வாரம் ஒரு ஆசிரியர் தனது பார்வையில் குறிப்பிடத்தக்க பதிவுகளை அறிமுகப் படுத்தும் தமிழ் வலைப்பூ கதம்பம்...
Monday, June 30, 2008
இதுவரை நான்!!!!
என்னைப் பற்றி என்ன சொல்வது?. கவிதை,பாசம்,நட்பு,தைரியம்,விடா முயற்ச்சி,மன நிறைவு எல்லாம் சரியான விகிதத்தில் கலந்த வாழ்க்கை என்னுடையது. என்னுள் பூத்து மணம் வீசும் கவிதை பூக்களை உங்களுடன் பகிர்ந்துக்கொள்ளும் பூந்தோட்டம் , என் கண்ணாடி மழைதான்
அதிக பதிவுகள் எழுதவில்லை என்றாலும் , ஓய்வில்லா பணிகளுக்கு இடையிலும் , என் மனதிற்கு நிறைவான பதிவுகளை பதித்திருக்கிறேன் என்பதில் ஒரு சின்ன மகிழ்ச்சி. மழலையாய் தொடங்கி உங்களுடன் நட்புக் கரம் பிடித்து, ஒரு சிறுமியாய் பயணிக்கிறேன், நட்புத் தடங்களோடு. இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டும் உங்கள் வாழ்த்துக்களோடு.....
இன்றும் நான் எழுதியதில் எந்தக் கவிதை பிடிக்கும் என்று யார் கேட்டாலும், என் மனதில் சட்டென்று நினைவுக்கு வருவது வெற்றுத்திண்ணை தான்..... என் பால்ய கால மகிழ்ச்சிகளையும், பாசத்தை வாரி இறைந்த என் தாத்தாவின் இழப்பின் வருத்தத்தையும் சுமக்கும் கவிதை.....
கவிதையில் பயணித்த என் மனம் அன்றாட வாழ்வின் இயல்பான அனுபவங்களையும், அவற்றைப் பற்றிய எனது பார்வைகளையும் பகிந்துக் கொள்ள,பதிவு செய்ய ஆவல் கொண்டது . அப்படி எழுதியதில் ஆட்டோ பயண அனுபவம் என்னை மிகவும் கவர்ந்தது...
சென்னை போன்ற நகரங்களில் வளர்வதாலோ?, என்னவோ? கிராமங்களுக்கே உரிய சில இனிய அனுபவங்களை இழக்க வேண்டியிருக்கிறது.
உத்திப்பிரித்தல் மூலம் என் மனதிற்க்கு சமாதானம் கூறிக்கொண்டாலும், நாகரீக வளர்ச்சியால் மறையும் தருவாயிலிருக்கும் , அரிய திறமைகளை வளர்க்கும் கிராமிய விளையாட்டுகளைப் பற்றி பதிவு செய்து, தொலைக்காட்சிப் பெட்டிகளில் தனது மன/உடல் ஆரோக்கியத்தை அடகு வைக்கும் நகரத்து சிறார்களுக்கு விழிப்புணர்வு உண்டாக்கும் என் எண்ணம் நிறைவேறாமலே இருக்கிறது. நட்புக்களின் அன்புக்கட்டளைக்கேற்ப விரைவில் அதையும் பதிவு செய்யவிருக்கிறேன்.
இத்தோடு என் அறிமுகத்தை முடித்துக் கொண்டு, வலையுலகில் என்னைக் கவர்ந்த இடுகைகளை உங்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். படிக்க தவறவிடக் கூடாத, இனிய இடுகைகளின் சுட்டிகளுடன் மீண்டும் சந்திப்போம்,
Sunday, June 29, 2008
நன்றி நவில்தலும் - வரவேற்பும்
அவருக்கு வலைச்சர பொறுப்பாசிரியன் என்ற முறையில் நல்வாழ்த்துகளை நன்றியுடன் தெரிவித்து விடை அளிக்கிறேன். மீண்டும் சில திங்கள் கழித்து மறுபடியும் ஒரு வாய்ப்பு அளிக்க முயல்வோம்
--------------------------------------------------------------------------------
30ம் நாள் துவங்கும் இவ்வாரத்தினை தோழி எழில் பாரதி தொகுத்து வழங்க இணங்கி இருக்கிறார். அவரும் கண்ணாடி மழை என்றொரு வலைப்பூ வைத்திருக்கிறார். கடந்த ஒரு ஆண்டாக எழுதி வருகிறார். தாயின் கருவறையில் பயின்ற முதல் மொழி மழலை மொழி என முதல் கவிதை சென்ற ஆண்டு இதே நாளில் எழுதியுள்ளார். இன்றைய தினம் தனது வலைப்பூவின் முதல் ஆண்டு விழாவினைக் கொண்டாடி மகிழ்ந்து இருக்கிறார். கவிதைகளையே அதிகம் பதிவினில் இடுகிறார்.
வருக வருக நல்வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்.
நன்றிகள்.
சென்றவார வலைச்சர ஆசிரியராக எனக்கு ஒரு வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கு என் அன்பான நன்றிகள். என் பதிவுகளுக்கு அதிகமாய் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
இந்த தமிழ் வலைப்பதிவிடுதல் பற்றி நானே அறிந்துகொண்டு, எங்கோ ஒரு மூலையில் இருந்துகொண்டு எழுதிக்கொண்டிருந்தேன். மற்ற பதிவர் நண்பர்களுடன் அதிகம் பரிச்சயமில்லை. இருந்தும், என்னை இங்கும் அழைத்து வந்து, என் எழுத்தையும் அனைவரும் வாசிக்க ஒரு சந்தர்ப்பம் ஏற்படுத்திய நண்பர் சீனா அவர்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் தகும். மீண்டும் நன்றிகள் சினா!!
இந்த வலைச்சர ஆசிரியர் வாய்ப்பு எனக்கு பல புதிய வலைப்பதிவுகளை வாசிக்கும் சந்தர்ப்பத்தை கொடுத்ததுடன், அதிகமான வலைப்பதிவ நண்பர்களையும் பெற்றுத்தந்தது. மிக்க மகிழ்ச்சி.
நான் தமிழ்மணம் மற்றுமான தமிழ் திரட்டிகள் பற்றியும் மிக அதிக அளவில் கற்றுக்கொண்டது சமீபமாய்த்தான். அதற்கு நல்லதொரு வாய்ப்பை ஏற்படுத்தி தந்தது வலைச்சரம் தான்.
யான் வாசித்த இன்பம் பெறுக தமிழுலகம் என்னும் முயற்சியிலமைந்த இந்த வலைச்சரம் மிகவும் பாராட்டத்தக்கது. இந்த வலைச்சரம் மேலும் மேலும் சிறப்பாக நடைபோட என் வாழ்த்துக்கள்!
இன்னும் அனேக வலைப்பூக்கள் வாசித்தும், குறிப்பெடுத்து வைத்தும் நேரமின்மை காரணமாக அவற்றை அனைத்தும் இட முடியாமைக்கு வருந்துகிறேன்.
மீண்டும் அனைவருக்கும் என் நன்றிகளை தெரிவித்துக்கொண்டு, நான் இனி உங்கள் அனைவருடனும் நட்பென்னும் ஒற்றையடிப்பாதையில் மிக நெருக்கமாக பயணிக்க விரும்பும் என் ஆசைகளையும் தெரிவித்துகொள்கிறேன்.
எல்லோரும் இன்புற்றிருக்க
நினைப்பதுவே யல்லாமல்
வேறொன்றறியேன் பராபரமே!
நன்றிகளுடன்,
என்றும் உங்கள் நண்பன்,
கோகுலன்
gokulankannan@gmail.com
இங்கேயும் போய் பாருங்க... வாசியுங்க..
சுவாரஸ்யமான மொக்கை மற்றும் நகைச்சுவை நையாண்டி பதிவுகள் நிறைந்த வலைப்பூ வருத்தப்படாத வாலிபர் சங்கத்துக்கு சொந்தமானது. அதில் இந்த மாதம் தான் நண்பர் ரிஷான் என்னை அழைத்துசென்றார். அட, அட.. நான் மறுபடி என் கல்லூரி நாட்களுக்கு சென்றது போலிருந்தது. நானும் கூட என்னை சங்கத்துல சேத்துக்கச்சொல்லி கேட்டிருக்கேன். வலைப்பதிவ நண்பர்கள் அங்கே கூடிச்சேர்ந்து கும்மியடிக்கும் அழகே அழகு.
***oo$oo***
நான் தமிழ்திரைப்படப்பாடல் வரிகள் தேடித்தேடி இணையத்தில் சுற்றிக்கிடந்த காலமெல்லாம் உண்டு. அதன்பின்புதான் தெரிந்துகொண்டேன். பழைய பாடல், புதிய பாடல்கள் என அனைத்தையும் அழகாய் ஓரிடத்தில் தருகிறது தேன்கிண்ணம். மிகவும் பயனுள்ளதொரு வலைப்பூ!
***oo$oo***
செய்திகள், விமர்சனம், மொக்கை, அனுபவம் என இருக்கும் எல்லாத்தலைப்புகளின் கீழும் அழகாக பதிவுகள் இடும் நண்பர் ஆயில்யன் இவரது பதிவுகளில் குறிப்பிட்டு சொல்லமுடியாதபடி பெரும்பாலும் அனைத்து பதிவுகளும் என்னை அதிகம் கவர்ந்தவை. கலக்கல் ஆயில்யன்!!
***oo$oo***
வளர்ந்து வரும் வலைப்பூ என்றாலும் மிக நேர்த்தியான பதிவுகளுடன் அழகானது தோழி ராமலக்ஷ்மி அவர்களின் முத்துச்சரம். அவரது கதையின் ஜானி ஜானி நோ பாப்பா- வில் அந்த புகைப்படம் மிக அழகு! கிராமத்தில் எங்கள் வீட்டை சுற்றிக்கொண்டே இருக்கும் அந்த பெயரில்லாத ஒரு நாயை (மன்னிக்கனும்.. இந்த இடத்தில் நாய் என்று சொல்ல மனது கஷ்டமாக இருந்தது உண்மைதான்) ஞாபகபடுத்தியது.
***oo$oo***
சமீபகாலமாய் நான் வாசிக்க துவங்கியுள்ள ஒன்று நண்பர் ச்சின்னப்பையன் அவர்களின் வலைப்பூ. நன்று.
***oo$oo***
இன்னும் நிறைய வலைப்பூக்களைப்பற்றிய விமர்சனங்களும் சுட்டிகளும் நேரமின்மையால் இட முடியாமைக்கு மிகவும் வருந்துகிறேன்.
Friday, June 27, 2008
தோழிக்காக ஒரு கவிதை
நிலவு தாழ்வாயிருந்த அப்பூங்காவில்
குழந்தையின் கண்கள் ஏந்தி
நீ நட்சத்திரங்கள் பொறுக்கச்சென்றாய்
பூக்களுடன் கதைகள் கதைத்தபடியே
நட்சத்திரங்கள் சிதறிவிழும் கைக்கூடையுடன்
நீ திரும்பும் தருணம்தான் அது நிகழ்ந்தது
தூரமாய் தலைவிரித்தாடிக்கொண்டிருந்த
சில தீ நாக்குகள் கக்கிய வெம்மையில்
பிரசவித்த சில பாம்புக்குட்டிகள்
உன் கால்களை சுற்றின
ஆவென அலறி நீ நிலைகுலைந்த தருணம்
தாங்கிப்பிடிக்க எத்தனிப்பின்றி
முகம் திருப்பிக்கொண்டனர்
அங்கு சுயம் விற்றுக்கொண்டிருந்த சிலர்
வழியோரத்தின் சகபயணியாய்
நலம்கேட்டு நட்புக்கரம் நீட்டினேன்
என் தோட்டத்து பூக்களுக்காய்
வர்ணம் சேகரித்துக்கொண்டிருந்த நான்.
உன் சிணுங்கல்களின் சாபத்தில்
பாம்புகள் அனைத்தும் சாம்பலாகிப்போக
உன்மேல் பூக்களாய் கொட்டின
நீ பொறுக்கிய விண்மீன்கள்
உதடுகளின் புன்னகையுடனும்
கண்களின் குவிந்த கள்ளமற்ற நட்புடனும்
மீண்டும் முட்டியிட்டு
நட்சத்திரம் பொறுக்குகினோம் இருவரும்!
-----------------------------
நிலவு : ஆதித்யன் அவர்களின் தேனிலவு பற்றியதொரு பதிவு
அப்பூங்காவில் : என்.சுரேஷ் அவர்களின் ஒரு கவிதை பதிவு
பிரசவித்த : தமிழ்சங்கமி அவ்ர்களின் ஒரு சுகமான வலி
முகம் : ஜெ ஜெ ரீகன் அவர்களின் ஒரு ஜீன்ஸ் கவிதை
சுயம் : என் சுரேஷ் அவர்களின் ஒரு சுயக்கவிதை
நட்புக்கரம் : நிஜமா நல்லவன் அவர்களின் ஒரு நட்புபதிவு
நட்சத்திரம் : தயாளன் அவர்களின் ஒரு நட்சத்திர பதிவு
Wednesday, June 25, 2008
சில வலைப்பூக்களின் வாசங்கள்..
என் முதல் கவிதைகளை தமிழில் தட்டச்சு செய்ய இணையத்தில் தட்டச்சுசெயலி தேடும்போது தான், இணையத்தில் சிதறிக்கிடக்கும், அல்ல அல்ல, குவிந்து கிடக்கும் தமிழ் வலைப்பூக்கள், குழுமங்கள் பற்றி அறிந்தேன். அப்படியொரு குழுமத்தில் முதலாய் இணைந்தேன், வலைப்பூக்கள் வாசித்தேன். அதிசயித்து போனேன் இணையத்தில் இவ்வளவு தமிழா என. தமிழின் காலத்திற்கேற்ற, நவீனத்திற்கேற்ற வளர்ச்சியில் மிகவும் மகிழ்ந்தேன்.
அவ்வாறு ஆரம்ப காலத்தில் நான் வாசித்த வலைப்பூக்களுள் மிக முக்கியமான ஒன்று நண்பர் ஹரண் பிரசன்னாவினுடையது. அவரது கதைகள் என்னை மிகவும் கவர்ந்தன. திருநெல்வேலி பேச்சுவழக்கில் அமைந்த கதைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. வாசிக்கையில் இணையத்தில் தமிழ் வாசிக்கும் என் ஆர்வத்தை அதிகம் தூண்டின.
அவரது கதைகளின் மூலமே அறிந்து கொண்டேன், அவரும் எனது ஊர்க்காரர்தான் என்று. சொல்லப்போனால் என் பக்கத்து தெருக்காரர்.
----------ooooo000))$((000ooooo-----------
மேலும், அப்பொழுது எனக்கு வாசிக்க கிடைத்த ஒரு கவிதைகள் வலைப்பூ நிலவுநண்பனுடையது
புகைவண்டி பயணமொத்த இந்த வாழ்க்கையில் எதிர்ப்படும் ஒருவரை சிநேகத்துடன் புன்னகைக்கும் விதமாய் அமைந்த இக்கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. உலகின் வாழ்க்கையில் சக மனிதருடனான நட்பு நிறைந்த வாழ்க்கையை அழகாக சொல்லும் வரிகள் இவை.
............
என் பயணத்தின்
இறுதிவரையிலும் அப்படியே
இனிய துணையாக அமைந்துவிட்டால்
அழகாகவே இருக்கக்கூடும்
இரயில் பயணமும் வாழ்க்கையும்!!
----------ooooo000))$((000ooooo-----------
சமீபமாய் என்னை அதிகமாக பாதித்த ஒரு பதிவு நண்பர் அந்தோணிமுத்து அவர்களுடையது. கர்ணனை நண்பனாக பாவித்து அவர் எழுதியுள்ள அந்த பதிவில் வாங்குதலின் வலியை வலியுடன் சொல்லியிருக்கிறார். வாழ்க்கையின் சோதனைகளை முறியடித்து சாதனை படைக்கும் இந்த இளைஞர் மிகவும் பாராட்டுக்குரியவர்.
----------ooooo000))$((000ooooo-----------
காலமாற்றத்தில் இயல்பாய் மாறிப்போகின்ற சாதாரண நிகழ்வையும் அழகாக கவிதை வடிவில் சொல்லியிருக்கும் நண்பர் சேவியர் அவர்களின் குடுகுடுப்பைகாரன்.
----------ooooo000))$((000ooooo-----------
யதார்த்தக் கவிதைகளும் காதல் கவிதைகளும் நிறைந்த நண்பர் தணிகையின் வலைப்பதிவுகளும் நான் தவறாமல் வாசிக்கும் வலைப்பதிவுகள்.
----------ooooo000))$((000ooooo-----------
சதங்கா அவர்களின் ஓவியங்களுக்கான வலைப்பூ மிகவும் பாராட்டத்தக்கது. பென்சில், பேனா, ஆயில் பெயிண்டிங், கணிப்பொறியில் வரைந்த மின்னோவியம் என அனைத்து முறைகளையும் பயன்படுத்தி இவர் வரைந்த ஓவியங்கள் மிக மிக அழகானவை.
நானும் ஓவியம் வரைவதில் என் திறமை என்னவென்று அறிய பெயிண்டிங் சம்பந்தமான எக்கச்சக்க பொருட்களை வாங்கி என்னறையில் குவித்திருக்கிறேன். ஓரிரு முறை முயற்சிகளுக்கு பின்னால் அது அப்படியே இருக்கிறது. எப்பொழுது மீண்டும் ஆரம்பிப்பது என்றுதான் எனக்கு தெரியவில்லை.. :)
----------ooooo000))$((000ooooo-----------
அன்பு ஒரு அதிசயம்!
அது ஒரு அக்ஷய பாத்திரம்!
எடுக்க எடுக்க நிறையும்!
கொடுக்கக் கொடுக்கப் பெருகும்!
என அன்பை பற்றி அழகான சொல்லும் சகோதரி கவிநயா அவர்களும் தன் பதிவுகள் மூலம் என்னை மிகவும் கவர்ந்தவர்.
----------ooooo000))$((000ooooo-----------
Monday, June 23, 2008
காதலும் சில கவிதைகளும்
இயற்கை அல்லது இறைவன் என்றதான ஒன்று இந்த உலகை எப்படி செதுக்கியிருக்கிறது என்ற ஆச்சரியத்தில் நான் அடிக்கடி மூழ்கிப்போவேன். உலகின் எந்த ஒரு முகமும் மற்றொன்று போலில்லை. எத்தனை பூக்கள், எத்தனை உயிரினக்கள், மரங்கள், மலைகள் என அனைத்தும் ஒவ்வொரு தனித்துவமாய்...ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.. எத்தகைய அதிசயம்!
இந்த வன்படைப்புகள் மட்டுமின்றி மென் படைப்புகளான மனித மன உணர்வுகள் அதனினும் எத்தகைய வியப்பிற்குரியது!
அன்பென்ற ஒன்றும் அதன் பரிமாணங்களான காதல், தாய்மை, பாசம், விசுவாசம், பக்தி என அனைத்தும் என்னை அதிகமாக சிந்திக்க வைத்திருக்கின்றன.
காதலின் மகிழ்ச்சி மற்றும் வலி, தாய்மையின் நெகிழ்ச்சி, பாசத்தின் அரவணைப்பு மற்றும் பக்தியின் அன்பு நம்பிக்கை என இக்கூறுகள் இல்லாமல் போனால் இந்த உலகம் எப்படி இருந்திருக்கும் என யாராலும் நினைத்துக்கூட பார்க்க முடிவதில்லை.
இந்த பதிவில் நான் ரசித்த மிக காதல் கவிதைகள் பற்றிய பதிவுகள் சிலவற்றை சொல்ல முயல்கிறேன்.
உலகின் அதிகப்படியான மகிழ்ச்சியை மனதிற்கு தருவதும், அதிகப்படியான துக்கத்தை மனதிற்கு தருவதும் காதல் ஒன்றுதான். காதலின் அனுபவத்தை மிக அழகான வரிகளில் சொல்லும் ரிஷான்
நுனிவிரல் தீண்டி
உடல்முழுதும் பொசுங்கிக் கருகும்
வேதனையை சிரிப்பால் உதறுவீர்களாயின்...
.................
ஆனால், இவரது கவிதைகளில் பெரும்பாலும் தனிமையின் வலியும், இனம்புரியாத சோகமும் மெல்லியதாக இழையோடும்.. இன்னும் காதலிக்கவே ஆரம்பிக்கவில்லையென ஆணித்தரமாக சொல்லுமிவரின் துயரங்களின் காரணமும் புரியாத புதிர்தான்.
எப்பொழுதும் இளமைக்கே உண்டான துடிப்புடனும் சிரிப்புடனும் இருக்கும் நம் பாசக்காரப்பய மீறான் மிகவும் சுவாரஸ்யமானவர். அவரது வலைப்பதிவில் அவர் இயற்கையை ரசிக்கும் அழகும், இயற்கையை காதலிக்கும் முறையும் என்னகு அடிக்கடி தாகூரின் கவிதைகளை ஞாபகப்படுத்தும்.
அவரது இளமைத்துள்ளல் மிகுந்த கவிதைகள் என்னை மிகவும் கவரும்..
I Love U வென குறுந்தகவலுனுப்பிவிட்டு
பெருமூச்சு விடுகிறேன்
காதலை பிரசவித்த சுகத்தில் !
#
இதயத்தில் நீ குடிவந்த பிறகு
நொடிக்கொருமுறை சரிபார்த்துக்கொள்கிறேன்
துடிப்பை. !
என இவை அவ்வலைப்பூவின் பதம்..
வண்ணத்துப்பூச்சிகளாலும் நட்சத்திரங்களாலும் வலைப்பக்கத்தை அழகாக நிரப்பி, அங்கங்கே அழகான குட்டிக்கவிதைகளாலும் அலங்கரித்துள்ளார் தோழி திகழ்மிளிர்
காதல் என்னும் ஒரு
கனி மட்டுமே, எல்லா
காலங்களிலும்
காய்க்கும்.
அவர் பயன்படுத்தியுள்ள புகைப்படங்கள் மிகவும் அருமை.
மனது சிரிக்கும் போதெல்லாம் கொஞ்சமாய் கவிதை வாசிப்பேன். வலிக்கும் போதோ கொஞ்சம் அதிகமாய் வாசிப்பேன். ஆனால் எப்பொழுதும் தோழி பஹிமாஜஹானின் வலைப்பக்கத்தில் நான் குழம்பிய கண்களுடன் வாசித்துக்கொண்டிருப்பேன்.
அதிகாலையில்
தூய அருவியொன்றிலிருந்து
அவளது எளிய குடிசை நோக்கிச்
சுமந்து வந்த தெள்ளிய நீர்க்குடத்தை -நீ
கல்லெறிந்து உடைத்த வேளை
தவத்தில் மூழ்கியிருந்த
அவள் கானகத்து மான்கள்
திகைத்தோடித் திசை மறந்தன................
என இவ்விதமாகவே இவரின் கவிதைகளில் எல்லாம் மெல்லியதொரு சோகம் இழையோடியிருக்கும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல், இந்த வரிகளே அவரது கவிப்புலமைக்கு சான்றெனச் சொல்லலாம்.
காமம் இல்லாத காதல் சாத்தியமுண்டா என என்னை சிந்திக்கவைத்தது நண்பர் இலக்குவணின் இந்த கவிதை.
சில மதிப்பீடுகளோடு
உண்மைக்காதலைத்
தேடிக்கொண்டிருக்கிறார்கள்
அவர்களுக்கு
தெரியாமல் பார்த்துக்கொள்
எனக்கு
உன் முலை
பிடிக்கும் என்பதை
உனக்கு
என் உடல் வாசம்
பிடிக்கும் என்பதையும்
எந்த காதலிலும் காமம் கலந்திருப்பது உண்மைதான். அதன் அளவுவிகிதம் மாறலாமே ஒழிய, இல்லையென சொல்லுவதற்கில்லை.. காமம் காதலின் அங்கம்தான் என்பது உண்மையென்றாலும் அதை எத்தனை பேர் ஏற்றுகொள்வார்கள்? இதை எதிர்ப்பவர்கள் அதிகம் பேர் இருக்கலாம்.
மீண்டும் அடுத்தபதிவில் சந்திக்கிறேன்.
Sunday, June 22, 2008
நானும் என் வலைப்பூக்களும்
அன்பு நண்பர் சீனா அவர்கள் என்னைபற்றியதொரு நல்ல அறிமுகம் ஏற்கனவே தந்து விட்டார். இருந்த போதிலும் என்னை பற்றி மேலும் நீங்கள் அறிந்துகொள்ள விரும்புவீர்களாயின் இதோ என் அறிமுகம்
நான் ஒரு ஒன்றரை வருடங்களுக்கு முன்னால் கூட நான் கவிதைகள், கதைகள் எழுதுவேன் என்று நினைத்தும் கூடப் பார்த்ததில்லை.
திடீரென என் தோழி ஒருவரின் திருமணநாளுக்காய் பரிசு வாங்கிவைக்க மறந்த சூழ்நிலையில் தான் அவசரமாய் ஒரு கவிதை எழுத தீர்மானித்தேன். அது தான் என் இரண்டாவது கவிதை. அப்படின்னா, முதல் கவிதை என்னவென்று கேட்கிறீர்களா?
அது நான் ஆறாம்வகுப்பில் படிக்கும் பொழுது எனது வகுப்பாசிரியர் மாணவர்கள் அனைவரையும் ஒரு கவிதை எழுதிவரச்சொன்னபோது நான் எழுதியது. அந்தக்கவிதை,
'நெற்கதிர்
ஏன் தலைசாய்ந்து நிற்கிறது,
அறுவடைக்கு செல்லும்
வெட்கமோ?'
அது நல்லாயிருக்குன்னு எனது ஆசிரியர் ஒரு வாரபத்திரிக்கைக்கு அனுப்பி அது பிரசுரமும் ஆனது. அதன்பின்பு இரண்டாவது கவிதைக்கு பதினைந்து வருடங்களாகி விட்டன.
ஆரம்பம் முதலே எனக்கு சித்தர் பாடல்களில் ஆர்வம் அதிகம். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னரே வாழ்ந்த அந்த சீர்திருத்தவாதிகளின் கருத்துக்கள் என்னை எப்பொழுதுமே கவர்ந்தவை. அதன் சாரத்தில் ஆரம்பத்தில் கவிதைகள் எழுத முயன்றேன். அதில் ஒரு கவிதைதான் நான் ஆரம்பத்தில் எழுதிய ஞானம்.
என்னை மிகவும் கவர்ந்த கதாபாத்திரமான கண்ணனை நினைத்து ராதையின் மனநிலையில் எழுதியது கடவுளர் காதல்.
ஐயப்ப அந்தாதியும், தாய்மடியும் என் நண்பர்கள் அதிகம் பாராட்டிய கவிதைகள்!
சமீக காலமாய் என் சகோதரர் மற்றும் நண்பர்களின் ஊக்கத்தால் சிறுகதைகளும் எழுத ஆரம்பித்துள்ளேன்.
மேலும் என் அலுவலக நண்பர்கள் அனைவரிடமும் என் தமிழ்கவிதைகளை மொழிபெயர்த்து சொல்லிசொல்லி சோர்ந்து போய், இறுதியில் ஆங்கிலத்திலும் எழுதவே ஆரம்பித்து விட்டேன். அதற்கான வலைப்பூவும் உண்டு.
என் சுயபுராணத்தை கொஞ்சம் அதிகமாகவே நீட்டி முழக்கிட்டேன்னு நினைக்கிறேன். இந்த வலைச்சரத்து மக்கள் என் வலைப்பூக்களின் பக்கம் அதிகம் வந்ததில்லை என்பதால் என்னைபற்றியும் என் வலைப்பூக்கள் பற்றியும் ஒரு தெளிவான அறிமுகம் தரலாம் என் நினைத்தேன்.
அடுத்த பதிவு முதல் என்னை கவர்ந்த பல வலைப்பூக்களை உங்களுக்கு சுட்டிக்காட்டுகிறேன்.
மேலும் நானும் இந்த வலைச்சரம் குறித்து மிக சமீக காலமகத்தான் அறிந்தேன். எனக்கும் ஆசிரிய வாய்ப்பளித்த நண்பர் சீனா அவர்களுக்கும் வலைச்சர நண்பர்களுக்கும் மிக்க நன்றிகளுடன் அன்பான நண்பர்களுடன் கைகோர்த்தே பயணிக்கும் உங்கள் கோகுலன்.
வழி அனுப்புதலும் வரவேற்பும்
ஒரு வார காலமாக நண்பர் பிரேம்குமார் அழகாக வலைச்சரம் தொடுத்து விடை பெற்றிருக்கிறார். நம்முடன் பயணம் செய்த, சுய அறிமுகத்தில், அவருடைய கவிதைகள் அறிமுகம் செய்யப்பட்டன. பயணத்தில் சக பயணியாக வந்த கவிஞர்களின் கவிதைகள், காதல் கவிதைகள், நினைவலைகள், சுட்டி மழலைகளிண் பதிவுகள், விடுபட்ட பதிவுகள் என பல தரப்பட்ட பதிவுகளை அறிமுகம் செய்து விடை பெற்றிருக்கிறார்.. அவருக்கு நன்றி கூறி விடை அளிக்கிறோம்.
----------------------------------------------------------
இவ்வார ( 23ம் நாள் முதல்) ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் அருமை நண்பர் கோகுலன் கண்ணன். இவர் தமிழ் கவிதைகளுக்காகவே ஒரு வலைப்பூவும், ஆங்கிலக் கவிதைகளுக்காக ஒரு வலைப்பூவும், சிறுகதைகளுக்காக ஒரு வலைப்பூவும் வைத்திருக்கிறார். அன்புடன் குழுமத்திலும் கவிதைகளால் கலக்கி வருகிறார். அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில்.. பீனிக்ஸ் (இணையம்) பல்கலைக்கழகத்தில் ஒரு மென்பொருள் பொறியாளராக இருக்கிறார். இவரையும் இவரது கவிதைகளையும் விரும்பும் ஒருவருக்காகக் காத்திருக்கிறார். விரைவில் ஒரு தேவதை வந்து அம்மாவுக்கு அடுத்த படியான' ...... ' இந்த இடத்தை நிரப்பிக்கொள்ள, நல் வாழ்த்துகள்.
நண்பரே வருக வருக ! தருக தருக கவிதைகளை ! அறிமுகப் படுத்துக அனைத்துக் கவிஞர்கள் மற்றும் சக பதிவர்களை !
----------------------------------------
சீனா .... Cheena
22.06.2008 இரவு 09.00
Friday, June 20, 2008
விடுபட்டவை
***
ஐ.டி. நிறுவனங்களில் பெருகி வரும் பாண்டு நடைமுறை பற்றி அழகாக விளக்குகிறது தமிழ்நெஞ்சத்தின் பதிவு.
வலைப்பதிவர்களில் பெரும்பாலானோர் தகவல் தொழில்நுட்பத்துறையை சேர்ந்தவர்கள் தான் என்ற போதும், அவ்வளவாக தகவல் தொழில்நுட்பக்காரர்களின் வாழ்வை பற்றிய பதிவுகள் வருவதில்லை. சீக்கிரம் வர வேண்டும் என்ற வேண்டுகோளை இங்கு வைக்கிறேன்
***
சமூகத்திலும் தினசரி வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பற்றியும் அதன் தாக்கங்கள் & அவை தரும் படிப்பினைகளையும் அழகாக தொகுத்து தருகிறார் பாலா அண்ணா தன் விடுபட்டவை பதிவுகளில்
ப்ரியனின் 'ப்' பக்கங்களிலும் இந்த வகை பதிவுகளை காணலாம்
***
வெவ்வேறு துறையில் இருக்கும் சில நபர்கள் ஒரு நாள் தகவல் தொழில்நுட்பத்துறையில் சேர்ந்தால் என்னவெல்லாம் லூட்டி அடிப்பார்கள் என்று யோசித்து நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார் சின்ன பையன்.யூகேஜி படித்த சிறுமி கேம்பஸில் தேர்வாகி விட்டால்!!!
என்ன நடக்கும் என்ற அவர் கற்பனையை பாருங்கள்
***
வேலை கிடைக்கவில்லை என்று இப்போதெல்லாம் யாராவது சொன்னால் சிரிப்புத்தான் வருகிறது. ஏனேனில் பல்வேறு வேலை வாய்ப்புகள் எங்கேங்கும் இருக்கத்தான் செய்கிறது. சில சமயங்களில் வேலைக்கான தகுதிகள் நம்மிடம் இருப்பதில்லை, அல்லது வேலை வாய்ப்புகள் குறித்து நமக்கு தெரிவதில்லை. தமக்கு தெரிந்த வேலை வாய்ப்புகளை பொதுப்பார்வைக்கு வைக்கிறார் கார்த்திகேயன் தனது 'ஜாப்ஸ் அவென்யூ' பதிவுகளில்
***
ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருந்துக்கொண்டே தான் இருப்பார்கள் என சொல்வதுண்டு. எப்படியாவது மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்த வேண்டும் என்று எப்போதும் ஒரு கூட்டம் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். சமீப காலமாக மீண்டும் செய்திகளில் 'வேலை வாங்கி கொடுக்கிறேன் என்று ஏமாற்றியவர் மாயம்' போன்றவைகளை கேட்க முடிகிறது. வேலை தேடுவோருக்கு ஒரு எச்சரிக்கை பதிவாக அமைந்திருக்கிறது 'வேலை தேடுவோர் ஜாக்கிரதை' பதிவு
***
முன்னேற்றம், நாகரீகம் எனும் காரணிகளைக் காட்டி இயற்கையை விட்டு மனிதன் எங்கோ தூரமாக சென்றுக்கொண்டிருக்கிறான். இயற்கையோடு கூடி வாழ்ந்தால் சுகமே என்று அறிவுறுத்துவதோடு எளிய இயற்கை (பாட்டி) வைத்தியங்களையும் சொல்லி தருகிறது பாட்டி வைத்தியம் பதிவு
***
இன்றோடு வலைச்சரத்தில் என் பயணத்தை நிறைவு செய்து கொள்ள எத்தனித்திருக்கிறேன். ஓரளவுக்கேனும என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என்ற எண்ணத்தோடு விடை பெறுகிறேன்.
வலைச்சரம் குழுவுக்கும் பின்னூட்டமிட்டும் வாசித்தும் ஆதரவு தந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்
வலைப்பதிவுகளில் எப்போதும் போல் ஒன்றாய் தமிழோடு பயணிப்போம்
நன்றியுடனும் வணக்கங்களுடனும்
உங்கள் சக பயணி
பிரேம்குமார்
Thursday, June 19, 2008
சுட்டிகளின் உலகிற்கு சுட்டிகள்
ஒரு குழந்தை செய்யும் மழலைக்குறும்புகளையெல்லாம் பதிவு செய்து அக்குழந்தை வளர்ந்தபின் அதற்கு கொடுத்தால் அதை விட நல்ல பரிசு என்ன இருக்க முடியும்? அப்படி இணையத்தில் இறைந்து கிடக்கும் மழலைக்குறும்புகள் பற்றிய பதிவுகளும் குழந்தைகளின் உலகைச் சார்ந்த பதிவுகளும் இன்று
***
ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு நேசிப்பாள் என்று சொல்ல தேவையில்லை। ஆனால் ஒரு குழந்தையாய் மட்டும் பாராமல், தன் சினேகிதியாகவே தன் குழந்தையை பாவிக்கிறார் கலையரசி. என் குட்டி சினேகிதி!
***
ஒரு குழந்தைப்பட்டாளம் நடத்தும் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கே நம்மை அழைத்து செல்கிறது முத்தலெட்சுமி அக்காவின் கோன் பனேகா கோரோர்பதி பதிவு
***
தன் குட்டி தேவதையின் ஒவ்வொரு செயலையும் உருகி உருகி ரசிக்கும் சந்தனமுல்லை நம்மையும் அந்த தேவதையின் குறும்புகளுக்கு சிரிக்க வைக்கிறார் பப்புஸ் டே அவுட் பதிவில்
***
முன்பு அக்கா சொல்ல சொல்ல அவளாக மனதில் உருவாக்கிக் கொண்ட காட்சிகள் எப்படியிருந்தனவோ தெரியவில்லை, தொலைக்காட்சியில் எல்லாக் கதைகளுக்கும் அனிமேசன் காட்சிகள் வர வர அவளால் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. “இப்ப கரடி வந்துடும், ராமு மரத்துல ஏறிக்குவான், சோமு கீழப் படுத்துக்குவான்” என அடுத்து என்ன நிகழப் போகிறதென அவள் சொல்ல, அதுவே அங்கே காட்சியாகவும் வர… அப்போது அவள் முகத்தில கண்ட பூரிப்பு ஆயிரம் பூக்களுக்குச் சமம் :)
***
இந்த பிள்ளைக்கு கதை சொல்லி தூங்கும் வைக்கும் முன்னே நான் முதலில் தூங்கிப்போகிறேன் என்பது தான் பல கதைசொல்லிகளின் குறை :)அப்படித்தான் ஐந்து தலை யானை முட்டைக் கதை வேண்டும் என்று அடம்பிடித்திருக்கிறாள் ஜனனி। அருட்பெருங்கோ அலறியடித்துக்கொண்டு ஒரு யானையின் மேல் ஐந்து தலை நாகத்தை உட்காரச் சொல்லிவிட்டு முட்டைக்கு எங்கே போவது என்று யோசித்துக்கொண்டிருந்த போது கொலைவெறியோடு யோசித்து ஆகாயநதி சொன்ன - ஐந்து தலை யானை முட்டைக் கதை
***
ஒரு குட்டிப்பாப்பா தன் அப்பாவுடன் சேர்ந்து அழகாய் சொல்லும் கதை கேட்கனுமா? கதை சொல்லி நிலா. சொந்தக்குரலில் சொல்லும் கதை
***
உலகையே பேசவைத்த மாண்டிசோரி முறைக்கல்வியை கண்டுபிடித்த மரியா மாண்டிசோரி பற்றியும் மாண்டிசோரி கல்வி முறை பற்றியும் தெளிவாக விளக்கிறார் புதுகை தென்றல்
***
போன வாரம் ரிலயன்ஸ் ப்ரேஷில் மளிகைப் பொருட்கள் வாங்கிக்கொண்டிருந்த போது ஒரு குழந்தை தன் அம்மா பின்னாடியே 'அம்மா, தாபிகானா சூ.... தாபிகானா சூ' என்று கத்தியபடியே சென்றது (வேறொன்றுமில்லை ட்ராபிக்கானா ஜீஸ் வேண்டுமாம்). எங்க மாமா பொண்ணுக்கு இரண்டரை வயது தான் ஆகிறது. குர்குரே என்றால் அவ்வளவு பிரியமாய் சாப்பிடுகிறாள். JUNK FOOD சாப்பிடும் பழக்கம் இப்போதிலிருந்தே ஆரம்பித்தால் உடல்நிலை என்னாவது? குழந்தைக்களுக்கான உணவு முறை பற்றி விளக்குகிறது பேரண்ட்ஸ் கிளப்பின் பதிவு
***
சொல்வதற்கு ஏதுமில்லை.... நீங்களே பதிவு பாருங்க :)
எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் - குசும்பன்
Tuesday, June 17, 2008
நினை(வலை)ச்சரம்
********************************************************************
அந்த காலத்தில் எல்லாம் மாடு பிடிப்பவன் தான் வீரன் என்று கொள்வார்களாம்। நம்ம எம்.ஜி.ஆர் கூட படத்தில புலி கூட எல்லாம் சண்டை போட்டிருக்காரு. ஆனால் அதையெல்லாம் விட பெரிய சாதனை இரவு அல்லது அதிகாலையில் ஒரு நாய் நிறைந்த தெருவில் தனியாக நடந்து வருவது. அத்தகைய நிகழ்வொன்றினை இங்கே விளக்குகிறார் ஜி.
********************************************************************
வெளியூரில் தங்கி வேலைப் பார்ப்பதில் ஏகப்பட்ட சிக்கல்கள் உள்ளன. அதில் தலையாய பிரச்சனை திடீர் என்று ஊருக்கு கிளம்பிப் போவது. தொடர்வண்டிகள் இருந்தால் சிக்கலில்லை. ஆனால் பேருந்தில் தான் பயணிக்க வேண்டும் என்றால் ? பேருந்து அமைவது கூட இறைவன் கொடுக்கும் வரம் போலும். நிறைய பேருக்கு நேர்ந்திருக்கக் கூடிய ஒரு சம்பவத்தை நகைச்சுவை ததும்ப எழுதியிருக்கிறார் அருட்பெருங்கோ. சுந்தரா ட்ராவல்ஸ்ல பயணம் செஞ்சுருக்கீங்களா?
********************************************************************
ஒரு வாலிபனுக்கு என்னவெல்லாம் துன்பம் வரலாம்? துணி துவைப்பதிலும் கூட எப்படியெல்லாம் தனக்கு இன்னல்கள் வந்தன என்று விவரிக்கிறார் செல்வேந்திரன்
********************************************************************
நட்பு ~ அந்த வார்த்தையைச் சொல்லும் மனதுக்குள் ஒரு சந்தோசப்பூ பூத்துவிடுகிறது. சாதி, மதம், இனம், வயது, மொழி எதையும் பார்க்காதது நட்பு. பாலின பேதம் மட்டும் பார்க்குமா என்ன? அதிகமாய் எதைப் பற்றியும் அலட்டிக்கொள்ளாத கல்லூரி பருவத்துப் பட்டாம்பூச்சிகள் செய்யும் கூட்டாஞ்சோற்றை பற்றி கோபிநாத் கூறுகையில் நாமும் கண் மூடி சில நேரம் நம் கல்லூரி காலத்திற்கு சென்று வரலாம்
********************************************************************
சென்னைக்கு வரும் எல்லோருக்குமே ஏதோ ஒரு விதத்தில் இந்தப் பட்டணம் நினைவுகளை தந்துவிடும். தான் சுற்றிப் பார்த்த சென்னையை பற்றி அழகாக நினைவுகூறுகிறார் தூயா
மீண்டும் பயணிப்போம்...
காதல் ! காதல் ! காதல் !
காதல் என்ற தலைப்பில் எழுதப்படும் எதுவுமே கவிதையாகிவிடும் என்றொரு கவிஞர் சொல்லியிருக்கிறார். மற்ற பாடுபொருள்களை காட்டிலும் காதலினால், காதலால், காதலுக்காக பாடப்பட்ட கவிதைகளே அதிகம்.
பயணத்தின் போது எதிர்ப்பட்ட சில அழகான காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
காதல் கடல்
என் வழித்தடங்களில் நடந்துவராதே
உன் சுவடுகள் படாத கோவத்தில்
கொந்தளிக்கிறது பொறாமைக்காரக் கடல்
வாரம் ஒரு தலைப்பு எடுத்துக்கொண்டு அதனை அழகாக தன் காதல் கவிதைகளோடு இணைப்பதில் வல்லவர் ஸ்ரீ
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
மழைக்கால கவிதைகள்
எந்த நிறத்தில்
மழைத்துளிக் கேட்டாய் ... ?
அதோ வானம் வரைகிறது வானவில்
தேர்ந்தேடுத்துக்கொள் ஏழில் ஒன்றை
காதலும் மழையும் இணைபிரியாதவை. ஒருவகையில் பார்த்தால் ஒருகுணமுடையவை. எப்போதும் பெய்யும், எப்போது பொய்க்கும் என்று தெரியாது. தீர்ந்த பின்னும் நெடுநேரம் இருக்கும் ஈரமும், தூண்டிவிட்டு சென்ற வாசமும்... இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்
பழனியின் மழைக்கால கவிதைகளில் நனையுங்கள்
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நீ-நான்
என்ன தைரியம் உன்மோதிரத்திற்கு?
24 மணி நேரமும் உன் விரலையே
கட்டி பிடித்து கொண்டிருக்கிறது
நான் பிடிக்கும் உன் விரலை
வேறு யாரையும் தொட அனுமதிக்கமாட்டேன்
சொல்லி வை உன் மோதிரத்திற்கு
பெண்கள் எழுதும் காதல் கவிதைகள் எப்போதும் தனித்துவம் வாய்ந்தவை. திரைப்பாடல்களிலும் சரி, கவிதைகளிலும் சரி ஒரு பெண்ணின் நிலையிலிருந்து எழுதும் ஆண் கவிஞர்களால் எப்போதுமே அதை முழுதாய் எழுதிவிட முடிவதில்லை.
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
காதல் மழை
தொடக்கமும் முடிவும்
அறியா
நெடுந்தூரப் பயணம்
காதல்
கண்ணாடியில் பெய்த மழை காதலாய் கிறுக்கியவை ...
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
நானும் ஒற்றை ரோஜாவும்
உன் நினைவுகளின் பிடியில்
நானும்
நீ கொடுத்த ஒற்றை ரோஜாவும்...
காதலின் நினைவாக ஒற்றை ரோசாவோடு வாடிக்கொண்டிருக்கும் பெண்ணை பற்றி கௌசல்யா அவர்களின் கவிதை
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
விதிவிலக்கா???
முத்தத்தின் வெம்மையில் தாளாமல்
முகம் நிமிர்கிறேன் நான்
தலையிலடித்துகொண்டு தாண்டிசெல்லும்
நம் பெற்றோரின் வயதொத்த பெரியவரும்
நம் தங்கையின் வயதொத்த சிறுபெண்ணும்
உணர்த்தினார்கள் வரம்புமீறிய இழிசெயலை...
எங்கும் நீக்கமற நிறைந்திருப்பது தான் காதல்। ஆனால் காதலுக்கு இடம் பொருள் ஏவல் தெரிய வேண்டாமா என்று கேட்கிறது தணிகை இந்த கவிதை
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன் பொண்டாட்டி
என்று முதல்முறை
கையொப்பமிட்ட உன் மின்னஞ்சலை
மீண்டும் மீண்டும் பார்க்கிறேன்!
ஒரே ஒரு வருத்தம் தான் எனக்கு
இதை எழுதும் போது
பொங்கிய வெட்கம் கலந்த சிரிப்பை
பார்க்கமுடியவில்லையே...
சார்லஸின் காதல் பொங்கும் கவிதைகளுக்குப் என்ன அறிமுகம் தந்துவிட முடியும்?
♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
உன் முத்துப்பதித்த
தொங்கு கம்மலின் நுனியில்
ஊசலாடும் ஒரு மழைத்துளிக்குள்
தெரிகிறது என் உயிரின் உருவம்
காதலும் நோய் தான் போலும். காமாலை கண்ணுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள் என்பது போலவே எங்கும் எதிலும் எப்போதும் காதலும் காதலியும் தான் தென்படுகிறது காதல் மனதுக்கு.
Monday, June 16, 2008
பயணத்தில் கவனித்த கவிதைத்தடங்கள்
என் அந்தரங்கம்
யாரோ ஒருவர் கையில் தன்
சாவியை திணிக்கின்றது!
உள்ளுக்குள் அலைக்கழிக்கும் ரகசியங்களை பற்றி அழகாய் சொல்கிறது செல்வாவின் "நட்சத்திர ரகசியங்கள் " கவிதை
***
வறுமை அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
ஏழைகளுக்கு...
வரு’மானம்’ அதிகரிக்க
ஆடை கிழிந்திருக்கிறது
நடிகைகளுக்கு...
சின்ன சின்னதாய் சிலிர்க்கவைக்கும் சில கவிதைகள் இருக்கின்றன தினேஷின் வலைப்பூவில்
***
முழுமை கொண்ட ஓர் உண்மை
முழு உண்மை பேசும் ஓர் தருணம்
தவறுகள் இல்லா ஓர் புரிதல்
புரிதலே தேவையில்லா ஓர் அறிதல்
தேவைகளின் பட்டியல் எப்போதும் தீர்வதில்லை கவிஞர்களுக்கு. தினேஷின் வேண்டும் பட்டியல்.
***
பிரியும்போதும் கேட்க வெட்கமாய் இருந்தது
மறந்துபோன அவன் பெயரை।
அவனுக்கேனும் நினைவிருக்குமா
என் பெயர்?
நிகழ்வுகளை அற்புதமாக கவிதையில் சொல்பவர் பிரபாகரன். அவரின் "அவனுக்கேனும் நினைவிருக்குமா" கவிதை எல்லோர் வாழ்க்கையோடும் தொடர்புப்படுத்திக் கொள்ளக்கூடியதொன்று
***
உச்சி சூரியன் காயும் மதியமொன்றில்
சுத்தமான கண்ணாடி ஜாடியில் வளர்க்க
எடுத்துச் செல்லப்பட்டானென்று
தெப்பமோடிய நாளின் முடிவில்
மற்ற மீன்கள் கிசுகிசுத்துக்கொண்டன।
போய் பார்க்கத்தான் நேரம் ஒழியவில்லை।
அனிதாவின் கவிதைகளில் உள்ள படிமங்கள் பல கதைகள் பேசும்.
***
கவிதைகளற்ற
இக்கணத்தில் எழுதத் துவங்கிவிட்ட
இந்த வார்த்தை குவியல்
நிச்சயம் கவிதையாயிருக்க முடியாது...
கவிதையாயிருக்க முடியாது என்று சொல்லும் சரவணகுமாரின் இந்தக் கவிதையும் அவரின் மற்ற கவிதைகளை போலவே ரசிக்கவே வைக்கிறது
மீண்டும் பயணிப்போம்...
உங்களோடு ஒரு பயணம்
மொழியோடு எங்கோ ஒரு ஓரமாய் பயணித்துக் கொண்டிருந்த என்னை, இங்கே எழுத வைத்த வலைச்சரம் குழுவிற்கு என் முதல் நன்றி। ஆயில்யனின் ஆர்ப்பாட்டமான வலைச்சரப் பதிவுகளுக்கு பின், "நாம் என்ன எழுதப்போகிறோம்?", "இப்படி அழகாய் சுவாரசியமாய் எழுத முயற்சியாவது செய்ய வேண்டும்" என்ற இரு எண்ணங்களும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கிறது மனதில்.
என்னைப் பற்றிய அறிமுகத்தை சீனா அய்யா ஏற்கனவே பதிந்துவிட்டார். 2006 முதல் பதிவெழுதிக்கொண்டிருக்கிறேன் என்றாலும் தொடர்ந்து செயல்படுவதில்லை. அனேகமாய் எல்லா பதிவுகளையும் படித்து வந்தாலும் பெரும்பாலும் பின்னூட்டம் இடுவதில்லை. அலுவலகத்தின் உள்ள இணையப் பிரச்சனைகளும் வேலை பளுவும் தான் முக்கிய காரணிகள்.
கவிதைகள் எழுதத்தான் முதலில் என் வலைப்பூ உருவாக்கப்பட்டது. கவிதைகளில் நல்ல தேர்ச்சி இல்லையென்றாலும் கவிதைகள் வாசிப்பது, கவிதைகள் எழுத முயற்சி செய்வது என்பன பிரியமான விசயங்கள்.
எப்போதோ பள்ளி நாட்களில் எழுதி நான் மட்டுமே படித்துப் பார்த்துக்கொண்ட நிலா கவிதையொன்றை பதிவில் இட்ட போது சின்னதாய் ஒரு மகிழ்ச்சி வரத்தான் செய்தது
முன்பெல்லாம் நீளமான கவிதைகள் எழுத மிக பிடிக்கும். அவ்வாறு எழுதியதில் மிகவும் விருப்பமானவை :
காதல் மான்கள் ~ புறநானூற்று மான் கவிதை புதுக்கவிதை நடையில்
இதயங்கள் ~ தாயின் அன்பை சொல்லும் கதையொன்று கவிதை வடிவில்
கடலைப் போட்டு பார் ~ வைரமுத்து பாணியில் விடலைகளின் கடலை பற்றி ஒரு கவிதை
ஆனால் பல சமயங்களில் நீள் கவிதைகள் எழுதுவது சிக்கல் தந்துவிடும். தொடக்கத்திலோ, முடிவிலோ எங்காவது சிக்கிவிடும். அதனாலேயே என் ஏடுகளில் இன்னும் உறங்குகின்றன பல முழுமையடையா கவிதைகள். அந்த பாதிப்பில் எழுதிய ஒரு கவிதை
சொல்லாமலே
தொடக்கமோ
முடிவோ
ஏதோ ஒன்று புலப்படாததால்
மனதிலேயே தங்கிவிட்டன
பல கவிதைகளும்
சில காதல்களும்
பிப்ரவரி 2007ல் ஆரம்பிக்கப்பட்ட காதல் கவிதைகளின் தொகுப்பு இது காதல் காலம் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மாதம் இந்த தொகுப்பை தொடர வேண்டும் என்பது என் விருப்பம் ;)
காதல் கார்த்திகை
சன்னிதி வாசல் யாசகர்களாய்
திரிகள் கூப்பி காத்துக்கிடக்கின்றன
விளக்குகள்
நீ இடப்போகும்
ஒளிப்பிச்சைக்காக
கார்த்திகைக்கு எழுதிய காதல் கவிதை இது। மொழியோடு நடந்த பயணத்தில் காதலின் சுவடுகளை காண "காதல்"
உரக்க சொன்னதில்லை நீ! என்ற என் கவிதையொன்று தான் முதன் முதலாக அச்சு வடிவில் ஒரு மாத இதழில் வந்தது। அதை சாத்தியமாக்கியது இணையம் தான் :)
சமுதாய கோபங்கள் பல இருந்தாலும் பெரும்பாலும் அதை வெளிப்படுத்த முடிவதில்லை। வலைப்பூவில் எழுதுவது அந்தக் கோபங்களுக்கு நல்ல ஒரு வடிகாலாக இருக்கிறது
கலைஞர் தொலைக்காட்சியில் நமீதா நடத்தும் தமிழ் கொலை பற்றிய பதிவிற்குத்தான் இதுவரை என் வலைப்பதிவில் அதிகம் வாசகர்கள் இருந்திருக்கிறார்கள்। நமீதா மட்டும் தான் தொலைக்காட்சிகளில் தமிழ் கொலை செய்கிறாரா என்றால் சத்தியமாய் இல்லை ;)
மேலும் என் எண்ணங்கள் சில...
உங்கள் அனைவரின் ஆதவரவோடும் இன்னும் ஒரு வாரத்திற்கு எனக்கும் உங்களுக்கும் பிடித்த நல்ல பதிவுகளை சுட்டிக்காட்ட முற்படுகிறேன்।
மீண்டும் பயணிப்போம்...
வாழ்த்தும் வரவேற்பும்
எப்படித்தான் இப்படிப் பதிவுகள் போடுவதற்கு நேரம் இருக்கிறதோ தெரிய வில்லை. இங்கு மட்டுமல்லாது தனது வீடான கடகத்திலும் கலக்கியது பாராட்டத் தக்கது. கும்மி குரூப்பினைக் கட்டினுள் வைத்து, கும்மிகளை தார்மீகமாகத் தடை செய்து, நன்றிப் பதிவுக்கு மட்டும் விதி விலக்கு அளித்த ராஜ தந்திரம் நன்று.
முப்பத்தொரு பதிவுகள் - மூக்கில் விரல் வைக்கும் சாதனை ! வலைச்சரத்தின் வரலாற்றிலேயே இல்லாத அளவு - இது வரை இருந்த சாதனையாளர்கள் இம்சை, மங்களூர் சிவா, சீனா ஆகியவர்களின் வரிசையில் முன்னிலை வகிக்கும் முதல்வனே !!! நன்றி நன்றி நன்றி - நல்வாழ்த்துகள்.
கொடுத்த பொறுப்பினை உழைத்து முடித்த முயற்சி உயர்வானது. மொழியினை, உறவினை, இறைவனை, நட்பினை, நடப்பினை, நகைச்சுவைப் பாங்கினை, மலரும் நினைவினை, சொந்த ஊரின் சிறப்பினை, மக்களை, விலங்கினை, இயங்கும் ஊர்தியினை ஒன்று விடாமல் உரைத்த பாங்கு சிறப்பானது. சீரிய சிந்தனை, நல்லுழைப்பு, இடை விடா முயற்சி இத்தனையும் சேர்ந்து சிறந்த பதிவாகி வலைச்சரத்தை மலைச்சரமாக்கியது உமக்கே உரிய பெருமை. நன்றி.
---------------------------------------------------------------------------
இந்த வார ஆசிரியராகப் பொறுப்பேற்கிறார் நல்ல நண்பர் பிரேம்குமார் சண்முக மணி. புதுவையைச் சேர்ந்தவர். கணினியியல் பொறியாளர். மொழியின் சிறப்பு என்னும் வலைப்பூவின் உரிமையாளர். நம்மில் ஒருவனாக நடை போடுகிறார். நல்ல கவிதைகளின் ஆர்வலர். கவிதைகள், காதல், நட்பு, சக பதிவர்கள் பற்றி பதிவுகள் இட்டிருக்கிறார். கவிதைப் பதிவுகளே அவற்றில் மகுடமாய் உள்ளது.
வருக வருக நண்பரே !!
வலைச்சரத்தில் வாரி போல் பதிவுகளைத் தருக தருக!
நல்வாழ்த்துகளுடன்
சீனா ..... (Cheena)
Sunday, June 15, 2008
நன்றி சொல்லவே உமக்கு....!
நலமாக வலைச்சரப்பணி செய்த காலம் கடந்தது! (ஒரு வாரம்தானாம்...!)
நன்றி சொல்லும்போது அனைவருக்கும் மகிழ்ச்சி இருக்கலாம்! ஆனால் சொல்லும் மனிதரின் மனதில் ஏதேனும் ஒரு சோகம் தயங்கி தங்கியிருக்கும் என்பது உண்மை!(இதெல்லாம் ரொம்ப ஓவரு அப்படின்னு ஃபீல் பண்ணாதீங்கப்பா!)
காயத்ரி அக்காவின் நட்சத்திர நன்றிகளோடு
இலவச கொத்தனாரின் நட்சத்திர நன்றிகளோடு
மோகன் தாஸின் நட்சத்திர நன்றிகளோடு
மலைநாடானின் நட்சத்திர நன்றிகளோடு
கண்ணபிரான் ரவிஷங்கரின்(KRS) நட்சத்திர நன்றிகளோடு
அபி அப்பாவின் நட்சத்திர நன்றிகளோடு
வலைச்சரத்தில் என் நன்றியினையும் கூறிக்கொண்டு ,
இந்த ஒரு வாரமும் என் வலைசர பதிவுகளுக்கு வந்து, பதிவுகளை பார்த்து,படித்து பின்னூட்டமிட்டு சென்ற பதிவர்களுக்கும், பார்த்து சென்ற பதிவர்களுக்கும், என் நன்றியினைகூறி வலைச்சரதிலிருந்து என்னை விடுவித்துக்கொள்கிறேன்!
நன்றி!
வணக்கம்!
பாட்டும் இவர்கள்! பாவமும் இவர்கள்!
அனைத்து வசதிகளும் கிடைக்க ஆரம்பிததுவிட்ட இணையம்!
24 மணி நேரமும் ஓடிக்கொண்டேயிருக்கும் இணைய வானொலிகள்
ஆடியோ ரீலிசான அடுத்த சில மணி நேரங்களில் இணையத்திலும் எப்படியோ ரீலிசாகிவிடும் அதிசயம்!
இத்தனை விஷயங்களையும் தாண்டி எந்தவொரு ஆயாசமும் இன்றி வந்துக்கொண்டிருக்கிறது தமிழ் திரைப்படப்பாடல்கள்! தொடர்ச்சியாக! ஒவ்வொருமுறையும் அவர்களின் பதிவுகளில் நிரம்பி நிற்கும் பாடல் பற்றிய உற்சாகங்களை பார்த்தாலே தெரியும் உங்களுக்கு...!
பல பதிவுகளில் பாடல் ஒசைக்கேட்டாலும் கூட அதி விருப்பமாய் மனம் அடித்து பிடித்துக்கொண்டுபோய் நிற்க வைக்கும் சில பதிவர்கள் தளங்கள்!
ரேடியோஸ்பதி (றேடியோஸ்பதி)
பதிவர்களின் விருப்பங்கள் அவ்வப்போது வந்து அசத்தி செல்கிறது! அதோடு மிகவும் பிடித்த போட்டி - நாம போட்டிக்கு கஷடப்படுறோமோ இல்லையோ கானா பிரபா ரொம்பவே கஷடப்பட்டு படத்தை பார்த்து அதிலேர்ந்து யாரும் ஈசியா கண்டுபிடிக்காத அளவுக்கு பின்ணணி இசையை பிரித்து சொல்றதுக்கே எனக்கு பொறுமை இல்லை! எவ்ளோ பொறுமையா செய்து முடிக்கும இவரின் இந்த வலைப்பதிவு!
۞۞۞۞۞
தேன்கிண்ணம்
இப்பத்தான்ய்யா ஆரம்பிச்சாங்கன்னு சொல்ற மாதிரி ரொம்ப குறுகிய காலகட்டத்தில இத்தனை பாடல் பதிவுகள் குறிச்சொற்களை வைத்து நாம் எளிதில் எடுத்து விட முடியும் நம்க்கு பிடித்த எந்த வொரு பாடலையும் குழுவில் தேனீக்களுக்கு ரொம்ப பிடித்தமான விளையாட்டுப்போல பாடல் பதிவது!
குறிப்பிட்டு சொல்ல வைக்கும் தேனீயாக மைஃப்ரெண்ட்டு! ஹலோ எனக்கு இந்த பாட்டு போடமுடியுமான்னா? கேட்டா..? இல்ல இப்ப நான் பிசி அப்பிடி இப்பிடின்னு எந்த ஒரு பதில் மெசேஜும் இருக்காது! அடுத்த கொஞ்சம் நேரம் கழிச்சு பாட்டு போட்ட செய்தியை அனுப்பிடுவாங்க!
۞۞۞۞۞
பாடும் நிலா பாலு!
தமிழ் சினிமா உலகில் பாலுவுக்கு தனி இடம் உண்டு என்றால் தமிழ் பதிவுலகில் எஸ்.பி.பியின் பாடல்களுக்கென் தனி இடம் இது பாடும் நிலா பாலு!
பாலு பாடிய பாடல்களின் பெட்டகச்சாலையாக காட்சியளித்துக்கொண்டிருக்கும் இந்த வலைப்பதிவில் அ - ஃ வரையிலான அனைத்துபாடல்களும் இருக்குங்க!
இசையின் மீது கொண்ட ஆர்வம்!
அலுப்பில்லாத உழைப்பு!
இவையிரண்டும் மட்டுமின்றி பாடல் கேட்போரின் பலத்த ஆதரவு இதுவே இன்று வரையிலும் இவர்களை இணையத்தில் இயங்க செய்துக்கொண்டிருக்கும் விஷயங்கள்!
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!
நம் விருப்பங்களை நிறைவேற்றும் இந்த வலைப்பதிவுகளிலும் மூலமும் கூட நீங்கள் நட்பின் முகவரிகளை நிறைய காணமுடியும் சென்று பாருங்களேன்!
மயிலாடுதுறை - ஊர்க்காரங்க சொல்றாங்க!!
வலைச்சரத்தில் ஊர்ப்பெருமை பேசாம விட்டா நல்லாவா இருக்கும்னு மனசுக்குள்ள கேள்வி எழவே இல்லை! ஏன்னா..! ஏற்கனவே தீர்மானமா முடிவு பண்ணுன விஷயம்தானே!
எங்க ஊர்க்கார பதிவர்கள் எல்லாருமே ஊரைப்பத்தி சொல்லியிருக்கும்போது வுட்டுட முடியும்ங்களா!
பிறந்தக பெருமை எனக்கு ஊரைப்பத்தின நினைப்பு வரும்போதெல்லாம் இந்த பதிவுகளுக்குள் முழ்கிவிடுவேன் ஏன்னா இவரு போன பாதைகளிலே நானும் பயணித்திருக்கிறேன்ல
எங்கள் கிராமமாகிய நல்லத்துக்குடி, மாயவரம் டவுன் ஸ்டேஷனில் இருந்து, அதாவது மயிலாடுதுறையின் சர்வதேச வரைபட எல்லைக்கோட்டில் இருந்து 'கொஞ்சூண்டு' உட்பட்ட இடம். கொஞ்சூண்டு என்றால் நிஜமாகவே கொஞ்சூண்டு தான். கால் மைலுக்கும் குறைவு. ஒரு அரைக்கால் மைல் இருக்கலாம். ஆனால், பனிக்கட்டி படர் இந்திய சியாச்சேன் மலை-பாகிஸ்தான், இஸ்ரேல்-பாலஸ்தீனிய எல்லைக்கோடுகளை விட இது அதி முக்கியத்துவம் வாய்ந்த சென்சிடிவ்வான இடம்.(இன்னும் கொஞ்ச தூரம் போன எங்க வீடு வந்துடும் தெரியுமா?)
பாகம் ஒண்ணு
பாகம் ரெண்டு
பாகம் மூணு
பாகம் நாலு
பாகம் அஞ்சு
பாகம் ஆறு!
۞۞۞۞۞
ஊருல இருக்கற தியேட்டரை பத்தின பதிவு இது புது புது படம் பார்க்கறதுக்கு அடிச்சு புடிச்சு போய் நின்ன ஞாபகங்கள் வருது! மயிலாடுதுறை வாழ் பெருமக்களுக்கு (முக்கியமாக சினிமாவில் ஆர்வமில்லாதவர்களுக்கும்) பியர்லஸ் தியேட்டரை பற்றி தெரியாமல் இருக்க முடியாது. சினிமா ரசிகர்களுக்கோ இது சினிமா பேலஸ்!
ரீலிஸான நாளன்று பாலம் முழுவதும் கூட்டத்தால் நிறைந்திருக்கும். வெயிலானாலும் மழையானாலும் கூட்டத்துக்கு பஞ்சமிருக்காது. ஆனால், தற்போது நிலைமை தலைகீழ்.
۞۞۞۞۞
எங்க ஊருல வார விடுமுறையை கொண்டாடணும்னா இங்க தான் நாங்க வருவோம் உசரத்தில போய் உக்காந்துக்கிட்டு சைக்கிளை திரும்ப மிதிக்காமலே சர்ருன்னு வர்றது இப்படியெல்லாம் செய்யலாம் இந்த இடததுல் எந்த இடம்ன்னு இவுங்க சொல்லியிருக்காங்க போய் பாருங்க!
மேலே போனதும் நடைபாதை மேலே சைக்கிளை வைத்துவிட்டு கீழே ரயில் வருவதையும் போவதையும் பார்த்துக் கொண்டே கேள்விகேட்க ஆரம்பித்துவிடுவோம். அந்த
கண்ணாடி போட்ட ரூமில் யாரு இருக்கா? அங்க இருந்து கொடுக்கராங்களே பெரிசா வட்டமா அது தான் சாவியா? விளக்கு ஏத்தறது பார்க்கரது கூட சந்தோஷம்..
۞۞۞۞۞
இதே மேம்பாலம்தான் ஆனா இவுருக்கு கொஞ்சம் அதி(டி)க அனுபவம் அதான் படமெல்லாம் கூட போட்டிருக்காரு!
அப்போது ஏழாங்கிளாஸ் படித்துக்கொண்டிருந்ததாக ஞாபகம். மேம்பாலத்தின் உச்சியிலிருந்து சைக்கிளை மிதிக்காமல் உருட்டிக்கொண்டே ஓட்டிவந்தால் காவேரி நகர் பஸ் ஸ்டாப் வரை போய்விட முடியுமா என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசை. ரோட்டோரமாய் நின்று கொண்டிருக்கும் லாரி சரக்கு போர்ட்டர்கள் எதிர்பார்த்த மாதிரியே எதிரே வந்த லாரிக்காரன் மீது சைக்கிளை மோதியதால் வாழ்க்கையில்...
۞۞۞۞۞
எங்க ஊரு பெரிய கோவிலை பத்தி ரொம்ப விரிவா அதேசமயத்தில ரொம்ப பொறுமையா,எல்லாரையும் கூட்டிக்கிட்டு போய் காமிக்கிறாரு அபி அப்பா இங்க இன்னும் அம்மன் கோவில் பாக்கி இருக்கு! அதுக்கு அப்புறமா கூட்டிக்கிட்டு போவாரு!
۞۞۞۞۞
மயிலாடுதுறையில இருக்குற நாலு கோவில்களில் இதுவும் ஒண்ணு
புனுகீஸ்வரர் கோயில்.. சின்ன வயசில் வாரத்தில் முக்கால்வாசி நாட்கள் கோயிலில் தான் சாயங்காலப்பொழுதுகள். வியாழன் தட்சிணாமூர்த்திக்கு ..அபிசேகத்திலிருந்து ஒருகை சுண்டல் வரை என்று ஆரம்பிக்கும் , வெள்ளிக்கிழமை விடுமுறை என்றால் துர்க்கைக்கு விளக்கு .. சனிக்கிழமை சனிபகவான் அர்ச்சனை, எள்ளுசாதம் ஒரு பிடி..
ஞாயிற்றுக்கிழமை வாரவழிபாடு.. அம்மா அப்பா போகும் இடமெல்லாம் நாங்களும்..
۞۞۞۞۞
எஙக ஊருக்காரரோட ஊர்ப்பயண அனுபவம்
இந்த வருடம் மயிலாடுதுறையில் குடியரசு தின விழாவில் பள்ளிக்குக் கொடியேற்றி, சிறப்புரையாற்றச் சென்றிருந்த போது.. குழந்தைகளுக்குப் பரிசு வழங்க வேண்டியிருந்தது.. அப்பொழுது தன் மகளின் ஆட்டத்தைக் காண வந்திருந்த ஒரு (ஏழை உழைப்பாளி) தந்தையை மேடைக்கு அழைத்து அவரையும் சில பரிசுகளை அவர் கையால் வழங்க வைத்தது...
۞۞۞۞۞
இன்னிக்கு வரைக்கும் முகமூடி போட்டுக்கொண்டிருக்கும் எங்க மாயவரத்துகாரரு! அனுபவம்!
ஒன்பதாம் வகுப்பில், முதல் தமிழ் மாதத்தேர்வு. நாங்கள் 5 பேர் கூட்டுத்தேர்வு (இதை ஆங்கிலத்தில் காப்பி அடிப்பது என்கிறார்கள்) எழுதியதில் எனக்கு மட்டும் கூட்டணியில் மட்டுமல்ல வகுப்பிலேயே முதன் மதிப்பெண் வந்தபோது கூட்டணி கட்சிக்காரர்களுக்கு மட்டுமல்ல, எனக்கும் ஆச்சர்யம்தான்... கூட்டணி தர்மத்தை மீறி உள்குத்தாக நான்கு பதில்கள் அதிகம் எழுதிவிட்டேனோ என்று சந்தேகத்தில் மார்க் ஆராய்ச்சி மேற்கொண்டதில் தமிழாசிரியர் எழுத்துப்பிழை, இலக்கணப்பிழைக்கு எல்லாம் கால் அரை மதிப்பெண்கள் குறைக்கிறார் என்பது அறிய வந்தபோது நான் கையறு நிலைக்கு தள்ளப்பட்டேன். ஒரு காலத்தில் எழுத்துப்பிழை இல்லாமல் மட்டுமல்ல, குற்றியலுகரம், ஐகாரக்குறுக்கம் முதற்கொண்டு இலக்கண ரீதியாகவும் இயல்பிலேயே சரியாக எழுத வாய்த்திருந்தது என்பதை நினைத்தால் இப்பொழுது பெருமூச்சுதான் விடமுடிகிறது.
۞۞۞۞۞
இதுவும் எங்க ஊரு மூக்கு அண்ணே!
அடிக்கடி போய் வந்தாலும் அலுக்காதது மாயவரம் மாயூரநாத ஸ்வாமி கோயில்தான். வருடம் முழுமைக்கும் ஏதாவது நடந்து கொண்டிருந்தாலும், ஐப்பசி மாதம் முழுக்க திருவிழாக் கோலம் பூண்டுவிடும் கோயில் அது. ஐப்பசி மாதம் முதலாம் தேதி கோயிலில் கொடி ஏறியதுமே, லேசாக மழை தூறி விடும். அன்று தொடங்கி, ஐப்பசி 30, கடைமுழுக்கு வரை, கோயில் புறப்பட்டு, ச்ந்நித்த் தெரு, வடக்கு வீதி, தெற்கு வீதி வழியாக, எங்கள் தெருவான மேலவீதி வந்து, பிறகு பட்டமங்கலத் தெரு வழியாக நேராக லாகடம்
۞۞۞۞۞
மாயவரத்துக்காரரு! இவரோட ஸ்கூல் படிப்பு + அப்படியே சினிமாவுக்கு போன செய்தி இது
'இலங்கைப்பிரச்னை'க்காக பள்ளிக் கூடங்களில் ஸ்டிரைக் நடந்து கொண்டிருந்த காலகட்டம். நேஷனல் ஹைஸ்கூலில் ரோட்டுப்பக்க ஜன்னல் ஓரமாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். பத்தரை மணி சுமாருக்கு ஸ்டிரைக்கை வெற்றிகரமாக முடித்த மற்ற பள்ளிக்கூட மாணவர்கள் ஒன்றாக திரண்டு எங்கள் ஸ்கூல் பக்கம் வரும் இரைச்சல் கேட்கும். மனசு உற்சாகத்தில் கரை புரள ஆரம்பிக்கும். அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஸ்டிரைக் காரணமாக ஸ்கூல் லீவு விட்ட 'பெல்' சப்தம் எழும். நாங்கள் சுமார் இருபது பேர் திடுதிடுவென விஜயா தியேட்டருக்கு ஓடுவோம்
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!
இன்னும் கூட நிறைய பேர் தமிழ் பதிவுலகத்தில் இருக்காங்க அவங்களும் சரி இவுங்களும் சரி இன்னும் நிறைய பதிவுகளை எழுதணும்ன்னு ஒரு கோரிக்கை வைச்சுக்கிறேன்ப்பா!
தலைப்பு வைக்க தெரியிலப்பா! - எல்லாமே சிரிப்புத்தான்!
இது ஒரு பெரிய தொகுப்புங்க! அவ்ளோதான் தலைப்பு வைக்கவும் தெரியல!
வ.வா.சங்கத்து ஆளுங்களுக்கு மலேஷியாவா சுத்தி காமிச்ச கதை இது ரெண்டு பார்ட்டா வந்த இந்த மேட்டர்ல எல்லா வ.வா.சங்கத்துல ஆளுங்களும் மைஃபிரெண்டு தன் கணினி தமிழால எவ்ளோ அடிச்சாலும் தாங்கிக்கிட்டே ஊரைசுத்தி பார்த்துட்ட வந்திருக்காங்க நீங்களே பாருங்களேன்!
۞۞۞۞۞
நீங்க பேய் பாத்தீருக்கிங்களா? இப்படித்தான் டைட்டில் அப்பவே முடிவு பண்ணிருப்பாரு போல குசும்பன் பதிவுல இருக்கிற மேட்டர்களை விட கமெண்ட்ல இருக்கிற மேட்ட்டர்கள் செம கலக்கல்தாங்க!
வளர வளர ரொம்ப தைரியசாலி ஆய்ட்டேன். கரப்பான் பூச்சிய மீசைய பிடிச்சி தூக்கறது, எலிய வாலப்பிடிச்சு தூக்கறதுன்னு (செத்தது தான்!) எல்லாரும் ஆச்சரியப்படற அளவுக்கு வீர சாகசமெல்லாம் பண்ண ஆரம்பிச்சேன்!! ஒரு முறை பெரிசா பெருச்சாளி ஒன்னை நான் அசால்ட்டா ஒரு கைல பிடிச்சிட்டு போன தகவல் தெரிஞ்சு "எனக்கு வால் (ள் இல்ல!) பிடித்த வீராங்கனை கவிதாயினி காயத்ரியோட இந்த பதிவு
இதுதான் ஹைலைட்!
பாவி குசும்பா.. எங்கம்மா கமெண்ட் எல்லாம் படிச்சி கண்ல தண்ணி வர்ற அளவுக்கு சிரிச்சிட்டு "உன் போஸ்ட்ட விட இந்த கமெண்ட்ஸ் நல்லாருக்கு" ன்னு இன்சல்ட் பண்ணிட்டு போய்ட்டாங்க. நல்லாருப்பா!
۞۞۞۞۞
ஜொள்ளித் திரிந்ததொரு காலம்...1 பார்ட்டு பாட்டா போட்டு தாக்கியிருக்காருங்க மெதுவா பொறுமையா அனுபவிச்சு படிங்க!
நான் சொல்லும் ஜொள்ளு எனப்படுவது யாதெனின், அகலாது அனுகாது, மனதைப் புண்படுத்தாமல், அப்புறம் நினைத்துப் பார்க்கும் போது உதட்டின் ஓரத்திலோ, மனதின் ஓரத்திலோ சம்பந்தப்பட்ட பெண்மணி உட்பட எல்லாருக்குமே ஒரு புன்முறுவல் வரவைக்குமே...அது..அந்த குறும்பு, சேட்டை, ஃபீலீங்...அதே தான். இந்த சேட்டை சில நேரங்களில் காதலாக டெவலப் ஆகி சில அபாக்யவான்களுக்கு கல்யாணத்தில் முடிந்திருக்கிறது
۞۞۞۞۞
தமிழ் பிளாக்கர்ஸ் முக்கியமான ஆளுங்கள இவரு கூட்டிக்கிட்டு போறாருங்க சன் டிவியில நிகழ்ச்ச்சிக்கு அங்க நடக்குற இல்ல இல்ல பேசுற கூத்துகள்தான் படிச்சு படிச்சு சிரிக்க வைத்த பதிவுகளில் இது
۞۞۞۞۞
கப்பி மொக்கையாக சொன்ன விஷயமாம் இது
வேலை பார்க்கற பில்டப்பை கொடுத்துட்டு இந்த பக்கமும் அந்த பக்கமும் நடந்துட்டிருக்க உடன்பிறப்புகள், மொய் எழுதற கோபக்கார மாம்ஸ், அவருக்கு அசிஸ்டெண்டா வருங்கால மொய் எழுத்தாளர், அவங்களை குழப்பறதுக்காகவே சுத்தி ஒரு குரூப்பு, முண்டா பனியனோட கிச்சன்ல ஒரு குரூப்பு, கொடுத்த காசுக்கு மேலையே காது கிழிக்கும் நாதஸ்வர ட்ரூப், தாலி கட்டினதும் கையில இருக்க அட்சதை தூவிட்டு திரும்ப சேர்ல உட்காராம அப்படியே பந்திக்கு போற மக்கள்ஸ், பந்தி ஆரம்பிக்கறதுக்கு அரைமணி நேரம் முன்னாடியே இலையைப் போட்டு சாப்பாடு அயிட்டங்களையும் போட்டு ஈ மொய்க்க விடற ஆபிசர்ஸ், டால்டா வாசனை மாறாத பொங்கல், நீச்ச தண்ணி காபி, காலி பக்கெட்டை இந்த பக்கமும் அந்த பக்கமும் கொண்டு போய் சீன் போடும் சித்தப்ஸ், சாப்பிடறதையும் விடாம படம்புடிக்கும் கேமராமேன், சாப்பிட்டு முடிக்கறதுக்குள்ள
۞۞۞۞۞
தன் பெயர் பிரச்சனைகளை கூறும் தருமி அய்யா!
நீங்களும் தமிழில் ‘சாம்‘ என்பதையும், ஆங்கிலத்தில் ‘Sam‘ என்பதையும் மனதுக்குள் சொல்லிப்பார்த்துக் கொள்ளுங்கள்; அப்போதுதான் என் பிரச்சனை என்ன என்பது அதன் முழுப் பரிமாணத்துடன் உங்களுக்குப் புரியும். அதுவும் என் பெயருடன் வேற்றுமை உருபுகளைச் சேர்த்துப் பாருங்களேன்:
குழலியைக் கண்டேன் - நல்லா இருக்கு; சாமைக் கண்டேன் - இது எப்படி நல்லாவா இருக்கு?
வீ.எம்மால் முடியும்; ,, சாமால்…ம்..ம்.. ‘’
முகமூடிக்கு நல்ல மனசு ‘’சாமுக்கு…எனக்கே பிடிக்கலை
ஷ்ரேயாவிடம் சொல்லுங்கள் ‘’ சாமிடம்..ஏதோ ‘சாமி மடம்’ மாதிரி இருக்கு.
துளசியின் செல்லங்கள் ,, சாமின்… Ho Chi Minh மாதிரி இல்ல?
ஸ்ரீரங்கனோடு பேசணும். ‘’ சாமோடு….நிச்சயமா நல்லாவேயில்லை
பாலாவுடன் தொடர்பு கொள்ளணும் ‘’ சாமுடன்…அவசரத்தில் தமிழ்சசியை தமிழச்சி
என்று வாசிப்பதுபோல சா மூடன் என்று வாசிக்கக்கூடும்
ஷ்ஷ்ஷ்ச் எப்படியெல்லாம் ஃபீல்பண்ணியிருக்காரு பாருங்க!
۞۞۞۞۞
இது உஷா அக்காவின் கலக்கல் காமெடிகளில் ஒன்று நானே நட்சத்திரம் ஆனேனே!
அட மறந்தே போயிட்டேனே, மொதல் இடுகை, தன்னடக்கத்துடன் பணிவான வணக்கம். கடைசி இடுகை நன்றி நவிதல்"
இடுகைன்னா...
அதுதாங்க போஸ்ட்!
"ரெண்டு மூணு கவிதைகள் இருக்கு, பின்னிரவில் முயங்கும் பூனைகளின் எச்சங்கள், மரணத்தவன் கை எழுதுகோல் சித்திரங்கள் .. அப்புறம்"
"பூனையா? காக்கா, குருவி போடுவதைத் தான் எச்சம்னு தமிழ்ல சொல்லுவாங்க"
"ஐயா சாமி! இது நவீன இலக்கியம், பூனை, எப்பவாவது நாய் ஆகிய ரெண்டே விலங்குகள் மட்டுமே கவிதையில வரும். மரணம், சாவு, தற்கொலை, இரவு, நிழல், மேல் தட்டு வர்க்க பார்வையில் கெட்ட வார்த்தைகளாய் சொல்லப்படும் சில சொற்கள்... இதெல்லாம் நவீன இலக்கியத்தின் இலக்கணங்கள். இதை மீறி யாராலும் நவீன கவிதையோ அல்லது கட்டுரையோ எழுதிட முடியாது!
۞۞۞۞۞
இது பரீட்சை ரிசல்ட பத்தின லக்கியோட பதிவு!
அப்பாவுக்கு என் மீதிருந்த நம்பிக்கை பயம் கொடுத்தது. என்ன எழுதி கிழித்திருந்தேன் என்பது எனக்குத்தானே தெரியும்? நான் படித்தது காமர்ஸ் க்ரூப்.
மச்சான். அது நம்ப டிஸ்ட்ரிக்ட் ரிசல்ட் இல்லேடா!”
“பரவாயில்லை.. பார்த்துக்கலாம். ஏதாவது ப்ரிண்டிங் மிஸ்டேக் ஆகியிருக்காதா என்ன?” செந்திலின் பதில் எனக்கு மகிழ்ச்சியை வரவழைத்தது. பையனும் காலி. சூப்பர்!
பின்னர் மதிப்பெண்கள் வந்தபிறகு கிடைத்த அதிர்ச்சி கொஞ்சநஞ்சமல்ல. மேத்ஸ் எக்ஸாம் ஆனந்தராஜை பார்த்து எழுதினேன். அந்த தறுதலை ஏகப்பட்ட அடிஷனல் ஷீட் வாங்கி எழுதினான். உலகத்திலே மேத்ஸ் எக்ஸாமை கற்பனை செய்து எழுதிய ஒரே நாயாக அவன் தான் இருப்பான்! சரி பதிவுதான் இப்படி சிரிக்கவைச்சுட்டாரேன்னு பின்னூட்டத்தை பாருங்களேன்!
PSV said...
நன்று. ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இங்கு வெளியிடப் பட்டுள்ளன.
லக்கிலுக் said...
பி.எஸ்.வி. அவர்களே! அங்கும் என் நம்பரை தேடிப்பார்த்தேன். காணவில்லை :-(
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்...!
1ம் இல்லைங்க படிச்சுட்டு நல்லா சந்தோஷமா சிரிங்க அவ்ளோதான்!
சுத்துறாங்க சுத்துறாங்க கொசுவத்தி சுத்துறாங்க!
மலரும் நினைவுகளை பகிர்ந்துக்கொள்வதில் எப்பொழுதுமே ஒரு சந்தோஷம்தான் அதுவும் ஒருவரின் பழைய நினைவுகளை பார்த்து, அதே போன்று அனுபவம் பெற்றிருந்தவருக்கும் மனதில் நினைவுகளோடு சந்தோஷம் பீறிட்டுக்கிளம்பும்!
இந்த கொசுவத்திகள் தனிமையின் இசை!
இந்த மாதிரி ஒரு கொசுவத்தி ஏத்தி பதிவுல புகை மண்டலத்தையே கிளப்பிய அபி அப்பா!
மாலை 4.00க்கு எல்லாம் எங்க வீட்டுல கூடிடுவாங்க. அதுல நீ எந்த கலர் புடவை நான் எந்த கலர் புடவை எல்லாம் முதல் நாள் முடிவுசெஞ்ச மாதிரி வந்து பார்த்தா ஏதாவது ஒரு சித்திக்கு புடவை சுமாரா இருக்கும்.அவங்க எல்லார் கிட்டயும் அவசரமா டாய்லெட் போகனும்ன்னு வீட்டுக்கு ஓடுவாங்க. திரும்பும் போது வேற பளிச் புடவைல வருவாங்க. "இவ இதுக்கு தாண்டி போயிருக்கா"ன்னு கோரஸா திட்டு விழும். அது வரை சும்மா இருக்கும் அம்மா எல்லாரையும் ஒரு நோட்டம் விட்டுட்டு உள்ளே போய் பன் கொண்டையோட வெளியே வந்து ஒட்டு மொத்த வயிதெரிச்சலையும் கொட்டிப்பாங்க
۞۞۞۞۞
கப்பி காலேஜு படிச்சப்ப நடந்துச்சாம் இது
கல்லூரியில் எல்லா வருடமும் டிசம்பர் 31-ம் தேதி இரவு திறந்தவெளி மைதானத்தில் இரண்டு திரைப்படங்கள திரையிடுவோம். அதில் கண்டிப்பாக 'பாட்ஷா' இருக்கும். 12 மணிக்கு சரியாக உடைந்த மரக்கிளைகளை ஒரு இடத்தில் சேர்த்து 'காம்ப் ஃபயர்' என்ற பெயரில் கொளுத்திவிட்டு ஆடலுடன் பாடலென குத்தாட்டம்.
۞۞۞۞۞
இது சின்ன அம்மிணியோட ஞாபகமிருக்கான்னு கேட்டு ஏத்துன கொசுவத்தி!
தெருநாய்க்கு ஜிம்மின்னு பேர் வைச்சு, அதுக்கு சோறு போட்டு வளத்தது; நொண்டி , நாலுகல் நடுரோட்டில விளையாடினது. இப்பேல்லாம் ரோட்டில இருக்கற போக்குவரத்துக்கு நடக்கறதே பெரும்பாடா இருக்கு. இதுல எங்க விளையாடறது.
۞۞۞۞۞
சைக்கிள் ஓட்ட கற்றுக்கொண்ட நம்ம வாக்கர் கோபி (மாசத்துக்கு ஒரு தடவை மட்டும் பதிவுலகில் நடக்கறதால) அனுபவம்!
வலது கால்ல ஒரே மிதிதான் இடது கால் முட்டியில சைக்கிள் பெடலலா ஓங்கி ஒரு அடி அப்படியே பொத்துன்னு விழுந்து சில்லரையை அள்ள வேண்டியது தான். பெத்த கடமைக்கு என்னையும் நாளைக்கு வேலைக்கு போற கடமைக்கு சைக்கிளையும் தூக்கிட்டு நம்ம தலையில ஒரு செல்ல தட்டு முதல்ல உன் சைசுக்கு இருக்குற வண்டியை ஓட்ட கத்துக்க அப்புறம் இந்த வண்டியை ஓட்டலாம்!
۞۞۞۞۞
பொங்கல் பற்றிய இவரின் கொசுவத்தி (ஆக்சுவலா இது பண்டிகை தலைப்புக்கு போகணும் ஆனா இவரு கொசுவத்தியில எனக்கு புகை மண்டலமா கிளம்பிடுச்சு!)
சின்னச் சின்னதாய்க் கோலங்கள் போட்டுக் கொண்டிருக்கையில் வீட்டிலிருந்து ஒவ்வொன்றாய்ப் பொங்கல் பொருட்கள் கொட்டாய்க்குக் கொண்டு வருவார்கள் அப்பத்தா.."எதயாவது ஒழுங்கா எடுத்து வைக்கிறாளுகளா.." என்று அவ்வப்போது வசவு முனகல்கள் மருமகள்களுக்காய். இரும்பு அடுப்பில் அரிசி மாவை வரிசை வரிசையாய் ஒழுக விட்டுப் போடும் மாக்கோலம், பொங்கல் வைக்கும் இடத்தில் கட்டம் கட்டிச் செம்மண் கோலம், கரும்புத் துண்டுகளில் மாலை, கட்சி வண்ணப் பெயிண்ட் பூசிய மாட்டுக் கொம்புகள்
۞۞۞۞۞
கூழ் வத்தல் செய்த கதைகளை சொல்லும் நானானி!
கிரிக்கெட் காப்டன் வீரர்களை பொசிஷன் செய்வதுபோல் ஓரோர் இடத்தில் அமர்ந்து கொண்டு, விஸ்வாமித்திரர் யாகத்தை ராமலட்சுமணர் காவல் காத்தது போல் காக்கைகளை அண்டவிடாமல் காவல் காப்போம்.
இடையில் நாங்கள் சின்னச்சின்ன கிண்ணங்களில் கூழை எடுத்து வைத்துக்கொண்டு கையிலெடுத்து வாயில் வழித்துவழித்து சாப்பிடுவோம். எவ்ளோ நல்லாருக்கும்
தெரியமா? அங்கேயே எங்க காலை உணவு முடிந்துவிடும்.
۞۞۞۞۞
நானானி போன்றதொரு கூழ் வடகம் பிழிந்த அனுபவத்தை பகிர்ந்துக்கொள்ளும் இன்னொரு பதிவர்
இருள் பிரியும் முன்னரே அனைவரும் எழுப்பி விடப் படுவோம். அம்மாவும் சின்ன பெரியம்மாவும் கையில் திணிக்கும் 'லொட்டு லொசுக்கு'சாமான்களை மேல் தட்டட்டி(மொட்டி மாடி)க்கு எடுத்துச் செல்வதும், அங்கு 'பராக்கு'ப் பார்க்காமல் காக்காய் விரட்டுவதும்தான் எங்கள் ட்யூடி!
இதுதான் கொசுவத்தியோட ஸ்பெஷாலிட்டி (பத்தவைச்சது முடியறதுக்குள்ள பல பேருக்கும் பத்திக்கும்!)
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்...!
நீங்களும், அப்பப்ப சமயம் கிடைக்கும்போதெல்லாம் நல்லா கொசுவத்தி சுத்துங்க! உங்களை பார்த்து நாலு பேரு நாலு கொசுவத்தி சுத்த ஆரம்பிச்சு அப்புறம் ஒரே புகைமண்டலாமாக்கிட்டுத்தான் அடுத்த வேலை பார்க்கணும் என்ன ஒ.கேவா?
மனசுக்குள்ளேயே வைச்சிருந்தேனாக்கும்! - ஆன்மீக பாடல்கள்!
சிறுவயதில் கேட்டிருந்த பக்தி பாடல்கள் இணையத்தில் கண்டு பின் கொண்ட சந்தோஷ வெளிப்பாட்டின் தொகுப்பே இது...!
சீர்காழியின் தமிழ் குழையும் குரலில் காலை வேளைகளில் பெரும்பாலும் தினமும் கேட்ட பாடலில் இதுவும் ஒன்று! இணையத்தில் பார்த்தேன் கேட்டேன் ரசித்தேன்!இப்போது இங்கு தருகிறேன்! கற்பூர நாயகியே கனகவல்லி குழுப்பதிவிலிருந்து
சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி
சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்
பெண்ணவளின் கண்ணழகை பேசி முடியாது
பேரழகுக்கு ஈடாக வேறொன்றும் கிடையாது
۞۞۞۞۞
வெள்ளிகிழமைகளிலும் ஞாயிற்றுகிழமைகளின் மாலையிலும் இந்த பக்தி மாலையில் மனம் மகிழாமல் இருந்தது கிடையாது! கற்பூர நாயகியே கனகவல்லி குழுப்பதிவிலிருந்து
படைப்பவள் அவளே காப்பவள் அவளே அழிப்பவள் அவளே சக்தி,
அபயம் என்று அவளை சரண் புகுந்தாலே அடைக்கலம் அவளே சக்தி,
ஜய ஜய சங்கரி கௌரி மனோகரி, அபயம் அளிப்பவள் அம்பிகை பைரவி,
சிவ சிவ சங்கரி சக்திமஹேஸ்வரி,
திருவருள் தருவாள் தேவி
திருவருள் தருவாள் தேவி
۞۞۞۞۞
இங்கு அயலகம் வந்த பிறகும் கூட, கூடவேகொண்டு வந்திருந்த சீர்காழியின் முருகன் பாடல்களில் வாரத்தில் பல நாட்கள் கேட்கும் இந்த பாடல்,ஏதோ ஒரு சமயத்தில் இந்த பதிவில் பார்த்தேன் மகிழ்ச்சியாக இருந்தது!
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி - என்
தலைவன் முருகனை தினம் தேடி - நான்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி!
அமிழ்தினும் இனிதான தமிழ்ப்பாட்டு - அந்த
ஆறுமுகம் மயங்கும் அதைக்கேட்டு - செந்
தமிழிசை பாடுகின்ற வானம்பாடி! - என்
தலைவன் முருகனை தினம் தேடி!
۞۞۞۞۞
கந்தர் சஷ்டி திருவிழா நாளில் வைத்தீஸ்வரன் கோவிலில் உறவினர் வீட்டில் முகாமிட்டு கொண்டாடியபோது இரவு காட்சி ஷண்முகம் தியேட்டரில் நான் பார்த்த அருணகிரிநாதர் திரைப்படம்! அப்பா ஆஹாஒஹோவென்று புகழ்ந்த படத்தின் இந்த பாடல் பல வருடங்கள் கழித்துத்தான் புரிந்துக்கொண்டேன்!
முருகனருள் பதிவிலிருந்து பாடல் ஒலியாகவும் ஒளியாகவும் தமிழ் வரிகளாகவும்....!
முத்தைத் தரு பத்தித் திருநகை
அத்திக்கு இறை சத்திச் சரவண
முத்திக்கு ஒரு வித்துக் குருபர ...... என ஓதும்
۞۞۞۞۞
மார்கழி மாதத்தின் காலை மாலை இருவேளைகளிலும் கூம்பு ஸ்பீக்கரில் அலறும் இந்த பாடல்கள் அப்போது யாருமே இதை டிஸ்டர்பன்ஸாக நினனக்கா விஷயம், இப்பொழுது நினைத்தால் ஆச்சர்யமாயிருக்கிறது! (ஆமாங்க அந்த காலத்து ஸ்பீக்கர் ச்வுண்டுல இந்த பாட்டு கேக்கறது இரு ஆனந்த அனுபவம்!)
மருதமலை மாமணியே முருகய்யா
தேவர்கள் கொண்டாடும் வேலய்யா அய்யா
கோடிகள் கொடுத்தாலும் கோமகனை மறவேன்
நாடியென் வினை தீர நான் வருவேன்
அஞ்சுதல் நிலை மாறி ஆறுதல் உருவாக
எழுபிறப்பிலும் உன்னை எட்டுவேன்..ஆ.
(வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் கோவை மருதமலை செல்கையில் ஏனோ தானாகவே மனதில் ஒலிக்கும் இந்த பாடல்!)
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்....
உங்களுக்கு பிடித்த பால்ய கால நினைவுகளில் நின்ற பக்தி பாடல்களை பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன்!
பண்டிகைகள் அல்லது விசேஷங்கள்!
சந்தோஷம் மிகும் விஷயங்கள் பெரும்பாலும் குடும்பத்தினர் அனைவரும் சேர்த்திருக்கும் விழாக்கள் பண்டிகைகள் சமய்த்திலேயே நிகழ்கின்றன அப்படிப்பட்ட விசேஷங்களின் அனுபவங்கள் இங்கு தொகுப்பாக...!
۞۞۞۞۞
தீபாவளி என்றாலே கொஞ்சம் அதிக குஷிதான் விதவிதமான இனிப்புகள் விதவிதமான உடுப்புகள் என்று அந்த அனுபவங்ளை பகிர்ந்துக்கொண்ட பல பதிவுகளில் சில மட்டும் இங்கு உங்களுக்கு தீபாவளி என்றாலே கண்டிப்பாக காலையில் இட்லி இருக்கும். என்னடா இவன் இட்லியை போய் இவ்வளவு பெருசா சொல்றானேன்னு நினைக்கலாம். எங்க ஊரில் காலையில் சிற்றுண்டி என்பதெல்லாம் பொதுவாக கிடையாது. ஒம்பது மணிக்கு சாப்பாடு தான். மதியம் ஏதேனும் சிற்றுண்டி, காப்பி கிடைக்கும்.
۞۞۞۞۞
இது சீனா அய்யாவோட தீபாவளி நினைவுகள்
தீபாவளி அன்று, தாயும் பாட்டியும் அதிகாலை இரண்டு மணிக்கெல்லாம் எழுந்து பலகாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். முடிப்பதற்கு மதியம் ஒரு மணி ஆகி விடும். நாங்கள் சிறுவர்கள் மெதுவாக ஒருவர் பின் ஒருவராக, காலை நான்கு மணியிலிருந்து, எழுந்து எண்ணெய் தேய்த்து, தூக்கக் கலக்கத்துடன் சுடு தண்ணீரில் குளித்து விட்டு துண்டைக் கட்டிக்கொண்டு காத்திருப்போம்.
۞۞۞۞۞
இது ஈழத்து நண்பரின் இனிய தீபாவளி.!
மடத்துவாசல் பிள்ளையாருக்கும் தீபாவளி நாள் தான் நிறையப் பட்டுத் துணிகள் கிடைக்கும். பூசை முடிந்து, கடைசியில சண்டேஸ்வரர் சுவாமியைக் கும்பிடேக்கை, புதுச் சட்டையில் இருந்து ஒரு நூலைப் பவ்யமாக இழுத்தெடுத்து, அந்த நூலைச் சண்டேஸ்வரருக்குச் சார்த்தி விட்டுக் கிளம்புவோம்!
۞۞۞۞۞
இது டுபுக்குவின் பண்டிகை நாள்
கார்த்திகை மாதம் வந்ததும் தினமும் வாசலில் இரு விளக்கு வைப்போம். திருநாள் அன்று பழைய விளக்கு எல்லாம் தேய்த்து வைத்து பின் ஈரம் போக துடைத்து வைப்போம்.
50 விளக்கு என்றால் 100 திரி திரிக்கச் சொல்வார்கள் அம்மா.இரண்டு இரண்டாக இடவேண்டுமாம் .அப்போதெல்லாம்..இன்று கிடைப்பது போல் திரி கடைகளில் வாங்கும் பழக்கம் இல்லை.பஞ்சை திரியாக்கி எண்ணி வைப்போம்..
۞۞۞۞۞
இவருக்கு சரஸ்வதி பூஜை சமயத்தில் வந்த விநாயகர் பற்றிய ஞாபகங்கள்
பரீட்சைக்கு கொண்டுபோய் எழுதும் பைலிலும் பிள்ளையாருக்கு மூலையில் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். மேலும் பரீட்சைத் தாளிலும் ‘பிள்ளையார் துணை’ என்று எழுதித்தான் ஆரம்பிப்பேன். பிள்ளையாரும் என்னைக் கைவிட்டதில்லை; அதன்பிறகு யாழில் இருந்தவரை வகுப்புப் பெண்கள் மனசு எரிய எரிய என்னை முதலாம் பிள்ளையாக வகுப்பில் வைத்திருந்தார்
(தட்ல இருக்கிறத அப்படியே கையால எடுத்து திங்க தோணுதுங்க!)
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!
குறையாகச் சொல்லவில்லை...மாற்றுங்களைய்யா...டீ.வி. பொட்டியிலிருந்து வெளி வந்து சந்தோஷமாக இந்த பண்டிகைகளை கொண்டாடுவோம்...குடும்பத்தோடு தெருவிற்கு வாங்கள்..(நன்றி டுபுக்கு!)
சங்கம் - பயமறியா பாவையர்கள்!
பயமறியா பாவையர் சங்கம் - பேரபார்த்துமே ஆஹா எதோ ஆண்களுக்கு எதிரான சங்கம் மாதிரி நினைச்சு ஃபீல் பண்ணாதீங்க அங்க இருக்கற அம்புட்டு பேரும் என்னோட அக்காக்கள்தான்! (மைஃப்ரெண்ட் சைடுலேர்ந்து கத்துறாங்க இல்ல இல்ல...! நான் தங்கச்சின்னு!)
அந்த மெம்பர்ஸெல்லாம் போட்ட்டு தாக்குன விஷயங்களதான் இது!
கடலை போடறது பத்தியும் அது சம்பந்தமான விஷயங்களையும் ரொம்ப விரிவாக ஆராயும் இந்த ப.பா.உறுப்பினரின் ஆய்வு உங்களுக்கு ரொம்ப முக்கியமானதாக இருக்ககூடும் என்று இங்கு இணைக்கப்படுகிறது!
வறுபட்டுடுச்சுனு நினைச்சு பாத்தா வறுபடாம இருக்குமாம். இன்னும் வறுபடலைனு நினைச்சு நல்லா வறுத்தா தீஞ்சு போயிடுமாம். அந்த மாதிரிதான் பொண்ணுங்ககிட்ட பாத்து ஜாக்கிரதையா பேசனுமாம். அதனாலதான் பசங்க பொண்ணுங்ககிட்ட பேசறத கடலை வறுக்கறதுன்னு சொல்வாங்களாம்
۞۞۞۞۞
இது ப.பா சங்கத்துல இருக்கற அம்புட்டு மெம்பர்ஸும் சேர்ந்து இல்லைல்லை தனி தனியா அடிச்ச லூட்டிஸ்களை அப்படியே தர்றேன் படிச்சுட்டு சிரிச்சுட்டு போங்க!
ப்யூட்டீஸ் அடிச்ச லூட்டீஸ்
۞۞۞۞۞
ஸ்டார்ட்.. கேமரா.. ஆக்க்ஷன்..
இதுவும் கூட ப.பா சங்கத்து மெம்பர்ஸெல்லாம் சேர்த்து எடுக்கப்போறதா நினைச்சு எடுத்த படம்!
ப.பா சங்கத்து ஆளுங்க செம கிரேட்ங்க (வாழ்த்தி சொல்லறதுக்கு இங்கீலீஸ் வேர்டு கூட வர மாட்டேங்குதேடா ஆயில்யா...! ) நல்ல திறமைசாலிங்கங்க! பாருங்களேன் ஒரு தீம் எடுத்துக்கிட்டு அதை ஒரே மெம்பர் கண்டினியூ பண்ணாம அல்லாருமே சேர்த்து அசத்தியிருக்கறதை!
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்.....!
ஒண்ணுமில்லைங்க ப.பா சங்கம் இப்ப நல்லா ரெஸ்ட் எடுக்குது! சீக்கிரத்திலேயே எழுந்து வந்து பழையபடி ச்சேசே புதியபடி அசத்தணும் அவ்ளோதான்!
ஆன்மீகத்தோடு வாழ்வு
திருநீறு பற்றிய SPVR சுப்பையா அய்யாவின் பதிவிலிருந்து
குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார் கள்.என்நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன.ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள். ஆகவே நீ ஒரு நாளும் உன்நெற்றிக்கு வெள்ளை அடிக்காதே.....!
உன் ஆன்மாவிற்கும், அறிவுற்கும் உகந்தது எதுவோ அதை மட்டும் செய்! மனதை நெறிப்படுத்து இந்த உடம்பு சாம்பல் ஆகப் போகிறது என்பதை நினைவிற் கொள்ள தினமும் இரண்டு முறையாவது இந்த சாம்பலிலான திருநீற்றைப்பூசிக்கொள்!
۞۞۞۞۞
சிங்கை கிருஷ்ணனின் திருமந்திரம் பற்றிய பதிவில் திருமுறைகள் சொல்லும் சேதி திருமந்திரத்தில்கூறப்பட்டிருக்கும் அடிப்படை சித்தாந்தம் பற்றிய சில செய்திக்ள்!
சைவ சித்தாந்தத்தில் இதற்கு முக்கியத்துவம் உண்டு. அதாவது சரியை. கிரியை, யோகம், ஞானம் ஆகியவைதான் மூலக்கூறுகள்.சரியை என்ற ஒழுக்கத்தாலும் கிரியை என்ற அர்ப்பணத்தாலும் யோகம் என்பது பொருந்தி இருந்தாலும் ஞானம் என்ற அருளால்
இறைவுணர்தலுக்கு சைவ சித்தாந்தம் வழி கோலுகிறது.
மேலும் உருத்திராக்கம் பற்றிய இவரின் பதிவில் பல செய்திகள் உருத்திராக்கம் பற்றி தெரிந்துக்கொள்ளமுடியும்
۞۞۞۞۞
புத்திமான் காணும் பொருள் எவையும் ஆன்மாவிற்
புத்தியால் ஒன்றல் புரிவித்தே - சுத்தமாம்
விண்ணென வொன்றாய் விளங்கிடு மான்மாவை
யெண்ணுக வெப்போது மே.
தான் காணும் பொருள் யாவற்றிலும், தன் அறிவினைக் கொண்டு ஆன்மாவில் இணைதலைச் செய்து காட்டுவர் உயர் ஞானம் பெற்றார்.
நான் யாருக்கு உதவி செய்தாலும் நான் செய்யும் அந்த உதவிக்கு எப்படி உதவலாம் என்று என்னை சந்தோஷப்படுத்த யோசித்து செயல்படும் அவர்களின் அந்த நல்ல மனம் தான்!
ஆத்ம்போதம் அழகாய் விளக்கமாய் இவரின் பதிவில் எப்பொழுது நேரம் கிடைத்தாலும் கண்டிப்பாக சென்று படித்து பாருங்கள்!
۞۞۞۞۞
ஆன்மீகம் சம்பந்தமாக சொல்லவேண்டுமென்றால் நிறைய விஷயங்கள் உண்டு உதாரணத்திற்கு நீங்க இங்கு செல்லுங்களேன்!
எத்தனை செய்திகள் எதையும் குறிப்பிட்ட சொல்லவே முடியாத அளவு அனைத்துமே கண்டிப்பாக தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள்!
நன்றி கீதாம்மா! தொடருங்கள் ஆன்மீக பயணத்தினை....!
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...
தினம் தினம் கடந்துபோகும் வாழ்க்கையில் மனதில் இன்பங்களும் துன்பங்களும் வந்து செல்லும் மனத்தில் கொஞ்சம் ஆன்மீகத்திற்கும் இடம் அளித்து வாழும் வாழ்க்கையில் நிம்மதியாக்கிகொள்வோம்
Saturday, June 14, 2008
ரஜி(ஜீ)னி!
எத்தனையோ மனிதர்களின் இதயத்திற்குள் இனம்புரியாத சந்தோஷத்தை கொடுத்துக்கொண்டிருக்கும் சொல்!
ஒவ்வொரு படத்தின் வரவுக்கும் காத்திருக்கும் ரசிகர்களின் கூட்டம்! தமிழகத்தில் ரஜினி என்பது மறக்கமுடியாத ஒரு பெயராக இன்றளவிலும் சின்னஞ்சிறு குழந்தைகளையும் ஈர்க்கும் சக்தியாக விளங்குவது எல்லோருக்கும் தெரிந்த, அதே சமயத்தில் வெளிக்காட்டிக்கொள்ளாத தகவல்!
ரஜினியை பற்றிய வலைப்பதிவுகள் பல பல வந்தாலும்,
வந்துக்கொண்டிருந்தாலும்,சிறப்பானதாய் இருக்கும் சில பதிவுகள் உங்களின் பார்வைக்கு!
இவர் ஆரம்பத்தில் ரஜினியை வெறுத்து பேசிக்கொண்டிருந்தவராம் ஆனால் பாருங்கள் நண்பனின் கருத்தில் இவருக்கும் ரஜினி ரொம்ப பிடித்தமானவராக மாறிய நிகழ்வினை பதிவில்...!
நம்ப வீட்டு குழந்தை தத்தக்கா பித்தக்கானு நடந்தாலும், தப்பு தப்பா பேசினாலும் அதை பார்த்து ரசிக்கத்தான் தோணுமே தவிர அதுக்கு நடக்க தெரியலை பேச தெரியலைன்னு கிண்டல் பண்ணத்தோணாது. அது மாதிரிதான் ரஜினி எனக்கு!"
அந்த சின்னக்கண்களையும், தவறான அழுத்தமில்லாத தமிழ் உச்சரிப்பையும் என்னை அறியாமலேயே ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அதுவும் அந்த "காதலின் தீபம் ஒன்று.. ஏற்றினாலே என் நெஞ்சில்.." என்ற பாட்டு! அது படமாக்கப்பட்ட விதமும் அதில் அவரது காதல் வயப்பட்ட மனநிலையை உணர்த்தும் அசைவுகளும் பயங்கர ரொமாண்டிக்காக இருக்கும்!
۞۞۞۞۞
ரஜினி பற்றிய தன் எண்ணங்களை பகிர்ந்துக்கொள்ளும் இவரின் பதிவில் முத்தாய்ப்பாக வரும் விசயம்!
என் தலைமுறைக்கு ரஜினி என்பவன் உணர்வுகளில் கலந்து விட்டான். பகுத்தறிவிற்கு முதலிடம் தரும் அன்பர்கள் இந்த உணர்ச்சியை வெற்றிக் கொள்கின்றனர். நான் உணர்வுகளால் ஆனவன் நான் இங்கு தோல்வியுறுகிறேன் எனக்கு ரஜினி என்னும் ஆளுமையின் தாக்கம் இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும்.
۞۞۞۞۞
ரஜினி பற்றியே சிந்தித்து, அவர் பற்றிய பல தகவல்களை தொகுத்து இணையங்களில் தந்த இவரின் முதல் ரஜினி சந்திப்பு அனுபவம் இப்படியாக....
இரண்டு நாட்களாக தேவதைகள் மாதிரி அந்தரத்தில் தான் நடந்து கொண்டிருக்கிறேன். வாழ்க்கையில் கடந்தது போன சந்தோஷமான தருணங்களை நினைத்து பார்ப்பது சுகம். என்னைப் பொறுத்துவரை அது போன்ற சந்தோஷ தருணங்களில் பெரும்பாலனவை ரஜினி சம்பந்தப்பட்டவை.
۞۞۞۞۞
ரஜினி பற்றிய இவரின் பார்வை மற்றவர்களிடமிருந்து மாறுபட்ட பார்வையாக பதிவாக...
அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா ? நடிப்பா ? முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலயும் சாவு, நூறுலயும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.
ரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ? ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் !
۞۞۞۞۞
சூப்பர் ஸ்டாருக்கு ஒரு சூப்பர் கச்சேரி வைச்ச சென்னை கச்சேரி தேவ் அண்ணா!
தன்னோட வெற்றியைத் தனக்குன்னு கொண்டாடமல் இறைவனின் பாதம் சமர்ப்பிக்கும் அந்த குணம்.மதவாதியோன்னு நினைக்கத் தோன்றினாலும்... மதம் என்பதோடு மனதோடு என்று இவர் எப்போதோச் சொன்னதாக ஞாபகம்...!
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...
ரஜினி சொன்னதையே மறுக்கா சொல்லிக்கிறேன்ப்பா!
பெரிய லட்சியமென்று எதுவும் இல்லை..லட்சியமாவது புடலங்காயாவது.. சுகமாக, சந்தோஷமாக, நிம்மதியாக வாழ்ந்து ..கூட இருக்கிறவங்களையும் சந்தொஷமா வாழ வைக்கணும் அவ்வளவுதான்" -ரஜினி
எட்டிப்பிடித்த எட்டுக்கள்!
தமிழ்பதிவுலகில் இந்த எட்டு விளையாட்டு எல்லோரையும் ஆர்வத்துடன் அழைத்து வந்திருந்தது ஒரு காலத்தில்..!
அந்த எட்டுகளில் நான் எட்டிப்பிடித்த எட்டுக்கள்!
அருணா ஸ்ரீனிவாசன் அவர்களின் 8
நாம் எவ்வளவுதான் சாதாரணமானவர்களாக இருந்தாலும் நம் வாழ்க்கையில் மனம் நிறைந்த அனுபவங்கள் இல்லாமல் இருக்காது. அதனால் சாதனை என்று இல்லாவிட்டாலும் இதம் தரும் அனுபவங்கள் என்ற வகையில் சிலவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுவதால் - இதோ என் வரிசை.
۞۞۞۞۞
மதுமிதாவின் 8 ல் ஒன்று இது..
மனித மனங்களின் அதிநுட்ப வேறுபாடுகளை அறியும் பக்குவம் வளர்ந்த காலகட்டம். குடும்பம், சமூகம் குறித்த எல்லா கோணங்களின் இயல்பையும் அறியும் ஆர்வம் வளர்ந்தது. உறவுகளின் மனச்சிக்கல்கள், பிரிவுக்கு நிர்ப்பந்தப் படுத்தும் சூழல் எல்லாமே கற்றுக் கொடுத்தவை ஏராளம்!
۞۞۞۞۞
மாலனின் 8 ஆரம்பிக்கும்போதே, என் வாழ்க்கை என்னால் தீர்மானிக்கப்பட்டு நடத்தப்படவில்லை.கணியன் பூங்குன்றன் சொன்னதைப் போல, நீர் வழிப்படும் புணை போல (ஆற்றில் மிதந்து செல்லும் கட்டை போல) அது போய்க் கொண்டிருக்கிறது.
உண்மைதான் எட்டுக்குள் சென்று பாருங்கள் சிறப்பாய் இருக்கும்! (நான் மிகவும் ரசித்த 8)
۞۞۞۞۞
ஏழரையில் ஆரம்பிக்கும் 8 அமீரகத்து அண்ணாச்சியோடது! (நான் மிகவும் ரசிதது சிரித்த எட்டு!)
இந்த எட்டு ஆட்டத்தை நெனச்சா பதிவுலகத்துக்கு ஏழரையும், பதிவு எழுதுறவங்களுக்கு அரையும் இருக்குன்னு தெளிவாவே தெரியுது. கோட்டித்தனத்துக்கு அளவேயில்லாம போய்க்கிட்டிருக்கு. கோட்டித்தனம்னு வந்ததுக்கப்புறம் நாம இல்லன்னா எப்படி
۞۞۞۞۞
நுனிப்புல் உஷா அக்காவின் 8
இலவசம் கூப்பிட்டாஹ, இப்ப கவிதா கூப்பிடராஹான்னு கரக்காட்டக்காரனில் கோவை சரளா பீற்றிக் கொண்டா மாதிரி நானும் ஆரம்பிக்கிறேன். ஏதோ ஏழைக்கு தகுந்த எள்ளுருண்டையாய் தேடிப்பிடித்து என் பெருமைகளை பறை சாற்றுகிறேன்!
۞۞۞۞۞
இது அய்யனாரு 8 படிச்சுப்பாருங்க ரொம்ப இண்ட்ரஸ்டிங்கா இருக்கும்!
எந்த ஒரு புள்ளியிலும் தேங்கிடாத,தேங்க விரும்பாத என் சிக்கலான மனம்.அலைவும் திரிபும் என் இயல்பான குணமாய் அமைந்து விட்டது.இந்த குணத்தினால் நிறைய சிக்கல்களைத்தான் அதிகம் சந்தித்து முடிந்தது என்றாலும் கிடைத்த அனுபவங்கள் அனைத்தும் அற்புதம்.என் 9 வருட பணி அனுபவத்தில் இதுவரை 10 நிறுவனங்கள் மாறிவிட்டேன்.தமிழ்நாட்டின் முக்கிய நிறுவனங்களில்,நகரங்களில் எல்லாம் வாழ்ந்தாயிற்று.இப்பாலைக்கு வரும்போதும் எவ்வித பின் யோசனைகளும் இல்லாமல் ஒன்றிலிருந்து தப்பிப்பது மட்டுமே பிரதான நோக்கமாக இருந்தது மிகுந்த பெருமையிருந்தது.
۞۞۞۞۞
இது சர்வேசனோட 8 அந்த டைமிங்கல எல்லாரும் மாஞ்சு மாஞ்சு ரொம்ப சீரியஸா எட்டுபோட்டிக்கிட்டிருக்கும்போது இவரு எட்டை எட்டிபார்த்துட்டு அப்படியே ஆ...ன்னு ஆச்சர்யபாட்டு போக கடைசியில் என்னோட எட்டு எல்லாம் ஏட்டுல மட்டும் எழுதறதுக்குத்தான் சொல்லியிருக்காருங்க
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!
இந்த எட்டுக்கள் மட்டுமல்ல இன்னும் எத்தனையோ வித்தியாசமான சொன்ன எட்டுக்களுக்கும் கூட உண்டு நீங்களும் எட்டுகளை பதிவுகளில் கொட்டிப்பாருங்களேன்! (லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா இருக்கும்ல!)
பஸ் பயணம் - போலாம் ரைட்!
ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதிகம் பிரயாணப்படுவது பெரும்பாலும் பஸ் மூலமாகவேத்தான் இருக்கும்! காலங்களின் மாற்றங்களுக்கேற்ப வாகனங்களின் வகைகள் மாறினாலும் கூட பல்வேறு வகையான மனிதர்களினை படிக்கும் இடமாக விளங்கும் பஸ் பயணங்கள் பற்றிய சுவையான பதிவுகள்...!
அருட்பெருங்கோவின் சுந்தரா டிராவல் பயணம் இது...!
அண்ணே. ஒரே பொகையா இருக்கு. அந்த கண்ணாடிய கொஞ்சம் தெறந்து விடுங்களேன்’னு அவருக்கு முன்னாடியிருந்த கண்ணாடிய காட்டி கேட்டேன். இன்னும் கடுப்பாகி என்ன பார்த்து மொறைக்க ஆரம்பிச்சாட்டார். அமைதியே ஆனந்தம்ங்கற தத்துவம் அந்த பார்வைல எனக்குப் புரிஞ்சது...!
என்னமோ டீசலே இல்லாம வண்டியோடற மாதிரி ரெண்டு ஓட்டுனர்ங்க முகத்துலையும் அப்படி ஒரு வெற்றிப்புன்னகை. நாங்களும் ஒரு ஆர்வத்துல கையெல்லாம் தட்டிட்டோம். அதுக்கப்புறம் வண்டியோட தாலாட்டுல நானும் தூங்கிட்டேன்!
۞۞۞۞۞
என் தம்பி டிரைவர், நான் கண்டக்டர் ரெண்டு பேரும் வாயாலேயே பஸ்சை ஓட்டிக்கிட்டுப் போவோம். எங்க வீட்டு மாடிக்குப் போற ஒரு படிக்கட்டுல என் தம்பி ஒக்காந்துக்குவான், படிக்கட்டுக்கும் செவுத்துக்கும் நடுவுல இருக்குற ஒரு சின்ன இடுக்குல ஒரு மொத்தமான குச்சியைச் சொருகி வச்சிக்குவான், அது தான் எங்க பஸ்சோட கியரு. நான் கண்டக்டராச்சே? என்னோட தொழிலுக்கான உபகரணங்கள்னு பாத்தா அம்மாவோட பழைய ஹேண்ட்பேக் ஒன்னு... அது தான் நம்ம கண்டக்டர் பை. அதுக்குள்ளே ரெண்டு விசில் கெடக்கும்...10 காசு 20 காசுன்னு சில்லறை கொஞ்சம் இருக்கும்(அப்போ தான் பையைக் குலுக்குன்னா கண்டக்டர் பையைக் குலுக்கற ஒரு எஃபெக்ட் கெடைக்கும்), அதோட பழைய பல்லவன் பஸ் டிக்கட் நெறைய இருக்கும்
இப்படியாக இவரோட அனுபவம் போகுது அப்படியே அவர் பின்னாடியே போய் பாருங்க பஸ் பயணம் ரொம்ப சூப்பரா இருக்கும்!
۞۞۞۞۞
கப்பியின் பஸ் பயணங்கள் கூட, விதவிதமான பிரயாணிகளின் சந்திப்புக்களை தந்து செல்கிறது!
ஒவ்வொரு பயணத்தின் போதும் ஒரு வயதான கிழவி உட்கார இருக்கை கிடைக்காமல் தரையில் அமர்வதும் நடத்துனரோ அல்லது ஒரு நடுவயது பெண்மணியோ அவளை எழுப்பி விடுவதும் தவறாமல் நடக்கிறது
எத்தனை முறை பேருந்தில் பயணம் செய்தாலும் ஒவ்வொரு முறையும் பேருந்தில் ஏறி அமர்ந்ததும் அது நாம் போக வேண்டிய இடத்திற்கு தான் செல்கிறதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடிவதில்லை.
۞۞۞۞۞
பயணங்கள் எப்பொதுமே சுவையானவையாக சிலரால், மிகச் சிலரால் அறியப்படுகிறது. எனக்குப் பயணங்கள் பெரிதாக ருசிப்பதில்லை. அவற்றைவெறுப்பதும் இல்லை. வாழ்கையில் பல விஷயங்கள் எனக்கு அப்படித்தான் என்று கூறும் இவரின் பதிவில் நிறைய அனுபவங்கள்
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுகோளாய்...!
விதவிதமான மனிதர்களை சந்திக்க உங்களுக்கு விருப்பம் இருந்தால்,நீங்களும் பஸ் பயணங்களை அதிகம் மேற்கொள்ளுங்களேன்....!
வானொலிக்கால நினைவுகள்!
வானொலி கேட்டுக்கொண்ட்டே நாட்களை நகர்த்துவது என்பது ஒரு சுகானுபவம்தான் அதுவும் என்னைப்போன்றவர்களுக்கு ரேடியோ ஆன்லைன்னில் எப்பொழுதுமே போய்க்கொண்டேதான் இருக்கும! ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் சின்ன வயதில் சலிப்பாக தெரிந்திருந்தாலும் இப்போது
நினைத்துப்பார்க்கையில் ஒரு இனம்புரியா மகிழ்ச்சியை அளிக்கும் விஷயமாகவே உள்ளது!
என்னைப்போலவே இன்னும் பலரின் எண்ணங்கள் இங்கே...!
ஒரு பகுதிநேர வானொலி அறிவிப்பாளரின் எண்ணங்களில் வானொலி நினைவுப்படுத்தும் விளம்பரம் - கண்டிப்பாக தமிழ்நாட்டின் மூலை முடுக்கிலெல்லாம் கூட இந்த விளம்பரம் கேட்காத ஆட்கள்லே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபலமான விளம்பரம்! என் அத்தானின் வயலினிலே அருவி போல் தண்ணீரு பாயுதே, பினலெக்ஸ் பைப்பின் ஜாலமே தங்கமே தங்கமே இது" முதல் அடிகளைப் பெண்குரலும் இரண்டாவது அடியை ஆண்குரலுமாகப் பாடும் சென்னை வானொலியின் விவசாய நிகழ்ச்சியின் விளம்பரப்பாடல்!
۞۞۞۞
கப்பியின் வானொலி தொடர்பான நினைவுகள்!
ஆகாசவாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண்ஸ்வாமி" இது தான் அந்த நாட்களில் படுக்கையிலிருந்து எழ அலாரம். அதிகாலையில் எழுந்ததுமே அப்பா வானொலியை உயிர்ப்பித்துவிடுவார். சுப்ரபாதம், பக்திப் பாடல்கள், "ஏசு அழைக்கிறார்", நாகூர் ஹனிபாவின் கம்பீரக் குரலில் பாடல்கள் என்று ஆரம்பிக்கும். அப்போது விழிப்பு வந்தாலும் போர்வையை இழுத்துப் போர்த்தி அரைத்தூக்கத்தில் படுத்திருப்பது பரமசுகம்
۞۞۞۞۞
சின்னகுட்டியின் வானொலி கிரிக்கெட் நேரடி ஒலிபரப்பு நினைவுகள்!
உந்த கிரிக்கற் மச்சுக்கள் நடந்தால் காதோரம் வைத்து உந்த டிரான்சிஸ்ட் பெட்டிகளோடு மாரடிச்சு கொணடிருப்பன். விடிஞ்சால் பொழுதுவிட்டால் உதோடை கிடக்கிறாய் மோனை வேற வேலை வெட்டி இல்லையே அதாலை போன அப்பம்மா புறு புறுத்தண்டு போகுது.
۞۞۞۞۞
வானொலியை தோழியாக்கி அதன் அருமை பெருமைகளை சிலாகித்து சொல்லும் இவரின் வானொலி பற்றிய பதிவு!
۞۞۞۞۞
தினமும் சீக்கிரம் எழுந்து வானொலிச் செய்திகளைக் கேட்டு செய்திகளை கொஞ்சம் விரிவாக தயார் செய்ய ஆரம்பித்தேன். 7 மணிக்கு அல்லது 7.30 மணிக்கு (நேரம் சரியாக நினைவில்லை) வானொலியில் மாநிலச் செய்திகளை சரோஜ் நாராயணசுவாமி வாசிப்பார். அவரது குரல் மிக மிக தெளிவாகவும், கம்பீரமாகவும் இருக்கும். நான் பள்ளியின் அதிகாரப்பூர்வ செய்திவாசிப்பாளனாக இருந்த காலக்கட்டத்தில் இருந்து இன்று வரையிலும்
இணைபிரியாமல் வானொலி பற்றி சொல்லும் இவரின் லுக்கான பதிவு!
۞۞۞۞۞
இன்னப்பாடல் தான் என்றில்லை விளம்பரப்பாடல்கள் கூட கூடவே பாடுவேன். மழைக்காலம் வந்தால் அந்த ரேடியோ பாடாது . அதுக்கு குளிரடிக்கும் போல. பின்னர் அதை கொஞ்சம் வெயிலடிக்கும் போது கொண்டு போய் மாடியில் காயப்போட்டால் பாடும். தட்டி கொட்டி பாடும்!
கூடைக்குள்ள வைத்து தேரோட்ட சத்தங்களையும் வாத்தியங்களையும் கோயில் மணி சத்தங்களையும் பதிவு செய்திருக்கிறோம் . அதைக் கேட்கும் போது அங்கேயே இருக்கும் உணர்வைத்தரும். - இப்படியெல்லாம் பல சிறுமுயற்சிகள் பண்ணுனவங்க பதிவு !
۞۞۞۞۞
சென்னை கச்சேரி தேவ் ரசிச்சு ரசிச்சு பாட்டு கேட்ட அனுபவங்களை பாருங்களேன்!
மதியம் நல்லா சாப்பிட்டுட்டு ரூம் கதவைச் சாத்திட்டு வெயில் ஜன்னல் வழியா வருவதை திரைப் போட்டு பாதி தடுத்தும் தடுக்காமலும் மல்லாக்கப் படுத்துகிட்டு ரேடியோவைப் போட்டா அந்த அனுபவம் இருக்கு பாருங்க அட்டகாசம் பொழுது பக்காவாப் போகும்...
۞۞۞۞۞
வானொலி நிலையங்கள் பற்றியும் வெவ்வேறு காலகட்டங்களில் பிரபலமாக இருந்த வானொலி அறிவிப்பாளர்கள் பற்றியும் ஒரு தகவல் பெட்டகமாக இந்த வலைப்பூவில்
۞۞۞۞۞
இருக்கும் இடத்திலிருந்து விடுக்கும் வேண்டுக்கோளாய்...!
நீங்கள் செய்யும் பணி தடையின்றி எந்தவொரு இடையூறும் இன்றி அதே சமயத்தில் மகிழ்ச்சியோட வைத்திருக்க உதவும் வானொலிப்பெட்டியை பயன்படுத்திப்பாருங்கள்! பின் பதிவிட்டு தாருங்கள் உங்கள் அனுபவங்களை!