அனுபவத்தின் பாடம் :
அனுபவத்தின் பாடம் :
சிரந்தாழ்த்திய நன்றியும்
தவற்றுக்குப்
பொறுத்தருளக் கோரும்
விண்ணப்பமும்.
இனித்த சுமை.
இரவில் கண்விழித்தஇமை
சோர்விலாச் சீர்மை...
மறக்கவியலவில்லை,
இவ்வனுபவப் பாடம் !
நெகிழ்ந்தது மனமும்
விழித்தது என்னறிவும், இரவும்..
பயணங்களில் ஏற்பட்ட
சுகங்களின் அலுப்பு.
பின்னூட்டமிட்ட
பெருந்தகைகளுக்கு
பெருநன்றிகள்.
குறிப்பாக
என் முதல் நண்பர்கள்
கில்லர்ஜீ,
தளிர் சுரேஷ்
பெரிவை சே.குமார்
துரை செல்வராஜீ
சொக்கன் சுப்பிரமணியன்
உமையாள் காயத்ரி,
நடன சபாபதி,
ஐயா சீனா
மற்றும் உள
சம்பத்குமாரும்
புதுவை வேலுவும்..
முதல் வரிசையில் நின்ற
மேன்மைக்கு
மனமுவந்த நன்றி.
என் முன்னெழுத்துகள்
ஐயா நிலவனும்
மகாசுந்தரும்.
என் தடங்களில்
பயணித்துச்
சொல்லனுபவம் கூறியமைக்குச்
சிரம் தாழ்ந்த நன்றி.
என்
வழமை இதயங்களின்
அன்புணர்வுகள்
ஊமைக்கனவுகள் ஜோசப் விஜீ
கரந்தை ஜெயக்குமார்
முனைவர் ஜம்புலிங்கம்
மைதிலி கஸ்தூரிரெங்கன்
மாலதியும்
என் தடங்களில்
இளைப்பாறிச் சென்றமைக்கு
அளப்பரிய நன்றிகள்.
இவர்களுடன்
என்னை நேர்படுத்திய
கஸ்தூரிக்கும்
தனபாலனுக்கும்
உயர்ந்த நன்றிகள்.
அனுபவம் புதுமை
ஆனாலும் கற்றபெருமை,
இன்னும் தொடரச் செய்யும் சீர்மை
என்றும்
மனதைவிட்டு அகலாததிண்மை.
மறுபடியும் வாய்ப்புக்காய் ஏங்கும்
முறைமை !
மிக்க நன்றியும் பெருமகிழ்வும்
ஐயா
தமிழ்வாசி பிரகாஷ்
பொறுப்பாளர்
சீனா
நெகிழவைத்த
புதிய பதிவர்களின் பதிவும்
வலைச்சர வாசகர்களுக்கும்…
சிரந்தாழ்த்திய நன்றியும்
தவற்றுக்குப்
பொறுத்தருளக் கோரும்
விண்ணப்பமும்.
அன்புடன்,
சி.குருநாதசுந்தரம்
வலைப்பூ : பெருநாழி.
|
|
வாழ்த்துக்கள் நண்பரே
ReplyDeleteவலைச் சரப் பணிக்கும்,
நல்லாசிரியர் விருது பெற்றமைக்கும்
வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ஐயா.
Deleteதம 1
ReplyDeleteமிக்க நன்றி.
Deleteபிரியா விடை பெற்றுச் செல்லும் சி.குருநாதசுந்தரம் ( பெருநாழி),
ReplyDeleteஅவர்களுக்கு புதுவை வேலுவின் செந்தமிழ் வணக்கங்கள்!
கண்ணிமைக்கும் நேரத்தில் கடந்து விட்டது ஏழு தினங்கள்!
கண்ணயராது நீங்கள் செயத பணி மிகவும் பாராட்டப்பட
வேண்டியதொரு
அரும்பணி அய்யா!
வலைச்சரத்தில் நீங்கள் தொடுத்த பூக்கள் யாவும் மதிப்பிற்குரிய மணம்வீசும்
பூக்கள் அய்யா!
மதிபெண்கள் என்னும் மாயையில் மயங்காமல்
மனதின் எண்ணத்தை எழுத்தாய் வடித்தீர்கள் !
புதுமை கண்டு புதுவை(வேலு) துடித்தேன்! தினமும் படித்தேன்!
அனுதினமும் படி "தேனை" அள்ளிக் குடித்தேன்.
தங்களிடமிருந்து பிரியா விடை பெறுகிறேன்!
நன்றியுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
மிக்க நன்றி ஐயா. அரும்பணி அருமையென்று வாழ்த்தியமைக்கும், என் எழுத்துகளைக் கூர்மைப்படுத்துவதற்கும்.
Deleteசிறப்பாய் வலைச்சரத்தை தொடுத்து உங்கள் பணியை செவ்வனே செய்து விட்டீர்கள்! இதில் மன்னிப்பதெற்கு நண்பரே! வாழ்த்துக்கள்! உங்கள் வலைப்பக்கம் வரமுடியவில்லை! இன்று முயற்சிக்கிறேன்! நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி ஐயா. முதல் வருகையாய் வந்து பலமுறை எனக்கு ஊக்கம் அளித்துள்ளீர்கள். உங்களை அறிந்து கொள்ளச் செய்த வலைச்சரத்திற்கு மிக்க நன்றிகள் ஐயா.
Deleteசிறப்பாய் வலைச்சரம் தொடுத்த நண்பர் சி. குருநாத சுந்தரம் அவர்களுக்கு நன்றிகளும், வாழ்த்துகளும்.
ReplyDeleteஅன்புடன்
தேவகோட்டை கில்லர்ஜி அபுதாபி.
மிக்க நன்றி நண்பரே< தங்களைப் போல் இல்லாவிட்டாலும் ஒரு விழுக்காடாவது வலைச்சரத்தை நேர்த்தியாய்த் தொடுத்திருப்பேன் என்ற ஏற்றுக்கொள்ளலோடு விடை பெறுகிறேன். மிக்க நன்றி. தமிழ் மணத்தில் வாக்களித்து என்னை ஊக்கப்படுத்தியமைக்கு நெஞ்சார்ந்த நன்றி.
Deleteஅனுபவத்தின் பாடம் குருநாதர் சொல்ல
ReplyDeleteஇனிமைத் தமிழின்னும் ஏங்கும் - கனிதந்(து)
உவப்பத் தலைகூடி உள்ளப் பிரிதல்
அனைத்தாம் புலவர் தொழில்!
தங்களின் அன்பிற்கும் வலைச்சர ஆசிரியராய் உரிய நியாயம் செய்தமைக்கும் நன்றிகள் அய்யா!
நன்றி
த ம 3
Deleteமிக்க நன்றி ஐயா. இனி வலைப்பூப் பணிகளைத் திறம்படச் செய்ய விழைகிறேன்.
Deleteசிறப்பாக ஆசிரியர் பணியை முடித்தீர்கள்... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
மிக்க நன்றி ஐயா.
Deleteஇந்தப் பண்பு மாண்பு...
ReplyDeleteவாழ்த்துக்கள்
த ம கூடுதல் ஒன்று
கடைசியில் வாக்களித்தமைக்கு நன்றி சகோ.
Deleteஅன்புடையீர்..
ReplyDeleteசிறப்பாக வலைச்சர ஆசிரியர் பணியினை நிறைவேற்றினீர்கள்..
என்றும் நினைவில் கொள்ளும்படியான தொகுப்புகள்..
சில நாட்களாக வேலைப்பளு அதிகமானது..
உரிய காலத்தில் தளத்திற்கு வர இயலாத சூழ்நிலை..
என்னையும் நினைவு கொண்டு பதிவில் குறித்து மகிழ்ந்த தங்கள் பெருந்தன்மைக்கு மிக்க நன்றி..
மீண்டும் ஒரு இனிய வேளையில் சந்திப்போம்.. நல்வாழ்த்துக்களுடன்!..
மிக்க நன்றி ஐயா.
Deleteசிறப்பான, நுணுக்கமான பணி சார்....ஊருக்கு சென்றுவிட்டபடியால் தொடர்ந்து வரமுடியவில்லை மன்னிக்கவும்..என்னையும் இங்கு குறிப்பிட்ட நட்புக்கு என கைமாறு செய்யபோகிறேன்:)) மிக்க நன்றி சார்!
ReplyDeleteமிக்க நன்றி சகோ.
Deleteஉங்கள் நன்றியுரையில் எனக்கும் இடம்...
ReplyDeleteநன்றியும் வாழ்த்துக்களும்...
ஆமாம் ஐயா. தங்களின் தொடர்ந்த வருகை எனக்குப் பேரூக்கமாக இருந்தது. மிக்க நன்றி.
Deleteநிதானமாக நெஞ்சில் நிற்கும் வகையில் சிறப்பாக ஆசிரியப்பணியை மேற்கொண்டு சிறப்பாக நிறைவு செய்துள்ளமைக்கு மனமார்ந்த பாராட்டுகள். தங்களது எழுத்துக்கள் மென்மேலும் சிறக்க எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பதிவுகளின் ஊடாக நட்பைத் தொடர்வோம்.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா. தங்களின் வாழ்த்து எனக்கு மிக்க நல்லூட்டமாக அமைந்துள்ளது.
Deleteமீண்டும் சந்திப்போம்
ReplyDeleteஅன்புடன்
வர்மா
மிக்க நன்றி ஐயா. வய்ப்பிருப்பின் சந்திக்கலாம்.
Delete