெதுவா.
ReplyDeleteசில(பல?) வருடங்களாக அமெரிக்காவில் குடி இருக்கிறேன்.. நான் அனுபவிப்பது..
ReplyDeleteநாம் பல முறை ரயிலில் இரண்டாம் வகுப்பிலும் / முதல் இல்லையேல் இரண்டாம் ஏசி யிலும் பயணித்திருப்போம். இரண்டாம் வகுப்பில் பயணிக்கும் போது மக்களிடையே ஒரு அன்யோன்யம் இருக்கும். அதில் சிலமுறை பிரச்சனைகளும் இருக்கும். முதல் வகுப்பில் (2 A .C ) பயணிக்கும்போது ஒரு இறுக்கம் உடனடியே தெரியும். ஒரு அளவுக்கு மேல் யாரும் யாரிடமும் பேச மாட்டார்கள். இதே போல ஒரு நாடு முழுதும் இருந்தால் எப்படி இருக்கும். அது தான் அமெரிக்கா!
பலமுறை எங்காவது ஓடிவிடலாமா என்றிருக்கும். முதல் முறை வந்தபோது என்னை மிகவும் உறுத்தியது ஊரெங்கும் இருக்கும் மௌனம்.. என்னால் தாளவே முடியவில்லை. ஒரு பார்க்கிங் லாட்டில் ஆசை தீர கார் ஹாரன் அடித்தவுடன் தான் போனது!
"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரு போல வருமா!!" என்பதே
ReplyDeleteஎன் பதிலும் என்பேன்!
நம்ம ஊருக்கும் வெளிநாட்டுக்கும் என்ன வித்யாசம் என்பதை ஒரே மூச்சில் சொல்லிட்டீங்க.வெளிநாடுகளின் மக்கள் தொகை குறைவாக இருப்பது தான் அந்த நாடுகளின் சுத்தத்திற்கும்,ஒழுங்கு முறைக்கும் காரணமாக இருக்கும். நம்ம ஊரு சுதந்திரம் எங்கேயும் வராது.
ReplyDeleteஉண்மைதான் !! சொர்க்கமே என்றாலும் அது நம்ம ஊரு தான் !!
ReplyDeleteபல வருஷம் வெளிநாட்டு அனுபவம் .வெளிநாட்டுக்கு சுற்றுபயணமா போகலாம் ரசிக்கலாம் அவ்ளோதான் ..எனது ஓட்டு நம் நாட்டுக்கே :)
Angelin.
வெளிநாட்டு சட்ட திட்டங்கள் ஒர் அன்னியத்தை உருவாக்கி விடுகின்றன போல! நம்ம ஊரு அன்னியோன்யமே தனிதான்! கேட்காமலே உதவிக்கு வரும் நல்ல மனிதர்கள் உள்ள நாடு நமது நாடுதான்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசுற்றுலா, பணி, என்று எந்த நிலையில் வெளியூருக்கோ, வெளிநாட்டுக்கோ சென்றாலும் அதில் கிடைக்கும் அனுபவங்கள் வித்தியமாசமானவைதான். இருந்தாலும் சொந்த மண்ணில் இருக்கும்போது கிடைக்கும் சுகம் அளவிடமுடியாதது.
ReplyDeleteவித்தியாசமான பதிவுகள்..... சொந்த ஊர்/நாடு என்றால் கொஞ்சம் சுகம் தான்!
ReplyDeleteவாழத்துக்கள்...சுரேஷ் குமார் ஐயா.
ReplyDelete-அன்புடன்-
S. முகம்மது நவ்சின் கான்.
இதையும் சேர்த்துக்கங்க ....பட்டாஸ் வெடிச்சு மேல தாளத்தோட கும்பளா வீடு தேடி வந்து தங்கள் கட்சிக்கு ஓட்டு கேட்பது.
ReplyDelete