வலைச்சர குழுவினருக்கு ஒரு பூங்கொத்து
சி. அ: அப்போ வலைச்சரத்துல நல்ல ஆரம்பம் விநாயகரோட, அடுத்ததா யாரைப்பத்தி சொல்லப்போறீங்க அப்பா?
நமக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தாங்களே அவங்களத்தான்.
பெ அ: யாரு வலைச்சர குழுவைங்களா?
ஆமாம்மா அவங்களத்தான்
(பெரிய அம்மணி மனதுக்குள் - ஆமா! இப்ப மட்டும் என்ன வாழுது, "கம்ப்யூட்டர் முன்னால உக்காந்து உக்காந்து டைப் அடிச்சு இடுப்பு வலி வந்ததுதான் மிச்சம்")
சி அ: அப்பா அவரு ஒரு துப்பறியும் வேலை செய்தாருன்னு சொன்னீங்களே அது என்னப்பா?
நானே மறந்து போன என்ற பழைய வலைப் பதிவுல போய் நம்பளோட விவரம் எல்லாத்தையும் படிச்சு வலைசசரத்தில எழுதின பொறுப்பானவரு அவரு.
பெ.அ : அப்படீன்னா பொருத்தமானவரைத்தான் வலைச்சர பொறுபாசிரியரா போட்டிருக்காங்கன்னு சொல்லுங்க.
அதுல என்ன சந்தேகம், அந்தோணி முத்துக்கு அருமையாக
இறைவனின் குழந்தைக்கு நாற்காலி வழங்கியதில் இருந்து அவர் நல்ல உள்ளம் புரிந்திருக்குமே?
சி. அ : சரிங்கப்பா, இனி அவரு எழுதுற வலைப்பூவைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்கப்பா?
"தமிழ் கற்றவனின் மலரும் நினைவுகள் ஞாபகம் வருதே !! ஞாபகம் வருதே !! " அப்படீன்னு "அசை போடுதல்" லுங்கற வலைப்பூவில் எழுதிட்டு வர்ராரு" .
அதுல வைகையில் வந்திறங்கிய வள்ளல் அழகர் பதிவுல சூப்பரா கவிதை எழுதியிருக்காரு.
பெ. அ: இதைத்தவிர மதுரை நகரம்ன்னு ஒரு குழுப்பதிவிலயும், படித்ததில் பிடித்ததுங்கற பதிவும் போடறாங்க.
சி. அ: இவ்வளவு அருமையா சேவை செய்ய்ற சீனா அங்கிளுக்கு தேங்ஸ் சொன்னீங்களாப்பா.
சொலாம எப்படிம்மா இருக்க முடியும், இப்பதிவுல அவருக்கும் மற்ற பல அன்பர்களுக்கும் தேங்ஸ் சொல்லியிருக்கிறேன் எந்தரோ மகானுபாவுலு! அந்தரிகி வந்தனமுலு!!
"இன்று மதுரையம்பதியில் புதுமனை புகும் சீனா சாருக்கும் அவர் குடும்பத்தினருக்கும் எங்கோனும் எங்கள் பிராட்டியும் சகல நலங்களையும், வளங்களையும் அளித்து அருளுமாறு வலையுலக அன்பர்கள் அனைவர் சார்பாகவும் பிரார்தித்துக் கொள்கிறோம்."
***
பெ. அ : இனி நான் முத்து லக்ஷ்மி -கயல்விழி அக்கா பத்தி சொல்லட்டுமா? இவங்க டெல்லிக்காரங்க , சாப்பிட வாங்க ன்னு கூப்பிட்டு, சமையல் குறிப்பு எழுதறாஙக.
சி. அ : தேன் கிண்ணம்ங்கற சினிமாப் பாடல்களுக்கான பதிவிலயும் எழுதறாங்க.
க்ளிக்க்ளிக்ங்க்ற வலைப்பூவிலே கேமிராக் கவிதைகள்ன்னு அருமையான புகைப்படங்களை பதிவு செய்திருக்கறாங்க.
சி. அ : அப்பா நாந்தான் பொன்ஸ் -பூர்ணா ஆன்ட்டி பத்தி முதல்ல சொல்லுவேன், யாணைகள்ன்ன இந்த ஆன்டிக்கு ரெம்ப புடிக்கும் போல அதனாலதான் , இவங்க அமெரிக்காவிலிருந்து எழுதுவதில்லை பிளிறுகிறாங்கோ,
பெ. அ : அது மட்டுமல்ல தமிழ் வலைப் பதிவர்களுக்கு தேவையான பல உதவிகளை செய்யறாங்க.
எல்லாத்தையும் நீங்க ரெண்டு பேருமே சொல்லிட்டீங்களேன்னா
, கூட்டா சிரிக்கறாங்க என்ன பண்ணறது சொல்லுங்க?
இவங்களை உட்டாலெ இதுதாங்க பிரச்சனை.
பெ அ : அடுத்தவங்க சிந்தா நதி அவர்கள்,
சி. அ : என்ன சிந்தாமணியா அது நம்ம ஊரு சூப்பர் மார்க்கட ஆச்சே, எப்பருந்து அது எழுத ஆரம்புச்சுச்சு.
நீங்க ரெண்டு பேருமே சொல்லிட்டுப்போனா எப்படி நானும் கொஞ்சம் சொல்றேனே!!!!
என்று கெஞ்ச எனக்கும் ஒரு சான்ஸ் கெடச்சுது,
இந்தியா பெற்ற முதல் தங்கப் பதக்கத்தை இப்படி எழுதுறாங்க இவங்க பொன்(ஸ்) பதக்கம்.
வலைச்சர அன்பர்களின் புகழை இதுவரை பொறுமையாக படித்த அன்பர்களுக்கு நன்றி, பதிவு கொஞ்சம் நீளமாகி விட்டது ஆனாலும் நன்றி மறப்பது நல்லதல்லவா எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.
வாம தேவ முகம்:
மாதர் முகம் போல் ஆபரணமணிந்து வெட்சிபூ நிறமாய் இடத்தோளின் மீது வடக்கு நோக்கி இருக்கும் முகம், பஞ்ச பூதங்களில் நீரை குறிக்கின்றது. ஐந்தொழிலில் காத்தல் தொழிலைக் ( விஷ்ணு ஸ்திதி காரண முகம்) குறிக்கின்றது. ஐந்தெழுத்தில் 'ம'. அம்மை ஆதி சக்தி, .கையிலங்கிரியிலே மிகவும் ஸ்பஷ்டமாய் தரிசனம் தரும் முகம் இம்முகம். மேலே நாகம் குடைப்பிடிக்க இடப்பக்கத்தில் அம்மையையும் அப்பரும் சிவ சக்தியாக தரிசனம் தரும் முகம் இதுதான். முக்கண் முதல்வரையும் மலையரசன் தன் பொற்பாவையையும் ஒரு சேர இம்முகத்திலே தரிசனம் செய்கின்றோம். கயிலாயம் என்றவுடன் நம் அனைவருக்கும் நினைவுக்கு வரும் முகமும் இதுதான். இம்முகத்தை
The above is the view of Kailash during the month of June( when there is slight snow fall) -ஜூன் மாதத்தில் பனி பொழியும் சமயத்தில் திருக்கயிலாய தரிசனம்
|
|
சிந்தா நதி அவர்கள் பெண் பதிவரல்ல, ஆண்பதிவஎ என்று மின்னஞ்சல் மூலம் திருத்திய முத்துலக்ஷ்மி- கயல்விழி அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteதவறு சரி செய்யப்பட்டுவிட்டது.