மீண்டும் சந்திப்போம் அன்பர்களே
➦➠ by:
Kailashi
ஆடுகின்றானடி திருக்கயிலையிலே ( விஷ்ணு மத்தளம் கொட்ட, பிரம்மா தாளம் தட்ட, அம்மை பார்வதி, கணேசன், முருகனுடன் ஐயன் உடுக்கையை ஒலித்துக்கொண்டு திருக்கயிலையில் ஆனந்தத் தாண்டவமாடிக் கொண்டே சகல புவனத்தையும் ஆட்டி வைக்கும் அற்புதக்காட்சி.)
இன்று வரை தாங்கள் தரிசித்த திருக்கயிலாய மானசரோவர் தரிசனம்
(படங்களை கிளிக் செய்து பெரிதாக பார்க்கலாம்)
நம்மூர்ல எல்லாவற்றையும் மங்களகரமா சொல்ல வேண்டுமென்பதற்காக இவ்வாறு கூறுமாறு அமைத்துள்ளனர், எனவே கவலைப்பட வேண்டாம் மீண்டும் வந்து தொல்லை தருவேனோ என்று. ஆயினும் வலைச்சர்ம் மூலமாக இல்லாவிட்டாலும் அடியேனது வலைப்பூக்கள் மூலம் சந்தித்துக் கொள்ளலாம்.
இந்த ரெண்டு வாரமா அடியேன் பெரிய அம்மிணியோடயும், சின்ன அம்மிணியோடயும் கிறுக்குன கிறுக்கலகளை வந்து படிச்ச்வங்க எல்லாருக்கும் பெரிய கும்பிடுங்கோ.
ரொம்ப நல்லா போச்சுதுங்க ரெண்டு வாரம், KRS சார் வந்து நெறைய பட்டம் கொடுத்தாருங்க. துளசி டீச்சர் வந்து ஐடியா கொடுத்தாங்க, யாரைப் பத்தி எழுதனனோ அநேகமா எல்லாரும் வந்து பார்த்துட்டு போனாங்க.
திருக்கயிலாய யாத்திரை CD/DVD/புத்தகம்(தமிழில்) வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmailல் தங்கள் முகவரியுடன் மின்னஞ்சல் செய்தால் அவர்க்ளுக்கு அனுப்பி வைக்கிறேன். திருக்கயிலாயம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்தவித உதவி வேண்டுமென்றாலும் அடியேனை அணுகலாம்.
உங்கள் அனைவரிடமும் இருந்து நன்றி கூறி விடைபெற்றுக் கொள்பவர்கள் உங்கள் பெரிய அம்மிணி, சின்ன அம்மிணி, கைலாஷி.
நன்றி வணக்கம்.
------------------------------------------

ரொம்பப் பேரு வந்து கயிலை நாதரை தரிசிச்சாங்க, அருமையான தரிசனம் கெடச்சுத்துன்னும் சொன்னாங்க அதுக்காக சந்தோஷங்க. ஒரு வருஷமா 70 பதிவுகள்ல முடியாதது இரண்டு வாரத்துல 20 பதிவுகள்ல கிடைச்சிருக்கு ரொம்ப சந்தோஷங்க.
திருக்கயிலாய யாத்திரை CD/DVD/புத்தகம்(தமிழில்) வேண்டும் அன்பர்கள் அடியேனுக்கு muruganandams@rediffmailல் தங்கள் முகவரியுடன் மின்னஞ்சல் செய்தால் அவர்க்ளுக்கு அனுப்பி வைக்கிறேன். திருக்கயிலாயம் செல்ல விரும்பும் அன்பர்கள் எந்தவித உதவி வேண்டுமென்றாலும் அடியேனை அணுகலாம்.
எப்படியோ 25 பதிவுகள் எழுதிட்டேன், சீனா ஐயா கொடுத்த எல்லா வேலைகளையும் முடிச்சாச்சுன்னு ஒரு திருப்தி.
இன்னும் நெறையப்பேரைப் பத்தி எழுத நெனைச்சிருந்தேன், குறிப்பு கூட எடுத்து வெச்சிருந்தேன், இரண்டு வாரமா எழுதியும், கிடச்ச நேரத்துல இவ்வளவுதான் முடிஞ்சது அதனால் தான் பல பதிவுகள்ல உங்களோட அறிமுக சுட்டி மட்டும் குடுத்திருக்கேன். ஏதாவது குறை இருந்தால் மன்னிச்சுக்கோங்கோ.
எவ்வளவோ புதுப் புது வலைப்பூக்களை பார்க்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது. அடியேனுக்கு இந்த வாய்ப்பை அளித்த சீனா சாருக்கும், வலைச்சர குழுவினருக்கும் மீண்டும் நன்றி, இவர்கள் சேவை மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
உங்கள் அனைவரிடமும் இருந்து நன்றி கூறி விடைபெற்றுக் கொள்பவர்கள் உங்கள் பெரிய அம்மிணி, சின்ன அம்மிணி, கைலாஷி.
நன்றி வணக்கம்.
------------------------------------------
|
|
முகவரி முழுசா இல்லைபோல இருக்கே கைலாஷி?
ReplyDeletemuruganandams@rediffmail.com
ReplyDeletemuruganandams@rediffmail.com
இது தான் அவரது மின்னஞ்சல் முகவரி
புத்தகங்கள் / சிடி / டிவிடி வேண்டுபவர்கள் மின்னஞ்சல் செய்யலாம்
நல்வாழ்த்துகள் கைலாஷி
நன்றி துளசி கோபால் அவ்ர்களே. தங்கள் மின்னஞ்சல் கிடைத்தது. முகவரி சரிதான்.
ReplyDeleteமிகுந்த நன்றிகள் சீனா ஐயா இவ்வளவு அரிய வாய்ப்பினை தந்ததற்க்கு. நிறைய பேர் வந்து தரிசனம் பெற்றனர்.
ReplyDeleteஒவ்வொரு இடுகைக்கும் பின்னூட்டம் இட முடியவில்லை, மன்னிக்கவும். நிறைய புதிய வலைபூக்கள் பற்றி அறியத் தந்திருக்கிறீர்கள். படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம். மிக்க நன்றி கைலாஷி.
ReplyDelete//ஒவ்வொரு இடுகைக்கும் பின்னூட்டம் இட முடியவில்லை, மன்னிக்கவும்//
ReplyDeleteஎன்னங்க பெரிய பெரிய வார்த்தைகளை எல்லாம் சொல்லிகிட்டு, உங்க அன்பு ஒண்ணு போதுமே.
//படங்கள் ஒவ்வொன்றும் அற்புதம்.//
எல்லாம் அவர் அருள். வலைச்சரம் மூலம் நிறையப்பேர் தரிசனம் பெற்றனர் அதற்கு மகிழ்ச்சி.