புதிய பதிவர்கள் - ஏழாம் நாள்
➦➠ by:
புதிய பதிவர்கள்
வலைச்சரம் ஏழாம் நாள் 7-12-2014 ஞாயிற்றுக்கிழமை
புதிய பதிவர்கள்
பதிவுலகத்திற்கு இந்தப் பதிவர்கள் பழையவர்களாக இருக்கலாம்.
ஆனால் எனக்கு இவர்கள் புதியவர்கள். அதனால் இந்தப் பதிவிற்கு இந்தப்பெயர் வைத்தேன். இந்தப்
பதிவர்கள் இதற்காக என்னை தூக்கில் போடமாட்டார்கள் என்று நம்புகிறேன்.
1.தளிர்
சுரேஷ்
இவர் 2010 ம் ஆண்டிலிருந்து பதிவிடுகிறார். இவருடைய பதிவுகளில் நல்ல சிந்தனைகள் விரவிக் கிடக்கின்றன. அவருடைய ஒரு பதிவில் அவர் எடுத்தாண்ட ஒரு கவிதை.
ஆவீன
மழைபொழிய இல்லம் வீழ
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே
அகத்தடியாள் மெய்நோவ அடிமை சாவ
மாவீரம் போகுதென்று விதைகொண் டோட
வழியிலே கடன்காரர் மறித்துக் கொள்ளச்
சாவோலை கொண்டொருவன் எதிரே செல்லத்
தள்ளவொண்ணா விருந்துவரச் சர்ப்பந் தீண்டக்
கோவேந்தர் உழுதுண்ட கடமை கேட்கக்
குருக்கேளா தட்சணைகள் கொடுவென்றாரே
இது ஒரு பழங்காலத்துக் கவிதை. ஆனாலும் மனிதன் படும் துன்பங்களை தெளிவாக எடுத்துரைக்கிறது.
நம் நாட்டின் பொது கழிப்பிடங்களின் நிலை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். உண்மை நிலைதான். ஆனாலும் மக்கள் இதை உணர்ந்த தாகத் தெரியவில்லை. அவ்வளவு ஏன், பல பணக்கார ர்களின் வீடுகளிலே கூட கழிப்பறைகளை சரியாகப் பேணுவதில்லை என்பது நடைமுறை உண்மை.
நம் நாட்டின் பொது கழிப்பிடங்களின் நிலை பற்றி ஒரு பதிவு போட்டிருக்கிறார். உண்மை நிலைதான். ஆனாலும் மக்கள் இதை உணர்ந்த தாகத் தெரியவில்லை. அவ்வளவு ஏன், பல பணக்கார ர்களின் வீடுகளிலே கூட கழிப்பறைகளை சரியாகப் பேணுவதில்லை என்பது நடைமுறை உண்மை.
இத்தகைய சிந்தனைப் பதிவுகள் இவர் தளத்தில் விரவிக் கிடக்கின்றன.
2. டாக்டர்
ஜம்புலிங்கம்
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்த்தில் தணிபுரியும் இவர் பதிவுகளில் ஆர்வமுள்ளவராய் இருக்கிறார். இவருடைய தளத்தின் முகப்புப் படமே இவருடைய கலை உணர்வைக் காட்டுகிறது.
தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்த்தில் தணிபுரியும் இவர் பதிவுகளில் ஆர்வமுள்ளவராய் இருக்கிறார். இவருடைய தளத்தின் முகப்புப் படமே இவருடைய கலை உணர்வைக் காட்டுகிறது.
லிங்க் : http://drbjambulingam.blogspot.com/
இவர் இன்னொரு தளமும் வைத்திருக்கிறார். சோழ நாட்டில் பௌத்தம் என்பது அதன் பெயர். இந்த தளத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக்காக எடுத்த முயற்சிகளையும் பயணங்களைப் பற்றியும் எழுதுகிறார்.
இவர் இன்னொரு தளமும் வைத்திருக்கிறார். சோழ நாட்டில் பௌத்தம் என்பது அதன் பெயர். இந்த தளத்தில் தன்னுடைய ஆராய்ச்சிக்காக எடுத்த முயற்சிகளையும் பயணங்களைப் பற்றியும் எழுதுகிறார்.
லிங்க் : http://www.ponnibuddha.blogspot.com/
இவ்விரு தளங்களும் பார்க்கவேண்டியவை. தஞ்சாவூர்க் கோவில்களின் சிறப்பை இங்கே பதிந்துள்ளார். புத்த கயா பற்றிய அரிய தகவல்களைத் தனிப்பதிவாகப் போட்டுள்ளார். பலருடைய தளங்களையும் பார்க்கிறார். அதோடு அவைகளில் பின்னூட்டமும் தவறாது இடுகிறார்.
3. ரூபன்
இவரது தளம் ;
லிங்க் : http://tamilkkavitaikalcom.blogspot.com/
இவருடைய "நிறைவேறாத எதிர்பார்ப்புகள்" என்கிற சிறுகதை ஒரு உணர்ச்சிகளின் சங்கமம். மீளாத்துயரமும் ...ஆறாத்துயரமும் என்ற கவிதை நம் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
இவருடைய "நிறைவேறாத எதிர்பார்ப்புகள்" என்கிற சிறுகதை ஒரு உணர்ச்சிகளின் சங்கமம். மீளாத்துயரமும் ...ஆறாத்துயரமும் என்ற கவிதை நம் கண்களிலும் கண்ணீரை வரவழைக்கிறது.
4. நிஜாமுத்தீன்
இவர் தளத்தின் முகப்பு
இவர் தளத்தின் முகப்பு
லிங்க் : http://nizampakkam.blogspot.in/
இவரின் பதிவுகள் சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன. நாம் சாப்பிடும்போது அதில் கருப்பு அரிசிசாதம் இருந்தால் அதை எடுத்து வெளியில் போடுவோம். அதற்கு ஒரு கதை சொல்கிறார் பாருங்கள்.
சுஜாதாவிடம் சில கேள்விகள் பதிவு நல்ல நகைச்சுவை. இவரின் குண்டப்பா-மண்டப்பா சீரிஸ் பதிவுகளைப் படியுங்கள். சிரித்து வயிறு வலித்தால் நான் பொறுப்பில்லை.
5. அ.பாண்டியன்
இவர் தளத்தின் பெயர் : அரும்புகள் மலரட்டும்
லிங்க் : http://pandianpandi.blogspot.com/
மணப்பாறையைச் சேர்ந்த இவர் கவிதை, கட்டுரை, ஆன்மீகம் ஆகிய பல பொருள்களில் பதிவு இடுகிறார்.
உலகம் சுருங்கி விட்டதா என்ற கேட்டு நம் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதைப் பாருங்கள்.
மணப்பாறையைச் சேர்ந்த இவர் கவிதை, கட்டுரை, ஆன்மீகம் ஆகிய பல பொருள்களில் பதிவு இடுகிறார்.
உலகம் சுருங்கி விட்டதா என்ற கேட்டு நம் சிந்தனைகளைத் தூண்டிவிடுவதைப் பாருங்கள்.
6. தனிமரம்
லிங்க் : http://www.thanimaram.org/
ஒரு வித்தியாசமான பதிவர். இவரையும் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.
7.புதுவை
வேலு
ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆனால் அதன் பொருள் நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? வேலுவின் இந்தப்பதிவைப் பாருங்கள்.
8.சொக்கன் சுப்பிரமணியன்
தளத்தின் பெயர் : உண்மையானவன்
அமெரிக்காவில் இருக்கும் இவர் தன்னுடைய அமெரிக்க
அனுபவங்களை சுவையாக பகிர்கிறார். அங்கே இவரை வைத்து இவர் நண்பர் எடுத்திருக்கும்
போட்டோவைப் பாருங்கள்
“காதல் - எதிர் வீட்டு நிலவு” எனும்
தலைப்பில் ஒரு கற்பனைக் காதலை உருவகப்படுத்தியுள்ளார். அதற்கு இவர் போட்டிருக்கும் படம் சூப்பர்.
9. உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...
இந்த தளத்தின்
உரிமையாளர் திருமதி உஷா ஸ்ரீகுமார் அவர்கள்.
பிரமிடுகளைப் பற்றி
சிறு வயதில் இருந்து படித்து வந்திருக்கிறோம். ஆனால் இந்த பதிவில் இருக்கும் முழுமையான தகவல்களை பலரும் அறிந்திருக்க மாட்டார்கள்.
2012 ல் இருந்து பதிவுலகில் வலம் வரும் இவர் பல சப்ஜெக்டுகளைத் தொட்டுள்ளார்.
பிரதமர் மோடியின் சம்பளம் இதர படிகள் எவ்வளவு? இந்த விவரம் உங்களுக்குத்
தெரியுமா? இவர் தெரிந்து வைத்துள்ளார்.
PMO ஆபீசில் இவருக்குள்ள செல்வாக்கு என்ன என்பது புரிந்ததா?
10. துரை செல்வராஜு
தஞ்சையம்பதி என்ற தளம் இவருடையது
11.பசி.பரமசிவம்
படைப்பு உலகம் என்பது இவருடைய தளத்தின் பெயர். ஆன்மீகம் சம்பந்தமான கட்டுரைகள் எழுதுகிறார்.
இத்துடன் இந்த வார வலைச்சரப் பதிவுகள் முடிவடைந்தன.
|
|
நற்றமிழில் நான் உரைப்பேன் நன்றியினை
ReplyDeleteஅறிந்ததை அறிய தந்தவனுக்கு
அருந்தகையிடமிருந்து பாராட்டு!
புதிய பதிவர்கள் வரிசையில்
என்னையும் இணைத்தமைக்கு
வலைசரம் மற்றும் அய்யா!பழனி. கந்தசாமி அவர்களுக்கும்
நெஞ்சார்ந்த நன்றிகள்!
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.com
1.தளிர் சுரேஷ்
ReplyDelete2. டாக்டர் ஜம்புலிங்கம்
3. ரூபன்
4. நிஜாமுத்தீன்
5. அ.பாண்டியன்
6. தனிமரம்
7. புதுவை வேலு
8. சொக்கன் சுப்பிரமணியன்
9. உஷா ஸ்ரீகுமாரின் பார்வைகள்...
10. துரை செல்வராஜு
11.பசி.பரமசிவம்
அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!
புதுவை வேலு
சிறப்பான பதிவர்கள்.
ReplyDeleteஅனைவருக்கும் இனிய வாழ்த்துகள்..
வலைச்சரப் பதிவுகளில் அறிமுகம் செய்த பதிவர்களுக்கு நியாயமாக நான் செய்தி அனுப்பியிருக்கவேண்டும். சலிப்பினால் அதைச் செய்யவில்லை.
Deleteஆனால் நீங்கள் அந்தப் பணியைச் செய்ததிற்கு மிக்க நன்றி, அம்மா.
அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஐயா! புதியவர்களை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி
ReplyDeleteபசி பரமசிவம் புதியவர் அல்ல.ஏற்கனவே கடவுளின் கடவுள், 1000 ஒருபக்கக் கதை காமக் கிழத்தன் என்ற வலைப் பதிவுகளை எழுதி வந்தவர்தான். பிரபலமானவரும் கூட
வெற்றிகரமான ஏழாவது நாள்! வாழ்த்துக்கள்! இன்றைய அறிமுகங்களில் பசி பரமசிவம் தவிர மற்ற அனைவருமே எனக்கு அறிமுகம் ஆனவர்கள். இவர்களது பதிவுகளை அடிக்கடி படிப்பவன் நான்.
ReplyDeleteஉங்களுக்கு இருக்கும் வாசகர் வட்டத்திற்கு, இன்னும் ஒருவாரம் அப்படியே தொடரலாமே?
த.ம.2
இதுக்கே நாக்கு தள்ளிப் போச்சுங்க.
Deleteஅன்பின் ஐயா!..
ReplyDeleteபுதிய பதிவர்கள் எனும் தொகுப்பில் -
என்னையும் இணைத்து அறிமுகம் செய்தமைக்கு நன்றி..
இன்றைய அறிமுக நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்..
நன்றி, செல்வராஜு.
Deleteவலைச்சரத்தில் அறிமுகம் குறித்து - எனது தளத்தில் தகவல் அளித்த
ReplyDeleteஅன்பின் இனிய ஆன்மீகத் தென்றல் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கும்
வாழ்த்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!..
மனம் போன போக்கில் புதிய புதிய வலைப்பதிவுகள் தொடங்கி, ‘ஏடாகூடமாக’ எழுதிவந்த[வரும்] என்னை மதித்து அறிமுகப்படுத்திய தங்களுக்கு மிக்க நன்றி.
ReplyDeleteஎன்னைப் பற்றிக் கூடுதல் தகவல் அளித்த நண்பர் முரளிக்கு என் மனம் நிறைந்த நன்றி
நன்றி, பரமசிவம்.
Deleteஎனது தளங்களை அறிமுகப்படுத்தியமைக்கு நன்றி. இவ்வாறான அறிமுகம் மென்மேலும் தொடர்ந்து எழுத உதவும். நன்றி.
ReplyDeleteநன்றி. டாக்டர்
Deleteவணக்கம்
ReplyDeleteஐயா.
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்னுடைய வலைப்பூவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல... அத்தோடு தகவல் வழங்கிய இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றி...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி, ரூபன்
Deleteவணக்கம் ஐயா
ReplyDeleteவலையிலும் அனுபவத்திலும் மூத்த நண்பர்களோடு என்னையும் அறிமுகம் செய்தமைக்கு என் அன்பான நன்றிகள். அரும்பிய நட்பில் தொடர்ந்து இணைந்திருப்போம். வாழ்த்தி தகவல் தெரிவித்த ராஜராஜேஸ்வரி அம்மாவிற்கும் நன்றிகள்.
ReplyDeleteஇந்த வார வலைச்சர ஆசிரியர் பணியை சிறப்பாக செய்து முடித்தமைக்கு வாழ்த்துக்கள்! அறிமுகப்படுத்தப்பட்ட பதிவர்களில் பாதி பேர் எனக்கு முன்பே அறிமுகமானவர்கள். அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
நன்றி. நடனசபாபதி. உங்கள் சகோதரரின் ஸ்லைடு புரஜக்டர் உங்கள் குடும்ப வீட்டில் இருக்கிறதா என்று விசாரிக்கவும். என் கை வண்ணம் என்ன ஆயிற்று என்று தெரிந்து கொள்ளத்தான்.
Deleteஅருமையான அறிமுகங்கள்
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள். பெரும்பாலும் நான் படிக்கும் தளங்கள், ஒரு சிலரை தவிர அவர்கள் தளத்திற்கும் சென்று படிக்கிறேன். நன்றி.
வருகைக்கு நன்றி, கோமதி.
Deleteஇன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.....
ReplyDeleteவலைச்சரத்தில் வாரம் முழுவதும் சிறப்பாக பணியாற்றிய உங்களுக்கும் வாழ்த்துகள் பழனி கந்தசாமி ஐயா.
நண்பர்கள் டாக்டர் ஜம்புலிங்கம் துரை செல்வராஜு சொக்கன் சுப்பிரமணியன் தளிர் சுரேஷ் ரூபன் நிஜாமுத்தீன், அ.பாண்டியன் தனிமரம் பசி.பரமசிவம் அனைவருக்கும் எமது வாழ்த்துகள்
ReplyDeleteஅன்புடன் கில்லர்ஜி
என்னை அறிமுகப்படுத்தியமைக்கு மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஅறிமுகம் ஆன மற்ற நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
என் தளத்திற்கு வந்து, தகவல் தெரிவித்த இராஜேஸ்வரி அம்மாவிற்கு நன்றிகள்.
அறிமுகமான அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் ஐயா...
ReplyDeleteஇன்று எனது தளத்தினை அறிமுக செய்த டாக்டர் சாருக்கு நன்றிகள்!
ReplyDeleteதகவல் அளித்த இராஜராஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றிகள்!
Deleteஅறிமுகமான மற்ற பதிவர்களுக்கும் வாழ்த்துகள்!
Deleteவாழ்த்து தெரிவித்த அன்பர்களுக்கு நன்றிகள்!
Deleteசொந்தத்தில் நடந்த ஒரு துயர சம்பவம் காரணமாக சில நாட்களாய் வலைப்பக்கம் வரவில்லை! என்னுடைய அறிமுகத்திற்கு நன்றி! சென்ற வருட வலைப்பதிவர் சந்திப்பில் தங்களை சந்தித்தும் இருக்கிறேன்! பதிவுகளை நிறுத்தப்போவதாய் சொன்னபோது நிறுத்தவேண்டாம் என்று மின்னஞ்சலும் அனுப்பி இருக்கிறேன்! நினைவில் மறந்து போயிருக்கலாம்! இருப்பினும் எனது சில பதிவுகளை அறிமுகம் செய்து ஊக்குவித்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteஆஹா புதியவர்கள் பலர் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்கள். அனைவருக்கும் மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்...
ReplyDeleteத.ம.7
ReplyDeleteவலைச்சரத்தில் தனிமரத்தையும் அறிமுகம் செய்த்துக்கு நன்றிகள் ஐயா.
ReplyDeleteதகவல் தந்த இராஜேஸ்வரி அம்மாவிற்கு நன்றிகள்.
ReplyDeleteஎன்னுடன் அறிமுகமான எல்லோருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDelete