நிறைவு முகம். ( ஏழாம் நாள் )
ஆளுமைகளின் வலைப்பூக்கள் :
வணக்கம். இன்று ஏழாம் நாள். என்னுடன் பயணித்த வலைச்சரத்திற்கு மிக்க நன்றி. புதுக்கோட்டை கணினிப் பயிலரங்கம் சார்ந்த செய்திகளை முன்னொரு இடுகையில் கூறியிருந்தேன். நாங்கள் வலைப்பூவில் இவ்வளவு அளவளாவக் காரணம் எங்களுக்குக் கருத்தாளர்களாக வந்த வலைப்பூ ஆளுமைகள் எனலாம். இவ்விறுதி நாளில் அவர்களை அறிமுகப்படுத்துவது உங்களுக்குப் புதிதில்லை எனினும் நன்றியின் மேல் எங்களுக்கு என்றுமே மிகுந்த மதிப்புண்டாகையால் அவர்களின் பெருநகர்வுகளைப் பற்றி அறிமுகம் செய்வதில் பேருவகை அடைகிறேன்.
மாற்றுச்சிந்தனை முகம். மனிதர்களை நேசிக்கத்தெரிந்த கலை. வாசிக்கத் தெரிந்த கண்கள். இவரின் வரிகளில் தெரியும் இயல்பும் யாருக்கும் புலப்படாத இன்னும் கொஞ்சமும்.
வேலையில்லை
மொடாக்குடியன்
கஞ்சா உறிஞ்சி
பொறுக்கி
எல்லாம் சரி
யாரிடம் இல்லை
சரியாயிடும்
பையன் நல்லவனா சொல்லுங்க?
வாழ்வியல்பின் யதார்த்தங்கள் திரு. எட்வினுக்கே வந்த கலை.
http://www.eraaedwin.com/
என்னுடைய வலைப்பூவின் ஒரே வாசிப்பாளர் இவர் மட்டும் தான். ஒரு கணித ஆசிரியராக இருக்கும் இவரின் தமிழறிவு காணவியலாதவை. இவரின் வலைப்பூ சார்ந்த புத்தகத்தை வாசித்திருக்கிறேன். எழுத்தின் வல்லமை இவரிடம் இயல்பாய் அமைந்திருப்பது இவருக்குக் கிடைத்த பெரும் வலிமை. இவர் எனக்கு முன்னெழுத்து.
இராமநாதபுரம் சீமையும், சிவகங்கைச் சீமையும் இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் கொடுமைகளை, வேதனைகளைத் தாங்கள் அறிவீர்கள். எனது கணவரை வஞ்சகமாக, வெள்ளையர்கள், மறைந்திருந்து கொன்றதையும் தாங்கள் அறிவீர்கள்.
என்னைப் பற்றித் தாங்கள் அறிந்ததை விட, தங்களைப் பற்றி அதிகமாகவே நான் அறிவேன்.
வேலு நாச்சியார் பற்றீ இவர் எழுதி வரும் பதிவு மிக்க சுவையாய் உள்ளது. ஒரு ஆசிரியனாய் இவரின் கருத்துகளை வகுப்பறையில் ஆழ்வதுண்டு.
http://karanthaijayakumar.blogspot.com/2014/12/5.html#more
.
வலைப்பூச் சித்தர். இது நாங்கள் வைத்த புனைப்பெயர். பேருந்து நிலையத்திலிருந்து நான் தான் இவரை பயிலரங்கக் கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் பெருமை எனக்குக் கிட்டியது, ( ஐயா நிலவனுக்கு நன்றி ) பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டோம். இவரின் வகுப்பை முழுமையாகக் கவனிக்க இயலவில்லை. என் வலைப்பூவைச் செப்பனிட இவரைத் தான் அழைத்துள்ளேன்.
அறிவற்றங் காக்குங் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா அரண் - அறிவுடைமை - 421 - இக்குறள்பாவிற்கு டிடி தரும் அறிவின் செய்தி வியக்க வைக்கிறது.
http://dindiguldhanabalan.blogspot.com/2014/12/Intellect-Part-1.html#more
மிகப்பெரிய எழுத்தாளுமை கொண்டவராக இருந்தாலும் துளிக்கூட அறிவின் கர்வம் இவரிடம் இருந்ததில்லை. முனைவர். அருள்முருகன் ஐயா அவர்களின் ஆய்வறிமுகத்தில் இவரின் எதிர்வினை கண்டு புருவம் உயர்த்தியதுண்டு. மிகவும் எளிமையானவர். எழுத்திலும் கூட ஆழமானவர். துளிர்விடும் விதைகள் பற்றிய இவரின் அறிமுகவெழுத்துகள் அருமை.
http://drbjambulingam.blogspot.com/
ஒரு கல்வி அதிகாரி இலக்கியத் தளங்களில் இயங்குவது மிக அரிதானது. ஏனெனில் இது நெருக்கடிகளின் நொடிகள் அதற்கெல்லாம் விதி விலக்காக சிலர் இலக்கியத் தளங்களில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நமக்கெல்லாம் பெருமை ( எங்கள் புதுகை மு.க.அ.போல் ) இவரின் எழுத்தாழம் என்னை வெகுவாய்க் கவர்ந்தது. வைரமுத்துவின் வரிகளை அவர் எடுத்துக்கூறி அதில் உடன்பாடிலா வரிகள் காணுமாறு அழைத்திருந்தமை அருமை.
இடைகாட்டி மெல்ல இளைய தனத்தின்
எடைகாட்டி இன்பம் இழைப்பாள்-மடையா
கொலைமகள் ஆகியே கொல்லுவாள் உன்னை
விலைமகள் ஆசை விடு
ஐயா , எனை உறுத்திய வரிகள் இதுவென எண்ணுகிறேன்.
http://www.tnmurali.com/2014/12/aids-awareness-vairamuthu-kavithai.html
ஒரு வங்கி அதிகாரி இவ்வளவு தமிழாளுமை கொண்டு இயங்குவது உயர்விலும் உயர்வு. இவரின் ஒளியோவியங்கள் என்னை மிகவும் ஈர்த்தது. கணக்கிலாக் கணக்குகள் பற்றிய அவரின் பதிவு விழிப்புணர்வின் நிழல். மிக்க நன்றி ஐயா.
http://tthamizhelango.blogspot.com/2014/12/blog-post_19.html
இதையும் சற்று நேரம் கிடைத்தால் பாருங்கள். ஒரு பெண் பதிவரின் மிகச்சிறந்த வலைப்பூ. இவர் எழுதிய வலைப்பூ பற்றிய புத்தகமே என் வலைப்பூவிற்கான விதை. நல்ல வலைப்பூக்களுள் இதுவும் ஒன்று.
http://sumazla.blogspot.com/
அன்புடன், சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி )
|
|
உங்களை நான் அறியேன் எனினும்., என் வலைப்பூவை இங்கே அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி நண்பரே...
ReplyDeleteமிக்க நன்றி அம்மா, உங்களின் புத்தகத்திலேயே என் வலைப்பூவினை அமைக்கக் கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி.
Deleteசுமஜலா அவர்களது வலைப் பதிவை அறிந்ததில்லை இப்போதுதான் அவரது "என் எழுத்து இகழேல்" வலைப் பக்கத்தை பார்வையிட்டேன். நல்ல அறிமுகத்திற்கு நன்றி
ReplyDeleteமிக்க நன்றி ஐயா,
Deleteஅறிமுகப் படுத்தியமைக்கு நன்றி நண்பரே
ReplyDeleteதம 2
தங்களின் இக்கூற்று மிக்க வியப்பளிப்பதாக உள்ளது நண்பரே, தாங்கள் ஊரறிந்த பூ. தங்களின் மணம் சொல்லித் தெரிவதில்லை. இது எங்களின் கடமையய்யா.
ReplyDeleteமிகச்சிறப்பான பதிவர்களை நிறைவாய் தொ(டு) குத்து அசத்தி விட்டீர்கள்! சுமஜ்லா அவர்கள் மட்டுமே இன்று எனக்கு புதியஅறிமுகம் சென்று பார்க்கிறேன்! வாழ்த்துக்கள்!
ReplyDeleteதங்களது வலைச்சரத்தில் என்னையும் ஒருவனாக அறிமுகப்படுத்தியதற்கும், நினைவூட்டலுக்கும் நன்றி அய்யா! எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் ஏற்பட்ட தொடர் பிரச்சினைகள் காரணமாக, உங்கள் வலைச்சரம் பக்கம் தொடர்ந்து வர இயலாமல் போய்விட்டது. மன்னிக்கவும். இனி உங்கள் வலைப்பக்கம் தொடர்ந்து வந்து விடுவேன்.
ReplyDeleteத.ம.4
மிக்க நன்றி ஐயா. தாமதமாக வந்தாலும் மிகுந்த நற்பின்னூட்டமிட்டிருக்கிறீர்கள். நன்றி.
Deleteஆளுமைகளின் வலைப்பூக்கள்
ReplyDeleteஎட்வின்
கரந்தை ஜெயக்குமார்
திண்டுக்கல் தனபாலன்
தமிழிளங்கோ
sumazla
முனைவர் ஜம்புலிங்கம்
டி.என்.முரளீதரன்
வாழ்த்துக்கள்!
புதுவை வேலு
வாழ்த்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
Deleteஎன்னை அறிமுகப்படுத்தியமையறிந்து மகிழ்ச்சி. என்பால் உள்ள அன்பின்பால் தாங்கள் என்னைப் பற்றி மிகைப்படுததி கூறிவிட்டீர்களோ என எண்ணுமளவு இருந்தது தங்களின் வார்த்தைகள். தங்களைப்போன்றோரின் நம்பிக்கையைக் காப்பாற்றி எழுத்துப்பணியைத் தொடர்வேன். தொடர்ந்து வலைப்பூ பதிவுகளில் சந்திப்போம். வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteஆளுமைகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஹை நானும் புதுகையை சேர்ந்தவள் தான். எங்க ஊர்ல இப்படி ஒரு நிகழ்ச்சி நடந்திருக்கா. சூப்பர்.
ReplyDeleteவாழ்த்துக்கள் அனைவருக்கும்.
ReplyDelete