07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Saturday, September 20, 2008

உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்

இன்று நம் சுற்றத்தை பற்றிய சிறு பார்வை. பதிவர்களுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள். பதிவுலகில் பிரவேசித்து பல நல் உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் சம்பாதித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

நான் பிளாக்கரில் எழுத வந்த அதே சமயத்தில் எழுதத் தொடங்கியவர் பரிசல்காரன் . பூ போன்ற மனதுடையவர் (புத்தகம் வாங்கி அனுப்பி வச்சிருக்காருப்பா), கள்ளம் கபடம் தெரியாதவர், அடுத்தவரை கலாய்க்கவோ அல்லது மொக்கை போடவோ எள் முனை அளவும் நினைத்துப் பார்த்திராதவர்.

ஒரு வாரத்திற்கு முன் ஒரு கிசுகிசுப்பில் சிக்கியவர் பதிவர் அதிஷா. பரிசல்காரனை விட ஒரு படி மேல் என்றே சொல்ல வேண்டும். தெய்வ நம்பிக்கை மிகுந்த பக்தி பதிவர். 'கவர்ச்சினா திரிஷா, கவுச்சினா அதிஷா' எனக் கோடான கோடி மக்கள் இவரை விமர்சித்தாலும். அஞ்சா நெஞ்சன் அண்ணன் எப்போதுமே 'கன்' மாதிரி 'ஸ்டெடி'யாகவே இருப்பார்.

அடுத்ததாக வலையுலக புயல், பின்னூட்ட சூறாவளி, தமிழ்மண கலக்கல் நாயகன், புரட்சித்தளபதி, கவிதைக் கம்பன் தமிழ் பிரியன். ''ஏய் என்னப்பா நீயும் அவர மாதிரியே 'ப்' போடாம பெயரை சொல்ற'' என நினைக்க வேண்டாம். ஏற்கனவே அப்படி ஒரு பதிவர் இருப்பதால் இந்தப் பெயர். பிரித்து எழுதுவதால் 'ப்' போட தேவை இல்லை எனச் சொல்கிறார். இம்மாமனிதர் எழுதிய வைகையின் புதல்வன் எனும் தொடரினால் நல்ல நட்பு உண்டானது. இத்தொடரை இன்று வரை எழுதி வருகிறார். தற்சமயம் 345வது அத்தியாயம். ஆனால் இன்னமும் நந்தினி யார் என தெரியவில்லை. இத்தொடரை முடிக்க விடாமல் அவரை விடுவதாக இல்லை.

வலைப்பதிவில் ஒரு பூச்சாண்டி இருக்கிறார். தற்சமயம் வ.வ.சங்கத்தில் சிங்கமாக இருக்கிறார். எல்லோருக்கும் பூச்சி காமிக்கிறது இவருக்கு பிடிக்குமாம். ''உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்'' அப்படினு அவர் பதிவில் போட்டு வைத்துள்ளார். இந்தப் பொன் மொழியை நானூறு வருடங்களுக்கு முன் எங்கயோ படித்ததாக ஞாபகம். எனக்கு 'short term memory loss' இருப்பதினால் அதை எங்கே எப்போது படித்தேன் என்ற ஞாபகம் இல்லை. வீட்டில் தாய்மார்கள் இவரது 'ஃப்ரோபைல்' படத்தைக் காண்பித்துதான் பிள்ளைகளுக்கு சோறு கொடுக்கிறார்களாம். பதிவர் ச்சின்னப்பையன் அறிந்த ஜே.கே.ரித்திஷ் அவர்களின் மகா தீவிர இரசிகர்.

சூது வாது தெரியாத சொக்கத் தங்கம் நமது வால்பையன். கதை, விமர்சனம், அரசியல் எனக் கலக்குகிறார். கடந்த ஒரு வார காலமாக உடல் நலம் இல்லாமல் தற்சமயம் தேறி வருகிறார். அவருடைய நேற்றைய பதிவை இரு முறை வாசிக்காதர்வர்கள் இருந்திருக்க முடியாது. வாலுக்கு வால் ஒன்றுதான் இல்லையென இவ்வரியை குசும்பன் போட சொன்னார்.

அடுத்ததாக பதிவர் ஹரி. புபட்டியன் எனும் பெயரில் எழுதி வருகிறார். தற்சமயம் அவர் எங்கிருக்கிறார் என தெரியவில்லை. நீண்ட காலமாக காணவில்லை. அவரின் சிறுகதைகள் மிக சுவாரசியமாக இருக்கும். சிறுகதை பற்றி எழுதிய பதிவில் அவருடைய சிறுகதைகள் விடுபட்டுவிட்டது. அவரின் டயானா என்றொரு பைத்தியகாரி சூப்பர் சிறுகதை.

வடகரை வேலன் எழுத்துப்பிழைகளை அவ்வப்போது சுட்டிக்காட்டித் திருத்துபவர். எல்லோரைப் போலவும் இவரின் கதம்பம் எனக்குப் பிடித்தமான ஒன்று.

அடுத்ததாக நான் சித்தப்பு என அழைக்கக் கூடிய விஜய கோபால்சாமி . இவர் நான் 'வெட்பிரஸ்' தளத்தில் எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அறிமுகமானவர். நகைச்சுவையாக எழுதக் கூடியவர். சமீபத்தில் இவர் திருமணம் நடந்தது. அவருக்கு இவ்வேளையில் வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன்.

வெண்பூஅவர்களின் தளமும் சிறுகதைகளுக்கு பெயர் போனது. நல்ல சிறுகதை திறன் அவரிடம் காணக் கிடக்கிறது. திடீரென கடுப்பாகி சின்ன கதைகள் எழுதினார். கடந்த செப்டம்பர் ஐந்திற்கு பிறகு பதிவுகளை காணவில்லை. கூடிய விரைவில் பதிவெழுதவில்லையென்றால் சென்னையில் நடக்க இருக்கும் முக்கிய நிகழ்வில் அவரை சேர்த்துக் கொள்ளப்பட மாட்டாது என பரிசல்காரன் பகிரங்க அறிக்கை விடுக்க இருக்கிறார்.

அடுத்ததாக சஞ்சய். நிறைய விடயங்களை எழுதுகிறார். அவருக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது. பொடியன் எனும் பெயர் காரணம் என்னவாக இருக்கும்?

மேலும் பலர் உள்ளனர். இன்றய பதிவில் விடுபட்டிருப்பின் மன்னிக்கவும்.

மீண்டும் சந்திப்போம்....

அன்புடன்,

விக்னேஷ்வரன்

36 comments:

  1. //உருப்படியான முன்னேற்றத்துக்குக் கிஞ்சித்தும் வழிகாட்டாத உலகம் வலைப்பூ உலகம்//

    :((((

    ReplyDelete
  2. //இன்று நம் சுற்றத்தை பற்றிய சிறு பார்வை. பதிவர்களுக்கு உலகம் முழுவதும் நண்பர்கள். பதிவுலகில் பிரவேசித்து பல நல் உள்ளங்களின் அன்பையும் பாசத்தையும் சம்பாதித்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.//

    :)))

    ReplyDelete
  3. நண்பர்கள் அனைவரையும் ஒரே தளத்தில் பார்க்கக் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. :)
    நன்றி விக்னேஷ்வரன் !

    ReplyDelete
  4. தல

    என்ன இது? ஏதோ உள்குத்து வைக்கிறீங்களோன்னு பயந்துகிட்டே வந்தேன். நல்ல தொகுப்பு :-)

    ReplyDelete
  5. //பூ போன்ற மனதுடையவர் (புத்தகம் வாங்கி அனுப்பி வச்சிருக்காருப்பா),//

    அவர் சிங்கப்பூர் காரர்களுக்கு மட்டும் தான் கிப்ட் அனுப்புகிறார், அமீரகம் பக்கம் ஒன்னும் வருவது இல்லை.

    கோவிக்கு ஒரு தங்க பேனா அனுப்பினார், இப்பொழுது உங்களுக்கு தங்க அட்டைபோட்ட புத்தகம் அனுப்பி இருக்கிறார்.

    ReplyDelete
  6. //ஒரு வாரத்திற்கு முன் ஒரு கிசுகிசுப்பில் சிக்கியவர் பதிவர் அதிஷா. //

    அதை உண்மை என்று நம்பி ஏமாந்தது மட்டும் இன்றி சிலர் ISD போட்டும் வாழ்த்து சொல்லி இருக்காங்க:)) அந்த சேதி தெரியுமா?

    ReplyDelete
  7. //நந்தினி யார் என தெரியவில்லை. இத்தொடரை முடிக்க விடாமல் அவரை விடுவதாக இல்லை.//

    அவரு வீட்டாண்ட போய் குந்திக்கினு நந்தினி என்று குரல் கொடுக்கவும்... பக்கத்து வீட்டில் இருந்து ஒரு பிகர் வெளியே வரும்.

    ReplyDelete
  8. //கதை, விமர்சனம், அரசியல் எனக் கலக்குகிறார்.//

    ஓ இதுக்கு பேருதான் காக் டெயிலா வால் பையன்.

    நல்லாதான் கலக்கி அடிக்கிறார் (பதிவை சொன்னேன்)

    ReplyDelete
  9. //வாலுக்கு வால் ஒன்றுதான் இல்லையென இவ்வரியை குசும்பன் போட சொன்னார்.//

    வேறுமாதிரி அல்லவா சொன்னேன் அது அவருக்கும் தெரியும்:))))))))

    ReplyDelete
  10. //திடீரென கடுப்பாகி சின்ன கதைகள் எழுதினார். கடந்த செப்டம்பர் ஐந்திற்கு பிறகு பதிவுகளை காணவில்லை.//

    அப்பொழுதுதான் போட்டியில் வெற்றிப்பெற்று பால பாரதி புத்தகத்தை பரிசாக வென்றார். அதன் பிறகு ஏன் என்று தெரியவில்லை ஆள் நாடி நரம்பு எல்லாம் ஆடிப்போய் இருப்பதாக சொல்கிறார்கள்.

    ReplyDelete
  11. //அடுத்ததாக சஞ்சய். நிறைய விடயங்களை எழுதுகிறார். அவருக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.//

    வலையுலக டான் அவர். அவரிடம் போய் ரூல்ஸா, அவருக்கு முன் தோளில் துண்டே போட முடியாது என்று சொல்றாங்க நீங்க வேற!!!

    ReplyDelete
  12. //கள்ளம் கபடம் தெரியாதவர், அடுத்தவரை கலாய்க்கவோ அல்லது மொக்கை போடவோ எள் முனை அளவும் நினைத்துப் பார்த்திராதவர்.
    //

    என்ன கொடுமை விக்கி இது????!!!

    ReplyDelete
  13. //பரிசல்காரனை விட ஒரு படி மேல் என்றே சொல்ல வேண்டும். //

    இல்லையே. அந்த க்ரூப் போட்டோவில் பக்கத்து பக்கத்திலேதானே இருந்தாங்க?

    ReplyDelete
  14. // இந்தப் பொன் மொழியை நானூறு வருடங்களுக்கு முன் எங்கயோ படித்ததாக ஞாபகம். எ//

    சமீபத்தில் 400 வருடங்களுக்கு முன்னாலேயா??

    ReplyDelete
  15. //திடீரென கடுப்பாகி சின்ன கதைகள் எழுதினார்//

    ஏன் கடுப்பானாரு? உங்க பதிவுகளை படிச்சிட்டாரா, விக்கி?????

    ReplyDelete
  16. //பூ போன்ற மனதுடையவர் (புத்தகம் வாங்கி அனுப்பி வச்சிருக்காருப்பா), கள்ளம் கபடம் தெரியாதவர், அடுத்தவரை கலாய்க்கவோ அல்லது மொக்கை போடவோ எள் முனை அளவும் நினைத்துப் பார்த்திராதவர்.//

    அடப்பாவி, ஒருத்தரப் பத்தி எழுதுறதுக்கு முன்னால, அவரால பாதிக்கப்பட்டவங்க கிட்ட கேளுப்பா.

    அவரால பாதிக்கப் பட்டு இங்க நாங்க ரத்தக் கண்ணீர் விட்டுட்டு இருக்கோம்.

    நேர்ல மாட்டுன மவனே நீ சட்னிதாண்டி.

    ReplyDelete
  17. அருமையான தேர்வுண்ணே! :)

    ReplyDelete
  18. கடந்த 2 வாரமாக வலைப்பூக்களில் நேரம் செலவிட முடியவில்லை (அலுவலக பணிச்சுமை மற்றும் சொந்த காரணங்களால்). இந்த மாத இறுதிவரை இது தொடரும் என்பதால், என் பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கும் லட்சக்கணக்கான இணைய பயனாளர்களுக்காக ஒரு பதிவை எழுதி உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். :)

    ReplyDelete
  19. //குசும்பன் said...

    // அவர் சிங்கப்பூர் காரர்களுக்கு மட்டும் தான் கிப்ட் அனுப்புகிறார், அமீரகம் பக்கம் ஒன்னும் வருவது இல்லை.//


    அட்ரஸ் அனுப்பவும் என்று பகிரங்கமாக வேண்டுகோள் விடுக்கப்படுகிறது! (நாம எதச் சொன்னாலும் பகிரங்கம்தான்!)

    ReplyDelete
  20. // கோவிக்கு ஒரு தங்க பேனா அனுப்பினார், இப்பொழுது உங்களுக்கு தங்க அட்டைபோட்ட புத்தகம் அனுப்பி இருக்கிறார்.
    ////

    சிங்கை போனா இவங்ககூடவெல்லாம் ஃப்ரீயா ‘தங்க'லாம்ல? அதான்!

    ReplyDelete
  21. சொல்லிக் கொடுத்தமாதிரியேஎழுதீட்டியே விக்கி.. சபாஷூ!

    ReplyDelete
  22. // ச்சின்னப் பையன் said...

    //கள்ளம் கபடம் தெரியாதவர், அடுத்தவரை கலாய்க்கவோ அல்லது மொக்கை போடவோ எள் முனை அளவும் நினைத்துப் பார்த்திராதவர்.
    //

    என்ன கொடுமை விக்கி இது????!!!//


    நல்லா கேளு சகா!

    என்னாலயே தாங்கமுடியல!

    ReplyDelete
  23. //நேர்ல மாட்டுன மவனே நீ சட்னிதாண்டி.//

    விக்கியா நானா அண்ணா?

    ReplyDelete
  24. தலைப்பைப் பார்த்ததும் வலைச்சரம் ஆசிரியரா நம்ம விக்கிதானே இருந்தாரு.. வேற ‘யாரோ' வந்துட்டாங்களோன்னு பயந்தேன்.. நல்லவேளை!

    ReplyDelete
  25. பதிவுக்குப் பொருத்தமான தலைப்பு விக்கி! சூப்பர்! (அதிஷா மொழில சொல்லணும்னா, ம்..சூப்பரு!)

    எழுதியிருக்கற விதமும் சூப்பரு!

    ReplyDelete
  26. அண்ணாத்த நீங்கதான் வலைச்சர ஆசிரியரா இந்த வாரம்!!

    தாமதமான வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
  27. தலைப்புக்கு லதானந்த் காப்பி ரைட் வெச்சிருக்காரே காப்பி ரைட் ஓவர் ரூல்டா?????

    :)))))

    ReplyDelete
  28. //
    குசும்பன் said...

    //நந்தினி யார் என தெரியவில்லை. இத்தொடரை முடிக்க விடாமல் அவரை விடுவதாக இல்லை.//

    அவரு வீட்டாண்ட போய் குந்திக்கினு நந்தினி என்று குரல் கொடுக்கவும்... பக்கத்து வீட்டில் இருந்து ஒரு பிகர் வெளியே வரும்.
    //

    இந்த 'மேட்டர்' துபாய் வரைக்கும் தெரிஞ்சிஒடுச்சா!?!?!?
    நான் எனக்கு மட்டும்தான் தெரியும்னு நினைச்சேன்
    :))))))))

    ReplyDelete
  29. //
    குசும்பன் said...

    //அடுத்ததாக சஞ்சய். நிறைய விடயங்களை எழுதுகிறார். அவருக்கு யாரும் ரூல்ஸ் போட முடியாது.//

    வலையுலக டான் அவர். அவரிடம் போய் ரூல்ஸா, அவருக்கு முன் தோளில் துண்டே போட முடியாது என்று சொல்றாங்க நீங்க வேற!!!
    //

    ரிப்பீட்ட்ட்டு

    ReplyDelete
  30. @ஆயில்யன்

    உங்கள் ஆழ்ந்த கருத்திற்கு மிக்க நன்றி.

    @எம்.ரிஷன்

    மிக்க நன்றி ரிஷன்.

    @கானா பிரபா

    உள் குத்துனா என்ன? பயப்படாதிங்க பாஸூ.

    @குசும்பன்
    1) நோ ஸ்டம்மக் பர்னிங் பிலிஸ்
    2) அதான் ஊரே சிரிப்பா சிரிக்குதே...
    3) அந்த விசயம் உங்களுக்கு எப்படி தெரியும்?
    4) வேறு மாதிரி சொன்னத நான் இங்க சொல்லவா?
    5) அடடே பாவம் வெண்பூ
    6) டான் ரொம்ப நல்லவரு...

    ReplyDelete
  31. @ச்சின்னப் பையன்
    1)யார் கொடுமை செய்தது?
    2)நான் பிலைண்ட் சரியா தெரியலைங்க.
    3) ஆம் சமிபத்தில்
    4) என் பதிவுகளை படிச்சா ஞானி ஆகிடுறாங்களாம். பதிவுலக கிசுகிசு கேள்விபடலயா?

    @வடகரை வேலன்

    ஒருவர் பதிப்பு கொடுத்தாலும் அவருக்கு நல்லது செய்யனும்னு வள்ளுவர் சொல்லிருக்காருண்ணே.

    @புதுகை அப்துல்லா

    அண்ணே உங்க பேரு விட்டு போச்சு... மன்னிக்கவும். வருகைக்கு நன்றி.

    @வெண்பூ

    கவிதை... கவிதை... ஆஹா...

    @பரிசல்காரன்

    1) முடிஞ்சா உங்கள முகவரிய தேடி கண்டுபுடிச்சிக்க சொல்றாரு.
    2) தங்க மனிதர்களோடு தங்களாம்.
    3) ஆமாண்ணே. நீங்க சொல்லாம பதிவெழுதுவாங்களா?
    4) யாரோ வந்துட்டாங்களா? நீங்க பயபடும் அளவுக்கு யாரு வர போறாங்க...
    5) சூப்பருக்கு ஒரு நன்றி பாஸூ.

    ReplyDelete
  32. @மங்களூர் சிவா.

    அண்ணே பஸ்ட்டு திருமண வாழ்த்துக்கள். நான் கல்யாணத்துக்கு வரலனு அழுதிங்களாமே? அப்துல்லா சொன்னாரு... செரி செரி அழுகாதிங்க... எனக்கு ஒரு குவாடர் மட்டும் வாங்கி கொடுத்திருங்க... வாலுக்கு தெரிய வேண்டா.

    தலைப்பை பற்றி ஏதோ சொல்றிங்க ஆனா என்னானு தெரியல...

    வருகைக்கு நன்றி. நல்ல வேளை கடைசி நாள் வந்துட்டிங்க...

    ReplyDelete
  33. ஆகா -
    பல பதிவர்களின் சிறு அறிமுகக் குறிப்பு நச்சென்றிருக்கிறது

    நல்வாழ்த்துகள்

    ReplyDelete
  34. @புதுகை அப்துல்லா

    அண்ணே உங்க பேரு விட்டு போச்சு... மன்னிக்கவும். வருகைக்கு நன்றி.

    //

    அண்ணே என்னணே பெரிய வார்த்தை எல்லாம் சொல்றீங்க? என்றும் உங்க மனதில் இருக்கேனே!!!!!

    ReplyDelete
  35. என்னை பற்றி பெருமையாக!? சொன்னதற்கு நன்றி விக்கி
    சொல்ல சொன்ன குசும்பனுக்கும் நன்றி!!

    ReplyDelete
  36. அறிமுகம் செய்தமைக்கு நன்றி மகனே. மங்களூராரும் என்னைப் போலவே திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்திருக்கிறார், அவருக்கு எனது வாழ்த்துக்கள்.

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது