வலைச்சரத்தில் மூன்றாம் நாள்!
➦➠ by:
மாயவரத்தான் எம்ஜிஆர்,
ரவிஜி
வலைச்சரத்தில் மூன்றாம் நாள்!
அன்பின் வலைச் சொந்தங்களுக்கு வணக்கம்! இன்று எனது பணியின் மூன்றாம் நாள்! எனது முதல் இரண்டு நாள்களின் இடுகைகளை அறிமுகங்களை ரசித்த பின்னூட்டமிட்ட அன்பு உள்ளங்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றி!
இன்றைய அறி(ந்த?)முகங்கள்!
1. ஓவியங்களே ஆச்சரியப்படுத்தும் அதிலும் குகை ஓவியங்கள் 1700 ஆண்டின் வாகில் வரையப்பட்டவை! செயற்கை வண்ணங்கள் கிடையாது, தூரிகை கிடையாது எந்த வசதியுமின்றி அங்கே போய் ஓவியம் வரைந்தது ஆச்சரியம்தான்! ஓவியம் வரைந்த அனுபவம்தான் அதிகமில்லை. குறைந்தபட்சம் அங்கே சுற்றுலா போய்வந்த ‘சிவகாசிக்காரன்’ அனுபவத்தையாவது படிப்போமே. சுவாரசியமான ம(க)லைப்பயணத்துக்கு செல்லுங்கள்---
சித்தன்னவாசல் - வரலாற்றின் ஆச்சரியம்
2. தனித் தலைப்பே தராமல் மூன்று கவிதைகளைத் தந்திருக்கிறார் கவிஞர் எஸ்.எம்.ஜுனைத் ஹஸனீ! மூன்றுமே அருமை ரகம்தான்! போய்படியுங்களேன்!
குறுங்கவிதைகள் !
3. சாப்புடுற ஐட்டம் ஒண்ணயும் காணமேன்னு நெனச்சுடக் கூடாதுல்ல? அதுவும் உணவே மருந்துன்ற மாதிரி கிட்னீ ஸ்டோன்ஸ் எல்லாம் தெறிச்சு ஓடவக்கிறமாதிரி என்னா ஒரு ரெசிபி! இதுல போட்டோவோட செயல்முறை விளக்கம் வேற! இப்புடி சொல்லித்தந்தா பச்ச புள்ளகூட சூப் வக்குமே! நம்மாளுங்கள்ள நளன் வீமன் யார்னாச்சும் இருந்தீங்கன்னா சூப் வச்சு வீட்டம்மாவ அசத்துங்க! ஒடனே நீ செய்வயான்னு கேக்காதீங்க தலைவா! எனக்கு சமக்கத்தெரிஞ்ச ஒரே ஐட்டம் – சுடுதண்ணி வக்கறதுதான்! நான் அம்பேல்! என்ன ஆளவிடுங்கப்பு!
வாழைத்தண்டு சூப் வக்க கத்துக்கிட அன்புத் தங்கச்சி உமையாள் காயத்ரியோட கிச்சனுக்கு போங்க!
4.(i) //ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்க்கையின் ஆரம்ப கட்டங்களிலேயே சற்று அச்சுறுத்தப்பட்டே வாழப் பழகிக்கொள்கிறாள்’ -
இவா
வைஸ்மன்// இவ்வாறு துவங்கி நாம் தினசரி செய்தித் தாள்களில் காணும் பெண்களுக்கெதிரான
வன்முறைகளைச் சாடும் விதமாக அமைந்த அருமையான கட்டுரை! உண்மை சுதந்திரம் என்றால் என்ன என்பதற்கு காந்தியடிகள்
கூறியதை நினைவு படுத்துகிறது!
சகோதரி ரஞ்சனி நாராயணன் அவர்களின் வலைப்பூவுக்கு சென்று மேலும் படியுங்கள்!
(ii)“விவேகானந்தர்
இந்திய மறுமலர்ச்சி நாயகன்” என்ற தலைப்பிலான கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட அவரின்
புத்தகத்தை கீழே கண்டுள்ள இணைப்பில் தந்துள்ளார்! சென்று (சு)வாசியுங்கள்!
HTTP://FREETAMILEBOOKS.COM/EBOOKS/SADHAMINIYIN-ALAPPARAIGAL/
5.(i)அம்மாக்கள் எல்லாமே
தியாகத்தின் மறு உருவம்தான்! கடவுள்களின் திரு உருவம்தான்! அதைத்தனது வைர வரிகள் மூலமாக
வடித்திருக்கிறார் இந்தப் பதிவாளர்! கூடவே ஒரு விண்ணப்பம்! எதற்கு என்று அறிய நண்பர் ரூபனின் வலைப்பூவிற்குள் சென்று
விண்ணப்பத்தைப் படியுங்கள்!
அம்மாவுக்கு ஒரு விண்ணப்பம்
(ii) இவர் அருமையானதொரு படத்திற்கு கவிதை எழுத ஒரு போட்டியும் அறிவித்துள்ளார்! அதுவும் தீபாவளி –
2014 க்காக! போய் படிக்கிறதோட
மட்டுமில்லாம போட்டியிலயும் கலந்துக்குங்க! (ஒரு பொன்னா? ரெண்டு பொன்னா?
ஆயிரம்பொன்னாச்சே?! மண்டபத்துல யாராச்சும் எழுதிக் கொடுக்கறதா இருந்தா நானும்
கலந்துப்பேன்ல)
6. கணவனின் மறைவுக்குப் பின்னால் மனைவியின் நிலை என்ன அதுவும்
வயது முதிர்ந்த நிலையில்?! ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கு உரிமை கொண்டாட மிஞ்சியது
வெறும் திண்ணைதானா? கடைசியில் கொஞ்சம் வலிக்கத்தான் செய்கிறது! திண்ணையில் கொஞ்சம்
ஆறுதலாக எட்டியாவது பாருங்கள்!
இடப்பெயர்ச்சி - சாந்தி மாரியப்பன்
என்னுடைய பதிவுகள்
(படிக்கும் உங்களின் மனதில் ஓடும் சித்திரங்களே இதற்கு
மிகவும் பொருத்தமாக இருக்கும்! தனியே படம் எதற்கு!!?)
1. தொ(ல்)லைதூரம்!
இன்டர்-நெட், இ-மெயில், டுவிட்டர், கூகிள்,
பேஸ்புக், பிளிக்கர், பிளாக்ஸ்பாட், வாட்ஸ்அப்,
லேப் டாப், டாப்லட், டச்-போன், ஸ்மார்ட்போன்---
தூரம் சுருங்கி கையில் அடங்கும் உலகம்!
ஸ்மார்ட் போனில் சளையாது சாட் செய்யும் மகள்
பேஸ் புக்கில் ‘முகமி’ன்றி மொக்கை போடும் மகன்
தமிழான சீரியலில் மூழ்கிப் போகும் அம்மா
உள்ளூர் செய்தியில் உலகையே மறக்கும் அப்பா
ஞாயிறிலும் தன் உலகில் தீவுகளாய் இவர்கள்.
நாள் பேதம் ஏதுமின்றி இவர்களே உலகமென
கண்புரியாத போதும் சலியாதுஜெபிக்கும் பாட்டி
ஒலிகளை உணராத ‘ஓரத்தில்’ புன்னகைத் தாத்தா!
ரவிஜி…@ மாயவரத்தான் எம்ஜிஆர்
2. டாட்(டா)டூ…!
கரிஅடுப்பைத் தேய்த்து நான் பதித்த
என் குழந்தைப் பருவக் கால் தடம்
எவரும் அழிக்காமல் இரண்டாம் கட்டின்
கிழக்கு மூலை மண் சுவற்றில்!
என்ஆறாம் வயதில் நான் நட்ட
மாங்கன்று இன்றும் கொல்லை
கிணற்றருகே மரமாகி கனிகுலுங்கும்!
‘சட்டமிட்ட’ அப்பத்தாவின் கருப்பு வெள்ளை
புகைப்படம் புதிய குங்குமப் பொட்டோடு
இன்னு(று)ம் அதே பூஜை அலமாரியில்.
சிறுமியாய் நான் தூக்கி வைத்து
முத்தமிட்டுக் கொஞ்சிய உறவுப்பெண்
இடுப்பில் பிள்ளையுடன் அதே தெருவில்.
ஆற்றங்கரையோரம் ஊஞ்சல் ஆடிய
ஆலின்று அ(ப)டர்ந்து கிளிகொஞ்ச
அதே இடத்தில் வழிவழியாய்.
என் அம்மாவோடு அகல் விளக்கேற்றி
நான் வேண்டி வழிபட்ட
எனை காக்கும் அங்காளம்மன்
கம்பீரம் கொஞ்சமும் குறையாமல்
கோயில் கொண்ட அரச மரத்தடியில்.
காலமி(மீ)ட்ட கோலம் என-
காட்சிகள் சில மா(ற்)றினாலும்
காலத்தால் ஏமா(ற்)றாது நான்
நெஞ்சில் குத்திய பச்சையாய்
என் ‘சொந்த’ கிராமத்தின்
நினைவில் நின்ற காட்சிகள்…!
ரவிஜி…@ மாயவரத்தான் எம்ஜிஆர்
(எல்லாம் படிச்சு பாத்தீங்களா எப்புடி இருக்குன்னு சொல்லுங்க.
நாளை---தொடரும்)
என்றும் அன்புடன்
உங்கள் MGR
|
|
இன்றைய பதிவினில் தொ(ல்)லை தூரம்! + டாட்(டா)டூ ... ! இரண்டும் மட்டுமே எனக்குப் பிடித்துள்ளன. ஏனெனில் அவை இரண்டும் எங்கள் வாத்யார் MGR அவர்களால் எழுதப்பட்டுள்ளன.
ReplyDeleteமூன்றாம் நாளையும் ஒருவழியாக ஒப்பேத்தி விட்டீர்கள். OK
திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்கள் + வல்லமை மிக்க திருமதி சாந்தி மாரியப்பன் அவர்கள் ஆகிய இருவரையும் பாராட்டிப் புகழ்ந்து அடையாளம் காட்டியுள்ளதில் எனக்கும் மகிழ்ச்சியே. அவர்கள் இருவருக்கும் என் பாராட்டுக்கள் + வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ReplyDeleteசாந்தி மாரியப்பனின் இடப்பெயர்ச்சி மனதை கனக்க வைக்கிறது..ரூபனின் அம்மாவுக்கு விண்ணப்பம் படித்து இருக்கிறேன். அருமையாக இருக்கும்.
ReplyDeleteரஞ்சனி நாராயணன் அவர்களின் பதிவுகளில் நீங்கள் குறிப்பிட்ட பதிவுகளை படித்து இருக்கிறேன். பன்முக வித்தகர் இவர்.
மற்ற பதிவர்களின் வலைத்தளத்திற்கு சென்று வாசிக்கிறேன்.
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
முதலில் தொ(ல்)லை தூரம், டாட்(டா)டூ மிக மிக அருமை! தொலை தூரம்....யதார்த்தத்தைப் பிட்டு வைக்கின்றது......இரண்டாவது கவித்துவ இனிமை பொங்கி வழிகின்றது!
ReplyDeleteஅறிமுங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்! வல்லமை திருமதி சாந்தி மாரியப்பன் அவர்களையும், திருமதி ரஞ்சனி நாராயணன் அவர்களையும் அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி! பல தளங்களில் கண்டுள்ளோம். ஆனால் வலைத்தளம் சென்றதில்லை.....பார்க்கின்றோம்....
ReplyDeleteநல்ல கவிதை ....அருமை
வணக்கம்
ReplyDeleteஐயா.
ரஞ்சனி அம்மா பற்றிய அறிமுகம் பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்தேன் ஏன் என்றால் நான் சென்று படிக்கும் வலைத்தளம் மிக அருமையாக எழுதுவார்கள் அத்தோடு சாந்தி மாரியப்பன் அவர்களின் வலைத்தளம் சென்று படிப்பேன். அவர்களுடன் சேர்த்து என்னுடைய வலைத்தளத்தையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றிகள் பல... தொடருகிறேன் பதிவுகளை
எல்லோருக்கும் தெரியும் படியாக ஒருசெய்தி...
என்னுடைய வலைப்பூவை வலைச்சரத்தில் முதல் முதலாக அறிமுகம் செய்தது ரஞ்சனி அம்மாதான்.. அவரைத்தொடர்ந்து பல ஆசிரியர்கள் என்னுடைய வலைப்பூவை பலதடவை அறிமுகம் செய்தார்கள்..
வலையுலகில் இன்னும் பல பதிவுகள் அம்மாவின் சிந்தனையில் மலர வேண்டும் எனது வாழ்த்துக்கள்
என்பக்கம் கவிதையாக.
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: இதயத்தை திருடியது நீதானே.....: உன் கருமேக கூந்தலில் நான் மயங்கி நாழிகை இழந்த பொழுதாக நான் உன்நினைவில் நீரில் மூழ்கியமர்ந்திருக்கும் செங்கமலம் நீரில...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
இன்றைய அறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
ReplyDeleteகாட்சிகள் சில மா(ற்)றினாலும்
ReplyDeleteகாலத்தால் ஏமா(ற்)றாது நான்
நெஞ்சில் குத்திய பச்சையாய்
என் ‘சொந்த’ கிராமத்தின்
நினைவில் நின்ற காட்சிகள்…!
பசுமையான மனம் நிறைந்த காட்சிகள்..
அருமையான அறிமுகங்கள்..பாராட்டுக்கள்.!
அறிமுகங்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDeleteவலைச்சரத்தில் அறிமுகம் செய்தமைக்கு நன்றி.
ReplyDeleteஅறிமுகங்கள் அனைவருக்கும் நன்றி.
அருமையான அறிமுகங்கள்!அறிமுகமான அனைவருக்கும் பாராட்டுக்கள்.! வெற்றிகரமான மூன்றாம் நாள்! சிறக்கட்டும் தங்கள் பணி!
ReplyDeleteஇன்றும் பல நல்ல பல பதிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளீர்கள். நன்றி!
ReplyDeleteதங்களின் இரு கவிதைகளையும் பகிர்ந்தீர்கள். வளமான சொல்லாடல்! பாராட்டுக்கள்!!
அறிமுகமான அனைவரும் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறந்த அறிமுகங்கள்
ReplyDeleteதொடருங்கள்