அவசியம் படிங்க, எழுதுங்க, கதை விடுங்க..
➦➠ by:
மாதவன்
நேற்றைய கேள்விக்கான விடை : நக்கல். சரியாக முதலில் சொன்ன அருண் பிரசாத்துக்கு (சூரியனின் வலைவாசல்) வாழ்த்துக்கள்.
அ) அன்றாட அவசியம் :
பெரும்பாலும் நம்ம நாட்டுல நடக்குற சாலை விபத்துக்கள் நம்மோட கவனமின்மை மற்றும்அலட்சியத்தாலதான் அப்படீன்னு நா நெனைக்கிறேன். எல்லோரும் சாலை விதிகளை மதித்து நடக்கணும். இது சம்பந்தமா அமெரிக்கால, தன்னோட சாலை வழிப் பயணத்தை ஆதி நல்லா சொல்லியிருக்காரு இங்க .
அதே நண்பர் நம்மோட கவனக் குறைவால சின்னக் குழந்தைக்கு வரக்கூடிய இன்னல, தான் பட்ட கஷ்டத்த நெனைச்சி சொல்லுறாரு மறக்காம அங்க போய் படிங்க.
வாழ்க்கையில ஒவ்வொரு நிகழ்வுலேருந்தும் ஏதாவது விஷயத்தை நாம கத்துக்குறோம். ஒரு ஒட்டகம் கற்றுத் தரும் பாடத்தை, நம்மள மாதிரி தமிழ் வலைஞர்களுக்கும் புரியுறமாதிரி நல்லா மொழி பெயர்த்து சொல்லி இருக்காரு -- என்னது அவரு யாரா ? போயி பாத்துட்டு வாங்க புரியும்..
நம்மளப் போல ஆளுங்கலாம், யாராவது ஏதாவது எழுதி புஸ்தகமா போட்டா வாங்கிப் படிப்போம். ஆனா, நாமே புஸ்தகம் எழுதுறதுன்னா ? நம்மளோட அனுபவத்த நாம பிலாகுல எழுதறா மாதிரி, சுற்றுலா அனுபவத்தைப் புஸ்தகம் போடுவது பற்றி, கொஞ்சம் அலசி இருக்காரு ஆழ்வார்கடியான், தன்னோட அரட்டைல.
புஸ்தகத்துல விமரிசனம் படிச்சா, தெளிவு கெடைக்கும். புஸ்தகத்துக்கே விமர்சனம் எழுதி நமக்கு அந்த புஸ்தகத்த படிக்கணும்னு ஆர்வத்தைத் தூண்டுறாரு, அண்ணன் மோகன் குமார். அவர் எழுதிய இந்தப் புஸ்தக விமர்சனம் என்னை மிகவும் கவர்ந்தது.
- பள்ளிக்கூட நாட்கள்ல விரும்பிப் படித்தது எழுத்தாளர் ராஜேஷ்குமாரின் நாவல்கள். இப்பலாம் படிக்க முடியலை (எங்க ஊருல கெடைக்காதுங்க அதான்). சமீபத்தில் சில மாதங்களாக வந்த இந்தத் தொடர் நாவலை படித்த உடனே அந்த குறை போயிடுச்சி. கிட்டத்தட்ட அந்த மாதிரி நடைல, விறுவிறுப்பு கொறையாம எழுதி இருக்கார் இந்த நண்பர். நீங்கள் கூட படிச்சிருப்பீங்க. படிக்கலேன்னா இங்க போயி ஓவ்வொரு பாகமா படிங்க. சிறுகதைகள் கூட எழுதிருக்காரு. இந்தப் படம் இதற்கு எப்படிப் பொருந்தும் ? நாளைக்கு சொல்லுறேன்..
நெதானமா ஒக்காந்து படிச்சிட்டு வாங்க.. மத்ததலாம் நாளைக்கு பாக்கலாம்.
|
|
அட நாந்தான் மொத ஆளா - வட வ்ட சூடா வட
ReplyDeleteகனவுத் தொழிற்சாலை - கனவு காண்பவரைப் பற்றிய அறிமுகம். இதுதான் பதிலா மாது
ReplyDeleteஆமா, சீனா சார்.. வடை உங்களுக்குத்தான்..
ReplyDeleteநேற்றைய சுய அறிமுகத்தை படித்துவிட்டு, பதினைந்திற்கும் மேற்பட்ட, என்னுடைய பழைய இடுகைகளை படித்து, உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்தமைக்கு நன்றி, Cheena Sir.
// அட நாந்தான் மொத ஆளா -
ReplyDeleteவட வ்ட சூடா வட //
ஆஹா.. கடைசியில இவரையும்
கெடுத்துபுட்டீங்களாப்பா..
நல்ல அறிமுகங்கள்..
ReplyDelete// வெங்கட் said..." அட நாந்தான் மொத ஆளா -
ReplyDeleteவட வ்ட சூடா வட //
ஆஹா.. கடைசியில இவரையும் கெடுத்துபுட்டீங்களாப்பா..//
நம்மக்கிட்ட சகவாசம் வெச்சிக்கிட்டா.. இபடித்தான நடக்கும்..
நன்றி ஸ்ரீராம்..
ReplyDeletegood introductions!
ReplyDelete(template comment poduvor sangam)
//
ReplyDeleteநெதானமா ஒக்காந்து படிச்சிட்டு வாங்க.. மத்ததலாம் நாளைக்கு பாக்கலாம்.////
நான் நின்னுக்கிட்டு கூட படிப்பேன். அதை எப்படி நீங்க சொல்லலாம். அட யாராவது சண்டைக்கு வாங்களேன்
//வெங்கட் said...
ReplyDelete// அட நாந்தான் மொத ஆளா -
வட வ்ட சூடா வட //
ஆஹா.. கடைசியில இவரையும்
கெடுத்துபுட்டீங்களாப்பா..//
அட அதான செல்வா உனக்கு போட்டி ரெடி. ஹிஹி
நல்ல அறிமுகங்கள்.. பகிர்விற்கு நன்றி...
ReplyDelete(கமெண்ட் சொந்தமா யோசிச்சு போடுவோர் சங்கம்...)
cheena (சீனா) said...
ReplyDeleteஅட நாந்தான் மொத ஆளா - வட வ்ட சூடா வட
//
ஐயா.. நீங்களுமா!!!!!
ஆஹா. இரண்டாம் நாளில் முதல் ஆளாக இந்த ஆதிமனிதனுக்கு இன்ட்ரோ கொடுத்து அங்கிகாரம் தந்ததிற்கு என் நன்றிகள் பல. மேலும் பலரது அறிமுகமும் சூப்பர். தொகுப்பு அருமை.
ReplyDeleteஅறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குதுங்க. பாராட்டுக்கள்!
ReplyDeleteவித்யாசமா எழுதுறீங்க. என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி
ReplyDeleteஅறிமுகங்களை சிறப்பா எழுதியிருக்கீங்க!
ReplyDeleteசில புதியன! நன்றி!
பெரும்பாலும் நம்ம நாட்டுல நடக்குற சாலை விபத்துக்கள் நம்மோட கவனமின்மை மற்றும்அலட்சியத்தாலதான் அப்படீன்னு நா நெனைக்கிறேன்//
ReplyDeleteசாலை இருக்கற நெலமையும் ஒரு காரணம்ன்னு நான் நெனைக்கறேன் சார்
//பெயர் சொல்ல விருப்பமில்லை said...
ReplyDeletegood introductions!
(template comment poduvor sangam) //
நன்றி
(நாங்களும்தான்..)
// ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
ReplyDelete//
நெதானமா ஒக்காந்து படிச்சிட்டு வாங்க.. மத்ததலாம் நாளைக்கு பாக்கலாம்.////
நான் நின்னுக்கிட்டு கூட படிப்பேன். அதை எப்படி நீங்க சொல்லலாம். அட யாராவது சண்டைக்கு வாங்களேன் //
கம்பியூர்ருக்கு முன்னாடி.. நாற்காலிமேல ஏறி நின்னுக் கிட்டே படிப்பீங்களா ?
உங்க வசதி..
நாங்கலாம் ரொம்பவே நல்லவங்க.. சண்டைலாம் போடமாட்டோம்..
// வெறும்பய said...
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்.. பகிர்விற்கு நன்றி...
(கமெண்ட் சொந்தமா யோசிச்சு போடுவோர் சங்கம்...) //
"சொந்தமா... "
சாரி 'சிரிப்பு' வரலை..
// ஆதி மனிதன் said...
ReplyDeleteஆஹா. இரண்டாம் நாளில் முதல் ஆளாக இந்த ஆதிமனிதனுக்கு இன்ட்ரோ கொடுத்து அங்கிகாரம் தந்ததிற்கு என் நன்றிகள் பல. மேலும் பலரது அறிமுகமும் சூப்பர். தொகுப்பு அருமை. //
அதுவா அமையுது...
வாழ்த்துக்கும் பாராட்டுதலுக்கும், நன்றிகள் ஆதி..
// Chitra said... "அறிமுகப்படுத்தும் விதம் நல்லா இருக்குதுங்க. பாராட்டுக்கள்!"
ReplyDelete//
ஒங்க அளவுக்கு என்னால முடியாதுங்க.. மேடம்..
பாராட்டுதலுக்கு, நன்றி.
//cheena (சீனா) said...
ReplyDeleteஅட நாந்தான் மொத ஆளா - வட வ்ட சூடா வட//
ஆகா, வர வர போட்டி அதிகமாயிட்டே வருதே...
@ மாதவன்
நல்ல அறிமுகங்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள்
// மோகன் குமார் said...
ReplyDeleteவித்யாசமா எழுதுறீங்க. //
அப்படியா.....?
//என்னையும் குறிப்பிட்டமைக்கு மிக்க நன்றி //
நா உங்களுக்கு அப்புறம்தான்... (வலைமனை அனுபவம்).. உங்கள நா அறிமுகப் படுத்துறதா? இல்லை. அதை, எனக்கு பிடிச்ச பதிவுல ஒன்னா சொல்லி இருக்கேன்.
------ நன்றிகள்..
//இந்தப் படம் இதற்கு எப்படிப் பொருந்தும் ? நாளைக்கு சொல்லுறேன்.. //
ReplyDeleteகனவு தொழிற்ச்சாலை - சினிமா உலகத்தை பற்றியதா??
ஐ 25 வது வடை
ReplyDelete//எஸ்.கே said...
ReplyDeleteஅறிமுகங்களை சிறப்பா எழுதியிருக்கீங்க!
சில புதியன! நன்றி! //
பாராட்டுதலுக்கு நன்றி, எஸ்.கே.
புதியவர்களின் பதிவுகளை படித்துவிட்டு, அவர்களையும் ஊக்கப் படுத்தவும்.
//Arun Prasath said.. "
ReplyDeleteசாலை இருக்கற நெலமையும் ஒரு காரணம்ன்னு நான் நெக்கறேன்
சார் " //
நீங்கள் சொல்வது சரிதான். ஆனாலும், நான் சொல்ல விழைவது,
"இருப்பதை வைத்துக் கொண்டு, நாம் நமது பொறுப்புக்களை சரியாகச் செய்யவேண்டும்... அதாவது.. எந்த காரணத்தினாலும் விதிகளை மீரா வேண்டாம்.. ".
//அருண் பிரசாத் said..." @ மாதவன்
ReplyDeleteநல்ல அறிமுகங்கள்... அவர்களுக்கு வாழ்த்துக்கள் " //
'...' = 'மாதவன்' ?
////cheena (சீனா) said...
ReplyDeleteஅட நாந்தான் மொத ஆளா - வட வ்ட சூடா வட //////
நமது கட்சியில் இணைந்த சீனா அய்யா அவர்களை வருக வருக என்று 11-வது உள்வட்டம் சார்பாக வரவேற்கிறேன்!
oru ONLINE sollikkiren..
ReplyDelete// பன்னிக்குட்டி ராம்சாமி said...
ReplyDelete////cheena (சீனா) said...
அட நாந்தான் மொத ஆளா - வட வ்ட சூடா வட //////
நமது கட்சியில் இணைந்த சீனா அய்யா அவர்களை வருக வருக என்று 11-வது உள்வட்டம் சார்பாக வரவேற்கிறேன்!//
நானும் எனது கட்சியின் சார்பாக வரவேற்கிறேன்.
ஆதிமனிதன் அவர்களின் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteஎன்னது நானு யாரா அவர்களின் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteஆழ்வார்க்கடியான் அவர்களின் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteமோகன்குமார் அவர்களின் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteDREAMER அவர்களின் பிளாக்கிற்கு வாழ்த்துக்கள்! தங்களின் பணி மென்மேலும் சிறப்படையட்டும்!
ReplyDeleteஆதி மனிதன் எனக்குப் புதுசு அண்ணா பார்கிறேன் .!!
ReplyDeleteஅதே மாதிரி அந்த DREAMER எனக்கு புதுசு ..
அவரையும் பார்கிறேன்..!
// cheena (சீனா) said...
ReplyDeleteஅட நாந்தான் மொத ஆளா - வட வ்ட சூடா வட
//
அடடா , இது செல்லாதுங்க .. அவுங்க அவுங்க கடைல அவுங்க அவுங்களே வாங்க கூடாது ..!!
//பன்னிக்குட்டி ராம்சாமி said " நமது கட்சியில் இணைந்த சீனா அய்யா அவர்களை வருக வருக என்று 11-வது உள்வட்டம் சார்பாக வரவேற்கிறேன்! " //
ReplyDeleteபண்ணியாரே எங்க போயிட்டீங்க.. ரொம்ப ஆணியா ?
வெறும்பய சார்.. புரியலியே ?
ReplyDelete@ எஸ்.கே.. "நல்லவேளை.. லிமிட்டா லிங்க் கொடுத்தேன்.. இல்லேன்னா நீங்க மேலும் சிரமப் பட்டிருப்பீங்க.. :-) "
ReplyDelete@ Selvakumar "வடை சீனா சாருக்குத்தான்.. நான் தான் இப்ப கடைக்கு owner. சீனா சார் இடத்த லீசுக்கு விட்டுருக்காரு.."
ReplyDelete//இந்தப் படம் இதற்கு எப்படிப் பொருந்தும் ? நாளைக்கு சொல்லுறேன்.//
ReplyDeleteபுரிஞ்சுடுச்சு! நீங்க கொடுத்த :Linkல நான் ஒரு Dreamer அப்படின்னு எழுதியிருக்கு! அதுனாலதான் நீங்க இந்தப் படத்தப் போட்டிருக்கீங்க!
டிப்பிறேண்டா இருக்கு சுப்பர்
ReplyDeleteநாளைக்கு காலைல விடைய சொல்லுறேன்.. சரியா தப்பான்னு ஒங்களுக்கே புரியும்
ReplyDeleteபடிங்க, எழுதுங்க, கதை விடுங்க....
ReplyDeleteஅதாவது சிறப்பாக கதை எழுத நிறைய படிக்கணும் எழுதி பார்க்கணும்கிற நல்ல கருத்தை தெரிவித்துள்ளீர்கள்!
இதுதான் 'மாத்தி யோசி' -- நன்றி காயத்ரி..
ReplyDeleteமுதல் படம் நமக்கு அவசிய தேவைகள் பற்றி சொல்லுது ,
ReplyDeleteஇரண்டாவது படம் புத்தகங்கள் பதியும்
மூணாவது பதிவு கதை விடுவது , அதாவது கற்பனை பற்றியும் சொல்லுது ..!!
பிரபலம்: ட்ரீமர் ஆவிக்கதைகளும் நல்லா எழுதுவார். அவர் ஒரு திரைப்படம் இயக்கியுள்ளார். இன்னொன்னும் எடுக்க போறாராம்!
ReplyDeleteவடை எனக்கே ..!!
ReplyDelete//Yes.ke said "ஆவிக்கதைகளும் நல்லா எழுதுவார். அவர் ஒரு திரைப்படம் இயக்கியுள்ளார். இன்னொன்னும் எடுக்க போறாராம்! "//
ReplyDeleteஎனக்கு அவர் கதை ரொம்பப் பிடிக்கும், எஸ்.கே. முக்கியமாக ஆரியமாலா , படித்திருக்கிறீர்களா ?
ஆமாம் மாதவன் அந்த கதை சூப்பர்! அவரின் எல்லாக் கதைகளிலும் கடைசியில் ஒரு ட்விஸ்ட் இருக்கும்!
ReplyDeleteஇதில் ஹரீஷ் அவர்களுடைய தளத்தில் எல்லா பதிவுகளையும் படித்திருக்கிறேன். கேணிவனத்தின் விசிறி நான் :)
ReplyDeleteமற்ற அறிமுகங்கள் எனக்கு புதிது. அவர்கள் பதிவுகளையும் படிக்க ஆரம்பிக்கிறேன்..
// இந்தப் படம் இதற்கு எப்படிப் பொருந்தும் //
ஹரீஷ் தளத்தில் அவருடைய பெயர் dreamer. மற்றும் அவர் கனவு தொழிற்சாலையான சினிமா இண்டஸ்ட்ரியில் நுழைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இவர் இயக்கிய "ஓர் இரவு" திரைப்படம் 8ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.
(எல்லா டீடெய்ல்ஸையும் சொல்லிட்டேன்.. ஏதாவது ஒண்ணாவது க்ளிக் ஆகாமயா போய்டும்..)
சாரி மாதவன் ரொம்ப ஆணி ..........ரொம்பா லேட் அ வந்ததுக்கு 10 தோப்புகர்ணம் போட்டு கிடுகேன் ........
ReplyDeleteDreamer = கனவாளி!
ReplyDelete(சரியான பதில்)
புதிய அறிமுகங்கள்.
நன்றி கூறி எனது வாழ்த்துக்களைத்
தெரிவித்துக் கொள்கிறேன், மாதவன்.
(57)
சாரி மாதவன் ரொம்ப ஆணி ..........ரொம்பா லேட் அ வந்ததுக்கு 100 தோப்புகர்ணம் போட்டு கிடுகேன் ........
ReplyDelete@ Anu.. நீங்க சொன்ன மேட்டருலாம் ஹரீஷோட பேஜுல பாத்தேன்.
ReplyDeleteநாளைக்கு இவ்ளோ லேட்டா வராதீங்க.. காலைலயே வந்துடுங்க, அனு.
//இம்சைஅரசன் பாபு.. said...
ReplyDelete"சாரி மாதவன் ரொம்ப ஆணி ..........ரொம்பா லேட் அ வந்ததுக்கு 10 தோப்புகர்ணம் போட்டு கிடுகேன் ........"//
நோ bad feelings .. நோ செண்டிமெண்ட்.. நீ என் 'நன்பேண்டா'..
(தோப்புக் காரணம்லாம் வீட்டோட மறந்துடணும்.... ஆமாம்..)
NIZAMUDEEN said.. "புதிய அறிமுகங்கள். நன்றி கூறி எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன், மாதவன்."
ReplyDelete//
நன்றி, நிஜாமுதீன். நாளைக்கும் வாங்க...
//@ TERROR.."சாரி மாதவன் ரொம்ப ஆணி ..........ரொம்பா லேட் அ வந்ததுக்கு 100 தோப்புகர்ணம் போட்டு கிடுகேன் ........" //
ReplyDeleteநீங்க எங்கள் கப்பலுக்கு கேப்டன்.. நீங்க போயி.. வேண்டாம்.. வேண்டாம்...
//நாளைக்கு இவ்ளோ லேட்டா வராதீங்க.. காலைலயே வந்துடுங்க, அனு//
ReplyDeleteஹிஹி.. ஆணி கொஞ்சம் அதிகம்.. அதனால் தான். உரிமையோட கூப்புடுறீங்க.. ஆபிஸுக்கு லீவ் போட்டுட்டுனாலும் வந்திட மாட்டோமா என்ன.. :)
வணக்கம் மாதவன்,
ReplyDeleteஎன்னை இங்கு அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி..! பிற அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள். அவர்களது பதிவுகளையும் தொடர்கிறேன்.
நன்றி
-
DREAMER
congratulations.
ReplyDeleteநன்றி ட்ரீமர்.. நீங்கள் ஏற்கனவே பிரபலம்தான்..
ReplyDeleteஉங்கள் கதையைத்தான், படிக்காதவர்களுக்கு அறிமுகப் படுத்த ஒரு சிறிய முயற்சி.
நன்றி கீதா..