என்னைப் பற்றி...
➦➠ by:
வலைச்சரம்
ஒரு சினிமாவில் வடிவேலு “நானும் ரவுடிதான்” என்று சொல்லிக்கொண்டு
போலீஸ் ஜீப்பில் போய் தானாக ஏறிக்கொள்வார். உலகத்தில் ரவுடி என்ற அங்கீகாரம் இருப்பதில்
பல சௌகரியங்கள் உண்டு.அது போல தமிழ் பதிவுலகத்தில் “நானும் பதிவர்தான்” என்று சொல்லிக்கொள்ள
ஒரு அளவுகோல் உண்டு. அவர் “வலைச்சரத்தில்” ஒரு முறையாவது ஆசிரியராகப் பணியாற்றியிருக்க
வேண்டும். வலைச்சரம் அவ்வளவு பிரபலமான பெயர் பெற்றுள்ளது. இந்த வாய்ப்பை எனக்களித்த
திரு சீனா ஐயா அவர்களுக்கும் வலைச்சர பொறுப்புக் குழுவிற்கும் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
நான் இந்தப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் முன்பே எனக்கு வரவேற்பு
தெரிவித்துள்ள அனைத்து நண்பர்களுக்கும், சகோதரி மஞ்சுபாஷிணி அவர்களுக்கும் என் நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
திரு.சீனா ஐயா பதிவுலகத்திற்கு ஒரு பெரும் தொண்டு ஆற்றி வருவது
அனைவரும் அறிந்ததே. வலைச்சரத்தைப் பற்றி கேள்விப்பட்டிராத தமிழ் பதிவர்கள் யாரும் இருக்க
முடியாது. அதை ஆரம்பித்தது பலரின் கை வண்ணமாக இருந்தாலும் அதை 2007 லிருந்து பொறுப்பேற்று
வெற்றிகரமாக நடத்தி வருவது திரு. சீனா ஐயா அவர்களே. அவர்களின் துணைவியாரும் அவர்களுக்கு
உறுதுணையாய் இருக்கிறார்கள்.
(திருப்பூர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தக வெளியீட்டு
விழாவில் 27-1-2013 ல் எடுத்தது.)
பல நாட்களுக்கு முன்பே இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக்கொள்ள
திரு. சீனா ஐயா எனக்கு அழைப்பு விடுத்தார். அப்போது எனக்கு கொஞ்சம் வசதிப்படாததால்
மறுக்க வேண்டியதாய் விட்டது. இப்போது மறுபடியும் அன்புடன் அழைப்பு விடுத்திருக்கிறார்.
இதையும் மறுத்தால் நான் பதிவராக இருக்க அருகதையற்றவனாவேன். ஆகையால் அவருடைய அழைப்பை
ஏற்றுக்கொண்டேன். இந்தப் பொறுப்பு டிசம்பர் 1 ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு, அதாவது
ஏழு நாட்கள்.
என்னைப் பற்றிய ஒரு அறிமுகப் பதிவு போடவேண்டுமென்பது ஒரு
மரபு. அதனால்தான் இந்தப் பதிவு. நான் 2009 ல் பதிவுகள் பதிய ஆரம்பித்தேன். என் நண்பர்
ஒருவர் ஆங்கிலத்தில் பதிவுகள் போட்டுக்கொண்டு இருந்தார். அதைப் பார்த்த நானும் பதிவுகள்
போட ஆரம்பித்தேன். முதலில் ஆங்கிலத்தில்தான் ஒரு சில பதிவுகள் போட்டேன். பிறகுதான்
தமிழ் பதிவுகளைப் பார்த்து நானும் தமிழ் பதிவுகள் போட ஆரம்பித்தேன். இது வரை ஏறக்குறைய
700 பதிவுகள் போட்டிருக்கிறேன்.
என்னுடைய தளத்தின் பெயர் “ மன அலைகள்”. முதலில் “சாமியின்
மன அலைகள்” என்று பெயர் வைத்திருந்தேன். என் பெயரிலேயே சாமி இருக்கிறதே, பிறகு தளத்தின்
பெயரிலும் “சாமி” எதற்கு என்று சாமியை நீக்கி விட்டேன். என் பெயரையும் மாற்றி “பழனி.கந்தசாமி”
என்று வைத்துக்கொண்டேன். பழனி என்பது என் தந்தை பெயரான பழனிச்சாமி என்பதின் சுருக்கம்.
மற்றபடி பழனிக்கும் எனக்கும் தொடர்பில்லை.
நான் கொஞ்சம் அதிக சுயமரியாதை அதாவது தலைக்கனம் கொண்டவன்.
யாரிடமும் எந்த தயவிற்கும் போக மாட்டேன். இந்த பதிவு போட ஆரம்பித்ததும் யாரையும் உதவி
கேட்கப்போகவில்லை. நானே தூக்கம் விழித்துக் கற்றுக்கொண்டேன். அடுத்ததாக மிகுந்த சோம்பேறி.
ஆமையும் முயலும் கதை கேட்டிருப்பீர்கள். அதில் வரும் முயல் போல திடீரென்று வேகம் கொள்வேன்.
பிறகு படுத்துக் கொள்வேன்.
என்னுடைய இந்த கல்யாண குணத்தினால் இந்த ஆசிரியப் பொறுப்பு
வகிக்கும்போது பல குற்றங்கள் புரியும் வாய்ப்புகள் உண்டு. அதில் முக்கியமாக பல நல்ல
பதிவர்களை அறிமுகப் படுத்தாமல் போவது. என் வயதைக் கருத்தில் கொண்டு என் குற்றங்களைப்
பொறுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன். அப்படிப் பட்ட பொறுமை இல்லாதவர்கள் எனக்கு
“சீக்கிரமே மோக்ஷப் பிராப்திரஸ்து” என்று சாபம் கொடுத்தால் ஜன்ம சாபல்யம் அடைந்து என்றென்றும்
(அதாவது மறுபிறவிகளிலும்) நன்றியுடையவனாக இருப்பேன்.
ஆனாலும் இந்த வலைச்சர ஆசிரியர் பொறுப்பை தூங்காமல்@ நிறைவேற்றி
விடலாம் என்ற நம்பிக்கையில்தான் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். உங்கள் ஆதரவுடன்
இந்த நோக்கத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்.
@ தூங்குக
தூங்கிச் செயற்பால தூங்கற்க
தூங்காது செய்யும் வினை - குறள்
|
|
எனது முதல் வருகை.. தமிழ் வலைப்பூக்கள் படித்த அனுபவம் உண்டு. தங்களது வலைப்பூவை படித்திருக்கிறேன்.
ReplyDeleteதங்களது வலைச்சரப் பணி சிறக்க வாழ்த்துகள்...! தங்களின் அனுபவம் ஒன்றே போதுமே.... ஏழு நாட்கள் என்ன? எழுநூறு நாட்களையும் ஓட்டிவிடலாம்...
வாழ்த்துகள் சார்..!
முதல் வருகைக்கு மிக்க நன்றி தங்கமணி.
Deleteதங்களது வித்தியாசமான அறிமுகம் அறிந்து மகிழ்ச்சி. தொடர்ந்துஉங்களது பதிவுகளை ஆவலோடு காணக் காத்திருக்கிறோம்.
ReplyDeleteநன்றி, டாக்டர்.
Deleteதங்களது அறிமுகம் அருமை.வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி, உமையாள் காயத்ரி.
Deleteபிரச்சனைகளை சமாளிக்கும் திறன் உங்களுக்குண்டு. வெற்றிபெறுவீர். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி, ஜிஎம்பி
Deleteஅருமையான அறிமுகம் ஐயா :) அதென்ன இவ்ளோ சிரமமா வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்பது? எளிது தான் ஐயா... :) பழக பழக நீங்களே சொல்வீங்க பாருங்க.. உங்களை யாருமே திட்டமாட்டாங்க. அன்போடு வாழ்த்தவும் உங்களுக்கு உதவவும் செய்வாங்க ஐயா... எப்போதும் புன்னகை முகத்துடன் வெற்றிகரமாக உங்க ஆசிரியர் பணி தொடர மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள் ஐயா !!
ReplyDeleteத.ம.1
சிரமமில்லை, மஞ்சு. மிக்க கவனத்துடன் திரு சீனா ஐயா நடத்தி வரும் வலைச்சரப் பதிவுகள் என்னால் தாமதமாகிறதே என்ற ஆதங்கம்தான். நான் தற்சமயம் என் வயது காரணமாக எந்தப் பொறுப்புகளையும் ஏற்பதில்லை. காரணம் அந்தப் பொறுப்பை ஒழுங்காக நிறைவேற்ற வேண்டுமே, அதற்கு என் உடலும் உள்ளமும் ஒத்துழைக்குமா என்ற பயமே காரணம்.
Deleteதிரு சீனா ஐயா மேல் உள்ள அன்பினால் இந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டேன். அது இப்படி தாமதமாகிறதே என்ற கவலை வந்து விட்டது. அவ்வளவுதான்.
இதுக்கெல்லாம் கவலைப்பட்டா ஆகுமா ஐயா? :) எவ்ளவோ பார்த்துவிட்டோம்.. இது செய்துட மாட்டோமா என்ன? சரி சரி போட்டோ நன்னா இருக்கு. ஆனா சிரிப்பு மிஸ்ஸிங்.. நாளை போட்டோவில் சிரிப்பு இல்லன்னா மிரட்டுவேன் ஆமாம் சொல்லிப்புட்டேன் :) இவ்ளோ பயப்பட்டா எப்படி ஐயா :) கவலை எல்லாம் தூரமா வெச்சுட்டு சந்தோஷமா தொடருங்க.. நாங்கல்லாம் இருக்கோம்ல உங்க கூட.. அப்புறம் என்ன ஐயா :)
Deleteஐயா அவர்களை வரவேற்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் இந்தவாரம் நல்ல விதமாக போகுமென்பதில் ஐயமில்லை ஐயா.
ReplyDeleteஅன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
நன்றி, கில்லர்ஜி.
Deleteமனமார்ந்த வாழ்த்துகள் ஐயா....
ReplyDeleteத.ம. +1
நன்றி, நாகராஜ்
Deleteவழக்கம் போல சுவாரஸ்யமாக நகைச்சுவையுடன் டாப் கியரில் தொடக்க நாளை தொடங்கியமைக்கு நன்றி. வருக வருக என்று வரவேற்கிறேன்.
ReplyDeleteத.ம.3
நன்றி, இளங்கோ.
Deleteவாருங்கள்.. உண்மையைச் சொல்லி அறிமுகப்படுத்திக்கொண்டது சிறப்பு. நீங்கள் சொல்லியதுபோல் தலைக்கனம் கொண்டவராகத்தெரியவில்லை. அன்புள்ளம் கொண்டவராகத்தான் தெரிகிறீர்கள். வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅவரவர்கள் தலைக்கனம் அவரவர்களுக்குத்தான் தெரியும் இல்லையா விச்சு. என் தலை அநேகமாக ஐந்து கிலோ இருக்குமென்று நினைக்கிறேன். அன்பிற்கு நன்றி.
Deleteம்ம்ம். பொளந்து கட்டுங்க....ள்...
ReplyDeleteஎங்க? வந்து என்ன பேசுரியள்... நீங்க நீங்கதான்...
வாங்க. நன்றி.
Deleteஅன்பின் ஐயா அவர்களுக்கு வணக்கம்..
ReplyDeleteதங்களது வலைச்சரப் பணி சிறக்க வேண்டுகின்றேன்!..
தங்களின் அனுபவத் தொகுப்புகளை அறிய ஆவலுடன் காத்திருக்கின்றோம்!..
நன்றி, துரை செல்வராஜு
Deleteசுருக்கமான சற்றே நகைச்சுவையான சுய அறிமுகம்.
ReplyDeleteதங்கள் பதிவுகளின் இணைப்புகள் இல்லையே?
அன்பின் திரு கந்த சாமி அய்யா - தாங்கள் இப்பதிவில் எழுதி உள்ள படி - திங்கள் வரவேண்டிய ரெகுலர் பதிவு செவ்வாய் காலையில் வரும்.படி செய்க. இப்படியே மற்ற ஆறு நாட்களுக்குப் போடவேண்டிய ஆறு பதிவுகளையும் செவ்வாய் முதல் நாளுக்கு ஒன்றாக ஞாயிறு வரை போட்டு விடுங்கள். அவ்வளவு தான்.
ReplyDeleteநல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
அப்படித்தான் திட்டமிட்டுள்ளேன் திரு சீனா ஐயா. தங்கள் வழிகாட்டுதலுக்கு நன்றி.
DeleteALL THE BEST SIR. CONGRATS. CARRY ON.
ReplyDeleteநன்றி, வைகோ.
Deleteஅன்பின் கந்த சாமி ஐயா
ReplyDeleteநீண்ட நாட்கள் ஆசையான வலைச்சர ஆசிரியப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் -நட்புடன் சீனா
நன்றி, திரு சீனா அவர்களே.
Deleteஉண்மையை ஒத்துக் கொள்பவர்கள் மிகவும் குறைவு தான்... அசத்துங்க ஐயா...
ReplyDeleteவலைபதிவர்களை ஊக்குவிக்க வலைச்சர ஆசிரியப் பொறுப்பு ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்- வாழ்த்துக்கள்
ReplyDeleteமதுரை சித்தையன் சிவ்க்குமார்
சுவாரஸ்யமான அறிமுகம்! வாழ்த்துக்கள்! கலக்குங்கள்!
ReplyDeleteUngalai vaaltha eanaku vaithu illai. nandri pala.
ReplyDelete