ஞாயிறு, ஞானம்பாளுக்கு விரதம் – முதல் மரியாதை (P. பாரதிராஜா 1985)
➦➠ by:
killerjee ( கில்லர்ஜி)
தமிழ் வாழ ! அந்தத் தமிழோடு நாமும் வாழ !
எனக்கு, நன்றாக நினைவு இருக்கிறது, நான் இரண்டாம் வகுப்பு
படிக்கும் போது குருந்தன் வாத்தியார், பிள்ளையாரைப்பற்றி பாடம் நடத்தினார்,
பிள்ளையார் பெயர் கணபதி, கணபதிக்கு ஒரு தம்பி உண்டு பெயர் முருகன், கணபதியை நாம், (பிள்ளையாரை) பெரியப்பா என்றே
அழைக்கவேண்டும் மென சொன்னார், நான்
எந்திரித்து நின்றேன் என்னடா ? என்றார் நான் கேட்டேன் ஸார் அப்படியானால், முருகன்
சித்தப்பாவா ? என்று
கேட்டேன், அன்போடு இங்கு வா என்றார். அருகில் சென்றேன் அருகில் சென்றதுதான் தாமதம்
’’சட்டீர்’’
எனஒரு சப்தம் எனது செவிட்டில் ஒரு அறை விழுந்தது முருகனை, சித்தப்பா, என்றோ,
பெரியப்பா என்றோ சொல்லக்கூடாது ‘’போடா’’ என அதட்டி சொல்லிவிட்டார், இது எனக்கு குழப்பமாகவே
இருந்தது காரணம்...
தொடரும்....
வணக்கத்துடன் உங்கள் கில்லர்ஜி.
கோயில்
இல்லாத ஊரில் குடியிருக்காதே, என்பார்கள்.
தெய்வம் இருப்பது எங்கே...
அது இங்கே வேறெங்கே...
தெய்வம் இருப்பது எங்கே...
காணொளி.
இஷா
குவைத்துல கூடத்தான், ஆம் நண்பர்களே...
மதவிசயத்தில் ஒவ்வொரு தெய்வங்களும் நாடுகளை பங்கு போட்டுக்கொண்டதா ? அல்லது மனிதன் போட்டுக்கொண்(றா)டானா ? சரி அது கிடக்கட்டும்
தேவையில்லாமல் அதில் ஏன் ? சுவாசிக்கிற பொருளை நுளைக்க வேண்டும், இந்த தெய்வீக
விசயங்களை தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் நடக்கும் திருவிழாக்களை தேதி வாரியாக
கோவில் தேவஸ்தானமே திணறும் இன்றைய வாழ்க்கைச் சூழலில் குவைத் நாட்டில் வேலை செய்து
கொண்டு அத்தனை விசயங்களையும் சேகரித்து அந்தந்த காலகட்டத்தில் நமக்கு உடனுக்குடன்
பதிவிடும் தஞ்சையம்பதி வலைப்பதிவர் எமது இனிய நண்பர் திரு. துரை
செல்வராஜூ அவர்களின் தெய்வீக சமாச்சாரங்களில் என்னை
மிகவும் கவர்ந்தவை கீழே சொடுக்குக.
டலவா
ஜியெம்பி இந்த வார்த்தையை அறியாதவர், தெரியாதவர்
உண்டோ வலையுலகில் 74
அகவை
கொண்ட இளைஞர் இவர் இன்றைய சமூக அவலத்தின் ஊடே தன்னை நான் நல்ல பையன்
எனச்சொல்கிறார் தாங்களும் எப்படியென ? அறியவேண்டுமா ? இனிய ஐயா திரு. G. M. பாலசுப்பிரமணியன் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
தட்லோ
சுதந்திரம் பெற்றோம் அந்த சுதந்திரம் எதற்க்கெல்லாம்
தற்போது உபயோகமாக இருக்கிறது என்பதை ஐயா அவர்கள் ஒவ்வொரு வரியிலும் ஆழமாக
உணர்த்தியிருக்கிறார் கவிதையை படித்து முடித்ததும் வேதனைப்படுவதா ? சிரிப்பதா ? என்றே
விளங்கவில்லை சுதந்திரம் தந்தவர்கள் பகலில் கொடுக்காமல் இரவில் தந்ததில் ஏதோ
தந்திரம் உள்ளதோ... நம்மை ஆள நல்லோர் வரவேண்டும் என்ற வரம் வேண்டும் என ஐயாவோடு
நாமும் இறைவனை பிரார்த்திப்போம் ஐயா அவர்களை பாராட்ட எமக்கு வயதோ, அனுபவமோ போறா...
ஆகவே ஐயா பெருந்தகை திரு. புலவர் இராமாநுசம் அவர்களை வணங்குகிறேன் ஐயாவின் கவிதையை காண
கீழே சொடுக்குக.
* * * * * * * * * * * * * * * * * *
அபாட்
தீதும்
நன்றும் பிறர் தர வாரா... புரிந்திருக்குமே... இவரைப்பற்றியெல்லாம் நான் பாராட்டி
எழுதமுடியாது என்பது உங்கள் எல்லோருக்குமே தெரியும் ஏன்னா ? மெர்க்குரிக்கு மெழுகுவர்த்தி புடிச்சா வெளிச்சம் தெரியாது என்பது இருட்டுல வாழுற குருடனுக்கும்
தெரியும் எனக்கு தெரியாதா ? இந்த ஐயாவின் கவிதைகள்
அனைத்துமே அருமைதான் இருப்பினும் நக்கலும், நையாண்டியுமாக இருக்கும் இந்த ஹைக்கூ
கவிதை என்றுகூட சொல்லலாம் எனக்கு மிகவும் பிடித்தது நீங்களும் ஒருமுறை ரசித்துப்பாருங்களேன்...
மரியாதைக்குறிய ஐயா
பெருந்தகை கவிஞர் திரு. Ramani S அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
லிமா
தனது வாழ்வில் நடந்த சம்பவங்களை கோர்த்து நகைச்சுவையாக அரட்டையடிப்பவர் கருத்துரை வழங்கும்போது புதிய பதிவர்களாயினும் அவர்களுக்கு(ம்) மரியாதை கொடுப்பது எப்படி ? என்ற பக்குவத்தை இவரிடமிருந்துதான் தெரிந்து கொள்ளவேண்டும் அவர்தான் அரட்டை என்ற வலைப்பதிவர் சிங்கார சென்னைவாசி மரியாதைக்குறிய அம்மா திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
* * * * * * * * * * * * * * * * * *
அனிம்
நிலத்தைக்குறித்து கவிதை எழுதலாம், நிலாவைக்குறித்து கவிதை
எழுதலாம், காதலனைக்குறித்து கவிதை எழுதலாம், ஆனால் ? காலனைக்குறித்தும்கூட கவிதை எழுதமுடியுமா ? சுருக்கமான வரியானாலும் நறுக் கென்று சொல்லி முடித்து
இருக்கிறார் ஐயா உயர்திரு. பழனி. கந்தசாமி அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக
பிதோ
ஐயாவைப்பற்றி நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா ? அப்படியும், இப்படியும் என்பதை எப்படியும் சொல்லமுடியும் என தனது பாடலில் சொல்லி இருக்கிறார்... அப்படி என்னதான் சொல்லி இருக்கிறார் இதோ புதுக்கோட்டை கலக்கல் மன்னன் திரு. நா. முத்து நிலவன் அவர்களின் பதிவைக்காண கீழே சொடுக்குக
வாலோ
தமிழ் சமூகமே சொல்லும், நானும் கூடத்தான் கவியரசு
கண்ணதாசனை மிகச்சிறந்த கவிஞன் என்று இதை மறுப்பவர் அறிவீனர்களாகத்தான் இருக்க
முடியும், உலகறிந்ததால் அவருக்கு இந்த பெயரும் புகழும் ஆனால் ? வெளியுலகம் தெரியாமல் எத்தனையோ கவிஞர்கள் வாழ்கிறார்களே.. என்பதே எமது ஆதங்கம்
அந்த வகையில் ஐயா அவர்களின் கவிதையை நான் மிகவும் ரசித்திருக்கிறேன் இவர் என்னைத்
தொட(ர)வில்லை எனினும் இவரை நான் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன் கவியாழி என்ற வலைபதிவில் எழுதும் இவரின் பெயர் பொருத்தமானதே
என்பது எமது கருத்தும்கூட பார்ப்பதற்க்கு எனது சித்தப்பாவை போல் (மீசைதான் குறைவு) இருக்கும் அவர்தான் பெருந்தகை திரு. கவியாழி கண்ணதாசன் அவர்களின் கவிதையை காண
கீழே சொடுக்குக
சியாம்
தனிமை மனிதனின் உணர்வுகளை கொன்று விடும் ஆகவே
தனிமையை நீ கொன்று விடு என அறிவுறுத்துகிறார் உண்மைதானே தனிமையிலே இனிமை காண
முடியாதே... நமது உணர்வுகளை கதம்பமாக கோர்த்து அழகான மாலையாக அணிவிக்கிறார் சென்று
வாருங்கள் நண்பர்களே.. குவைத்துக்கு ஆம் குவைத்தில் குடும்பசகிதமாய் வாழும் எமது இனிய நண்பி திருமதி. மஞ்சுபாஷிணி
சம்பத்கும்மார்
அவர்கள் இவரின் பதிவைக்காண கீழே சொடுக்குக.
இன்றைய கொசுறு
டிவிஷன் மேனேஜர் வித் கில்லர்ஜி
02.12.2014
யுனிடெட் அரப் எமிரேட்ஸின் 43 வது தேசியதின விழாவில்
நன்றி
அன்புடன்
என்றும் உங்கள்
Devakottai KILLERGEE Abu Dhabi
(கில்லர்ஜி
தேவகோட்டையான்)
வாழ்க ! தமிழ்.
* * * * * * * * * * * * * * * * * *
|
|
ஜீ...
ReplyDeleteபதிவின் ஆரம்பத்தில் சற்றே கண்கலங்கிவிட்டேன்... மதங்கள் பற்றிய ஒத்த கருத்துடையவர்களாக இருக்கிறோம். உங்களை போன்றவர்களால் மதங்களுக்கு பிடித்த " மதம் " குணப்படுத்தப்படும்.
இன்றைய வலைச்சர அறிமுகங்களை வாழ்த்துகிறேன் என்பதைவிட அவர்களின் வயதுக்கும், அனுபவங்களுக்கும் வணங்குகிறேன்.
கில்லர்ஜீயின் கோடாலி தொடர்ந்து கொய்யட்டும்... வலைப்பூக்களை !
நன்றி
சாமானியன்
சாமானியனின் முதல் வருகைக்கு வந்தனம் மனம் திறந்து பாராட்டியமை கண்டு அகமகிழ்கிறேன் நன்றி.
Deleteமுக்கியமான விசயம் தெரிந்துகொள்ளலாமென்றால் தொடரும் போட்டுவிட்டீர்களே.. :)
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள் சகோ..வாழ்த்துகள்!
வருக, சகோ என்னை அறைஞ்சுட்டாங்களே... அந்தவருத்தம் இல்லை முக்கியமான விசயம் எங்கே ? போய் விடும் காலம் வாருங்கள் நாளை நன்றி.
Deleteகுழப்பத்தை அறிய ஆவல்...
ReplyDeleteஅனைவரும் சிறந்த பதிவர்கள் ஜி... வாழ்த்துக்கள்...
வருகைக்கு நன்றி ஜி ‘’ஆவல்’’ இதுதானே நான் எதிர்பார்ப்பது...
Deleteஅன்பின் ஜி..
ReplyDeleteமனம் நெகிழ்ந்தேன்!..
ஐயா GMB, புலவர் இராமாநுசம், கவிஞர் திரு. ரமணி, திருமதி. ராஜலக்ஷ்மி பரமசிவம், ஐயா பழனி கந்தசாமி, ஐயா நா. முத்துநிலவன்,கவியாழி கண்ணதாசன், அன்பின் மஞ்சுபாஷினி - ஆகிய பெருந்தகைகளுடன் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மகிழ்ச்சி.. நன்றி..
வாழ்க தமிழ்.. வாழ்க நலம்!..
வருக நண்பரே தருக தினம் கருத்துரையை...
Deleteஅறிமுகங்கள் அருமை நண்பரே
ReplyDeleteமதங்கள் குறித்த காணொளி
மனதில் மகிழ்ச்சிஅலைகலைப் பரவவிட்டது.
மதங்கள் அனைத்தும் போதிப்பது அன்பை மட்டும்தான்,
ஆனாலும் நாம் பின்பற்றாதது அது ஒன்றை மட்டும்தான்.
மதம் விலகுமாயின் மனிதம் தழைக்கும்
நன்றி நண்பரே
வாருங்கள் நண்பரே.. நடைமுறை வாழ்வின் உண்மையை அழகாக எடுத்துரைத்தீர்கள் இந்த உண்மை கசக்கிறதே இது பொய்யாகும் நாள் வருமோ ? யாமறியேன் பராபரமே.... தங்களின் விஸ்தாரமான கருத்துரை கண்டு மகிழ்கிறேன்.
Deleteதம 2
ReplyDeleteநன்றி நண்பரே.
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெரியப்பா...சித்தப்பா..அப்புறம் என்னப்பா...? காத்திருக்கிறோம் அடுத்த பதிவிற்கு..
தம. 3
வருக, வருக, அப்புறம் ? அப்பாதான்.
Deleteடலவா ,தட்லோ , அபாட் ..இதென்ன அரபு ஒன்று ,இரண்டு ,மூன்றா ?
ReplyDeleteபெரியப்பாவுக்கு கல்யாணமே ஆகலே ஏன் ,சிற்றப்பாவுக்கு ஏன் ரெண்டு பெண்டாட்டின்னு என்று கேள்வி கேட்டீங்களோ ?
த ம 4
பகவான்ஜி இதற்கான பதிலை கண்டிப்பாக கடைசியில்தான் சொல்வேன் நான் நினைத்தேன், மிகமிகச் சரி தாங்கள்தான் இந்தக்கேள்வி கேட்பீர்கள் என்று...
Deleteரெண்டு பொண்டாட்டி ? உங்களுக்கு மட்டும் எப்படி ? ஜி இந்த மாதிரி தோணுது... லைட்டா சின்ன’’க்ளு’’ கொடுத்தீங்கன்னா ? அதைவச்சு பத்துப்பதிவு எழுதிடுவேன் க்ளு கேட்டதற்காக ஸூப்பர் க்ளு வாங்கி அனுப்பிடாதீங்க....நன்றி.
அறிமுகங்கள் அருமை. இன்னும் இன்னும் எதிர்பார்க்கிறோம்.
ReplyDeleteவாங்க கும்மாச்சி இந்த எளியவனாலே முடிந்த களி உருண்டையை கண்டிப்பாக தருவேன் நன்றி.
Deleteபுதுமையான ஆரம்பம்.... வித்தியாசமான தொகுப்பு.... ஆனால் அன்பு எப்போதும் ஒரேப்போல்... தாரக மந்திரம் போல் எல்லோர் மனதிலும் ஒலிக்கவேண்டிய வரிகள் எல்லா மதமும் ஒன்றே எல்லா தெய்வமும் ஒன்றே.... மதம் வேண்டாம் நமக்கு.. மனிதம் உயிர்ப்போடு இருக்கட்டும் என்றும் நமக்குள் என்ற அற்புதமான வரிகளுடன் இன்றைய நாள் மிக இனிமையாக தொடர்ந்திருக்கிறீர்கள் ஜீ.
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவரும் ஜாம்பவான்கள் வலைப்பூவில்.... அனைவருக்கும் என் அன்பு நமஸ்காரங்கள்... என்னையும் அறிமுகப்படுத்தியமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் ஜீ.
பிள்ளையாரை பெரியப்பா என்று வாத்தியார் சொல்ல சொன்னால் க்ரியேட்டிவா சிந்திக்கும் பிள்ளை வேறெப்படி சொல்லும்? இப்படி தானே சொல்லும்... வாத்தியார் அதற்காக ஆச்சர்யப்படவேண்டுமே தவிர இப்படி அடிக்கலாமா? பிள்ளைகளின் கூர் சிந்தனையும் அறிவும் க்ரியேட்டிவிட்டியும் பாராட்டக்கூடிய விஷயமே அன்றி அடித்து அவர்களின் சிந்தனைக்கு பூட்டு போடவேண்டிய விஷயம் அல்ல.. ஆச்சர்யமே ஏற்பட்டது எனக்கு வாசிக்கும்போது... அதெப்படி கரெக்டா சஸ்பென்ஸ் விட்டு தொடரும் போட்டுட்டீங்க :) சரி நாளை கண்டிப்பா வந்து பார்த்துவிடுவோம்...
இன்றைய பெருந்தகை மூத்தோர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகளுடன் மீண்டும் அன்பு வணக்கங்கள்...
த.ம.5
வாங்க, வாங்க, இந்த அப்பாவிப்புள்ளையை சீனா ஐயாவிடம் போட்டுக்கொடுத்து மாட்டி விட்டுப்புட்டு இப்ப சந்தோஷமா ? இருக்கட்டும்..
Deleteஆமால பச்சப்புள்ளைய இப்படி அடிக்கலாமா ?
அனைவருக்கும் வாழ்த்துக்கள்,
ReplyDeleteமஞ்சு பாஷினி சொல்வது போல் இது வித்தியாசமான தொகுப்பாக இருக்கிறது
அது சரி கடைசி படத்தில் இருப்பது எந்த ஊரு ஷேக் கள் , ஜார்ஜாவா அபிதாபியா?
வாங்க, ஜலீலா எமது பதிவுக்கு முதல் கருத்துரை தந்து இருக்கிறீர்கள் சந்தோஷம் பாராட்டுறாப்பல வடிவேலு மாதிரி அபிதாபியா ? ஸார்ஜாவா ? னு நக்கலு.. ம்ம்ம் உங்களுக்கும் தெரிஞ்சு போச்சா ? நான் அப்பாவினு... அவரு ஷேக்கு இல்லை, வேணும்னா நாளைக்கு வாங்க கேக்கு வெட்டுறதை பாருங்க..... அலுவலக மேலாளரும், கில்லர்ஜியும்தான். வருகைக்கு நன்றி.
Deleteமதம் கொண்டு அலையும் பலருக்கு இந்தப் பதிவு ஒரு பாடம். சுருக்கமாக, தேவையான சமூகக் கண்ணோட்டத்தை முதல் பத்தியில் பகிர்ந்தமைக்குப் பாராட்டுகள். இன்றைய பதிவர்கள் அனைவரும் அறிமுகமான பதிவர்களே. நன்றி.
ReplyDeleteவருக முனைவரே தங்களின் விரிவான கருத்து கண்டு மகிழ்ச்சி.
Deleteநான் தொடரும் சிறந்த பதிவர்கள் அனைவரும்! அறிமுகத்தில் அசத்திவிட்டீர்கள்! வாழ்த்துக்கள்! நன்றி!
ReplyDeleteவருகை தந்து வாழ்த்திய தளிர் சுரேஷ் அவர்களுக்கு நன்றி.
Deleteமூத்தோர்களுக்கு மரியாதை செலுத்துவது நமது தமிழ் பண்பாடே ஆச்சே...அந்தப பண்பாட்டை அறிமுக படுத்திய நண்பர் கில்லர்ஜீக்கு வாழ்த்துக்களும் நன்றியும்....
ReplyDeleteஆஹா வாருங்கள் தோழரே... மூத்தோர்க்கே முதல் மரியாதை. நன்றி.
Deleteசிறப்பான என் நட்புகளின் அறிமுகங்கள் தந்தது மகிழ்வு. அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.
ReplyDeleteவாங்கய்யா... வாத்தியாரையா... வரவேற்று நின்றேன் அய்யா... வாத்தியாரைய்யா...
Deleteசிறப்பான தொடக்கம் மற்றும் அறிமுகம் ! தொடருங்கள் அண்ணா !
ReplyDeleteவாருங்கள் நண்பரே... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
Deleteநன்றியுரை மாதிரியான நல்ல அறிமுகம். வாழ்த்துகிறேன் சகோதரர்.
ReplyDeleteவாழ்த்துகளை நன்றியோடு ஏற்றேன் சகோதரி...
Deleteஅறிமுகப்படுத்திய அனைத்து பெரிய(வர்களுக்கு) பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள். சஸ்பென்ஸ் ல் விட்டுவிட்டீர்கள். அறிய ஆவல்.வாழ்த்துக்கள்,நன்றி.
ReplyDeleteவருகைக்கு நன்றி சஸ்பென்ஸ்னா ? விட்டுத்தான் பிடிக்கணும் நாளைக்கு வாங்க... படிங்க.... மற்றதை நாளைக்கு சொல்லுங்க...
Deleteஅட்டகாசமான ஆரம்பம், பெரியவர்களின் ஆசிகளுடன் ஆரம்பித்திருக்கிறீர்கள். நன்றாக வாழ்வீர்கள். மனமார்ந்த வாழ்த்துக்கள்.
ReplyDeleteஐயாவின் வருகைக்கும், ஆசிகளுக்கும் நன்றி, பெரியோர்களின் ஆசி எனது சந்ததிகளுக்கு கிடைக்கட்டும் ஐயா.
Deleteகில்லர் அண்ணா, இனிக்கு நம்ம அண்ணனை அறிமுகப்படுத்தீருக்கிங்க. நன்றி ! நன்றி!! இன்றைய அறிமுகங்கள் நம் எல்லோர் மனங்களிலும் மரியாதையாக பார்க்கபடுபவர்கள். மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கிறது!
ReplyDeleteவாங்க, வாங்க, யாரு ? என்னை கொலைகாரரே...கொலைகாரரே... அப்படினு சொல்வாரே..... அவுரா ?
Deleteமுதல் மரியாதை அருமையான சிந்தனை.
ReplyDeleteகில்லர்ஜியிலும் இன்றுமுதல்... முதல் மரியாதை தான் ஓடுகிறது நன்பா ஓடிப்போயி பாருங்க.....
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteநல்லது நண்பா....
Deleteதொடர்கதை மன்னனுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteபெரியவர்களின் அறிமுகத்தோடு, ஆசிரியர் பணியை ஆரம்பித்தமைக்கு வாழ்த்துக்கள்.
டிவிஷன் மேனேஜரோடு இருக்கும் போட்டோவைப் பார்த்தால், நீங்க அந்த போட்டோ எடுப்பவரை, "வெளியியல வா உன்னைய பார்த்துக்கிறேன்னு" சொல்ற மாதிரி இல்ல நீங்க அவரை பார்க்கிறீங்க. ஆமா எதுக்கு இந்த கோபம் - உங்க டிவிஷன் மேனேஜரை அழகாக போட்டோ எடுத்ததுக்காகவா?
வருகைக்கு நன்றி நண்பரே...
Deleteஹலோ... ஒழுங்கா பேசனும் பூவோடு (கில்லர்ஜி) சேர்ந்த நாறும் (டிவிஷன் மேனேஜர்) மணம் பெறுகிறது தெரியுதா ? கில்லர்ஜியாலதான் அவரு வலைச்சரத்துல.....
இப்ப, பாருங்க தில்லை அகத்தார் வந்து ‘’ஆமா’’ அப்படினு சொல்வாங்க....
மதிப்புக்குறியவர்களின் அறிமுகம்...
ReplyDeleteஅருமை அண்ணா.
நன்றி நண்பா... தங்களது தளம் வருகிறேன் நேரமில்லை சாரி...
Deleteஇன்று நீங்கள் அறிமுகப்படுத்திய தஞ்சையம்பதி துரை செல்வராஜூ, அய்யா G.M.B, புலவர் அய்யா இராமானுஜம், கவிஞர் எஸ்.ரமணி, சகோதரி டீச்சர் ராஜலஷ்மி பரமசிவம், அய்யா பழனி. கந்தசாமி, ஆசிரியர் முத்துநிலவன், கவியாழி கண்ணதாசன் மற்றும் சகோதரி மஞ்சுபாஷிணி – ஆகிய அனைவருமே சிறந்த வலைப்பதிவாளர்கள். நான் இவர்கள் அனைவரது படைப்புக்களையும் படிக்கும் வாசகர்களில் நானும் ஒருவன்.
ReplyDeleteத.ம.11
வருக நண்பரே... தங்களசு கருத்துரைக்கு நன்றி.
Deleteஹலோ! மிக மிக அருமையான அறிமுகங்கள்! பெருந்தலைகள்! மிகச் சிறந்த வலைப்பதிவர்களும் கூட! ஆரம்பமே அமர்க்களம் ஜி! கலக்குங்கள்!!! வாழ்த்துக்கள்!
ReplyDeleteசரி உங்க அந்த வாத்தியாரிடம் நீங்கள் கேட்ட கேள்வி மிகச்சரியே! அவருக்குத்தான் புரியல...என்ன செய்ய.....
முதல்மரியாதை தலைப்பு அருமை!!
வருகைக்கு நன்றி நண்பரே..... பத்து விரலும் ஒரே மாதிரியா இருக்கு... தலைப்பு அருமையா ? எதுக்கு ? கில்லர்ஜிக்கா ? வலைச்சரத்துக்கா ? எனக்கிட்டே தெளிவா பேசணும்....
Deleteஅருமையான அறிமுகங்கள். நான் தொடர்ந்து படிக்கும் பதிவர்கள்.....
ReplyDeleteசின்னப் புள்ளைய இப்படியா அடிப்பாங்க! :(
தொடந்தால் சந்தோஷம் நண்பரே..... ஆமா அதுவும் எப்படி... சட்டீர்.......னு.
Deleteஎன்னது பிள்ளையாரு பெரியபாவா? அப்பா சிவனும், பார்வதியும் தாத்தா பாட்டியா? புதுக் கதையா இருக்கே!!
ReplyDeleteஉங்க முதலாளியோட ஃ போட்டோ மிரள வைக்கிறது, உங்க கிடா மீசை பாதி தெரியவில்லை, அங்கே வைக்க விடுகிறார்களா?
வருக நண்பரே பழைய கதைதான்...
Deleteஉங்க கிடா மீசை பாதி தெரியவில்லை, அங்கே வைக்க விடுகிறார்களா ?
நண்பரே வெளிச்சம் சரியாக இல்லாததால் எனது முகம் சரியாக தெரியவில்லை... நாளைய பதிவை முடித்து விட்டேன் நாளை மறுதினம் செவ்வாய் கிழமை பாருங்கள் நவம்பர் 25 அன்று எடுத்த புகைப்படத்தை இடுகிறேன். நன்றி.
பதிவுலக ஜாம்பவான்களுடன் என்னையும் இணைத்து
ReplyDeleteஅறிமுகம் செய்தது மிக்க மகிழ்வளிக்கிறது
மிக்க நன்றி
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
கவிஞரே ஜாம்பவானே இப்படிச்சொன்னால் ? தொடரவும் நன்றி.
Deleteஅறிமுகங்கள் அருமை...
ReplyDeleteத ம பதினைந்து
நன்றி தோழர்.
Deleteபல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பரிதாபத்திற்குரிய பாதிரியார் எங்கள் அறை நண்பர்களிடம் நட்பாகப் பழகினார்.
ReplyDeleteஇயேசு நமெக்கெல்லாம் அப்பா என்று சொல்லிவிட்டு என் நண்பர்கள் இருவரிடம் அவர் பட்ட பாடு ...
பாதிரியார் அறையைக் காலி செய்து விட்டார்.
பசங்கள் இருவரும் இப்போது அட்வோகேட்ஸ் ...
வருக தோழரே,,, கடவுள் மட்டுமா அப்பா ? மனிதனையே,, அப்பாச்சாமி என்கிறதே... குருட்டு சமூகம்.
Deleteஅனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
ReplyDeleteநம்மாள்வாரின் வருகைக்கு நன்றி.
Deleteஅன்புள்ள ஜி,
ReplyDeleteஆரம்பமே அமர்க்களமாக இருக்கே...! தங்களின் முதல்மாரியாதை யாருக்குச் செலுத்தப்படுகிறது என்பதைக் கொடுவாய் மீசைக்கார நண்பரே நன்றாகச் சொன்னீர்கள். பதிவிக்காரனுக்குத்தான் எல்லாப் பவிசும்.
பிள்ளையார் பெரியப்பா என்றால்...(பிள்ளையார் சுளிபோட்டு) ஆரம்பித்து இருக்கிறீர்கள். முருகன் சித்தாப்பா என்கிற முறைமாறாமல் சரியாகத்தான் சொல்லி இருக்கிறீர்கள்.... குருந்தன் வாத்தியார் முறையில்லாமல்தான் அடித்திருக்கிறார்! இப்ப என்றால் அப்படிச் செய்திருக்க முடியுமா? நீதிமன்றம் சென்றிருப்பீர்கள்...! அல்லது அவரைக் காது மருத்துவமனையில் படுக்க வைத்திருப்பீர்கள்! பரவாயில்லை... அவருக்கு அந்தக் காலம் நல்ல காலம்!
காணொளியில் சிலருக்கும் பலருக்கும் மதம்பிடித்த விச(ய)த்தை எம்மதமும் சம்மதம் என்று நன்றாகக் காட்டி இருந்தீர்கள்.
திருவாளர்களின் திருத்தளங்களைப் பற்றி....
திரு.துரை செல்வராஜு,
திரு.பெரியார் G.M.B.
திரு.புலவர் இராமாநுசம்
திரு.ரமணி.S
திருமதி.ராஜலட்சுமி பரமசிவம்
திரு.பழனி கந்தசாமி
கவிஞர்.நா.முத்து நிலவன் அய்யா
திரு.கவியாழி கண்ணதாசன்
திருமதி.மஞ்சுபாஷிணி சம்பத்குமார்
இவர்களின் வலைத்தளம் பற்றிட வாய்ப்பு கொடுத்து... அவர்களைப் பற்றி நல்ல பல கருத்துகளை வழங்கியது அருமை.
அரபு எமிரேட் 43ஆவது தேசியதினவிழவில் கம்பீரமாக நிற்கிறீர்கள். தங்களுக்கு சல்யூட்!
தொடர்ந்து அசத்துங்கள்...!
பாராட்டும்... வாழ்த்துகளும்.
நன்றி.
மணவையாரின் வருகைக்கும், நீண்ட கருத்துரைக்கும் மனமார்ந்த நன்றிகள் //பிள்ளையார் சுளி// சரியாக கணித்தமை கண்டு மனம் மகிழ்ச்சியடைகிறது.. வலைச்சரத்தின் நான்காவது பதிவாகி விட்டது மதுரைக்கு தூது சொல்லி விட்டவரின் வரவைக் காணவில்லையே...
Deleteவாருங்கள் நண்பரே... தொடர்ந்து...
அருமையான ஆரம்பம். ஆரம்பமே இப்படியென்றால் அடுத்தது எப்படியோ?
ReplyDeleteவருக நண்பரே... யாமறியோம் பராபரமே....
Deleteவணக்கம் சகோதரரே!
ReplyDeleteதங்கள் பாணியில், ஆரம்பமே சிறப்பான முறையுடன் கலக்க மதிப்புக்குரியவர்களின் பதிவுகளை அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். பாராட்டுடன் வாழ்த்துக்கள்.
இனியும் புதிதான முறையில் ஆசிரிய பணிச்சிறக்க என் வாழ்த்துக்கள்.
நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.
சகோதரியின் தொடர் வருகையும் கருத்தும் வாழ்த்தும் கண்டு மகிழ்ச்சி.
Deleteமுருக பக்தையான எனக்குப் பிடித்த(சித்தப்பா) உறவைக் கொண்டு முருகனை அழைக்கலாம் போலிருக்கிறதே ! மிக்க மகிழ்ச்சி. பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் நானும் அறிமுகப்படுத்தப்பட்டதற்கு மகிழ்ச்சியடைகிறேன். உங்களுக்கு என் மேல் இருக்கும் மதிப்பு என்னை நெகிழ வைக்கிறது. உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.
ReplyDeleteவாழ்த்துக்கள் அசத்துங்கள் உங்கள் வலைச்சர ஆசிரியப் பணியை. மிக லேட்டாக வந்து கருத்திடுவதற்கு மன்னிக்கவும் .
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்.....
ஒரேயொரு டவுட்.
எல்லோர் புகைப்படத்திற்கும் ஒரு பெயர் இட்டிருக்கிறீர்களே . எனக்கும் லிமா என்றிருக்கிறதே? அது என்ன என்று விளக்குவீர்களா?
வாருங்கள் அம்மா, ஜாம்பவான்களுடன்தான் ஜாம்பவான்களை இணைக்க முடியும் தங்களின் வாழ்த்துரை கண்டு மகிழ்ச்சி மன்னிப்பு எதற்க்கு ?
Deleteஒரேயொரு டவுட்.
இந்தமாதிரி, நண்பர் பகவான்ஜி மாதிரி கேள்வி கேட்பது எனக்கு பிடிக்கும் காரணம் கூர்ந்து கவனித்து இருக்கிறீர்கள் என்பது எனக்கு தெரிந்து விடுகிறதே... தயவு செய்து மேலே பகவான்ஜி அவருக்கு நான் சொன்ன பதிலை படிக்கவும்.
முதல் நாளிலே
ReplyDeleteபேரறிஞர்களின் அறிமுகம்
சிறந்த படைப்பாளிகளின் அறிமுகம்
நன்று
தொடருங்கள்!
வருகைக்கு நன்றி நண்பரே....
Deleteசகோ,ஒரேகலக்களா இருக்கு காணொளி சூப்பர்,
ReplyDeleteஅப்புரம் சித்தப்பா பெரிப்பா, அப்புரம் புதிர் வேரு
தக்க வலைத்தள அரிமுகம் அடி தூள் தான் போங்கோ!!!!
கலக்குனாத்தானே,,,, வருவீங்க நன்றி.
Deleteஆனந்தத்தை அள்ளித் தரும் அறிமுகங்கள்!
ReplyDeleteஅனைவருக்கும் குழலின்னிசையின் வாழ்த்து இசை
கேட்கட்டும்!
வசைபட வாழாது இசைபட வாழும் நண்பர் கில்லர்ஜிக்கு
ஆசை தொட வாழ்த்த்துகிறேன். தொடர்க !
புதுவை வேலு
யாதவன் நம்பி வருகைக்கு நன்றிகள் கோடி
Deleteடீச்சர் எனக்கு ஒரு டவுட்னு சொன்னதுக்கா ..இப்படி ....ஆமா அப்பவே நீங்க அப்படித்தானா...எங்க ஊரு சகோதரரும்...நன்றி சகோ...
ReplyDeleteநான் அப்பவே இப்படி இல்லை எப்பவுமே இப்படித்தான் நன்றி
Deleteகலக்குங்கள்
ReplyDeleteகலக்கிருவோம் நண்பா....
Deleteஅட பல பேர் நமக்குத் தெரிஞ்சவங்க... அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteவருக தங்கனின் கருத்துரைக்கு நன்றி
Delete