07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Tuesday, September 16, 2008

முடிஞ்சா இத படிங்க... சவால்...

சிறுகதை எழுதுவதென்பது எல்லோராலும் இயலாதது என்று தான் கூற வேண்டும். நாம் எழுதுவது இரசிக்கும் படியாக இருக்க வேண்டும். அடுத்தவரின் நடை நம் எழுத்தில் எட்டிப்பார்க்காமல் இருக்க வேண்டும். மாறுபட்ட சிந்தனையும் அவசியம் வேண்டும். எழுதியதையே திரும்ப எழுதாமல் புதிய கோணத்தை தந்திருக்க வேண்டும். இவை சிறுகதையை படிப்பவர்கள் எதிர்பார்ப்பது.

சடுதியில் தோன்றும் எண்ணத்தை அழகுபெற எழுத்தாக வடித்து வாசகர்களுக்கு கொடுத்திட நினைப்பது ஒரு சிறுகதை எழுத நினைப்பவனின் எண்ணம். எழுதும் சமயம் ஏற்படும் தடுமாற்றங்கள் கதாசிரியனுக்கு முட்டுக்கட்டையாக அமைந்துவிடுவது உண்மை. இதனை கருச்சிதைவு எனும் தலைப்பில் புதுமைப்பித்தன் எழுதி இருப்பார். கீற்று இணையத்திலும் அக்கதையைக் கண்ட ஞாபகம். இப்பதிவிற்காக தேடிய போது கிடைத்தது. படித்துப்பாருங்களேன்.

நான் முதலில் எப்போது சிறுகதை படிக்க ஆரம்பித்தேன் என சற்றும் நினைவு கூற முடியவில்லை. சிறுகதைகளை படிக்க ஆர்வம் தோன்றியது திரு.ஜெயகாந்தனின் எழுத்துக்களின் வழியாகதான்.

பதிவுலகில் சிறுகதைகள் படிப்பவர்கள் மிகக் குறைவு என்றே கூறலாம். காரணம், சிறுகதைகள் நீளமாக இருக்கும். ஒரு சிறுகதையை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரம் சராசரியாக 5 பதிவுகளை படிக்க எடுத்துக் கொள்ளும் நேரமாகும். அதிகமாக கதாபாத்திரங்கள் புகுத்தப்பட்ட கதைகள் வாசகர்களுக்கு ஒரு வித மயக்கத்தை கொடுக்கும். ஒரே மூச்சாக பிடித்து படிக்க முடியாமல் செய்துவிடும்.

அதிகமாக கருத்துக்கள், அதிகமான கதாபாத்திரங்கள், அதிகமாக சூழல்கள், அதிகமான இடங்களை கொண்டப் பலக் கதைகள் திறம்பட எழுதி இருந்தாலும், வாசகர்கள் குழம்பிப் போவதின் காரணமான தோல்வியடைகிறது.

கதையின் முதல் பத்தியையும் கடைசி பத்தியையும் படித்து கதையை விமர்சிக்கும் மகான்களையும் கண்டதுண்டு. சிறுகதைகளை விரைவாக படித்திடவே நினைக்கிறார்கள். அதனால் சிறுகதையில் உள்ள வாக்கியங்கள் குட்டையானதாகவும், அடுத்தடுத்து படித்திட சுலபமாகவும் இருந்திடில் படிப்பவர்களுக்கு சுவாரசியமாக இருக்கும் என்பது என் கருத்து.

பதிவுலகில் நான் முதன் முதலாக படித்து இரசித்தது வாத்தியார் சுப்பையா ஐயாவின் சிறுகதைகள் தான். அதன் பிறகே பல சிறுகதைகளை பதிவுலகில் தேடிப்படிக்க ஆரம்பித்தேன். அப்படி படித்ததில் சிலவற்றை இங்கு பட்டியலிட்டுச் செல்கிறேன்.

1) மதிப்பும் மரியாதையும் ஒருவனின் எப்படிபட்ட நடவடிக்கையில் இருக்க வேண்டும் என்பதை சிறப்பாகக் கொடுத்திருக்கிறார் வாத்தியார் ஐயா. படித்துப் பாருங்கள்.

2) அடுத்ததாக நம்ம ஜீ அண்ணாச்சி என்ன எழுதி இருக்காருனு பாருங்களேன். தேவைகள் தேடிப்பிடிக்க வேண்டியவை. சில சமயம் அவை நம் பக்கம் வந்து நகைத்துச் செல்வதாக எவ்வளவு அழகாக வடித்திருக்கிறார். புரசைவாக்கம் நெடுஞ்சாலை.

3) சரித்திர நாவல்கள் மீது இருக்கும் மோகம் சரித்திர சிறுகதைகள் மீது இருந்ததில்லை. அம்புலிமாமா கதைகளை போல மாறுபட்ட எதிர்பார்ப்புகள் குறைவாக இருக்கும் என்ற எண்ணம் இருந்ததுண்டு. ஆனால் திரு.மோகந்தாஸ் எழுதிய சோழர் சிறுகதை இந்த எண்ணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. நட்சத்திரம் எனும் தலைப்பில் அவர் எழுதிய சோழர் கால சிறுகதை. பகுதி ஒன்று. பகுதி இரண்டு.

4) சமீபத்தில் அறிவியல் சிறுகதைகள் போட்டி தமிழ்மணத்தில் களைக்கட்டிக் கொண்டிருந்தது. கதைகளை தங்களது இரசனைக்கேற்ப பலரும் வடித்திருந்தார்கள். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் திரு.சேவியர் எழுதிய ‘உண்மையா அது என்ன?’ கதையை நான் இரசித்தேன். அக்கதையின் நாயகன் விக்கி.

5) பி. ந பதிவுகள் இன்னமும் எனக்கு அவ்வளவு பரிச்சயம் ஆகவில்லை. பி. ந பதிவுகளை படிக்கும் போது ‘என்னய்யா இப்படி உளருகிறார்கள்’ என நொந்துக் கொண்டும் இருக்கிறேன். ஆனால் திரு.சென்ஷி எழுதிய வெந்து தணிந்தது காடு எனும் இந்த பி.ந சிறுகதையை படித்துப்பாருங்களேன். சூடுபட்ட வடு என்றும் ஆறாமல் இருந்துவிடும்.

மொத்தம் பத்து கதைகளை தேடி வைத்திருந்தேன். அவை அதிகபட்சமாகி ஒரு சளிப்பை ஏற்படுத்திவிடும் எனும் நோக்கில் ஐந்தை மட்டும் எழுதுகிறேன்.
மீண்டும் சந்திப்போம்.

16 comments:

  1. அண்ணாச்சி... கலக்கலா ஆரம்பிச்சி ஒவ்வொரு தொடுப்புக்கும் ஒரு அறிமுகத்த வேறக் கொடுத்து அசத்திருக்கீங்க.. இதுல என்னோட கதையையும் பட்டியலிட்டதுக்கு நன்றி :))))

    ReplyDelete
  2. நல்ல ஆய்வு...அறிமுகம்!

    ReplyDelete
  3. அண்ணே! வாசிக்கும் அனுபவம் உங்க பட்டியலில் இருந்து தெரியுது... வாழ்த்துக்கள்... தொடருங்கள்!

    ReplyDelete
  4. @ஜி

    தலைவரே முதல் வருகைக்கு நன்றி.

    @இனியவள் புனிதா

    நன்றி புனிதா மீண்டும் வருக...

    ===================

    தமிழ்மண கருவிபட்டயைக் காணும். யாரோ திருடிட்டாங்க... யாராவது தேடிக் கொடுங்க பாஸூ...

    ReplyDelete
  5. @தமிழ் பிரியன்

    நன்றி அண்ணே...

    ReplyDelete
  6. ஆய்வுக்குழுவில் இடம் பெறவேண்டிய ஆள் ஐயா நீர்.[நிஜமா சொல்றேன்]

    ReplyDelete
  7. ஒவ்வொரு கதையா படிக்க இருக்கிறேன்.படித்தபின் நானும் எழுதிப் பார்க்கிறேன்

    ReplyDelete
  8. //திரு.மோகந்தாஸ் எழுதிய சோழர் சிறுகதை இந்த எண்ணத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைத்தது. நட்சத்திரம் எனும் தலைப்பில் அவர் எழுதிய சோழர் கால சிறுகதை. பகுதி ஒன்று. பகுதி இரண்டு.//


    இது எனக்கு நொம்ப பிடிச்சது!

    ReplyDelete
  9. தம்பி நல்ல ஒரு தொகுப்பு.
    இந்த பதிவுல இருக்க இணைப்பை எல்லாம் பார்க்கணும். இன்னைக்கு மாலையே அந்த வேலைய ஆரம்பிச்சுர வேண்டியதுதான்.

    ReplyDelete
  10. நல்ல தொகுப்பு. இதில் இரண்டு கதைகளை நான் இன்னமும் படிக்கவில்லை. அவசியம் படித்து விடுகிறேன்

    ReplyDelete
  11. @கோமா

    1) வாழ்த்திற்கு நன்றி அம்மா. அதிகமா புகழாதீர்கள்... :)

    2) ம்ம்ம்... நீங்கள் கண்டிப்பாக நன்றாக எழுதுவீர்கள்.

    @ஆயில்யன்

    அண்ணாச்சி எனக்கும் தான். நெம்ப என்றால் என்ன? ஏதோ உள்குத்து இருப்பதாக அறிகிறேன்.

    @ஜோசப் பால்ராஜ்

    வருகைக்கு நன்றி அண்ணே. கண்டிப்பாக படிங்க..

    ReplyDelete
  12. @புதுகை அப்துல்லா

    வருகைக்கு நன்றி அண்ணே... கண்டிப்பாக படிங்க...

    ReplyDelete
  13. அருமையான சுட்டிகள்

    நண்பர் சுப்பையாவின் 2005ல் எழுதப்பட்ட கதையையும், ஜீ எழுதிய கதையையும் படித்து மறு மொழி இட்டு விட்டேன். மற்ற கதைகளையும் படித்து விடுகிறேன்.

    நல்வாழ்த்துகள் விக்கி

    ReplyDelete
  14. @சீனா

    நன்றி சீனா ஐயா..

    ReplyDelete
  15. நல்ல சிறுகதை சுட்டிகளின் தொகுப்பு

    ReplyDelete
  16. @மங்களூர் சிவா

    நன்றி. எல்லாத்தையும் படிச்சிட்டிங்களா?

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது