PIT போட்டியும் தேன் கிண்ணமும்
➦➠ by:
Kailashi
தமிழ் வலையுலக் அன்பர்களை கையில் புகைப்படக்கருவியுடன் அலைய வைக்கும் ஒரு பிரபலமான வலைப்பூ இது. பெய்ர் என்னவோ தமிழில் இல்லை என்றாலும் கருத்து தமிழ் வலைப்பதிவர்களை நல்ல புகைப்பட கலைஞர்கள் ஆக்குவதுதான். PIT போட்டிக்கு புகைப்படம் அனுப்பாத தமிழ் வலை அன்பர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே.
ஒரு சமயம் அடியேன் கூட் ஒரு பதிவிட நினைத்தேன் " தமிழர்களை மென்ட்டலாக்கும் ஃபிட் போட்டி " என்று. நல்ல வேளை எழுதவில்லை எழுதியிருந்தால் இப்படி இருந்திருக்கும். சென்ற வாரம் நான் டேராடுன் போயிருந்தேன் அப்போது அங்கிருந்த ஒரு பார்க்குக்கு ஜாலியாக போயிருந்த போது ஒரு ஆளு நம்ம ஆளு மாதிரி தெரிஞ்சாரு கேமாரவை மாட்டிகிட்டு ஒவ்வொரு பூவா வித விதமா போட்டோ எடுத்துகிட்டு இருந்தாரு, மெல்ல என்னங்க தமிழான்னு கேட்டா, ஆமாங்க எப்படி கண்டு பிடிச்சீங்கன்னு கேட்டாரு, நான் அதுக்கு அது தான் மூஞ்சியிலே எழுதி ஒட்டியிருக்கேன்னு சொல்லிட்டு என்ன பண்ணீடடு இருக்கீங்கன்னு கேட்க PIT போட்டிக்கு போட்டோ எடுத்து கிட்டிருக்கிறேன்னு சொன்னருங்க.
ஒரு வாரம் கழிச்சி மெட்ராஸ் வந்து ஒரு நாள் ரோட்டுல நடந்து போயிட்டிருந்த பொது ஒருத்தரு வட்டமா எதைப் பார்த்தாலும் அதை முறைச்சு முறைச்சுப் பார்த்துகிட்டிருந்தார், ரோட்ட்டுல ஓடற பஸ் கார்ரோட சக்கரம், ரோட்டுல நடுவுல இருக்கற சாக்கடை மூடி அப்படி எதாவது வட்டமா இருந்தாலும் போட்டோ எடுத்துக்கிட்டிருந்தாருங்க . அவங்களை கேட்டா PIT போட்டிக்கு போட்டோ எடுத்து கிட்டிருக்கேன்னு சொல்லறாங்க,
இப்பிடி தமிழ் மக்களை மென்டலாக்கி , புகைப்பட கலைஞனாக்க முயற்சிக்கும் photography-in-tamil வலைப்பூவை உருவாக்கி நடத்திக் கொண்டு வரும்
ஆகியோருக்கு நன்றீங்க
இதுல jeeves சார் தேன் கிண்ணங்கற வலைப்பூவுலயும் பங்களிக்கறாரு.
சினிமாப்பாடலுக்கான வலைப்பூ. நீங்கள் சினிமாப்பாடல்களை படிக்கலாம், பார்க்கலாம் , கேட்கலாம். ஒவ்வொரு வாரமும் ஒரு பாடகர் வார நட்சத்திரமாக நியமித்து அவரோட பாடல்க்ளை பதிவு செய்யறாங்க. இதன் பங்களிப்பார்கள்
( இவர் முருகனுருள் வலைப்பூவிலேயும் பங்கேத்துகறாங்க)
நிச்சயமாக அன்பர்கள் அனைவரும் ஒரு தடவையாவது இவ்வலைப்பூ பக்கம் போயிருப்பீங்க. இல்லாட்டி உடனே போய் பாருங்க ஏமாற்றம் அடைய மாட்டேங்க ஏன்னா சினிமாப்பாட்டுக்களை முணுமுணுக்காதவங்க யாருமே இருக்க மாட்டாங்க.
------------------------------------
இன்றைய தினம் திருக்கயிலாயமும் மானசரோவரும் இணைந்த
கௌரி-சங்கர் தரிசனம் காணுங்கள் அன்பர்களே.
இராக்ஷஸ் தால் ஏரியிலிருந்து திருக்கயிலாய தரிசனம்
The first darshan of Kailash during the yatra is from Rakshas Tal only enjoy that view .
திருக்கயிலாய யாத்திரையின் போது கயிலயங்கிரியின் முதல் தரிசனம் இராவணன் உருவாக்கிய இந்த இராக்ஷஸ்தாலிலிருந்து தான் கிடைக்கிறது அந்த அழகை இரசியுங்கள்.
Enjoy the beauty of the Lord and Mother with Manasarovar -
This view is known as Gowri Shankar
நம் கோனும் பிராட்டியும் இந்த புவனம் முழுவதற்கும் அரசன் அரசியாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் அழகுதான் என்னே!
|
|
No comments:
Post a Comment