வியாழன், வித்யாவுக்கு விரதம் – ஐந்தாம் படை (பத்ரி 2009)
➦➠ by:
killerjee ( கில்லர்ஜி)
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
நேற்று.... சொன்னது... வீட்டை நோக்கி நடந்(தோம்)தேன்...
மறுநாள்
காலை வழக்கத்தைவிட சீக்கிரமாக எழுந்து குளித்து விட்டு பள்ளிக்கூடம் புறப்பட அய்யா
ஞானி ஸ்ரீபூவும் நானும் ஸாரட் வண்டியில் புறப்பட்டு போனோம் பள்ளி வளாகத்திலேயே
வண்டியை காணவும் ஞானி ஸ்ரீபூவு மிராசுதார் என்பதால் ஹெட்மாஸ்டரே வந்து வரவேற்றார் நானும்
அரவிந்த்சாமி மாதிரி பைஜாமா போட்டு போனாலும் கெர்த்தாக இல்லாத காலரை தூக்கி
விட்டுக்கொண்டு நடந்தேன் நேராக வகுப்பறையில் பாடம் நடத்திக்கொண்டிருந்த வாத்தியாரிடம்
போய், ஏய்யா, நீ என் பேரனை அப்பனை, பெரியப்பான்னு சொல்லச்சொன்னியாம் ? என்றார்,
அய்யா கௌரவம் சிவாஜி ஸ்டைலில்
விசாரித்துக் கொண்டிருக்க வகுப்பு (பெண்) பிள்ளைகள்
எல்லோரும் என்னையே வைத்தகண் அசையாமல் பார்க்க (காரணம் நான் இந்த
எலுமிச்சம்பழம் பார்த்து இருக்கீங்களா ? அதாவது மஞ்சள் நிறத்தில் உருண்டையாக இருக்கும்
பார்த்திருக்கீங்களா ? காளையார் கோயிலில்கூட வேலு நாச்சியார்
கணவர் மன்னர் முத்து வடுகநாதரை மறைஞ்சு நின்று வஞ்சகமாக சுட்டுக்கொன்றானே.. கயவன் பான்
ஜோர் அவங்கே நாட்டு மொழியில்கூட ’’Yellow’’ அப்படினு சொல்லுவாங்கே அந்தக்கலர்ல இருப்பேன் நான்) பொன்னம்மா என்னை பார்க்கவும் நான் ஸ்டைலாக நின்று
கொண்டிருந்தேன் (இரண்டாம் வகுப்புலயா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்
இது சத்தியமாக நான் இல்லை சகோ. மைதிலி அவர்கள் நினைப்பது) அய்யா
ஸ்ரீபூவு ஊர் மிராசுதார் என்பதால், வாத்தியாரும் மிரண்டு விட்டார், அவரும் தயங்கி,
தயங்கி பிள்ளையார் பாடம் நடத்தியதையும், உங்க பெரியமகன் பெயர் முருகன் என்பதும்,
சின்னமகன் பெயர் கணபதி என்பதும் எனது மகன் பாண்டுரங்கன் மேலே சத்தியமா எனக்கு
தெரியாது என்று பாவம் அழாத குறையாக சொன்னார் சொன்னதுதான் தாமதம் ’’சட்டீர்’’ என ஒரு
சப்தம்..
தொடரும்....
வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி.
எண்ணம் நலமெனில் எல்லாம் நலமே !
Anyway
எண்ணுவோம் எண்ணமெல்லாம் நலமே !
எனது
முயற்சியால் U.A.E முழுவதும்
உள்ள
தேவகோட்டையர்களை
இணைத்து DEWA
என்ற
Devakottai Emirates Welfare Association
அமைப்பை
உருவாக்கி சுமார்
110 தேவகோட்டையர்களை
ஓரிடத்தில்
கூட்டியிருக்கிறேன் இதோ, சிறு சிறு துளிகள்.
காணொளி.
தட்லும்புங் பிதோ
துளசி தளம் புரிந்திருக்குமே... திருமதி.
துளசி கோபால் அவர்கள் நியூசிலாந்து இவரைப்பற்றி நான்
என்னத்தை எழுதுவது.... பூனை யானையை அறிமுகப்படுத்துறது நன்றாக
இருக்குமா ? ஊர் சிரிக்காது இதோ சிரித்து விட்டீர்களே...
இதைப்படிக்கும்போதே... ஆகமொத்தம் எனக்குத் தேவையில்லாத வேலைனு நினைக்கிறீங்கனு
எனக்கு தெரிளிஞ்சு போச்சு தளத்திற்கு
போனேன் ஆசி வாங்கினேன் ஒரு டஜன் வாழைப்பழத்தை கொடுத்து நைசாக கூட்டிக்கிட்டு
வந்துட்டேன். யாரை ? கீழே பாருமோய்....
பார்த்தேளா ? அப்படியே.. இதையும் ’’கிளிக்’’கலாமே
(என்ன இது பூனை, யானை. சிங்கம் அடுத்து என்ன சொல்லப்போறீயோ
இப்படி யாரோ நினைக்கிறாங்க போல)
தட்லும்புங் வாலோ
வார்த்தையை பேசிப்பார், அதில் வாளையும் வீசிப்பார் இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. ஒரே வார்த்தையில் இரண்டு அர்த்தங்களை சொல்ல முடியுமா ? முடியும்
ஒன்றோ, இரண்டோ, ஆனால் ? தொடர்ந்து க(வி)தையானாலும் சரி, கட்டுரையானாலும் சரி சொல்ல
முடியுமா ? இவரால்
முடியுமென நிரூபித்துக்கொண்(டு)டே வருகிறார், இடையே போட்டியும் வைப்பார் சரியாக பதில்
சொல்பவரை பாராட்டும் பண்பாளர் இவர் கவிஞரும்கூட தேனாறாய், பாலாறாய் அருவியாய்
கொட்டும் வார்த்தைகளில் மாயஜாலம் காண்பிக்கும் இவர் தன்னை M.G.R என்றும் சொல்லிக்கொள்கிறார் அவர்தான் ஐயா திரு. மாயவரத்தான் ரவிஜி அவர்களின் பதிவைக்காண கிழே சொடுக்குக.
தட்லும்புங் சியாம்
பிறர் குழந்தைகளை
குதூகலப்படுத்து, உனது குலம் தழைக்கும் இது ஞானி ஸ்ரீபூவு வாக்கு. கதை எல்லோரும் சொல்லலாம் ஆனால், குழந்தைகள்
சந்தோஷப்படுவதுபோல் கதை சொல்ல எல்லோராலும் முடியுமா ? அதற்க்கு
பக்குவம் வேண்டும் இவர் சொல்வார் நான்கு பக்கங்களுக்கு அது மட்டுமல்ல அந்தந்த
காலத்துக்கு தகுந்தாற்போல் ரெடிமேட் நகைச்சுவை, ஹைக்கூ கவிதைகள் கொடுப்பதிலும்
வல்லவர், அரசியல்வாதிகளை கர்ஜிக்கிறார் கோவில் அர்ச்சகர், மூன்று குழந்தைகளுக்கு
தந்தையான இவரது குலம் இன்னும் தழைக்கட்டும் அவர்தான் தளிர் எண்ணங்கள் இங்கு எழுத்தோவியமாகும் வலைத்தல பதிவர் எனது இனிய நண்பர் திரு. ‘தளிர்’ சுரேஷ் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
அபாட்னபு
தமிழ் என்ற பழமை வாய்ந்த மொழி
இன்று தமிழ்ப்பற்று இல்லாதவர்களிடம் எவ்வளவு சீரழிகிறது என்பதை அழகாக தனது சிறிய
சொல்லாடல் மூலம் வெளிப்புத்தி இருக்கிறார் வேர்களைத்தேடி.... போகும் இந்த நண்பர்
பல நல்ல விசயங்களை கொட்டி கிடத்தி இருக்கிறார் ஒரு பானை களிக்கு ஒரு துளி பதம்
என்பதுபோல இந்த பதிவு ஒன்றே போதுமென்று கருதுகிறேன் ஆம் இவர்தான் இனியவர்
திரு. முனைவர் இரா.குணசீலன் அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக
SORRY போங்க...
அபாட்னபோத் இஷா
மனிதன் எவ்வளவு வேகமாக ஓடினாலும் இந்த ஓட்டம்
எதைநோக்கி ? எல்லாம் ஒருசாண் வயிற்றுப் பசிக்காகத்தானே... ஆனால் ? நாளைய இழப்புகளை மறந்து
ஓடுகின்றானே... எதைநோக்கி ? அவன் தேடி ஓடுவதே தொடங்கிய இடத்தில்தானே இருக்கிறது என
ஆதங்கப்படுகிறார் இந்தப்பதிவர் ஆம் அப்படி ? என்னதான் சொல்கிறார்...
இதோ எமது இனிய
நண்பி திருமதி. எழில்
அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக
அபாட்னபோத் டலவா
படித்தவர்கள், வேலை தேடுபவர்களுக்காக வலைப்பூ இது
இந்தியா மட்டுமின்றி, அயல்நாடுகளிலும் வேலை வாய்ப்பு விபரங்களை வெளியிடுகிறார்,
இந்தப்பதிவுக்கு போய்ப்பாருங்கள், கொட்டிக்கிடக்கின்றன நிறைய விசயங்கள் எமது இனிய
நண்பர் திரு. தங்கம் பழனி அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக
அபாட்னபோத் தட்லோ
மனித வாழ்வுக்கு மிகமிக
உறுதுணை உறவுகள் அதன், அன்பு, அரவணைப்பு, ஆசாபாசங்கள் இல்லையெனில் அதுவும் இன்றைய
பாழும் சமூகத்தில் எந்த பிடிப்புணர்வுடன் வாழமுடியும் ஆகவே உறவுகள் என்று
தொடர்கதையே என முழக்கமிடுகிறார் இந்த வலைப்பதிவர் அப்படி உறவைப்பற்றி என்னதான்
சொல்கிறார் வாருங்கள் மரியாதைக்குறிய திருமதி. கோமதி அரசு அவர்களின் பதிவைக்காண கீழே
சொடுக்கவும்.
அபாட்னபோத் அபாட்
வித்யாஸாகரை கொல்லு, வித்யாவை அள்ளு இது ஞானி ஸ்ரீபூவு
வாக்கு. ஆறு வித்தியாசம் சொல்லுங்கள் பரிசுகளை
அள்ளுங்கள், நீங்கள்கூட சொல்லியிருப்பீர்கள், அள்ளியிருப்பீர்கள் இவர்
வித்தியாசத்தையும் வித்தியாசமாக சொல்வதில் கிங் அதேபோல நகைச்சுவைகளையும் அள்ளி
வீசிவிட்டு போய்க்கொண்டே....... இருப்பார் நன்றாக எழுதுகிறார் ஆனால் ? கொஞ்சமாக
எழுதுகிறார் ஒருவேளை தன்னடக்கமோ ? என்னவோ ? அவர்தான்
இஆரா.... என்றும் இனியவன். வலைப்பதிவர் எனது இனிய நண்பர் திரு. கிங் ராஜ் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
அபாட்னபோத் லிமா
சதிகாரர்கள் நிறைந்த உலகத்திலே உன் பஞ்சுமெத்தையிலே முட்கள் பரந்து கிடக்கட்டும் உன்
இருக்கையிலே இரும்பு ஆணிகள் நிமிர்ந்து நிற்கட்டும் தூங்கி விடாதே என்று நம்பிக்கை தீயை
மூட்டுகிறார் இந்தப்பதிவர் உண்மைதானே... அப்படி என்னதான் சொல்கிறார் முழுமையாக
படிக்க வேண்டாமா ? ஆம் நண்பி
திருமதி. கௌசி அவர்களின்
பதிவைக்காண கீழே சொடுக்குக
இன்றைய கொசுறு
அன்பு நெஞ்சங்களே எனது மதுரையை கலக்கியது யாரு ?
பதிவில்
திருமதி. துளசி கோபால் அவர்களின் பெயரை தவறாக எழுதி விட்டேன் தவறுதான்
மன்னிப்பும் கேட்டு விட்டேன் அந்தக்கோபம் இன்னும் மேடத்துக்கு குறையவில்லை அதற்கு
பழிக்குப்பழி வாங்க என்னை சென்னை பாண்டி பஜாரில் 150 கி.மீ. வேகத்துல கார் ஓட்டச்சொல்கிறார்கள் பழி
வாங்குற சாக்குல என்னை பலி கொடுக்கத்தானே ? அதுக்கு
பதிலாக சென்னை மெரினா பீச்சுல 300 கி.மீ.வேகத்துல
ஃபோட்டு ஓட்டச்சொன்னாலும் ஓட்டத்தயார்
80தை இதன் மூலம்
அறியத்தருகிறேன்.
நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி
தேவகோட்டையான்)
அன்பு இதயங்களுக்கு ஒரு ’’ப்ளாஷ் நியூஸ்’’ எனது வலைப்பு கில்லர்ஜியில் ப்ளாஷ் நியூஸ்
தொடங்கப்பட்டு இருக்கிறது ஒருநாள் ஐயன் வள்ளுவனின் திருக்குறளும், மறுநாள்
பையன் கில்லர்ஜியின் தெருக்குரலும் ஒலிக்கும் 80தை மகிழ்ச்சியுடன்
அறியத்தருகிறேன்
தற்போது எமது வலைப்பூ கில்லர்ஜியில் இன்றைய வாழ்க்கைச் சூழலைப்பற்றி
எழுதியிருக்கிறேன் அவசியம் படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் அன்றைய மனிதர்கள். நன்றி.
வாழ்க ! தமிழ்.
* * * * * * * * * * * * * * * * * *
|
|
வணக்கம்
ReplyDeleteகில்லர்ஜீ
கலக்கல் அசத்தலாக உள்ளது... நல்ல கதையுடன் பதிவை நகர்த்தியுள்ளீர்கள்அத்தோடு அறிமுகம் செய்த அனைவரும் அறிந்தவர்கள்... அனைவருக்கும் வாழ்த்துக்கள் சிறப்பாக தொகுத்து வழங்கிய தங்களுக்கு பாராட்டுக்கள் தொடருகிறேன் பதிவுகளை...
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: பருவமாறிந்து பருவச்சிறகை விரித்தேன்.:
கவிதையாக என்பக்கம் வாருங்கள் அன்புடன்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
வாங்க ரூபன் தொடக்கநாள் வந்து வாழ்த்தினீர்கள் மீண்டும் நான் திரும்பும் சமயமாவது வந்தீர்களே.... வாழ்த்துக்களுக்கு நன்றி
Deleteநண்பரே எவ்வளவு வேலையிருந்தாலும் தங்களின் தளம் வராமல் இருப்பேனா ? நேற்றே வந்து தங்களுக்கு பருவக்கோளாறு 80தை கண்டு பிடித்து சொல்லித்தானே வந்தேன். நன்றி
ஹை நாங்கதான் முத ஆளுன்னு நினைச்சு கருத்து போட வந்தா....என்னடா கருத்து போட்டும் போகல...ஓட்டுப் பொட்டி தொறக்க முடிலனு பார்த்தா இந்த ரூபன் தம்பி தான் தான் முதல்ல போடணும்னு எல்லாத்தையும் ஒளிச்சு வைச்சுருந்துருக்காரு....ஹஹஹஹஹ....
ReplyDeleteவிசாலாட்சி வித்யாவாக மாறியது எப்படி...கள்ளாட்டம் நாங்க கண்டுபிடிச்சுட்டோம்னு தானே கில்லர்ஜி...அந்தக் கதைய ஊருக்குச் சொல்லுங்க ஜி!
அது சரி 2 வப்புலயே பொன்னமாவ டாவடிச்சீங்களா....அடிச்சுட்டு அவ்வ்வ் வேற...ம்ம்ம்ம்
காணொளி அருமை ஜி! நலப்பணித்திட்டம் செய்யறதுனால ஜி ய - னம்ம ஊர்ல பிரதமர் எலாரயும் ஜி போட்டுத்தானே சொல்லுறோம்...அதான் உங்க பேருலயே ஜி இருக்கறதுநால உங்களுக்கும் ஓட்டு பொட்டு "ஜி வாழ்க" அப்ப்டினு கோஷம் எழுப்பி பிரதமர் ஆக்கலாம்னு நினைச்சு ஓட்டு போடப் போனா ஓட்டுப் பொட்டிய தொறக்க முடில....கள்ள ஓட்டா...? நோ...பொறுத்தோம் க்யூவுல நின்னு ஓட்டு போட்டுட்டோம் ஜி....தங்கள் தேவகோட்டையர்களின் நலப் பணித் தொடர வாழ்த்துக்கள்.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வாங்க எனக்காக கூகுல் சாட்டில் வந்து இரவு 12. 32 இன்னும் பதிவு வரவில்லையே எனக்கேட்டதை நினைத்து பெருமையோடு சந்தோஷப்படுகிறேன் டேஷ்போர்டில் இந்த பதிவு வரவில்லை இதனால் பலருக்கும் தெரியவில்லை இதனால் அறிவிப்பது என்னவென்றால்... ராசாதி ரா (யோவ், நிறுத்துயா) அதாவதுங்க சரியா இரவு 12. 32 எனது பதிவு வெளியாகிடும் அதனாலே நேரா வலைச்சரத்துக்கே வந்துடுங்க... (யோவ், இதை ஆரம்பத்துலயே சொல்லியிருக்கலாமுல்ல இன்னும் ரெண்டுநாள்ல உனக்கு பீஸ் புடுங்கிறுவாங்கல்ல இப்பயேன் தண்டோரோ போடுறே ?)
Deleteவாங்க விசாலாட்சியா ? இப்பவெல்லாம் காலம் மாறிப்போச்சு இன்னும் அந்தக்காலத்து பேரை வச்சுக்கிட்டு இருக்க முடியுமா ? அதாவது ஒண்ணாம் வகுப்புலயே ஐ வில் ட்ரை பட் 2-ம் வகுப்புலதானே சான்ஸ் கிடைச்சுச்சு..
தாங்கள் //நலப்பணித்திட்டம்// என்று எழுதியதை வைத்தே காணொளி முழுமையாக கண்டு இருக்கிறீர்கள் 80தை கண்டு பிடித்து விட்டேன் மிகவும் சந்தோஷம் எடிட்டிங் எப்படி ? சொல்லவே இல்லை, கள்ள ஓட்டுப்போடாத நல்ல நாட்டாராக தாங்கள் இருப்பது கண்டு மகிழ்ச்சியும் பாராட்டுகளும்
தேவகோட்டையர்களை பாராட்டியதற்க்கு எங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
சரி சரி, நீங்க எலுமிச்சம்பழம் நிறம் தான். பாவம் வெளிநாட்டு வெயில் தாங்காம கறுத்துப்போயிட்டீங்க.
ReplyDeleteரெண்டாம் வகுப்புலேயே சைட்டா! ஹலோ, ரீல் விடும்போது, கொஞ்சம் நம்புகிற மாதிரி விடணும் (இது இந்த பொன்னம்மா விஷயத்துக்கு மட்டும் இல்ல, உங்க yellow விஷயத்துக்கும் சேர்த்து தான்)
இன்றைக்கு அறிமுகம் ஆன அனைவருக்கும் வாழ்த்துக்கள்
அப்புறம் உங்க நலப்பணிக்கு வாழ்த்த்குக்கள்.
வாங்க எனக்குத்தெரியும் நீங்க பொறாமைப்பட்டு இப்படித்தான் சொல்வீங்கனு.. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இதன் கீழே குவைத் நண்பர் திரு. துரை செல்வராஜூ அவர்கள் நாங்க படிச்ச //எலி மண்டே கறி// ஸ்கூலில் பார்த்திருக்கிறார் வேண்டுமானால் அவரிடம் போண் செய்து கேட்கவும் அவர் என்னை பார்த்தவர், நீங்கள் என்னை பார்க்காதவர், இதுதான் உண்மை இதற்க்கு மேல் பொய்யானவர்களிடம் பேசமுடியாது.
Deleteஹலோ ரெண்டாவது வகுப்புல சைட் அடிக்கூடாதுனு சட்டம் ஏதும் இருக்கா ? உங்களுக்கு சந்தேகம் இருந்தால் ? நிரூபிக்கிறேன் லீவுக்கு வரும்போது நானும் நீங்களும் நான் படிச்ச //எலி மண்டே கறி// ஸ்கூலில் கேமராவில் பதிவாகி இருக்கும் போட்டுப்பார்ப்போம்.
நலப்பணி திட்டங்களையாவது திட்டாமல் வாழ்த்தியமைக்கு நன்றி.
ஆனந்தத்தை அள்ளித் தரும் அறிமுகங்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் குழலின்னிசையின் வாழ்த்து இசை
கேட்கட்டும்!
புதுவை வேலு
யாதவன் நம்பியாகிய புதுவை வேலுவின் புதுக்கவிதை வாழ்த்திற்க்கு நன்றி.
Deleteஅருமையான அறிமுகங்கள் நண்பரே
ReplyDeleteதேவகோட்டையர்களை ஒருங்கிண்த்து சங்கம்
பாராட்டிற்கு உரிய முயற்சி நண்பரே
பாராட்டுக்கள்
நன்றி
வருக நண்பரே... தேவகோட்டை சங்கம் அமைப்பதற்க்காக சுமார் இரண்டு வருடமாக உழைத்திருக்கிறேன் அலைபேசி இலக்கங்களை சேகரிக்க மட்டும் ஒரு வருடம் கடந்து விட்டது இன்றைக்கும் புதிதாக ஒரு தேவகோட்டையர் எமிரேட்ஸுக்கு வந்தார் என்றால் ? மறுநாளே எனக்கு தகவல் வரும் இப்பொழுதுவரை யாருக்கு அலைபேசி இலக்கம் வேண்டுமென்றாலும் கில்லர்ஜியை புடி என்பார்கள் ஒரு டெலிபோண் எக்சேஞ்ச் போல் ஆகி விட்டேன், இதனுடைய பொருளாளராக நான் இருந்தாலும் அனைத்து வேலைகளும் எனதே காணொளி எடுத்து படத்தொகுப்பு செய்வதும் நானே சங்கத்தின் வங்கி கணக்குகள் பணவரவு செலவுகள் கில்லர்ஜியின் பெயரிலேயே இருக்கிறது எனது சகோதர உழைப்பாளிகளின் பணத்தை கண்ணை இமை காப்பதுபோல் கண்ணியமாக களங்கமற்ற முறையில் இந்த நொடிவரை எனது பணியினை செய்து வருகிறேன்.
Deleteதேவகோட்டையர்களை வாழ்த்தியமைக்கு எங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
தம 3
ReplyDeleteநன்றி நண்பரே..
Deleteஆமாமா... இப்பக்கூட அந்த " Yellow " குறையாம சும்மா தகதகன்னுதான் இருக்கீக... என்னா மீசையோட கருப்புனால கலர் கொஞ்சம் கம்மியா தெரியுது அப்ப்புட்டுதேன் !
ReplyDeleteநண்பரே,
இதுவரை நான் யாரிடமும் கூறாத ரகசியம் ஒன்றை உங்களுக்கு மட்டும் கூற விரும்புகிறேன்... மற்ற வலை நண்பர்கள் யாருக்கும் தெரிய வேண்டாம்... இனி நான் எழுதபோவது அய்யா ஞானி ஸ்ரீபூவு அருளால் உங்கள் கண்களுக்கு மட்டும்தான் தெரியும்.
ஞானி ஸ்ரீபூவு எங்கள் ஊருக்கு திக்விஜயம் வந்த போது அவரை " வாராய்... நீ வாராய் " என பாடி வரவேற்ற என் எள்ளுத்தாத்தாவிடம் ( நண்பரே ! மந்திரிக்குமாரி பட பாடல் எங்கிருந்து சுடப்பட்டது என தெரிகிறதா ? )
" அறிவுரை சொன்னது பங்கு கொடுக்காம ஏமாத்துன பங்காளியாவே இருந்தாக்கூட பக்குவமா கேட்டுக்கிட்டு கொஞ்ச நாளாச்சும் கொத்து புரோட்டாவோட விருந்து போட்டு அனுப்பனும்ன்னு " அருள்வாக்கு சொல்லியிருக்கார் !
அப்படிப்பட்ட பரம்பரையில வந்த நான் உங்க அறிவுரைக்காக கோவிச்சிக்குவேனா ?... " மொதல்ல பொழப்பூ அப்புறமா வலைப்பூன்னு " சொன்னரே ஞானி ஸ்ரீபூ !.... வேலைப்பளுதான் நண்பரே !
தேவகோட்டை சங்கம் கோட்டை உயரத்தையும் தாண்டி வளர வாழ்த்துகிறேன்.
இன்றைய வலைப்பூ அறிமுகங்களுக்கு வணக்கமும் வாழ்த்தும் !
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
வாருங்கள் தோழமையே தாருங்கள் கருத்தாழமையை... ஆம் நண்பா தாங்கள் சொல்வது 100க்கு100 அப்பட்டமான உண்மை இதை ஃப்ரான்ஸிலிருந்தே... ஆஸ்த்திரேலியாவரை ஒலிக்கும்படி முரசொலி எழுப்புங்கள் குறிப்பாக ஒருஆளுக்கு காது கிழியனும் அந்த அளவுக்கு டண்டணக்கும் டணக்கும் னக்கும்.. என அடியுங்கள்
Deleteஆம் நண்பரே தங்களின் ரகசியத்தை பிறரின் பார்வையில் படக்கூடாது 80பதற்காக கணினியை குற்றாலத்துண்டைப்போட்டு மூடிவிட்டேன் இருப்பினும் அன்பின் ஐயா திரு. சீனா அவர்கள் துண்டை எடுத்து வீசிவிடுவார் போல ஆகவே பலரும் படித்து வருவதாக தகவல்.
" மொதல்ல பொழப்பூ அப்புறமா வலைப்பூன்னு "
இது ஸூப்பரப்பூ...
தேவகோட்டை சங்கத்தை வான் உயர உயர்த்தியமைக்கு எங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
தங்களின் வரவுக்கு நன்றி.
எனது பதிவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் நண்பரே.
ReplyDeleteவருக முனைவர் அவர்களே....எனது பதிவை’’யும்’’ என்ற தங்களது வார்த்தையை வன்மையாக கண்டிக்கிறேன் தங்களைப்போன்றவர்களை அறிமுப்படுத்துவதே என்னைப்போன்ற //கத்துக்குட்டிகளுக்கு// வளர்ச்சியைத்தரும் நன்றி.
Deleteமறுபடியும் சத்தமா? நிகழ்வு விறுவிறுப்பாகப் போகிறது. அடுத்தது என்ன?
ReplyDeleteஇன்றைய பதிவில் அறிமுகப்படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்த்துக்கள். நாளை சந்திப்போம்
நன்றி அய்யா!
Deleteபுதுவை வேலு
எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)18/12/2014
நன்றி அய்யா!
Deleteபுதுவை வேலு
எனது இன்றைய பதிவு "நாராய்! இளந் நாராய்" கவிதையை நோக்கி வாராய்! அய்யா! வாரய்!)
முனைவரைத் தொடர்ந்து வந்த முனைவருக்கு நல்வரவு ஆம் சத்தம் முரசொலியை விட அதிகமாக இருக்கிறதே.. நாளையும் வருக நன்றியுடன்....
Deleteசட்டீர் சட்டீர் என்று அடி விழுந்து கொண்டே இருக்கிறதே ஜி...?
ReplyDeleteதொடரும் அனைத்து நட்பு உள்ளங்களுக்கு வாழ்த்துக்கள்...
வருக நண்பரே.. கேட்கும் உங்களுக்கே வலிக்கிறதே... வாங்கிய எனக்கு எப்படியிருக்கும் ?
Delete
ReplyDeleteஇன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்! தேவக்கோட்டைக்காரர்களுக்கென்றே தனி அமைப்பு ஏற்படுத்தி வெற்றிகரமாக நடத்திக்கொண்டிருப்பது அறிந்து மகிழ்ச்சி.
வாருங்கள் நண்பரே.. பதிவர்களை வாழ்த்தியமைக்கு, எங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
Deleteஎலுமிச்சம்பழம் - சாதாரணம்.. சர்வ சாதாரணம்!..
ReplyDeleteஅது கூட உங்களுக்கு முன்னால நிறம் மங்கிப் போனதே!..
நீங்க ஞானிஸ்ரீபூவு அவங்களோட சாரட் வண்டியிலே பள்ளிக்கூடம் வந்த அன்னைக்கு நானும் தான் கூட இருந்தேனே - நினைவில்லையா - ஜி!..
வருக நண்பரே... தாங்கள் சொல்வதும் சரியென்றே என்மனசுக்குப்படுகிறது.
Deleteதாங்கள் ஆறாம் வகுப்பில் இருந்தததாக... ஞாபகம் வருகிறது.... இருப்பினும் பழமையான நினைவுகளை தக்க தருணத்தில் ஞாபகப்படுத்தியமைக்கு நன்றி.
எடுத்துச் சொல்வதற்கு வேலை இன்றி -
ReplyDeleteஇன்றைய தொகுப்பில் இனிய அறிமுகங்கள்!..
அனைவருக்கும் அன்பின் நல்வாழ்த்துக்கள்!..
நன்றி, நண்பரே..
DeleteReally fantastic
ReplyDeleteThanks 4 you, my dear.
Deleteஅருமையான அறிமுகங்கள் . அனைவருக்கும் வாழ்த்துகள் !!
ReplyDeleteவருக நண்பரே.. மோட்டார் சைக்கிளில் சுற்றிக்கொண்டே... கருத்திட்டமைக்கு நன்றி.
Deleteநா நல்லா ஓட்றனோ இல்லையோ ! நீங்க நல்லா ஓட்றிங்கணா !!!
Deleteஹி ஹி சும்மா தமா.......சூ
Deleteஹா ஹா ! இப்போ நான பைக் ஓட்டலயே ! நீங்க எப்படி ஓட்றிங்கனு பாக்கலாம் !!!
Deleteஅது சரி வண்டியை பின்னாலே பார்க் பண்ணிட்டு வந்தால் ? எங்களுக்குத்தெரியாதோ ? பாத்து நண்பா திருட்டுப்பசங்க நிறையாத்திரியிறாங்கே..... எப்பூடி ?
Deleteஇருவரைத் தவிர மற்ற அனைத்து பதிவர்களும் தெரிந்தவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன் பதிவையும் இன்றைய வலைச்சரத்தில் இணத்தமைக்கு நன்றி.
தங்களின் வருகைக்கும், கருத்தினை பதிந்தமைக்கும் நன்றிகள்.
Deleteவலைச்சரத்தில் என் பதிவு இடம் பெற்றதை வாழ்த்துக்களுடன் தகவல் தெரிவித்த ரூபன் அவர்களுக்கும், உங்களுக்கும் நன்றி.
ReplyDeleteவெளியூரில் இருப்பதால் பதிவுகளை படிக்க முடியவில்லை தொடர்ந்து.
தங்களின் மீள்வருகைக்கு மீண்டும் நன்றிகள் ரூபன் சார்பாகவும்.
Deleteஎவ்ளோ தான் பாண்டுரங்கன் மீது சத்தியம் செய்து ஆசிரியர் கதறி அழுதாலும் பிள்ளை வாங்கின அத்தனை அடிகளும் வட்டியோடு திருப்பி தர தானே வந்திருக்கிறார்.. அப்படி இருக்கும்போது ஆசிரியருக்கு அடி விழுந்திருக்குமோ??
ReplyDeleteஅருமையான தொடக்கம்... அசத்தலான காணொளி... தேவக்கோட்டையர்களை இணைத்து சேவைகள் தொடரும் அனைத்து அன்பு உள்ளங்களையும் கண்டோம்... பணத்தை பெற்றுக்கொண்டு கையொப்பமிடுபவரையும் கண்டோம்.. நல்லவை தொடரட்டும்.
அறிமுகப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் நான் அறிந்த அன்பு உள்ளங்கள்...
அசத்தலான அறிமுகங்கள்..
இப்பவாவது சொல்லுங்க ஜீ. புரியாத மொழியில் எழுதி இருக்கும் வார்த்தைகளின் அர்த்தம் என்ன???
இன்றைய அமர்க்களமான வலைச்சர தொகுப்புக்கும் முகவரைக்கும், அறிமுகப்படுத்தப்பட்ட அன்பு உள்ளங்களுக்கும் நண்பர் ஜீ அவர்களுக்கும் நெஞ்சார்ந்த அன்பு வாழ்த்துகள் !!
த.ம.6
வாங்க, அதானே... வட்டிக்கு வட்டிதான் இந்த ‘’சட்டீரோ’’
Deleteதேவகோட்டையர்களை வாழ்த்தியமைக்கு எங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
வாழ்த்துகளுக்கு நன்றி... இப்பவாவது சொல்லுங்க..
யேன் இன்னும் ரெண்டு நாளுக்கு பொறுக்கமாட்டியலோ...
அதுக்கென்னப்பா... எப்படியும் சொல்ல தானே போறீங்க :)
Deleteசோ கண்டிப்பா பொறுமையா காத்திருக்கோம்... :)
ஆஹா...ஐயாகிட்டயும் அடிவாங்கியாச்சா...? வகுப்பை கவனிக்காம வாத்தியாரையா குறை சொல்லுற நீன்னு...
ReplyDeleteஞானி கையால் விழுந்த அடி நலமேயல்லவா... வாத்தியார் நினைத்து இருப்பார் ஏன்டா ஐயாவையா கூட்டிக்கிட்டு வந்தேன்னு...மனசுக்குள்ல சிரித்து இருப்பாரோ...?
யெல்லோ...கலர்...பத்மா பார்த்தா...நல்ல காமடி...
கூட்டாக உதவி செய்தோர்... வாழ்க தொடர்க...!!!
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
வருக, யாரு அடி வாங்கினானு நாளைக்கிலே தெரியும் எங்க ஐயா அடிச்சா,,, வலிக்காதே எங்க ஐயா தங்க ஐயாவுல... பத்மாவா ? இதுயேன் புதுசா ?
Deleteஎங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
தம 7
ReplyDeleteவருகைக்கு நன்றி.
Deleteஅனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteமஞ்சள் கலருக்கு இப்படியொரு பில்டப் ஆ. அடிமேல் அடி விழுந்து கொண்டு இருக்கிறது.ஊர்காரர்களின் நலப்பணி தொடர வாழ்த்துக்கள்.அருமையாகவும் ,நகைச்சுவையாகவும் பணியை செய்யும் உங்களுக்கு பாராட்டுக்கள்,வாழ்த்துக்கள்
வருக, இதில் பில்டப்புக்கு என்ன ? இருக்கிறது உண்மையை, உண்மையாக, எழுதும் உண்மையானவனின் உண்மையான வரலாறு.
Deleteஎங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteவருக நண்பரே... நன்றி
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteஇன்றைக்கு அடி அய்யா ஞானியின் அருளால் உங்களுக்கில்லை என நம்புகிறேன். ஏனெனில் உங்கள் ஸ்டைலில் அனைவரும் மயங்கியிருக்க, (அதுவும், இனிய தோழியின் கருணை பார்வை பட்டப் பின்னரும்) அடி இடம் மாறி சத்தம் உண்டாக்கி இருக்குமென்றே நினைக்கிறேன்... பார்க்கலாம்! நாளை காலை அடி யார் முகத்தை பதம் பார்த்திருக்கிறது என்று தெரிந்து விடுமே....
எலுமிச்சம்பழம் என்றால்,? இதுவரை நான் கேள்விப் பட்டதே இல்லை! அப்படியும் ஒருபழம் இருக்கிறதா என்ன?
அழகாக இன்று அறிமுகமான அனைவருக்கும், என் வணக்கங்களும், வாழ்த்துக்களும்...அனைவரின் பதிவுகளையும் சென்று வாசிக்கிறேன்.
நல்லதே செய்யும் திட்டங்களுக்கு தாங்கள் ஆணிவேராக இருப்பது பாராட்ட வேண்டிய விஷயம்..வாழ்த்துக்கள்.
எப்படியோ! நீங்கள் இந்தவார ஆசிரியராய் பணியேற்றதிலிருந்து, கவலைகளை மறக்கும் மருந்தாய், சிரிப்புடன் சிந்திக்க வைக்கும் நாட்களாய் நகர்கிறது. அதற்கும் நன்றியுடன் வாழ்த்துக்கள்..
(எங்களுக்குள் மறைந்திருந்த நகைச்சுவை உணர்ச்சியும், உங்களுக்கு போட்டியாக தலைக்காட்ட துவங்கியுள்ளது. )
நாளை வெள்ளி விரதம் வெள்ளி முளைக்கும் முன் கடைப் பிடித்தாக வேண்டுமே..! எனவே, தாமதத்திற்கு தடையாக நிற்க ௬டாது! (நின்றால் சட்டீர் என் பக்கமும் திரும்பக் ௬டும்.)
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க நீங்க சொல்றீங்க விதி என்னானு யாருக்குத்தெரியும் ? எலுமிச்சம் பழத்துக்கு இவ்வளவு விளக்கம் தொடுத்தும் புரியலையா ? சரி உங்களுக்காக கில்லர்ஜியில் ஒரு பதிவு போடுறேன்
Deleteஎங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
என்னால் தங்களுக்குள் இருந்த நகைச்சுவை உணர்வு வெறியேறினால் எனக்கும் மகிழ்சியே காரணம் பதிவுகள் வந்தால் நானும் ரசிப்பேனே...
ஆமா, விரவேலை இருக்கிறது
நன்றி
நான் தொடரும் சிறந்த பதிவர்களோடு என்னையும் சிறப்பித்தமைக்கு மிக்க நன்றி நண்பரே! என் டேஷ்போர்டில் வலைச்சர பதிவுகள் வராது போனதும், பணிச்சுமையுமே நான்கு நாட்களாய் உங்கள் பதிவுகளை படிக்காமல் போனதற்கு காரணம். இன்று என்னை அறிமுகம் செய்திருப்பதாய் நீங்கள் மற்றும் ரூபன் சொன்னமையால்தான் வலைச்சரத்தில் நீங்கள் தொடர்ந்துஎழுதிக் கொண்டு இருக்கிறீர்கள் நாம் தான் மிஸ் செய்துவிட்டோம் என்று புரிந்து கொண்டேன்! தொடருங்கள்! நன்றி!
ReplyDeleteவருகக்கு நண்பரே... நன்றி
Deleteவெள்ளிக் கிழமை விரதம் வேதாவைக் காண ஆவலோடு இருக்கிறேன் :)
ReplyDeleteத ம +1
ஏன் ? வெள்ளையம்மாளை காண மாட்டீங்களோ.....
Deleteஉண்மையில் உங்க அன்பால்தான் சகோதரர் தினமும் வலைச்சரம் பார்க்கிறேன். நிறைய நல்ல பதிவர்களை அறிந்து கொண்டேன். வாய்ப்பு தந்த உங்கள் அன்புக்கு நன்றிகள் சகோதரர்
ReplyDeleteதொடர் வருகைக்கு நன்றி
Deleteஅறிமுகமான அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeletezorpia.com என்று வலைத்தள முகவரியில் சென்றும் பார்த்தேன் . ம்ஹும் ....நீங்கள் எல்லோருக்கும் வைக்கும் பேர்களுக்கு அர்த்தம் தேடித்தான். ஒன்றும் புரியவில்லை. என்றைக்குத் தான் தெரியப் போகிறதோ?
வருக கருத்துரைகளுக்கு நன்றி ஞாயிற்றுக்கிழமை தெர்ந்து விடுமே.....
Deleteஆஹா.... நான் மறந்தாலும் நீங்க மறக்கமாட்டீங்க போல:-))) அதான்.... அந்த பெயர் மாற்றத்தை!
ReplyDeleteதிங்கள் எட்டிப் பார்த்தவர்களை விடாமல் சனி வரை வரவழைக்கும் ஸ்டைல் எனக்கு ரொம்பப் பிடிச்சுருக்கு. கொன்னுட்டீங்க.... கில்லர்ஜி!!!
வாங்க மேடம் எனக்கு ஞாபகசக்தி கூட இல்லை அப்படினு சொல்லமாட்டேன் ஏதோ இருக்கு அதனாலதானே, ரெண்டாவது வாங்கின ‘’சட்டீர்’’ ‘’சட்டீர்’’ களை இப்பகூட பட்டு, பட்டுனு ‘’புட்டு’’ ‘’புட்டு’’ வைக்கிறேன்.
Delete//ஸ்டைல் பிடிச்சுருக்கு// சந்தோஷம் நன்றி
//கொன்னுட்டீங்க... கில்லர்ஜி// இது எனக்கு புரியலையே.... யாரைக்கொன்னேன் ?
இந்த மாதம் மார்கழி மாதமா...? அதான் விரதமா வருகிறதா...??? புரிந்தது.நண்பரே....!!!!
ReplyDeleteவாங்க நண்பா கரைக்டா சொல்லிட்டாங்களே..... நன்றி
Deleteஎன்னுடைய தளம் அறிமுகப்படுத்தியமைக்கும், தெரிவித்தமைக்கும் உங்களுக்கு நன்றிகள். நண்பர் ரூபனுக்கும் என் நன்றிகள். என் வீட்டுப் பகுதியில் நெட் வேலையே செய்யாததால் அலுவலக நேரத்தில் நேரம் ஒதுக்கி பார்ப்பதால் இரு வாரங்களாகவே வலைப்பக்கம் வருவது குறைந்து விட்டது... அனைத்து நட்புகளுடையதையுமே படிக்க வேண்டும்.. அதனால் தான் தாமதம்.... அறிமுகமாகியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்... அதென்ன உங்கள் புகைப்படத்துடன் கூடிய மின் அஞ்சல் முகவரிகள்?.... ஆமாம் படப் பெயர்கள் என்ன காரணப் பெயர்கள்?.... பொறுமையாய் கண்டுபிடிக்கிறேன்....
ReplyDeleteவருக தப்களின் கருத்துரைக்கு நன்றி
Deleteகண்டுபுடிங்க ஞாயிறுக்குள்ளே.....
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்..என் தோழி எழில் வலைத்தள அறிமுகத்திற்கு நன்றி சகோ...
ReplyDeleteவாங்க, வாங்க வழ் தெரிஞ்சுருச்சா ?
Deleteநன்றி
தொடர்ந்து அடி விழுந்துட்டே இருக்கே..... :(
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்ட அனைவருக்கும் வாழ்த்துகள்.
வாங்க ஸார் என்ன செய்ய ? எல்லாம் விதிதான்
Deleteநன்றி
வலைச்சர பணி ஒரு பெரும் பணி. அதனை ஒவ்வொருவரும் தமக்குரிய ஒரு பாணியில் செய்து வருகின்றார்கள். நீங்கள் கூட ரசிக்கும் படியான ஒரு உத்தியைக் கையாண்டு செய்திருக்கின்றீர்கள். உங்கள் சமூகப் பணியையும் பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. அனைத்துக்கும் வாழ்த்துக்கள். வேலைப் பளுவினால் வலை உலகு வருவது குறைந்து விட்டது. எனது வலையை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி.
ReplyDeleteவருக கருத்துரைகளுக்கு நன்றி
Deleteஎங்களது Devakottai Emirates Welfare Association சார்பாக நன்றிகள் 110.
\\உங்க பெரியமகன் பெயர் முருகன் என்பதும், சின்னமகன் பெயர் கணபதி என்பதும் எனது மகன் பாண்டுரங்கன் மேலே சத்தியமா எனக்கு தெரியாது என்று பாவம் அழாத குறையாக சொன்னார்\\ இப்போ எல்லாம் தெளிவா புரியுது!!
ReplyDeleteஇப்பத்தான் புரிஞ்சுதா ? வருகைக்கு நன்றி
Deleteஆஹா! கில்லர்ஜி ஆசிரியர் பொறுப்பில் இருந்தது தெரியாமபோச்சே! எனது பதிவை இவ்வளவு ஒசத்தி(யா) சொன்னதுக்கு நன்றி தலைவா!!! சரீ மீசைக்கு என்னதான் போட்டு வளக்குறீங்க?! மெருகு ஏறிகிட்டே போவுதே!!! நானும் அதப்போல வக்கலாமான்னு ஒரு ஓரத்துல ஆசப்பட்டு யோசிச்சு பாத்தாக்க மீசக்குள்ள நான் காணாமலே போயிடுவனான்னு டவுட் வந்துடுத்து! சரிதான் காமெடி பீசாகிடவேணாம்முன்னு விட்டுபுட்டேன் தலைவா! நீங்க கலக்குங்க!!! வாழ்த்துக்கள்! அன்புடன் எம்ஜிஆர்
ReplyDelete