07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Wednesday, May 28, 2008

சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கா?

இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை. இசைக்கு மொழியும் ஒரு தடை இல்லை.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்?

இதய சுரங்கத்துள் எத்தனை கேள்வி?


வலையுலகில் இத்தகைய இசை இன்பத்தை வாரி வாரி வழங்கும் பதிவர்கள் பலர் உள்ளனர். குழுவாகவும் இணைந்து செயல்பட்டு இசைத்தொண்டாற்றி வருகிறார்கள். இதில் இசை இன்பம், கண்ணன் பாட்டு, முருகனருள் போன்ற குழுக்கள் மிக அழகாக, பாடல்களை தொகுத்து வருகின்றன. ராக மாலிகையை போல பல வித்தகர்கள் இந்த குழுவில் இடம்பெற்று இருப்பது பெரிய பலம்.

முருகன் என்றால் என்னவெல்லாம் உங்களுக்கு நினைவுக்கு வரும்? அழகன், குமரன், தமிழ், ம்ம் அப்புறம்? அப்புறம்? ஆங்! காவடி, காவடி சிந்து பாடல்கள். எளிய நடையில், நடனத்துக்கு ஏத்த வகையில் சிந்து அல்லது செஞ்சுருட்டி ராகத்தில் சந்தம் சந்தமா வரும் காவடி சிந்தை கேட்க கேட்க என்ன ஒரு ஆனந்தம். முருகன் அருளில் அப்படியோரு காவடி சிந்து பாடலை கேட்டு மகிழுங்கள்.



எங்க ஊர்ல ஒருத்தர், சரியான தண்ணி பார்ட்டி. ஆனா சங்கீதத்துல நல்ல ஞானம். எவ்ளோ மில்லி அடிச்சாலும் ஆரபிக்கும் ஆபேரிக்கும் உள்ள வித்யாசத்தை சரியா சொல்லிடுவாரு. இப்படி தான் ஒரு நாள் கோவில்ல பஜனை நடந்துண்டு இருந்தது. ஒரு பாகவதர், ஊத்துக்காடு வெங்கடகவி பாடலான "புல்லாய் பிறவி தர வேணும்"னு செஞ்சுருட்டி ராகத்துல ஆரம்பிக்க, நம்மாளும் அங்கு வந்து சேர, சுத்தி இருக்கறவங்க நமட்டு சிரிப்பு சிரிச்சாங்க. ஏன்னு நீங்களே யூகிச்சுக்குங்க. கண்ணன் பாட்டில் இதோ அந்த பாடல்.


"வெள்ளரிக்கா பிஞ்சு வெள்ளரிக்கா!
என்னை பாக்காம போறாளே சந்திரிகா!" - என்ன அம்பி, இது வரைக்கும் ஒழுங்கா தானே எழுதிண்டு வந்தே? அதுக்குள்ள என்ன ஆச்சு?னு நீங்க யோசிக்கலாம்.

இந்த பாட்டு என்ன ராகம்னு சொல்லுங்க பார்ப்போம்? தெரியலைனா இசை இன்பத்துல போயி மூழ்கி முத்தெடுங்க. அந்த பாட்டுல வர நடிகை தான் ஜெமினி படத்துல, சரி வேணாம், விட்ருங்க. :))


நல்ல இசையை பாட தெரியாவிட்டாலும் ரசிக்கற குடுப்பினையாவது வேண்டும். வாணி மஹால், நாரத கான சபாக்களில் டிசம்பர் மாதம் வந்து விட்டால் பட்டுபுடவை சரசரக்க, வைரதோடு மினுங்க, ரங்கமணிகள் காரோட்டி வர, ஷண்முக ப்ரியாவுக்கும், கரகரப்ரியாவுக்கும் என்ன வித்யாசம்?னு சபா கேண்டினில் பக்கோடாவும் சூடா காப்பியும் அருந்திகொண்டே டிஸ்கஸ் செய்யும் இந்த காலத்தில் மணிபயல் (பெயரை பாத்து ஏமாற கூடாது) கடந்த டிசம்பர் மாதம் முழுக்க பலவித ராகங்களை அலசி ஆராய்ந்து இருக்கிறார். அதோடு அந்த ராகம் திரைபடங்களில் எப்படி கையாளபட்டு இருக்கிறதுனும் அருமையா சொல்லி இருக்கார்.


கல்யாணி ராகத்தை ஆரோகனத்துல பிடிச்சு, அட்டானா ராகத்தோட மிக்ஸ் பண்ணி தொடைல தட்டினா வரது கரகரப்ரியாவா? ஷன்முகப்ரியாவானு தில்லுமுல்லு படத்தில் ரஜினி கேட்பாரே, அத போல இத்தனை ராகங்கள் படங்களில் வந்து போயிருக்குனு எனக்கு இப்ப தான் தெரிஞ்சது.


அதே போல தி.ரா.ச சாரும் தான் ரசித்த கச்சேரிகளை தவறாமல் வலையேற்றி, அந்த கச்சேரியை அக்கு வேறு ஆணி வேறாக விமர்சனம் செய்து விடுவார்.

நவராத்திரி சமயத்தில் அன்னையின் அருளை இசைவழியாய் வழிபாடு செய்யும் வகையில் அருமையான பாடல்களை அதன் அர்த்ததோடு நமக்கு தந்து இருக்கிறார். சுப்புடுவுக்கு உதவியாளரா வேற இருந்திருக்காராம். கும்பிடு போட்டுக்கறேன் எஜமான்.


நித்யஷ்ரி, பாம்பே ஜெயஷ்ரி எந்த ஷ்ரி பாட்டு வேணும் உங்களுக்கு? இங்க போய் தரையறக்கம் செஞ்சுகுங்க.

வலையுலகில் ஜாடிகேத்த மூடியாய், சும்மா ஜோடி போட்டு கொண்டு கிட்டு மாமா பல திரையிசை பாடல்களை தம் துணைவியோடு பாடி பதிந்து இருக்கிறார்.
உங்க கு(சு)ட்டிபெண்ணையும் சீக்ரமா பாட சொல்லுங்க கிட்டு மாமா.


உங்க ஓட்டு யாருக்கு? ஜானகி அம்மாவுக்கா? பி.சுசீலா அம்மாவுக்கா? கேக்கறது நானில்லைங்க, ஜி.ரா அண்ணன் தான்.

ரா ரா! தீர்ப்பு சொல்ல ரா ரா!


திரையிசை பாடல்களில் எஸ்பிபிக்குனு தனியா ஒரு பிளாக்கே இருக்குங்க. ரசிகர்கள் எல்லாம் ஒரு எட்டு போய் கேட்டு மகிழுங்க.


பிண்ணனி பாடகி சின்மயி (கன்னத்தில் முத்தமிட்டால் நியாபகம் இல்லையா?) கூட பதிவு நடத்தறாங்களே. போய் கேட்டு பாருங்க. இந்த உதித் நாராயண் ஒரு பிளாக் தொறக்க கூடாதா? பின்னூட்டத்தில் என் ஆத்திரத்தை எல்லாம் கொட்டி, கும்மி அடிக்க ஆவலா இருக்கேன்.


சமையலுக்கு அப்புறம் சங்கீதமும் முடிஞ்சது. அடுத்து என்ன..? யோசிங்க, நானும் கொஞ்சம் யோசிக்கிறேன்.

27 comments:

  1. அம்பி,

    நானும் இசை பத்தி பதிவு போடலாம் என்று இருந்தேன், முடியல. நீங்கள் பதிந்தது கண்டு பரம ஆனந்தம். சுட்டிகளுக்குச் சென்று பார்க்கிறேன்.... மன்னிக்க, கேட்கிறேன் :)

    ReplyDelete
  2. ///திரையிசை பாடல்களில் எஸ்பிபிக்குனு தனியா ஒரு பிளாக்கே இருக்குங்க. ரசிகர்கள் எல்லாம் ஒரு எட்டு போய் கேட்டு மகிழுங்க.///

    ப்ளாக் இருப்பது மட்டுமல்ல - அக்கறையாகவும் பாடல்களைப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்!
    அதுதான் சிறப்பு!

    ReplyDelete
  3. வாவ் அம்பி! அருமையான தொகுப்புகள். இதை அப்படியே என் லைப்ரரிக்கு கடத்திகிட்டு போறேன். அங்கயும் கொஞ்சம் இருக்கு பாருங்க. நல்ல அருமையான தொகுப்புகள்! வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  4. அம்பி, சின்மயி மூனு பதிவுகள் இருக்குங்க. இதுதான்.http://chinmayisripada.blogspot.com/

    ReplyDelete
  5. //தெரியலைனா இசை இன்பத்துல போயி மூழ்கி முத்தெடுங்க. அந்த பாட்டுல வர நடிகை தான் ஜெமினி படத்துல, சரி வேணாம், விட்ருங்க. :))
    //

    ஹூஹூம்! விடமாட்டோம்!
    சொல்லு அம்பி சொல்லு!
    அந்த பாட்டுல வர நடிகை தான் ஜெமினி படத்துல....ஜெமினி படத்துல

    ReplyDelete
  6. //ஹூஹூம்! விடமாட்டோம்!
    சொல்லு அம்பி சொல்லு!
    அந்த பாட்டுல வர நடிகை தான் ஜெமினி படத்துல....ஜெமினி படத்துல//

    ரிப்பீட்டேய்

    ReplyDelete
  7. அம்பி,

    நல்ல பதிவு - பொதுவா இசை தெரிந்தவர்கள் தன் - இவ்வலைப்பூக்களுக்கு சென்று அனுபவிப்பார்கள். எனக்குத் தெரிந்த வரையில் வலைச் சரத்தில் முதல் முறையாக இருக்குமென நினைக்கிறேன் ( யாராச்சும் கும்மிடாதிங்கப்பா - தப்பா இருந்தா ).

    அனைத்துச் சுட்டிகளுக்கும் சென்று பார்த்து வந்தேன் - கேட்டேன்

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  8. //இந்த உதித் நாராயண் ஒரு பிளாக் தொறக்க கூடாதா?//

    அவர் மேல ஏன் கோவம் உங்களுக்கு? அந்த ஆளை பாட(அதுவும் தமிழ்ப் பாட்டு)கூப்பிடறவங்க மேலதான் உங்களுக்கு கோவம் வரனும் :-)

    காசு குடுத்து பாட கூப்பிட்டா நாங்கூடதான் போய் பாடுவேன். :-)

    ReplyDelete
  9. //ரா ரா! தீர்ப்பு சொல்ல ரா ரா!//

    வந்துட்டேன் ரா ராமலக்ஷ்மி. ஓட்டுன்னு வந்துட்டா, சுசிலாம்மாக்குதான் எனது!

    ReplyDelete
  10. //நானும் இசை பத்தி பதிவு போடலாம் என்று இருந்தேன், முடியல. //

    மிக்க நன்னி சதங்கா, (நல்ல வேளை, இதையாவது எனக்கு விட்டு வெச்சீங்களே!) :)))

    ReplyDelete
  11. //ப்ளாக் இருப்பது மட்டுமல்ல - அக்கறையாகவும் பாடல்களைப் பதிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்!
    அதுதான் சிறப்பு!
    //

    வாத்தியார் சொன்னா தப்பா இருக்குமா? :))

    ஈடுபாடு தான் முக்யம்! இல்லையா குருவே?

    ReplyDelete
  12. //இதை அப்படியே என் லைப்ரரிக்கு கடத்திகிட்டு போறேன். //

    @abi appa, சுங்க வரியை குடுத்துட்டு போங்க. உங்க தொகுப்பையும் பாக்கறேன். :))


    ஒரு சின்ன சந்தேகம், வழக்கம் போல பதிவை படிச்சீங்க இல்ல? :p

    ReplyDelete
  13. //அம்பி, சின்மயி மூனு பதிவுகள் இருக்குங்க.//

    @ila, ஆமா இளா, பார்த்தேன்.

    அதேல்லாம் இருக்கட்டும். மூனுல இரண்டு இங்க இருக்கு. இன்னோன்னு எங்க? :p

    ReplyDelete
  14. //ஹூஹூம்! விடமாட்டோம்!
    சொல்லு அம்பி சொல்லு!//

    ஹிஹி, வாங்க அண்ணே! உங்களுக்கு தெரியாததா? வேணும்னா ஒரு தனி பதிவா போடுங்களேன். :p

    அந்த நடிகை தான் ஜெமினி படத்துல ஓ போடு! பாட்டுக்கு ஆடினவங்களா?னு ஒரு ஐயம். தீர்த்து வையுங்களேன். :))

    ReplyDelete
  15. //எனக்குத் தெரிந்த வரையில் வலைச் சரத்தில் முதல் முறையாக இருக்குமென நினைக்கிறேன் //

    @cheena sir, அப்படியா? கேக்கறத்துக்கே சந்தோஷமா இருக்கு. (இல்லைனா கும்மிடாதீங்க) :))

    ReplyDelete
  16. //அவர் மேல ஏன் கோவம் உங்களுக்கு? அந்த ஆளை பாட(அதுவும் தமிழ்ப் பாட்டு)கூப்பிடறவங்க மேலதான் உங்களுக்கு கோவம் வரனும் //

    @nagu, அதில்லை நாகு, கூப்பிட்டாலும், தான் செய்யற வேலைல ஒரு ஈடுபாடு வேணுமில்ல.

    இவரு எப்படி உச்சரிக்கனும்?னு நாலு தடவை கேட்டா குறைஞ்சா போயிடுவார்? வாய்ல என்ன கொழுகட்டையா வெச்ருக்கார்? :)))

    //காசு குடுத்து பாட கூப்பிட்டா நாங்கூடதான் போய் பாடுவேன்//

    அது சரி. :))

    ReplyDelete
  17. //வந்துட்டேன் ரா ராமலக்ஷ்மி. ஓட்டுன்னு வந்துட்டா, சுசிலாம்மாக்குதான் எனது!
    //

    @rama lakshmi, நீங்களும் அவங்களும் சம காலம் என்பதாலா? :p

    ReplyDelete
  18. வாவ் அம்பி! அருமையான தொகுப்புகள்.

    கலக்கறீங்களே
    எப்படிங்க! இப்படி!!

    வாழ்த்துக்க்ள்

    ReplyDelete
  19. எதைப் பத்தி எழுதினாலும், உங்க GTTT ய விடாம எழுதறீங்க அம்பி! கிரேட்! (அது என்னன்னு கேக்காதீங்க ஒரு G நாலு T)

    அப்பறம், கயல்விழி மேடம் - என் வலைப் பக்கத்துல 'அவியல்' பதிவுல உங்க பின்னூட்டம் பாத்து ஆச்சரியமா இருந்தது எனக்கு. நீங்க எழுதின கரு-வுல ஒரு கதை நான் எழுதி 1993-ல குமுதத்துல ஒரு கதை வந்தது. எடுத்துப் பதிவுல போடறேன். (அப்புறமா) படிச்சுப் பாருங்க!

    ReplyDelete
  20. அடடா! சுசிலாம்மா ரொம்ப சீனியருங்க! எனக்கு அத்தனை வயதாகவில்லையாக்கும்.
    //உங்க ஓட்டு யாருக்கு? ஜானகி அம்மாவுக்கா? பி.சுசீலா அம்மாவுக்கா? //இதான் உங்க கேள்வி!
    இருவருக்குமே தேன் குரல் என்றாலும்..ஓட்டு என்று வருகையில்..
    அதான் என் பதில்.
    மற்றபடி சின்னக் குயில் சித்ராவிலிருந்து சின்மயி வரை எல்லாரையுமே பிடிக்குமாக்கும்..ஆங்!

    ReplyDelete
  21. //கலக்கறீங்களே
    எப்படிங்க! இப்படி!!
    //

    @pudhugai, சரி விடுங்க. கலக்கி இருக்கறவங்கள நான் லின்க் மட்டும் தான் பண்ணி இருக்கேன். :))

    ReplyDelete
  22. மூக்கு மேல வச்ச விரலை இன்னும் எடுக்கல.
    அட அட. சமர்த்து சம்ர்த்து.

    எல்லாச் சுட்டிகளுக்கும் நன்றி.
    நெல்லைக் குழுவெல்லாம் சுசிலா அம்மா கட்சிதான்.

    அழகா பதிந்து இருக்கீங்க அம்பி.
    உதித் நாராயணன் பதிவு இருந்தால் நாமும் ஹிந்தியில் சொதப்பலாமே!!

    ReplyDelete
  23. //எதைப் பத்தி எழுதினாலும், உங்க GTTT ய விடாம எழுதறீங்க அம்பி.
    அது என்னன்னு கேக்காதீங்க ஒரு G நாலு T//

    நன்னி பரிசல். நான் மூனு T நாலு G னு நினைச்சேன். :p

    என்னது இது? கயல்விழி மேடமுக்கு இங்க சேதி சொல்றீங்களா கிழக்கே போகும் ரயில் மாதிரி? :))

    ReplyDelete
  24. //மற்றபடி சின்னக் குயில் சித்ராவிலிருந்து சின்மயி வரை எல்லாரையுமே பிடிக்குமாக்கும்..ஆங்!
    //

    @rama lakshmi, சரி ஒத்துக்கறேன். சிந்தபடிதுறைகாரஙக தான் நீங்க. இப்படி உறுமி வேற காட்டனுமா? :p

    ReplyDelete
  25. //உதித் நாராயணன் பதிவு இருந்தால் நாமும் ஹிந்தியில் சொதப்பலாமே//

    @valli madam, ஹிஹி, அப்படி எதுவும் வந்தா சொல்லுங்க. முதல் பின்னூட்டம் நான் தான் போடுவேன், அதுவும் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா ஹிந்தியில. :p

    ReplyDelete
  26. /
    புதுகைத் தென்றல் said...

    வாவ் அம்பி! அருமையான தொகுப்புகள்.

    கலக்கறீங்களே
    எப்படிங்க! இப்படி!!

    வாழ்த்துக்க்ள்
    /

    இதுக்கு ரிப்பீட்டு போட ஆசைதான் ஆனா நமக்கும் இந்த பதிவுல இருக்க சப்ஜெக்ட்டுக்கும் ஏழாம் பொருத்தம்.
    :)

    சின்மயி, சின்மயி பதிவு நல்லா இருக்கு.

    ReplyDelete
  27. ambi said://@valli madam, ஹிஹி, அப்படி எதுவும் வந்தா சொல்லுங்க. முதல் பின்னூட்டம் நான் தான் போடுவேன், அதுவும் ஏக் காவ் மே ஏக் கிசான் ரகு தாத்தா ஹிந்தியில.//

    அச்சா:-)))))))))))))))))!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது