07 - 09 - 2015 முதல் ஆசிரியர் பொறுப்பேற்பவர்

ரிஷபன்
இவரின் வலைப்பூ

ரிஷபன்

முந்தைய ஆசிரியர்கள்


சீனா ... (Cheena) - அசைபோடுவது

சிந்தாநதி

நன்றி!

திரட்டிகளின் தொகுப்பு

:: தமிழ் திரட்டுகளின் சங்கமம்<br/>:: Tamil blogs, news, ezines

வலைப்பதிவர் உதவிப்பக்கம்

தமிழில் எழுத மென்பொருள்

fb like

ஞானாலயா = புதுக்கோட்டை

www.gnanalaya-tamil.com
வலைச்சரத்தில் வெளியிடப்படும் இடுகைகள் வலைச்சரக் குழுவினரால் தணிக்கைக்கு உட்படாது. ஆனால், வலைச்சர விதிக்கு உட்படாத இடுகைகளை முன்னறிவிப்பின்றி நீக்க வலைச்சரக் குழுவினருக்கு உரிமை உள்ளது

Friday, December 24, 2010

தங்கமணி Vs ரங்கமணி

”தங்கமணி சாப்பாட்டுக்காக எவ்ளோ நேரம் வெயிட் பண்றது.. சீக்கிரம் வாம்மா. பதிவு படிக்கிறச்ச ப்ரேக் எதுவும் கிடையாதா? ச்சே  சீரியல் கூட பரவாயில்ல விளம்பர இடைவேளையில சாப்பாடு கிடைச்சுது. ப்ளாக் படிக்க ஆரம்பிச்சதிலிருந்து அந்த கேப் கூட போயிருச்சே” 

“என்ன அங்க சத்தம்? செத்த நாழி இருங்கோ வரேன். இப்ப தான் படிக்க ஆரம்பிச்சேன். அதுக்குள்ள என்ன? இன்னும் நிறைய படிக்க வேண்டி இருக்கே? நிம்மதியா கொஞ்ச நேரம் படிக்க விடமாட்டாங்களே?” என கத்தினாள்.
“கொஞ்ச நேரம்னு சொல்றயேம்மா கொஞ்ச நாள்னு சொல்லு” ரங்கமணி புலம்பினார்.

"அப்பா இன்னும் கொஞ்ச நாள் போனா கொஞ்ச மாசம்னு சொல்லனும் போலயே?” மகள் கூட கிண்டல் செய்தாள்.

“என்ன இங்க சத்தம்? என்னாச்சு? படிக்க சுவாரஸியமா இருக்கேன்னு கொஞ்ச நேரம் கொத்து பரோட்டா படிச்சுட்டு இருந்தா பொருக்காதே? என்ன முழிக்கிறேள்?.......... பயப்படாதீங்க. சைவ கொத்து பரோட்டா தான்.” கோபமாக வந்தது தங்ஸ்க்கு.

”என்னடா குட்டி உங்கம்மா டென்ஷன்னா இருக்காளே என்ன காரணம்? நேத்து இதே மாதிரி சாப்பிடறச்ச கூப்பிடுறப்ப சிரிச்சுட்டே வந்து சாப்பாடு பரிமாறிட்டு போனாளே? ” என்று மகள் காதில் கிசுகிசுத்தார் ரங்ஸ்

 நேத்து படிச்சது அன்புடன் மலிக்காவோட காதல் கவிதை ஆனா இன்னைக்கு சகோ எல்.கே  எழுதின  பதிவபடிச்சுட்டு திருந்தா மனிதர்களை பற்றி நெனச்சு  ஆதங்கத்துல  இருக்கும் போது புன்னகை எப்படி வரும் ?
ரங்கஸ்க்கு எப்படி இது புரியும் ?

"என்ன அங்க ரகசியம்? எதுவா இருந்தாலும் இங்க பப்ளிஷ் பண்ணுங்க. பாஸிடிவ் ஓட்டா இல்ல நெகடிவ் ஓட்டான்னு நான் சொல்றேன்” தங்ஸ்
“அம்மா தாயே நானும் குட்டியும் தட்டோட டைனிங் டேபிள்ல வந்து ரொம்ப நேரம் ஆச்சு. சீக்கிரம் சாப்பாடு போடுறய்யா? இல்ல இன்னைக்கும் பட்டினியா?” ரங்க்ஸ்

“என்ன இப்படி சொல்லிட்டீங்க? என்னைக்கு உங்களுக்கு சாப்பாடு போடாம இருந்திருக்கேன்? அன்னைக்கு கார குழம்பு கேட்டீங்க டக்குன்னு அன்புடன் ஆனந்தி பதிவு ஓபன் பண்ணி அதே மாதிரி சூப்பரா காரக்குழம்பு ரெடி பண்ணி கொடுத்தேன். நோன்பு நாள்ல ஒரு நாள் குட்டி மிக்சர் வேணும்னு சொன்னா. எல்லா கடையும் மூடியிருந்தது. டக்குன்னு ஆனந்தி பதிவுல இருக்குற மாதிரி மிக்சர் கூட வீட்டிலயே பண்ணிகொடுத்தேனே?” பொரிந்து தள்ளினாள் தங்ஸ்.
“அம்மா அன்னைக்கு குலோப்ஜாமூன் கேட்டேனே.. நீ செய்ய மாட்டேன்னு சொல்லிட்ட. அப்ப அந்த ஆனந்தி ஆண்ட்டி “குலோப்ஜாமூன் செய்வது எப்படி?”ன்னு பதிவு போடலயா?” மகள்
“நீ சும்மா இருடி உனக்கு தெரியாது. இவர் இப்படி தான் என்னை எதுக்கெடுத்தாலும் குறை சொல்லிட்டே இருக்கார். எல்லாம் எந்நேரம் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் வ்”  அழுதாள் தங்ஸ்

“தங்கமணி அழாதடி... ப்ளீஸ்.. உன்னை கெஞ்சி கேட்டுக்கிறேன்” ரங்ஸ் உருகினார்.

“அப்பாட இப்பவாச்சும் என்னை புரிஞ்சுகிட்டேளே”
“இல்லடி முன்னெல்லாம் ரொம்ப அழகா அழுவ..நல்லா ரசிச்சு பார்ப்பேன். இப்பெல்லாம் எதுக்கெடுத்தாலும் வாயை சிரிச்ச மேனிக்கு வச்சுட்டு கண்ல தண்ணியே வராம “அவ்வ்வ்வ்வ்வ்”ன்னு வடிவேலு மாதிரி அழற.. பார்க்க சகிக்கலடி. இதாவது பராவில்ல அன்னைக்கு கரப்பான் பூச்சியைப் பார்த்து பயந்துட்டு மயக்கம் போடும் போது கூட “கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்”ன்னு டவுண்டு விட்டுகிட்டே கீழ விழுந்த. மயக்கம் வரும்போது கூடவா அப்படி? பதிவு படிச்சதிலிருந்து இப்படி ஆகிட்டயே” கடுப்பை கிளப்பினார் ரங்ஸ்.

“ரீப்பிட்டே” மகள்
“குட்டிம்மா நீயும் பதிவு படிக்கிறயா? டூ பேட்.” ரங்ஸ் விடாமல் சிக்ஸர் அடித்தார்.

”இல்லப்பா ஒன்லி கமெண்ட்ஸ் தான்”மகள் வேகமாக தலையாட்டினாள்.
“அய்யோ கடவுளே ஏன் இப்படி டார்ச்சர் பண்றீங்க. ஏற்கனவே நான் டென்சன்ல இருக்கேன். அமீரகத்துல நம்ம அநன்யா மஹாதேவன் பதிவு எழுத ஆரம்பிச்சு ஒரு வருசம் ஆச்சுன்னு ஆனிவர்ஸரி எல்லாம் கொண்டாடுறா..

ஹூஸைனம்மாவும் வந்து ஒரு வருசம் மேல ஆச்சு. கலக்கலா எழுதி கலக்குறாங்க. எவ்ளோ ஆசையா இருக்கு தெரியுமா.. ஆனா எனக்கு அது கூட கொண்டாட முடியலன்ற கவலையில இருக்கேன். நீங்க ரெண்டு பேரும் என்னடான்னா வெறுப்பேத்திகிட்டு இருக்கீங்க” என்று வெம்மினாள் தங்ஸ்.
“என்ன கொடுமை தங்கமணி இது?  பதிவு எழுதி ஒரு வருசம் ஆனதை கொண்டாட நீ எழுதி ஒரு வருசம் ஆகியிருக்கனும்மா.. நல்லா எழுதுறதைப்பார்த்து பொறாமைபட்டா போதாது நீயும் நல்லா எழுதனும். தங்க நகை கேட்டா வாங்கிகொடுக்கலாம், பட்டு சேலை கேட்டா வாங்கி கொடுக்கலாம் இதெல்லாம் நான் எப்படிடா வாங்கி கொடுக்க முடியும்?” ரங்ஸ்
“சரி அப்ப எனக்கு இந்த மாசம் தங்க நெக்லஸ் வாங்கி கொடுங்க” அவர் சொன்னதையே பிடித்துக்கொண்டாள்.

“வாயை கொடுத்து மாட்டிகிட்டேனே.....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் (ச்சே எனக்கும் தொத்திகிச்சே!)” ரங்ஸ்
“அப்பா வேற வழி இல்ல.. ஒத்துக்கங்கோ ரொம்ப பசிக்கிறது” மகள்
“சரிம்மா வாங்கித்தரேன். நீ பதிவு படிக்கிறதை நிறுத்திட்டு சீக்கிரம் சாப்பாடு போடு.”

“அப்படி வாங்க வழிக்கு” என்றபடி சாப்பாடு பரிமாறினாள்.

“என்ன சமையல் இன்னைக்கு?” என்றவர் கத்திரிக்காயைப் பார்த்ததும் “ஐய் என்னோட பேவரிட் கத்திரிக்காயா.. தாங்ஸ் தங்கமணி” ரங்ஸ் குஷியானார்.
“இப்ப தாங்க ஞாபகம் வருது உங்களுக்கு இந்த கத்திரிக்காய் பிடிச்ச மாதிரி நம்ம வானதியோட ஹஸ்பண்டுக்கும் ரொம்ப பிடிக்குமாம். அதை பத்தி ஒரு பதிவு எழுதி இருந்தா பாருங்கோ. அவ்ளோ சூப்பர். அப்புறம் அவரோட அறுசுவை சைட்டுக்கு போனோம்னா விதவிதமா.....” தங்ஸ் பாட்டுக்கு பேசிக்கொண்டே போக...
“அம்மா ஸ்டாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்” என்று மகள் கோவமாக எழுந்து சுவரை பார்த்தபடி நின்றுகொண்டாள்.
தங்ஸூம் ரங்ஸூம் மாறி மாறி அவளை சமாதானாம் பண்ணினார்கள். “அம்மா இனி பதிவே படிக்க மாட்டேன். பதிவு பத்தியும் பேச மாட்டேன். ப்ளீஸ் வந்து சாப்பிடும்மா” என்றாள் தங்ஸ்.
இறுதியாக இருவரும் சேர்ந்து மகளின் ஆளுக்கொரு கன்னத்தில் இறுக்க முத்தமிட... மகள் சந்தோஷத்தில் “ஸ்வீட் மம்மி & டாடி.. வடையும் பூங்கொத்தும் எனக்குதான்” என கத்தினாள்.

26 comments:

  1. குடும்ப உரையாடலின் ஊடே பதிவுகள் அறிமுகங்கள் அருமை.

    ReplyDelete
  2. வழக்கம்போலவே தினமும் ஒரு புது ஸ்டைலில் அறிமுகப்படுத்தி அசத்துறீங்க...

    தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. //மாணவன் said...

    வழக்கம்போலவே தினமும் ஒரு புது ஸ்டைலில் அறிமுகப்படுத்தி அசத்துறீங்க...

    தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்///

    உங்கள் பொன்னான பணி தொடரட்டும்

    ReplyDelete
  4. just for laugh

    இந்த பிளாக் படிக்கலாமா?

    ReplyDelete
  5. என்னையும் அறிமுகப் படுத்தியதற்கு நன்றி

    ReplyDelete
  6. //just for laugh

    இந்த பிளாக் படிக்கலாமா?

    //

    பகலில் படிக்கவும் . பக்கத்தில் யாரும் இருக்கக் கூடாது அது முக்கியம்

    ReplyDelete
  7. சூப்பரான அறிமுகங்கள். என்னையும் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. வித்தியாசமான முறையில் அறிமுகங்கள்..!! :-)

    ReplyDelete
  9. வா ரே வா!. நிஜமாவே வித்தியாசமான வகையில் நகைச்சுவை இழையோட அறிமுகப்படுத்தி இருக்கீங்க..
    I loved Rang's comments.
    முந்தைய தின பக்கங்களையும் படிச்சிட்டு வர்றேன்..

    ReplyDelete
  10. தெரிந்த பதிவர்கள்தான் , கதை வடிவில் புதுமை :-)

    ReplyDelete
  11. அடடே! இந்த ஸ்டைல்ல அறிமுகம் நல்லாயிருக்கே!

    ReplyDelete
  12. ஸ்டைல்னா இதுதானா... :)

    ReplyDelete
  13. ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
    //மாணவன் said...

    வழக்கம்போலவே தினமும் ஒரு புது ஸ்டைலில் அறிமுகப்படுத்தி அசத்துறீங்க...

    தொடர்ந்து கலக்க வாழ்த்துக்கள்///

    உங்கள் பொன்னான பணி தொடரட்டும்///

    சொந்தமா கமென்ட் போடதீங்க இப்படி காப்பி பேஸ்ட் பண்ணியே காலத்த ஓட்டிருங்க....:)

    ReplyDelete
  14. @ ரசிகன்.,

    // முந்தைய தின பக்கங்களையும்
    படிச்சிட்டு வர்றேன்.. //

    5 நாள் ஏன் வரலை..?
    லீவ் லெட்டர் எங்கேப்பா..?

    Blog Entrance-ல போயி
    முட்டி போடுங்க..

    ReplyDelete
  15. @ ரமேஷ்.,

    // only 2 days. jolly... //

    அதுக்கு அப்புறம் 7 நாள் நாங்க
    கொடுமையை அனுபவிக்கணுமே..

    அடுத்த வாரம் நீங்க தானே ரமேஷூ..??

    ReplyDelete
  16. @ கார்த்திக்.,

    // சொந்தமா கமென்ட் போடதீங்க இப்படி
    காப்பி பேஸ்ட் பண்ணியே காலத்த
    ஓட்டிருங்க....:) //

    ரைட்டு..!!

    ReplyDelete
  17. வெங்கட் said...

    அடுத்த வாரம் நீங்க தானே ரமேஷூ..??///

    கார்த்திக்கிற்கும் அவன் அப்பாவிற்கும் நடந்த உரையாடலின் தொகுப்பு.



    கார்த்திக் : அப்பா அடுத்த வாரம் வலைச்சரம் எழுத போறது யார் தெரியுமா?

    அப்பா : யார்ரா கண்ணு?

    கார்த்திக் : சிரிப்பு போலிஸ் ரமேஸ்தான்பா

    அப்பா : ரமேசா , மகனே வேண்டாம் ரமேஷ் எழுதுறது எல்லாம் படிக்காதே.. அப்புறம் நீயும் ரமேஷ் மாதிரி ஆயிடுவே..

    கார்த்திக் : இல்லப்பா ரமேஷ் ரொம்ப நல்லா எழுதுவாரு...

    அப்பா : எக்கேடோ கேட்டு தொலை. ஒன்னு மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ எப்போ அப்பாவோட பேச்சை கேக்காம ரமேஷ் எழுதுறத படிக்கணும்னு நெனச்சுட்டியோ அப்பவே நீ உருப்பட மாடீனு தெரிஞ்சு போச்சு. போ பெத்த கடனுக்கு உனக்குன்னு ரெண்டு மாடு வாங்கி தரேன் அத மேச்சுட்டு பொழப்ப பாத்துக்கோ...

    ReplyDelete
  18. ha ha ha super Gayathri... seekaram un veetula indha dialogue kekkalaam pola irukke...kutti ponnu konjam perusaanappuram... waiting for that...ha ha

    Today's all intros...well known to me...friends group...super

    ReplyDelete
  19. நகைச்சுவையாய் உரையாடலில் அறிமுகங்கள்.
    பலே!22..............

    ReplyDelete
  20. எல்லாமே எனக்கு பரிட்சயமான தளங்களே... அறுசுவை என்னும் தளத்தை தவிர்த்து...

    ReplyDelete
  21. Sorry - tamil font not working.

    Thanks for referring me also here.

    Interesting narration. And, yes, sometimes we tend to use the blog-lingo at home too!!

    ReplyDelete
  22. ரொம்ப தாமதமா வந்துட்டேன்... மன்னிக்கவும்..
    என்னை அறிமுகப்படுத்தியதற்கு.... ரொம்ப ரொம்ப சந்தோசங்க..!!

    சீக்கிரம் குலாப் ஜாமூன் ரெசிபி போட்டுற வேண்டியது தான்..
    ரொம்ப நன்றிங்க. :-)
    வாழ்த்துக்கள்.!!

    ReplyDelete

தமிழ் மணத்தில் - தற்பொழுது