குருநாதருக்கு வணக்கம்
➦➠ by:
Kailashi
பொற்றாமரை குளக்கரையார்
சி. அ: என்னப்பா? , ஒருத்தரைப் பத்தித்தான் இந்தப் பதிவுல எழுதப்போறீங்களா?
ஆமாம்மா குருர் பிரம்மா, குருர் விஷ்ணு , குருர் தேவோ மஹேஸ்வர: ன்னு தானே அம்மா சொல்லியிருக்காங்க. அதனால குருவுக்கு எப்பவுமே மரியாதை தரனுமல்லமா.
சி. அ: இந்த குருநாதர் உங்களுக்கு என்ன எல்லாம் சொல்லிக் குடுதுத்தாருப்பா?
வலைப்பூவுக்கு உங்க அப்பன அறிமுகம் செய்தவரும், யுனிகோடில எப்படி எழுதறதுன்னு சொல்லிக் கொடுத்தவரும் அவருதாம்மா அதனாலே அவருக்கு ஒரு தனிப் பதிவு.
பெ. அ : யாருங்க அவரு?
சஸ்பென்ஸ், நேரடியா சொல்ல மாட்டேன் க்ளுவேண்ணா தரேன் , ரெண்டு பேரும் கண்டு பிடீங்க பார்க்கலாம்.
வலைப் பூவிலே மீனாக்ஷி அம்பாளுக்கு கோவில் கட்டின மதுரைக்காரருதான் என்ற குருநாதர்.
சி.அ : நான் கண்டு பிடிச்சுட்டேன், நான் கண்டு பிடிச்சுட்டேன்.
பெ அ. : ரொம்பத்தான் குதிக்காத யாருன்னு சொல்லு.
சி அ : குமரன் அங்கிள் தானே!
இல்லையே அவர் அபிராமி அந்தாதிக்கு தானே அருமையான விளக்கம் கொடுத்தாரு.
பெ. அ : அஸ்கு புஸ்கு அழுகுணி ஆட்டம்.
சி. அ : இருங்க ஒரு நிமிசம் யோசிட்டுட்டு சொல்றேன்...................... ஆஹா சிவமுருகன் அங்கிள் தானே.
அவரேதான் தொட்டனைத்தூறும் மனற்கேணி
மணற்கேணி அல்ல இது மனக் கேணி அதிலிருந்து
அருமையான எண்ணம் வந்து, தான் பிறந்த மதுரையில் அரசி கொண்டை முடி அலங்கரித்து, கொஞ்சும் கிளி கையில் வைத்து சொக்கேசரையே சொக்க வைத்த மீனாக்ஷி அம்மன் ஆலயத்தின் ஒவ்வொரு சிறப்பையும் வலைத்தளங்களைத் தேடித் தேடி முந்நூறு புகைப்படங்களுக்கும் மேலாக பதிவிட்டு ஒரு வலைக் கோவிலே அமைத்துள்ளார் சிவ முருகன்.
அருமையான எண்ணம் வந்து, தான் பிறந்த மதுரையில் அரசி கொண்டை முடி அலங்கரித்து, கொஞ்சும் கிளி கையில் வைத்து சொக்கேசரையே சொக்க வைத்த மீனாக்ஷி அம்மன் ஆலயத்தின் ஒவ்வொரு சிறப்பையும் வலைத்தளங்களைத் தேடித் தேடி முந்நூறு புகைப்படங்களுக்கும் மேலாக பதிவிட்டு ஒரு வலைக் கோவிலே அமைத்துள்ளார் சிவ முருகன்.
முதன் முதலாகப் பார்த்த வலைப்பூவும், அடியேன் வலைப்பூ ஆரம்பிக்க காரணமாக இருந்த வலைப்பதிவும் இந்த மீனாக்ஷி அம்மனின் வலைப்பூதான்.
சி. அ : சிவ முருகன் அங்கிள்தான உங்களை தேன் கூட்டுக்கும், தமிழ் மணத்துக்கும் அறிமுகம் செஞ்சு வச்சாரு?
ஆமாம்மா என்ற ஆதி காலத்து பதிவுகளைப் பாத்துட்டு ஏன் நீங்க தேன் கூட்டுல பதிவிட கூடாதுன்னு வழி காட்டியவரும் இவர்தான்.
பெ அ: நீங்க சின்ன வயசுல பாடின உங்களுக்கு பிடிச்ச திருப்பாவையும் திருவெம்பாவையும் இவரும் பதிவிட்டிருகாருல்ல மார்கழிப்பாவை ங்கற பதிவுல திருப்பாவைக்கு தேசிகன் அவரோட அருமையான விளக்கத்துக்கும் சுட்டி கொடுத்திருக்கிறாரு.
சி.அ : நடன கோபால நாயகி
ன்னு ஏகப்பட்ட வலைப்பூக்கள அவர் எழுதுறாருங்க
இன்னொரு மதுரைக்காரரு குமரன் சாரும் இவரோட சேர்ந்து பல வலைப்பூக்கள் எழுதராரு.
SAP பத்த்தின வலைப்பூவ்வும் அருமை.
இன்னும் சொல்லீட்டே போகலாங்க ஆனா பதிவு அதிக நீளமாயிரும்ன்னு இத்தோட முடிச்சுக்கறேங்க.
கோடிக் கோடி நன்றிங்க குருநாதரே. வளர்க தங்கள் தொண்டு.
*************
அம்பலத்தாடும் ஐயனின் ஐந்து முகங்கள்
East face of Holy Kailash (Sun lit side) - திருக்கயிலாய கிழக்கு முகம் ( தத்புருஷ முகம்) - சூரிய ஒளியில் மின்னும் முகம்
Holy Kailash West face - திருக்கயிலாய மேற்கு முகம் ( சத்யோஜாத முகம்)
Kailash Sunlit North Face - சூரிய ஒளியில் தங்கமென மின்னும் வடக்கு முகம் (வாம தேவ முகம்)
|
|
திருக்கைலாய திருத்தரிசனத்தை மீண்டும் பெறும் பாக்கியத்தைத் தந்ததற்கு நன்றி கைலாஷி ஐயா.
ReplyDeleteநன்றி குமரன் ஐயா.
ReplyDeleteஅடுத்த பதிவை தாங்கள் அவசியம் பாருங்கள்.
நண்பர்கள் சிவா, மற்றும் குமரன் பதிவுகளுக்கு நல்ல அறிமுகம் கைலாஷி ஐயா...
ReplyDelete