07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, May 24, 2008

விடுப்பது நன்றி !

வலைச்சரத்தில் எனது எண்ணங்களுக்கு மதிப்பளித்து பதிவு இட அழைப்பு விடுத்த சீனா ஐயாவிற்கும், வலைச்சரக் குழுவினருக்கும் முதற்கண் நன்றி.

ஒரு வார காலம் தொடர்ந்து வாசித்து இன்புற்ற உள்ளங்களுக்கும், தவறாது அனைத்து பதிவுகளுக்கும் வந்து உற்சாகப்படுத்திய சீனா ஐயா, மற்றும்அநேக பதிவுகளுக்கு வந்து ஊக்கமளித்த நல்உள்ளங்கள் நாகு, செல்வி மேடம், ஜீவா வெங்கட்ராமன், அம்பி, கவிநயா, நியூபீ, சின்ன அம்மிணி, சாம் தாத்தா, துளசி டீச்சர், பித்தன், திகழ்மிளிர், முரளி ராமச்சந்திரன் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் பல.

வலைச்சரம் வாயிலாக, இந்தப் பதிவுகள் மூலம் நிறைய வாசிக்க கற்று கொண்டேன் என்று தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு பதிவிற்கும் தேடுதல் வேட்டையில் இறங்கி, ஓரளவுக்கு ! வலைச்சரத்தின் விதிகளுக்கேற்ப பதிவர்களை / பதிவுகளை சுட்டு (படித்து), தலைப்புக்களுக்கேற்ப பொருத்தி தந்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

'கற்றது கைமண்ணளவு' என்பது ஒரு தெய்வீக வாக்கு என்று தான் சொல்லணும். நிறைய வாழ்வில் கற்க இருந்தாலும், நான் சுட்டிக் காட்டிய பதிவுகள் ஒரு சிலவே !!! ஔவையின் அனைத்து படைப்புக்களும், எளிமையாய், இனிமையாய் இருப்பது நம் அனைவரையும் கவர்ந்த ஒன்று.

"நூற்றுபத் தாயிரம் பொன்பெரினும் நூற்சீலை
நாற்றிங்கள் நாளுக்குள் நைந்துவிடும் -- மாற்றலரைப்

பொன்ற பொருதடக்கைப் போர்வேல் அகளங்கா

என்றும் கிழியாதென் பாட்டு !"


எனும் ஔவையின் வெண்பாவை நம் வலைப்பதிவர்களின் பதிவுகளுக்கு சமர்ப்பித்து, அடுத்து வ‌ரும் ஆசிரிய‌ருக்கு வ‌ழி விட்டு, அவ‌ர்க‌ளின் ப‌டைப்புக்க‌ளை வாசிக்க‌ காத்திருக்கும் ...

என்றும் அன்புட‌ன்,
ச‌த‌ங்கா.

9 comments:

  1. மிக நேர்த்தியாக இருந்தது நீங்கள் தொகுத்து வழங்கிய விதம். வாழ்த்துகள் சதங்கா. :)

    ReplyDelete
  2. அருமையாகத் தொடுத்த சரம்.

    ரசித்தேன்.

    ReplyDelete
  3. அருமைக் கபீரன்பனும், வலையுலக டீச்சர் துளசியும் மறு மொழி இட்டுத் துவங்கி இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.

    ஒரு வார காலம், தினந்தினம் காலையில் முதல் பதிவாகப் படிக்கத் தூண்டிய சதங்காவின் பதிவுகள் பாராட்டத்தக்கவை.

    அடுத்து ஒரு நன்றி நவிலும் பதிவு இட வேண்டி இருப்பதினால் (பொறுப்பாசிரியன் என்ற முறையில்) இம்மறுமொழியினை இத்துடன் நிறுத்துகிறேன்

    ReplyDelete
  4. சதங்கா, சீனா ஐயா சொன்னது போல் ஈடுபாட்டுடன் உழைத்து அருமையாய், வித்தியாசமாய், பதிவுகளை வழங்கி விட்டீர்கள். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. //மிக நேர்த்தியாக இருந்தது நீங்கள் தொகுத்து வழங்கிய விதம். வாழ்த்துகள் சதங்கா//

    வழிமொழிகிறேன். தலைப்புக்கு தனி ஷொட்டு! :)

    ReplyDelete
  6. தொடர்ச்சியான தலைப்புகளுடன் பல நல்ல பதிவர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  7. நன்றாக இருந்தது உங்கள் தொகுப்பு

    ReplyDelete
  8. பல்வித சுவைகளோடு அழகாகத் தொடுத்தீர்கள் சதங்க. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  9. கபீரன்பன், துளசி டீச்சர், சீனா ஐயா, திகழ்மிளிர், கவிநயா, அம்பி, நாகு, சின்ன அம்மிணி, வல்லிம்மா,

    அனைவரின் ரசனைக்கும், பாராட்டுக்கும் நன்றிகள் பலப் பல.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது