வலைச்சரத்தில் நான்காம் நாள்
➦➠ by:
MGR,
மாயவரத்தான் எம்ஜிஆர்,
ரவிஜி
வலைச்சரத்தில் நான்காம் நாள்!!!!
அன்பின் வலைச்சொந்தங்களுக்கு
எனது இனிய காலை வணக்கங்கள்! கடந்த மூன்று நாட்களில் வலைச்சரத்திற்கு வந்து பின்னூட்டமிட்டு
என்னை ஊக்கப்படுத்தி கெளரவப்படுத்திவரும் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்!
நானும் கொஞ்சம் கற்றுக்கொள்ளத் துவங்கியிருக்கிறேன்! இன்றைய மெனு என்னன்னு பார்க்கலாமா?
1. என்னுடைய வலைப்பூவில்
நான் எழுதிய ஒரு கவிதைக்கு பயன்படுத்திய அதே படத்திற்கு இவரின் கவிதை பார்த்து மகிழந்தேன்! இரண்டாவதோ - தலைப்பே கவிதை! நீங்களே செல்லுங்கள்--- மகிழ்நிறை வலைப்பூவிற்கு விடுமுறையின் வித்தியாசத்தை
நீங்களும் அனுபவியுங்கள்!
(i) எங்கள் விடுமுறை நாட்கள்! http://makizhnirai.blogspot.com/2013/08/blog-post_31.html
2. இப்படி ஒரு வெரைட்டியா என்று அசந்து போகச் செய்த வலைப்பூ! அருமையான கவிதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதை, ஹெலன் கெல்லர் பற்றிய இடுகை, மகள்களின் மீது அளப்பரிய பாசம் கொண்டவர்களை புன்னகைக்கச் செய்யும் ஒரு கவிதை--- மிச்சத்த நீங்களே சகோதரி கீதமஞ்சரியோட வலைப்பூவுக்கு போய் படிச்சுக்கோங்க! இவங்கல்லாம் போட்டியில பரிச அள்றாங்கன்னா ஆச்சரியமே இல்ல! இவங்க எழுதுன கவிதைய யாராச்சும் கைமாத்தா கெட்டாக்க அதுலயும் ஆச்சரியம் இல்ல!
(i) கவிதைக்கைமாற்று! https://plus.google.com/116170104301961496548/posts
(ii)ஆசிரியர் செய்த பிழை!ஆஸ்திரேலிய காடுறைக்கதை!
(ஆஸ்திரேலியாவின் பிரபல கவிஞரும் கதாசிரியருமான ஹென்றி லாசன் (1867-1922) எழுதிய “The Master’s Mistake” என்ற ஆங்கிலக் கதையின் தமிழாக்கம்) http://geethamanjari.blogspot.in/2014/07/7.html
(iii)அதிசயப்பெண்மணி ஹெலன் கெல்லர்! http://geethamanjari.blogspot.in/2012/06/blog-post.html(iv)பெரிய மனுஷி ஆகிவிட்டாளாம்! http://geethamanjari.blogspot.in/search/label/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D
3. சிலர் கை நடுக்கத்துலயும்,
சிலர் அவசரத்துலயும், சிலர் கட்டிங் அடிச்சதாலயும் புகைப்படம் blurr அடிச்சாக்க என்ன பண்றது.
போங்க PIT – தமிழில் புகைப்படக்கலை
தளத்துக்கு! அத வச்சு படத்த கூர்
தீட்டுங்க! மாசா மாசம் புகைப்பட போட்டி
வேற வச்சு ஜெயிச்சவங்கள கெளரவிக்கிறாங்க!
அப்படியே நீங்களும் ஒரு என்ட்ரி போடுங்க! நான் போட்டதெல்லாம் அப்பீட்ட்ட்…!
இன்னும் கத்துக்கணும்கோ!
(i)Highpass Sharpening
செய்வது எப்படி?
(ii) ஆகஸ்ட்
மாத புகைப்பட போட்டிக்கான இணைப்பு கீழே! http://photography-in-tamil.blogspot.in/2014_08_01_archive.html
4.
சில்லென்ற தூறலில் நனைந்த உணர்வைத்தருகின்றது இந்த “மழை துளி”. அழகிய படங்களோடு போனஸாக பல கவிதைகளும்
காணக்கிடைக்கின்றன! மழைக்கு கீழ
ஒதுங்கலாம் வாங்க பனித்துளி சங்கரோட வலைப்பூவிற்கு! அப்புடியே இன்னும்
புடிச்சதயும் படிச்சுட்டு வரலாம்!
http://www.panithulishankar.com/2013/03/poet-panithulishankar-tamil-latest-best.html
இனிமதான் இருக்கு ஹீரோ வாத்தியாரோட என்ட்ரி!
5. கண்ணா--- ‘திருப்பதி லட்டூ’ தின்ன ஆசையா?
திருப்பதி
லட்டுன்னா பூந்தி, நெய், முந்திரி, கிராம்பு, பச்ச கல்பூரம், திராட்ச, எல்லாம்
போட்டு --- சொல்றப்பவே நாக்கு ஊறுதே! அதுமாதிரி பல சுவையும் நிறைஞ்ச கதைகளையும்,
கவிதைகளையும், சந்திப்புகளையும், காஞ்சி முனிவர் பத்தியும், இன்னும் என்ன்வெல்லாம்
உண்டோ எல்லாம் கலக்கலா இருக்குற ஒரு இடம் உண்டு!
விமர்சனத்தப் பாத்தாலே காண்டாகுற ஆளுங்களுக்கு நடுவால தானே வலிய வந்து ஒரு
போட்டிய அறிவிச்சு, “என் கதைகள விமர்சனம் பண்ணுங்கோ”ன்னு எல்லாரையும்
கூப்பிட்டு, கரும்பயே ஜூஸா கொடுத்து அத குடிக்குறதுக்கே கூலி மாதிரி பரிசையும் குடுத்து, போட்டிக்குள்ளார அதுக்கொரு
போட்டி வச்சு ஜெயிச்சாக்க போட்டோவோட விமர்சனத்தப் போட்டு கெளரவப்படுத்துற பெரிய
மனசு எல்லாருக்கும் வருமா? மூன்றெழுத்தில் என்
மூச்சிருக்கும்னு வாத்யாரே
பாடியிருக்காருல்ல? இதுவும் மூன்றெழுத்துதான்! அதுதான் VGK. அவரு ஒரு பொடிமட்ட மாதிரி!
தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு! சில நேரம் யாவையும் கேளிர்னு கண்கலங்கவும் வப்பாரு! சிந்திக்கவும்
வைப்பாரு! எத சொல்ல? எத விட? அவருதாங்கோ தனது 600ம் இடுகைய வெற்றிகரமாக இட்ட ‘நம்ம வாத்தியார்’ வை. கோபாலகிருஷ்ணன் அவுங்க! என்னோட அதிர்ஷ்டம் என்னன்னா அந்த இடுகைல எனக்கும் முதல் பரிசு கிடைச்சதுக்கான
அறிவிப்பு வெளியானதுங்கறதுதான்! இதவிட வேற என்ன வேணும்? கிங்கே கிங் மேக்கரா இருக்குறத இங்கதான் பாக்க முடியும்! எத்தன எத்தன புதுப்புது விமர்சகர்கள் பரிசு
வாங்குனவங்க பட்டியல்ல! ஏங்க என்னையே ஊக்கப்படுத்தி
எழுதுனதுல 13/16 பரிசு வாங்க வச்சிருக்காருன்னா நீங்க ஏங்க விமர்சனம் எழுதி
பரிசு வாங்க முடியாது? இதப்படிக்கிற
ஒவ்வொருத்தரும் VGK – 30 விமர்சனம் எழுதுங்க! வெற்றிக்கான வாசல் இதோ தொறந்திருக்கு
பாருங்க!
VGK வாத்தியாரே
“நூறாண்டு காலம் வாழ்க”! வ(அ)லைகடலில் படகோட்டி ஆயிரம் இடுகைகள் தொட்ட “ஆயிரத்தில்
ஒருவன்” விரைவில் ஆகுக! அன்பின் VGK அவர்களின் 600ம் இடுகையை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மாபெரும்
பெருமையாகக் கருதுகிறேன்!
600ம் இடுகை - வெற்றியின் வாசல் இதோ!
எனது நன்றி
அறிவிப்பிற்கான இணைப்பு இதோ!
நம்ப வாத்தியாரோட பதிவுகள்
எக்கச்சக்கம். சிலத மட்டும் இங்க பட்டியல் போட்டிருக்கேன்! அதுக்கே மூச்சு
முட்டுது! மிச்சத்த நீங்களே வலைக்குள்ள போய் (சு)வாசிச்சுக்குங்கப்பு!
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
மறக்க மனம் கூடுதில்லையே பகுதி 1 / 4
காதல் வங்கி
மனசுக்குள் மத்தாப்பூ பகுதி 1 / 4
VGKஅவர்கள்
தானே வரைந்த ஓவியத்துடன் கூடியது)
ஜா தி ப் பூ
காதலாவது ...கத்தரிக்காயாவது!!
கொஞ்ச நாள் பொறு தலைவா ...!
தேடிவந்த தேவதை பகுதி 1 / 5
”இனி
துயரம் இல்லை”
”உடம்பெல்லாம்
உப்புச்சீடை”
ஐம்பதாவது பிரஸவம்
மை டியர் பிளாக்கி + குட்டிக்குழந்தை
தாலி
வை. கோபாலகிருஷ்ணன் - பெயர்
காரணம்
100வது பதிவு - இந்த நாள் இனிய
நாள்
மலரும் நினைவுகள்:
நல்லதொரு குடும்பம்
அலுவலக நாட்கள்
என்னை வரவேற்ற எழுத்துலகம்
நூல்கள் பெற்றுத்தந்த பரிசுகள்
துபாய் பயணம்
கலைகளிலே அவள் ஓவியம்
ஊரைச்சொல்லவா ..... பேரைச்சொல்லவா
!
காது கொடுத்துக்கேட்டேன்
... ஆஹா
குவா குவா சப்தம்.
ஒரே மாதத்தில் கோடீஸ்வரராக மிகச்
சுலபமான வழி
தமிழ்மணத்தில் ஒரு வார நட்சத்திரப்பதிவராகி
தினம் 4 பதிவுகள் வீதம் அந்த
வாரம் மட்டும் 28 பதிவுகள் வெளியிட்டு, அந்த வார TOP 20 LIST இல் FIRST RANK முதலிடம்
வகித்தது, அந்த ஆண்டில் 15வது ரேங்க் வாங்கியது. அந்த வார முதல் பதிவு “ஜாங்கிரி” இணைப்பு:
நான் ஏறி வந்த ஏணி, தோணி, கோணி
முதல் ஆண்டின் முடிவினில் அளித்த 200வது பதிவு.
301வது பதிவு - பெரியதோர் பரிசு
பெற்ற நாடக நிகழ்ச்சியுடன்
500வது பதிவு
http://gopu1949.blogspot.in/2014/03/vgk-07-01-03-first-prize-winners-vgk-500.html
மீண்டும் பள்ளிக்குப்போகலாம்
6-7 பாகங்கள் - ஆரம்பம்
http://gopu1949.blogspot.in/2012/03/1.htmlசிறப்புத்தொடர்
’பொக்கிஷம்’ சிறப்புத்தொடர்
12 பகுதிகள் - ஆரம்பம்
என் வீட்டு ஜன்னல் கம்பி ஒவ்வொன்றாய்க்
கேட்டுப்பார்
அனுபவத்தொடர் - சுவாரஸ்யமான
4 பகுதிகள்.
அடடா என்ன அழகு ... அடையைத்
தின்னு பழகு
போட்டியில் பரிசு பெற்ற சமையல்
குறிப்பு
கடவுள் இருக்கிறாரா இல்லையா
தொடரின் ஆரம்பம் - மொத்தம் 3 பகுதிகள்.
ஜயந்தி வரட்டும் - ஜயம் தரட்டும்
- சிறப்பு ஆன்மிகத்தொடர் - ஆரம்பம் - மொத்தம் 108 பகுதிகள் - ஸ்ரீஸ்ரீஸ்ரீ காஞ்சி பெரியவர்
பற்றிய வியப்பளிக்கும் பல்வேறு நிகழ்ச்சிகள் [ Miracles ] பற்றி மெகா தொடர்.
ஆரம்பப் பகுதி: http://gopu1949.blogspot.in/2013/05/1.html
நிறைவுப்பகுதி: http://gopu1949.blogspot.in/2014/01/108108.html
இன்றைய எனது இடுகை!
எ(ஏ)ன் காதலே…?!
நீ
வெட்கம் கொண்டால்
புது
ரோஜாக்களும் – நாணி
தடுமாறித்
தன் தலை குனியும்.
உன்
புன்னகை மிளிர்ந்திட்டால்
மொட்டவிழும்
முல்லைகளும்
புறமுதுகிட்டுத்
தோற்றோடும்!
உன்
கண்கள் தாம் அசைந்தால்
வண்டுகளும்
தன் இனமென்று
அருகே
வந்து சுற்றி மொய்க்கும்.
உன்
துவளும் இடை கண்டு
‘உடுக்கை’யும்
அயர்ந்துபோய்
படுக்கையில்
ஓய்ந்து வீழும்.
நீ
தளிர் நடை நடந்தாலோ
அன்னப்
பறவையும் சற்றே
அசந்து
அசைவற்று நிற்கும்.
உன்
விரலழகைக் கண்டால்
காந்தள்
மலர்களும் தன்
பொறாமையில்
காந்தலாகும்.
தினமும்
எனக்குக் கனா தரும்
என்
கனவுலகில் உலாவரும்
ஆசை
ஆதர்சக் காதலியே
மனங்கவர்ந்தும்
முகமறியா
மாங்குயி(ர)ல் ஆனவளே-
எங்கே
பிறந்திருக்கிறாய் நீ?
ரவிஜி…@
மாயவரத்தான் எம்ஜிஆர்
(புகைப்படம்
– நன்றி கூகிள்)
இன்றைய பகிர்வுகள்/இடுகை
எப்படியென்று உங்களின் மேலான கருத்துக்களை அள்ளியிடுங்கள்! மீண்டும் நாளை
சந்திக்கும்வரை உங்களிடமிருந்து நன்றியும் வணக்கமும் கூறிவிடை பெறுவது.
உங்கள் MGR
|
|
வணக்கம்
ReplyDeleteஇன்றைய வலைச்சரர அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் தொடருகிறேன் பதிவுகளை.எல்லாம் அறிந்த தளங்கள்தான்பகிர்வுக்கு நன்றி
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு வாத்யாரே பாடியிருக்காருல்ல? இதுவும் மூன்றெழுத்துதான்! அதுதான் VGK. அவரு ஒரு பொடிமட்ட மாதிரி! தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு! சில நேரம் யாவையும் கேளிர்னு கண்கலங்கவும் வப்பாரு! சிந்திக்கவும் வைப்பாரு! எத சொல்ல? எத விட? // வலைத்தள விற்பன்னர் வைகோ அவர்களைப்பற்றி கேட்கலாம் கேட்கலாம் கேட்டுகிட்டே இருக்கலாம் !
ReplyDeleteரிஷபன்
Deleteவாங்கோ, என் எழுத்துலக மானஸீக குருநாதர் அவர்களே, வணக்கம்.
//வலைத்தள விற்பன்னர் வைகோ அவர்களைப்பற்றி கேட்கலாம் கேட்கலாம் கேட்டுகிட்டே இருக்கலாம் !//
ஆஹா, தன்யனானேன். இதைத்தங்களின் எழுத்துக்களில் இங்கு காண அடியேன் என்ன தவம் செய்தேனோ .... ;)))))
மிக்க நன்றி, சார்.
பிரியமுள்ள,
வீ...............ஜீ.
இன்றைய வலைத்தள அன்பர்கள் ஜொலிக்கும் நட்சத்திரங்கள். அவர்களுக்கு வாழ்த்துக்கள் சொல்வதில் பெருமைதான் நமக்கு.
ReplyDelete//VGK வாத்தியாரே “நூறாண்டு காலம் வாழ்க”! வ(அ)லைகடலில் படகோட்டி ஆயிரம் இடுகைகள் தொட்ட “ஆயிரத்தில் ஒருவன்” விரைவில் ஆகுக! அன்பின் VGK அவர்களின் 600ம் இடுகையை அறிமுகம் செய்யும் வாய்ப்பு கிடைத்ததை மாபெரும் பெருமையாகக் கருதுகிறேன்!//
வை.கோபாலகிருஷ்ணன்அவர்களை சிறப்பாக நீங்கள் குறிப்பிட்டது மிகை இல்லை. மனப்பூர்வமாக வருவது.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
நாங்களும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்.
வை,கோபாலகிருஷ்ணன் அவர்களின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கிடைக்காத பதிவுலக அன்பர்களே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்., பதிவுகள் பிடித்து இருந்தால் தாராளமாய் பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப்படுத்துவார்.
Deleteஅவரின் கடுமையான உழைப்பு , அவர்தரும் புள்ளிவிபரங்கள் மலைக்க வைக்கும்.
வாழ்த்துக்கள் சாருக்கு.
கோமதி அரசு
Deleteவாங்கோ, வணக்கம்.
//வை.கோபாலகிருஷ்ணன்அவர்களை சிறப்பாக நீங்கள் குறிப்பிட்டது மிகை இல்லை. மனப்பூர்வமாக வருவது.
உங்களுக்கும் வாழ்த்துக்கள். நாங்களும் உங்களுடன் சேர்ந்து வாழ்த்துகிறோம். வாழ்க வளமுடன்! வாழ்க நலமுடன்.//
தங்களின் அன்பான வருகைக்கும், ஆதரவான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், மலைக்க வைக்கும் பாராட்டுக்கள் + வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
கோமதி அரசு
Delete//வை,கோபாலகிருஷ்ணன் அவர்களின் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் கிடைக்காத பதிவுலக அன்பர்களே இருக்கமாட்டார்கள் என்று நினைக்கிறேன்., பதிவுகள் பிடித்து இருந்தால் தாராளமாய் பின்னூட்டங்கள் கொடுத்து உற்சாகப்படுத்துவார். //
மிக்க நன்றி, மேடம். முன்புபோல பலரின் பதிவுகளுக்குச் செல்ல இப்போதெல்லாம் எனக்கு நேரம் கிடைப்பது இல்லையே என்ற வருத்தம் உண்டு.
மேலும் பதிவினை முழுவதும் மனதில் வாங்கிக்கொண்டு படிக்காமல் கருத்தளிப்பது கூடாது என்ற கொள்கையும் வைத்துக்கொண்டுள்ளேன்.
ஒருவரின் பதிவினை நான் படித்துவிட்டால், அது எனக்குப்பிடித்தும் விட்டால், தாராளமாகவே பின்னூட்டம் இடத்தான் விரும்புவேன் என்பதும் சரியே. தங்களின் இந்தப் புரிதலுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
கீதமஞ்சரியின் ’ஆஸ்திரேலிய காடுறைக்கதை’ எனக்கு மிகவும் பிடிக்கும்.
ReplyDeleteஇன்று வலைச்சரத்தில் இடம் பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteமைதிலி கஸ்துரி ரங்கன் அவர்கள் தளம் சென்றது இல்லை படிக்கிறேன். அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
அறிமுகங்கள் அனைத்தும் அருமை
ReplyDeleteதிருமிகு வை.கோ அவர்களின் வலைப் பூ பணி பாராட்டிற்கு உரியது. போற்றுதலுக்கு உரியது.
அசராமல் போட்டிமேல் போட்டி நடத்தி.
வலைப் பூ எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் இவரே
திருமிகு வை.கோ அவர்களைப் பாராட்டுவோம்
கரந்தை ஜெயக்குமார்
Deleteவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//திருமிகு வை.கோ அவர்களின் வலைப் பூ பணி பாராட்டிற்கு உரியது. போற்றுதலுக்கு உரியது. அசராமல் போட்டிமேல் போட்டி நடத்தி வலைப் பூ எழுத்தாளர்களை ஊக்குவிப்பதில் இவருக்கு நிகர் இவரே. திருமிகு வை.கோ அவர்களைப் பாராட்டுவோம்.//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கருத்துக்களுக்கும், பாராட்டுக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், ஐயா. - அன்புடன் VGK
VGK நீடூழி வாழ்க.
ReplyDeleteபழனி. கந்தசாமி Thu Aug 14, 07:40:00 AM
Deleteவாங்கோ, நமஸ்காரம். வணக்கம்.
//VGK நீடூழி வாழ்க.//
தங்களின் அன்பான ஆசிகளில் மெய்சிலிர்த்துப் போனேன்.
மிக்க நன்றி, ஐயா.
பிரியமுள்ள
கோபு [VGK]
இன்றைய அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteஇப்படி தாங்கள் உருகி,உருகி எழுதிய கவிதையின் நாயகி எங்கிருக்கிறார்கள் MGR அவர்களே?
இன்றைக்கு மகுடம் சூடும்
ReplyDeleteவலைப்பதிவுகளைப் பற்றி சிறப்பான அறிமுகங்கள்..வாழ்த்துகள்.பாராட்டுக்கள்.!
இராஜராஜேஸ்வரி
Deleteவாங்கோ, வணக்கம்.
தங்களின் அன்பான வருகையும், தங்கமான பாராட்டுக்களும், வைரமான வாழ்த்துகளும் எனக்கு மகுடம் சூட்டியதுபோலவே தாலாட்டி மகிழ்வித்தன.
மிகக்குறுகிய காலத்தில், வலைச்சரத்தில் இந்த என்னைப் பற்றிய 93வது அறிமுகத்தினை, ஓடோடி வந்து எனக்குத் தகவல் கொடுத்துள்ள கொங்கு நாட்டுக்கோவைத் தங்கமாகிய தங்களுக்கு என் ஸ்பெஷல் நன்றிகள்.
என்றும் பிரியமுள்ள VGK
அறிமுகங்கள் அனைத்தும் அருமை.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஉங்கள வலைச்சரத்தை தொடர்ந்து படிக்கத்தான் முடிந்தது . கருத்துரைகள் இட இயலவில்லை. (காரணம் எங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் சில நாட்களாக பிரச்சினை. புதிது வாங்க வேண்டும் )
ReplyDeleteஆசிரியை மைதிலி கஸ்தூரிரங்கன் (மகிழ்நிறை) அவர்களது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களில் நானும் ஒருவன். இவரது கணவரும் ஒரு பதிவர் (மகிழ்தரு) இருவருமே நன்றாக எழுதி வருகிறார்கள்.
ஆஸ்திரேலியாவில் இருக்கும் கீதமஞ்சரி அவர்களின் பதிவுகளைப் பற்றி நன்றாகவே சொன்னீர்கள். கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு மற்றும் ஆஸ்திரேலியாவைப் பற்றிய செய்திகளை இவருடைய பதிவுகளில் (எளிமையான நடை) காணலாம். மேலும் அய்யா வை.கோபாலகிருஷ்ணன் அவர்களது சிறுகதை விமர்சனப் போட்டிகளில் உங்களைப் போலவே இவரும் அடிக்கடி பரிசுகள் பெறுபவர்.
PTI எனப்படும் PHOTOGRAPHY IN TAMIL தளத்தினுள் இருக்கும் புகைப்படங்களை ஒரு போட்டோகிராபர் என்ற முறையில் ரசிப்பவர்களில் நானும் ஒருவன்.
அய்யா வை கோபாலகிருஷ்ணன் அவர்களை வாத்தியாராக்கி சிறப்பாக அறிமுகம் செய்து மகிழ்ந்தமைக்கு நன்றி! ( அவருக்கு அறிமுகமே தேவையில்லை என்பது வேறு விஷயம்) அவரை வலையுலகப் பிதாமகர் என்றாலும் தகும். அந்த அளவிற்கு அவர் வலையுலகில் பதிவர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். அவர்மீது நீங்கள் கொண்டுள்ள அன்பைப் பார்க்கும் போது அவருக்கென்று வலைச்சரத்தில் தனியாகவே நீங்கள் ஒரு பதிவினை எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. நானும் அய்யா V.G.K அவர்களைப் பற்றி மட்டும் எனது வலைத்தளத்தில்
தனியே பதிவுகள் எழுதியுள்ளேன்.
த.ம.1
தி.தமிழ் இளங்கோ
Deleteவாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
//ஐயா வை கோபாலகிருஷ்ணன் அவர்களை வாத்தியாராக்கி சிறப்பாக அறிமுகம் செய்து மகிழ்ந்தமைக்கு நன்றி! ( அவருக்கு அறிமுகமே தேவையில்லை என்பது வேறு விஷயம்) அவரை வலையுலகப் பிதாமகர் என்றாலும் தகும். அந்த அளவிற்கு அவர் வலையுலகில் பதிவர்களை உற்சாகப் படுத்தி வருகிறார். அவர்மீது நீங்கள் கொண்டுள்ள அன்பைப் பார்க்கும் போது அவருக்கென்று வலைச்சரத்தில் தனியாகவே நீங்கள் ஒரு பதிவினை எழுதியிருக்கலாமோ என்று தோன்றுகிறது. //
ஏற்கனவே ஒரு வலைச்சர ஆசிரியர் 02.10.2012 அன்று தாங்கள் சொல்வதுபோல எழுதி அசத்தியுள்ளார்கள், ஐயா.
இணைப்பு இதோ: http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
அதன் பின்னூட்ட எண்ணிக்கைகளே 131 எனக்காட்டுது.
//நானும் ஐயா V.G.K அவர்களைப் பற்றி மட்டும் எனது வலைத்தளத்தில் தனியே பதிவுகள் எழுதியுள்ளேன்.//
ஆமாம் ஐயா. எவ்வளவோ முறை எழுதி சிறப்பித்துள்ளீர்கள். அவைகள் என்றும் என்னால் மறக்கவே முடியாதவைகள் தான். தங்களின் பேரன்புக்கு மிக்க நன்றி, ஐயா.
என்றும் அன்புடன் VGK
நன்றி அய்யா! தங்கள் அன்புக்கு தலைவணங்குகிறேன்!!
Deleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteத.ம 2
Deleteவலைச்சரத்தில் இந்தவாரம் தாங்கள் என்று இப்போதுதான் அறிகிறேன். வாழ்த்துகள் ரவிஜி. கொஞ்சநாளாய் முகப்புத்தகம் ஈர்த்துப் பிடித்திருக்கிறது. விரைவில் விடுபட்டு வலைப்பக்கம் வரவேண்டும். பதிவுலகின் அற்புதமான படைப்பாளிகளின் மத்தியில் கீதமஞ்சரிக்கும் ஒரு சிறப்பிடம் அளித்தமைக்கு அன்பான நன்றி. என்னோடு அறிமுகமான அனைத்துப் பதிவர்களுக்கும் அன்பான வாழ்த்துகள். அனைத்தும் என் விருப்பதளங்கள். ஆங்கிலம் போதித்து அசத்தி, தமிழில் அழகிய கவிபாடும் மைதிலி எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி.
ReplyDeleteபதிவுலகப் பிதாமகர் கோபு சார் பற்றி இளங்கோ ஐயா சொல்வது போல் ஒரு தனிப்பதிவே எழுதலாம். என்ன அயர்வு இருந்தாலும் அதையெல்லாம் அலட்சியப்படுத்தி குறித்த காலத்தில் குறித்தபடி பதிவுகளை வெளியிடும் அவரது உற்சாகமும் திட்டமிடலும் என்னை மிகவும் அசத்துபவை. தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் விமர்சனம் செய்தாலே வேறுபடும் பல பதிவர்களுக்கிடையில் தன் படைப்புகளை விமர்சனம் செய்யச்சொல்லி அதற்கு பரிசும் தருகிறார் என்றால் அவரது பெருந்தன்மையை நாம் பாராட்டவேண்டும். இந்த சாதனையை அவ்வளவு எளிதில் வேறு எவராலும் முறியடிக்க இயலாது என்பது உண்மை. மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார்.
இன்றைய கவிதை அழகாக உள்ளது. நகைச்சுவையோடு நயமும் நளினமுமாக அசத்தல். பாராட்டுகள்.
கீதமஞ்சரி
Deleteவாங்கோ மேடம், வணக்கம் மேடம்.
//பதிவுலகப் பிதாமகர் கோபு சார் பற்றி இளங்கோ ஐயா சொல்வது போல் ஒரு தனிப்பதிவே எழுதலாம்.//
அடடா, இதைக்கேட்க எனக்கு மிகவும் கூச்சமாக உள்ளது. ஏற்கனவே நம் மஞ்சு இதுபோல செய்திருந்தாங்கோ.
http://blogintamil.blogspot.in/2012/10/blog-post_2.html
//என்ன அயர்வு இருந்தாலும் அதையெல்லாம் அலட்சியப்படுத்தி குறித்த காலத்தில் குறித்தபடி பதிவுகளை வெளியிடும் அவரது உற்சாகமும் திட்டமிடலும் என்னை மிகவும் அசத்துபவை.//
எல்லாம் தங்களைப்போன்றவர்கள் தந்துவரும் பின்னூட்டங்கள் + விமர்சனங்கள் என்ற உற்சாக பானத்தினால் மட்டுமே என்னால் இது போன்று சாதிக்க முடிகிறது என்பதே உண்மை.
//தாங்கள் குறிப்பிட்டுள்ளது போல் விமர்சனம் செய்தாலே வேறுபடும் பல பதிவர்களுக்கிடையில் தன் படைப்புகளை விமர்சனம் செய்யச்சொல்லி அதற்கு பரிசும் தருகிறார் என்றால் அவரது பெருந்தன்மையை நாம் பாராட்டவேண்டும். இந்த சாதனையை அவ்வளவு எளிதில் வேறு எவராலும் முறியடிக்க இயலாது என்பது உண்மை.//
விமர்சனம் என்பதே நம்மை நாமே மேலும் பட்டை தீட்டிக்கொள்ளவும், நம் எழுத்துக்களை மேம்படுத்தி மெருகேற்றிக்கொள்ளவும் உதவும் என்ற நம்பிக்கையில் மட்டுமே இதனை நான் புதுமையான முறையில் ஓர் பரீட்சார்த்தமாக [As a Trial Measure only] மட்டுமே ஆரம்பித்தேன்.
உயர்திரு நடுவர் அவர்கள் எனக்கு மேலும் மேலும் ஊக்கம் கொடுக்க, தங்களைப்போன்ற தலைசிறந்த எழுத்தாளர்களும் களத்தில் இறங்க, தெய்வானுக்கிரஹத்தால் நான் எதிர்பார்த்ததற்கு மேல் வெற்றிகரமாக இதுவரை 75% வரை இந்தப்போட்டி தொய்வு ஏதும் இல்லாமல் முடிந்துள்ளது எனக்கும் மனதுக்கு மிக்க மகிழ்ச்சியாகவே உள்ளது.
// மனம் நிறைந்த பாராட்டுகள் கோபு சார். //
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான கருத்துக்களுக்கும், மனம் நிறைந்த பாராட்டுக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
என்றும் பிரியமுள்ள கோபு
**ஆங்கிலம் போதித்து அசத்தி, தமிழில் அழகிய கவிபாடும் மைதிலி எனக்கு மிகவும் பிடித்த படைப்பாளி.** அக்கா உண்மையில் இதைவிட இந்த நாளை சிறப்பாக முடியாது!! மிக மிக நன்றி அக்கா!!
Deleteதிரு.கோபு அவர்களைப்பற்றி ,எல்லாவிதத்திலும் பாராட்டுதல்களை அளவிடமுடியாத அளவிற்குப் பெற்றுவரும் அவரைப்பற்றி மிக்க ஸந்தோஷமடைகிறோம் யாவரும்..
ReplyDeleteஅவருக்கு அவரையேதான் உவமை சொல்ல முடியும். யாவருக்கும் ஊக்கம்,கொடுத்து, உற்சாகப் படுத்தும் பண்பு இயற்கையிலேயே அமையப் பெற்றவர். நான் தொடர்ந்து வாசித்து மகிழும் வாசகி.
இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட்டு யாவரையும் மகிழ்விக்க அவரை வாழ்த்துகிறேன்.
மற்ற யாவருக்கும் வாழ்த்துகள். அன்புடன்
Kamatchi Thu Aug 14, 01:36:00 PM
Deleteவாங்கோ மாமி, நமஸ்காரங்கள்.
//திரு.கோபு அவர்களைப்பற்றி, எல்லாவிதத்திலும் பாராட்டுதல்களை அளவிடமுடியாத அளவிற்குப் பெற்றுவரும் அவரைப்பற்றி மிக்க ஸந்தோஷமடைகிறோம். யாவரும்.. அவருக்கு அவரையேதான் உவமை சொல்ல முடியும். யாவருக்கும் ஊக்கம்,கொடுத்து, உற்சாகப் படுத்தும் பண்பு இயற்கையிலேயே அமையப் பெற்றவர். நான் தொடர்ந்து வாசித்து மகிழும் வாசகி. இன்னும் பல ஆயிரம் பதிவுகள் இட்டு யாவரையும் மகிழ்விக்க அவரை வாழ்த்துகிறேன்.//
இவற்றிற்கெல்லாம் தங்களைப்போன்ற பெரியோர்களின் அன்பும் ஆசிகளும் மட்டுமே காரணம்.
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான கருத்துக்களுக்கும், வாழ்த்துகளுக்கும் ஆசிகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மாமி.
நமஸ்காரங்களுடன்
என்றும் பிரியமுள்ள
கோபு
அனைத்து அறிமுகங்களுக்கும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteகாதல் மொழி பேசும் கவிதை அசத்தல்! கலக்கல்!
மூன்றெழுத்தை அறிமுகம் செய்யும் மூன்றெழுத்து. பலே.
ReplyDeleteபடிக்கையில் vgk பதிவுகளின் எளிமை வியக்க வைக்கும். படித்து முடிக்கையில் எளிமையான வெளிப்பாட்டில் புதைந்திருக்கும் எண்ணங்கள் ஆழமானவை என்பது புரிந்து மலைக்க வைக்கும்.
வல்லமையாளர் கீதமஞ்சரியும் புதியவரல்ல. சளைத்தவரல்ல. சமீப கண்ணதாசன் கட்டுரையை ரசித்துப் படித்த நினைவு.
மகிழ்நிறை சமீப வாசிப்பு.
அனைவருக்கும் வாழ்த்துக்கள். அறிமுகங்களுக்கு நன்றி.
அப்பாதுரை Thu Aug 14, 03:14:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//மூன்றெழுத்தை அறிமுகம் செய்யும் மூன்றெழுத்து. பலே.//
’மூன்றாம் சுழி’ வாயால் பாராட்டப்படும் மூன்றெழுத்து ....
இன்று ’பலே’ வாங்கியுள்ளது.
பலே ! பலே !! பலே !!! [மும்முறை]
//படிக்கையில் vgk பதிவுகளின் எளிமை வியக்க வைக்கும். படித்து முடிக்கையில் எளிமையான வெளிப்பாட்டில் புதைந்திருக்கும் எண்ணங்கள் ஆழமானவை என்பது புரிந்து மலைக்க வைக்கும்.//
ஹைய்யோ ! தன்யனானேன். ;) மிக்க நன்றி, சார்/
அன்புடன் VGK
அறிமுகங்கள் அனைவருக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.
ReplyDeleteகவிதை அழகு...!!!
அறிமுகப்படுத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!.. திரு. VGK அவர்களது பதிவுகள் ஒவ்வொன்றுமே அருமையானவை.. சக வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் அவரது உளப்பாங்கு போற்றுதலுக்குரியது.. மிக அபூர்வமான, அற்புத மனிதர்.. அவரை வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.
ReplyDeleteபார்வதி இராமச்சந்திரன். Thu Aug 14, 04:29:00 PM
Delete//திரு. VGK அவர்களது பதிவுகள் ஒவ்வொன்றுமே அருமையானவை.. சக வலைப்பதிவர்களை ஊக்குவிக்கும் அவரது உளப்பாங்கு போற்றுதலுக்குரியது.. மிக அபூர்வமான, அற்புத மனிதர்.. அவரை வாழ்த்தி வணங்குவதில் பெருமை கொள்கிறேன்.//
வாங்கோ, வணக்கம். மனமார்ந்த ஆசிகள்.
சமீபகாலமாக நேரமின்மையால் என்னால் தங்கள் பதிவுகள் பக்கம் தொடர்ச்சியாக வருகை தந்து, படித்து, ரஸித்து, கருத்தளிக்க முடியாமல் உள்ளது.
இருப்பினும் தாங்கள் இங்கு அன்புடன் வருகை தந்து, அரிய பெரிய கருத்துக்களை ஆத்மார்த்தமாக எடுத்துச் சொல்லி பாராட்டியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
தங்களுக்கு என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
என்றும் அன்புடன் VGK
ஈந்த வலைப்பூவைப் படிக்க அழைத்த வை.கோ சாருக்கு மிக நன்றி. வலைச்சரத்தில் மின்னும் அனைத்துப் பதிவுகளும் நல்ல தமிழில் வரையப்படவை. தாங்கள் எடுத்துக் கொடுத்திருக்கும் விதம் மிக அருமை. வாழ்த்துகள் அனைவருக்கும்.உங்களுக்கும்.
ReplyDeleteவல்லிசிம்ஹன் Thu Aug 14, 04:42:00 PM
Delete//இந்த வலைப்பூவைப் படிக்க அழைத்த வை.கோ சாருக்கு மிக நன்றி. //
வாங்கோ, நமஸ்காரங்கள்.
தங்களின் அன்பான வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
அன்புடன் கோபு
அன்பின் ரவிஜி
ReplyDeleteஇன்றைய பதிவு அருமையான பதிவு -
VGK ன் பதிவுகள் அனேகமாக நான் ஏற்கனவே படித்து இரசித்து மறுமொழி இட்டதாகத் தான் இருக்கும்.
அது தவிர மற்ற பதிவுகளூக்குச் சென்று - திறந்து பார்த்து - படித்து - மகிழ்ந்து - மறுமொழிகளும் இட்டு வந்தேன் - இரசித்தேன் அனைததையும்
அறிமுகப் படுத்த வேண்டிய பதிவுகளைத் தேடிப் பிடித்து - படித்து - தேர்ந்தெடுத்து - அறிமுக உரை எழுதி - சுட்டிகள் கொடுத்து சரியாகச் செல்கிறதா என சரி பார்த்து - பதிவர்களையும் பதிவுகளையும் அறிமுகப் படுத்தும் ஒரே பதிவாக நாள் தோறும் வெளியிடும் கடும் உழைப்பு பாராட்டத் தக்கது.
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
cheena (சீனா) Thu Aug 14, 05:37:00 PM
Deleteஎன் அன்பின் திரு. சீனா ஐயா அவர்களே,
வாருங்கள் ஐயா, வணக்கம் ஐயா.
லண்டனில் இருப்பதாகக் கேள்விப்பட்டேன்.
அங்கு அனைவரும் நலம் தானே !
அதாவது அங்குள்ள எனக்குத் தெரிந்த என் மீது மிகவும் பாசமுள்ள அதிரடி அதிரா, ஏஞ்சலின் நிர்மலா போன்ற என் தங்கச்சிப் பதிவர்களைப்பற்றித்தான் கேட்கிறேன். ;)))))
//இன்றைய பதிவு அருமையான பதிவு - //
இன்றைய பதிவு மட்டும் தானே அருமை ????? ;)))))
//VGK ன் பதிவுகள் அனேகமாக நான் ஏற்கனவே படித்து
இரசித்து மறுமொழி இட்டதாகத் தான் இருக்கும். //
இருக்கலாம்...... இருக்கலாம்........ முன்னொரு காலத்தில். ;)
எனினும் அதற்காகவே தங்களை என் வலைத்தளத்தினில்
வரும் சனி / ஞாயிறுக்குள் சிறப்பிப்பதாக இருக்கிறேன்.
என்றும் அன்புடன் கோபு [VGK]
அன்பின் ரவிஜி
ReplyDeleteதங்களீன் கடும் உழைப்பில் வலைச்சரத்தின் நான்காவது நாள் பதிவு அழகாக அருமையாக - தங்களீன் கடும் உழைப்பினைப் பிரதி பலிக்கும் வண்ணம் வெளி வந்துள்ளது - மறுமொழிகளூம் அருமை - பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
என்னுடைய வலைப்பூ துவங்கப்பட்ட நாளிலிருந்து எல்லாப் பதிவுகளையும் தவறாமல் படித்துக் கருத்துரையிட்டு ஊக்குவித்துவரும் ஒரு சிலரில் திரு வைகோ அவர்களும் ஒருவர். அவருக்கு நகைச்சுவை மிகவும் கைவந்த கலை. நானும் அவருடைய பதிவுகள் பலவற்றைப் படித்து என் கருத்தினைப் பகிர்ந்துள்ளேன்.மஹாபெரியவரைப்பற்றி அவர் எழுதிய தொடர் என் மனம் கவர்ந்த ஆன்மிகப் பதிவு. அடடா என்ன அழகு! அடையைத்தின்று பழகு! இந்தப் பதிவை என் குடும்பத்தாருடன் பலமுறை படித்து, சிரித்து மகிழ்ந்துள்ளேன். சிறுகதைகளிலும் தனி முத்திரை பதித்த சாதனையாளர்.600 ஆவது பதிவு என்பது இந்த வயதிலும் அவரது ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. பலரை அறிமுகம் செய்த அவரின் பதிவுகள் வலைச்சரத்தில் சிறப்பான முறையில் இணைப்புகளோடு அளிக்கப்பட்டது மகிழ்வளிக்கிறது. வலைச்சரம் பெருமை பெறுகிறது. அவர் பல்லாண்டுகள் நலமுடன்வாந்து மேலும் பல சாதனைகளைப் புரிய அருள்புரியுமாறு இத்தருணத்தில் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்!
ReplyDeleteSeshadri e.s.
Deleteவாங்கோ, வணக்கம்.
//என்னுடைய வலைப்பூ துவங்கப்பட்ட நாளிலிருந்து எல்லாப் பதிவுகளையும் தவறாமல் படித்துக் கருத்துரையிட்டு ஊக்குவித்துவரும் ஒரு சிலரில் திரு வைகோ அவர்களும் ஒருவர். அவருக்கு நகைச்சுவை மிகவும் கைவந்த கலை. நானும் அவருடைய பதிவுகள் பலவற்றைப் படித்து என் கருத்தினைப் பகிர்ந்துள்ளேன்.மஹாபெரியவரைப்பற்றி அவர் எழுதிய தொடர் என் மனம் கவர்ந்த ஆன்மிகப் பதிவு. அடடா என்ன அழகு! அடையைத்தின்று பழகு! இந்தப் பதிவை என் குடும்பத்தாருடன் பலமுறை படித்து, சிரித்து மகிழ்ந்துள்ளேன். சிறுகதைகளிலும் தனி முத்திரை பதித்த சாதனையாளர்.600 ஆவது பதிவு என்பது இந்த வயதிலும் அவரது ஈடுபாட்டுடன் கூடிய உழைப்பின் வெளிப்பாடு என்பதில் ஐயமில்லை. பலரை அறிமுகம் செய்த அவரின் பதிவுகள் வலைச்சரத்தில் சிறப்பான முறையில் இணைப்புகளோடு அளிக்கப்பட்டது மகிழ்வளிக்கிறது. வலைச்சரம் பெருமை பெறுகிறது. அவர் பல்லாண்டுகள் நலமுடன்வாழ்ந்து மேலும் பல சாதனைகளைப் புரிய அருள்புரியுமாறு இத்தருணத்தில் இறைவனை வேண்டிக்கொள்கிறேன்! //
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான ஆத்மார்த்தமான மிக நீண்ண்ண்ண்ண்ட கருத்துக்களுக்கும் மகிழ்ச்சியுடன் கூடிய பாராட்டுக்களுக்கும், இறுதியாக என் நலம் விரும்பியாக இறைவன் முன் வைத்துள்ள பிரார்த்தனைகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் VGK
நான்காம் நாளில் நல்ல பதிவர்களை அறிமுகம் செய்து வெற்றிகரமான சாதனையாளராக முத்திரை பதிக்கும் திரு. மாயவரத்தான் MGR அவர்களுக்கு என் உளமார்ந்த வாழ்த்துகள்!
ReplyDeleteஅறிமுகம் செய்யப்பட்டுள்ள சக பதிவர்கள் அனைவருக்கும் என் வாழ்த்துகள்!
ReplyDeleteஅன்புள்ள சின்ன வாத்யாரே, வணக்கம்.
ReplyDeleteமிகப்பிரபலமான நம் சிறுகதை விமர்சன வித்தகி திருமதி. கீதா மதிவாணன் அவர்களின் கீதமஞ்சரி வலைத்தளத்தினை பெருமையுடன் பேசியுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியினை அளிக்கிறது.
தங்களுக்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
//இப்படி ஒரு வெரைட்டியா என்று அசந்து போகச் செய்த வலைப்பூ! அருமையான கவிதைகள், மொழிபெயர்ப்புச் சிறுகதை, ஹெலன் கெல்லர் பற்றிய இடுகை, மகள்களின் மீது அளப்பரிய பாசம் கொண்டவர்களை புன்னகைக்கச் செய்யும் ஒரு கவிதை--- //
ReplyDeleteஎனத் தாங்கள் சொல்லியுள்ள அத்தனையும் அவர்களின் பதிவினில் அசத்தலோ அசத்தல் தான். ;)))))
திருமதி கீதா மதிவாணன் அவர்களுக்கு என் அன்பான இனிய நல்வாழ்த்துகள். மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
>>>>>
வலைச்சரத்தில் ஓரிரு பதிவுகளின் இணைப்புகள் கொடுத்தாலே, ஒருத்தருக்கும் வர நேரமிருக்காது.
ReplyDeleteஇணைப்புகள் ஏதும் கொடுக்காவிட்டாலும் கூட வாடிக்கையாக வருபவர்கள் மட்டும் வந்துகொண்டே இருப்பார்கள்.
அப்படியிருந்தும் தாங்கள் என் வலைத்தளத்தின் மூன்று டஜனுக்கும் மேற்பட்ட இணைப்புகளைக் கொடுத்துள்ளது ... சின்ன வாத்யாருக்கு பெரிய வாத்யார் மேல் உள்ள அன்பின் ஆழத்தினை வெளிப்படுத்துவதாக உள்ளது.
அதற்கு என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
>>>>>
ReplyDelete//உன் துவளும் இடை கண்டு
‘உடுக்கை’யும் அயர்ந்துபோய்
படுக்கையில் ஓய்ந்து வீழும்.//
நிம்மதியாகப் படுக்க விடாமல்
என்னையும் ஹிம்சிக்கும்
சூப்பரோ சூப்பரான வரிகள் ......
>>>>>
//தினமும் எனக்குக் கனா தரும்
ReplyDeleteஎன் கனவுலகில் உலாவரும்
ஆசை ஆதர்சக் காதலியே
மனங்கவர்ந்தும் முகமறியா
மாங்குயி(ர)ல் ஆனவளே-
எங்கே பிறந்திருக்கிறாய் நீ?//
தங்கள் மனைவிக்கு ஒருவேளை
தெரிந்திருக்கலாமோ ........ அவள்
பிறந்துள்ள இடம் !
எனக்கு எதற்கு ஊர் வம்ப்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.
இத்துடன் நான் எஸ்கேப் !
-=-=-=-
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
அன்புடன் VGK
எனது வாழ்த்துக்களும்.
ReplyDelete//விமர்சனத்தப் பாத்தாலே காண்டாகுற ஆளுங்களுக்கு நடுவால தானே வலிய வந்து ஒரு போட்டிய அறிவிச்சு, “என் கதைகள விமர்சனம் பண்ணுங்கோ”ன்னு எல்லாரையும் கூப்பிட்டு, கரும்பயே ஜூஸா கொடுத்து அத குடிக்குறதுக்கே கூலி மாதிரி பரிசையும் குடுத்து, போட்டிக்குள்ளார அதுக்கொரு போட்டி வச்சு ஜெயிச்சாக்க போட்டோவோட விமர்சனத்தப் போட்டு கெளரவப்படுத்துற பெரிய மனசு எல்லாருக்கும் வருமா? மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்னு வாத்யாரே பாடியிருக்காருல்ல? இதுவும் மூன்றெழுத்துதான்! அதுதான் VGK.//
ReplyDeleteஎன் வலைத்தளத்தினில் கடந்த 30 வாரங்களாக வெற்றிகரமாகவும், தொடர்ச்சியாகவும், விறுவிறுப்பாகவும் நடைபெற்றுவரும் ‘சிறுகதை விமர்சனப்போட்டி’ யினை மேலும் பலரும் அறியும் வண்ணம் எடுத்துரைத்துள்ள சின்ன வாத்யார் அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய நன்றிகள்.
அன்புடன் VGK
//அவரு ஒரு பொடிமட்ட மாதிரி! தான் சிரிக்காம மத்தவங்கள சிரிக்க வப்பாரு!//
ReplyDeleteஇதைப்படித்த பலருக்கும் சந்தேகம் வந்து, என்னிடம் மெயில் மூலம் விளக்கம் கேட்டுள்ளனர். ஒருசிலர் விளக்கம் கேட்கத்தயங்கக்கூடும். அதனால் சற்றே இதனை நானே விளக்கிச்சொல்ல விரும்புகிறேன்.
இந்த வலைச்சர ஆசிரியர் ரவிஜி என்கிற மாயவரத்தான் எம்.ஜி.ஆர். அவர்கள் என்னுடைய சிறுகதை விமர்சனப்போட்டியில் முதன் முதலாக பங்கேற்று வெற்றிபெற்றது VGK-13 என்ற என் சிறுகதைக்கான விமர்சனத்திற்கு.
http://gopu1949.blogspot.in/2014/04/vgk-13.html
அந்தக்கதையினில் வரும் ஒருசில வரிகள் [டயலாக்] இதோ கீழே கொடுத்துள்ளேன். இதைப்படித்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.
-=-=-=-=-
“பொடி போட்டு வாழ்வாரே வாழ்வார்
மற்றவரெல்லாம் சளி பிடித்தே சாவார்”
என்று நீ கேள்விப்பட்டதில்லையா என்றார்.
(திருக்குறள் ஒப்பித்தல் போட்டிகளில் பள்ளியில் பலமுறை பரிசுகள் வென்ற எனக்கு, இந்தக்குறள் மட்டும் ஏனோ மறந்து விட்டது போலிருக்கு)
இந்த விசித்திரக் குறளைக்கேட்டு அவரை ஆச்சர்யத்துடன் நான் நோக்குகையில் அவரே தொடர்ந்து பேசலானார்.
“தம்பி, பொடி டின் நிறைய பொடியை அடைத்தாலும் அந்தப்பொடி டின் தும்மல் போட்டுப் பார்த்திருக்கிறாயா நீ...” என்றார்.
“இல்லையே சார், அது எப்படித் தும்மல் போடும்” என்றேன் நான்.
“அது போலத்தான், பொடி போடும் எங்களுக்கும் பொடி போடும் போது தும்மல் வராது. ஆனால் நாங்கள் தும்மலை தேவைப்படும்போது சுலபமாக வரவழைத்துக்கொள்ள முடியும்” என்று சொன்னவர், சொன்னபடி செய்தும் காட்டிவிட்டார்.
-=-=-=-=-
VGK
//கிங்கே கிங் மேக்கரா இருக்குறத இங்கதான் பாக்க முடியும்! எத்தன எத்தன புதுப்புது விமர்சகர்கள் பரிசு வாங்குனவங்க பட்டியல்ல!ஏங்க என்னையே ஊக்கப்படுத்தி எழுதுனதுல 13/16 பரிசு வாங்க வச்சிருக்காருன்னா நீங்க ஏங்க விமர்சனம் எழுதி பரிசு வாங்க முடியாது? இதப்படிக்கிற ஒவ்வொருத்தரும் VGK – 30 விமர்சனம் எழுதுங்க! வெற்றிக்கான வாசல் இதோ தொறந்திருக்கு பாருங்க!//
ReplyDeleteVGK-30க்கான நேரக்கெடு முடிந்துவிட்டது.
இன்று நள்ளிரவு 12.01க்கு VGK-31 சிறுகதை வெளியிடப்படும்.
அதற்கான விமர்சனப்போட்டியில் மட்டுமே இனி கலந்துகொள்ள முடியும்.
அதற்கான காலkகெடு வரும் 21.08.2014 வியாழக்கிழமை இந்திய நேரம் 8 மணி வரை மட்டுமே.
இது அனைவரின் தகவலுக்காக மட்டுமே.
அன்புடன் கோபு [VGK]
அனைத்துப் பதிவுகளையும் சிறப்பாக, அழகாக அறிமுகம் செய்துள்ளீர்கள். பாராட்டுக்கள் ரவிஜி!
ReplyDeleteதிரு. வி.ஜி.கே. அவர்கள் நல்ல சிந்தனையாளர்!
ReplyDeleteஅயராத உழைப்பிற்கும் திட்டமிடலுக்கும் செயல்படுத்துவதிலும் சூரர்!
பல்சுவை பதிவுகள் தருபவர்!
கதைகள் தந்து விமர்சனப் போட்டி வைத்து பரிசுகள் தருபவர்! நானும் அதில் பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதைக் குறிப்பிட் விரும்புகிறேன்.
சிறப்பு வாய்ந்த இன்னும் பன் நூறு பதிவுகளை இடவும் , ஐயா அவர்கள் பல்லாண்டு, மகிழ்வோடு வாழவும் எனது பிரார்த்தனைகள்!
This comment has been removed by the author.
Deleteஅ. முஹம்மது நிஜாமுத்தீன் Thu Aug 14, 08:57:00 PM
Deleteவாருங்கள் நண்பரே, நலம் தானே ? தங்களை என் பதிவுகளில் சந்தித்து பலநாட்கள் ஆகிவிட்டன. இறைநாட்டம் அதுபோல உள்ளது.
//திரு. வி.ஜி.கே. அவர்கள் நல்ல சிந்தனையாளர்! அயராத உழைப்பிற்கும் திட்டமிடலுக்கும் செயல்படுத்துவதிலும் சூரர்!
பல்சுவை பதிவுகள் தருபவர்!
கதைகள் தந்து விமர்சனப் போட்டி வைத்து பரிசுகள் தருபவர்! நானும் அதில் பரிசுகள் பெற்றுள்ளேன் என்பதைக் குறிப்பிட் விரும்புகிறேன்.
சிறப்பு வாய்ந்த இன்னும் பன் நூறு பதிவுகளை இடவும் , ஐயா அவர்கள் பல்லாண்டு, மகிழ்வோடு வாழவும் எனது பிரார்த்தனைகள்!//
தங்களின் அன்பான வருகைக்கும், அழகான பல கருத்துக்களுக்கும், விசேஷமான பிரார்த்தனைகளுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள்.
சிறுகதை விமர்சனப்போட்டி 75% முடிந்துள்ளது. இன்னும் 25% மட்டுமே [அதாவது 10 வாரம் ... 10 வாய்ப்புகள் மட்டுமே] பாக்கியுள்ளன. தங்களுக்கு செளகர்யப்படுமானால் தாங்களும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அன்புடன் VGK
இன்றையப் பதிவர்களில் திரு.வைகோ அவர்களைத் தவிர அனைவருமே எனக்குப் புதியவர்கள் .கோபு சாரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் பதிவர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்ல வேண்டும்.
ReplyDeleteநான் பதிவு எழுத ஆரம்பித்தப் புதிதில் , அவர் என்னை எழுத ஊக்குவித்திருக்கா விட்டால் இன்று நூறு பதிவுகள் எழுதிய்ருப்பேனா என்பது சந்தேகமே! .
புதியப் பதிவராய் பதிவுகள் வெளியிட்டவுடன் யாராவது படிக்க மாட்டார்களா என்கிற நம் எதிர்பார்ப்புத் தீர ஓடி வந்து , பலப் பின்னூட்டங்கள் கொடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி விடுவார்.
எனக்கே என் எழுத்தில் ஒரு பெருமிதம் வரும்படி அமையும் அவர் கருத்து. பின்னாளில் படிக்கும் போது அப்படி ஒன்றும் பிரமாதமாய் நான் எழுதவில்லை என்பது புரியும் ஆனாலும் அடுத்தப் பதிவு எழுதுவதற்கு அவர் கருத்து ஒரு மிகப்பெரிய பூஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.
பரிசுகள் பல கொடுத்து தன்னம்பிக்கை வளர்க்கும் கோபு சாருக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்.
rajalakshmi paramasivam Thu Aug 14, 10:09:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//இன்றையப் பதிவர்களில் திரு.வைகோ அவர்களைத் தவிர அனைவருமே எனக்குப் புதியவர்கள். கோபு சாரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் பதிவர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று சொல்ல வேண்டும். நான் பதிவு எழுத ஆரம்பித்தப் புதிதில், அவர் என்னை எழுத ஊக்குவித்திருக்கா விட்டால் இன்று நூறு பதிவுகள் எழுதியிருப்பேனா என்பது சந்தேகமே!. புதியப் பதிவராய் பதிவுகள் வெளியிட்டவுடன் யாராவது படிக்க மாட்டார்களா என்கிற நம் எதிர்பார்ப்புத் தீர ஓடி வந்து, பலப் பின்னூட்டங்கள் கொடுத்து நம்மை ஆச்சர்யப்படுத்தி விடுவார். எனக்கே என் எழுத்தில் ஒரு பெருமிதம் வரும்படி அமையும் அவர் கருத்து. பின்னாளில் படிக்கும் போது அப்படி ஒன்றும் பிரமாதமாய் நான் எழுதவில்லை என்பது புரியும் ஆனாலும் அடுத்தப் பதிவு எழுதுவதற்கு அவர் கருத்து ஒரு மிகப்பெரிய பூஸ்ட் என்பதில் சந்தேகமில்லை.//
நகைச்சுவை உணர்வுடன் தாங்கள் எழுதியிருந்த பல பதிவுகள் எனக்கு மிகவும் பிடித்திருந்ததால் மட்டுமே, நானும் அவற்றை ரஸித்துத்தான் பல பின்னூட்டங்கள் கொடுத்து தங்களைப் பாராட்டி இருந்தேன். தக்களிடம் நல்ல எழுத்துத்திறமைகள் உள்ளன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. என் கருத்துரைகள் தங்களுக்கு மேலும் மேலும் எழுத மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்திருந்தது என்றால் அதில் எனக்கும் மிகவும் சந்தோஷமே.
//பரிசுகள் பல கொடுத்து தன்னம்பிக்கை வளர்க்கும் கோபு சாருக்கு என் வாழ்த்துக்களும், நன்றிகளும்.//
தங்களின் இன்றைய பல்வேறு நெருக்கடிகளிலும் இங்கு எனக்காகவே அன்புடன் வருகை தந்து கருத்தளித்துள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. மிக்க நன்றி, மேடம்.
அன்புடன் கோபு
அறிமுகமான ஆனைவருக்கும் என் வாழ்த்துக்கள்.
ReplyDeleteஆஹா! ஒரே படமா ? சரி எதுவென்று போய் பார்க்கிறேன்:)
ReplyDeleteபெரிய பெரிய படைப்பாளிகளோடு அதுவும் கீதாக்கா மற்றும் வைகோ அய்யாவோடு அறிமுகம் செய்யப்பட்டது இந்த சின்னவளை ஊக்குவிக்க என்றே கருதி இனியாவது பொறுப்போடு பதிவிடுகிறேன் சகோ!! மிக்க நன்றி!
***இனியாவது பொறுப்போடு பதிவிடுகிறேன் சகோ!!***
DeleteOH NOOOO!!!!!
Please don't become a SERIOUS BLOGGER, mythily! There are so many serious bloggers are already there. Continue to be the "way you are" now! I mean continue to be a"lively enthusiastic friendly blogger". Thanks!
Mythily kasthuri rengan Fri Aug 15, 05:51:00 AM
Deleteவாங்கோ, வணக்கம்.
//பெரிய பெரிய படைப்பாளிகளோடு அதுவும் கீதாக்கா மற்றும் வைகோ அய்யாவோடு அறிமுகம் செய்யப்பட்டது இந்த சின்னவளை ஊக்குவிக்க என்றே கருதி//
தங்கள் கீதா அக்கா மிகப்பெரிய படைப்பாளி தான் OK OK.
ஆனால் நான் மிகச் சாதாரணமானவன் தான்.
தங்கள் கீதா அக்காவுடன் நாம் இருவரும் அறிமுகம் ஆகியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. தங்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய நல்வாழ்த்துகள்.
தங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் நன்றிகள்.
- VGK
This comment has been removed by the author.
ReplyDeleteChandragowry SivapalanFri Aug 15, 12:00:00 PM
ReplyDeleteஅறிமுகங்களை சென்றடைந்தேன். அனைத்தையும் ஒரு வார்த்தையால் சொல்லி விடுகின்றேன் அருமை அருமை. வழமையாக நான் அறிந்த தளங்களே ஆனாலும் இன்று பார்க்கும் பொது மேலும் போளிவைதான் தெரிகின்றது. வை.கோ. சாரின் படைப்புக்களும் அதன் பங்களிப்புக்களும் படிப்பவரைத் தூண்டுகின்ற உத்திகளும் அவருக்கு நிகர் அவரேதான். கீதா என்றவுடன் எனக்கு ஆஸ்திரேலிய ஞாபகம் வந்துவிடும். அவரின் படைப்புக்கள் அத்தனையும் மூளைக் கோப்பில் போட்டு வைக்க வேண்டியவை .அதேபோல் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்களே.வாழ்த்துக்கள்
Chandragowry Sivapalan Fri Aug 15, 12:05:00 PM
ReplyDeleteவாங்கோ, வணக்கம். நலம். நலமறிய ஆவல்.
//வை.கோ. சாரின் படைப்புக்களும் அதன் பங்களிப்புக்களும் படிப்பவரைத் தூண்டுகின்ற உத்திகளும் அவருக்கு நிகர் அவரேதான். //
தங்களின் அன்பான வருகைக்கும்
மிக அழகான மற்றும் மிகப்
பொ லி வா ன
கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த
இனிய அன்பு நன்றிகள்.
அன்புடன் கோபு [VGK]
தொடர
ReplyDeleteஹூம், கருத்துச் சொல்லி இருந்தேன். அது போகவில்லை. அதன் பின்னர் தொடரப் போட்டது மட்டும் போயிருக்கிறது. அடிக்கடி இப்படி ஆகிறது. :))
ReplyDeleteஇன்றைய அறிமுகங்கள் அனைவரிலும் கீதமஞ்சரியையும், திரு வைகோவையும் தவிர மற்றவர்கள் அறியாதவர்களே. அருமையாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். திரு வைகோ அவர்களைப் பற்றி எவ்வளவு பாராட்டினாலும் தகும். அனைத்துக்கும் தகுதியானவரே! அவர் ஊக்கம் கொடுப்பதாலேயே விமரிசனப் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துப் பெருமைப்படுத்தும் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அவருடைய சிறப்பான பதிவுகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி இருப்பதில் இருந்து உங்கள் ரசனை புரிகிறது. இதை விடச் சிறந்த பாராட்டு வேறெதுவும் வேண்டாம்.
தொடர்ந்து பரிசு மழையில் நனைந்து வரும் கீதமஞ்சரிக்கும் சிறப்பான பாராட்டுகள். மைதிலி கஸ்தூரி ரங்கனின் பதிவுகள் படித்ததில்லை.
Geetha Sambasivam Fri Aug 15, 06:46:00 PM
Deleteவாங்கோ, வணக்கம்.
//இன்றைய அறிமுகங்கள் அனைவரிலும் கீதமஞ்சரியையும், திரு வைகோவையும் தவிர மற்றவர்கள் அறியாதவர்களே. அருமையாக அறிமுகம் செய்திருக்கிறீர்கள். திரு வைகோ அவர்களைப் பற்றி எவ்வளவு பாராட்டினாலும் தகும். அனைத்துக்கும் தகுதியானவரே! அவர் ஊக்கம் கொடுப்பதாலேயே விமரிசனப் போட்டியில் என்னால் கலந்து கொள்ள முடிகிறது. அனைவருக்கும் பரிசுகள் கொடுத்துப் பெருமைப்படுத்தும் அவருக்கு எப்படி நன்றி சொல்வது என்றே தெரியவில்லை. அவருடைய சிறப்பான பதிவுகள் அனைத்தையும் வரிசைப்படுத்தி இருப்பதில் இருந்து உங்கள் ரசனை புரிகிறது. இதை விடச் சிறந்த பாராட்டு வேறெதுவும் வேண்டாம். //
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான கோர்வையான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த இனிய அன்பு நன்றிகள், மேடம்.
தங்களிடம் எழுத்துத்திறமை கொட்டிக்கிடக்குது. அதனை நான் அவ்வப்போது தூண்டி விட்டுக்கொண்டும், நினைவூட்டிக்கொண்டும் மட்டுமே இருக்கிறேன். அதனால் போட்டியில் தாங்கள் தொடர்ச்சியாகக் கலந்துகொண்டு அவ்வப்போது பரிசுகளும் பெற்றுவருவது எனக்கும் மகிழ்ச்சியாக உள்ளது.
அன்புடன் கோபு [VGK]
கோபு அண்ணாவின் மோதிரக் கையால் குட்டுப் பட்டவர்களில் நானும் ஒருத்தி.
ReplyDeleteஇப்ப தான் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்து இல்லை இல்லை தவழத்தான் ஆரம்பித்திருக்கிறேன்.
கோபு அண்ணாவைப் பற்றி எழுத தகுதி ஒன்றும் எனக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
மற்ற பதிவர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவரது பின்னூடங்கள்தான் என்னைப் போன்ற பதிவர்களுக்கு BOOST.
அவரது எழுத்துத் திறமை, மற்றவர்களிடம் காட்டும் அன்பு இவற்றையெல்லாம் கண்டு நெகிழ்ந்துதான் போகிறேன்.
ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல் வாலாம்பா மன்னியும் இவருக்கு ஏற்ற மனைவி. மன்னியின் அன்பான சிரிப்பை இன்னும் மறக்க முடியவில்லை.
கோபு அண்ணாவிற்கு இன்னும் பலப்பல விருதுகள் வந்து சேர வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்கிறேன்.
கோபு அண்ணா நீங்கள் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.
நன்றியுடனும்,
அன்புடனும்,
வணக்கத்துடனும்
ஜெயந்தி ரமணி
Jayanthi Jaya Fri Aug 15, 06:46:00 PM
Deleteவாங்கோ ஜெயந்தி. வணக்கம்மா. எப்படி இருக்கீங்க, செளக்யம் தானே? உங்களைப் பார்த்து பல நாட்கள் / மாதங்கள் ஆச்சு. பார்க்காமல் என் கண்ணே பூத்துப்போச்சு தெரியுமா?
நீங்களும் ஒரு வார வலைச்சர ஆசிரியர் ஆவதுபோல நேற்று விடியற்காலம் நான் கனவு கண்டேன். விடியற்கால கனவுகள் பலிக்கும் என்பார்கள். சரியா என சோதித்துப் பார்ப்போம்.
//கோபு அண்ணாவின் மோதிரக் கையால் குட்டுப் பட்டவர்களில் நானும் ஒருத்தி. //
அடடா, என் கை விரலில் நான் போட்டுக்கொண்டிருந்த வைர மோதிரத்தைக்காணவில்லையே என நெடுகத் தேடிக்கொண்டிருந்தேன். நல்லவேளை நம்ம ஜெயந்தியின் தலைமுடியில் தான் மாட்டிக்கொண்டுள்ளது என்பதில் எனக்கும் மகிழ்ச்சியே.
//இப்ப தான் எழுத்துலகில் காலடி எடுத்து வைத்து இல்லை இல்லை தவழத்தான் ஆரம்பித்திருக்கிறேன்.//
தவழும் குழந்தையை தூக்கிக்கொஞ்சணும் போல எனக்கும் ஆசையாக உள்ளது.
//கோபு அண்ணாவைப் பற்றி எழுத தகுதி ஒன்றும் எனக்கு இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. //
என்னிடம் ஆத்மர்த்தமாகப் பழகிவரும் என் ஜெயந்தி எழுதாமல் என்னைப்பற்றி வேறு யாரால் தான் எழுத முடியும்?
//மற்ற பதிவர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு நிகர் அவரே. அவரது பின்னூடங்கள்தான் என்னைப் போன்ற பதிவர்களுக்கு BOOST.//
குழந்தை ‘ஜெ’க்கு BOOST ஊட்டி ஊட்டியே 100 கிலோ வெயிட் இருந்த நான் 95 கிலோவாக இளைத்துப்போய் விட்டெனாக்கும். ;)
//அவரது எழுத்துத் திறமை, மற்றவர்களிடம் காட்டும் அன்பு இவற்றையெல்லாம் கண்டு நெகிழ்ந்துதான் போகிறேன்.//
அடடா .... அன்பான, திறமையான சாதுர்யமான, சாமர்த்தியமான, சமர்த்தான எழுத்து என்றால் இதுவல்லவோ அந்த எழுத்து.
நானும் நெகிழ்ந்து மகிழ்ந்து போய் விட்டேனாக்கும்.
//ஜாடிக்கு ஏற்ற மூடி என்பது போல் வாலாம்பா மன்னியும் இவருக்கு ஏற்ற மனைவி. மன்னியின் அன்பான சிரிப்பை இன்னும் மறக்க முடியவில்லை. //
இது வேறா ? தொட்டுக்கொள்ள ஊறுகாய் போல [ ஜாடி + மூடி என்றதும் எனக்கு ஊறுகாய் ஞாபகம் வந்தது. அதில் காரமும் ஜாஸ்தியாகத்தான் உள்ளது தெரியுமோ ;) ]
//கோபு அண்ணாவிற்கு இன்னும் பலப்பல விருதுகள் வந்து சேர வேண்டும் என்று பகவானை பிரார்த்திக்கிறேன்.//
போதும். போதும். வந்த விருதுகளை வைக்கவே வீட்டில் இடம் இல்லை. அதனாலேயே நான் போட்டிகள் வைத்து விருதுகள் / பரிசுகள் என பிறருக்குக் கொடுக்க ஆரம்பித்து விட்டேன். அதை ‘ஜெ’ Proper ஆக உபயோகித்துக்கொள்ளாததில், ‘ஜெ’ மேல் எனக்கு ரொம்பவும் கோபமாக்கும்.
//கோபு அண்ணா நீங்கள் இன்னும் நிறைய கதைகள் எழுத வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன். //
ஜெயந்தி நீங்க எப்போ என் பதிவினில் உள்ள கதைகள் அத்தனையும் படித்து கருத்துச்சொல்லி என்னை மகிழ்வித்து முடிக்கிறீர்களோ, அப்போது தான் நான் இதுவரை வெளியிடாத கதைகளை வெளியிடுவதாகவும், புதிய கதைகள் பலவும் எழுதி வெளியிடுவதாகவும் உள்ளேன்.
ஜெயந்தியின் பதிவுகள் அத்தனையிலும் [ 100 % ] நான் கருத்தளித்துள்ளேன். ஆனால் என் பதிவுகளில் ஜெயந்தியின் கருத்துக்கள் அத்திப்பூத்தது போல மட்டுமே உள்ளதாக்கும்.
//நன்றியுடனும், அன்புடனும், வணக்கத்துடனும்
ஜெயந்தி ரமணி//
ஜெயந்தியின் அபூர்வ வருகைக்கும் அழகான பல கருத்துக்களுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
பிரியமுள்ள கோபு அண்ணா
அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் !!ஸ்பெஷல் வாழ்த்துக்கள் for கோபு அண்ணா
ReplyDeleteAngelin Sun Aug 17, 02:45:00 AM
Deleteவாங்கோ, நிர்மலா. வணக்கம்.
//ஸ்பெஷல் வாழ்த்துக்கள் for கோபு அண்ணா//
தங்களின் அன்பான வருகைக்கும் அழகான ஸ்பெஷல் வாழ்த்துகளுக்கும் என் மனம் நிறைந்த இனிய அன்பு நன்றிகள்.
என்றும் பிரியமுள்ள கோபு அண்ணா