வலைச்சரத்தில் இரண்டாம் நாள்!
➦➠ by:
மாயவரத்தான் எம்ஜிஆர்,
ரவிஜி,
வலைச்சரம்
வலைச்சரத்தில் இரண்டாம் நாள்!
முதல் நாள் வலைச்சரத்தில் எனது இடுகைக்கு
பாராட்டிய அன்பு உள்ளங்களுக்கு நன்றி!
இரண்டாம் நாள்முதல்
அறிமுகத்துக்கே முதலிடம்.
என்னைக்கவர்ந்த இடுகைகள் கீழே
தொகுத்துள்ளேன் வலைச்சரத்தில் இது எனது இரண்டாவது சரம்! (சரடு விடுரான்னு சொல்ல
மாட்டீங்களே!??)
1. வாரீரோ குருவிகளே!
சின்னக்குருவிகளாய் சிறகடிக்கும்
பள்ளிப்பருவத்தில் வறுமை சுமையானால்---? வறுமை தீர்ந்திட வாழ்த்திப்பாடிட சின்னஞ்சிறு
குருவிகள்தானே வரவேண்டும்? குருவிகளை வரவேற்கும் கவிதை ரசிக்க பறந்து செல்லுங்கள் -
காரஞ்சன் சிந்தனைகள் வலைப்பூவிற்கு!
2. (i)வெங்காயத்தின் 50
மருத்துவ குணங்கள்! அது கிடக்கிறது வெங்காயம் என்பார்கள்! உரித்துப்
பார்த்தால் உள்ளே ஒன்றும் இருக்காது! ஆனால் அதன் மருத்துவ குணங்கள்! அடேங்கப்பா!
(ii)60 தமிழ் வருடங்கள்!
தமிழ் மாதங்கள் நமக்குத்தெரியும் ஆனால் வருடங்கள்? முடிஞ்சாக்க மனப்பாடம்பண்ணுங்க!
வாங்க மணம்பரப்பும் “ரோஜா தோட்டம்” வலைப்பூவிற்கு!
அப்பட்டமான வார்த்தைப் பிரயோகம் ஒரு சில
இடங்களில் காணப்பட்டாலும் ஒரு ரசனையோடு எழுதப்பட்ட வித்தியாசமான கவிதைகள்!
(iii) பால் வினையாளி
ஆகிய கவிதைகள் குறிப்பிட்டு சொல்லத்தக்கவை!
மேலே படிக்க நீங்க நேரா போகவேண்டியது குறுக்காலபோவான் வலைப்பூவிற்கு!
4. மெகந்தி பழகலாம் வாங்க!
மருதாணி என்றால் அதன்
மணத்துக்கும், மருத்துவ குணத்துக்கும், அழகான பெண்ணின் கைகளை மேன்மேலும்
அழகாக்கவும் - - - இன்னும் எத்தனை
காரணங்கள் மெஹந்தி என்கிற மருதாணி அணிய!
வட இந்தியாவில் சில மாநிலங்களில் திருமணத்திற்கு முன்பான மெஹந்தி அணியும்
வைபவம் மிகவும் பிரசித்தம்! அதை எளிமையாய் கற்றுக்கொள்ள வேண்டுமா?? அப்பாக்களே
நீங்க பெத்த பொண்ணுக்கு நீங்களே போட்டு ரசிக்கனும்னா வாங்க
காணாமல் போன கனவுகள் – ராஜி
வலைப்பூவிற்கு
5. அட கிறுக்குப்பய புள்ள!
“செல் போன கண்டுபுடிச்சாலும் புடிச்சான்! இவனுங்களோட அளப்பற, மொக்க, ஐயோடா தாஆஆஆங்க முடியலப்பு!” இதுபோல நம்மில் பலர் எண்ணமிட்ட தருணங்கள் உண்டு! அத அப்புடியே கண்ணுமுன்னால கொண்டு வந்து நிறுத்துறாரு நம்ப தோஸ்து வெங்கட்ஜி! (நல்ல வேள பர்ஸ்ட் எய்ட் பாக்ஸ்ல பஞ்சு கெடச்சது! இல்லன்னா பட்டயான பிளாஸ்திரிய எடுத்து அந்த கிறுக்குப்பய புள்ளயோட வாய்லயே ஒட்டியிருப்பாரு போல (என்னா ரவுசு?!) நீங்களும் படித்து ரசிக்க – வாங்க! (அப்படியே பல ஊர சுத்திக்காட்டிட்டு புரூட் சாலட் கூட தருவாரு) “வென்கட் நாகராஜ் - சந்தித்ததும் சிந்தித்ததும்” வலைப்பூ
http://venkatnagaraj.blogspot.com/
6. மொபைல்:
‘டச் மொபைல்’
கேள்விப்பட்டிருப்பீங்க! காமெடி டச் மொபைல்
கேள்விப்பட்டிருக்கீங்களா? டுபுக்கு - தி
திங்க் டாங்க் வலைப்பூவுக்கு போங்க! (வலைப்பூவுக்கு பேரு வித்யாசமா
வப்பாங்க! அதுக்குன்னு இவ்வளவு வித்யாசமா தலைவா?)
7. பாப்பாவின் பண்புகள்:
குழந்தைகளுக்கான கவிதை எழுவது
சற்று சிரமம்! அதற்கு நமக்குள் இருக்கும் குழந்தை வெளிவரவேண்டும்! நிஜாமோட
பக்கமா போய் பாத்தா--- ‘நிஜாம்
பக்கத்து’க்கு போகசொல்லிட்டாரு! அங்கதான் இந்த குட்டிப்பாப்பா
கவிதை இருக்காம்! எட்டிப் பாருங்க!
8. 80+ வயதிலும் ஒரு அழகு!
அம்மாக்கள் எல்லாருமே ஆண்டவனின்
தூதர்கள்! 80+
வயதிலும் மாணவியான ஒரு அம்மாவைப் பற்றிய பதிவு. இயல்பாக சுவாரசியமாக
இருக்கிறது. அழகே
உன்னை ஆராதிக்கிறேன் வலைப்பூவிற்குள் சென்று நீங்களும்
ஆராதித்துத்திரும்புங்கள்!
கிறுக்கனின் கிறுக்கல்!
இது எனது படைப்பு! காசி செல்லும்
வழியில் இரயிலை பிடிக்க தாம்பரத்தில் இறங்கிய போது கண்ணில் பட்ட முகமூடி வியாபாரி!
கிளிக்கி இரண்டு வருடம் கழித்து இப்பொழுதுதான் இந்தக் கவிதை கிறுக்கனால் கிறுக்க வாய்த்தது!
சோகத்தொ(த)ங்கல்!
உள்ளொன்று வீற்றிருக்க
புறமொன்று காட்(சி)டி
நட(டி)க்கும்
முகமூடி(ய)
பொய் முகங்கள்!
விற்பனை ஆகாது தங்கிய
சோகம் தாளாது - தொங்கிய
இவனின் உண்மை முகமூடிகள்!
ரவிஜி---
(புகைப்படம் – ரவிஜி)
பிறகென்ன தொடரும்---நாளை சந்திக்கலாம்!
|
|
//தொங்கிய இவனின் உண்மை முகமூடிகள்!//
ReplyDeleteபடத்தேர்வும் பாடலும் அருமை.
இரண்டாம் நாள் சரத்தையும் ஒருவாறு உற்சாகத்துடன் தொடுத்து ஒப்பேத்தியுள்ளீர்கள். சரடு ஏதும் விடவில்லை. உண்மையிலேயே பாராட்டுக்கள்.
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சர அறிமுகங்கள் அனைவருக்கு வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை சிறப்பாக தொகுத்து வழங்கிய ரவிஜி ஐயாவுக்கு பாராட்டுக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteசில தளங்கள் புதிய தளங்கள். சென்று பார்க்கிறேன்
வணக்கம்
ReplyDeleteஎல்லாத்தளங்களும் தொடரும் தளங்கள் தான் அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றிகள் பல.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
அடியேனையும் இந்த வார வலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி நண்பரே....
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteமனிதர்கள் முக மூடிக்குள் தானே பல சமயங்களில் ஒளிந்து கொண்டிருக்கின்றார்கள்! அந்த ஒவ்வொரு முக மூடிக்குள்ளும் கதையும், அர்த்தமும் இருக்கும்....//தொங்கிய
இவனின் உண்மை முகமூடிகள்! //
கவிதை அருமை!
பொய் முகங்களை மூடிய முகமூடிகள்..
ReplyDeleteகவிதை அருமை..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!..
அன்பின் ரவிஜீ - அருமையான பதிவு அறிமுகங்கள் அத்தனையும் அருமை - ஒவ்வொன்றாகச் சென்று பார்த்து படித்து மறு மொழி இட்டு மகிழ்கிறேன் - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
ReplyDeleteஅறிமுகம் செய்தமைக்கு மிக்க நன்றி !
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉள்ளொன்று வீற்றிருக்க
ReplyDeleteபுறமொன்று காட்(சி)டி நட(டி)க்கும்
பொய்முகங்கள் -- கவிதை ரசிக்கவைத்தது..
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஇரண்டாம்நாள் அறிமுகங்கள் புதுமை! அருமை! கலக்குங்கள்! என்னுடைய வலைப்பூ அறிமுகத்திற்கு நன்றி!
ReplyDeleteஇன்று இடம்பெற்ற அனைத்து பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகவிதையும், அதற்கு பொருத்தமான படமும் அருமை.
மனிதர்களின் பொய் முகங்கள்!
ReplyDeleteவியாபாரியின் உண்மை முகம்!!
இரண்டையும் இணைத்து வடித்த கவிதை
'சோகத்தொ(த)ங்கல்' சிறப்பு!
படமும்தான்!
இன்று தொகுத்துள்ள சாரா மலர்கள் அனைத்துமே பல்சுவையாயிருக்கின்றது.
ReplyDeleteஎனது ( " நிஜாம் பக்கம் " ) வலைப்பூவின் ஒரு கவிதையையும் அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி திரு. எம்.ஜி.ஆர். அவர்களே!
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்